சாண்டவெஜ் அண்டு நான்வெஜ் 18+(வியா/15•07•2010)

ஆல்பம்...

புரட்சித்தலைவி அவர்கள்... பொதுமக்களுக்காக போராட புறப்பட்டு விட்டார்...ஜெயா டிவி பார்க்கையில் முள்ளி வாய்காலை விட கொடுமையான வாழ்க்கையை நாம் தமிழ்நாட்டில் எல்லோரும் வாழ்வதாக சொல்கின்றது, கலைஞர் டிவி பார்த்தால் எல்லாம் நல்படியாக சபிட்சமாக நடந்து கொண்டு இருப்பதாக சொல்கின்றது...எதை நம்புவது???

ஒரு நல்ல எதிர்கட்சி நமது மாநிலத்தில் இல்லை என்பது பெரிய குறை...இவர் ஆட்சிக்கு வந்தால் அவர் சட்டசபைக்கு வரமாட்டார், அவர் ஆட்சிக்கு வந்தால் இவர் சட்டசபைக்கு வரமாட்டார்....அப்ப எப்படி ஒரு பயம் ஆட்சியாளருக்கு வரும்...எம்ஜிஆர் ஆட்சி செய்த போது கண் கொத்திபாம்பாக கலைஞர் பார்த்துக்கொண்டு இருந்தார்... ஆனால் இப்போது அப்படி இல்லையே??இந்தனை வருடம் இல்லாமல் இப்போது புரட்சி செய்ய வர காரணம் ????ஓ இன்னும் சில மாதங்களில் எலெக்ஷன் வருகின்றது அல்லவா?

===================
விஜய்டிவி திரும்பவும் செல்லக்குரலுக்கான தேடலை தொடங்கி விட்டுவிட்டது...எனக்கு வெற்றி பெற்ற கிராண்ட் பினாலேயை பார்பது விட இந்த அறிமுக பாடகர் நிகழ்ச்சி எனக்கு ரொம்பவும் பிடிக்கின்றது... காரணம் 40 லட்சத்தை குறி வைத்து குரல் நன்றாக இருக்கின்றதோ இல்லையோ... வந்து பாட வேண்டும் என்ற அந்த அட்டெம்ப்ட் எனக்கு பிடித்து இருக்கின்றது...

சிலர் டிவியில் முகம் தெரிந்தால் போதும் என்ற அளவிலும் பாடுகின்றார்கள்....இருப்பினும் எந்த பின்னனி இசையும் இல்லாமல் ஓங்கி பெருங்குரலெடுத்து படுவாதை பார்க்க ரொம்ப ஜாலியாக இருக்கின்றது...நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன்...நிச்சயம் ரசிப்பீர்கள்...

==================
தமிழ் டிஸ்கவரி சேனல் பார்க்க குழந்தைகளை வற்புறுத்துங்கள்...பெண்களை டிவி சீரியல் பார்பதை தவிர்த்து டிஸ்கவரி சேனல் பார்க்க சொல்லுங்கள்...நிச்சயம் நாம் ஒரு ஜிரோஎன்ற எண்ணம் நிச்சயம் வரும்... துருவ பகுதியில் வாழ போராடும் விலங்கு, தண்ணி இல்லாத பாலைவனத்தில் வாழ போராடும் தாவரம்.... அவைகள் பல சேதிகளை மனிதர்களுக்கு சொல்கின்றன... நிச்சயம் அது உங்கள் பிள்ளைகளக்கு பல செதிகள் சொல்லிதரும்.....
=================
நெதர்லாந்துக்கு கோல் போட இரண்டு வாய்புகள் வந்தது.. ஒரு வாய்ப்பில் கோல் போஸ்ட் கிட்ட போன போது கட்டி பிடித்து ஸ்பெயின் ஆட்டகாரர் ஒருவர் அழுகுனி ஆட்டம் ஆடினார்... அவர் தப்பாட்டத்தை நடுவர் தடுத்து இருந்தால் நிச்சயம் நெதர்லான்டுதான் வெற்றி பெற்று இருக்கும்.... என்ன செய்ய திறமை இருந்தாலும் அதிஷ்டம் வேண்டும் என்பது இதுதான்....
================

இந்த வார படம்... இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை...

===================

மிக்சர்...
இந்த உலக கோப்பையில் பாராகுவே அணி ஜெயித்தால் நிர்வாணமாக நடப்பேன் என்று மாடல் அழகி லாரிசா நம் அரசியல் வாதிகள் போல் சொன்னார்... நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்சனையை தீர்த்து வைப்போம் என்று சொல்வார்கள்..... அது என்றைக்காவது நடக்குமா? அது போலாதான்...அந்த தைரியத்தில்தான் மாடல் அழகியும் சொல்லி இருப்பார்....
===========
நன்றிகள்..
நெட் பிரச்சனை, கரென்ட் பிரச்சனை எல்லாம் மீறி பதிவு எழுதினால் நோகாமல் வந்து படித்தாலும் படிக்காவிட்டாலும் மைனஸ் ஓட்டு குத்தும் அந்த தலை என்ற பெயர் கொண்ட நண்பருக்கு என் நன்றிகள் இதில் கூட்டு களவானிதனம் வேறு...இன்னும் மைனஸ் ஓட்டுகள் எதிர்பார்க்கின்றேன்... அது இன்னும் என்னை எழுத உற்சாகபடுத்துகின்றது.. எனக்கா வேலை மெனக்கெட்டு நேரம் செலவிட உன்னை வைக்கின்றேன் பார் அந்த கெத் எனக்கு பிடித்து இருக்கின்றது..
===========
தமிழ் பிளாக்கர் போராமில் தினமும் முதலில் மொக்கை அரட்டையில் டென்சன் ஆனவர்களில் நானும் ஒருவன் ... டென்சனாகி ஒன்னும் ஆக போவதில்லை சில நேரங்களில் நல்ல விஷயங்கள்.. மற்றும் சூடான செய்திகள் நம் கண் முன் வருவதால்... அதில் நானும் ஐக்கியமாகிவிட்டேன்...
==============
இந்தவார சலனபடம்...
நெட் சுலோவான காரணத்தால் என்னால் சலனபடம் பேட முடியவில்லை.... பிஎஸ் என் எல் நண்பர்கள்தான் கருணை வைக்க வேண்டும்
===============
கலக்கலான கடிதங்கள்...
கடிதம்,...1

ஹலோ,

சேகர், எஸ் ஜாக்கி சேகர்...

வணக்கம் வந்தனம்

ஹிட்லரின் அதி தீவிர ரசிகன் நான்....

இப்படி சொல்லி, நெறைய பேருகிட்ட வாங்கி கட்டிக்கிட்டது தனி கதை.... அப்படி சொன்னவங்க கேள்விகளுக்கு நான் பதில் அளித்ததும் சுவாரஸ்யமான கதை தான் :)

ஹிட்லர் பற்றி நெறைய படிச்சு, ரசிச்சு, பார்த்து தீவிர ரசிகன் ஆனேன்....

மனிதனுக்குள்ளே மிருகம் - மதன் எழுதிய புத்தகத்தை படிச்சு இருக்கீங்களா? அதுலயும் நம்ம sorry என்னோட ஹீரோ ஹிட்லர் பத்தி சொல்லி இருப்பார்...

நல்ல நேர்மையான விமர்சனம்

வாழ்த்துக்கள் சேகர்

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

உங்கள் பதிவுகளை அடிக்கடி பார்த்து வருகிறேன்... கலக்கலா எழுதுறீங்க...

உங்களுக்கு ஹிட்லர் சாயலில் ஒரு Royal Salute :)

என்றும் உங்கள் அருண் பிரசங்கி
============

கடிதம் ..2

Dear ஜாக்கி சேகர்,

I follow your blogspot entries via Tamilish.
I especially like your reviews on world cinemas and your social consciousness.
Keep up the great work.
Regards
Bala

Balaganesan Swaminathan
Arizona, US

இருவரின் அன்புக்கும் என் நன்றிகள்...நாஜி சல்யூட்டுக்கும் என் நன்றிகள்..

=============
பிலாசபி பாண்டி....
தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் அடிப்பதே தவறு...இதில் கோடாலியால் வெட்டலாமா?
இப்படிக்கு
மரங்கள்....

மரம் வளர்ப்போம் மழை பெருவோம்
============================
நான்வெஜ்....18+

ஜோக்..1

உலகத்துலேயே ரொம்ப சிரமமான காரியம் எது தெரியுமா? எல் ஜ சி பத்து மாடி கட்டிடத்தில் லிப்ட் இல்லாமல் நடந்தே ஏறுவதோ அல்லது தமிழ்நாட்டில் மிக நேர்மையாக எந்த லஞ்சமும் கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் வேலை முடிப்பதோ அல்ல...சாதராணமா தொங்கி போயிருக்கும் சாமாச்சாரத்துக்கு காண்டம் மாட்ட டிரை பண்ணறதுதான்..



ஜோக்..2

ஒரு இன்டர்வியூவுல ஒருத்தன் கிட்ட உங்க ஒய்பைபத்தி இரண்டு வரி சொல்ல சொன்னான்... அதுக்கு இப்படி அவன் பதில் சொன்னான்...

என் ஒய்ப்தான் எனக்கு வலது கை.....அவள் இல்லாத நேரங்களில் என் வலது கை என் ஒய்ப்பாக மாறிவிடும்....

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேரு வாசிக்க ஓட்டும் பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்...கள்ள ஓட்டு போட எனக்கு தெரியாதுங்கன்னா

20 comments:

  1. ஜாக்கி மச்சான்( அப்டிதான் கூப்டுவேன் )

    தினமும் டிஸ்கவரி சேனல் (தமிழில் ) பார்க்க சொல்லி ஆரம்பித்தேன்
    சில மாதங்களுக்கு முன்பு,அது அணைவருக்கும் பிடித்துபோய் விட்டது.

    அது சரி நேத்திக்கு குவார்டர் கேட்டாயே! ..... எப்போ வேளச்சேரி பக்கம் வர்ற?

    ReplyDelete
  2. //அப்ப எப்படி ஒரு பயம் ஆட்சியாளருக்கு வரும்...எம்ஜிஆர் ஆட்சி செய்த போது கண் கொத்திபாம்பாக கலைஞர் பார்த்துக்கொண்டு இருந்தார்... //

    தற்போது தமிழ்நாடு என்னும் பெரும் புதையலை பூதம் காப்பது போல் காக்கிறார் :)

    ReplyDelete
  3. //என் ஒய்ப்தான் எனக்கு வலது கை.....அவள் இல்லாத நேரங்களில் என் வலது கை என் ஒய்ப்பாக மாறிவிடும்....//

    தூள்........!

    ReplyDelete
  4. "ஜெயா டிவி பார்க்கையில் முள்ளி வாய்காலை விட கொடுமையான வாழ்க்கையை நாம் தமிழ்நாட்டில் எல்லோரும் வாழ்வதாக சொல்கின்றது, கலைஞர் டிவி பார்த்தால் எல்லாம் நல்படியாக சபிட்சமாக நடந்து கொண்டு இருப்பதாக சொல்கின்றது...எதை நம்புவது???"
    -- அதனாலதான் நான் "News" பாக்கறத நிறுத்தி ரொம்ப வருஷம் ஆச்சு.

    Gmail groups-ல "Save Tamils" அப்படின்னு ஒரு குரூப் இருக்கு. இலங்கை தமிழர்களைக் காப்பாத்த தொடங்கப்பட்டது. அதுல சமீபத்துல, ஒரு மெயில்,
    "அடுத்தமாதம் எப்படியும் சிங்கள ராணுவத்தால் சாக போகும் இந்திய(தமிழக) மீனவனுக்கு ஒரு கடிதம்...". நான் அப்படியே ஷாக்காயிட்டேன். என்னடா நம்ம ஜாக்கியும் "காபி-பேஸ்ட்" அடிச்சிட்டரா-ன்னு. அந்த மெயில் ஓபன் பண்ணி படிச்சப்புறம் தான் தெரிஞ்சது, அனுப்பிச்ச மவராசன் தான் "காபி-பேஸ்ட்" கேசுன்னு. மேல "நன்றி - ஜாக்கி சேகர்-ன்னு" ஒரு வார்த்தை போட்டிருக்கலாம். ஆனாலும் ஒரு நிம்மதி, அந்த மெயிலோட கடைசியில "அன்புடன் ஜாக்கி சேகர்" அப்படின்னு இருந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். நூறு பேர் படிச்சாலும், யார்ரா இந்த "ஜாக்கி"-ன்னு யோசிச்சா சரிதான்.

    ReplyDelete
  5. ப்ளாக்கர்ஸ் போரம் சிறப்பாக இயங்குவது அறிந்து மகிழ்ச்சி...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. விஜய் டி வியின் செல்ல குரல் மீண்டும் சூடு பிடித்து விட்டது. இருந்தாலும் எனக்கு அல்காவின் அலையில் இருந்து மீண்டு வர இன்னும் நான்கு நாட்கள் ஆகும் என நினைக்கிறேன்.

    ரஜினிகாந்த், கமல் ஹாசன் திரைப்பட Release kku இருந்ததை விட அதிகமாய் வரிசையில் மக்கள் கூட்டம். ஒன்பது மணி போட்டிக்கு காலை நான்கு மணியில் இருந்தே கூட்டம். இருபது வயது இளைனர், யுவதிகள் முதல் எழுபது வயது முதியவர்கள் வரை கூட்டம் அலை மோதுகிறது.

    நமக்கும் நன்றாக பொழுது போகிறது.

    ReplyDelete
  7. today in discovery channel, ther was gud show about evolution of all living creatures from dinosaurs. it was very gud from logical thinking.
    if u get a chance again watch it....

    joke-4 nachunu irkku......

    ReplyDelete
  8. விஜய் டிவியின் அறிமுக பாடகர் நிகழ்ச்சி எனக்கும் ரொம்பவும் பிடிக்கும் போட்டி இறுதியில் இல்லாத பல சுவாரசியங்கள் துவக்கத்தில் கிடைக்கும்.

    தமிழ் டிஸ்கவரி சேனல், குழந்தை முதல் பெரியவர்கள் வரை அறிவையும் வளர்க்கக்கூடியது.


    நெதர்லாந்து வீரர் ராபன் மின்னல் வேகத்தில் ஓடி வந்து கோல் அடிக்க பார்த்தார். அப்போது "பெனால்டி ஏரியா'வில் வைத்து ஸ்பெயின் வீரர் புயோல் தனது கையால் சுற்றி வளைத்து ராபனை தடுத்தார். இதனை பயன்படுத்தி ஸ்பெயின் கோல்கீப்பர் கேசிலாஸ் பந்தை வெளியே அனுப்பினார். இதையடுத்து புயோல் "பவுல்' செய்ததாக ராபன் கடுமையாக வாதாடினார். ஆனால் ராபனுக்கு "எல்லோ கார்டு' காட்டினார் நடுவர். ஆனால், புயோலுக்கு தண்டனை வழங்கவில்லை இது அநியாயம்.


    //மழை வளர்ப்போம் மழை பெருவோம்//

    மரம் வளர்ப்பதிலும் தவறு செய்கிறோம்.மரம் என்று எழுதுவதிலும் தவறு செய்கிறோம்.


    பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  9. {அது என்றைக்காவது நடக்குமா? அது போலாதான்...அந்த தைரியத்தில்தான் மாடல் அழுகியும் சொல்லி இருப்பார்....}
    இது நடக்கலைன்னு வருத்தமா இல்லை நடக்கணும் என்ற வேண்டுகோளா?
    ஜாக்கி நீங்க நல்லவரா கெட்டவரா?
    ஜாக்கி : தெரியலையேப்பா!
    (இந்த இடத்தில தென்பாண்டி சீமையில BGM ஸ்டார்ட் பண்ணுங்க..... டிங் டிங் டிங் டிங் டிங் டிங் டிங் டி டிங்....... )

    ReplyDelete
  10. நம்ம அரசியல்வியாதிகள் போல அல்ல லாரிசா. முடிந்தைதான் சொல்வார் என்பதற்கு இங்கே பார்க்கவும்.


    http://www.google.com/images?hl=en&source=imghp&q=larissa+riquelme&gbv=2&aq=0&aqi=g10&aql=&oq=lari&gs_rfai=

    ReplyDelete
  11. டிஸ்கவரி சேனல் (தமிழில் )பார்க்க சொல்வது நல்ல அறிவு வளத்தை கொடுக்கும்.

    இந்த "The Green Beautiful" படத்தை பாருங்கள் (http://www.youtube.com/watch?v=C5CmMm_SRpM
    ). முடிந்தால் அது பற்றியும் எழுதுங்க... நானும் எழுதி (http://thisaikaati.blogspot.com/2010/07/vimarsanam.html) இருக்கிறேன்.

    ReplyDelete
  12. //இந்த உலக கோப்பையில் பாராகுவே அணி ஜெயித்தால் நிர்வாணமாக நடப்பேன் என்று மாடல் அழகி லாரிசா நம் அரசியல் வாதிகள் போல் சொன்னார்... நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்சனையை தீர்த்து வைப்போம் என்று சொல்வார்கள்..... அது என்றைக்காவது நடக்குமா? அது போலாதான்...அந்த தைரியத்தில்தான் மாடல் அழகியும் சொல்லி இருப்பார்...//

    நண்பா, உங்க கணக்கு தப்பு. இப்ப, லாரிசா, பராகுவேவோட லட்சக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜெயிக்கலைன்னா கூட, போராடி தோத்த பராகுவே வீரர்களை பாராட்டி, நிர்வாணமா ஓடி மக்களை மகிழ்விக்க முடிவெடுத்துட்டாங்காம். இப்ப ஸ்பான்சர்சை தேடிட்டு இருக்காங்க.

    ReplyDelete
  13. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com


    You can add the vote button on you blog:

    http://thalaivan.com/page.php?page=blogger

    THANKS

    Regards,
    Thalaivan Team FRANCE
    thalaivaninfo@gmail.com

    ReplyDelete
  14. டிஸ்கவரி சேனல் எல்லாரும் பார்க்க ஆரம்பிச்சா,அப்புறம் ஓட்டு போடுறது யாரு. விரைவில், டிஸ்கவரி சேனல் கட் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது :)

    ReplyDelete
  15. //கோடாலியால் வெட்டலாமா?
    இப்படிக்கு
    மரங்கள்...//

    Super.

    ReplyDelete
  16. \\\தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் அடிப்பதே தவறு...இதில் கோடாலியால் வெட்டலாமா?
    இப்படிக்கு
    மரங்கள்....///

    மிகவும் அருமையான வரிகள். ஓட்டும் போட்டாசு.

    மஹாராஜா

    ReplyDelete
  17. நான் உங்கள் பதிவை சில நாட்களாக படிகின்றேன் அதிலும் குறிப்பாக சினிமா தொடர்பானவை...தாங்கள் குறிப்பிடும் படங்களை எவ்வாறு பார்ப்பது என்று குறிப்பிட்டால் நன்று...நன்றி.

    ReplyDelete
  18. தாங்கள் குறிப்பிடும் படங்களை எவ்வாறு பார்ப்பது என்று சொன்னால் நன்று...நன்றி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner