(EXAM -2009) ஒரு கிரேட் பிலிம்

எக்சாம்னு ஒரு படம் பார்த்தேன்... இப்படியும் படம் எடுக்கலாம்னு சொல்ல வந்திருக்கும் இன்னொரு படம் இது... இந்த படத்தை தன் வலையில் அறிமுகபடுத்திய நண்பர் பதிவர் பின்னோக்கிக்கு என் நன்றிகள்..

செலவே இல்லாமல் ஒரு திரில்லர் படம்... இது...ஐடியில வேலை செய்யற எல்லாரும் பார்க்க வேண்டிய படம் இது...ஏன்னா அவுங்கதான் எல்லாத்துக்கு ரவுண்டு ரவுண்டா டெஸ்ட் பாஸ் பண்ணிட்டு வர வேண்டும்...அதனால அவுங்க நிச்சயம் இந்த படத்தை பார்க்கனும்...


படம் ஓடுறது 101 நிமிஷம் அந்த 101 நிமிஷமும் எகப்பட்ட கேள்விகள் உங்களை பாடா படுத்தும்...இப்படி இருக்குமோ? அல்லது அப்படி இருக்குமோ? ச்சே இப்படி இருக்காது.. அதான் அவன் அப்பயே சொல்லிட்டான் இல்லை... என்பது போலான சமாதானங்கள் உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும்....

உங்கள் மனமும் விடாமல் சப்பைகட்டு கட்டிக்கொண்டே இருக்கும்... இந்த படம் உங்கள் ஐகியூவுக்கு ஒரு சவால்... கதை தெரியாமல் படம் பார்த்தால்தான் இந்த படத்தின் சுவையை அனுபவிக்க முடியும்....


(EXAM -2009) படத்தின் கதை இதுதான்...

ஒரு மிகப்பெரிய நிறுவணத்துக்கு கடைசிகட்ட இண்டர்வியூ நடக்கின்றது... எல்லா கட்டங்களையும் தாண்டி பைனல் ஸ்டேஜ் அந்த இண்டர்வியூதான்... அதில் மிக திறைமையான எல்லாவற்றையும் கரைத்து குடித்த ஒரு 8 பேருக்கு பரிட்சை வைக்கின்றார்கள்...அவர்கள் அந்த பரிட்சையில் பாஸ் செய்தால் அந்த நிறுவணத்தில் வேலை... இல்லையென்றால் இவ்வளவு கஷ்டங்களையும் கட்டங்களை
தாண்டி வந்தது எல்லாம் வேஸ்ட்... வாழ்வா சாவா பரிட்சை... இந்த பரிட்சையில் வெற்றி பெற்று விட்டால் வாழ்க்கையில் நல்ல முறையில் செட்டில் ஆகிவிடலாம்....


எக்சாம் நடப்பது ஐன்னல் இல்லாத ஒரு சிறிய அறை... எட்டு பேருக்கான சீட்டும் அதில் ஒரு கவுத்து வைக்கபட்ட கொஸ்ட்டின் பேப்பர் மற்றும் ஒரு பென்சில் இருக்கின்றது....

ரூல்ஸ்....
1..மொத்தம் 80 நிமிடங்கள் பரிட்சை நேரம்....
2. எக்காரணம் கொண்டும் இந்த அறையை விட்டு வெளியே போக கூடாது..
3.எக்காரணம் முன்னிட்டும் இன்விஜலேட்டரிடம் பேசகூடாது...
4.அறையில் மெயின் கதவிடம் நிற்கும்துப்பாக்கி வைத்து இருக்கும் செக்யூரிட்டிகாடிடம் எதுவும் பேசக்கூடாது....
5. எந்த காலகட்டத்திலும் உங்கள் கொஸ்ட்டின் பேப்பரை நீங்கள் சேதபடுத்திவிடக்கூடாது...

இதில் எது நடந்தாலும் உடனே பரிட்சை ஹாலை விட்டு கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள்......உங்களுக்கு கம்பெனி... பேருந்துமற்றும் வழி செலவுக்கு காசு கொடுத்து டாடா காட்டும்...

80 நிமிடங்கள் பரிட்சை... 80 நிமிட முடிவில் ஆன்சர் செய்தால் போதுமானது...கொஸ்ட்டின் பேப்பரில் ஒரே ஒரு கேள்விதான் இருக்கின்றது... அதற்கு பதில் சொன்னால் போதும்...ஏதாவது கேள்வி இருக்கின்றாதா? என்று கேட்டு விட்டு அந்த இன்விஜிலேட்டர் வெளியே போய் விடுகின்றார்...80 நிமிடத்துக்கான டிஐட்டல் டைம் ஸ்டார்ட் ஆகின்றது.....

எல்லோரும் அமைதியா உட்கார்ந்து இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு கவுத்து வைத்து இருக்கும் கொஸ்ட்டின் பேப்பரை திருப்பி பார்த்தால் வெள்ளை காகிதம்தான் இருக்கின்றது... அதில் எந்த கேள்வியும் இல்லை...

இருப்பினும்80 நிமிட முடிவில் அந்த எட்டு பேரில் ஒருவர் அந்த விடையை கண்டுபிடிக்கின்றார்.. எப்படி என்பதை கவனமாக பார்த்தால் புரியும்....திரையில் பார்த்து ரசிக்கவும்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில.........

101 நிமிடத்துக்கு ஒரு சிறய அறையில் படத்தை முடிக்க நல்ல சுவாரஸ்யமான திரைக்கதை வேண்டும்....

saw படத்தின் திரைக்கதை அப்படி ஒத்தது.. ஆனால் அவுட்டோர் என்பது இந்த படத்தில் சுத்தமாக இல்லவே இல்லை....

ரொம்ப லோ பட்ஜெட்டில் எடுத்த படம்...ஒரு ஹால் அவ்வளவுதான்...அந்த அறையில் சுவாரஸ்யத்தை நுழைப்பது இயக்குனரிள் அறிவுத்திறைமைக்கு சான்று...

இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் இவரே...

படத்தின் முடிவு எனக்கு சற்று புரிவதில் சிரமம் இருந்தது...ஆனால் என் மனைவிக்கு ஐக்யூவில் அதிக ஆர்வம் என்பதாலும்... படத்தின் ஆரம்பத்தை மிக உன்னிப்பாக பார்த்த காரணத்தாலும் முடிவை புரிய வைத்து போது எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருந்தது..

முடிவு தெரிந்த போது டைரக்டரை செல்லமாக சென்னையின் தேசிய பாஷையில் அடங்கொத்தா என்று திட்டிவிட்டேன்....

இந்த படத்தின் கேள்விக்கான பதிலை நீங்கள் அறியும் போது இப்படி திட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாகவே எனக்கு படுகின்றது...

ஒரு அறைதானே ஒளிப்பதிவாளருக்கு என்ன பெரிய வேலை என்று நினைக்காதீர்கள்... படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்...

பரிட்சைக்கு முன் ரெஸ்ட் ரூமில் அந்த எட்டு பேரின் மேனரிசங்களையும் காட்சிகளில் சொல்லும் இடம் கவிதை...

பேன்டிஸ்,பிரா, பிதுங்கியமார்பு,உதட்டு முத்தம், தொப்புள்.. இவைகள் அறவே இல்லாத சுத்ததமான அக்மார்க் ஹாலிவுட் படம்..

புத்திசாலி பிள்ளைகளோடு உட்கார்ந்து பார்க்கலாம்...

படத்தின் டிரைலர்....படக்குழுவினர் விபரம்...


Directed by Stuart Hazeldine
Produced by Stuart Hazeldine
Gareth Unwin
Written by Stuart Hazeldine
Simon Garrity
Starring Colin Salmon
Jimi Mistry
Luke Mably
Gemma Chan
Music by Stephen Barton
Matthew Cracknell
Cinematography Tim Wooster
Editing by Mark Talbot-Butler
Studio Bedlam Productions
Hazeldine Films
Distributed by Independent[1]
Release date(s) 08 January 2010
Running time 101 minutes
Language English

திரில்லர் கலந்த.. நிறைய கேள்விகள் உள்ளடக்கிய இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.. பல உலகபடவிழாக்களில் கலந்து கொண்டு இரக்கின்றது...

குறிப்பு...

7498 முறையாக சொல்லிக்கொள்கின்றேன்.. நான் எந்த படத்தையும் டவுண்லோட் செய்து பார்பது இல்லை...அனாலும் பார்க்கின்றேன்...எப்படி நண்பர்கள்.... என் மாணவ செல்வங்கள் என எனக்கு டிவிடி கொடுத்து பார்க்க சொல்லுபவர்கள் ஏராளம்... அது மட்டும் இல்லாமல் பர்மாபஜார் என நான் அலைந்து திரிந்தே இது போலான படங்களை பார்க்கின்றேன்...மாசத்துக்கு டிவிடிக்கு மட்டும் ஆயிரத்துக்கு மேல் ஆகின்றது...உங்களிடம் நான் எழுதாத சுவாரஸ்யமான நல்ல படங்கள் இருந்தாலு தாருங்கள் பார்த்து விட்டு எந்த சேதமும் இல்லாமல் டிவிடி ஒப்படைக்கபடும்....

டவுண்ட் லோட் செய்து என்னிடம் இல்லாத கலெக்ஷனான அலெக்சான்டரா பிராஜக்ட் படத்தை டிவிடியில் ரைட் செய்து என்னிடம் கொடுத்த எஸ் எஸ் மியூசிக் சேனல் எடிட்டர் தொல்காப்பியனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...


அன்பு நண்பர் முரளியின் ஒரு வித்யாசமான பின்னுட்டம்
கிளிக்கி பார்க்கவும்....நண்பர் முரளி இது போலான கடித்ங்கள் எனக்கு மட்டும் அனுப்பவில்லை... வார்த்தைகள் எழுதும் இயக்குனர் சார்லசுக்கு இது போலான டிசைன் பின்னுட்டம் எழுதுகின்றார்....

