சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்18+(வியாழன்/ 08•07•2010)

ஆல்பம்...

உலக கோப்பை அரைஇறுதி போட்டி நேற்று இரவு பார்த்தேன்..ஸ்பெயின் ஒரு கோல் போட்டு இறுதி போட்டிக்கு முன்னேறியது...கிரிக்கெட் போல் ஆடியன்ஸ் பக்கம் அவ்வப்போது கேமரா திரும்பும் என்று எதிர்பார்த்தேன்..ம்ஹும் கடைசி வரை திரும்பவே இல்லை...ஜெர்மணி தோற்ற போது அந்த நாட்டு மக்களின் ரியாக்ஷன் என்ன என்பதை பார்க்கத்தான் வேறு எதற்கும் இல்லை....

===========================
என்ஜீனியரிங் கல்லூரியில் கொடுக்கும் கமிஷனுக்காக எம்ஜிஆர் பல்கலைகழக மாணவனை சத்யபாமா பல்கலைகழக மாணவர்கள் 8 பேர் கொலை செய்து இருக்கின்றார்கள்...

என்னிடம் படித்த பீகார் மாணவர்கள் சொல்லுவார்கள்... .. தமிழ் நாடு சொர்க்கம்.. இங்கு கரெண்ட் 24 மணி நேரமும் இருக்கின்றது... எல்லா இடத்துக்கும் பஸ் வசதி இருக்கின்றது... எங்கள் ஊரில் எசி, பிரிட்ஜ் எல்லாம் இருக்கு ஆனால் ஒரு நாளைக்கு மூணு மணிநேரம்தான் மின்சாரம் கிடைக்கும்... பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் அங்கு இல்லை... என்று தமிழகத்தை அனு அனுவாக ரசித்து சொல்லுவர்.. அப்படி பட்ட இடத்தில் இருந்து இப்படி பட்ட இடத்துக்கு வந்து ஜாலியாக செலவு செய்ய கல்லூரி கமிஷன் தொகையையும் கொடுத்தால் எவன் பீகாருக்கு போவான்?????

நீங்களே சொல்லுங்க... இது பீகார் மாணவர்கள் மட்டும் அல்ல.. பொதுவான வட இந்திய மாணவர்களின் கருத்தாகும்....இன்னும் நிறைய கொலை நடப்பதற்குள் காவல்துறை விழிப்பது நலம்...

==========================
மேல்மருவத்தூர் வாத்தியார் வீட்டில்18 மணி நேரம் ரெய்டு நடந்து இருக்கின்றது...செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு மாத்து விழுந்து இருக்கின்றது....ஒரே ஒரு பத்திரிக்கை ஜீவி மட்டும் வாய் திறந்து இருக்கின்றது...இன்னும் அங்கு படிக்கும் பசங்களிடம் கேட்டால் இன்னும் பல கண்ணீர்கதைகள் சொல்கின்றார்கள்....ஒரு நாள் விசயம் வெடித்து வெளியே வரும்..
====================
இந்த வார புகைபடம்... உலக கோப்பை ஸ்பெசல்

=============================

மிக்சர்....

சில நொடிகளுக்கு முன் வரை நன்றாக இருந்தேன்.. ஆண்டாண்டு காலமாக வழக்கமாக காலையில் செய்யும் தேசிய பணியான காபிதூள் , பால்,தந்தி வாங்கி கொண்டு வீட்டில் வாகனத்தை நிறுத்த ஸ்லோப்பான ஏற்றத்தில் வாகனத்தை ஏற்றி கேட்டை திறந்து வண்டியை உள்ளே நிறுத்த வேண்டும்...

நிறுத்திவிட்டு கேட்டை திறந்து உள்ளே சென்று இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை... ஸ்லோப்பில் வண்டியை ஏற்றி நான் இருக்கும் பக்கமே கேட்டை திறக்க முனைய நான் நிலைதடுமாறினேன்...மழை வேறு பெய்து இந்திய அரசு போல் சதி செய்து வைத்ததால்... பின்புறமாக வாகனத்தோடு போய் 86கிலோவுடன் இலங்கை தமிழர்கள் போல் எந்த வித பிடிப்பும் இன்றி கீழே விழுந்து வைத்தேன்...விழுந்த அந்த நொடியில் சம்பந்தம் இல்லாமல் அந்த வாசகம் மனதுக்கு வந்து தொலைத்து... ஆப்பு என்பது பிறர் வைப்பது அல்ல நமக்கு நாமே வைத்துக்கொள்வது என்று...

விழுந்தவுடன் அனிச்சை செயலாக யாராவது பார்பார்களா? என்று உலகத்தில் எல்லோரும் பார்பது போல் பார்த்து வைத்தேன்...ஒரு மினி லாரி என் வீட்டு தெருவில் இருந்து 50 அடி தூரத்தில்கிராஸ் செய்து கொண்டு இருந்தது.. விழுவதை பார்த்து இரண்டு பேர் எழுந்து நிற்க... நானே தட்டுதடுமாறி எழுந்து நிற்பதை பார்த்து அது வேகம் கிளம்பியது...

பட்ட இடத்திலே படும் எனும் பழமொழியை நிறுபிக்க கனுக்காலில் இரண்டு மூன்று சின்ன சிராய்புகளோடும், முட்டிக்கு கீழே அடி பட்ட இடத்திலேயே ஒரு சின்ன சிராய்ப்பு...முதுகு பக்கம் சின்ன வலி.. பார்போம்...
=================

சங்கீதத்துக்கும் எனக்கு மலைக்கும் மடுவுக்கு உள்ள வித்யாசம்தான்...என் மனைவி மிக அழகாய் சுருதியுடன் ஒரு பாடலை பாட நினைத்து பாட ஆரம்பித்தாள்...நான் வெறுப்பு ஏற்றுவதற்காக அந்த பாடலை உரைநடைபோல் சத்தம் போட்டு வாசிப்பேன்...ஏன் என்றால் அவ்வளவு ராகமாக என்னால் பாட முடியவில்லை என்ற பொறாமைதான்.... என் கடலூர் கூத்தபாக்க நண்பன் லட்சுமி நாரயணன்... மோகன் போல் மைக் பிடித்து பாடுவது போல் கனவு கண்டு கொண்டு இருந்தவன்... எனக்கு அப்படி பட்ட கனவு எல்லாம் இல்லை...

ஆனால் விஜய்டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2 போட்ட போது... அந்த சின்ன பசங்களின் உழைப்பை பார்த்து அதிசியத்து போனேன்...முக்கியமாக இறுதி போட்டி முடியும் போதுதான் பார்த்தேன் அல்கா அஜித் வெற்றி என்பது மட்டுமாக எனக்கு தெரியும்.. அனால் அந்த புரோகிராமை விஜய் மறு ஒளிபரப்பு செய்ய... அந்த பாடலை பார்த்துவிட்டு எனக்கு சற்று நேரம் எதுவும் பேசமுடியவில்லை...எவ்வளவு கடினமான பாடல்.. பாடுவது ரெக்கார்டிங் தியேட்டரில் இல்லை,பல்லாயிரக்கணக்கா மக்கள் முன்னிலையில், ரீ டேக் என்பது வாய்ப்பே இல்லை...ஒரு சின்ன தப்பு, எல்லாத்தையும் தவிடு பொடி ஆக்கிவிடும்... இருப்பினும் அந்த பெண் பாடியது வெற்றி பெற்றது...அந்த வீடியோ இதோ..



இந்த ஆறரை நிமிட வீடியோ உங்களை வேறு உலகத்துக்கு அழைத்து செல்லும்... பிழைய ரிக்கார்ட்டில் கேட்பது போல் இருக்கும்... இந்த பாடல் எங்கள் ஊர் டூரிங் தியேட்டரில் படம் போடுவதற்கு முன் இந்த பாடலை போடுவார்கள்..

இந்த பாடலை பாடியது 12 வயது மலையாள பெண்குட்டி...இசைக்கு என்ன மொழி???எல்லோரும் அல்காவை தூக்கி வைத்து பாராட்டினார்கள்.. கொண்டாடினார்கள்.. ஆனால் அந்த பெண்ணுக்கு ஈடு கொடுத்து தம் கட்டி பீ பீ வாசித்த நாதஸ்வர கலைஞரையும் அழகாய் மேளம் அடித்தவரையும்,தபேலா வாசித்தவரையும் கண்டு கொள்ளமல் மெத்த படித்த இசைவல்லுனர்கள் விட்டு விட்டார்கள்...ஒரு வரி பாராட்டி இருந்தால் அவர்கள் உச்சி குளிர்ந்து போய் இருக்கும் அல்லவா--??பணம் காசா முக்கியம் பாராட்டுதானே...
?

அல்காவின் அம்மா கண் மூடி எந்த தவறும் நிகழ கூடாது என ஆண்டவனை வேண்டிக்கொண்டு இருந்தார்...அந்த காட்சி அற்புதம்...
அப்புறம் ஒரு விசயம் இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன்...
மிஸ்டர் ஜேம்ஸ் நீங்கள் இப்போது அறியபட்ட இசையமைப்பாளாராக இருக்கலாம்... ஜெயடிவியில் போட்டிக்கு வருபவர்களை வருத்து எடுப்பது அவ்வவளவு நன்றாக இல்லை...இரண்டு கையில் ஆஸ்கார் வாங்கியும் இன்னுமும் ரகுமான் அமைதியாக இருப்பது நீங்கள் அறிய வாய்பில்லை...அப்படி தெரிந்து இருந்தால் இப்படி இருக்க வாய்பில்லை....
==================
பெரியார்தாசன் மற்றும் தற்போது விசாலி கண்ணதாசன் வேவ்வேறு மதத்துக்கு மாறி இருக்கின்றார்கள்....மாறுவது அவர்கள் இஷ்டம்.. அதுஅவர்கள் உரிமை.. யாரும் கேட்க போவதில்லை...ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்... சின்ன வயதில் இருந்து என் அப்பா அம்மாவை அழைத்து விட்டு சட்டென வேறு ஒருவரை எப்படி அப்பா அம்மா என்று அழைக்க முடிகின்றது??? என் அப்பா அம்மா கேட்டவர்களாகவே இருந்தாலும்... கடைசிவரை அவர்கள்தானே என் அப்பா அம்மாவாக இருக்க முடியும்.....எனக்கு இது விளங்கலை...முழுமனதாக மாறமுடியுமோ??
============
நன்றிகள்
பிரான்சில் இருந்து அரைமணி நேரத்துக்கு மேலாக பேசி நட்பு பாராட்டிய நண்பர் லிங்கத்துக்கு என் நன்றிகள்..

================
இந்த வார சலனபடம்....2002ல் உலக கோப்பை விளம்பரத்துக்கு தடை செய்யபட்டது....இது..


============

படித்ததில் பிடித்தது....

1.ஐட்ஜ்...
திருட்டு வழக்குல தினசரி நீ பிடிபடுறது எனக்கே வெட்கமா இருக்கு...
குற்றவாளி...
என்னை தினமும் புடிக்கிற அந்த போலிஸ்காரங்களுக்கு அது தெரியலையே எசமான்..

அம்பை தேவா...

2. எங்க தலைவர் சினிமா எடுக்க போறார்...
அப்ப தோள்ல போட்ட துண்டை தலையில போட வேண்டியதுதான்..
வி.சாரதிடேச்சு
இந்த வார குமுதம்....
============
பிலாசி பாண்டி..

மிருகங்களை பார்க்க மனிதர்கள் வந்து செல்லும் இடம் மிருககாட்சிசாலை...
மனிதர்களை பார்க்க மிருகங்கள் வந்து செல்லும் இடம் முதியோர் இல்லம்...
================
மெயிலில் நண்பர் ஸ்ரீதர் ஒரு மேட்டர் அனுப்பி இருந்தார்... அது நக்கலா அல்லது நல்லதுக்கா என்று தெரியவில்லை....

=============
நான்வெஜ் 18+

ஜோக்..1

அக்கா என் விட்டுகாரர் ஊருக்கு போய் இருக்கார்... துணைக்கு என் கூட வந்து பபடுத்துக்கிறியா?
அடி போடி போக்கத்தவளே உனக்கும் உன் புருசனுக்கும் இதே வேலையா போச்சு...
=============

ஜோக்..2

ஒரு திருடன் புருசன் பொண்டாட்டி இரண்டு பேரையும் கட்டி போட்டுட்டு சொன்னான்... நான் இந்த வீட்ல இருந்து பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு போகும் ரகம் இல்லை.. தேவைபட்ட என் உடல்பசியை தீத்துகிட்டு போகும் ரகம்...அப்படின்னு சொல்லிட்டு... நேரா கட்டி போட்டு இருக்கற பொண்டாட்டி காதுல ஏதோ கிசு கிசுக்க... அவளும் கிசு கிசுவா அவனுக்குபதில் சொல்ல....


உயிர்மேல இருக்ககற ஆசையில கணவன் பொண்டாட்டிகிட்ட... அன்பே.. அவன் எது செஞ்சாலும் அவனுக்கு வலைஞ்சு கொடுத்து போயிடு...இந்த உலகத்துல கற்புன்னு ஒரு கருமாந்திரம் உலகத்துல இல்லை... நமக்கு உயிர் முக்கியம் மத்தது எல்லாம் மயிருக்கு சமானம்னு சொல்லி அழ ஆரம்பித்தான்...

மனைவிக்கிட்ட எந்த ரியாக்சனும் இல்லை....அவன் என்ன உன்கிட்ட காதுல சொன்னான் நீ என்னபதிலுக்கு சொன்ன? என்று கணவன் ஆர்வத்தோடு கேட்க...


அவன் கே பிரியனாம்... வாசலின் எங்க ?இருக்குன்னு கேட்டான்.... நான் பாத்ரூம்ல இருக்குன்னு சொல்லி இருக்கேன்...நம்ம ரெண்டு பேருக்கும் உயிர் முக்கியம்.. நீங்க முரண்டு பண்ணாதிங்க என்றாள்..உயிர்தான் முக்கியம் மத்தது எல்லாம்..........தான்என்றாள்..
===========
ஜோக்..3

நர்ஸ்...நீங்க இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆக போறிங்க... நல்லா உடம்பை பார்த்துக்கோ...
சர்தார்.. அதுக்குதான் வெயிட்டிங்...நானும் பார்த்துட்டு சந்தோஷமா போறேன்..

==========
ஜோக்..4
ஏன்பா தம்பி பஸ் உள்ள புட்பால் விளையாடுற அளவுக்கு இடம் இருக்கு படிகட்டுல நிக்காத உள்ளவா..பா... யோவ் கண்டக்டர் நான் கோல் கீப்பர்...

குறிப்பு இந்த பதிவை காலையில் 9 மணிக்கு எழுதினேன் போஸ்ட் செய்யும் நேரத்தில் சிபி கனெக்ஷனுக்கு முக்கில் வேர்க்க பல மணிநேரங்கள் தாமதமாக உங்கள் முன்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால் ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

30 comments:

  1. ஜாக்கி,

    மேட்டர்கள் அனைத்தும் அருமை.

    அல்கா அஜித் பாடல் பற்றியும், அந்த பெண் பாடும் வீடியோவும் கேபிள் ஏற்கனவே, 10 நாட்களுக்கு முன்பே அவர் பதிவில் கொடுத்து விட்டார்.

    ReplyDelete
  2. ஸ்பெயின் ஜெர்மனி போட்டி அருமையாக இருந்தது, எனவே எல்லாரது கண்களும் பந்தின் மீதே இருந்தது.

    அழகா போலவே இந்த சீனியர் அல்காவும் (ரூபா) சிங்கார வேலனே பாடி இருக்கிறார் கேளுங்கள்.

    பாட்டு முடிந்தஹும் ஜானகியின் பாராட்டை கேளுங்கள், ஜானகி சொல்லுவார் என்னை விடவும் சிறப்பாகவே ரூபா பாடி உள்ளார்.

    http://www.youtube.com/watch?v=lqh_OPMcEG0

    ஜேம்ஸ் வசந்தன் இந்த வீடியோவையும் ஜானகியின் வார்த்தைகளையும் கேட்க வேண்டும்.

    எம் எஸ்வி ஒருமுறை இளையராஜாவிடம் சொன்னாராம்- சங்கிதம் கற்று கொள்வதை விட இங்கிதம் கற்று கொள்ள வேண்டும் முதலில் , அப்பொழுது தான் நாம் ஜெயிக்க முடியும் என்றாராம்.

    ReplyDelete
  3. நன்றி உலகநாதன்சார்...

    இது விஜய்டிவி போல மறுஒளிபரப்புன்னு வச்சிக்கிங்க... நான் அவர் பதிவை பார்க்கலை...

    நான் நேத்துதான் விஜய்டிவியில அந்த பொண்ணு பாடியதை பார்த்தேன்...

    நன்றி..

    ReplyDelete
  4. நன்றிராம்ஜி.. நிச்சயம் இங்கீதம் தெரிந்து இருக்க வேண்டும்..ஜெயா டிவியில் பாட வரும் அத்தனை பேரையும் மாடு ஓட்டுவது போல் பேசுவது... நல்லது இல்லை...
    நன்றி

    ReplyDelete
  5. ஜாக்கி ஜோக்௧ 1 ரொம்ப பழசு. மிச்ச படி எல்லா மேட்டரும் நல்லாருக்கு வழக்கம் போல.

    ReplyDelete
  6. அண்ணே உடம்ப பாத்துகங்க..

    ReplyDelete
  7. \\முழுமனதாக மாறமுடியுமோ??//
    ஈடுபாடு இருந்தா கண்டிப்பா மாறமுடியும் ஜாக்கி.....இசுலாமில் ஜாதி இல்லை என்று நினைத்த ஒரு வயதில்(14 வயதிருக்கும் ) நான் வீட்டில் இசுலாமிற்கு மாற போகிறேன் என்று சொன்ன பொது அப்பா என்னை தடுக்கவில்லை...ஆனால் அங்கயும் தலித் முஸ்லிம் என்றே ஒரு பெயர் கிடைக்கும் என்று தெரிந்த பொழுது அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டேன்

    \\இன்னும் அங்கு படிக்கும் பசங்களிடம் கேட்டால் இன்னும் பல கண்ணீர்கதைகள் சொல்கின்றார்கள்...//

    அங்கு நிறைய கொடுமை செய்வதுண்டாம் கல்லூரி நிர்வாகம்...பாவம் மாணவர்கள்...சீக்கிரம் விஷயங்கள் வெளியில் வந்தால் நிறைய பேரின் வாழ்க்கை காப்பாற்றப்படும்...!

    அப்புறம் பீகார் மாணவர் மட்டுமல்ல...வட இந்தியாவில் இருந்து படிக்க வரும் பெரும்பாலான மாணவர்கள் இப்படியே நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்....நெல்லையில் இருந்து தெரிந்தவர் கக்கத்தில் பணத்தை சுருட்டி வைத்து கொண்டு எஸ் ஆர் எம் பல்கலைகழக அலுவலகத்திற்கு துணைக்கு என்னையும் அழைத்து சென்றார் அவர் பையனுக்கு சீட் வாங்க ....போன உடனே வாசலிலேயே நிறைய வட இந்திய மாணவர்கள் பேரம் பேச...கடுப்பாகிவிட்டேன்
    எங்கே வந்து யார் யாருக்கு விலை சொல்வதென்று....
    இப்போ இந்த அளவிற்கு கெட்டு போயிருச்சு நிலைமைன்னு நெனைக்கும்போது கஷ்டம்தான்!

    ReplyDelete
  8. தல அந்த தமிழ் சொல் மெயில் மேட்டர் பிரியமுடன் வசந்தின் பழைய பதிவொன்று என நினைக்கிறேன்

    ReplyDelete
  9. //சின்ன வயதில் இருந்து என் அப்பா அம்மாவை அழைத்து விட்டு சட்டென வேறு ஒருவரை எப்படி அப்பா அம்மா என்று அழைக்க முடிகின்றது??? என் அப்பா அம்மா கெட்டவர்களாகவே இருந்தாலும்... கடைசிவரை அவர்கள்தானே என் அப்பா அம்மாவாக இருக்க முடியும்.....எனக்கு இது விளங்கலை...முழுமனதாக மாறமுடியுமோ??//

    மொழி ஒரு logical instrument. அதில் திருகுதாளங்களும் செய்யலாம். கடவுளரை அப்பா அம்மா என்று கற்பித்து மற்றவர்களை அதற்குள் இழுப்பதும் அப்படிப்பட்ட ஒன்று.

    நண்பர்களின் தாய்தந்தையரை அம்மா அப்பா என்று விளித்ததில்லையா நீங்கள்? பெற்றவரைவிட்டு மற்றவரைத் தாய்தந்தையராக ஏற்றுக்கொண்டவர்கள் உலகத்தில் இல்லவே இல்லையா?

    ReplyDelete
  10. நீங்க நல்லா எழுதுரீங்க சார்.

    ReplyDelete
  11. Mother can never be matched with மதம் jackie.

    Not good Jackie..

    ReplyDelete
  12. //
    ஆனால் அந்த பெண்ணுக்கு ஈடு கொடுத்து தம் கட்டி பீ பீ வாசித்த நாதஸ்வர கலைஞரையும் அழகாய் மேளம் அடித்தவரையும்,தபேலா வாசித்தவரையும் கண்டு கொள்ளமல் மெத்த படித்த இசைவல்லுனர்கள் விட்டு விட்டார்கள்
    //

    நாதஸ்வரம் வாசித்தவர் பெயர் மாம்பலம் M.K.S.நடராஜன்..

    ReplyDelete
  13. ஜாக்கி அண்ணே, எல்லாம் கலக்கல் மேட்டர் தான். ஒரு சின்ன வருத்தம். ஜோக்ல சர்தார் என்று போட்டது தான். இதை படித்தவுடன் எனக்கு அபியும் நானும்ல தலைவாசல் விஜய் சொல்றது தான் நினைவுக்கு வருகிறது. மாத்துங்கன்னு சொல்லல மாத்துனா நல்லா இருக்கும்னு சொல்றேன்.
    அப்புறம் அல்கா அஜித் அவ்வளவு அருமையான குரல் வளம்,பயிற்சி,முயற்சி ஜெயிக்க வைத்திருக்கிறது. இந்த பாடல் ஒன்றே சாட்சி அந்த சிறுமியின் திறமையை நிரூபிக்க.
    அரசியல்வாதிகள்,முன்னாள் சாராய வியாபாரிகள்,ரௌடிகள் இவங்கெல்லாம் கல்வி கூடம் நடத்தினா கல்வி தந்தைகள் ஆகிறாங்க. அப்புறம் எப்புடி கல்வி வளரும்.அவனுக சொத்து தான் வளரும். அழகப்ப செட்டியார்,அண்ணாமலை பல்கலைகழகம்,தியாகராஜர் இவங்கெல்லாம் கல்விக்காக தங்கள் பணத்தை முதலீடு செய்தார்கள். இன்றைய கல்வி தந்தைகள் பணத்துக்காக கல்வியை அடமானம் வைக்கிறார்கள் அவ்ளோ தான். தெரிஞ்ச மர்ம சாவுகள் இதனை தெரியாத,மூடி மறைக்கப்பட்ட சாவுகள் எத்தனையோ ?

    ReplyDelete
  14. //சின்ன வயதில் இருந்து என் அப்பா அம்மாவை அழைத்து விட்டு சட்டென வேறு ஒருவரை எப்படி அப்பா அம்மா என்று அழைக்க முடிகின்றது??? என் அப்பா அம்மா கெட்டவர்களாகவே இருந்தாலும்... கடைசிவரை அவர்கள்தானே என் அப்பா அம்மாவாக இருக்க முடியும்...//

    இதே தான் என் கருத்தும்

    ReplyDelete
  15. //கல்லூரியில் கொடுக்கும் கமிஷனுக்காக//

    இது புரியலை. கொஞ்சம் விளக்கம், தயவு செய்து .......

    ReplyDelete
  16. //சின்ன வயதில் இருந்து என் அப்பா அம்மாவை அழைத்து விட்டு சட்டென வேறு ஒருவரை எப்படி அப்பா அம்மா என்று அழைக்க முடிகின்றது??? என் அப்பா அம்மா கெட்டவர்களாகவே இருந்தாலும்... கடைசிவரை அவர்கள்தானே என் அப்பா அம்மாவாக இருக்க முடியும்...//

    அருமையான உதாரணம்! நீண்டகாலமாக இவர்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு இதுதான் தோன்றுகிறது....

    ReplyDelete
  17. வண்டி ஓட்டும் போது பார்த்து ஓட்டுங்க. பார்க் பண்ணும் போது இன்னும் கவனமா இருங்க.

    --

    நீங்க சொன்ன மாதிரி, ஆடியன்ஸ்ச கேமிரா கண்டுக்கறதே இல்லை :)

    ---
    ஜேம்ஸ் வசந்தன் ரொம்ப திட்டுறாரு.

    ReplyDelete
  18. //ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்... சின்ன வயதில் இருந்து என் அப்பா அம்மாவை அழைத்து விட்டு சட்டென வேறு ஒருவரை எப்படி அப்பா அம்மா என்று அழைக்க முடிகின்றது??? என் அப்பா அம்மா கேட்டவர்களாகவே இருந்தாலும்... கடைசிவரை அவர்கள்தானே என் அப்பா அம்மாவாக இருக்க முடியும்.....எனக்கு இது விளங்கலை...முழுமனதாக மாறமுடியுமோ??//

    சூப்பர் ஜா.சே. சார். சும்மா நச்சுன்னு இருக்கு. புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி.

    ReplyDelete
  19. //நல்லா உடம்பை பார்த்துக்கோ...//

    நான் சொன்னது உங்க உடம்பை ...

    ..உங்க நகைச்சுவை உணர்வுக்கு ஒரு அளவு கிடையாதா.

    //.. பின்புறமாக வாகனத்தோடு போய் 86கிலோவுடன் இலங்கை தமிழர்கள் போல் எந்த வித பிடிப்பும் இன்றி கீழே விழுந்து வைத்தேன்...//
    Jackie's spl!!!

    ReplyDelete
  20. அன்புடன் வணக்கம் இந்த தாய் தந்தைக்கு மகனாக பிறக்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணும் அன்பர்கள் தனது தாய் சமயத்தை(மதம்) விட்டு விலக மாட்டார்கள்!!! அது எந்த சமயமாக இருந்தாலும் சரி !!!!ஏனென்றால் ஒரு பெற்றோர் எந்த சமயத்தில் உள்ளன்ரோ அதுதானே ஒரு மகன் பின்பற்ற வேண்டியது எப்போது அவன் வேறு சமயத்திற்கு செல்கிறானோ அப்போதே அவன் தனது பெற்றோரை அவமானபடுத்தி விடுகிறான் ((((( மதம் என்ற சொல் நமது பண்டைய நூல்களில் எதிலும் இல்லை சைவ சமயம் வைணவ சமயம் என்றுதான் உள்ளது ஹிந்து என்ற சொல்லும் கிடயாது))) ஆனால் நீங்கள் இறை நம்பிக்கையுடன் இருப்பது மனதுக்கு மகிழ்சி அளிக்கிறது நன்றி நண்பரே

    ReplyDelete
  21. //மிருகங்களை பார்க்க மனிதர்கள் வந்து செல்லும் இடம் மிருககாட்சிசாலை...
    மனிதர்களை பார்க்க மிருகங்கள் வந்து செல்லும் இடம் முதியோர் இல்லம்...//

    மிக அருமையான கருத்து..

    ReplyDelete
  22. ஜாக்கி சார்,


    ஜேம்ஸ் வசந்தன் ஜெயா டிவியில் பார்த்து வருகிறேன். எனக்கு ஒன்றும் அவ்வளவு மோசமாக தெரியவில்லை. அவர் அந்த ப்ரோக்ராம்ல் ஒரு ஜட்ஜ் மற்றும் கிரிடிக். அந்த கோணத்தில் சரியாகப் படுகிறது. மேலும் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் இந்த மாதிரி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் நிர்பந்தித்து இருக்கலாம்.

    ReplyDelete
  23. ஜாக்கி ஜோக்௧ 1 ரொம்ப பழசு. மிச்ச படி எல்லா மேட்டரும் நல்லாருக்கு வழக்கம் போல//

    ராமசாமி நம்மளுக்கு தெரிஞ்சதெல்லாம் இதுதான்...

    நீ அவனும்னா ரொம்ப புதுசா எதாவது கெடச்சா அனுப்பி விடு..

    ReplyDelete
  24. செந்தில் உன் அன்புக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  25. ஆனால் அங்கயும் தலித் முஸ்லிம் என்றே ஒரு பெயர் கிடைக்கும் என்று தெரிந்த பொழுது அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டேன்//

    நம் நாமக இருக்க வேண்டும்... நன்றி லெமூரியன்....

    ReplyDelete
  26. உண்மைதபன் இவர்கள் ஆள்பிடித்து எவ்வளவு கமிஷன் பார்பபார்கள் தெரியுமா?

    ReplyDelete
  27. தல அந்த தமிழ் சொல் மெயில் மேட்டர் பிரியமுடன் வசந்தின் பழைய பதிவொன்று என நினைக்கிறேன்//

    நன்றி யோ அப்படியா?

    ReplyDelete
  28. நண்பர்களின் தாய்தந்தையரை அம்மா அப்பா என்று விளித்ததில்லையா நீங்கள்? பெற்றவரைவிட்டு மற்றவரைத் தாய்தந்தையராக ஏற்றுக்கொண்டவர்கள் உலகத்தில் இல்லவே இல்லையா?//

    இருக்கின்றார்கள்...

    எனக்கும் அது போல நிறைய தாய் தந்தையர்... இருந்தாலும் அவர்கள் இன்னிஷியலை சேர்த்துக்கொள்ள முடியாது என்று அரசு சொல்கின்றது...

    ReplyDelete
  29. நன்றி ஜெய்...

    நன்றி குரு..

    ReplyDelete
  30. ஜாக்கி அண்ணே, எல்லாம் கலக்கல் மேட்டர் தான். ஒரு சின்ன வருத்தம். ஜோக்ல சர்தார் என்று போட்டது தான்.///

    சரி இனிமே பார்ப்போம்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner