(The Tournament -2009)15+ மரணம் மட்டுமே விடுதலைக்கான வழி...

ரொம்ப நாள் ஆயிற்று இது போல ஒரு ஆக்ஷன் படம் பார்த்து...துரத்துதல் மற்றும் விறு விறுப்புடன்...நிறைய வன்முறையோடு ஒரு படம்....இந்த படத்தை தவறவிடாமல் கண்டிப்பாக பார்க்கலாம்...

13டாஸ்மேட் அப்படின்னு ஒரு படம் ரொம்ப நாளைக்கு முன்ன பாத்தே தீர வேண்டிய படத்தின் லிஸ்ட்டில் எழுதி இருப்பேன்...அந்த படத்தை போலவே ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம்...


அதீத பணம் இருந்தால் மனம் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று கேள்வியோடு கும்மாளமிட்டபடி எந்த தவறுக்கு துணை நிற்கும்.. எது நடந்தாலும் பணத்தால் அடித்து காரியத்தை சாதித்து கொள்ளலாம் என்ற நினைப்பு மேலோங்கும்...

மிதமிஞ்சிய பணம் இருந்தால் குன்றின் மீது ஏறி யானை போர் பார்க்க முதலில் மனது ஆசைபட்டாலும்... எவ்வளவு நாளைக்குதான் யானை போரையே பார்த்துக்கொண்டு இருப்பது....

யானைக்கு நடுவில் சக மனிதர்கள் இரண்டு பேர் இருந்தால் எப்படி இருக்கும்? என்று குரூரமாக அதிக பணம் இருந்தால் மனம் குரூரமாக கணக்கு போடும்... அவர்கள் ஓடுவதையும் தப்பிக்க நினைத்து, உயிர் பயத்தில் கதறுவதை பார்க்க மனது குதுகலிக்கும்...ஏனென்றால் பணத்தை வீசி எறிந்தால் எதுவும் கிடைக்கும் என்ற நிலை ...

சரி மேலே சொல்வது எல்லாம் ஒரு பணக்காரன் நினைத்தால் இதனை செய்ய முடியும்... இதுவே ஒரு 50 பேர் கொண்ட பண முதலைகள் ஒன்று சேர்ந்தால்.. அவர்கள் எப்படி பட்ட விளையாட்டை ரசிப்பார்கள்.... நம்மளை மாதிரி வெத்தா உலக கோப்பையை நடு ராத்திரியில கண் முழிச்சி பார்ப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? இல்லைவே இல்லை....ரத்தம் தெறிக்க உயிர்பயத்தில் ஒடுவதை பார்த்து ரசிக்கும் விளையாட்டுகளைதான் ரசிப்பார்கள்.........

உதாரணத்துக்கு ஏழை வர்கத்தின் விளையாட்டு என்ன... ? சில்லு, கண்ணாமூச்சி, கோலி, கோட்டி,இப்படித்தான் இருக்கும்....கொஞ்சம் அப்பர் மீடில்கிளாஸ்கிட்ட.. செஸ்,கேரம் போர்டு,பிசினஸ் போன்ற கேம்கள் இருக்கும்...

ரொம்ப பணம் அதிகமா இருக்கும் வீட்ல பார்த்திங்கன்னா.... இரத்தம் வன்முறை தெரிப்பது போலான குவாலிட்டியுள்ள வீடியோ கேம்ஸ் இருக்கும்... அது அப்படித்தான்... அது போலதான் இதுவும்....

(The Tournament -2009) படத்தின் கதை என்ன???


அந்த விளையாட்டை பத்து வருடத்துக்கு ஒரு முறை...ஏழு வருடத்துக்கு ஒருமுறை விளையாடுவாங்க...விளையாட்டு என்னன்னா? அந்த நகரத்துல ஒரு பத்து பேர் அந்த போட்டியில கலந்து கிட்டா....அந்த பத்து பேரும் யாரும் யாரையும் சாவடிக்கலாம்...


எப்படி வேண்டுமானாலும் சாவடிக்கலாம்...ஆனா எப்பபடியாவது சாவடிக்கனும்...போட்டியில இருந்து நீங்க விலகவே முடியாது... அப்படி விலகனும்னா... உங்க உயிரை எடுத்துடுவாங்க... காரணம் உங்க மேல மில்லியன் கணக்குல பணம் கட்டி ஒரு பணக்கார கூட்டம் விளையாடிகிட்டு இருக்கு.....அதுல கடைசியா உயிரோட ஜெயிக்கறவனுக்கு மில்லியன் கணக்குல பணம் கெடைக்கும்......

1.அதிகமான இரக்கம் இல்லாத கிரிமினல் விளையாடும் போட்டி இது ... உதாரனத்துக்கு ஒருத்தன் ஆள்காட்டி விரலை மட்டும் ஆயிரத்துக்கு மேல் கட் பண்ணறதே தொழிலா பண்ணறவன் இதுல கலந்துகிட்டு இருப்பான்...

2. இரக்கம் என்பதே இதில் துளியும் கிடையாது...இரக்கபட்டால் உன் உயிர் ஹோகயா.....

3.ஜெயிப்பவனக்கு 10 மில்லியன் டாலர் பரிசு கெடைக்கும்...

4. போட்டியில யாரு செத்தாலும் கேஸ் கிடையாது.... எல்லா இடத்துலயும் கேமரா பொருத்தி இருப்பாங்க... அரசாங்கத்தின் போக்குவரத்து பர்சனல் கேமராகூட இவங்களுக்கு சப்போட் பண்ணும்....எல்லாத்துக்கும் லஞ்சம்

5. போட்டியில கலந்துகிட்டவங்களுக்கு முதல்ல சின்ன ஆப்ரேஷன் பண்ணி ஒரு டிவைசை உங்க உடம்புல வச்சி தச்சிடுவாங்க... அதனால் நீங்க எங்க போனாலும் தெரியும்....

6. உங்க கைல ஒரு கல்குலேட்டர் போல ஒரு சின்ன ரிசீவர் கொடுத்துவாங்க அதுல உங்க மூவ்மென்ட் எல்லாம் எல்லாருக்கும் தெரியும்... சோ உங்க பக்கத்துல போட்டியில இருக்கறவன் வந்தா உங்களுக்கு தெரியும்.....அவனை கொலை செய்யறதுதான் உங்க வேலை.....

7. சப்போஸ் போட்டியில எதிராளி உங்களை அட்டாக் பண்ணி உங்க கிட்ட இருக்கற ஆயுதத்தை பிடுங்கிட்டு நீங்க நிராயுதபாணியா கெஞ்சி உங்களை மன்னிச்சு விடுறது மட்டும் நடக்க வாய்ப்பே இல்லை.....நீங்க நிராயுதபாணியா இருக்கறத கேமராவுல பார்த்துட்டா... உங்க வயித்தல வச்சி தச்சது சின்ன டிவைஸ் மட்டும் அல்ல அது ஒரு பாமும் கூட... உங்க உடல் சிதறிடும்... அந்த திருப்பணியை போட்டி நடுவர்களே செஞ்டுவாங்க....

8.முப்பது போட்டியாளர்கள்....

9. முப்பது பேரும் மாத்தி மாத்தி அடிச்சிகிட்டு,சுட்டிகிட்டுவெட்டிகிட்டு எப்படிவேனாலும் சாகனும்...

10. இருபத்தி நாலுமணிநேரம்தான்...அதற்குள் ஒருவன் ஜெயித்தாக வேண்டும்... ஒரே ரூல் கொலை செய் அல்லது செத்து போ....

கேம் ஸ்டார்ட் நைள... நீங்க தயாரா????????????????
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

டாப்லெஸ் ஷாட்டுகள் பார் சீனில் இரண்டு மூன்று வந்தாலும்... அதீத வன்முறை படத்தில் அதிகம்... தலை சிதறுவது.. உடல் சிதறுவது என படம் முழுவதும் ஒரே ரத்த சகதி... அதனால்தான் 15+ கொடுத்து இருக்கின்றேன்....

இந்த விறுப்பான போட்டியில சம்பந்தமே இல்லாமல் ஒரு பாதர் வந்து மாட்டுவது தனிக்கதை....

படத்தின் ஒளிப்பதிவு பாராட்ட வேண்டிய விஷயம்... ஏகபட்ட ஷாட்டுகள்..

எவன் எவனை சாவடிக்கபோறான் என்பது தெரியவே அரைமணி நேரம் ஆகும்...

எந்த ரூபத்துல வந்து சாவடிக்கபோறாங்கன்னு தெரியாம டிராவல் ஆகறதுதான் படத்தோட உயிர் நாடி..

கிளைமாக்ஸ்ல டிரக்இ பஸ் சேசிங் நைட் எபக்ட்ல எடுத்து இருப்பாங்க....அந்த சேசிங் ரொம்ப கஷ்டம்... நைட் எபக்ட் லைட் பண்ணி அதில் சேசிங் ஷாட் லைட்டிங் பண்ணி எடுக்கறதுகுள்ள தாவு தீர்ந்திடும்...இதுல வேற கார் டைவ் ஷாட்டுகள் வேறு....


முக்கியமா ஒரே நேரத்துல 11 பேர் ஒரு பாருல உயிருக்கு போராடி சண்டை போடுவது போலான அந்த ஷாட்டு எடுக்கபட்டு இருக்கும் விதம் இயக்குனர் குவன்டின் எடுத்தது போல் இருக்கும்...

படத்தின் திரில்லருடன்.. விறுவிறுப்புகடைசிவரை கொண்டு போவது படத்தின் திரைக்கதையின் சிறப்பு....

பாதர் பேசும் போது... இந்த கேம் பைத்தியக்காரதனமா இல்லையா? என்று கேட்க.. அதற்கு அந்த பெண் டிவி பார்த்திங்கன்னா அதுல எவ்வளவு விஷயம் இருக்குதுன்னு சொல்லறது அழகான வசனங்கள்...

பாருல நடக்கற சண்டையில் ஒரு டாப்லெஸ் பெண்ணின் இரண்டு மார்புக்கு நடுவில் துப்பாக்கி வைத்து ஸ்லோ மோஷனில் அந்த சண்டை ஆரம்பிக்கும் இடம்... கேமரா கோணத்துக்கும் ரசனைக்கு பெயர் போன காட்சி...

இந்த படத்தை எடுக்கும் போதே ஏகபட்ட பிரச்சனையாம்.... பட்ஜெட் டபுள் மடங்கு ஆயிடுச்சாம்...காரணம் படத்தை பார்த்தாலே தெரியும்... எந்த இடத்திலியும் இயக்குனர் காம்பரமைஸ் பண்ணிக்கலை.....அது எல்லா சீன்லயும் தெரியும்...

படத்தை 2007ல எடுக்க ஆரம்பிச்சு2009லதான் ரிலிஸ் செஞ்சாங்க...

நானே எல்லாத்தையும் சொல்லிட்டா சுவாரஸ்யம் கொறஞ்சிடும்... அதனால இந்த படத்தை அவசியம் பாருங்க...

படத்தின் டிரைலர்....படக்குழுவினர் விபரம்..

Directed by Scott Mann
Produced by Gina Fegan
Glenn M. Stewart
Keith Bell
Written by Jonathan Frank
Nick Rowntree
Gary Young
Starring Robert Carlyle
Kelly Hu
Ving Rhames
Sébastien Foucan
Liam Cunningham
Ian Somerhalder
Scott Adkins
Music by Laura Karpman
Cinematography Emil Topuzov
Editing by Rob Hall
Distributed by AV Pictures (worldwide)
Dimension Films (US)
Entertainment Film Distributors (UK)
Release date(s) Oct 20, 2009
Running time 97 minutes
Country United Kingdom
Language English
Budget £3,600,000

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால் ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்....

குறிப்பு....
பதிவுகளுக்கு ஒட்டிட்டும், பின்னுட்டம் இட்டும் என்னை உற்சாகபடுத்தும் உங்களுக்கு என் நன்றிகள்...வலைசரத்தில் இந்த பக்கத்தை பற்றியும்எழுதிய
பதிவர் கேஆர்பி செந்திலுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

8லட்சம் ஹிட்ஸ்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்...

23 comments:

 1. அடுத்த டவுன்லோடு ஸ்டார்ட் பண்ணிர வேண்டியதுதான் ஜாக்கி. இந்த படத்தல்லாம் எப்படி வீட்டுல பாக்க விடறாங்க ஒங்கள் :).

  ReplyDelete
 2. ரத்தம் அதிகமா வழியுமோ ?? இதையும் லிஸ்ட்ல சேத்துகிறேன்.

  ReplyDelete
 3. Gud to about this movie. Similar kind of movie I watched recently in Hindi "Luck"

  ReplyDelete
 4. Dear Jacki

  This story is a copy of a old German B/W film, I watched.

  Thanks.

  Anbudan
  Samy N

  ReplyDelete
 5. டவுன்லோடிங் ஸ்டார்டேடு ...

  ReplyDelete
 6. படத்த பார்க்க தூண்டியது இந்த பதிவு

  ReplyDelete
 7. small suggestion: i know you are buying dvds or cds for watching movie but try to give link of every movie at the end of your post that will be helpful for us na.

  ReplyDelete
 8. அருமை.உங்க அட்ரஸ் சொல்லுங்க.கைவசம் 30 டிவிடி இருக்கு அனுப்பரேன்

  ReplyDelete
 9. அன்பின் ஜாக்கிசேகர்..,

  "அதீத பணம் இருந்தால் மனம் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று கேள்வியோடு கும்மாளமிட்டபடி எந்த தவறுக்கு துணை நிற்கும்.. எது நடந்தாலும் பணத்தால் அடித்து காரியத்தை சாதித்து கொள்ளலாம் என்ற நினைப்பு மேலோங்கும்..."

  உண்மை.உண்மை..உண்மை...

  பதிவு நன்றாக உள்ளது.

  நன்றி.

  ReplyDelete
 10. // Saran said...
  small suggestion: i know you are buying dvds or cds for watching movie but try to give link of every movie at the end of your post that will be helpful for us na.
  //

  Why should he, whom do you think you are...watching movie in the internet itself is not legal, you want him to give the link too...கூகுள்ல போய் டைப் பண்ணுனா ஆயிரம் லின்க் வரும் அதுக்கு கூட உங்கள மாதிரி ஆளுங்களுக்கு டைம் இல்லையா? .லிங்க கொடுத்தா நீங்க நோகாம டோரண்ட்ல டவுன்லோட் பண்ணி பாத்த்டுட்டு போயிடுவீங்க. இங்க படம் நல்லாயிருக்கும் பாருங்கன்னு சொன்ன பாவத்துக்கு இவர் கம்பி எண்ணனுமா? ரொம்ப தான் நல்லா மனசு. ஒன்னு காசு கொடுத்து படத்தை பாரு, இல்லை நீயா தேடி பாரு அத விட்டுட்டு எனக்காக நீ கொஞ்சம் எங்க இந்த படத்தை திருட்டுத்தனமா டவுன்லோட் பண்ணலாம்னு தேடி கொடுன்னு சொல்றது கேவலமா தெரியலை

  ReplyDelete
 11. பார்க்க வேண்டிய படம்தான்.. நல்ல விமர்சனம் ..

  ReplyDelete
 12. @Sathish:
  I just asked Jackie,if it is wrong, really SORRY...but why you are getting tensed unnecessarily.i am not asking 2010 latest released movie link.கூகுள்ல போய் டைப் பண்ணுனா ஆயிரம் லின்க் வரும்னு நீங்கலே சொல்றீங்க..அதுவும் இல்லாம இது English படம்,2009ல் ரீலஸான படம் ,1 month ல அவங்கலே netல release பண்ணிருப்பாங்க....இந்த movie link கேட்டதுக்கு கம்பி எண்ணனுமா..
  சிரிப்பு தான் வருது..
  எனக்கு நல்ல மனசோ கேட்ட மனசோ ,ஆனா இப்படி உங்கள மாதிரி எனக்கு பேச தெரியாது..
  டவுண்லோடு பண்றதே திருட்டுத்தனமா சதீஷ்??கொஞ்சமாச்சும் அர்த்தத்தோடு பேசுங்க..

  ReplyDelete
 13. அடுத்த டவுன்லோடு ஸ்டார்ட் பண்ணிர வேண்டியதுதான் ஜாக்கி. இந்த படத்தல்லாம் எப்படி வீட்டுல பாக்க விடறாங்க ஒங்கள் :).--//
  அவுங்க கண்ணை பயத்துல முடிக்குவாங்க நான் பார்ப்பேன்..

  ReplyDelete
 14. ரத்தம் அதிகமா வழியுமோ ?? இதையும் லிஸ்ட்ல சேத்துகிறேன்.//

  ஆமாம் ரோமியோ.. எல்லாம் சதையெல்லாம் தெரிக்கும்...

  அவசியம் பாரு...

  ReplyDelete
 15. Gud to about this movie. Similar kind of movie I watched recently in Hindi "Luck"//
  நண்பரே இது போல கதை அமைப்பில் நன் நிறைய உதாரணங்கள் காட்ட முடியும்.... அதனால்தான் 13 டாஸ்மேட் என்று ஒரு படத்தை மட்டும் உதாராணத்துக்கு சொன்னேன்...

  ReplyDelete
 16. Dear Jacki

  This story is a copy of a old German B/W film, I watched.

  Thanks.

  Anbudan
  Samy N
  நன்றி சாமி...

  மேலே உள்ள பதில் உங்களுக்கும் பொருந்தும்

  ReplyDelete
 17. டவுன்லோடிங் ஸ்டார்டேடு ...//

  நன்றி அகல்விளக்கு...

  ReplyDelete
 18. நன்றி ராச ராச சோழன்...

  ReplyDelete
 19. small suggestion: i know you are buying dvds or cds for watching movie but try to give link of every movie at the end of your post that will be helpful for us na.//

  அன்பின் சரண் நான் ஒரு திரைபடத்தை பற்றி நான் எழுத எடுத்துக்கொள்ளும் நேரம்.. இரண்டு மணி நேரத்திற்கு மேல் அதற்கு புகைபடம் எல்லாம் எடுதது டிரைலர் தேடி என்று பல மணி நேரம் செலவிடுகின்றேன்...

  திரும்பவும் சொல்கின்றேன்... டிவிடியை டவுன்ட்லோட் செய்து பார்பதில்லை...எனக்கு எந்த தளத்தில் டவுன்ட் லோட் செய்விது என்பது கூட எனக்கு தெரியாது சரண்...


  நீங்கள் இந்த பிகுதியில் யாராவது லிங் இந்த படத்துக்கு கொடங்கள் என்றால் கொடுப்பதற்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள்....

  சோ நீங்கள் தேடுங்கள்...

  அன்புடன்
  ஜாக்கி..

  ReplyDelete
 20. Why should he, whom do you think you are...watching movie in the internet itself is not legal, you want him to give the link too...கூகுள்ல போய் டைப் பண்ணுனா ஆயிரம் லின்க் வரும்//


  நன்றி சதிஷ் இது என் மேல் உள்ள பாசத்தின் காரணமாக என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.....ஆனால் சரணை அப்படி கடுமையாய் சொல்லி இருக்க வேண்டாம்...

  ReplyDelete
 21. எனக்கு நல்ல மனசோ கேட்ட மனசோ ,ஆனா இப்படி உங்கள மாதிரி எனக்கு பேச தெரியாது..
  டவுண்லோடு பண்றதே திருட்டுத்தனமா சதீஷ்??கொஞ்சமாச்சும் அர்த்தத்தோடு பேசுங்க..///

  நன்றி சரண் சதிஷ் என் மீதான மரியாதையில் சொல்லி விட்டார்.. அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்....

  சரன் மன்னிக்கவும்..

  ReplyDelete
 22. கண்டிப்பான டைம்பாஸ் படம். கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி :)

  ReplyDelete
 23. இந்தப்படத்த நானும் எழுதியிருப்பேன். நேரமிருந்தா படிங்க ஜாக்கி அண்ணே

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner