சென்னை இணைய கருத்தரங்கம் மற்றும் சின்ன பதிவர் சந்திப்பு... ஒரு பார்வை...

அரசின் இலவச திட்டங்களை எள்ளி நகையாடும் அல்லது நக்கல் விடும் மேட்டுக்குடியினர் அதிகம் வசிக்கும் சென்னை போட் கிளப், 3ஆவது அவென்யூவில் இருக்கும் அண்ணா பல்கலைகழக அலுமினி கட்டிடத்தில் உள்ளே உள்ள, ஹேக்டே ஹாலில்...தமிழ் இணையவளர்ச்சி பற்றிய சிறிய கருத்தரங்கம் நடந்தது....


நான் காலையிலேயே குடும்பஸ்தனாக சில வேலைகள் பார்த்து விட்டு... அங்கு புறப்பட சற்று நேரம் பிடித்தது... மணி பத்துக்கு மேல் ஆனதாலும் கூட்டம் ஆரம்பித்து விடும் என்ற காரணத்தாலும்.... பதிவர் லக்கிக்கு போன் செய்ய... இன்னும் யாரும் வரவில்லை...நீங்கள் பொறுமையாக வாருங்கள் என்றதும் நானும் கொஞ்சம் வண்டியின் வேகம் குறைத்து போனேன்...
(நம்ம சென்னை பதிவர்களுடன் நான்....)

முந்தாநாள் பின்புறமாக விழுந்த வலியின் எச்சங்கள் அல்லது மிச்சங்கள் நடுமுதுகில் சின்ன வலிகளை சின்ன சின்ன பள்ளங்களில் ஏற்படுத்திக்கொண்டு இருந்தன....அதனால் வாகனத்தை வேகம் குறைத்தே செலுத்தினேன்...போட்கிளப்பில் ஏற்கனவே பலமுறை வாகனத்தில் சுற்றி இருக்கின்றேன்... அதனால் வழியில் எந்த குழப்பமும் இல்லாமல் போய் சேர்ந்தேன்...

கூட்டம் சேர்ந்ததும் இனிதே ஆரம்பித்தது...பழம் பதிவர் ஓசை செல்லா... வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்...நம்ம ஆசிப் அண்ணாச்சி இனிய அதிர்ச்சியாக வருகை தந்து இருந்தார்....

நண்பர் அஜயன் பாலா...சிக்கிமுக்கி மற்றும் தடாகம் இணையதளமும் இணைந்து... கொஞ்சம் தேநீர் நிறைய ஆகாயம் எனும் சிறு தமிழ் இணையகருத்தரங்கம் அவசரகதியில் எந்த அழைப்பிதழும் இல்லாமல் இவ்வளவு குறிகிய காலத்தில் அழைப்பு விடுத்து..அந்த அழைப்பை ஏற்று வருகை தந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்...
(ஓசை செல்லா....மணிவண்ணன்,ஆசிப்அண்ணாச்சி,பாலாபிள்ளை,நான்)
சிக்கிமுக்கி இணையதளம் சார்பாக பேச வந்த தாரா இணையதளவளர்ச்சியை புள்ளி விவரத்துடன் சிறு குறிப்பில் இருந்து எல்லா விவரத்தையும் சொன்னார்.. பொதுவாக இணையதளபயண்பாடு என்பதுஇராணுவத்துக்காக உருவாக்கபட்டதையும் அது சட்டென உலகை வலைத்துக்கொண்டதையும் சொன்னார்.... இன்னும் இணையம் தமிழில் வளர பல படைப்புகள் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்... அதையே தடாகம் இணையதளம் சார்பாக பேச வந்த நண்பரும் அதே கருத்தை பகிர்ந்து கொண்டார்...

அடுத்ததாக கொஞ்சம் தேநீர் எல்லோருக்கும் கொடுக்கபட்டது...இரண்டு சின்ன சைஸ் சம்மோசாவும் காரசில்லிசாசும் வைத்து காலை பசி ஆற்றினேன்...காலையில் எதுவும் சாப்பிடவில்லை....அடுத்ததாக பதிவர் லக்கி இணையம் பற்றி பேசினார்... திரட்டிகளில் ஓட்டுக்களுக்கு அடித்துக்கொள்ளும் கயவாலி தனத்தை சாடினார்......

அதன் பிறகு பேச வந்த அண்ணாச்சி ஆசிப்மீரான்... இணையம் கடந்து வந்த பாதையையும்.. முதன் முதலில் தமிழ் எழுத்துக்களை இணையத்தில் பார்த்த போது ஏற்பட்ட சந்தோஷத்தையும்.... தமிழ் மொழி இணையத்தில் வளர்ச்சி அடைய ஆரம்பித்த கதைகளை அற்புதமாக தொகுத்து சொன்னார்... தனக்கு கவிதைகள் பிடிக்காது என்பதையும்... அதனால் கவிதைகளுக்கு நக்கலாக கவுஜை என்று வைத்ததையும் சொன்னார்.....

இப்போது எல்லாம் முன்னை போல் அதிகம் எழுதுவது இல்லை என்று சொன்னார்....அண்ணாச்சியை கம்பேர் செய்யும் போது நான் எல்லாம் இரண்டு வருடத்தில் வந்து ஆட்டடம் போடும் காமெடியன் நான்.....அவர்கள் கடந்து வந்த நீண்ட நெடிய வரலாற்றை மிக சுத்தமான தமிழில் சுவைபட தெரிவித்தார்...

ஓசை செல்லா நடக்கும் நிகழ்வுகளை சலனபடமாக தனது கைபேசியில் எடுத்தக்கொண்டு இருந்தார்...

அடுத்ததாக கேபிள் பேச ஆரம்பிக்க...4வருடத்துக்கு முன்பே வலைதளத்துக்கு தான் வந்தாலும் வெகுதீவிரமாக எழுத ஆரம்பித்தது.... இரண்டு வருடங்களாகதான் என்று சொன்னார்...பதிவு எழுதுவதை விட அதற்கு மார்கெட்டிங் ரொம்ப முக்கியம் என்று சொன்னார்.... அதனால் திரட்டிகள் அவசியத்தை பற்றி பேசினார்...

நடுவில் பதிவர் மற்றும் இயக்குனர் செல்வகுமார் ஒரு கேள்வி எழுப்பினார்.......இணையத்தில் இப்போது எல்லாம் பள்ளிகூடம் போல் பல பயனுள்ள தளங்கள் செயல்படுகின்றன... அதில் தமிழ் மொழியை எப்படி புகுத்துவது என்பதையும் சற்று விளக்கி சொல்ல சொன்னார்....
(வந்திருந்த கூட்டம்...)

மணிவண்ணன் அவர்கள் கேபிளுக்கு அடுத்து பேச வந்தார்....தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டுஅங்கு சில கோரிக்கைகள் வைத்து விட்டு வந்ததை சொன்னார்....அமெரிக்காகவில் 30 ஆண்டுகள் இருந்த போது அந்த நாட்டின் மக்கள் மனநிலை கருத்து சுதந்திரம் போன்றவற்றை மிக மிக அழகாக விளக்கினார்....எனக்கு மிக அதிக தகவல்கள் கிடைக்கபெற்றன...
(முக்கிய விருந்தினர்...மணிவண்ணன் மற்றும் பாலாபிள்ளை)

அதன் பிறகு பேச மலேசியாவில் இருந்து வந்த பாலாபிள்ளை அவர்கள் இணையத்தில் தமிழ் எழுத்துருவை பலரும் பயன்படுத்தும் விதத்தில் ஆரம்பகால முயற்ச்சிகளையும்...அதன் பின் நம் சமுகம் வளர்ச்சி அடைந்த சமுகமாக எண்ணிக்கொண்டு இருக்கின்றோம்.. ஆனால் உண்மையில் நாதம் வளர்ச்சி அடையவில்லை... நமக்கு எல்லாம் தெரியும் என்று அலட்சியமாக இருக்கின்றோம்... ஆனால் நாம் இன்னும் பாயச்சலாக தபவ வோண்டிய கட்டங்கள் நிறை உள்ளது... என்றும் அதற்கு இந்த தமிழ் இணையம் மற்றும் அதிக அளவில் பயண்படுத்தும் பிளாக்கர்களுக்கு பெரும்பங்கு இதில் உண்டு என்று பல மேனாரிசங்களுடன் உத்வேகத்துடன் பேசினார்......

முடிவாக எழுத்தாள நண்பர் முருகள் பேசினார்... இன்னும் அரசு சரியான எழுத்துருவை அறிவித்து அரசாணையாக போட்டு செயல்படுத்தவில்லை என்று குறைபட்டுக்கொண்டார்..

முடிவாக நேரமின்மைகாரணமாக இத்தோடு நிகழ்ச்சியை நிறைவு செய்கின்றேன் என்று சொல்லி நிகழ்ச்சியை நன்றி கூறி நிறைவு செய்தார்.. அஜயன் பாலா............

இந்த கருத்தரங்கில் பேச அழைத்து இருந்தாலும்.... எங்கள் தலைவர் உண்மைதமிழன் அவர்கள் உடல் நிலை சரியல்லாத காரணத்தால் தனது எண்ணவோட்டங்களை தனது வலைபதிவில் ஒரு 30 பக்கத்துக்கு ஏதாவது எழுதி வைப்பார் என்று நம்பிகின்றேன்...

எப்போதும் இது போல எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கூடலே இருக்கும் செவ்வாழையான வண்ணத்து பூச்சி சூர்யவை காணவில்லை... எனக்கு தெரிந்து ஆந்திராவில் பணி காரணமாக போய் இருக்கலாம் என்று நினைக்க தோன்றுகின்றது.....

தண்டோரா மூன்று மணி நேரம் கழித்து மாயமாய் மறைந்து போனார்....
(ஒரு குரூப் போட்டோ)

படங்களை கிளிக்கி பார்க்கவும்...

கீழே எல்லோரையும் நிக்க வைத்து குரூப்போட்டோ எடுத்தேன்...நான் இருக்கும் போட்டோவை ஓசை செல்லா எடுத்தார் அவருக்கு என் நன்றிகள்....

================================

சென்னை போட்கிளப் பார்வைகள்......

இது அடையாறு கரையில் மந்தவெளி பக்கத்தில் உள்ளது.... ஒரு கிரவுண்டின் இப்போதைய சந்தை மதிப்பு எட்டுகோடிரூபாயாம்....

இந்த இடத்தில் இனியாராவது விற்பனை செய்ய வேண்டும் என்றால் கிளப்பிடம் விற்க வேண்டுமாம் அதில் இதுவரை புக் பண்ணி இருப்பவர்கள் 218 அந்த பிரபல நடிகர் 218வது இடத்தில் இருக்கின்றாராம்...அதற்குமுன் அந்த இடத்தில் பங்களா வாங்க போட்டி போடுபவர்கள் 200க்கு மேல் இருக்கின்றார்கள்...

கூட்டம் இரண்டு மணிக்கு முடிந்து... நான், லக்கி,காவேரிகணேஷ்,நட்டு போல்டு,நித்யகுமாரன், என மாலை 5வரை பேசக்கொண்டு இருக்க... அதன் பிறகு கேபிள் மற்றும் கேஆர்பி செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்....

போட்கிளப்பின் வாசலில் உள்ள சின்ன பிள்ளையாருக்கு மணி அடித்து அர்சனை செய்தனர்.....

பல பணக்கார வீட்டு பெண் குழந்தைகள்... டென்னிஸ் மற்றும் ரன்னிங் பயிற்சி எடுத்தனர்...அவர்களைதான் பார்க்கின்றோம் என்று தெரிந்த பிறகு ஆட்டத்திலும் நடையிலும் வித்தயாசத்தை உணர முடிந்தது....

பதிவுலக நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த போது பேச்சை கெடுக்கும் விதமாக, போட் கிளப்புக்கு வெளி சாலையில் டிசர்ட் போட்டு, சின்ன டவுசர் மாட்டி... சின்ன தொப்பையையும் பெரிய தொப்பையையும் கரைக்க ஜாக்கிங் போய் கொண்டு இருந்தார்கள்....வயது பெண்கள் கிராஸ் செய்யும் போது நான் பேசும் வாக்கியங்களில் எனக்கு தடங்கல் ஏற்பட்டது...

ஜாக்கியோட கேரக்டர் தெரியும் என்பதால் பதிவுலக நண்பர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை


மாலை 5மணிக்கு மேல் நிறைய முதியவர்கள் வாங்கிங் போக போட்கிளப் சாலை களைகட்ட தொடங்கியது.... ஹாய், பாய்களோடு அமெரிக்காவின் அரிசோனா மாநில தெருவில் நிறபது போல் ஒரு பிரம்மை ஏற்பட்டது...
வாக்கிங்கில் இந்தியா சிமெண்ட் தலைவர் சீனுவாசன் நடைபயின்றார்....

பென்சும், பிஎம்டபுள்யூவுமாக.... போவதும் வருவதுமாக வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது...நிறைய காரை பெண்கள் ஓட்டிச்சென்றனர்... பலதில் கொழு கொழு நாய்கள் உட்கார்ந்து இருந்தன....


ஒரு பெண் காரில் உட்கார்நது இருந்தார்.. உதட்டில் தேவைக்கு அதிகமாகவே லிப்ஸ்டிக் போட்டு இருந்தார்... ஒரு சிகரெட் பற்ற வைத்து ரசித்து நுரையிரலில் நிக்கோடின் நிரப்பிக்கொண்டு இருந்தார்.. புகை நமக்கு பகை என்பதை எங்கேயோ படித்து இருப்பார் போல... அதனால் டிரைவரை காரை விட்டு பத்து அடி தள்ளி நிக்கவைத்து விட்டார்....கணவர் வந்தார் கட்டி பிடித்தார்... டிரைவர் வந்து உட்கார்ந்து காரை சீறீனார்....

வழக்கம் போல படங்களை கிளிக்கி பார்க்கவும்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேரு வாசிக்க ஓட்டும்,பின்னுட்டமும் ரொம்ப முக்கியம்...

24 comments:

  1. பகிர்ந்தமைக்கு நன்றி
    me the first

    ReplyDelete
  2. அசத்திடீங்க ஜாக்கி...

    ReplyDelete
  3. //ஜாக்கியோட கேரக்டர் தெரியும் என்பதால் பதிவுலக நண்பர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை
    //

    :)))))))))

    ReplyDelete
  4. அந்த உயர இளைஞனுடன், குள்ளமான அபரிமிதமான “ ” வந்த பெண்ணை.. பார்த்த போது நானும் நீயும் பேச வந்ததை விட்டு நின்றது உலகறியும். நல்ல வேளை நான் கருத்தரங்கில் பேசும் போது யாரும் வரலை..:)

    ReplyDelete
  5. விரிவான பகிர்வு அண்ணே.. நகைச்சுவை கலந்து ரசிக்க வைத்திருக்கிறீர்கள்.. மிக்க நன்றி ..

    ReplyDelete
  6. \\ஜாக்கியோட கேரக்டர் தெரியும் என்பதால் பதிவுலக நண்பர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை........//

    ஒன்னும் சொல்றதுகில்லை.... :-) :-)

    \\வயது பெண்கள் கிராஸ் செய்யும் போது நான் பேசும் வாக்கியங்களில் எனக்கு தடங்கல் ஏற்பட்டது....//

    அது நம்மோட (ஆண்களின்) குறும்பு குரோமோசோம்களின் சில்லறை விளையாட்டு ஆச்சே :-) :-)

    ReplyDelete
  7. அந்த கடைசி பகுதிகள் வருத்தத்தையே வரவழைத்தது.

    அடுத்தவர்கள் காரில் போகிறார்கள், வளர்ப்பு பிராணிகள் வைத்து இருக்கிறார்கள் என்ற கிசுகிசு பாணி எழுத்து அயர்ச்சியை தருகிறது.

    பெண் புகை பிடித்தலும், மது அருந்துதலும் தவறா. ஆண் புகை பிடித்தாலோ, மது அருந்தினாலோ அதில் ஆச்சர்ய பார்வை இல்லை ஆனால் பெண் அருந்தினால் ? இந்த ஆச்சரிய ஆண் ஆதிக்க மனப்பாங்கை விட்டு வெளியே வருவோம் முதலில் நாம்.

    ReplyDelete
  8. இந்த பதிவிற்கு சரியான உவகை என்றால்- விருமாண்டி திரைப்படத்தை சொல்லலாம்.

    படம் முதல் ஒன்பது ரீல்கள் சரியாக இருக்கும், கடைசி ஐந்து ரீல்களில் அந்த சலிப்பூட்டும் கிளைமாக்ஸ் காட்சிகள் (சிறைக்குள் வன்முறை) . அது போல தான் இந்த பதிவும் இருக்கிறது. மன்னிக்கவும் சற்று காட்டமாக எழுதியமைக்கு, உங்கள் மீது உள்ள அன்பு தான் இந்த காட்டதிர்க்கு காரணம்.

    ReplyDelete
  9. நன்றி யாழி பாபா... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  10. நன்றி காவேரி கணேஷ்...

    ReplyDelete
  11. நன்றி அத்திரி...

    ReplyDelete
  12. அந்த உயர இளைஞனுடன், குள்ளமான அபரிமிதமான “ ” வந்த பெண்ணை.. பார்த்த போது நானும் நீயும் பேச வந்ததை விட்டு நின்றது உலகறியும். நல்ல வேளை நான் கருத்தரங்கில் பேசும் போது யாரும் வரலை..:)//

    உண்மைதான் கேபிள்...

    ReplyDelete
  13. விரிவான பகிர்வு அண்ணே.. நகைச்சுவை கலந்து ரசிக்க வைத்திருக்கிறீர்கள்.. மிக்க நன்றி//

    நன்றி செந்தில் தம்பி..இரவு சந்திப்புக்கும்...

    ReplyDelete
  14. நன்றி லெமூரியன்... உங்கள் விரிவான பகிர்வுக்கு...

    ReplyDelete
  15. நன்றி கார்த்திக் சிதம்பரம்.. வலைச்சர பின்னுட்டத்துக்கும்... புரிதலுக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  16. அன்பின் ராம்ஜீ நீங்கள் என் நெடுநாள் நணபர் என்பதால் பதில் சொல்கின்றேன்.

    முதலில் ஒரு போட்கிளப் எனும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி எப்படி இருக்கின்றது என்பதை எழுதவும்... அதனை கண் முன் அங்கு நடந்த நிகழ்வை நிறுத்தவும்... அந்த பகுதி எழுதபட்டது....

    பீ எம் டபுள்யூ பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டு பெருமை பட்டவன் நான்... ஆடி காரில் உள்ளே உட்கார்ந்து புகைபடம் எடுத்து ஆசையை தனித்துக்கொண்டவன் நான்...

    எனக்கு அந்த கார்கள் ரொம்ப பெரிய விஷயம்...உங்களுக்கு அது சாதாரணமான விஷயமாக இருக்கலாம்... அதில் பொமேரியன் ஜெர்மன் ஷெப்படு.. போன்ற நாய்கள் முழுதான குளிர்சாதனித்தில் பயணபட்டதை எழுதி இருந்தேன்...

    நான் இருக்கும் சினிமா துறையில் இதை விட பெண்க்ள் என்னவெல்லாம் செய்வதை பார்த்து இருக்கின்றேன்... பார்ட்டி முழுவதும் செயின் ஸ்மோக்கரான பெண்களையும் உதட்டில் இருந்து அரைமணிக்கு உதடு சரக்கு கப்பை எடுக்காத பெண்ணையும்,புல்லட் ஓட்டும் பெண்களையும் பார்த்து இருக்கின்றேன்...


    அந்த காரில் அந்த பெண் ரொம்ப ஸ்டைலாக சிகரேட் பிடித்தார்... அங்கு அந்த பெண் தம் அடித்தது தப்பு என்று எங்கும் எழுத வில்லை...

    அங் நான் பார்த்த விஷயத்தில் அந்த பெண் சிகரேட் பிடித்துக்கொண்டு இருந்தார்...அந்த இடத்தில் நடந்த நிகழ்வை எழுதி இருந்தேன்...இதில் ஆணாதிக்கம் எங்கு இருக்கின்றது..

    அங்கு பிள்ரளையார் கோவிலில் கூட மணி அடித்து அர்ச்சனை செய்ததை சொன்னேன்...


    முதலில் ஆன்மீகத்தை விட்டு வெளியே வருவோம் என்று யாராவது சொல்லுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கின்றது....


    அதே போல் இதில் பகிரும் எழுத்துக்கள் எல்லாம் ஒரு இன்லெக்சுவல் பார்வையில் இருக்காது.. ஒரு கிராமத்தானின் பார்வையில் இருக்கும்...

    பாருங்கள்.. இதற்கு பதில் சொல்லும் விஷயத்துக்கு நான் ஒரு பதிவே எழுதி விட்டு போய் இருப்பேன்...

    எல்லோருக்கும் எல்லாம் பிடிப்பதில்லை...கடக்காதவர்களுக்கு ஆச்சர்யமான விஷயம்...

    கடந்தவர்களுக்கு அயர்ச்சியான விஷயம் அவ்வளவே...

    இந்தவிளக்கம் கூட ராம்ஜி என்ற அந்த பெயருக்காக.. அது நெடுநாளாய் நட்பு பாராட்டும் பெயர் என்பதால்..

    அது கொஞ்சம் டென்சனாக இருக்கின்றது என்ற காரணத்துக்காக...

    ReplyDelete
  17. அன்பின் ராம்ஜீ நீங்கள் என் நெடுநாள் நணபர் என்பதால் பதில் சொல்கின்றேன்.

    முதலில் ஒரு போட்கிளப் எனும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி எப்படி இருக்கின்றது என்பதை எழுதவும்... அதனை கண் முன் அங்கு நடந்த நிகழ்வை கண் முன் நிறுத்தவும்...எழுதபட்டது....

    பீ எம் டபுள்யூ பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டு பேருமை பட்டவன் நான்... ஆடி காரில் உள்ளே உட்கார்ந்து புகைபடம் எடுத்து ஆசையை தனித்துக்கொண்டவன் நான்...

    எனக்கு அந்த கார்கள் ரொம்ப பெரிய விஷயம்...உங்களுக்கு அது சாதாரணமான விஷயமாக இருக்கலாம்... அதில் பொமேரியன் ஜெர்மன் ஷெப்படு.. போன்ற நாய்கள் முழுதான குளிர்சாதனித்தில் பயணபடடதை எழுதி இருந்தேன்...

    நான் இருக்கும் சினிமா துறையில் இதை விட பெண்க்ள் என்னவெல்லாம் செய்வதை பார்த்து இருக்கின்றேன்... பார்ட்டி முழுவதும் செயின் ஸ்மோக்கரான பெண்களை பார்த்து இருக்கின்றேன்...


    அந்த காரில் அந்த பெண் ரொம்ப ஸ்டைலாக சிகரேட் பிடித்தார்... அங்கு அந்த பெண் தம் அடித்தது தப்பு என்று எங்கும் எழுத வில்லை...

    அங் நான் பார்த்த விஷயத்தில் அந்த பெண் சிகரேட் பிடித்துக்கொண்டு இருந்தார்...

    அங்கு பிள்ரளையார் கோவிலில் கூட மணி அடித்து அர்ச்சனை செய்ததை சொன்னேன்...


    முதலில் ஆன்மீகத்தை விட்டு வெளியே வருவோம் என்று யாராவது சொல்லுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கின்றது....


    அதே போல் இதில் பகிரும் எழுத்துக்கள் எல்லாம் ஒரு இன்லெக்சுவல் பார்வையில் இருக்காது.. ஒரு கிராமத்தானின் பார்வையில் இருக்கும்...

    பாருங்கள்.. இதற்கு பதில் சொல்லும் விஷயத்துக்கு நான் ஒரு பதிவே எழுதி விட்டு போய் இருப்பேன்...

    எல்லோருக்கும் எல்லாம் பிடிப்பதில்லை...கடக்காதவர்களுக்கு ஆச்சர்யமான விஷயம்... கடந்தவர்களுக்கு அயர்ச்சியான விஷயம் அவ்வளவே...

    இந்தவிளக்கம் கூட ராம்ஜி என்ற அந்த பெயருக்காக.. அது நெடுநாளாய் நட்பு பாராட்டும் பெயர் என்பதால்..

    அது கொஞ்சம் டென்சனாக இருக்கின்றது என்ற காரணத்துக்காக...

    ReplyDelete
  18. ஜாக்கி நீங்களும் சீக்கிரமே பென்சும் பீ எம் டபிள்யு வும் வாங்கி விடுவீர்கள், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    உங்கள் பழைய எளிமையான வாழ்க்கை நிலையை நான் மறக்க சொல்ல வில்லை. இப்போது பீ எம் டபிள்யு வாழ்க்கை தரம் உங்களை விட வெகு தூரத்தில் இல்லை.

    ReplyDelete
  19. கொஞ்சம் தேனீர், நிறைய்ய ஆகாயம்..நிகழ்வு தொகுப்பு,புகைப்படங்கள்

    http://kaveriganesh.blogspot.com/2010/07/blog-post.html

    ReplyDelete
  20. I was not able to come. Thanks for sharing.

    ReplyDelete
  21. நிகழ்ச்சியை விட, உங்கள் பகிர்வு சுவாரசியமாக இருக்கிறது.

    ReplyDelete
  22. நிகழ்ச்சியை உங்கள் மூலமாக பார்க்க முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  23. ஒரு தடவ சொல்லிட்டீங்க...
    படங்களை கிளிக்கி பார்க்கவும்...ன்னு...

    அப்புறம்
    கணவர் வந்தார்....... டாஷ் டாஷ்...

    அங்கேயும்
    வழக்கம் போல படங்களை கிளிக்கி பார்க்கவும்...ன்னு... சொல்றீங்க... குறும்புதானே... :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner