அன்புள்ள இந்திய (தமிழக) மீனவனுக்கு வணக்கம் வாழிய நலம்...
எங்க வாழிய நலம் என்று முனு முனுக்க வேண்டாம்...
உங்கள் சமுக மீனவர்களை சிங்களவர்கள் நிர்வாணபடுத்தி,உதை கொடுத்து, குண்டு அடிபட்டு சீறும் சிறப்புமாக இருப்பதாய் பத்திரிக்கைகளில் படித்துக்கொண்டு இருக்கின்றேன்...
உலகின் 5வது வல்லரசாக வளர்ந்து கொண்டு இருக்கும் நாட்டின் குடிமகன்... குண்டடி பட்டு இறப்பது வாடிக்கையாகிவிட்டது...ஆனால் அவர்களுக்கு உங்களை நம் நாட்டின் குடிமகன் என்ற நினைப்பு கிஞ்சித்தும் அவர்களுக்கு இல்லை என்றே தோன்றுகின்றது...
இந்தியாவில் பிறந்த அத்தனை குடிமகன்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை கொடுக்கவேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகின்றது... அப்படி கொடுப்போம் என்று சொல்லிதான் ஆட்சியாளர்கள் அறியனை ஏறுகின்றார்கள்...
தமிழ்நாட்டை விட சிறியதாய் இருக்கும் தேசம்...இந்தியாவில் இருப்பவனை அடித்துக்கொண்டு இருக்கின்றது.. ஒரு கேள்வி இல்லை ஒரு கண்டனம் இல்லை...பிரதமர் ஒரு எச்சரிக்கை விடுத்தால் கூட அது உலக நாடுகளின் கவனம் பெரும்... அதை கூட செய்வதில் அவருக்கு தயக்கம் இருக்கின்றது...
ஒருவேளை நீங்கள் தலையில் டர்பன் கட்டி இருந்தால் தான் ஆடவிட்டாலும் தன் கால் சதையாவது அவருக்கு ஆடி இருக்கும்...ஒரு வேளை இந்திய இறையாண்மை பாராளுமன்றத்தில் மட்டும் இருப்பதாக எண்ணிவிட்டதன் விளைவே இந்த அமைதி என்று என்ன தோன்றுகின்றது....
பாரளுமன்றத்தில் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்தால்தான் இந்திய இறையாண்மை கேள்விகுறியாக்கபடுகின்றது... ஆனால் உங்கள் மீது துப்பாக்கி குண்டு பாயும் போது அது பற்றி எந்த கேள்வியும் இல்லை... வாழ்க்கை போராட்டத்தில் தினமும் உயிரை பணயம் வைப்பவன் விஷயத்தில் இந்திய இறையாண்மை எந்த கேள்வியும்ம இல்லாமல் தூங்குகின்றது...
நம்ம ஊரில் ஆயுதபூஜைக்கு இரும்பு சாமான்களை துடைத்து பட்டை போட்டு படையல் வைப்பது போல் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்துக்கு நம் ராணுவ தளவாடங்கள் அணிவகுத்து காட்சி நடத்துவோம்....அது ஒரு நாளும் இந்திய பெருங்கடலில் சிங்கள ராணுவத்தையோ அல்லது சிங்கள மீனவனையோ இது போல் செய்தது இல்லை அல்லது பயமுறுத்துவது போல ஒரு சின்ன லுலுலாயி வேலையை கூட செய்தது இல்லை...
எல்லைதாண்டி வந்த எத்தனையோ சிங்கள மீனவனையும்,பங்களாதேஷ் மீனவனையும் கைது செய்து முறைபடி அவர்கள் அரசிடம் அல்லது அவர்கள் நாட்டின் தூதரகத்தில் விட்டு விடுவோம்... யாரையும் நிர்வாணபடுத்தி துப்பாக்கியால் சுட்டது இல்லை....
உலகின் மிக பழைமையான தொழில் உங்களுடையதுதான்...அதே வேளையில் உலகில் ஆறு மொழிகள் மட்டுமே மிக தொன்மையானவையாம்.....அதில் நீ பேசும் தமிழ் மொழியும் ஒன்று...
ஆம் எவ்வளவு பெருமையான விசயம் அல்லவா? இப்போது கூட நீ பேசி சிலாகிக்கும் நம் தமிழ் செம்மொழிக்கு450 கோடியில் விழா எடுத்தார்கள்...நம் பரப்பரை வீரம் பற்றி சீலாகித்தார்கள்.. யாரும் நம் வீரம் பற்றி மறந்து விடக்கூடாது அல்லவா? அதனால்தான்
அது எல்லாம் பழம் கதை இப்போது எல்லாம் அது பேசி புரயோஜனம் இல்லை....நீ கூட தெருமுக்கில் டீ குடித்து கொண்டே தினத்தந்தி படித்து விட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை கூட தமிழர் வீரம் பற்றி பெருமை பேசி இருக்கலாம்...ஆனால் அந்த வீரத்துக்கும் ஆதீத துரோகத்தால் முள்ளிவாய்காலில் முடிவு கட்டபட்டது..
முள்ளிவாய்காலில் மவுனம் காத்தோம் காரணம்....மாநில அரசு எல்லை இந்யிவில் வறையறுக்கபட்ட விசயம் அனைவருக்கும் தெரிந்ததுதான்...இறந்து போனது நம் இந்திய நாட்டு அதுவும் நம் தமிழ் நாட்டு செம்மொழியான தமிழ் மொழி பேசும் மீனவன்...
மாநிலத்தில் ஆட்சி செய்த எல்லா அரசுக்குமே இது போலான கையாகளாத தனம் இருக்கினறது...இதில் குறிப்பிட்ட யாரையும் குற்றம் சொல்ல முடியாது...இதில் மாநிலத்தில் ஆட்சி செய்த அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது...
ஒரு 50 பேர் சாகும் போதுதான் ஒரு அரசு விழிக்கும்... ஏனெனில் அரசுக்கு எத்தனையோ தலைக்கு மேல் வேலை இருக்கின்றது....சரி மாநில அரசு விழிக்க வேண்டும்... அதுவும் விழிக்கவில்லை....100 பேர் செத்தார்கள்.. மத்திய மாநில அரசுகள் விழித்து இருக்க வேண்டும்...அவர்கள் விழிக்கவில்லை...200 ஆயிற்று,300 ஆயிற்று,400 ஆயிற்று,500 ஆயிற்று அதுக்கு மேலும் இறந்து கொண்டு இருக்கின்றார்கள்...எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றால் ஏதோ தப்பு இருப்பதாக உங்கள் மர மண்டைக்கு எட்டவில்லை...உங்களுக்குள் ஒற்றுமை இல்லை.. அல்லது மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை....
எனக்கு தெரிந்து நீங்கள் தொழிலை மாற்றி விடுவது நல்லது... உயிர் பயம் இருந்தால் நீங்கள் தொழிலை மாற்றியே ஆக வேண்டும்.... ஆம் நண்பர்களே உங்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும்..
அடுத்த மாதம் இதே போல் இந்திய பெருங்கடலில் வலையறுப்பு சம்பவம் மற்றும் சிங்களவர்கள் நிர்வாண மீனவ பேஷன் ஷோ நடத்துவார்கள்...யாராவது ஒரு மூளை சூடுள்ள சிங்களவன் துப்பாக்கியால் சூட்டு வைப்பான்... நீங்கள் எப்படியும் நிச்சயம் இறந்து போவீர்கள்...அப்படி நீங்கள் இறந்து போய்விட்டால் என்ன நடக்கும் என்பதை தீர்க்க தரிசனம் போல் சொல்கின்றேன் கேளுங்கள்...
இங்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கும் தெரியுமா?
தினத்தந்தியில் மீண்டும் சிங்கள இராணுவம் அட்டுழியம் என்ற தலைப்பிட்டு செய்தி வரும்...
தமிழகத்தில் எந்த முதல்வர் ஆட்சிக்கு இருந்தாலும் ஒரு கண்டன்ம் தெரிவிப்பார்... இப்போதைய முதல்வர் கடிதம் எழுதுவார்... மாட்டுகாரன் செனைக்கு மாடு அழைத்து வருவதை கூட செல்போனில் பேசி முடிக்கும் போது... இப்போதும் கடிதம்தான்.....
உள்துறை அமைச்சகத்தில் இருந்து இலங்கையிடம் விளக்கம் கேட்கபோவதாக கடிதம் வரும்...
ஒரு வாரத்துக்கு பிறகு அந்த கடிதம் மற்றும் விஷயம் டிவி சீரியல்களால் மறக்கடிக்கபடும்....
ரொம்ப தீவிரமான தமிழர் அமைப்புகள் இலங்கை தூதரம் முன் ஆர்பாட்டம் நடத்தும்...
தேர்தல் வந்தால் தமிழனாய் இருந்து கொண்டு மீனவ்ர்கள் மீதான தூப்பாக்கி சூட்டை கண்டிக்காத ஆளும்கட்சியே ஒழிக என்பதாய் கோஷம் எழுப்பபடும்...
எதிர்கட்சி இறந்த மீனவனின் போட்டோவை பெரிதாக வால் போஸ்ட் அடித்து தேர்தல் நேரத்தில் ஓட்டி போஸ்டரில் சக்கரை கரைசலை ஊற்றி ஈக்களை மொய்க்க வைத்து பரிதாபம் தேடி....தேர்தலில் ஜெயிக்க வழிபார்பபார்கள்...
இறந்த மீனவன் குடும்பத்துக்கு பிரச்சனையின் சமயத்துக்கு ஏற்ப... ஒரு லட்சம் இரண்டு லட்சம் வழங்கபடும்... எலெக்ஷன் நேரம் என்றால் 3லட்சத்தில் இருந்து 5 லட்சம் கொடுக்கபடும்... போராட்டம் ரொம்ப தீவிரமானால் இறந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கபடும்...
இதுதான் நடக்கும் நீங்களும் மணலில் புதைத்து வைத்த டப்பா கஞ்சியை குடித்துக்கொண்டே அரசு கொடுத்த தொலைகாட்சியில் பார்த்து வைப்பீர்கள்...ரொம்பவும் போதை ஏறிவிட்டால் செல்போனில்
ஹலோ ....மீயிசிக்கா?
சித்ரம் பேசுதடி படத்தில் இருந்து வலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாட்டை போட சொல்லி நேயர் விருப்பம் கேட்பீர்கள்...
யாராவது எல்லைதாண்டும் சிங்கள மீனவர்களை தமிழ எல்லையில் வந்தால் அவர்களை கைது செய்து புது உடை கொடுத்து...உணவு கொடுத்து தூதரகம் மூலம் இலங்கைக்கு கப்பல் மூலமோ அல்லது விமானம் மூலமோ வந்தாரை வாழவைக்கும் தமிழனால் அனுப்பி வைக்கபடுவான்...
தமிழக மீனவர்களே உங்களுக்கு உயிர் தப்பிக்க ஒரு உபாயம் சொல்கின்றேன் கவனமாக கேளுங்கள்...
உயிர்தப்ப வேண்டும் என்றால் ஒரே வழி... இருக்கின்றது... இல்லை எங்கள் தொழிலைதான் நாங்கள் செய்வோம் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை....ஊரில் இருக்கும் சொத்தை வந்த விலைக்கு விற்றுவிடுங்கள்... தர்பூசனி மொத்தமாக பயிரிடும் இடத்தில் போய், ஒரு காய் 10 ரூபாய் மேனிக்கு பேசி ஒரு 500 தர்பூசனி வாங்கி லாரி பிடித்து சென்னையில் ஏதாவது ஒரு நடையோரத்தில் கடை போடுங்கள்...
போலிசுக்கு லஞ்சம் என்றும், அந்த பகுதி தாதாக்களை கவர் செய்ய என கொஞ்சம் அமவுன்ட் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்...நோச்சிகுப்பம் அல்லது அயோத்திக்குப்பம் பக்கம் வாடைகைக்கு வீடுபிடித்துக்கொள்ளுங்கள்....சப்போஸ் தொழிலில் தோர்தாலும் சென்னையில் உள்ள கடலில் வலை போட்டு மீன் பிடிக்கலாம்...
போர்குற்றத்தை விசாரிக்கவந்த பான்கீ மூனை மாமா என்று அழைத்தவர்கள்...சிங்களவர்கள்...இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சனை செய்யாதவரை இந்திய அரசு எந்த கேள்வியும் கேட்க போவதில்லை../
வட இந்திய சேனல்களை பொறுத்தவரை பஞ்சாப்பீல் இறந்தால்தான் அது செய்தி... அதைவிட பாகிஸ்தானில் நடக்கும் விசயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் நாட்டின் தென் கோடி இந்தியனுக்கு கொடுப்பதில் பெரும் தயக்கம்....அவர்கள் அப்படித்தான்...தமிழக சேனல்கள் பேசி புரயோஜனம் இல்லை..
தினமலரும், இந்துவும் எப்போதும் சிங்களவர் பக்கம்தான்...அவர்கள் செய்வது நியாயம் என்று எழுதுவார்கள்...இவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்து இருக்க கூடாது என தரையில் இருந்து கொண்டு வாதம் செய்வார்கள்...அவர்களை பொறுத்தவரை மயிலாபூரில் தண்ணியும் கரண்டும் ஒழுங்காக தடையில்லாமல் வந்தால் போதும்....
ஆனால் சிங்களவர்கள் ஒரு போதும் இந்தியாவை ஒரு நேச நாடாக வைத்து பார்ப்தில்லை... விரைவில் நம் கண்ணை குத்த தொடங்கும் படலம் விரைவில் நடக்கும்...அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் குரல் கொடுப்போம்.... அப்போது எல்லாமே கடந்து போய் இருக்கும்..
ஒரு கோபத்தின் வெளிபாடாய் இந்த கடிதம்.... மீனவ மக்களை காயபடுத்த அல்ல....
அன்புடன்
ஜாக்கிசேகர்
நாலு பேரு வாசிக்க ஓட்டும் பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்...
குறிப்பு ..
எழுத்து பிழைகள் இருக்கும்.. வேலை இருப்பதால் வந்து சரி செய்கின்றேன்..
அதீதமான துயரம் கொண்ட மனதுடன் எழுதப்பட்ட கடிதம் இது.. எங்கள் மீனவனை சீண்டினால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று பேசிய சீமானை கைது செய்ய ஆணை பிறப்பிகபட்டுவிட்டது.. பிறகெங்கே ஓங்கி குரல் கொடுக்க...
ReplyDeleteநீங்கள் சொல்வது மாதிரி தார் பூசணி விற்றால் உயிராவது மிஞ்சும்...
கேள்வி: "இறையாண்மை அப்ப்டின்ன என்னங்க? யாராவது விளக்குங்களேன்?"
ReplyDeleteபதில்: "குடும்பத்துக்கு என்றால் நேரிலும், தமிழனுக்கு என்றால் கடிதம் மூலமும் காப்பாற்றப்படுவது இறையாண்மை!
பேஸ்புக்கில் நண்பன் விமலாதித்தன் இட்டது.
திமுகவின் ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் பதிவர்கள் கூட தம் நாட்டு மீனவர்கள் சுடப்படுவதைக் கண்டிப்பதில்லை.
கடிதத்தை வரிக்கு வரி ஆதரிக்கிறோம்.
ReplyDeleteவரவேற்கிறோம்.
தமிழினக் காவலரே இதைப் பற்றி கவலைப்படாத போது சிங்க்குக்கு என்ன கவலை? அவர்கள் மயிருக்கு இருக்கும் முக்யத்துவம் கூட தமிழனின் உயிருக்கு இருப்பதில்லை என்பதுதானே உண்மை.
ReplyDeleteHi,
ReplyDeleteWhat to do? Our state Government is only worried about their welfare and relationship and Central Government. Chief minister conducts hunger strike as public in stead of taking steps to help the sufferer. We need a good leader who can take firm decision and implement. Till such time We read/skip/forget these kind of issues. If we shout, we will be arrested. Can we do something from ourside?
ஜாக்கி,
ReplyDeleteமற்றொரு சமூக அக்கறையும், ஆதங்கமும் நிறைந்த இடுகை. இடுகைக்கு நன்றி.
ஸ்ரீ....
ஜாக்கி... இதை எழுதிய உங்களுக்கும், இதற்கு பின்னூட்டம் இடுகின்ற எனக்கும், இந்த ஆட்சியாளர்களை தூக்கி வீசும் 49-O சட்டத்தை பயன்படுத்த துப்பு இல்லை... நாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்கள் மீது காறித்துப்புவதாய் நினைத்து நம் மீதே காறி துப்பிக்கொண்டிருக்கிறோம்...
ReplyDeleteஇரண்டாயிரம் ரூபாய்க்கும், வேட்டி சேலைக்கும், கறி பிரியாணிக்கும் ஓட்டு போடும் கூட்டமும், புது படம் வரும்போது, வரிந்து கட்டிக்கொண்டு முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் விசில் அடிச்சான் குஞ்சுகளும் இருக்கும் மாநிலத்தில் நீங்கள் எப்படி பெரிய எதிர்ப்பை எதிர்பார்க்க முடியும்; அரிசி, பருப்பு, தொலைகாட்சி பெட்டி, சமையல் எரிவாயு (cooking gas) அனைத்தையும் இலவசமாக நாம் வாங்கியபோதே தன்மானம் என்பதை தொலைத்து விட்டோம்... பின் எப்படி சத்தம் வாயில் இருந்து வரும்...
கீழே உள்ளது தான் நிதர்சனம்...
நான் சம்பாதித்து கட்டிய வரியில்
ஊரெல்லாம் வண்ண தொலைகாட்சி பெட்டி...
என் வீட்டிலும் அலுவலகத்திலும் மின்சாரம் இல்லை...
அருமையான பதிவு.
ReplyDeleteமனோ
இது கையாகாலா தனம் அல்ல. திராவிடக்கட்சிகளிடம், மாநில உரிமைகள் சம்பந்தமான ஒரு தெளிவான தொலை நோக்குப் பார்வை இல்லை. அண்ணா தனிமாநில கோரிக்கையை கைவிடும்போதே, "மாநில பிரிவினைக்கான கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன" என்றார். அதனை நிவர்த்தி செய்ய என்ன செய்தார்? அவர் மாநிலப்பிரிவினையை கைவிட்டதே பதவி அரசியல் செய்ய வேண்டும் என்பதுதானே. பிழைப்புவாதத்தின் பிதாமகன் என்று ஒரு பதிவு வினவில் வந்தது. படித்துப் பாருங்கள்.
ReplyDeleteஅண்ணாவே இப்படி என்றால்.. பின்னால் வந்தவர்கள் எப்படி இருப்பார்கள் ????.
எம்ஜியாரும் சரி கலைஞரும் சரி தம்முடைய அரசியல் தொழிலுக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் போதும் - இதுதான் மத்திய அரசுடனான மாநில அரசின் உறவு.
தன்னுடைய மகனுக்கு மகளுக்குப் பதவி என்றால் தன்னைப் பொட்டலம் கட்டிக் கொண்டு டில்லி செல்வார் கலைஞர். ஆனால் முள்ளிவாய்க்கால் இழவு, மீனவ படுகொலைகள் என்றால் கடிதம் எழுதுவார்.
நிலைமை இப்படி இருக்க - சும்மா மயிலிறகால் தடவி கொடுப்பது மாதிரி - மாநில மத்திய லிமிட் என்று உள்குத்து வைக்கின்றர்களே ? என்ன விடயம் ?
சரி பரவாயில்லை விடுங்கள் - நர்சிம் பிரச்சனைக்குப் பிறகு 'உம்மைப்' போன்ற வலைஞர்கள் நிறைய பொதுப் பிரச்சனைப் பற்றி பேசுகிறீர்கள். அதுவே நல்ல முன்னேற்றம்தான். இதற்காக வினவிற்கு ஒரு நன்றி
என்ன மேன் என் கமெண்ட் காணோம் ?
ReplyDeleteவித்தியாசமான கடவுளின் பின்னூட்டம் அருமை.
ReplyDeleteதினத்தந்தியில் மீனவர் சிங்கள ராணுவத்தால் சித்திரவதை என்ற செய்தி படித்த உடன் நாம வேகமாக பதிவு எழுதி ஹிட்ச்களை குவிப்போம்.
இரண்டு நாளில் இதை மறந்து புதிதாக வந்து இருக்கும் சினிமாவிற்கு முதல் ஆளாக விமர்சனப் பதிவு எழுத வேண்டிய கடமையில் இதை எல்லாம் மறந்து விடுவோம்.
தேர்தலின் பொழுது கேட்கவே வேண்டாம், ஆறாயிரமோ, எட்டாயிரமோ வாங்கி கொண்டு நம் வாக்கை விற்று விடுவோம்.
இதே ராமேஸ்வரத்தில், ராமநாத புரத்தில் இப்போது தேர்தல் வைத்தாலும் ரிதிஷே ஜெயிப்பார்.
ஜாக்கி நீங்க என்ன சொன்னாலும் இது தொடர்ந்து நடக்கத்தான் போகுது, எல்லோரும் வேடிக்கை பார்க்கத்தான் போறாங்க.
ReplyDeleteஇந்திய இறையாண்மையாவது மயிராவது!!
நியாயமான கோபம் இது ஆட்சி நடத்துபவர்களுக்கு இல்லையே
ReplyDeleteநல்ல பதிவு
ஜாக்கி இன்னும் 25 வருடம் கடந்தாலும் இப் பதிவுக்கான பதில் மத்திய, மாநில அரசிடம் கிடைக்காது.
ReplyDeleteஓட்டு காசுக்காக பல சங்கங்களாக பிரிந்து இருக்கும் மீனவர்களிடம் எப்படி ஒற்றுமை ஏற்படும்.
வணக்கம் ஜாக்கி....!
ReplyDeleteநெஞ்சு கனக்க வைக்கும் இடுகை இது ....
மொத்தமாக தமிழினம் இந்திய கூட்டமைப்பில் புறக்கனிப்படுவது ஒரு புறம் என்றால்,
தமிழ்நாட்டில் மீனவ இனம் புறக்கணிக்கபடுவது வேதனையளிக்கிறது.....
ஒரு வேளை கடலோரத்திலேயே வாழ்வதால் நாட்டிற்குள் அவர்களால் பிரச்சினை இல்லை என அரசு நினைக்கிறதோ என்னவோ....
நாட்டிற்குள் வந்து ஒரு கலவரம் செய்தால்தான் அரசாங்கத்திற்கு அவர்கள் பலம் புரியுமோ என்னவோ....
இங்கே சாதியின் பலம் பொறுத்தே நல திட்டங்கள் ஒதுக்கப் படுகின்றனவே...!
கன்னியாகுமாரியில் சில மாதங்களுக்கு முன்பு கொத்தாக மீனவர்கள் காணாமல் போன பொழுது
சன் குழும தொலைகாட்சியின் சென்னை அலுவலகத்தில் இருந்து அந்த பகுதியின் ரிப்போட்டருக்கு இவர்கள் சொன்ன செய்தி ,காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை
முடிந்த மட்டும் குறைத்து செய்தி கொடுங்கள் என்று....
அங்கே மக்கள் கொத்திது போய் கிடக்கும் போது மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் அங்குள்ள ஊர் தலைவரை கட்டாயப் படுத்தி எண்ணிக்கையை குறைத்து அதுவே அடுத்த நாளின் செய்தியாக்கினார்கள்.............
கையாலாக தனத்தை கூட கௌரவமாக மறைக்கும் சதிகார குடும்பம் அவர்கள்....
ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் செத்து விழும்போது இங்கே கொத்து கரி சாப்பிட்டு கொண்டே மகனுக்கு அமைச்சர் ப்பதவி கேட்டவர்கள் தானே.......
அவர்கள் பாணியில் சொன்னால்--------நாடு அது நாசமாய் போகட்டும்.
அத்தனையும் சத்தியமான உண்மை. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவதாக வந்த செய்திக்கு குடுக்கப்பட்ட முக்கியத்துவம் கூட நமது மீனவர்கள் காலம் காலமாக அனுபவித்துவரும் கொடுமைகளுக்கு குடுக்கபடவிலை. அனால் நமக்கும் இதுவும் வேணும் இன்னமும் வேணும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் வளரவில்லை. நமது தனித்தன்மையை இழந்து சுயநலவாதிகளாக இருக்கிறோம். ஜாதி மதம் ஏன் கட்சிகளால் கூட பிரிந்து கிடக்கிறோம். நமக்கு விடிவு காலமே இல்லை.
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...
ReplyDeleteமாநில அரசின் கையாகலாத தனத்தைதான் இங்கே குறிப்பிட்டு இருக்கின்றேன்..அதை விட மீனவ சமுதாயத்தில் சுத்தமாக ஒற்றுமை இல்லாததையும்தான் சுட்டி காட்டி இருக்கின்றேன்....
ReplyDeleteஎனக்கு கலைஞரை பிடிக்கும் ஆனால் எப்போதும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடியது கிடையாது...
அண்ணா காலத்தில் இருந்து தவறு செய்து விட்டு கலைஞரை மட்டும் விரல் நீட்ட எனக்கு சம்மதம் இல்லை...
எம்ஜீஅருக்கு இருந்த மாசில் அவர் எவ்வளவோ சாதித்து இருக்கலாம்...
மைனாரிட்டி அரசை வைத்துக்கொண்டு இவரால் என்ன கிழிக்க முடியம்...வராலறு முக்கியம் அமைச்சரே என்பது போல் ஆட்சி அவருக்கு ஆட்சி முக்கியமாக படுகின்றது...
மாநில அரசின் கையாகலாத தனத்தைதான் இங்கே குறிப்பிட்டு இருக்கின்றேன்..அதை விட மீனவ சமுதாயத்தில் சுத்தமாக ஒற்றுமை இல்லாததையும்தான் சுட்டி காட்டி இருக்கின்றேன்....
ReplyDeleteஎனக்கு கலைஞரை பிடிக்கும் ஆனால் எப்போதும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடியது கிடையாது...
அண்ணா காலத்தில் இருந்து தவறு செய்து விட்டு கலைஞரை மட்டும் விரல் நீட்ட எனக்கு சம்மதம் இல்லை...
எம்ஜீஅருக்கு இருந்த மாசில் அவர் எவ்வளவோ சாதித்து இருக்கலாம்...
மைனாரிட்டி அரசை வைத்துக்கொண்டு இவரால் என்ன கிழிக்க முடியம்...வராலறு முக்கியம் அமைச்சரே என்பது போல் ஆட்சி அவருக்கு ஆட்சி முக்கியமாக படுகின்றது...
சரி கலைஞரை வீட்டுக்கு அனுப்பி விடலாம்...இன்னும் கொஞ்சம் நாள் கழித்து சொல்லாதீர்கள்.... வேறுயார் அந்த இடத்தில் இப்போது இருக்கின்றார்கள் என்று யாராவது தயவு செய்து சொல்லுங்கள்...
ReplyDeleteஎங்கள் மண்ணை விட்டு விடுங்கள்... இலங்கையில் உள்ள தமிழர்கள் ஒற்றமையாக இருந்து இருந்தால் இந்தியாவின் தயவு இல்லாமலேயே ஈழக்காற்றை சுவாசித்து இருக்க முடியம்... எல்லா இடத்திலும் சுய நலம் மேலோங்கி இருக்கின்றது....எல்லோருக்கும் சுய நலம் இருக்கின்றது என்னையும் சேர்த்துதான் சொல்கின்றேன்...
தீர்வே இல்லாத விஷயத்தில் பல வருடங்களாக நடக்கும் சோகத்தை சொல்லவே... இந்த பதிவு....
என் இடத்தில் இருந்து நான் சென்னை வந்தேன் வீடு வாங்கினேன்... என் கிராமத்தில் இன்னும் அந்த ஒரு ரூபாய் அரிசியும், இலவச கேஸ் அடுப்பும் எவ்வளவு வர பிரசாதம்....என்பதை...இருப்பவர்கள்... இலவசத்தை எள்ளி நகையாடுவார்கள்.... எல்லாம் இலலவசமாக கிடைக்கின்றது என்பதற்ககாக யாரும் சோம்பி வீட்டில் உட்கார்ந்து தென்ட தீனி தின்ன போவதில்லை...
ReplyDeleteநரசிம் பிரச்சனைக்கு பிறகு மற்றவர்கள் எப்படியோ எனக்கு தெரியாது... நான் ஆரம்பத்தில் இருந்தே சினிமா விமர்சனமும் பொது பிரச்சனையும் எனக்கு தோனிய கண்னோட்டத்தில் எழுதி வருகின்றேன்...
ஒட்டு மொத்த இந்தியாவே லஞ்ச லாவன்யத்தில் திளைத்துக்கொண்டு இருக்கின்றது
மெத்த படித்த சுயமாய் சிந்திப்பவர்களுக்கு...நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை சொல்லவும் என் மனக்குமுறலை கொட்டவும்இந்த பதிவுகள்...
ராம்ஜி சொல்வது போல் இது போல பதிவுகளுக்கு ஹிட்ஸ் அதிகமாக வருவதில்லை...
ReplyDeleteஇரண்டாவது எழுத வேண்டும் என்பதற்காக எல்லாத்தையும் எழுத முடியாது...இப்ப இலங்கையில் மீனவர் இறந்து விட்ட காரணத்தால்.. தமிழ் நாட்டில் எல்லோரும் துக்கமாகவா அனுசரித்து கொண்டு இருக்கின்றோம்,... அல்லது இலங்கையில் புலம் பெயர்ந்த தமிழக மக்கள் அப்படியே பித்து பிடித்தது போலவா இருக்கின்றார்கள்...அல்லது இலங்கயில் இருக்கும்த தமிழர்கள் பு து படத்தை பார்க்காமலா இருக்கின்றார்கள்... யோசியுங்கள்ராம்ஜி...
நம்மவர்கள் அப்படித்தான் மெல்லதான் மாறுவார்கள்..
இரமேஸ்வர மீனவ சமுதாயத்தில் இந்த பிரச்சனையால் புது படத்துக்கு போய் பார்ககாமலா இருக்கின்றார்கள்.....
பிரச்சனை தொடர்ந்து நடப்பதை தெரிவிப்பது நமது கடமை... இந்த விஷயம் கூட தெரியாது இளைஞர் கூட்டம் மிக சுயநலமாய் சிந்தித்து, வாழ்வது எனக்கு தெரியும்...
ReplyDeleteஒரு சமுதாயத்தில் என்ன நடக்குது என்றே தெரியாமல் இருப்பது என்வவளவு மோசமான விசயம்...
என் தளத்தை அதிகம் வாசிப்பது ஐடி பசங்கதான்... அதனால் இந்த செய்தி அவர்களிடம் போய் சேர வேண்டும் என்று எழுதுகின்றேன்...ஹிட்ஸ்க்காக எழுதுகின்றேன் என்று நக்கல் விட வேண்டாம்...
ஹிட்ஸ் வர வேண்டும் என்றால் வேறுமாதிரி எழுதினால் எப்போதும் அன்லைனில் 80 பேர் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்...அப்படி வந்தாலும் எனக்கு எதையும் தூக்கி கொடுத்து விட போவதில்லை...
இப்படி எழுதுவதால் எனக்கு என்ன பயன்? ஒன்றும் இல்லை...நானும் என் தளத்தில் சினிமா மட்டும் எழுதி விட்டு போகலாம்...யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது....ஆனால் என்னால் சுய நலமாய் வாழ முடியாது...
ReplyDeleteஎந்த கலைஞனும் படைப்பாளியும் எந்த விஷயத்துக்கும் தீர்வு சொல்ல முடியாது..
பெரிய பின்னுட்டம் எழுதி விட்டேன்.. இதில் விவாதம் செய்ய இனி நான் தயாராகஇல்லை
நேற்றில் இருந்து என் சிஸ்டத்தின் மவுஸ் வேலை செய்யவில்லை என் சிஸ்டத்தின் டாக்டர் நண்பர்வடிவேல் முயற்சியால் இப்போது இயங்குகின்றது...
அதான் பின்னுட்டம் ரிலிஸ் செய்வதில் தாமதம்..
நன்றி...
Daer Jackie
ReplyDeleteI have sent this post to MK.Stalin and copied it to you
Lets See
Sorry No Tamil Fonts
Kind Regards
Leo Suresh
ஜாக்கி- இந்த மாதிரி விசயத்தை கண்டித்து அதிமுகவும், ஜெயலலிதாவும் மக்கள் அவையிலும், சட்ட சபையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வலி செய்ய வேண்டும், அல்லது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் ஜனாதிபதி, பிரதமர் இல்லம் முன்பு.
ReplyDeleteஆனால் கொடநாட்டு அம்மையாரோ வேறு ஒரு முக்கிய கவலையில் இருக்கிறார். எப்படியாவது திமுகா விற்கும் காங்கிரசிற்கும் இடையில் சண்டை வந்து காங்கிரஸ் நம் பக்கம் வந்து விடாதா மே மாதத்திற்குள் என்று.
கம்முநிஸ்ட், மதிமுக, பாமகா விருக்கு எல்லாம் இப்போது உள்ள கவலை எந்த கூட்டணி நமக்கு அதிக இடம் கொடுக்கும் என்பதே.
வாக்காளர்களாகிய நாம் தான் இந்த சம்பவங்களை எலாம் ஞாபகத்தில் வைத்து கொண்டு தேர்தலின் பொது ஒரு மாற்று வேட்பாளருக்கு or 49O வாக்கு அளிக்க வேண்டும். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் செய்ய வில்லையே அதை. வரும் முறை செய்வோமா.
Last MP election we had one clean educated young new candidate in South chennai, but he got 4th place, We have voted for sitlapakkam rajendran.
இப்படி உணர்வுள்ள உங்கள மாதிரி ஒரு சிலரு கரடி மாதிரி கத்திக்கிட்டே இருங்க. எங்களுக்கெல்லாம் சொரண செத்துப்போயி பல காலம் ஆகுது. தேர்தல் வந்தா எங்களுக்கு ஐநூறோ ஆயிரமோ கிடைக்கும் அத கெடுத்துபுடாதிக. எந்த தே...பு.. ஆட்சிக்கி வந்தா எனக்கென்னானு நாங்க இருப்போம். எங்களயும் எவனாவது தே...ப..னு திட்டுனாலும் ஈ னு கால நக்கிட்டு இருப்போம். நாங்கெல்லாம் மறத்தமிழனுங்க.
ReplyDeleteniraya eluthi vitteergal thamizhanin avalathai patri.. naam en ayutham thaanga koodathu? Namathu paadukappukku naame vazhi vakukka vendiathuthaan ore vazhi.. atharkaana selvaththirku vazhi thedungal.. ayuthathai ayuthathalthaan ethirka vendum..
ReplyDeleteஎன்ன சொன்னாலும் என்னத்தை மாற போகிறது என்று சொல்வதை விட ஒருவர் ஒரு நல்ல விஷயத்திற்காக கண்டனம் ஜனநாயக ரீதியில் தெரிவிக்கும்போது அதனை வரவேற்க கூட நமக்கு மனம் இல்லயென்றால் என்னவென்று சொல்வது நண்பர் ஜாக்கி எழுதியிருப்பது சினிமா விமர்சனம் இல்லை நண்பர்களே தயவு கூர்ந்து இதையும் விமர்சனம் செய்ய வேண்டாம் .ஒரு அன்பனின் வேண்டுகோள் .
ReplyDeleteநான் நம்பி வோட்டு போடும் ஒரே வேட்பாளன் நீர்தான் ஜாக்கி
!
அப்புறம் ஒரு விஷயம் என் பெயர் அறன்(அறம்) என் தந்தையின் பெயர் அன்பு .எனவே அரன் என குறிப்பிட வேண்டாம் இது ஒரு வேண்டுகோள் மட்டுமே .நன்றி.
(பெயர்காரணம் இந்த குறளில் இருந்து )
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
உங்கள் கவலை எங்களுக்கும் புரிகிறது.எங்களால் மனதுக்குள் அழ மாத்திரமே முடிகிறது. காலம் ஒருநாள் மாறும் நம் தலைவன் மீண்டும் வருவான். அப்போது தான் தமிழக மீனவர்களுக்கும் விடிவு காலம் கிடைக்கும்.
ReplyDeleteஇலங்கையிலே விகிதாசர அடிப்படையில் சிங்களவருக்கு(73.9 %)அடுத்தபடியாக உள்ள தமிழர்களை (17.8%) இலங்கை மந்திரி மேர்வின் சில்வாவோ அவன் போன்ற சிங்கள காடையர்களோ இனவெறியுடன் செய்த செயல்களுக்கெல்லாம் இலங்கை அரசு ஆசீர்வாதம் வழங்கும் போது,இந்திய தேசத்தின் உழைக்கும் வர்க்கங்களான மீனவத்தோழர்கள் மீது சிங்கள இராணுவக்காடையர்களின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த செந்தமிழன் சீமான் அண்ணனைக் கைது செய்ததன் மூலம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியானது என்பதற்கு ஆதரவாக தமிழக குடும்ப அரசியல் மூலகர்த்தாக்கள் கருணாநிதி & Sons (இலங்கையிலே ராஜபக்ஸ கம்பனி) இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தமிழக உறவுகளுக்கு புரிய வைப்பவர்கள் யாரோ?
இது தொடர் விமர்சன பின்னூட்டம் இல்லை... எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒருவரிடத்தில் தேடுவதுவும் தவறே... ஆனால், நாம் நம்மிடம் இருக்கும் தவறுகளை திருத்திக்கொள்வதினால் நமக்கு தான் பயன்... இப்போதிருக்கும் எல்லா அரசியல்வாதிகளையும் (அவர்களில் நல்லவர்களும் இருக்கலாம்) தேர்தல்களில் போட்டி இட முடியாமல் தகுதி இழக்க செய்ய பொதுமக்களால் முடியும்... ஆனால் அவர்கள் தேர்தல் என்பதினை ஒரு அதிகப்படியான அரசு விடுமுறையாக எடுத்துக்கொள்கிறார்கள்... நிச்சயம் இதில் ஒரு மாற்றம் வர வேண்டும்... வரும்... அந்த மாற்றம் நிச்சயம் எல்லாவற்றையும் சரி செய்யும்... அந்த மாற்றங்கள் தனிமனிதர்களிடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்... ஆனால் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தனி மனிதர்கள் தயாராக இல்லை... அப்படி இருக்கையில், நாம் மற்றவரை நோக்கி கை நீட்டி நீ செய்வது தவறு என்று குறை சொல்ல முடியாது...
ReplyDeleteஉங்கள் கருத்தை குறை சொல்ல வில்லை... ஆனால், இலவசங்கள் கிடைத்தாலும் உழைத்தால் தான் அந்த ஒரு ரூபாய் அரிசியையும் வாங்க முடியும் என்பது எனக்கு தெரியும்... என்னை கேட்டால், அரிசி ஐந்து ரூபாயாய் இருந்தாலும், அரசாங்கம் என்பது அந்த ஐந்து ரூபாயை சம்பாதிக்கும் வழிகளை ஏற்படுத்த வேண்டுமே தவிர அதனை பிறனுடைய சம்பாத்தியத்தில் வந்த வரிப்பணத்தில் மானியம் கொடுத்து மற்றோரை ஒரு ரூபாய் சம்பாதித்தால் போதும் என்று கட்டுப்படுத்தக்கூடாது என்பதே என்னுடைய வாதம்...
நீங்கள் சொல்வது போல், கணினி துறையில் உள்ளவர்கள் தான் உங்கள் பதிவுகளை படிக்கிறார்கள் என்பது நிதர்சனம் தான்... ஆனால், நாங்களும் பத்து ரூபாயில் இருந்து பதினைந்து ரூபாயாக எங்கள் சம்பளம் உயர வேண்டுமானால், நாங்கள் உழைக்கும் நேரம் தவிர்த்து எங்களது திறமைகளை கூர் தீட்டிக்கொண்டால் மட்டுமே முடியும்... இல்லாவிடில் எங்களுக்கும் நடுத்தெரு தான்... அரசாங்கம் இப்படி திறமைகளை எல்லா மட்டத்திலும் கூர் தீட்ட வேண்டுமே தவிர, மழுங்க செய்யக்கொடாது...
ReplyDeleteநான் இங்கு தனி மனிதர்களாகிய, திருவாளர் கருணாநிதியையோ, அம்மையார் ஜெயலலிதாவையோ அல்லது வைகோவையோ திட்ட வில்லை... ஆனால் இவர்களும் தனி மனிதர்கள் மற்றும் அரசியல்வாதிகள்... இவர்கள் திருந்தப்போவதில்லை... ஆனால் நம்மால் திருந்த முடியும்... ஆனால், நாம் அதற்கு தயாராக இல்லை... இதில் நானும், நீங்களும், இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடும் எல்லாரும் அடக்கம்...
இது தொடர் விமர்சன பின்னூட்டம் இல்லை... எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒருவரிடத்தில் தேடுவதுவும் தவறே... ஆனால், நாம் நம்மிடம் இருக்கும் தவறுகளை திருத்திக்கொள்வதினால் நமக்கு தான் பயன்... இப்போதிருக்கும் எல்லா அரசியல்வாதிகளையும் (அவர்களில் நல்லவர்களும் இருக்கலாம்) தேர்தல்களில் போட்டி இட முடியாமல் தகுதி இழக்க செய்ய பொதுமக்களால் முடியும்... ஆனால் அவர்கள் தேர்தல் என்பதினை ஒரு அதிகப்படியான அரசு விடுமுறையாக எடுத்துக்கொள்கிறார்கள்... நிச்சயம் இதில் ஒரு மாற்றம் வர வேண்டும்... வரும்... அந்த மாற்றம் நிச்சயம் எல்லாவற்றையும் சரி செய்யும்... அந்த மாற்றங்கள் தனிமனிதர்களிடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்... ஆனால் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தனி மனிதர்கள் தயாராக இல்லை... அப்படி இருக்கையில், நாம் மற்றவரை நோக்கி கை நீட்டி நீ செய்வது தவறு என்று குறை சொல்ல முடியாது...
ReplyDeleteஉங்கள் கருத்தை குறை சொல்ல வில்லை... ஆனால், இலவசங்கள் கிடைத்தாலும் உழைத்தால் தான் அந்த ஒரு ரூபாய் அரிசியையும் வாங்க முடியும் என்பது எனக்கு தெரியும்... என்னை கேட்டால், அரிசி ஐந்து ரூபாயாய் இருந்தாலும், அரசாங்கம் என்பது அந்த ஐந்து ரூபாயை சம்பாதிக்கும் வழிகளை ஏற்படுத்த வேண்டுமே தவிர அதனை பிறனுடைய சம்பாத்தியத்தில் வந்த வரிப்பணத்தில் மானியம் கொடுத்து மற்றோரை ஒரு ரூபாய் சம்பாதித்தால் போதும் என்று கட்டுப்படுத்தக்கூடாது என்பதே என்னுடைய வாதம்...
நீங்கள் சொல்வது போல், கணினி துறையில் உள்ளவர்கள் தான் உங்கள் பதிவுகளை படிக்கிறார்கள் என்பது நிதர்சனம் தான்... ஆனால், நாங்களும் பத்து ரூபாயில் இருந்து பதினைந்து ரூபாயாக எங்கள் சம்பளம் உயர வேண்டுமானால், நாங்கள் உழைக்கும் நேரம் தவிர்த்து எங்களது திறமைகளை கூர் தீட்டிக்கொண்டால் மட்டுமே முடியும்... இல்லாவிடில் எங்களுக்கும் நடுத்தெரு தான்... அரசாங்கம் இப்படி திறமைகளை எல்லா மட்டத்திலும் கூர் தீட்ட வேண்டுமே தவிர, மழுங்க செய்யக்கொடாது...
நான் இங்கு தனி மனிதர்களாகிய, திருவாளர் கருணாநிதியையோ, அம்மையார் ஜெயலலிதாவையோ அல்லது வைகோவையோ திட்ட வில்லை... ஆனால் இவர்களும் தனி மனிதர்கள் மற்றும் அரசியல்வாதிகள்... இவர்கள் திருந்தப்போவதில்லை... ஆனால் நம்மால் திருந்த முடியும்... ஆனால், நாம் அதற்கு தயாராக இல்லை... இதில் நானும், நீங்களும், இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடும் எல்லாரும் அடக்கம்...
அத்துடன் திருவாளர் அறன் அவர்களே... விமர்சனங்கள் என்பது ஒருவரது திறனை வளர்க்க பயன்படுவதே... ஆனால் அதனை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில் தான் வளர்ச்சியும் வீழ்ச்சியும் உள்ளது... எனக்கு தெரிந்து ஜாக்கி விமர்சனங்களில் நல்ல விசயங்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறார். அத்துடன், இங்கு இருக்கும் பின்னூட்டங்கள் அவரது பதிவை விமர்சிக்க அல்ல... ஆனால், அவருக்கு மற்றொரு கோணத்தை காட்டவும் தான்... ஒவ்வொரு விசயத்திலும் மாற்று கருத்து உள்ளவர்கள் உலகெங்கும் இருக்க தான் செய்வார்கள்... அவர்கள் தங்கள் கருத்துக்களை தான் இங்கு பதிவு செய்கிறார்கள் என்பதினை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்... மாற்று கருத்துக்களை மறுக்கிறவர்கள் நிச்சயமாக வளர்வதில்லை என்பதே எனது கருத்து...
ReplyDeleteஉங்கள் பதிவு அருமை ...ஆனால் தினமலர் மீது ஏன் இவளவு கோபம் ....dinamalar is not only for HINDU and bhramin (you said mylapore commend thats y i mention bhramin)is a good news paper....
ReplyDeleteஉங்கள் பதிவு அருமை ...ஆனால் தினமலர் மீது ஏன் இவளவு கோபம் ....dinamalar is not only for HINDU and bhramin (you said mylapore commend thats y i mention bhramin)is a good news paper....
ReplyDelete