படித்து விட்டு கடந்து போகும் அத்தனை வாசகர்களுக்கு மத்தியில் வேலைமெனக்கெட்டு இது போலான கடிதங்கள் டிசைன் செய்வதும்... எனக்காக நேரம் ஒதுக்குவதும் எனக்கு மகிழ்வான விஷயமே....இன்னும் நிறைய படங்கள் எழுத இந்த டிசைன் கடிதங்கள் ஒரு உற்சாக டானிக் என்றால் அது மிகையில்லை..
நன்றி முரளி... எனக்காக ஒதுக்கிய நேரத்திற்கு...

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால் ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

21 comments:

 1. //7498 முறையாக சொல்லிக்கொள்கின்றேன்.. நான் எந்த படத்தையும் டவுண்லோட் செய்து பார்பது இல்லை...//
  So sorry... i mistaken u ... :)

  ReplyDelete
 2. நாம பெரும்பாலும் வாழ்க்கை எனும் பரிட்சையில் வேறு யாராவது ஒருவரது வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு விடை எழுதிக்கொண்டிருக்கிறோம்... அல்லது யாராவது ஒருவரது விடைகளை நம்முடைய விடைத்தாள்களில் எழுதிக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த படம் ஒரு நல்ல பரீட்சை தான்...

  ReplyDelete
 3. நண்பர்களே உங்கள் கமென்டுகள் இங்கு அப்ரூவ் செய்தாலும் பப்ளிஷ் ஆக மாட்டேன் என்கின்றது...கூகுளில் எதோ பிரச்சனை என்று எண்ணுகின்றேன்..

  சரியானதும் கமென்டுகள் வரும்

  ReplyDelete
 4. i see this film sir. its really nice.
  i have some movie names to tell you. but i have see those movies in online only. i dont have dvd. if you have any by chance to see those movies please pass to our viewers.
  1.city of god
  2.saving private ryan
  3.all about anna (18+)
  4.goal
  5.schindlers list
  6.curious case of benjamin button
  7.troy
  8.hurt locker
  9.step up
  10.fight club
  11.tom yung goong(tony jaa)
  12. benlieu 13

  please send me links to my mail if u already post any of this movie reviews. my mail 007sathish@gmail.com

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம். படத்தை அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி.

  ReplyDelete
 6. //பேன்டிஸ்,பிரா, ................ இவைகள் அறவே இல்லாத//

  அப்ப இது நிச்சயமா நம்ம ஏரியா படந்தாங்கோவ்....!!

  ReplyDelete
 7. அதானே பார்த்தேன்!! அதெல்லாம் இல்லாம ஹாலிவுட் படமெடுக்குமா??

  இது ப்ரிட்டிஷ் தயாரிப்பு.

  ReplyDelete
 8. நான் இருக்கும் தென்காசியில் இது போன்ற டிவிடி கிடைப்பது அரிது. உங்கள் விமர்சனத்தை ப்டித்து, பிடித்த படத்தை டொரண்ட் மூலம் டவுண்லோடு செய்துதான் பார்க்கிறேன். EXAM இறங்கிக் கொண்டு இருக்கிறது

  ReplyDelete
 9. அன்புள்ள ஜாக்கி,
  நீண்ட காலமாக உங்களை வாசித்து வருகிறேன். மேலும் வளர வாழ்த்துகள். என்னிடம் அளப்பரிய தொகுப்பு உள்ளது.
  உங்களுக்கு தேவையான படங்களை தனி மடலிட்டால் (balaganesh.ks@gmail.com)உங்களுக்கு குறுந்தகட்டில் எழுதி அனுப்பிவைக்கிறேன்.

  அன்புடன்,
  பாலா.

  ReplyDelete
 10. ஜாக்கி ,
  சான்சே "இல்லை"!!!!!!! இந்த படம் ..,அறிமுகபடிதியமைக்கு நன்றி .....,

  ReplyDelete
 11. நன்றிக்கு என் நன்றிகள்.

  உங்கள் பாணியில் எழுதப்பட்ட இந்த விமர்சனம் படிப்பதற்கு அருமையாக இருந்தது. டைம்பாஸ் படங்கள் எழுதுவதில்லையே :). ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 12. "GONE IN 60 SECONDS" பாருங்கள். நல்ல படம்.

  ReplyDelete
 13. இந்த படத்தை அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி, ஜாக்கி. படம் அற்புதமாக இருந்தது.

  ReplyDelete
 14. இந்த திரைப்படத்தை அறிமுகப்படுத்தியதர்க்கு மிக்க நன்றி. படத்தை பார்த்து விட்டு பின்னு பின்னு என்று பின்னூட்டுகின்றேன்.

  தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. நல்ல விமர்சனம். நன்றிகள். நீங்கள் "GREENZONE" படத்தையும் பார்த்து விமர்சனம் எழுதுங்கள். நாம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.

  ReplyDelete
 16. படம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 17. எனக்கும் இப்படத்தின் கேள்விக்கனா பதிலை விளக்க பின்னூட்டல் மூலம் முடியுமா? எனக்கு அது புரியவில்லை.......... ப்ளீஸ்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner