மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/ 18/07/2010)

ஆல்பம்...

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இயக்குனர் சீமான் கைது செய்யபட்டு இருக்கின்றார்...இனி ஒருவருடத்துக்கு அவருக்கு ஜாமீன் கொடுக்க முடியாது என்று சட்டம் சொல்கின்றது...எதாவது படத்தை எடுத்துவிட்டு நிம்மதியாக இருந்து இருக்கலாம், ஏசியில் தூங்கி இருக்கலாம்....

இறந்த மீனவனின் குடும்பம் 3 லட்சம் நிவாரண தொகை வாங்கி கொண்டு அமைதியாகிவிட்டது...கடலோர மீனவர்களிடம் இருந்து அவர்கள் சங்கங்களில் இருந்து இந்த கைதுக்கு ஒரு எதிர்ப்பும் இல்லை... அடி மாசத்துக்கு கடற்கரை அம்மனுக்கு ஆடலும் பாடலும் எந்த ஊரில் இருந்து அழைக்கலாம் என்று அனைத்து மீனவர்களும் யோசித்து கொண்டு இருக்கின்றார்கள் போலும்....

எலக்ஷன் வரும் போது சீமானின் வாயை கட்ட முடியாது என்பதால் ஆளும் அரசு ஒரு வருடத்துக்கு தூக்கி உள்ளே போட்டு இருக்கலாம் என்பது என் எண்ணம்..
==================
சென்னை ரோடுகளின் மீது நெடுஞ்சாலை துறைக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை.... பல இடங்களில்ரோடுகளை கொத்தி வைத்து இருக்கின்றார்கள்...ரோடு போட போகின்றார்கள் என்று தெரிகின்றது... மகிழ்ச்சியான விசயம்தான்...

இப்போதுதான் முதல் முறையாக சென்னையில் பல இடங்களில் ரோடுகளை கொத்தி ரோடு போட போகின்றார்கள்....முன்பெல்லாம் ரோட்டின் மேல் ஜல்லி கொட்டி ரோடு போடுவார்கள் இதனால் கட்டிய வீடுகள் தாழ்வான பகுதியாகிவிட்டன அதனால் இந்த புது ஏற்பாடு....

நல்லவிசயம்தான்... ஆனால் நன்றாக இருக்கும் ரோட்டை கொத்தி வைத்து விட்டார்கள்... ஒரு இரவில் 30 அடி தூரம் ரோடு போட போகின்றோம் என்றால் அந்த 30 அடி ரோட்டை நோன்டி விட்டு மறுநாள் அந்த இடத்தில் ரோடு போட்டால் எந்த பிரச்சனையும் இல்லை....சென்னையில் எல்லா இடத்திலும் நாளைக்கே ரோடு போடுவது போல் கொத்தி வைத்து விட்டார்கள்.... எப்போது போட போகின்றார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்....

எங்க ஊரில் ஒரு பழ மொழி சொல்வார்கள்...ஆறு அரை கிலோமீட்டர் இருக்கும் போதே அவித்துக்கனானாம் கோவணத்தை என்று சொல்வார்கள்...கோவணம் நினையாமல் இருக்க தொடையளவு தண்ணியில் போய் நின்று கோவணத்தை அவுத்து தோளில் போட்டு அக்கரைக்கு போய் மாட்டிக்கொள்வார்கள்.... ஆனால் தண்ணீர் அரைகிலோமீட்டர் இருக்கும் போதே கோவணத்தை அவுத்துக்கொண்ட கதையாக நெடுஞ்சாலை துறை சென்னையில் நடந்து கொண்டு இருக்கின்றது... தேவுடா????

====================================
மிக்சர்...

காண்டம் என்றால் கண்றாவி என்று ஒதுங்கி போகும் தமிழகத்தில்தான் எய்ட்ஸ் நோயளிகளின் எண்ணிக்கை முதலிடத்தில் இருக்கின்றது.இந்தியாவில் அதிக அளவு எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருப்பது 87 மாவட்டங்கள் ....அதில் முக்கால் வாசி மாவட்டங்கள் தென் மாவட்டங்களாம்....அதில் முதலிடம் தமிழகம்...
===================

கடந்த வாரத்தில் ஒரு பெண் காவலர் தன் கணவருக்கு நடக்க போகும் மறுமணத்தை தடுத்து நிறுத்த போராடி எழு காவல் நிலையத்துக்கு மேல் புகார் அளிக்க சென்று எந்த காவல் நிலையமும் புகார் வாங்காமல் இழுத்து அடித்து, கடைசியில் மண்டப வாசலில் தர்ணா போராட்டம் நடத்தி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கின்றாள்... ஒரு பெண்காவலருக்கே இந்த நிலமை என்றால் சாதாரண குப்பம்மாளுடைய நிலயை நினைக்கும் போது பயமாக இருக்கின்றது...
===============
இந்த வருட மதிப்பெண் போலிசான்றிதழ் இதுவரை 500 பேருக்கு கொடுத்து இருப்பதாக பிடிபட்ட கும்பல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த இருக்கின்றது... கடந்த எட்டு வருடங்களாக இந்த வேலையை செய்து இருப்பதாக சொல்ல எத்தனை மாணவர்கள் இது போலான தில்லாலங்கடியில் ஈடுபட்டு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை...எத்தனை பேர் டாக்டர் , என்ஜினியர் என்று செட்டில் ஆனவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை... எத்தனை திறமையான நேர்மையான மாணவனின் வாய்ப்பை, வாழ்க்கையை கெடுத்தார்கள் என்று தெரியவில்லை...

==========

பேஸ் புக்கில் பதிவர் அதிஷா ஒரு வாக்கியத்தை போட்டு இருந்தார்... அது ரசிக்கும் விதமாகவே இருந்தது....

கலைஞர் சொல்வது போல்....

ஓ தமிழர்களே தமிழர்களே என்னை தூக்கி கடலில் போடதீர்கள்... போட்டால் சிங்களராணுவம் சுட்டு விடும்...

===============


எல்லா விளம்பரத்திலும் இந்த பெண்ணே.....
மேலே உள்ள இந்த பெண்ணை நீங்கள் தினமும் பார்த்து தொலைகாட்சியில் பார்த்து இருக்கலாம்... இந்த பெண்ணை அறியபட்ட விளம்பரம் 3 ரோசஸ் டீ விளம்பரம்தான்... இப்போது டிவியில் எந்த விளம்பரமாக இருந்தாலும் இந்த பெண்தான்.... பெயர் திவ்யா பரமேஸ்வர்1. 1 brook bond 3 roses, i love you
2. 2 brook bond 3 roses, doggie
3. 3 brook bond 3 roses, Little lambs

* Divya parameshwar Acted in Sowbhagya advertisment.
* Divya parameshwar in ajinamoto advertisment.
* Divya parameshwar in TTk Prestige Mixie advertisment.
* Divya parameshwar in Prince Jwellery advertisment.
* Divya parameshwar in Kohinoor's jasmine advertisment.
* Divya parameshwar Ashok Tmt advertisment.
* And So.
* Divya parameshwar is the model of brook bond 3 roses,Sowbhagya,ajinamoto,TTk Prestige Mixie,Prince JwelleryKohinoor's, jasmineKohinoor's jasmine,Ashok Tmt.
நிறைய விளம்பரபடங்கள் லேட்டஸ்ட்டாக கோஹினூர் காண்டம் ஆட்... அது மட்டும் அல்ல சட்டென பார்த்தால் ஹாமாம் சோப்புக்கு அம்மாவாக நடிக்கின்றார்... தென்னிந்தியாவின் டாப் மாடலாக கோலாச்சிக்கொண்டு இருக்கின்றார்....இப்போது சன் டிடிஎச் விளம்பரம்ஒரே பெண் பல பாத்திரங்களுக்கு பொறுத்தமாக இருக்க முடியுமா???இந்த பெண் இருக்கின்றார் என்பது கூடுதல் விஷயம்... என்னை பொருத்தவரை பரிசுக்கான வாழ்க்கையாகதான் இதை என்னால் எடுத்துக்கொள்ளமுடிகின்றது... காதலியாக, மணப்பெண்ணாக, அம்மாவாக, என்று அசத்திக்கொண்டு இருக்கின்றார்.. ஆர்பாட்டம் இல்லாத அழகு....

திவ்யா..சினிமாவில் நடிப்பது பற்றி இதுவரை யோசிக்கவில்லை என்று சொல்கின்றார்...இரண்டு அல்லது 4 நாள் வேலை... பல லட்சம் சம்பளம்... மிக முக்கியமாக ஏசி அறையில்தான் செட் போட்டு படபிடிப்பு நடக்கும்....கூடுமானவரை யாரையும் தொடாமல் நடிக்கலாம்.....ஏம்பா மணிஜி இந்த மாதிரி மாடலை எல்லாம் வச்சி விளம்பரம் படம் எடுத்தால் என்ன???
========================
பிலாசபி பாண்டி

எல்லாரும் கவர்மென்ட் காலேஜிக்கு படிக்க போவானுங்க...
கவர்மென்ட் ஸ்கூலுக்கு போக யோசிப்பானுங்க...


எல்லாரும் கவர்மென்ட் வேலைக்கு போவனும்னு ஆசை படுவானுங்க ஆனா கவர்மென்ட் ஆஸ்பிட்டலுக்கு போக யோசிப்பானுங்க...

பைத்தியக்கார பசங்க....

===========
நான்வெஜ் 18+

சரேஜாதேவி கதை படிச்ச ஒரு வயசு பையன் பக்கத்து வீட்டு ஆண்டியை கரெக்ட் பண்ண டிரை பண்ணினான்....

நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க...
நன்றி
உங்க கன்னம் ஆப்பிள் போல இருக்கு...
நன்றி
உங்க கண்கள் திராட்சை போல் இருக்கு
நன்றி

நீங்க மட்டும் ஹாலிவுட்ல இருந்து இருந்தா என்ஜலினா ஜோலி தோத்து இருப்பாங்க....

போதும் நீ என்னதான் ஐஸ் வச்சாலும் 60 அடி ஆழ கிணத்துக்கு 30 அடி கயிறு பத்தது... போ போய் வேலையை பாரு...
=========
குறிப்பு..

கணனி சம்பந்தமாக எந்த சந்தேகத்தையும் பதிவிலகில் தீர்த்து வைப்பது வடிவலேன் ஆர் அவர் பதிவுக்கு இங்கு சுட்டவும்


பொதுவாக எனது கம்யூட்டரில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை போனில் சரி செய்து கொடுக்கும் டெக்னிக்கல் கிங் பதிவர் வடிவேலன் ஆர் பார்பர் ஷாப்பில் இருந்து இறங்கும் போது என்னை போலவே கல் தடுக்கி வண்டியில் இருந்து விழுந்து விட்டார்... நிறைய உள்காயத்துடன் ரேஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்... சீக்கிரம் குணமடைய இறைவனைபிரார்த்திக்கின்றேன்...

மினி சாண்ட் வெஜ் ,சின்னதா எழுதனும்னு நினைச்ச....ஆது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கு நான் என்ன செய்ய...?? இனி நேரம் கிடைக்கும் போது இது தொடரும்...

அன்புடன்
ஜாக்கிசேகர்


24 comments:

 1. எப்பண்ணே தமிழ்நாடு மாவட்டமாச்சு.... பதிவு சூப்பர்ணே....அதுலயும் அந்த கயிரு மேட்டர் சூப்பரோ சூப்பரு ... (அட கடவுளே நீங்களுமா... யூ டூ ப்ரூட்டஸ் ...)

  ReplyDelete
 2. ஞாயிறு காலை நல்ல break fast உங்களின் சாண்ட்விட்ச்

  ReplyDelete
 3. அந்த விளம்பர பெண் நல்ல அழகு.. யார்ரா இது என நினைத்திருந்தேன்... அறிமுகத்திற்கு நன்றி தலைவா

  ReplyDelete
 4. இந்தவார புகைபடம் சூப்பர். நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டு இருக்கிறேன்..

  ReplyDelete
 5. சீமான உள்ளபோட்டது சரிதான்.வக்காளி உள்ளயே இருக்கட்டும். :)

  ReplyDelete
 6. சூப்பர் சாண்டுவிச்.

  செழியன்.

  ReplyDelete
 7. //சாதாரண குப்பம்மாளுடைய நிலயை நினைக்கும் போது பயமாக

  //


  ஏன் இது போன்ற சமயங்களில் கும்பம்மாளோ,முனியம்மாளோதான் நினைவுக்கு வருவார்களா?? ஒரு மதுஸ்ரீயோ ஜெய்ஸ்ரீயோ நினைவுக்கு வரமாட்டார்களா?? இது பிற்பட்டோர் முட்டாள்கள் எனும் உங்கள் ஆதிக்க மனப்பான்மை வெறியின் உச்சம்.

  (ஒண்ணுமில்லை நம்ம கோவி.கண்ணன் அண்ணன் மாதிரி ஒரு பின்னூட்டம்போட முயற்சி பண்ணுனேன் ஹி..ஹி..ஹி..)

  ReplyDelete
 8. ஆகா வேலன் குணமடைய என் பிரார்தனைகள். நான் பலபேருக்கு அவருடைய பதிவை சிபாரிசு செய்திருக்கின்றேன். குறிப்பாக அந்த ரெஸ்யூம் தயாரிப்பது பற்றிய பதிவு. என் விசாரிப்பை சொல்லவும் ஜாக்கி!

  ReplyDelete
 9. நல்லாயிருக்கு!!!
  நான் அனுப்பிய மெயில் சிங்கை பதிவர் KRISHNAMOORTHY BASKARAN அனுப்பியது. அவருக்கு எனது நன்றிகள். :-)

  எனக்குப் பிடித்த மாடல்களில் இவரும் ஒருவர். அறிமுகத்திற்கு ரொம்ப நன்றி.
  மணிஜீ பார்த்துசெய்யுங்க... தம்பிகளின் ஆசை... :-))

  ReplyDelete
 10. சீமானுக்கெல்லாம் வக்காலத்து வாங்கதீங்க ஜாக்கி. அவன்லாம் ஒரு ஆளே இல்ல.

  ReplyDelete
 11. அன்பின் ஜாக்கி சேகர்

  சாண்ட்விச் நன்றாகவே இருக்கு
  ரோடு கொத்தின அனியாயம் ...ம்ம்ம்ம்
  சதேவி கதை முடிவில சொல்லி இருக்கது நல்லாவே இருக்கு - சூப்பர் ஜோக்கு ( ஆமா ஒரு வயசுப் பையனா ???? ) ம்ம்ம்ம்
  வடிவேலன் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

  ReplyDelete
 12. ஒரு வயசு - பையன் எப்படி ????????????????

  ReplyDelete
 13. தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே போட்டது பிழை. ஆனாலும் தமிழ் நாட்டில் இருக்கிற சிங்களர்களின் பட்டியல் எடுத்து வைத்து அவர்களைத் தன் பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட தமிழ் இளைஞர்கள் மூலம் தாக்க வைப்பதால் சீமான் இலங்கையில் ராஜபக்சேவிடம் மாட்டியிருக்கிற தமிழர்களுக்குச் செய்யப்போகிற நன்மை என்னவென்று தெரியாதா?

  ReplyDelete
 14. / இப்போதுதான் முதல் முறையாக சென்னையில் பல இடங்களில் ரோடுகளை கொத்தி ரோடு போட போகின்றார்கள்....முன்பெல்லாம் ரோட்டின் மேல் ஜல்லி கொட்டி ரோடு போடுவார்கள் இதனால் கட்டிய வீடுகள் தாழ்வான பகுதியாகிவிட்டன அதனால் இந்த புது ஏற்பாடு....//
  ---------------------------ஜாக்கி

  இதுகூட யார் தயவால் தெரியுமா ? நம்ம ட்ராபிக் ராமசாமி இருக்காரே அவரு போட்ட PIL தான் காரணம். இல்லையேல் // பழையகுருடி கதவ தெறடி //கதைதான் நொந்த குமாரா!! :)

  சரோஜாதேவி ஜோக்கெல்லாம் சிறுபிள்ளை தனமா இருக்கு நொந்த குமாரா!!
  --

  ReplyDelete
 15. மினி நல்லாயிருக்கு ஜாக்கி.. தொடரவும்..

  ReplyDelete
 16. ELECTION IS APPROACHING, HENCE ROAD WORKS HAVE STARTED, LET CHENNAI HAVE NEW ROADS.

  ReplyDelete
 17. antha ponnu KALAMANDIR ora main model antha stills ellam kooda avanga photo shoot tghan atha sollama vittuttingale thalaiva.................

  ReplyDelete
 18. வடிவேலன் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 19. // எலக்ஷன் வரும் போது சீமானின் வாயை கட்ட முடியாது என்பதால் // இப்படி நாலு பேரு ஏத்தி வுட்டு ஏத்தி வுட்டுத்தான் சும்மா கிடந்தவன் இப்போ ஜெயில்ல... உடம்ப ரணகளமாக்காம உடமாட்டீங்க போல... சீமான் வாய கட்டாம போனா மட்டும் என்ன நடந்திடும்னு நினைக்கிறீங்க.. அரசாங்கம் பயப்படுற அளவுக்கெல்லாம் சீமான் ஒரு சீரியஸ் பீசுன்னு உண்மையிலேயே நம்புறீங்களா? ஹய்யோ ஹய்யோ...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner