பதிவுலகில் பெற்றது (பாகம் /3) நிறைவுபகுதி...மலரும நினைவு புகைபடங்களுடன்..


பதிவுலகில் பெற்றவைகள்...

பதிவுலகில் கற்றது இரண்டு பாகமாக எழுத ஆரம்பித்து அதற்கு நீங்கள் கொடுத்த ஆதரவும்.. நெகிழ்ச்சியான கடிதங்களுக்கு என் நன்றிகள்...4கடிதங்கள் திட்டி வந்தது அவர்களுக்கும் என் நன்றிகள்...

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் நான் பதிவுலகில் கற்றதை விட பெற்றதே அதிகம்...

நான் எல்லோரிடமும் நான் பேசும் ரகம் அல்ல... சினிமாவில் கூட எல்லோருடைய நம்பரையும் வாங்கி வைத்துக்கொள்வார்கள்...நான் அப்படி அல்ல...பூனைக்கு பிடித்து இருந்தால் மட்டுமே அது மற்றவரிடம் நட்பு பாராட்டுமாம் அது போலவே என் கேரக்டர்....ஊரிலும் சென்னையிலும் நண்பர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம்...

ஆனால் பதிவுலகம் வந்த பிறகு உலகம் முழுவதும் நண்பர்கள் வட்டத்தை கொடுத்தது இந்த பதிவுலகம்தான்...உலகம் முழுவதும் என்னை வாசிக்கின்றார்கள் என்பது என் மனைவி வெளிநாடு போனபோது என்க்கு தெரிந்தது... அப்போது எழுதிய பதிவுக்கு வந்த ஆறுதல்கள் இருக்கின்றது பாருங்கள்...அவர்கள் வீட்டில் நடந்த நிகழ்வை போல எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தார்கள்.... அந்த பதிவுக்கு....கிளிக்கவும்


நெகிழ்ந்து போய் இருந்தேன்... இந்தியாவென்றால் எந்த உதவியும் கோரலாம்.. ஆனால் அயர்லாந்து என்பது சாத்தியமில்லை.... எல்லாவற்றையும் கம்பெனி பார்த்துகொள்ளும் ஆனால் ஒரு தமிழ் தெரிந்த நம்ம ஊர்காரர் இருந்தால் இன்னும் கொஞ்சம் தைரியத்தை கொடுக்குமே என்பதால்
//அயர்லாந்தில் தமிழ் பதிவர்கள் யாராவது இருக்கின்றீர்களா? அப்படி இருந்தால் எனக்கு தெரியபடுத்துங்கள்...அல்லது அயர்லாந்து டூப்ளின் நகரத்துக்கு பக்கத்தில் இருந்தாலும் ஓகே....கடல் கடந்து எதாவது உதவி என்றால் நாம் எப்படி செய்ய முடியும்...விருப்பம் இருப்பின் சொல்லுங்கள்... அல்லது சென்னையில் இருந்து அயர்லாந்து சென்றாலும் சொல்லுங்கள்.....//

என்று எழுதி போஸ்ட் போட்டு இரண்டு நாளில் பதில் கலப்பாக்கத்தில் இருந்து இப்போது அயர்லாந்தில் வசிக்கும் மேஷக் என்பவர் எனது பதிவை தொடர்ந்து வாசிப்பவர்...அவர் எந்த உதவியும் தயங்காமல் கேட்கவும் என்று சொன்ன பதிவுக்கு கிளிக்கவும்... அந்த நேரத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....கடவுளுக்கு நன்றி..பதிவுலகத்தின் பயனை அன்றுதான் அடைந்தேன்... நண்பர் மேஷக்... என் மனைவி மற்றும் அவர் நண்பர்களுக்கு எல்லா உதவியும் அயர்லாந்தில் செய்தார்....வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு அது... அதன்பிறகு சென்னையில் நான் வாடகைக்கு இருந்த வீட்டை இடித்து விட்டு அடுக்குமாடிகுடியிருப்பு கட்ட போவதாக சொல்ல... அந்த நேரத்தில் பொருள் உதவி செய்தது இந்த பதிவுலகம்தான்....அந்த நெகிழ்ச்சியை வாசிக்க கிளிக்கவும் என் பரம்பரையில் சொந்த வீட்டில் வாஷ்பேஷனில் கை கழுவி ஷவரில் குளித்த முதல் ஆள்நான்தான்... அதை சாத்தியமாக்கியது பதிவுலகம்....நான் வீடு வாங்க உதவி செய்தவர்களில் பதிவுலக நண்பர்களும் இருக்கின்றார்கள்... இதே சென்னையில் ஒரு காலத்தில் விலாசமற்று இருந்தவர்களில் நானும் ஒருவன்....விலாசம் கொடுத்தது இந்த பதிவுலகம்தான்...கிரஹபிரவேசத்தின் போது உரிமையாய் போன் செய்து உதவிய ராஜ் எனும் நண்பனை கொடுத்ததும் இந்த பதிவுலகம்தான்....

பதிவர் மணிஜிக்கு பத்திரிக்கை வைத்து விட்டு சைதாபேட்டை பேருந்து நிலயத்தில் ஒரு தம்மை பத்தவைத்துகொண்டு ரொம்ப சிரியசாக ஒரு தம் இழுத்து விட்டு ஜாக்கி நான் வீடு வாங்கும் போது இது போல பதிவுலகம் என்று ஒன்று இருந்து இருந்தால் கொஞ்சம் பெரிசா விடு வாங்கி இருப்பேன் என்று கமெடியாக சொன்னார்....
சென்னையில் எதாவது ஒரு விழா நடக்கின்றது...அதில் கலந்து கொள்ளும் போது பதவிர் அல்லாத முக பரிட்சயம் இல்லாத நபர் நீங்க ஜாக்கிதானே என்று அடையாள படுத்திக்கொண்டு.. கைகுலுக்கி மிகிழ்ச்சியாக பேசும் போது வரும் சந்தோஷம்... கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது....


ஹேலோ ஜாக்கிசாரருங்களா? புதுக்கோட்டையில் இருந்து குமார் பேசறேன்... என் தங்கை இன்டர்வியூவுக்கு வந்து இருக்கா... சென்னைக்கு அவ புதுசு... உங்க நம்பர் கொடுத்து இருக்கேன்.. எதாவது பஸ் ரூட் தெரியலைன்னா சொல்லிக்கொடுங்க சார்.. நிச்சயமா...

ஹலோ ஜாக்கி அண்ணாங்களா... சொல்லும்மா...வடபழனியில இருக்கேன்...தேனாம்பேட்டை போவனும்.. எந்த பஸ் பிடிக்கனும்...12பி பஸ் பிடிச்சிக்கோம்மா...சப்போஸ் எதாவது ஆட்டோ பிடிச்சி போனா எனக்கு அந்த ஆட்டோ நம்பரை எஸ்எம் எஸ் அனுப்பு என்று சொல்ல...அது போலவே அந்த பெண்ணும் செய்தது..... இது போலான சின்ன உதவிகள்தான் நான் செய்து இருக்கின்றேன்... பின்னுட்டத்தில் வந்த கடிதங்கள் போல பர்சனலாக நிறைய வருகின்றது... அதனை சாண்ட்வெஜ் பகுதியில் போட்ட போது.. ஒரு பிபரபல எழுத்தாளர்.. அவரே பாராட்டுக்கடிதம் எழுதி வலையேற்றுவார் என்று பலருக்கு தெரியும்... அது போல இதை நினைத்துக்கொள்ள போகின்றார்கள் என்று சொன்னார்...அவர் எப்படி இருந்தால் என்ன---??அப்படி ஒரு நாளும் நான் எழுத போவதில்லை... என்னோடு பகிர்பவர்களுக்கு பதிவில் போடுவது ஒரு அங்கீகாரம் அது அவ்வளவே...... மும்பையில் என் நண்பி வேலை இல்லாமல் தவித்துகொண்டு இருந்த போது மும்பை வாசக நண்பர் திபக்கிடம் சொல்ல இரண்டு நாளில் வேலை வாங்கி கொடுத்தார்....ஒரு பெண் மும்பையில் அவள் சொந்தகாலில் நிக்க உதவியது இந்த பதிவுலகம்தான்... முகம் பார்க்காத பல சொந்தங்கள் என்னை ஒரு குடும்ப உறுப்பினாராக பாவிப்பதும் இந்த பதிவுலகம்தான்... ஜாக்கிசார், ஜாக்கி அண்ணே,யோவாய்ஸ் போன்ற இலங்கை நண்பர்கள் “தல” என்றே விளிக்கின்றனர்..வந்தியதேவன் எப்போதும் அண்ணாச்சி என்றே அழைப்பார்...

வரி எழுத வேண்டும் என்று இதை எழுதவில்லை எனக்காக என் பதிவு படித்து பிடித்து இருந்தால் உங்கள் நேரத்தை ஒதுக்கி எனக்கு தமிளிஷ் தமிழ்மணத்தில் ஓட்டு போடுகின்றீர்கள் பார் அதற்கு என் கோடி வந்தனங்கள்..

ஒன்னும் இல்லை போன பதிவில் போட்டோஷாப் எனக்கு தெரியாது என்று சொல்ல அதை சொல்லிதரவும் வழிகாட்டவும் எத்தனை பேர்.. அந்த பரிதவிப்பும் அந்த அன்பும் கிடைக்க நான் என்ன செய்தேன்... நேரம் ஒதுக்கி பதிவு எழுதுவதை தவிர...

ஷுட்டிங் முடிய மணி இரவு பத்தாகியிருக்கும்.. வந்து அடித்து போட்டது போல் ஒரு வலி காலில் இருக்கும் இருந்தும்.. ஒரு பதிவை எழுதி இரவு 12 மணி க்கு போஸ்ட் செய்து விடியலில் 5 மணிக்கு எழுந்து ஷுட்டிங்க்கு போய் இருக்கின்றேன்...

ஆரம்பத்தில் தடவி தடவி அடித்த போது பிழையோடுதான் தமிழ் எழுதுதினேன்... இப்போது கூடுமானவரை திருத்தி போஸ்ட் போடுகின்றேன்... எனக்கு தெரியும்... நன்றாக சுவைத்து கடடில சாப்பிடும் போது ஒரு சொத்தைக்கடலை கடித்தால் எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது...நேரமின்மை காரணமாக ஷுட்டிங்கின் போது எந்த திருத்தமும் இல்லாத அப்படியே வலையேற்றிவிட்டு போய் இருக்கின்றேன்... அதை பொறுத்து படிக்கும் உங்கள் பொறுமைக்கு என் நன்றிகள்..

கம்யூட்டரில் எதாவது பிரச்சனை என்றால் அதற்கு பயபட்ட காலங்கள் என்று ஒன்று உண்டு...ஆனால் பதிவுலகம் வந்த பிறகு அப்படி ஒரு கவலை எனக்கு வந்தது இல்லை... நண்பர் வடிவேலன் எந்த நேரத்தில் போன் செய்தாலும் பொறுமையாக நேரில் வந்து செய்து கொடுத்து விட்டு செல்லும் நபர்... அதே போல் இருதயராஜ்ம் அப்படியே.......இதுவும் பதிவுலகத்தால்தான் கிடைத்துதான்...

ஒரு படத்துக்கு போக வேண்டும் என்றால் முன்பெல்லாம் தனியாக பார்த்து இருக்கின்றேன்... இப்போது யாராவது பிரியாக இருந்தால் வரச்சொல்லுகின்றார்கள்...

விஜய் ஆம்ஸ்ட்ராங் போன்ற ஒளிப்பதிவாளர்கள்.. நட்பு கிடைத்தது எல்லாம் இந்த வலையுலகத்தால்தான்.... இப்போதும் அவர் சொல்லுவார் ஜாக்கி உங்கள் ரீச் பவர் அதிகம்... இன்னமும் என்னை நிறையபேர் அடையாளபடுத்திக்கொள்கின்றார்கள் என்று....

சின்ன உதவியாக இருந்தாலும் பெரிய உதவியாக இருந்தாலும்....உதவி செய்ததை ஒரு காலும் நான் மறக்கமாட்டேன்....அதனால்தான் எல்லா இடத்திலும் இதனை குறிப்பிட்டு வருகின்றேன்...

சென்னையில் இருப்பதால் மட்டுமே வேலை பளுவுக்கு மத்தியில் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகைபடம் எடுத்து இருக்கின்றேன்..இது சென்னையில் இருப்பதால்... மற்ற ஊப் பதிவர்கள் மேலும் எனக்கு அன்பு அதிகமே... என்பதை நினைவில் கொள்ளவேண்டும்...

5விரலும் ஒன்றாக இருப்பதில்லை எல்லாம் இணைந்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியம்...இங்கு வெளியிட்ட புகைபடங்கள் எல்லாம் இரண்டு வருடங்களில் சென்னையில் நடைபெற்ற நிகழுவுகளில் எடுக்கபட்ட புகைபடங்கள்.. இன்று எதிரும் புதிருமாய் இருக்கும் நண்பர்கள் கூட எல்லோரும் ஒன்றாய் இருந்த காலங்கள் அது...அன்று காட்டிய அன்பும் நேசமும்.. நிஜம்... நடுவில் நிறைய மாற்றங்கள்...கருத்து மோதல்கள்... இருப்பினும் ஒரு நாள் அந்த கோபங்கள் கடந்து போகலாம்...அப்படி திரும்ப ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே என் ஆசை...

மேலுள்ள படங்களில் உள்ள பல படங்களில் உள்ள பதிவர்களின் பாதி பேரின் பேர் எனக்கு தெரியாது....அதனால் பெயர் போட முடியவில்லை மன்னிக்கவும்..

புகைபடங்களை சேகரிப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது...இன்னும் பலது விடுபட்டுவிட்டன.. நேரமின்மையேகாரணம்....

பிளாக் எழுதி என்ன கிழித்து விட்டேன் என்று நான் எப்போதும் சொல்லபோவதில்லை...நான் அடக்கத்துடன் சொல்லிக்கொள்கின்றேன்..ஏதோ கொஞ்சம் கிழித்து இருப்பதாகவே மனதுக்கு படுகின்றது...

படங்களை கிளிக்கி பார்க்கவும்....

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்39 comments:

 1. ரொம்ப சந்தோசமா இருக்கு தல படிக்கும் போது கண்ணீர் வரவழைத்து விட்டது என்னையும் மனதில் வைத்து ஒரு இடம் குடுத்தீர்கள் மிக்க நன்றி தல நீங்க தூரமா போனதால் வீட்டிற்கு வரமுடியவில்லை இல்லைனா அடிக்கடி வந்திருப்பேன் தல ஒரு விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் இருப்பேன் தல நன்றி

  ReplyDelete
 2. இந்த பதிவுலகத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் அவர்களை பட்டியல் போட்டு ஒரு பதிவு அவர்களுக்காக கட்டாயம் போடனும் விரைவில் போடறேன்

  ReplyDelete
 3. நெகிழ்ச்சியான பகிர்வு ஜாக்கி!
  :)

  //அன்று காட்டிய அன்பும் நேசமும்.. நிஜம்... நடுவில் நிறைய மாற்றங்கள்...கருத்து மோதல்கள்... இருப்பினும் ஒரு நாள் அந்த கோபங்கள் கடந்து போகலாம்...அப்படி திரும்ப ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே என் ஆசை...
  //

  நல்லதே நடக்கட்டும்.

  ReplyDelete
 4. உங்கள் மனதில் இருக்கும் நெகிழ்ச்சி அப்படியே எழுத்தில் வந்திருக்கிறது. பெங்களூர்ப்பக்கம் வந்தால் என்னையும் ஒரு நடை பார்த்துச் செல்லுங்களேன்.

  ReplyDelete
 5. என்னுடைய முதல் பின்னோட்டம் ,

  முதல் படம் எங்க மேனேஜர் பார்த்த மாதிரி இருக்குதுங்க !!! பாஸ் உள்ள தான் ப்ளாக் படிக்குது .....,:))

  உங்களது நட்பு பிரமிக்கவைகிறது ,நெகிழ்ச்சியாகவும் உள்ளது

  ReplyDelete
 6. :)))

  நல்ல தொடர் ஜாக்கி... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. நன்றி மறவாத குணம் எப்பவும் இருக்கணும் ஜாக்கி. அது உங்களிடம் நிறையவே இருக்கு. ரொம்ப மகிழ்ச்சி.

  நல்லா இருங்க.


  //ஏதோ கொஞ்சம் கிழத்து இருப்பதாகவே மனதுக்கு படுகின்றது...//

  கொஞ்சம் கிழித்து இருப்பதாகவே

  டீச்சர்:-)

  ReplyDelete
 8. வணக்கம்,ஜாக்கி வெற்றி பெற்றவன் பின்னோக்கி பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கும்.வெற்றிக்கு உதவியவர்களை நினைக்கும் போது நெஞ்சம் விம்மும். ஆனால்,எல்லோர்க்கும் அதை வெளிப்படுத்த தெரியாது .அதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இதில் கூட உங்களில் என்னை காண்கிறேன்.பின்னூட்டம் அரிதாகத்தான் எழுத முடிகிறது.நன்றி

  ReplyDelete
 9. நல்ல தொடர் ஜாக்கி... வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. நல்ல கட்டுரை ஜாக்கி, நெகிழ்ச்சியான நினைவு கூறல். மேலும் வளர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. அருமையான பதிவு ஜாக்கி அண்ணே, உங்களைத் தொடர்ந்து வாசித்துவருபவர்களில் நானும் ஒருவன். ஆனால் பெரிதாகப் பின்னூட்டம் இடுவதில்லை. நானும் உணர்ந்துகொண்டிருப்பதுதான், பதிவுலக நட்புகள் கொஞ்சம் வித்தியாசமானவை.

  ReplyDelete
 12. ஒங்க சினிமா விமர்சனங்களுக்கு நான் பெரிய ரசிகன் ஜாக்கி. இன்னும் நிரைய எழுதுங்க.

  ReplyDelete
 13. இந்தப் பதிவு, வரலாற்றில் பொறித்துக்கொள்ள வேண்டிய இடுகை. பதிவுலக நண்பர்களே, காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள், இந்த இடுகையை உங்கள் பதிவில் வைத்துக்கொள்ளுங்கள். யாராவது எழுதி என்னத்த **ங்குன அப்படின்னு கேட்டா இதைப் படிக்கச் சொல்லுங்க.Hats Off Jackie!

  ReplyDelete
 14. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் பிரதர்

  ReplyDelete
 15. உங்கள் நண்பர்களின் நானும் ஒருவன் என்று சந்தோஷம் கொள்கிறேன்.

  ReplyDelete
 16. நம்ம படமும் இருக்கு !

  நன்றி !

  ReplyDelete
 17. Fantastic. Could see so many blogger friends. Felt very happy.

  ReplyDelete
 18. நெகிழ்ச்சியான பகிர்வு

  ReplyDelete
 19. ஜாக்கி : நினைவலைகளை அழகாக பதிவில்(படத்தில்) பதிவு செய்திருக்கிறீர்கள்...

  ReplyDelete
 20. ஜாக்கி அண்ணா,

  உங்க ப்ளாக நான் ரெம்ப நாளா படிச்சுட்டு வரேன்,ஆனா இதுவரைக்கும் அதிகமா பின்னூட்டம் போட்டது இல்ல.உங்க ப்ளாக தினம் ஒரு தடவையாவது ஓபன் பன்னாம இருந்ததே இல்ல.நானும் உங்கள மாதிரிதான் வாழ்க்கையில ரெம்ப கஷ்டப்பட்டு நெறைய கோவப்பட்டு ஏதோ கடவுள் புண்ணியத்துல ஓரளவுக்கு முன்னேறி இப்போ கொஞ்சம் நிதானமா இருக்கிறவன்.வாழ்த்துக்கள் உங்களோட 500 வது பதிவுக்கு.மேலும் மேலும் உங்களோட எழுத்து திறமை வளரவும் ,சினிமாவில் முன்ன்னேரவும் விரும்புகிறேன்.

  ReplyDelete
 21. ஒரு Oscar Speech மாதிரி எழுதியிருக்கீங்க அண்ணே... நெகிழ்ச்சியான பதிவு... தொடர்ந்து நிறைய எழுதுங்க...

  ReplyDelete
 22. அண்ணே,கமெண்ட் போட முடியுமான்னு ஆய்டிச்சி,
  திட்டி வரும் கடிதங்கள் ஒரு திருஷ்டி போல,எங்களையெல்லாம் மதிச்சு நீங்க குறிப்பிடும் பாங்கு இருக்கே,அடடா.

  அதாவது ஒன்று கவனிச்சீங்களா?
  3000 பேர் படிப்பர்
  100 பேர் பின்னூட்டுவர்.
  அதில் 4 பேர் திட்டினால் ,அதை புறம் தள்ளுங்கள்.

  1000 ஆவது இடுகைக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள் அண்ணே.

  ReplyDelete
 23. அண்ணே,கமெண்ட் போட முடியுமான்னு ஆய்டிச்சி,
  திட்டி வரும் கடிதங்கள் ஒரு திருஷ்டி போல,எங்களையெல்லாம் மதிச்சு நீங்க குறிப்பிடும் பாங்கு இருக்கே,அடடா.

  அதாவது ஒன்று கவனிச்சீங்களா?
  3000 பேர் படிப்பர்
  100 பேர் பின்னூட்டுவர்.
  அதில் 4 பேர் வ.எரிச்சலில் திட்டினால் ,அதை புறம் தள்ளுங்கள்.

  1000 ஆவது இடுகைக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள் அண்ணே.

  ReplyDelete
 24. A Criticizing comment for a change:

  You Too Jackie?? பதிவுலகில் பெற்றதில் முக்கியமானதைப் பத்தி முதல் பகுதியிலேயே லீட் எடுத்துக் கொடுத்தும், அதைப் பற்றி எழுதாமல் விடுவாயென நினைக்கவில்லை.

  ஏன் பயமா இல்லை - நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லணும்னு நெனச்சியா???

  காரணம் எதுவாயினும் இந்த இடுகையை நான் நிராகரிக்கிறேன்

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 25. ரொம்ப அருமையான தொடர் ஜாக்கி! என் அன்புகள் உங்களுக்கு!!!

  ReplyDelete
 26. நெகிழ்வான பகிர்வு! வாழ்த்துகள்!

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

  ReplyDelete
 27. நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி.

  ReplyDelete
 28. கல கலவென்று ஜாலியாக இருந்த நாட்கள்.. பார்க்கவே சந்தோஷமா இருக்குங்க.

  ரொம்ப நெகிழ்வான பகிர்வு ஜாக்கி. :)

  அன்புடன்,
  விதூஷ்.

  ReplyDelete
 29. //டீச்சர்:-)///


  :))) மேடம்...!!!!!! :))

  ReplyDelete
 30. //சின்ன உதவியாக இருந்தாலும் பெரிய உதவியாக இருந்தாலும்....உதவி செய்ததை ஒரு காலும் நான் மறக்கமாட்டேன்.... //

  நான் உயிர் வாழ்ற‌தே நன்றியுணர்வால்தான்னு நம்புறவன்!

  ReplyDelete
 31. அருமை ஜாக்கி,

  இந்த நன்றி கூறும் பழக்கத்தை, சக மனிதர்களை பாராட்டும் பழக்கங்களை கூட பதிவுலகம் தானே நமக்கு முழுமையாக கற்று கொடுத்தது.

  ReplyDelete
 32. 500க்கு வாழ்த்துகள் ஜாக்கி. 1000 அடிக்கவும் வாழ்த்துகள் :)

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் அண்ணே நல்ல அனுபவங்கள் மற்றும் நல்ல படங்கள்

  ReplyDelete
 34. /
  இது சென்னையில் இருப்பதால்... மற்ற ஊப் பதிவர்கள் மேலும் எனக்கு அன்பு அதிகமே... என்பதை நினைவில் கொள்ளவேண்டும்...
  /

  எங்க விட்டுபோச்சோன்னு நினைச்சேன்!

  ரொம்ப சந்தோசமா இருக்கு.

  ReplyDelete
 35. ..இரண்டு நாளில் வேலை வாங்கி கொடுத்தார்.
  நல்ல மனம் வாழ்க

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner