மினிசாண்ட் விச் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு-25/07/2010)

ஆல்பம்....

நதிகள் இணைப்பை பற்றி முதல் மந்திரிகள் கூட்டத்தில் துனைமுதல்வர் முக ஸ்டாலின்...வலியுறுத்தி இருக்கின்றார்....வற்றாத ஜீவ நதிகள் கொண்ட வடநாட்டினர் இதற்கு ஒரு போதும் ஒத்துக்கொள்ள பேவது இல்லை...தமிழ் நாட்டை பொறுத்தவரை.. மாதம் மும்மாறி மழை பெய்யும் வரை எந்த பிரச்சனையும் இல்லை...வரும் காலங்களில் மழை பொய்த்தால் நினைத்து பார்க்க முடியாத காமெடி காட்சிகள எல்லாம் அரங்கேறும்...... பார்த்ததானே போகின்றோம்....




============
நேற்று திரும்பவும் ஒரு இந்திய மிக் ரக போர் விமானம்... வயலில் விழுந்து விவாசயி பலி ஆகி இருக்கின்றார்... வயலில் வேலை செய்த 25 பேருக்கு மேல் பலமான அடிபட்டு இருக்கின்றது...
அதில் 5 பேரின் நிலமை கவலைகிடம்...இதுவரை நிறைய மிக் ரக விமானங்கள் தரை இறங்காமல்...பறந்து கொண்டு இருக்கும் போதே தொப் என்று விழுந்து வைத்திருக்கின்றன...
============

மிக்சர்....

என் தளத்தில் படங்கள் அதிகமாக போடுவதால் தளம் தெரிய சில நொடிகள் ஆகின்றன என்று பலர் சொல்லி இருக்கின்றார்கள்... என் நெட் கனெக்ஷனில் அது நன்றாக தெரிந்தது...விஜய் எனும் நண்பர் போன் செய்து விஷயத்தை விலக்க... சைடில் இருக்கும் எல்லா படத்தையும் தூக்கிவிட்டேன்....நீங்கள் கமென்ட்டோடு போடம் அசைவ படத்தை என் எடுத்தீர்கள் என்று அன்பு மழை பொழிய....ஓகே... டன்...
====================
வேண்டுகோள்....

அவன் சொன்னான் , இவன் சொன்னான் என்று தலையில் எந்த ரசாயணத்தையும் தேய்காதீர்கள்...ஒன்றரை வருடத்துக்கு முன் திருமணத்துக்கு மூன்று நாள் முன்பு தலையிர் இருக்கும் நாலு முடியில் இரண்டு வெள்ளை முடி எட்டி பார்க்க... நான் கொஞ்சம் பீல் ஆனேன்...என் கடைசி தங்கையும் மாப்பிள்ளையை(என்னை) அழகு படுத்த முடியாது என்று தெரிந்தும்... என்னை அழகு படுத்த முயற்ச்சித்தாள்... கார்ணியர் தயாரிப்பு டை ஒன்றை தலையில் அப்ளை செய்ய.... இப்போது தலை முழுக்க வெள்ளை முடி நன்றாக விளைச்சல் கண்டுஉள்ளது... டை சமாச்சாரங்கள் எல்லாம் புலி வாலை தொட்டகதை... கடைசி வரை விடவே முடியாது... எல்லாத்திலியும் கொஞ்சம் தெளிவாக இருக்கும் நான் வழுக்கி விழுந்தது அங்கேதான்... அதனால் தயவு செய்து எந்த ரசாயண கரைசலையும் தலைக்கு கொண்டு போகாதீர்.....
==============
வாகனத்தில் இருந்து பின்பக்கமாக விழுந்து வைத்ததில் இருந்து முதுகில் நல்ல வலி இருந்து கொண்டு இருந்தது....அதிகமாக நான் தனியார் மருத்துவமணைக்கு போனதில்லை....வெஸ்ட் மாம்பலம் எஸ்ஆர்எம் மருத்துவமைனைக்கு என் கசின் அழைத்து போனான்...டாக்டர் என்னை படுக்க வைத்தார் கால் தூக்க சொன்னார்... கை தூக்க சொன்னார் குப்புற படுக்க சொன்னார்... முதுகில் அழுத்தி பார்த்தார் தில்லாலங்கடியில் தமன்னா செய்வது போல் பொறுமையாக கை கால் உயர்த்தி வைத்தேன்....எல்லாம் இரண்டு நிமிடங்கள்தான்....வெறும்.. மூச்சி பிடிப்பு....என்று ஒரு மாத்திரை எழுதி கொடுத்தார்.... வெளியே வந்தேன்... ரிசப்ஷனிடம் எவ்வளவு என்றேன்...

300 ரூபாய் என்றார்கள்... சரி நம் காதில் சரியாக விழவில்லையோ என்று திரும்பவும் கேட்டேன்...திரிஹண்ரட் என்று தெளிவாய் தமிழில் சொல்ல... எனக்கு மயக்கம் வந்து தொலைத்தது....
==================

கோடம்பாக்கத்தில் இருந்து வடபழனி வரும் போது... என் வாகனத்துக்கு
பக்கத்தில் வந்த காரில் ஒரு அழகான பெண்மணி ஏதோ ஒரு சுவீட் சாப்பிட்ட பேப்பரை சுவை மிகுதியால் நக்கி கொண்டு இருந்தார்... அதை பார்த்து சட்டென நான் சிரித்து விட்டேன்....வடபழனி வரம் வரை அந்த கார் என்னை மூன்று மறை சைடு வாங்கி போனது... என் பக்கம் அந்த பெண்மணி முகத்தை திருப்பவே இல்லை..... லக்ஷமண் சுருதி சிக்னலில் நான் வெயிட் செய்ய... அந்த கார் என் பக்கம் வந்து நிற்க்கவே இல்லை என் பக்கத்தில் இரண்டு கார் நிக்கும் அளவுக்கு இடம் இருந்தும் முன் வரவேயில்லை...
=================

குடும்ப சூழல் காரணமாக ஒரு பதினைந்து நாளைக்கு வெஸ்ட் மாம்பலத்தில் வாசம் செய்கின்றேன்..... நேற்று ஆரிய கவுடா ரோட்டில்.. ஒரு சின்னபையன்...அவனது பைக்கை எடுக்கும் போது ஒரு பெரியவர்... வாழை பழ வண்டியை தள்ளி வரும் போது தெரியாமல் லேசாக இடித்து விட்டார்....அறிவில்லை ... இடிச்சிட்டு சாரி சொல்லறே என்று கேள்வி கேட்க.. அந்த பெரியவர் பதில் பேச முடியாமல் விக்கித்து நிற்க்க...நிறைய பேர் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றார்கள் அவன் கத்திக்கொண்டு இருந்தான்.... யாரும் ஒரு வார்த்தை கேட்கவில்லை...அவன் திரும்பவும் கத்த எத்தனிக்க ... நான் வாகனத்தை நிறுத்தி அவன் வண்டியிடம் போய்... தம்மி உன் வண்டியில அந்த வண்டி எதாவது இண்டிகேட்டர் உடைஞ்சி இருக்குதா என்றேன்.. இல்லை என்றான்...இதுக்கு மேல ஒரு வார்த்தை அதிகமா பேசினாலும்... நடக்கறதே வேற என்று சொன்னதும் எதும் பேசாமல் அவன் வாகனம் கிளம்பி சென்றது...
==================

இந்தவார புகைபடம்....


கமலா தியேட்டர் எதிரில் வெகு நாட்களாக இருந்த இந்த விளம்பரம்.. கீரின் பார்க் ஓட்டலின் விளம்பரம்.. அந்த ரீசார்ஜ் என்ற அந்த வாசகம் கேச்சியாக இருக்கின்றது அல்லவா???
===========
ஒரு நண்பரின் கடிதம்.....

திரு "ஜாக்கி" சேகர் அவர்களுக்கு வணக்கம்,

இதுவே எனது முதல் பின்னுட்டம் ....என்னினும் உங்கள் தளம் எனது மிகவிருப்பமான ஒன்று

என்னை மிகவும் பாதித்த படங்களில் மதராச பட்டினமும் ஒன்றாகிறது

உரிமையோடு ஒரு கேள்வி . மிகவும் அற்புதமாக வடித்திருந்த "grand ma" பாத்திரத்தை பற்றி அதிகம் ( இடம் பெறவில்லை என்ன நினைக்கிறேன் ) தாங்கள் குறிப்பிடவில்லை

என்னை பொறுத்த வரையில் granne மிகவும் நன்றாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இயக்குனர் அதிகம் வசனம் அமைக்காமல் இந்த பாத்திரத்தின் அமைப்பை மிக அற்புதமாக வடித்து விட்டார் என்றே கூறுவேன்

பக்குவபட்ட ஒரு மனது எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும். அது கண்களில் தோன்றும் . அந்த தோற்றத்தை அந்த வயதான அம்மா மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளார் . உதாரணமாக வழிகாட்டி தமிழ் தெரியாது என நினைத்து கிண்டலடிப்பதையும் , பணம் அதிகமாக வாங்குவதையும் அப்படியே தலைமட்டும் திருப்பி ஒரு பார்வை மட்டும் .. மிகவும் நேர்த்தியாக இருந்தது .மேலும் காதலினால் ஏற்பட்ட வலி , பாதிப்பும் எத்துணை வருடம் ஆனாலும் அப்படியே தான் இருக்கும் .அதன் வெளிப்பாடு அந்த வயதான அம்மா அழகாக வெளிப்படுத்தி இருப்பார்

மேலும் எனக்கு எழுத விருப்பம் . ஆனால் உங்கள் விமர்சனம் படித்த பிறகும் படத்தின் உயிரோட்டமுடனும் , உணர்வுடனும் பார்க்க முடியும் என்பதனால் அதை நான் குறைக்க விரும்பவில்லை

பூக்கள் பூக்கும் தருணம் பாடல் மனதை வருடும் ஒன்று என்றால் மிகையாகாது . ஆனால் நான் படம் பார்த்த பிறகே ரசிக்க ஆரம்பித்தேன்

உங்கள் தளத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி

உங்களின் இனிவரும் அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்

நட்புடன்
முத்துவேல்
==============

கடிதத்துக்கு பதில்...

அன்பின் நண்பர் முத்து வேலுக்கு... அந்த பெண்மணியின் நடிப்பை எழுதி இருக்க வேண்டும்....நன்றாகவே செய்து இருந்தார்... மிக முக்கியமாக கூவம் கரையோரம் இருக்கும் போது தளும்பிய கண்களுடன் வீல் சேரில் உட்கார்ந்து இருப்பது அழகு.....

படித்தோம் சென்றோம் இல்லாமல்... நீண்ட மடலுக்கு நன்றி முத்து வேல்.....
===================

பிலாசபி பாண்டி...

நமக்கே தெரியாத நம்மைபற்றிய ரகசியங்களை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டும்... சிறந்த கருவிதான் சரக்கு....
=========================

நான்வெஜ் 18+

ஜோக்..1

முதல் இரவுக்கு வந்த மணப்பெண்...தோ பாருங்க... நமக்குள்ள இன்னைக்கு எதுவும் வேனாம்... நமக்குள்ள நல்ல அண்டர்ஸ்டேன்டிங் வந்த அப்புறம்தான் பஸ்ட் நைட் எல்லாம்....

போடிங்கொய்யால எனக்கு அண்டர்ல ஸ்டேண்டிங் ஆயி பத்து நிமிசம் ஆச்சு எதா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் வாடி என்று பாய்ந்தான்...
================
ஜோக்...2

டாக்டர்... /நீங்க செக்ஸ் வச்சுக்கும் போது உங்க ஹஸ்பண்ட் முகத்தை பார்ப்பீங்களா?

லேடி../ ம்... பார்ப்பேன்... பார்க்க சகிக்காது... ரொம்ப கோவமா இருப்பார்....

டாக்டர் / ஏன் அப்படி???

லேடி../ஜன்னல் வழியா என்னை பார்க்கும் போது கோபம் வருமா டாக்டர்...????
===================

பிரியங்களுடன் ஜாக்கிசேகர்....

குறிப்பு..

பிடித்தால் ஓட்டு போட மறக்காதீர்கள்....

18 comments:

  1. பதிவு அருமை.

    தலைமுடிக்கு கறிவேப்பிலை எண்ணெய், கறிவேப்பிலை தைலம் பயன் படுத்துங்கள் , சிறப்பாகா இருக்கும். (கிடைக்குமிடம்- தி நகர் நடேசன் தெருவில் உள்ள சித்தா கடைகள், ரங்கநாதன் தெரு அடுத்த தெரு)

    காரினியர்(Garnier) பொருட்கள் அனைத்துமே chemical கலந்தவி, பயன் படுத்தாதீர்கள். என் மனைவிக்கு தோல் கிரீம் தடவி அலர்ஜி வந்து ஸ்கின் டாக்டருக்கு நூற்றி இருபது ரூபாய் அழுதோம்.

    ReplyDelete
  2. //லக்ஷமண் சுருதி சிக்னலில் நான் வெயிட் செய்ய... அந்த கார் என் பக்கம் வந்து நிற்க்கவே இல்லை என் பக்கத்தில் இரண்டு கார் நிக்கும் அளவுக்கு இடம் இருந்தும் முன் வரவேயில்லை...//

    காருக்குள் யார் என்னப்பண்ணா உங்களக்கென்ன வந்துச்ச...அதைல்லாம் ஏன் எட்டிப்பார்க்கறிங்க... :))

    ReplyDelete
  3. //நான் வாகனத்தை நிறுத்தி அவன் வண்டியிடம் போய்... தம்மி உன் வண்டியில அந்த வண்டி எதாவது இண்டிகேட்டர் உடைஞ்சி இருக்குதா என்றேன்.. //

    சே... நம்ம தமிழ்சினிமாமாதிரியே இருக்கேண்ணே... அந்தபையன் போனதுக்கப்புறம்... யாரும் உங்களை புகழ்ந்து பாடலியா??? ::

    ReplyDelete
  4. முதியவரைக் காப்பற்றியதற்குப் பாராட்டுக்கள். மினிசாண்ட்விச் அருமை.

    ஸ்ரீ....

    ReplyDelete
  5. வெள்ளை முடியா ? அவ்வளவு வயசா ஆகிடுச்சு உங்களுக்கு பாவம் :).

    எப்படீங்க உங்க பக்கத்துல கார் வரும்னு எதிர்பார்த்தீங்க ? :)

    ரோடை கிராஸ் செய்யத் திணரும் வயதானவர்களை, ஹாரன் அடித்து மேலும் பீதிக்குள்ளாக்குபவர்கள் சற்றே எண்ணிப் பார்க்கவேண்டும். அவர்களுக்கு ஒருத்தன் ஹாரன் அடிப்பான் என்று :(

    ReplyDelete
  6. //300 ரூபாய் என்றார்கள்... சரி நம் காதில் சரியாக விழவில்லையோ என்று திரும்பவும் கேட்டேன்...திரிஹண்ரட் என்று தெளிவாய் தமிழில் சொல்ல... எனக்கு மயக்கம் வந்து தொலைத்தது....//

    :)

    ReplyDelete
  7. அன்பின் ஜாக்கி,

    உங்களுக்கு தலையில் வெள்ளை முடி பூத்திருந்தாலும் நீங்கள் யூத்துதான் ஜாக்கி.. ரொம்ப பீல் பண்ண வேண்டாம்... கடைசி ஜோக் பிரியல ஜாக்கி :)

    ReplyDelete
  8. நதியை இணைக்கிறாகளோ இல்லையோ... இருக்கிற கண்மாய்களையும், ஏரிகளையும் ஒழுங்கா பராமரிச்சா போதும்... (http://mightymaverick.blogspot.com/2010/07/i.html) பஞ்சமும் இல்ல; பட்டினியும் இல்ல; அதுல இன்னொன்னு சொன்னாரு; அதை விட நகைச்சுவை கிடையாது... தமிழக கடலோரத்தையும், மத்திய அரசே பாதுகாக்க வேண்டுமாம்... இது மட்டும் நடந்தா, இன்னிக்கு ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் மீனவர்களை தமிழக எல்லைக்குள் வந்து சுட்டு விட்டு போகும், இலங்கை கடற்படை, நாளை சென்னை மீனவனையும் வந்து சுட்டு விட்டு போகும்... கடலோர காவல் படை, நீங்கள் எல்லை தாண்டி போய் மீன் பிடிக்கிறீர்கள்; அதனால் தான் இந்த வினை என்றுசப்பைக்கட்டு கட்டும்... இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா என்று கவுண்டமணி சொல்லுவது போல், முதல்வர் கடிதம் எழுதுவார்; துணை முதல்வர் தன் குடும்பத்தில் உள்ள அனைத்து சொந்தங்களின் தொலைக்காட்சியிலும் தோன்றி பேட்டி கொடுப்பார்... என்ன கொடுமை ஜாக்கி இது...

    ReplyDelete
  9. //
    லக்ஷமண் சுருதி சிக்னலில் நான் வெயிட் செய்ய..
    //
    வடபழனி 100 அடி சாலையில் உள்ள லக்ஷமண் சுருதி கடைக்கு இந்த சிக்னலால் நல்ல விளம்பரம். கடை ஆரம்பிக்கும்போது இதைப்பற்றி நான் நினைத்ததுண்டு...

    ReplyDelete
  10. பெரியவரைக் காப்பாற்றியதற்கு நன்றிகள்....

    ReplyDelete
  11. அப்புறம் அந்த அண்டர்ஸ்டேண்டிங் ஜோக்....



    என்னத்த சொல்ல? :)))))))))))))))

    ReplyDelete
  12. நல்ல ரீசார்ஜ் .. உங்கள் சான்வேஜ் ..

    மிக் விமானங்கள் கயலான் கடைக்கு போக வேண்டியவை.. அதை வச்சு நிறைய பைலட்டுகளையும், ஜனத்தொகையும் குறைக்கிறது அரசாங்கம்..

    ReplyDelete
  13. அண்ணே ! பார்க்க வேண்டிய படங்களை மட்டும், தனியா ஒரு லிஸ்ட் கொடுத்தா உதவியா இருக்கும்!

    ReplyDelete
  14. நன்றி ராம்ஜி நீங்கள் சொல்வது உண்மைதான்...நன்றி

    நன்றி நாஞ்சில்...யோவ் எட்டி பார்க்கலை பக்கத்துல வத்துச்சு அதான்...

    நன்றி.. நாஞ்சில் நக்கல் பண்ணறியா????

    ReplyDelete
  15. ஸ்ரீ நன்றி.. தண்ணி அடிக்காமல் அவர்கள் இருந்த காரணத்தால் நாம் சொல்வதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது,..

    நன்றி பின்னோக்கி....
    உண்மைதான் சில நேரத்தில அவர்கள் தடுமாறிவிடுவார்கள்...

    இராமசாமி ஆறுதலுக்கு நனறி..ஜோக் பிரியலையா? திரும்ப ஒரு வாட்டி படி..

    நன்றி இளங்கோ... கருத்துக்கு..

    நன்றி கடவுள் நீங்க சொல்வது போல்... கண்மாயை தூர் எடுத்து ஏரி கரையை பலபடுத்தினாலே போதும்....

    ReplyDelete
  16. நன்றி வழிப்போக்கன்.

    நன்றி மகேஷ்...

    நன்றி செந்தில் மிக் கோபத்தை ரசிச்சேன்...

    ReplyDelete
  17. முதியவரைக் காப்பற்றியதற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. மிகவும் தமாஷாகவும் சிந்திக்கும் படியும் நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்! சுஜாதா எழுத்து எனக்கு பிடிக்கும் ஆனால் நீங்கள் அவரை விட மிக மிக நன்றாக எழுதிகிரீர்கள். தொடருங்கள் உங்கள் எழுத்து பணியை. சுஜாதாவிற்கு கிடைத்த மாதிரி ஒரு குமுதம் உங்களுக்கு கிடைத்து இருந்தால் எங்கேயோ சென்று இருப்பீர்கள். காலம் கடந்தாலும் உங்களுக்கு இந்த 'வலைபபதிவு' ஒரு வரப்பிரசாதம். நன்றாக உபயோப்படுத்தி மேன்மேலும முன்னேறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

    நான் சென்னை வரும் போது உங்களை வந்து பார்ப்பேன். அனால நான் எப்படி வருவேன், என்று வருவேன் என்று அந்த அருனாசலதிற்கே தெரியாது. அப்புறம் எனக்கு எப்படி தெரியும். இருந்தாலும் உங்களைப் எப்படியும் பார்ப்பேன்.

    உங்கள் ஜோதிடத்தை நான் கணித்து விட்டேன். மேலும உங்கள் தலையில் மயிர் வளர்வதற்கு ஒரு ராசிக்கல் கொண்டுவருகிறேன். என்ன அந்த கல்லை விரலில் மோதிரமாக போட்டுக் கொள்ள முடியாது. அதை தினமும் எட்டு மணி நேரமாவது தலை மீது வைத்து இருக்க வேண்டும். அது மாதிர ஒரு மண்டலம் செய்தால் தலை மயிர் நன்றாக வளரும். Money back guarantee கிடையாது. ஏனென்றால் இது ஒரு இலவச சேவை!

    அந்தக் கல்லின எடை ஒன்றும் அதிகம் இல்லை. என்ன சுமார் ஒரு 50 கிலோ இருக்கும். அவ்வளவுதான்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner