நீங்கள் சென்னையில் வசிப்பவரா? உங்கள் வீட்டில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்காகத்தான்...என் வீட்டு பெண் ஒரு போதும் நான் சொன்ன சொல்லை தட்டியது இல்லை...பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்றியதில்லை.... அப்ப பையனுக்கு இல்லையா? அவர்களுக்கும்தான்... ஆனால் மிக முக்கியமாக பெண்களுக்கு....
எங்க வீட்டு பசங்க..நான் கிழித்த கோட்டை தாண்டுவதே இல்லை... அவளுக்கு நான் என்றால் உசிர் என்று நீங்கள் உங்கள் பெண்ணை விட்டுகொடுக்காமல் இருந்தால்... சந்தோஷம்....ஆனால் நாடடில் நடப்பதை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது அல்லவா? ஒருவேளை உங்கள் பெண் அப்பாவியாக இருந்தால் இந்த செய்தியை கதை போல் சொல்லி அவளுக்கு விஷயத்தின் தீவிரத்தை புரிய வைப்பது நலம்....
நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள லாட்ஜிகளில் நடந்த ரெய்டில்...25 காதலர்கள் பிடிபட்டு இருக்கின்றார்கள்...இதில் கள்ளகாதல்களும் அடக்கம்... போலிசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து இருக்கின்றார்கள்...எனக்கு தெரிந்து என்னதான் எச்சரித்து அனுப்பி வைத்தாலும் நேற்று நல்ல கலெக்ஷன் பார்த்து இருக்ககூடும் என்பது என் கணிப்பு.....
உங்க மேல விபச்சார வழக்கு போட போறேன்... நீங்க இரண்டு பேரும் விபச்சாரம் செஞ்சிங்கனன்னு உங்க மேல கேஸ்போட போறேன் என்று ஒரு வார்த்தை சொன்னாலே.. போதும் நிச்சயம் அடித்து பிடித்து பணத்தை ரெடி செய்து சொன்ன தொகையை கட்டி விட்டுதான் அந்த ஜோடிகள் வந்து இருக்க முடியும்.... அல்லது நேர்மையாக எச்சரித்து அனுப்பி இருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது...ஆது போல் நடக்க 2 சதவீதம் மட்டுமே வாய்ப்பு...
5 வருடத்துக்கு முன் காதலர்கள் அதிகம் நாடுவது சென்னை பீச்...மற்றும் பெசன்ட் நகர் பீச், கிண்டி சிறுவர் பூங்கா போன்றவைதான்.. சென்னையில் வாகன பெருக்கம் அதிகமானதால் காதலர்களும் இட்ம் மாற தொடங்கினர்.... இங்கு இருந்து 60 கீலோமீட்டர்... தெரிந்தவர்கள் யாரும் வர வாய்ப்பில்லை.. அதனால் மகாபலிபுரம் காதலர்களின் வேடந்தாங்கல் ஆகி வெகு நாட்கள் ஆகின்றது....
இதில் கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்கும் போது தனிமையான சவுக்கு தோப்புகளில் இவர்கள் வாகனத்தை நிறுத்தி ரிப்பிரஷ் செய்து கொள்ள தொப்பின் உள்ளே போகும் போது.. அதை பல ஜோடிகண்கள் நோட்டம இடுகின்றன....பல கடற்கரையோர கிராமத்து வெட்டி இளைஞர்களின் காம பசிக்கு காதலன் கண் முன்னே பல காதலிகள் இரையாவது தொடந்து நடந்து கொண்டு இருக்கும் ஆப் த ரெக்கார்ட் கொடுமை...
ஒரு காதலன் இரண்டு மாதங்கள் மந்திரித்து விட்டது போல் இருக்க... அவனுக்கு புல்லாக தண்ணி ஏற்றி விட்டு விஷயத்தை கேட்க அழுதுக்கொண்டே தன் காதலி தன் கண்முன் கடற்கரை ஓர சவுக்கு தோப்பில் நான்கு பேரால் வன்கொடுமைக்கு அவனது காதலி உள்ளாக்கபட்டு இருக்கின்றார்...யோசித்து பாருங்கள் அது எவ்வளவு கொடுமை என்று....இதில் ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால்... அந்த பெண்ணை சின்னா பின்ன படுத்தி விட்டு கடற்கரை மணலை அள்ளி அந்த பெண்ணின் பெண்உறுப்பில் கொட்டி விட்டு போயிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு வக்கரம் நிறைந்தவர்கள் என்று யோசித்து பாருங்கள்.... அதுமட்டும் அல்ல அந்த பெண் அணிந்து இருந்த நகைகளை பிடிங்கிகொண்டு அனுப்பி இருக்கின்றார்கள்...
இந்த சம்பவங்கள் காவல் துறை கவனத்துக்கு வரவேயில்லை.... காதலி வீட்டில் வழிப்பறியில் நகைகள் விட்டதாக சொன்னாலும்... இன்னும் இவன் முகத்தில் அவள் விழிக்க மறுக்கின்றாளாம்... இது போல் கவுரவம் கருதி வெளி வராத விஷயங்கள் நிறைய... அதுதான் அவர்கள் திரும்ப திரும்ப அந்த தப்பை பண்ண வைக்கின்றது... தெரியத்துக்கு வழி கோலுகின்றது..
தனியாக ஒருவனிடம் ஒரு பெண் மாட்டினால் கூட சேதம் குறைவாக இருக்கும்... அதுவே நான்கு பேர் எனும் போது... அது உச்சகட்டத்தை அடைந்து விடும்..அவனை விட நான் ஏதாவது புதுமை செய்கின்றேன் பார். என்று கும்பலில்.... தன்னை முன்னிலை படுத்த எதையும் செய்வார்கள்.. அவர்கள் குடி போதையில் இருந்து விட்டால்..... கேட்கவே வேண்டாம்...வக்ரம் எல்லை மீறும்....
நானும் என் மனைவியும் பாண்டிசேரிக்கு மாலை 5 மணிக்கு கிளம்பினோம்.. மயாஜாலை எங்கள் வாகனம் கடக்கும் போது மணி 5,45... அதிலிருந்து ஒரு 20 கிலோமீட்டரில் இது பக்கம் ஒரு சின்ன ஓய்வு இடத்தை சின்ன பார்க் போல செய்து வைத்து இருப்பார்கள்... அங்கிருந்து பார்க்கும் போது மிக ஆழகாக கடல் இருக்கும்.....
மகாபலிபுரம் அல்லது பாண்டிக்கு போகும் வாகனங்கள் அந்த இடத்தில் நிறுத்தி விட்டு இளைப்பாறி விட்டு, ஒரு டீ குடித்து விட்டு இயற்கை உபாதைகளை முடித்துக்கொண்டு செல்ல ஒரு அற்புதமான இடம்.... அதன் எதிரில் சுனாமி அலை தாக்காம்ல் இருக்க சவுக்கு நட்டு இருந்தார்கள்... அது ஆளுயரத்துக்கு வளர்ந்து இருந்தது...6 மணி ஆகி இருட்டும் நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அங்கொன்றும் ,இங்கொன்றும் ஆக மனித தலைகள் தெரிய... சொன்னால் நம்ம மாட்டிர்கள்... ஒரு 50 ஜோடிகள் மேட்டை நோக்கி டிராய் படத்தில் வரும் கப்பல்கள் போல் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்....
காதலர்களாக பைக்கில் பறந்து... போக்குவரத்து போலிசாரிடம் மாட்டிக்கொண்டு... அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேக்க.... அழுதுக்கொண்டும், கதறிகொண்டும் இருக்கும் பலரை அந்த பக்கம் கல்லூரிக்கு போகும் போது பார்த்து இருக்கின்றேன்...
இவர்கள் எல்லாம் காதலர்களே அல்ல என்று நாம் ஒதுக்கி விட முடியாது...நாம் ஒன்று பத்து அடி தூரத்தில் இருந்து கொண்டு பிரான நாதா என்று வசனம் பேசும் காலத்தில் இல்லை.... பத்தாம் வகுப்பு கிராமத்து பெண் கழிவரையில் பிள்ளை பெற்றுகொள்ளும் காலம் இது என்பதை மறவாதீர்கள்....
உங்கள் வீடோ அல்லது எதிர் வீடோ யார் வீட்டு பெண்ணாக இருந்தாலும்... ஒரு செய்தியை சொல்வது போல் சொல்லி கிழக்கு கடற்கரை சாலையை பற்றி ஒரு எச்சரிக்கை மணியை அடித்து வைப்பது நல்லது....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
பிடித்து இருந்தால் ஓட்டு போட மறக்காதீர்கள்....
குறிப்பு..
பிடித்து இருந்தால் ஓட்டு போட மறக்காதீர்கள்....
மிக நல்ல காரியம் செய்தீர்கள்...
ReplyDeleteபிள்ளைகளை நாம் மட்டும் வளர்க்கவில்லை.. அவர்களது பள்ளி தோழர்களும் அவர்கள் சூழலும்..
கண்டிப்பாக பெற்றோர்கள் அறியவேண்டியது இது..
நல்ல விழிப்புணர்வு கட்டுரை ஜாக்கி... நன்றி பகிர்வுக்கு :)
ReplyDeleteMust read article for all, and the new design looks good.
ReplyDeleteநான் அடிக்கடி ECR வழியாகத்தான் ஊருக்கு பைக்கில் செல்வேன், அப்போதெலாம் நிறைய பேரை பார்ப்பேன்..
ReplyDeleteஅவர்கள் செய்யும் அலப்பறை சொல்லி மாளாது, நம் வீட்டுப் பெண்ணோ பையனோ இப்படி சுத்தினால் என்ன ஆவார்கள் என நெஞ்சம் பதைபதைக்கும்,
என் நண்பர் ECR ல் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றியபோது நீங்கள் சொன்னது மாதிரி நிறைய விசயங்கள் நடந்ததாகவும் அத்தனையும் புகார் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாமல் அந்த இடங்களில் எச்சரிக்கை தட்டிகள் வைத்ததாகவும் சொல்வார்..
எச்சரிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும் மனநிலையில் இருப்பதில்லை என்பதுதான் உண்மை....
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteவிழிப்புணர்வு கட்டுரை.
மிகவும் அவசியமான விழிப்புணர்வுமிக்க கட்டுரை. நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய செய்திகளை அருமையாக சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteசூப்பர் பதிவு ஜாக்கிஜி... புரிய வேண்டியவங்களக்கு புரிஞ்சா சரி...
ReplyDeleteநன்றி புன்னகை தேசம்... மிக்க நன்றி...எதாவது ஒரு பெற்றோர் படித்தால் கூட ஒரு பெண்ணை காப்பாற்ற முடியம்...
ReplyDeleteநன்றி இராமசாமி...
ReplyDeleteநன்றி கிருபா......
நன்றி
நன்றி செந்தில் என் மாணவர்கள் எனக்கு இதை விட அதிகமான கதைகள் சொல்லி இருக்கின்றார்கள்...சிலந்தி வலை தேடி போய் விழும் கதைதான் இது...
ReplyDeleteநன்றி ராதாகிருஷ்ணன் சார்...
ReplyDeleteநன்றி காவேரி கணேஷ்...
நன்றி பிரவின் குமார்...
நன்றி நாஞ்சில் பிரதாப்...
அனைவரின் கருத்துக்கும் பின்னுட்டத்துக்கும் ஓட்டுக்கும் என் நன்றிகள்..
ECR வழி செல்பவர்கள் மனதில் உள்ளதை இடுகையாகத் தந்ததற்கு நன்றி ஜாக்கி. இந்த இடுகையை வாசித்து ஏதாவது ஒரு ஜோடி தங்களைக் காப்பாற்றிக் கொண்டால் நீங்கள் எழுதியதன் நோக்கம் நிறைவேறும். நிறைவேற வேண்டும்.
ReplyDeleteஸ்ரீ....
மிகவும் அவசியமான விழிப்புணர்வுமிக்க கட்டுரை. நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய செய்திகளை அருமையாக சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteநல்ல எச்சரிக்கை. தெரிந்தே செல்பவர்களைவிட அப்பாவிகளாய் மாட்டிக்கொள்பவர்கள்தான் ரொமப் பாவம். சங்கை ஊதியிருக்கிறீர்கள்...பார்ப்போம்.
ReplyDeleteஜாக்கி : நல்லதொரு பதிவு....
ReplyDeleteபலமுறை சென்னையில் இருந்து ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் செல்வது உண்டு.. நீங்கள் குறிப்பிட்டுள்ள காட்சிகலை பலமுறை பார்த்திருக்கிறேன்...
பிள்ளைகளைப் பற்றிய உண்மைகளைக் கடைசியாத் தெரிந்து கொள்வது பெற்றோர்களே:(
ReplyDeleteஅதீத நம்பிக்கை வச்சுடறோமே..... அதான்.
அருமையான பதிவு ஜாக்கி.
Boss. Please change your background colour to white. It make pain in eyes.
ReplyDeleteஜக்கி அண்ணா.. அது என்ன 2வீதம் மட்டுமே நடக்க வாய்ப்பு இருக்கிறது...(25 சோடிகளில் 2 வீதம் என்பது ஒரு ஆளுக்கு மட்டும். அப்ப காசுவாங்காம நடக்க சான்ஸ் இல்ல என்டுறீங்கள்.. ஹி ஹி.. என்டாலும் தப்பு பண்ணீட்டு ஒளிஞ்சா அக்கா அண்ணன் தம்பி முழுகுடும்பம் உறவுகள் நண்பர்களை அடித்து ஒளிந்தனை தேடி கண்டுபிடித்து ஸ்கொட்லன்ட் யார்ட்ட விட திறமையான (என்ன கொடும சார்) தமிழ்நாட்டு காவல்ல இப்படி நீங்கள் கேவலபடுத்தகூடாது..
ReplyDelete//பத்து அடி தூரத்தில் இருந்து கொண்டு பிரான நாதா என்று வசனம் பேசும் காலத்தில் இல்லை.... பத்தாம் வகுப்பு கிராமத்து பெண் கழிவரையில் பிள்ளை பெற்றுகொள்ளும் காலம் இது என்பதை மறவாதீர்கள்....//
ReplyDelete//கிழக்கு கடற்கரை சாலையை பற்றி ஒரு எச்சரிக்கை மணியை அடித்து வைப்பது நல்லது....//
நண்பரே.... தாங்கள் சொல்ல வருவது என்ன என்பது குழப்பமாக இருக்கிற்து.
உண்மையான காதலர்களுக்கு... ஆள் அரவமே இல்லா தனிமை ஒன்றும் அவசியமில்லை. அவர்கள் காதலுக்கு அவசியமான தனிமை மெரினா பீச்சிலேயே கிடைக்கும். ஆனால் இப்படிப்பட்ட காதலர்கள் தேடுவது காதலுக்கான தனிமையைல்ல. உடல்பசிக்கான தனிமை. அப்படித்தேடி போகும்போதுதான் இப்படி மிருகங்களிடம் சிக்கிக்கொள்கிறார்கள். என்னுடைய மான்ச்சீக வழிகாட்டி இப்படி சொல்லுவார், "காதலியுங்கள், தவறில்லை. ஆனால் உங்கள் காதலை காதலரிடத்தில் சொல்லும் அதே நேரத்தில் உங்கள் பெற்றோரிடமும் சொல்லுங்கள்" என்று. இப்படிப்பட்ட நேர்மையான காதலுக்கு ஆள் அரவமற்ற தனிமை அவசியமில்லை என்பது என் கருத்து.
உங்களின் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன், இதுவரை கமெண்ட் எதுவும் போட்டதில்லை, ( ஒரு சோம்பேறி தனம்தான்) ஆனால் இப்போது அப்படி இருக்க முடியவில்லை!
ReplyDeleteஉங்களின் சமூக அக்கறைக்கு நன்றிகள்! தொடருங்கள்!
திரு சேகர், மிகவும் அருமையான தகவல் ஒரு சின்ன சந்தேகம் எப்படி இத் தகவலுக்கு ஒட்டு போடுவது?
ReplyDeleteமிரட்டலான எச்சரிக்கை... இதுவும் உடல் உபாதையால் எற்படும் பிரச்சனைகள் தான்....
ReplyDeleteதிரு சேகர், மிகவும் அருமையான தகவல் நன்றிகள்
ReplyDeleteமிகவும் அருமையான தகவல்
ReplyDeleteஅக்கறையான பதிவுக்கு பாரட்டுகளும் நன்றிகளும்.ஊண்மைதான் நமக்கு தெரிந்தவர்களிடம் விழிப்புணர்வு ஊட்ட வேண்டியது அவசியம்
ReplyDeleteதிரு சேகர்,
ReplyDeleteசமூகநலன் சார்ந்த விழிப்புணர்வு பதிவு.
'பாப்பாத்தியம்மா மாடு வந்திருச்சு,ன்னு
சொல்லத்தான் முடியும். மாட்டை பிடித்துக்
கட்டுவதும், கட்டாததும் அவர்கள் விருப்பம்.
அன்புள்ள ஜாக்கி,
ReplyDeleteSuper பதிவு. நீங்க சொன்ன மாதிரி, சவுக்குத் தோப்பு எக்கச்சக்கம இருக்கு ECR ல.
அதுல எல்லாத்துலயும், "சவுக்குத் தோப்புக்குள் செல்லாதீர்"னு எச்சரிக்கை போர்டும் வச்சிருக்காங்க.
அதையும் மீறி வர்றவங்களுக்கு நீங்க சொன்ன மாதிரி கெடைக்கிற பரிசு தான் இதெல்லாம்.
நன்றி !!
திரு.
அரிப்புக்கு சொரிஞ்சு விட ஒருத்தனை கூட்டிகிட்டு போனா, நாலு பேர் சேந்து சொரிஞ்சு விடத்தான் செய்வார்கள்... அரிப்பை அடக்க கத்துக்க வேண்டியது இன்றைய இளைய தலைமுறையின் முக்கிய கடமை... இதற்கு முதலில் பெற்றோர் தங்கள் பையனுக்கும் பெண்ணுக்கும் கொடுக்கும் சுதந்திரம் எந்தளவிற்கு இருக்கிறது என்று அவ்வப்போது பார்த்துக்கொள்வது நல்லது... இல்லாவிடில் என்னிக்காவது அவர்கள் தங்கள் பெண் வந்து இப்படி ஒண்ணுக்கு நாலு பேர் சொரிஞ்சு விட்டாய்ங்க... அதனால எனக்கு எய்ட்ஸ் என்று சொல்லக்கூடிய நிலை வரும்... அப்போ அழுதா ஒண்ணும் பண்ண முடியாது...
ReplyDeleteஅண்ணே,கலக்கீட்டீங்க,அருமையான சமூக விழிப்புணர்வூட்டும் பதிவு.கொடிவேரி,பண்ணாரி,போல
ReplyDeleteஇடங்கள் எல்லா ஏரியாவிலும் உண்டு போல
ஜாக்கி........
ReplyDeleteமிக மிக சமூக பொறுப்பும், அக்கறையும் நிறைந்த பதிவு.....
பெற்றோரின் பேச்சையும், பெரியவர்கள் சொல்வதையும் கேட்காத அந்த வயது தான் இது போன்ற தவறான வழிகளில் செல்ல வழிவகுக்கிறது...
இதை அவர்கள் உணரும் தருணத்தில், வாழ்வில் முக்கியமான எதையாவது இழந்திருக்கும் நிலை இருக்கும்...
ஜாக்கின்னா,
ReplyDeleteஎப்பொழுதும் போல் ஒரு உபயோகமான பதிவு.
நானும் பல தடவை ECR வழி செல்லும்போது இந்த மாதிரி கீழ்த்தரமான காதலை பார்த்திருக்கிறேன்.
templatai மாற்றி விட்டீர்கள்!! ஆனால் ஒவ்வொரு பதிவும் ஒரு புதிய விண்டோவில் ஒப்னாகிறது, அது மிகவும் தொல்லயாகிறது :-) சரி செய்தால் நலமாயிருக்கும்
உங்கள் பதிவை வலைசரத்தில் இணைத்துள்ளேன். பார்த்துவிட்டு கருத்துக்களை பகிரவும்.தாரிக்
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/12/blog-post_9654.html
Really useful.. Pls keep it up
ReplyDeleteReally useful.... Its our duty to take care of our kids
ReplyDeletehmmmm.... arabian rules inga vara varaikum enga yedhayume maatha mudiyadhu..
ReplyDelete