இரண்டு வாட்டர் பாக்கெட்டும்.. ஒருகிளாசும் (சிறுகதை)



வெள்ளிக்கிழமை இரவு டாஸ்மார்க்கில் சரக்கு வாங்குவது என்பது ரேஷனில் மண்ணெண்ணைய் வாங்குவதை விட கொடுமையான விஷயம். ஒழுங்கற்ற கூட்டத்தில் முண்டிஅடித்தபடி, தியேட்டரில் டிக்கெட் கொடுப்பது போலன சிறிய ஓட்டையில் காசு நீட்டி, பாட்டில் வாங்கி, சில்லறை வாக்குவது சாமான்ய காரியம் அல்ல...

மச்சகண்ணன் சரக்கு கையில் வாங்கிய உற்சாகம் ஸ்பெயின் அணியின் உற்சாகத்தை ஒத்து இருந்தது...பாரில் உள்ள பையனை அனுப்பினால் வெகு நேரம் ஆகின்றது என்பதால் கையோடு வாங்கி கொண்டு உள்ளே போய் உட்கார்ந்து விடுவது அவன் பாலிசி...
நான் மச்சகண்ணன்... எனக்கு பிரச்சனைன்னு எதுவும் இல்லை...டாஸ்மார்க் வந்தாலே ஏதாவது பிரச்சனை இருந்தாதான் வரனுமா? தமிழ் சினிமா உங்களை நல்லா கெடுத்து வச்சிருக்கு...

வாரத்துக்கு ஒரு நாள் நான் சந்தோஷமா இருக்கனும் அதுக்குதான் இது... நான் ஒரு தனிமை விரும்பி... ஆனாலும் சின்னதா என்னை பத்தி சொல்றேன்... எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி,இரண்டு பெண் குழந்தைங்க, இப்பதான் பெருங்களத்தூர் ஸ்ரீராம் நகர்ல ஒரு பிளாட் வாங்கினேன்...
என்கிட்ட இருக்கற பணத்துக்கு நான் ஸ்டார் ஒட்டலில் சரக்கு அடிக்க முடியும்னு பில்டப் எல்லாம் கொடுக்க மாட்டேன்... ஆனால் உண்மையான சோசலிசத்தை பார்ககனும்னா ஒவ்வோரு இந்திய குடிமகனும் டாஸ்மார்க் வரனும்..

ஏழை பணக்காரன்,சுத்தம் அசுத்தம் என்ற வித்யாசம் இல்லாமல் குடிக்கும் இடம் இதுவே... அதனால டாஸ்மார்க்ல தண்ணிஅடிப்பதுதான் எனக்கு பிடிக்கும்...என் பட்ஜெட்டுக்கும் அதுதான் ஒத்து வரும்...
எனக்கு சென்னையில் நண்பர்கள் கூட்டம் அதிகம்...ஆனா தண்ணி அடிக்க தனியாதான் வருவேன்... ஒரு முறை கும்பலாபோய் தண்ணி அடிச்சி பிரச்சனை ஆனதில் இருந்து இப்படித்தான்... ஆனால் பாரில் குடிக்குத் போது நடக்கும் சம்பாஷனைகளுக்கு நான் ரசிகன்.....

சில வாரங்களாக வெள்ளிக்கிழமை தோரும் தவறாமல் எங்கள் தெருவில் இருக்கு ஜானகிராமன் என் டேபிளில் ஆஜராகிவிடுவார்...முதலில் ஒரு பாக்கெட் தண்ணீர் கொடுத்து உதவியதில் இருந்து அப்படியே பேச்சு டெவலப் ஆகி இன்று வாரம் ஒரு வெள்ளிகிழ்மை தவறாமல் சந்திப்போம்.....
முதல் முறை போதை தலைக்கு ஏறி வீட்டுக்கு போகும் போது உங்கள் பேர் என்ன என்று கேட்க???,

தண்ணி அடிக்கற இடத்தல ஏற்படற பிரண்ட்ஷிப்பும், தேவிடியா வீட்ல ஏற்படற பிரண்ட் ஷிப்பையும் நான் மதிப்பதில்லை என்று சொல்லி விட்டு பேர் சொல்லாமல் போய் விட்டார்...ஆனால் இருவரும் ஒரே தெரு என்பதால் வாகனத்தை கடக்கையில், நாடார் கடையில் பொருள்வாங்கையில் என சிரித்து வைத்து, இப்போது வாரம் ஒரு முறை பாரில் மனம் வீட்டு இருவரும் பேசிக்கொள்வோம்....
இன்னும் கொஞ்ச நேரத்தில் ஜானகிராமன் என் எதிர் டேபிளுக்கு வந்து விடுவார்... என்னகாரணம்னு தெரியலை? இன்னமும் வரலை அதுக்கு முன் அவரை பத்தி சொல்றேன்...


ஜானகிராமன் மகேஸ்வரி பைனான்சில் ஜென்ரல் மேனேஜர்... வயசு55 ,மாசம் ஒரு லட்சம் சம்பளம்... ஆனா அவரை பார்த்த அப்படி தெரியாது... ரொம்ப சிம்பிளான மனுஷன்.. சின்ன வயசுல ரொம்பவும் கஷ்டபட்ட காரணத்தால் அவர் காசுலு கெட்டின்னு... நீங்களா முந்திரி கொட்டை போல யோசிக்காதீங்க... நான்தான் சொல்லிகிட்டு வரேன் இல்லை...அப்புறம்என்ன அவசரம்...???
அவர் சிம்பிளான ஆள் அவ்வளவுதான்...

இங்க டாஸ்மார்க்ல தண்ணி அடிக்கும் போதுதான் பழக்கம்...இரண்டு பேரும் ஒரே தெரு என்பதால் வந்த நெருக்கம்... அவர் பொண்டாட்டி பிரா போல சாரி உளறிட்டேன்.... புறா மாதிரி அழாக இருப்பாங்க...ஹவுஸ் ஒய்ப்தான்....


என்னை மச்சகண்ணன் என்று அழைக்காமல் மச்சி என்றுதான் அழைப்பார்... அவருக்கு ஒரே பையன் டாக்டருக்கு படிக்க வைக்கின்றார்... சின்ன வயசில் இருந்தே தன் வீட்டு வேலைக்காரி வைதேகி மகள் நிருபாவையும் தான் வளர்த்து, படிக்க வைத்து வருவதாக பெருமையுடன் சொல்லுவார்...


எனக்கும் அவரிடம் பிடித்த விஷயமே வேலைக்காரி பெண் என்று நினைக்காமல் அந்த பெண்ணையும் நிறைய நண்கொடை கொடுத்து புறநகர் கல்விதந்தைகளிடம் ஒப்டைத்து என்ஜினியரிங் படிக்கவைப்பது எனக்கு ஆச்சர்யம்.... சென்னையில் இவரை போன்றவர்களால்தான் மழை பெய்கின்றது என்று பெருமீதமாய் நினைத்துக்கொள்வேன்....

தன் பையனுக்கு ஒரு லேட்டஸ்ட் மொபைல் என்றால் அதுதான் வேலைக்காரி வைதேகியின் பெண்ணுக்கும்.... அவரின் அந்த குணம் எனக்கு பிடித்த விசயம்.... பாரில் கூட பார் அட்டென்டர் பையனை வாடா போடா என்று கூப்பிட மாட்டர்...... வயசில் எவ்வளவு சின்ன பையனாக இருந்தாலும் ஒரு ஆபாயில் கொண்டு வாங்க என்று சொல்லுவார்...



போனவாரம் கேட்டேன்...
எப்படிசார் இப்படி உதவறகுணம் உங்களுக்கு இருக்கு என்றுகேட்ட போது, மச்சி... 50 லட்சத்தை சேர்த்து பார்த்திட்டினா அதுக்கு அப்புறம் எல்லாம் பேப்பர்தான் என்று உளறினார்....அவரும் என்னை போல் குவாட்டா பாட்டில் வாங்கி, இரண்டு வாட்டர் பாக்கெட் ஒரு கிளாஸ் வாங்கி பொறுமையாக சாப்பிடும் ரகம்.....இன்று என்ன என்று தெரியவில்லை இன்னும் அவர் வரவில்லை....


தமிழகத்தில் சுதந்திரமாக குடிக்க கூட விடுவதில்லை.... சட்டம் ஒழுங்கு காப்பாற்ற இன்னும் அரை மணி நேரத்தில் பாரில் உள்ள லைட் ஆப் செய்து விடுவார்கள்...ஜானகிராமன் வருவதற்குள் அப்படியே பாரின் உள்ளே நோட்டம் விட்டேன்....


இரண்டு பேர் கையில் வாட்டர் பாக்கெட் பிய்த்து சொர் என்று கிளாசில் இருக்கும் பொன்நிற திரவத்தில் ஒரு சயின்டிஸ்ட் ரேஞ்சிக்கு கலக்கி கொண்டு இருந்தார்கள்..



புல் போதையில் ஒருவன், வரதிங்கிழமைதான் அந்த கண்டாற ஓழிக்கு கடைசி நாள்,அவமட்டும ஓகே சொல்லலை அவ பு............. கிழிச்சிட்டுதான் மறுவேலை என்று வீர வசனம் பேசினான்....

இருவர் லேட்டாக வந்தாலும் சட்டென கிளாசில் மிக்ஸ் செய்து ஒருவர் கையில் ஒருவர் மாட்டி ஒரு விதமான ஸ்டைலில் அந்த நண்பர்கள் கல்பாக அடித்தனர்....அவர்களை எல்லோரும் இரண்டு செகன்டுக்கு வேடிக்கை பார்த்தனர்...

ஒருவர் புல் போதையில் ஆபாயில் சாப்பிட மஞ்சள் கரு உடைந்து அவர் வயிற்றுக்கு போகமால் பாக்கெட்டுக்கு போனது...

தூரத்தில் ஜானகிராமன் வருவது தெரிந்தது... அவசரமாக வந்து கொண்டு இருந்தார்... வழக்கத்துக்கு மாறாக அவரிடம் பதட்டம் தெரிந்தது... கையில் குவாட்ருக்கு பதில் ஆப் பாட்டில் வைத்துக்கொண்டு இருந்தார்.... வழக்கம் போல் இரண்டு வாட்டர் பாட்டில் ஒரு கிளாஸ் இல்லாமல்... கையில் ஒரு லிட்டர் கின்லே பாட்டிலும் கிளாசுமாக வந்தார்....



வந்ததும் எதுவும் பேசாமல் கிளாசில் அரை டம்பளர் ஊற்றி அடித்து உதடு துடைத்து விட்டு என் பிளேட்டில் இருக்கும் இரண்டு கார கல்லைபயிறை வாயில் போட்டர்....அதில் ஒன்று அவர் மீசையில் மேல் பட்டு என் முகத்தில் அடித்தது... நான் எதுவும் பேசவில்லை.....



நெத்தியடி படத்தில் ஜனகாரஜ் சொல்வது போல்.. யாரும் எதுவும் வேணுகிட்டபேசாதிங்க...அவனே பேசட்டும் என்று சொல்லுவார்... அது போல அவரே பேச்சு ஆரம்பிக்க காத்து இருந்தேன்....கோவத்தில் கண்கள் சிவந்து இருந்த காரணத்தால் வீட்டில் ஏதோ பிரச்சனை என்பது மட்டும், எனக்கு எறிய பாதி போதையில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது....


அப்படி என்ன பாவம் பண்ணினேன் மச்சி...
நீங்க என்ன பாவம் பண்ணிங்க.. எனக்கு தெரிஞ்சி நீங்க நல்லதுதான் பண்ணி இருக்கிங்க...
பையன் ரெண்டு மாசாமா மந்திரிச்சி விட்ட கோழி போல இருந்தான்... எதாவது காதல் கத்திரிக்காயா இருக்கோமோன்னு அவன் செல்லை செக் பண்ணா...

வேலைக்காரி பொண்ணு நிருபாவுக்கு ஐலவ்யூன்னு மெசேஜ் அனுப்பி வச்சி இருக்கான்....
என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிடத்தில் ஆப் பாட்டிலில் பாதியை காலி செய்தார்....

பதட்டத்தில் அவருக்கு கை நடுங்கி கொண்டு இருந்தது...
அந்த பொறம் போக்குக்கு என்ன குறை வச்சேன்....

எத்தனை மலையாளத்து குட்டிங்க பெருசு பெருசா படிக்ககுதுங்க...அதல எதாவது ஒன்னை கரக்ட் பண்ணி இருக்கலாம் இல்லை....
அந்த சனியனுக்கு அதுக்கு எங்க துப்பு இருக்க போவுது???

சின்ன வயசல இருந்து வீட்லேயே வளரும் பொண்ணுகிட்டயா உன் வேலையை காட்டுவது என்று மகனை எரிந்து விழுந்து கொண்டு இருந்தார்...


அதை விட அந்த பண்ணாடை நிருபா, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சி இருக்கா? மீ டூ ....ஜ கிஸ்யூன்னு பதில் மெசேஜ் அனுப்பி வச்சி இருக்கா.....


மச்சி நான் காதலிக்கு எதிரி இல்லை.... என் பையன் ரோட்ல போற கழுதை கூட்டி வந்து கட்டி வைன்னு சொன்னாலும் நான் கட்டி வைப்பேன் என்று சொன்ன போது இது மணிரத்னம் படத்து டயலாக் ஆச்சேன்னு ஒரு புத்தி பரபரபன்னு எந்த படம் என்று யோசிக்க....


சட்டென ஜானகிராமன் உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்....எல்லோரும் சட்டென ஒரு செகன்ட் எங்கள் பக்கம் பார்வை திருப்ப... நான் அவரை சமாதானபடுத்தினேன்.....


சத்தமாக பேசுவதை குறைக்க சொன்னேன்....


இப்பதான் பையன் கண்ணத்துல இரண்டு அரை விட்டு விட்டு வரேன்... நீ என்ன சொன்னாலும் அந்த பொண்ணு நிருபாவைதான் கட்டுவேன் சொல்லறான்?

ஒருதடவை சொன்ன புரிஞ்சிக்கமாட்டேன்கிறான் என்று சொல்லி வேதனைபட்டார்.....


நான் கேட்டேன்... விட்ல யாருக்காவது இந்த விஷயம் தெரியுமா?
தெரியாது என்றார்... எனக்கும் என் மகனுக்கு மட்டும் தெரியும்... அதுவும் சில மணி நேரத்துக்கு முன்னதான் தெரியும்....

சார் தப்பா நினைக்கலைன்னா நான் ஒண்ணு சொல்லட்டமா? இது ஒன்னும் கம்பள்ஷன் இல்லை இது என்னோட சஜஷன்... அந்த பொண்ணுக்கு எவ்வளவோ செஞ்சி இருக்கிங்க....

பணம் காசுக்கு அந்தஸ்த்துக்கு ஆசை படற டைப் நீங்க இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும்...நீங்களே சொல்லி இருக்கிங்க... ரோட்ல போற கழுதைய கூட்டி வந்தாலும் கட்டி வைப்பேன்...


சின்ன வயசல இருந்து நீங்க பார்த்து வளர்த்த பெண்ணு அது....ஏன் அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை நீங்க அமைச்சு கொடுக்க கூடாது??? அது ஏன் உங்க பையனாவே இருக்க கூடாது என்று கேள்வி கேட்டேன்... திரும்பவும் சொல்லறேன் தப்பா நினைக்காதிங்க என்றேன்...



இப்போது ஜானகிராமன் தண்ணி எதும் கலக்காமல் பாட்டில் உள்ள மீதத்தை தன் குடலுக்குள் சரித்துக்கொண்டார்... தப்பதான் நினைப்பேன்... தப்பாதாண்டா நினைப்பேன் என்று என்னை மரியாதை குறைவாக விளித்தார்...


தப்பாதான் நினைப்பேன்....
அண்ணன் தங்கச்சி யாராவது கல்யாணம் செஞ்சிப்பாங்களா? வைதேகி வேலைக்காரி மட்டும் அல்ல என் இரண்டா................வார்த்தை முடிக்காமலே மயங்கி சரிந்தார்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

19 comments:

  1. முடிவு யூகிக்கும்படியாக இருந்தாலும், எழுத்து நடை நன்றாக இருந்தது!

    ReplyDelete
  2. பாதி படிக்கும்போதே முடிவு தெரிந்து விட்டது.

    ReplyDelete
  3. //தப்பாதான் நினைப்பேன்.... அண்ணன் தங்கச்சி யாராவது கல்யாணம் செஞ்சிப்பாங்களா? வைதேகி வேலைக்காரி மட்டும் அல்ல என் இரண்டா................வார்த்தை முடிக்காமலே மயங்கி சரிந்தார்... //

    heart touching.... unexpected climax....

    ReplyDelete
  4. இதை புனைவுன்னு நம்பிட்டேன்...

    ReplyDelete
  5. கதை நன்று. ஆனால் அந்த /புல் போதை................. வீர வசனத்தை பேசாமல் இருந்தால் /இன்னும் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  6. படிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலே முடிவை யூகிக்க முடிந்துவிட்டது

    ReplyDelete
  7. கதையின் முடிவை முன் கூட்டீயே யூகிக்க முடிந்தாலும் உங்கள் எழுத்து நடையும், யாதர்த்த டயலாக்குகளும் அருமை.

    மனோ

    ReplyDelete
  8. முடிவு பாதியிலேயே தெரிஞ்சிடுச்சி ஜாக்கி, முயற்சிக்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து ட்ரை பண்ணு

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  9. சூப்பர்!


    /
    முடிவு யூகிக்கும்படியாக இருந்தாலும், எழுத்து நடை நன்றாக இருந்தது!
    /

    ரிப்பீட்டு!
    :)

    ReplyDelete
  10. அண்ணே.. உங்க எழுத்த நிறைய பேர் படிக்கிறாங்கன்னு உங்களுக்கே தெரியும்.. இதுல வர ஒரு சில வார்த்தைகள் அவசியம்தானா? யோசிங்க..

    ReplyDelete
  11. முடிவு வாசிக்கும் போதே தெரிந்தாலும் ,ரசிக்கும்படி எழுதியிருந்தீர்கள்.வாழ்த்துகள்

    ReplyDelete
  12. அவங்க எப்போவும் என்ன பிராண்ட் சரக்கு அடிப்பாங்க?.........

    ReplyDelete
  13. என்ன ஜாக்கி, கதை எழுத ஆரம்பிச்சிட்டீங்க! கதை பரவாயில்லை, ஆனால் முடிவை ஆரம்பத்திலேயே ஊகிக்க முடியுது.

    ReplyDelete
  14. கதை நன்றாக இருந்தது என்னால் யூகிக்க முடியவில்லை

    ReplyDelete
  15. அண்ணே.. உங்க எழுத்த நிறைய பேர் படிக்கிறாங்கன்னு உங்களுக்கே தெரியும்.. இதுல வர ஒரு சில வார்த்தைகள் அவசியம்தானா? யோசிங்க

    ReplyDelete
  16. எழுத்து நடை நன்றாக இருந்தது!

    ReplyDelete
  17. //சின்ன வயசில் இருந்தே தன் வீட்டு வேலைக்காரி வைதேகி மகள் நிருபாவையும் தான் வளர்த்து, படிக்க வைத்து வருவதாக பெருமையுடன் சொல்லுவார்//

    இந்த இடத்துலயே முடிவு ஊகிக்க முடிஞ்சுது. நம்ம கோணல் புத்திதான் காரணமோ?... :)
    ஆனா நல்ல இருக்கு பாஸ்!
    :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner