மிஷ்கினின் சித்திரம் பேசுதடி...தமிழ்சினிமாவின் நம்பிக்கை...

ஒரு புகைபடத்தை பார்த்து விட்டு இந்த படத்துக்கு போக வேணடும் என்று யாராவது முடிவு எடுப்பார்களா? நான் எடுப்பேன்.... அப்படி நான் முடிவு எடுத்து பார்த்த படம் இதயத்தை திருடதே... அந்த போஸ்டரில் ஒரு வசீகரம் இருந்தது... இந்த படத்தை எப்படியும் பார்த்து விட வேண்டும் என்று மனதில் குறித்துக்கொள்ளவும், அந்த படத்தை பார்த்தே தீர வேண்டும் என்று கங்கனம் கட்டவும் அந்த போஸ்டர் காரணமாக இருந்தது..
(அந்த போஸ்டர்)

அதே போல சித்திரம் பேசுதடி படத்திற்கும் ஒரு போஸ்டர் வடபழனிபோலிஸ் ஸ்டேசன் எதிரில் ஹோர்டிங்காக வைத்து இருந்தார்கள் என்று நினைவு... அது லோ ஆங்கிளில் எடுக்கபட்ட புகைபடம்.... அப்புறம் படம் வந்து, ஒரு வாரத்தில் மியூசிக் சேனல்களில் வாளை மீனுக்கும் விளங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி இருந்தது.... அது படத்துக்கு மக்கள் மத்தியில் ஒரு டாக் ஏற்பட காரணமாக இருந்தது....


நானும் என் மனைவியும் பைக்கில் கடலூர் போகும் போது... ரொம்பவும் போர் அடிக்க பாண்டிச்சேரி பாலாஜி தியேட்டரில் பார்த்த படம் இந்த சித்திரம் பேசுதடி... தலைப்பில் ஒரு கவிதை தனம் இருப்பதும் ஈர்ப்புக்கு அடுத்த காரணம்.



லிங்குசாமி ஒரு பேட்டியில் சொல்லி இருக்கின்றார்... ஒரு படத்தின் வெற்றி அதாவது காதல் சப்ஜெக்ட் என்று வைத்து படம் எடுக்க முடிவு செய்தால் அதில் ஒரு அழகான பெண்ணை நடிக்கவைக்காமல்... மிக மிக அழகான பெண்ணை நடிக்க வைத்தால் அந்த படம்50 சதவிகிதம் வெற்றி நிச்சயம்...

அதனுடன் இன்னும் படத்துக்கு தேவையான முக்கிய விசயங்கள் சரிபாதியாய் கலந்து விட்டால் படம் ஹிட் என்று தனது ரன் படத்தை பற்றி ஒரு பேட்டியில் பேசும் போது நடிகை மீரா ஜாஸ்மீன் பற்றி புகழ்ந்து இருந்தார்....


மலையாள சேனல் பக்கம் ரிமோட்டில் ஒரு சமயம் திருப்பிக்கொண்டு வரும் போது சட்டென ஏசியா நெட்டில்... ஒருபடம் ஒடிக்கொண்டு இருந்தது... அந்த படத்தின் மீதான என் ஈர்ப்புக்கு காரணம் அந்த படம் என் பக்கத்து ஊரான பாண்டிச்சேரியில் ஷுட் செய்த படம்... அந்த மலையாள படத்தின் பெயர் சொப்பனக்கூடு.....

அந்த படத்தில் மீராஜாஸ்மீன் தங்கையாக பாவனா நடித்து இருந்தார்... அப்போதுதான் பாவானாஉடம்பில் வளர்ச்சி பணிகள் நடந்து கொண்டு இருந்த நேரம்... மிக அழகாக இருந்தார்... அந்த சிரிப்பு .. ஒரு வெள்ளந்திகுழந்தை தனத்தை கொடுத்தது... அந்த படத்தில் அல்பாயுசில் இறந்து போய் விடுவார்... அந்த பெண் தான் இந்த படத்திலும் என்ற போது எதிர்பார்ப்பு எனக்கு எகிறியது....


ஏனெனில் எனக்கு தெரிந்து எல்லோரும் புது முகங்கள்... எனது மாணவாகள் படத்தை பார்த்து விட்டு இந்த படம் மிக அற்புதமாக எடுத்து இருப்பதாக கீர் ஏற்றி விட இந்த படத்தை பார்க்க நான் ஆயித்தமானேன்....பாவனாவுக்காக போனேன்... ஆனால் அந்த படம் அந்த படத்தின் டெக்னிக்கல் பீப்புளுக்காக மூன்று முறை பார்த்தேன்.... அசந்து போனேன்....

இந்த படத்தில் என்னை பொருத்தி பார்த்தேன்...அந்த பொறுக்கியாக என்னை பார்த்தேன்...அதனால் இந்த படத்தை வெகு அருகில் சம்னமிட்டு உட்கார்ந்து ரசிக்க ஆரம்பித்தேன்....

சித்திரம் பேசுதடி படத்தின் கதை என்ன???


திரு (நரேன்) அண்ணாச்சியின் அடியாள்.... செக்யூரிட்டி வேலை வரை தேடிவிட்டு வேறு வழி இல்லாமல் அடியாள் வேலைக்கு போனவன்...இரக்க சபாவம் இயல்பிலேயே கொண்ட பெண் சாரு (பாவானா) அவள் ஒரு என்ஜிஓ...முதலில் இருவருக்கும் மோதலில் தொடங்கி வழக்கம் போல் காதலில் முடிய... திருமணம் செய்ய முடிவு செய்ய ஆயுத்தமாகின்றார்கள்... ...

திடிர் என திரு விபச்சார வழக்கில் கைது ஆகின்றான்... அதனை தொடர்ந்து சாருவின் திருமணம் தடைபடுகின்றது... அடுத்த அடியாக சாருவின் அப்பா தற்கொலை செய்து கொள்கின்றார்...

சாருவுக்கு அடி மேல் அடி , சாருவை திருணமணம் செய்வதால் அடியாள் வேலையில் இருந்து வெளியே வந்தவன்... விபச்சார வழக்குக்கு பிறகு சாரு இவனிடம் முகம் கொடுத்து பேச மறுக்கின்றாள்... அது போல் சில காரணத்தால் திரும்ப அடியாள் ஆகின்றான் திரு...


சாருவின் திருமணத்துக்கு அண்ணாச்சி தடையாக இருக்க... அண்ணாச்சியிடம் வேலை செய்யும் திருவிடம், சாருவின் திருமணம் நடக்க பணம் கொடுத்து சாருவின் அப்பாவின் நண்பர் உதவி கேட்க... அண்ணாச்சியை எதிர்க்கிறான் திரு...

தன் காதலியை அடுத்தவனுக்கு மனம்முடித்து வைத்தனா?
அதுவரை அண்ணாச்சி கை பூப்பறித்துக்கொண்டு இருந்தததா? என்பதை வெண்திரையில் பார்த்து மகிழவும்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இயக்குனர் மிஷ்கின் தனது முதல் படத்திலேயே விஷுவலாக மிரட்டிய படம்.....

தமிழ் நாட்டில் தமிழ்வாணன்,லேனாதமிழ்வாணனுக்கு பிறகு கருப்பு கண்ணாடி கழட்டாத டைரக்டர் மிஷ்கின் ஒருவரே...

முதல் படம் என்பதால் பயத்தில் காம்ரமைசுக்காக ஒரே ஒரு பாடல் கமர்சியல் தவிர்த்து, படத்தில் வேறு எங்கேயும் கமர்சியலை தூவ வில்லை... அந்த வாள மீனுக்கு பாடல் இந்த படத்துக்கு ஒரு பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்தி கொடுத்ததை மறப்பதற்கு இல்லை..பி மற்றும் சிக்கான ஆடியன்சுக்கு அந்த பாடல் நல்ல டாக்..


(கருப்பு கண்ணாடி போடாத இயக்குனர்.....)

இந்த படத்தின் ஆரம்பத்தின் முதல் பத்து நிமிடங்கள் இந்த படம் வேறு வகையை சார்ந்த படம் என்பதை விஷுவலாக சொன்னபடம்....

காதல் தண்டபாணி காரில் இருந்து இறங்கி மகன் நன்றாக இருக்கின்றானா? என்று பார்த்து விட்டு சட்டென விடும் அறையில் நான் இந்த படம் வேறுஸ்டைலில் போகும் படம் என்று முடிவு கட்டினேன்...

நரேன் வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது லாங் ஷாட்டில் வீட்டு ஓனர் சத்தம் போட்டு நான் என்ன உஸ்சா என்று வாடகை கேட்கும் போது அந்த கதாபாத்திரம் குடியிருக்கும் வீட்டின் சூழ்நிலைக்கு அந்த ஒரு காட்சி போதும்....அந்த ஷாட் நான் ரசித்த ஒரு ஷாட்....

படத்தின் ஆரம்பத்தில் காட்படும் பார்த்திர படைப்புகளின் தன்மையை வெகு அழகாக எந்த ஹேசிடேஷனும் இல்லாமல் தெளிவாக சொல்லி இருப்பது... மனதில் அந்த கதை நன்றாக உரு போட்டு இருப்தற்கு அது நல்ல சான்று...

சாரு வெளியூர் போகின்றாள் அவள் இரக்க சுபாவம் மற்றும் பிடிவாத குணம் மிக்கவள் என்பதை காட்ட... அவன் அடிபட்ட குழந்தையை ஆஸ்பிட்டலில் சேர்த்து விட்டு அந்த குழந்தை கண் திறக்கும் போது, தான் சாரி கேட்க வேண்டும்.. என்று சொல்கின்றாள்... அந்த குழந்தை நாளைக்கு கண் திறந்தால் அதுவரை இருப்பியா? என சாருவின் அப்பாவின் நண்பர் கேட்க ? இருப்பேன்..... அங்கிள் என்று சொல்லும் போது அந்த பாத்திர படைப்பின் அறிமுகம் அதன் உளவியலோடு நிறைவு பெறுகின்றது....

அண்ணாச்சி சாட்சி சொல்ல போகும் ஒருவனை எப்படி போடுவது என்பது பற்றி வாழைதார் மண்டியில் விளக்கும் போது, பேப்பர் படித்துப்பதை காதில் வாங்கி கொண்டும்.. நாடுவில் வாழைதார் விற்பனை செய்து கொண்டும் நகரும் அந்த காட்சியும் கம்போசிஷனும் அருமை...
திரு வேலைக்கு சேர்ந்து விட்டான் ஆனால் அண்ணாச்சி திருவை அழைத்து வேலை கொடுக்காமலேயே அடுத்த ஷாட்டில் ஒரு கடையயை அடித்து காலி செய்வது போல காட்டி இருப்பது....நல்ல சினிமா....

ஆடர் ஆடர் என்று மாருதி காரை ரவிண்ட் கட்டி கல்லால் உடைத்த படி செல்லும் போது நாமும் பயணிப்பது ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமிக்கு கிடைத்த வெற்றி....



தங்கை நரேனிடம் அவள் திமிர்பிடித்தவளா? அவள் அழகா என்று கேள்வி கேட்கும் காட்சியும்... தான் படிக்காமல் விட்டதால் அந்த காதல் தனக்கு வாய்க்க வாய்பில்லை என தெரிந்து.... தங்கையை நல்லா படி என்று சொல்லும் காட்சி அழகு...

படத்தில் இரண்டு காமெடிகள்..
பாவனா கல்லூரியில் தன்னை நரேன்தொடர்ந்து வருவதாக சொல்ல அதனை தட்டி கேட்டு மூக்கில் குத்து வாங்கி ரத்தவருவரும் அட்டென்டர்...

இரண்டு காளிபசங்க பாவானாவிடம் ஐ லவ்யூ சொல்வதும் காமேடியன் உச்சம்... அதுவும் சிக்ஸ் மன்த்தா இங்கிலிஷ் லர்னிங் என்று சொல்லும் போது சிரிக்காமல் இருக்க முடியாது...


தனக்காக மாறிய நரேனை ஆட்டோவில் இருந்து பார்த்து விட்டு இறங்கி ஓடும் பாவனாவும்.... அந்த சந்தோஷத்தை படம் பார்பவனும் பீல் செய்வான்...அதைவிட வியற்வைக்கு கர்சிப் கொடுத்து விட்டு நரேனை பார்க்கும் போது தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இந்த மாற்றமா? நான் என்ன அவ்வளவு முக்கியமா? என்பது போலான பார்வையோடு அவனை பார்த்துக்கொண்டே நடப்பது காதல்..

தான் காதல் வயபட்டுவிட்டோம் அது சரியா தவறா என்ற சிந்தனையோடு பாவானா இருக்க... வீட்டில் ஒரு பூஜாடியுடன் அப்பாவிடம் எரிந்து விழுந்து கொண்டு நடப்பதும் பின்னனியி இது என்ன புது உணர்வோ என்ற பாடல் ஒலிப்பதும்......

அந்த ராஸ்கல் பொறுக்கிய பார்த்தியா என்று அப்பா கேட்க? அந்த பொறுக்கிய பார்க்கவில்லை என்று சொல்வதும் ஒரு கவிதையான விஷுவல்...




பொறுக்கி பொறுக்கி என்று மூச்சுக்கு 300 தடவை கூப்பிட்டு விட்டு பொம்மை விக்கும் இடத்தில் மிஸ்டர் என்று நரேனை அழைத்து ஒரு சின்ன விளையாட்டுடன் காதல் வெளிபடும் இடமும்.... அதன் பிறகு வரும்.... இடம் பொருள் பார்த்து பாடலில் எல்லாம் ரிவர்ஸ் ஆக காட்டி இருப்பதும் தேர்ந்த ரசனை..

அந்த பாடல்....



இந்த பாடலில் வரும் வரிகள்... முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது .. வாவ் என்ன வரி..... அதுவும் பாவனாவின் சிவப்பு சாரியும் நரேனின் பாடி லங்வேஜிம் இந்த படலில் அற்புதம்...



பாவானா இயல்பாய் சொல்ல... அது எல்லாம் பாவானாவின் அப்பாவை குத்தி குடைய தற்கொலை செய்வதும் அந்த இடத்தில் பாவனா லென்த் டயலாக் பேசி ஒரே ஷாட்டில் பிலீங் கொடுப்பது ஒரு தேர்ந்த நடிகையின் வெளிப்பாடு..


நரேன் ஆட்டோவில் வருவதும் வீட்டில் தற்கொலை நடப்பதும் இன்டர்கட்டில் மிக அழகாய் அந்த சஸ்பென்ஸ் சொல்லி இருப்பார் இயக்குனர்...கடைசி வரை உடல் தொங்கலை காட்டாம்ல் அதனை ஷேடோவில் காட்டி இருப்பார்கள்... தமிழ் சினிமாவுக்கு ஒரு விஷுவல் தற்கொலை..


எழுத்தாளர் அஜயன் பாலா இந்த படத்தில் அறிமுகம் ... என்ன அவர் குரல் தெளிவாக இருக்காது.. அதுதான் பெரிய குறை...


படத்தின் பெரிய பலம் இசை... சில பின்னனி இசை... உலகதரத்தில் இருக்கும்....

தேனாம் பேட்டை எஸ்ஐ போட்டு அவன் தப்பிக்க...இன்னும் இரண்டு மணி நேரத்தில் எல்லோம் மாட்டி விடுவோம் என அண்ணாச்சி குழு பயப்பட...நரேன் வாழை தார் மண்டியில்... தெத்து வாய் அடியாளிடம் விபரம் கேட்டு எதாவது ஒரு அரசு மருத்துவமணையில் இருப்பான் என்று சொல்லும் போதே அடியாட்கள் சட்டென ஒடும் போதும்.. அதன் பிறகு எனக்கு எதாவது வேலை இருக்கா அண்ணாச்சி என நரேன் கேட்பதும் மிக சுவாரஸ்யமான காட்சி...

நரேன் திரும்பவும் அடியாளாகிவிட்டான் என்று காட்ட... ஒரு மைதானத்தில் லாங் ஷாட்டில் இருந்து காட்சிகள் நடப்பதை ஸ்டெடி பிளாக்கில் வைத்து காட்டி இருப்பதும் போர் கிரவுண்டில் இருக்கும் ஒரு போஸ்ட்டில் ஒரு வனை மோதவிடுவது என காட்சி படுத்தி இருப்பது தேர்ந்த ரசனை..அது உலக சினிமாவின் அடுத்த படி..


கூட பழகியவைனை போட அண்ணாச்சி சொல்ல பல கொலைகள் செய்த அந்த தெத்துவாய் அடியாள் மனதில் நின்று இருக்கும் கேரக்டர்....
ஒரு காட்சியில் பொருள் உடம்பை தொட்டதா என்று நரேன் கேட்க.. தோளையும் காலிலும் விழுந்த வெட்டையும் சொல்லிவிட்டு.. ரத்தம் ?என்று கேட்கும் போது தெருபூரா என்று பெருமையாக சொல்லும் காட்சி அற்புதம்.... அந்த தெத்துவாய் கேரக்டர் நடிப்பிற்கு ஒரு சான்று.. இது போல் பல கேரக்டர்கள்... அதுவும் சின்ன கேரக்டர்கள் மனதில் நிற்பது உழைப்பின் வெற்றி...


அதே போல் ரிஜிஸ்டர் ஆபிசில் ஒருவன் வந்து வம்புக்கு இழுக்கும் அந்த கேரக்டரின் டயலாக் டெலிவரியும் அந்த கேரக்டரின் நடிப்பும் அருமை....

இந்த படத்தின் சண்டைகாட்சிகள் வழக்கமான தமிழ்சினிமாவில் இருந்து விலகி நிற்க்கும்.....

கத்தி குத்து வாங்கி திரும்பிய நிலையில் இருக்கும் நரேனை உண்மை தெரிந்து தன்னை மன்னித்து விட பாவானா சொல்லும் போது.... படத்தை ஊன்று பார்த்து வந்தால் அந்த இடத்தில் கண்ணீல் நீர் வருவதை கட்டுபடுத்த முடியாது.....

படத்தில் நிறைய ஹேன்ட்ஹெல்டு ஷாட்டுகள் அதிகம்.. மகேஷ்முத்து சாமி அதனை மிக அழகாய் காட்சி படுத்தி இருப்பார்...

எனக்கு பாவானாவை பிடித்த அளவுக்கு அவருக்கு டப்பிங் குரல் கொடுத்த அந்த குரலை காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.. குரலை காதலிக்க முடியமா? என்னால் முடியும்.......

இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் இருவரும் புதுமுகம் அனேகர் படத்ததில் புதுமுகம் இருந்தாலும் மிக சிறப்பாய் இயக்கிய இயக்குனர் பாராட்டுக்குறியவர்...

முதல் வாரத்தில் படத்தின் ரிசல்ட் அந்தளவுக்கு இல்லை ஆஸ்கார் ரவிச்சந்திரன் இந்த படத்தை வாங்கி புரமோட் செய்ய.. அதாவது விளம்பரம் செய்ய... இந்த படம் வெற்றி கோட்டை ருசித்தது....பாவானாவை எல்லோருக்கும் பிடிக்க காரணம்... த கேர்ள் நெக்ஸ்ட் டோர் பீலிங்கில் இருப்பதுதான் காரணம்.. முதல் பாதியில் சந்தோஷ காரணங்களில் மார்டன் டிரஸ்சில் செம லுக்கிலும்... இடைவேளைக்கு பிறகு பொட்டில்லாத புடவையிலும் சோகம் தெரிய வைத்து இருப்பது கதாபாத்திரத்தோடு ஒன்ற வைக்கின்றது...


பாடல் காட்சிகளில் மாருதியில் ஏறி ஸ்கார்பியோவுக்கு மாறுவதும், கை நாட்டுக்கு இங்க் பேடும் நல்ல ரசனை...

எல்லா ஷாட்டும் டயலாக்கும் அற்புதம் எனக்கு பிடித்த டயலாக்... பாவானாவின் அப்பா இந்த காலத்துல நாம் எங்க போறோம் எங்க வரோம்னு யாருக்கும் தெரியாம இருப்பது நல்லது என்று சொல்வதும்.. படத்தின் அந்த முக்கிய டூவிஸ்ட்டும் சூப்பர்...


சித்திரம் பேசுதடியில் ஒரு காமெடி லவ் சீன்....




இன்னும் எழுதிக்கொண்டு போகலாம்.... கடந்த 5 மணி நேரமாக என் மனைவி எந்த கேள்வி கேட்டாலும்... மானிட்டர் திரை பார்த்து டைப் அடித்துக்கொண்டு உம் கொட்டிக்கொண்டு இருப்பதால் .. எந்த நேரமும் இந்த கம்யூட்டர் சுக்கல் சுக்கலாக நொறுங்கி போகும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் இத்துடன் நிறைவு செய்கின்றேன்....


படக்குழுவினர் விபரம்...
Directed by Myshkin
Produced by Dreambridge Ltd
Written by Kasi Vishwanathan
Starring Narain
Bhavana
Malavika
Dhandapandi
'Gana' Ulaganathan

Music by Sunder C. babu
Distributed by Oscar Ravichandran
Release date(s) 2006
Running time 166 mins
Country India
Language Tamil

இந்த படத்தை இந்த விமர்சனத்துக்கு பிறகு இன்னொரு முறை பாருங்கள் நிறைய கற்றுக்கொள்வீர்கள்...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

29 comments:

  1. நல்லா எழுதி இருக்கீங்க..எழுத்துப் பிழைகளை தவிர்த்து இருந்தால் படிப்பவர்களுக்கு திணறல் ஏற்படாது. +1

    ReplyDelete
  2. நான் புதிய படம் வந்து இருக்கிறதோ என நினைத்து விட்டேன்
    வால மீனு பாடல் மட்டுமே பாப்புலர் ஆனது. சினிமா மிக பெரிய வெற்றி அடைந்ததாய் எனக்கு தெரியவில்லை.

    ReplyDelete
  3. பொதுவாக ரவுடியை மையக்கருவாகக் கொண்ட படங்கள் பார்ப்பதில்லை. இந்தப் படத்தை நண்பர்களுக்காகப் பார்த்தேன்;ரசித்தேன். படத்தின் அழகியல் அம்சங்களை டெக்னிக்கல் விஷயங்களோடு சேர்த்து விளக்கியது அருமை. படத்தில் இவ்வளவு இருக்கிறதா என்று ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள். இன்னும் நிறைய தமிழ்ப்படங்களைப் பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  4. எனக்கும் இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது. அடுத்து உங்களிடமிருந்து 'அஞ்சாதே' படத்தின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. சூப்பர் படம்... கடைசில அந்த திருப்பம் நினைச்சே பார்க்க முடியாத ஒன்று. மிஷ்மிக் படங்களை திரைக்கதைக்காகவே பார்க்கலாம்.. அஞ்சாதே நான் பார்த்து அசந்த படங்களில் ஒன்று...

    ReplyDelete
  6. நான் மிக ரசித்து பார்த்த படம் நரேனை வெளி மாநில நடிகர் என்ற நினைப்பு வர செய்யவே இல்லை ஏதோ பக்கத்து தெரு ரவுடின்ற நிலையில் நடித்திருந்தார் ..

    ரொம்பவும் சிலாகிச்சு பாவனா பத்தி எழுதியிருக்கீங்க...ம்ஹூம் சரில்ல...

    மிஷ்கினோட நந்தலாலா என்னாச்சு தலைவா?

    ReplyDelete
  7. அண்ணே மிக அருமையான விமர்சனம்,இன்னொரு முறை பார்க்க ஆவல் எழுகிறது

    ReplyDelete
  8. தமிழ் படத்தில் டிவிஸ்ட் உள்ள அதிசயமான ஒரு படம் இது.

    பாவனா என்ற அற்புதம் இந்த உலகத்தில் இருக்கிறது என்று அறிமுகப்படுத்தியது இப்படம் :).

    (அசல் படத்துல - பாவனா பாவமா இருக்கு பார்த்தா. தீபாவளி படம் தான் பீக் இந்தப் பொண்ணுக்கு)

    ReplyDelete
  9. அது யாருய்யா உனக்குத் தவறாம எல்லாப் பதிவுலேயும் மைனஸ் குத்து குத்துறது..?

    பெரிய ஆளாயிட்ட ஜாக்கி..!

    ReplyDelete
  10. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏதோ ஒரு சினிமா என்று பார்க்க உட்கார்ந்து எழுந்திரிக்கக்கூட மனமில்லாமல் எழுந்து வந்தேன்..!

    ReplyDelete
  11. ஜாக்கி அண்ணா படத்த பிரிச்சு மேஞ்சுடிங்க போங்க. ரொம்ப ரசித்தேன். மீண்டும் பார்க்க தூண்டுது.

    ReplyDelete
  12. நான் மிகவும் ரசித்த படம்.. உங்கள் விமர்சனம் பார்த்து இன்னொருமுறை பார்க்க தோன்றுகிறது..

    ஒரு ஆளு உங்களுக்கு மைனஸ் ஓட்டு போடுறானே...தக்காளி இதுல அப்படி என்ன குறைய கண்டான்...

    ReplyDelete
  13. படத்தின் பூஜைக்கு போட்டிருந்த லோ ஆங்கிள் ஸ்டில்ஸை பார்க்கும் போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதிய படம்.. எனக்கு பிடித்த படம் ஜாக்கி.

    ReplyDelete
  14. உங்கள் பதிவுகள் சுவாரஸ்யமாக உள்ளன .
    குப்பைகளுக்கு மத்தியில் சில நல்ல பதிவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் ஒரு உதாரணம்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. படம் பாத்திருக்கேன் இம்புட்டு ஃபீல் ஆகலை.

    நல்ல விமர்சனம்

    ReplyDelete
  16. very good film,, இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் கூட ரசித்துப்பர்கலாம், படம் பார்த்த நாள் முழுவதும் பாவனா நினைப்பாகவே இருந்தது ,,ஐஸின் படம் பார்த்தபோது கூட இப்படி இல்லை
    கத்தி குத்து வாங்கி திரும்பிய நிலையில் இருக்கும் நரேனை உண்மை தெரிந்து தன்னை மன்னித்து விட பாவானா சொல்லும் போது.... படத்தை ஊன்று பார்த்து வந்தால் அந்த இடத்தில் கண்ணீல் நீர் வருவதை கட்டுபடுத்த முடியாது சத்தியமாக .....

    ReplyDelete
  17. Better u can write a book about the photography.. It will reach every one very easily na

    ReplyDelete
  18. படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. அசந்துட்டேன். முக்கியமா அந்த ட்விஸ்ட் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. கண்ணீர் வந்துருச்சி.

    முதல் ஷோ சந்திரன் தியேட்டர்ல ஒரு பத்து பேர் மட்டும் தான் இருந்தாங்க..

    ஒரு வாரம் கழிச்சி மறுபடியும் போனப்ப டிக்கட் கிடைக்கல.. ஹவுஸ்ஃபுல்.

    முதல் படத்துலயே மிரட்டியிருந்தாரு மிஷ்கின்.

    கொஞ்சம் பழைய படமானாலும் ரசிச்சிப் பார்த்த படத்த சிலாகிக்காம இருக்க முடியுமா?

    நன்றி ஜாக்கிண்ணே.

    //இன்னும் எழுதிக்கொண்டு போகலாம்.... கடந்த 5 மணி நேரமாக என் மனைவி எந்த கேள்வி கேட்டாலும்... மானிட்டர் திரை பார்த்து டைப் அடித்துக்கொண்டு உம் கொட்டிக்கொண்டு இருப்பதால் .. எந்த நேரமும் இந்த கம்யூட்டர் சுக்கல் சுக்கலாக நொறுங்கி போகும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் இத்துடன் நிறைவு செய்கின்றேன்....//

    சூப்பரு..

    ReplyDelete
  19. நன்றி தமிழ் பிரியன்,,, போட் போட்டு திரட்டிகளில் இணைத்தவுடன் அப்புறம்தான் பிழைகள் திருத்துவேன்.. காணரம் க்ஷஏதாவது வேலை வந்து விட்டால் இணைக்க முடியாது அல்லவா .?? இபோபது திருத்தபட்டன...

    ReplyDelete
  20. நன்றி தமிழ் பிரியன்,,, போட் போட்டு திரட்டிகளில் இணைத்தவுடன் அப்புறம்தான் பிழைகள் திருத்துவேன்.. காணரம் க்ஷஏதாவது வேலை வந்து விட்டால் இணைக்க முடியாது அல்லவா .?? இபோபது திருத்தபட்டன...

    ReplyDelete
  21. ராம்ஜி.. அந்த படம் பி சிக்கு ஒரு நல்ல இன்ட்ரோ...

    ReplyDelete
  22. உன் ஆசைப்படி தமிழ் படங்கள் இன்னும் வரும் ஸ்ரீ

    ReplyDelete
  23. மோகன் நிச்சயம் எழுதுகின்றேன்... சில நாட்கள் கழித்து...

    ReplyDelete
  24. உண்மைதான் நாஞ்சில் அந்த திருப்பம் எதிர்பார்க்காத ஒன்றுதான்...

    ReplyDelete
  25. வசந்த் நந்தலாலா 100 வாட் பிரிவியூ மட்டும் இதுவரை ஒடி இருக்குன்னு சொன்னாங்க...

    ReplyDelete
  26. நன்றி கார்த்தி... நிச்சயம் பார்... நன்றாக ரசிப்பாய்..

    ReplyDelete
  27. இந்த படத்தை முதல் முறை தியேட்டரில் பார்த்த போதே மிகவும் பிடித்திருந்தது. இதைப் பற்றி விமர்சனத்திற்கு நன்றி. எனக்கு இதை விட மிஸ்கினின் அஞ்சாதே மிக பிடித்திருந்தது. படத்தின் கேரக்டர்கள் தான் அவரின் பலம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner