Turkish Delight -1973(18+ உலகசினிமா/நெதர்லாந்து)ஒரு ஓவியனின் காதல்...

எச்சரிக்கை

பொது இடத்தில் இந்த படத்தின் பக்கத்தை படிக்கும் போது மட்டும் கவனம் கொள்ளவும்..


நிரம்ப கலையில் லயித்து இருக்கும் நபருக்கு எப்போதும் ஒரு பெண்ணோடு வாழ்வதில் அவர்கள் திருப்தி அடைவதில்லை... நானும் நிறைய பார்த்து விட்டேன்...தமிழ் திரை உலகில் இந்த சமாச்சாரத்துக்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டு போகலாம்... அவர்கள் தேடல்கள் எல்லையில்லாதது...

ஒரு கலைஞன் முழு திருப்தி ஒரு பெண்ணிடம் மட்டும் அடையாமல் இருக்கின்றான்... அவன் கலையை பற்றிய தேடல் போலவே.. பெண் பற்றிய தேடல்களும் அதிகமாக இருக்கின்றன..

சிலருக்கு பெண் வாசனை வாழ்வில் கடைசி வரை கிடைக்கவே கிடைக்காது...அது அவர்கள் வாங்கி வந்த வரம் அப்படி...இப்போதும் சிலருக்கு 35 வயது வரை பெண் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.. அவர்களில் பலரை செக் செய்தால் பெண் அருகாமை கிடைக்காத நபராகவே இருப்பார்கள்..... இதற்கு அதீத பயமும் காரணம்.....


ஆனால் சிலர் இந்த விஷயத்தில் படு கெட்டி... அவர்கள் ஒரு நாளுக்கு பல பெண்ணோடு படுத்து எழுந்து இருப்பார்கள்.... அதே போல் அவர்களுக்கு எப்படிதான் அது போல் மாட்டுகின்றது என்று ஆச்சர்யமாக இருக்கும்...
பொறாமையாகவும் இருக்கும்....

எந்த வித குற்றஉணர்வும் அவர்களிடத்தில் இருப்பது இல்லை... அப்படி ஒரு ஓவியனில் வாழ்வில் பல பெண்கள் வந்து போகின்றார்கள்... அதில் ஒரு பெண்ணோடு மட்டும் வெறித்னமான காதல்... அந்த காதலை பற்றிய கதைதான் இந்த படம்...... டர்கிஷ் டிலைட் என்பது ஒரு உணவுவகை... அது எப்போது படத்தில் வருகின்து என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...


Turkish Delight -1973(18+ உலகசினிமா/நெதர்லாந்து) படத்தின் கதை என்ன???

எரிக்(Rutger Hauer) ஒரு சிற்ப கலைஞன்.. எந்த பெண்ணையும் பார்த்த மாத்திரத்தில் படுக்கையில் சாய்க்கும் ஆண்களால் பொறாமை கொள்ள செய்யும் ஒரு கதாபாத்திரம்.....ஓல்கா (Monique van de Ven) என்ற பெண்ணோடு எதிர்பாராமல் காரில் லிப்ட் கொடுக்கும் போது எரிக்குக்கு பழக்கம் ஏற்படுகின்றது.. அது காதலாய் மலர்கின்றது... காதலுக்கு ஓல்காவின் அம்மா எதிர்க்கின்றாள்... ஆனால் ஒல்காவின் அப்பா பச்சை கொடி காட்டுகின்றார்... திருமணம் நடக்கின்றது... சந்தோஷமாக வாழ்க்கை போகின்றது....

ஆனால் அவர்களுக்குள் விவாகரத்தும் நடக்கின்றது... சந்தோஷமான வாழ்க்கையில் விவாகரத்து வர காரணம் என்ன? என்பதை அடிக்கடி உடை களைந்து கொள்ளும் இந்த படத்தினை தரவிறக்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படம் எல்லாவற்றிலும் பிரேக் த ரூல்ஸ்

இரண்டு ஜாம்பவான்கள் 1973களில் ஆரம்ப காலத்தில் பணி புரிந்து போது எடுத்த படம்...

ஜாம்பவான்ஒன்று.....

Paul Verhoeven இவர் படைப்புகள்....டோட்டல் ரீகல், பேசிக் இன்சிடன்ட்,ரோபோ கப், ஸ்டார்ஷிப் டூருப்பர்ஸ்,ஹலோவ்மேன் போன்ற பிகழ் பெற்ற படங்களை சொல்லலாம்....


இரண்டாவது ஜாம்பவான்..

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் Jan de Bont இவர் யார் தெரியுமா? உலகை புரட்டி போட்ட ஸ்பீட், டுவிஸ்டர், போன்ற படங்களை இயக்கியவர்...இவர்கள் இரண்டு பேருக்கும் இது ஆரம்பகால படங்கள்....

இந்த படம் வந்த போது 33 லட்சம் நெதர்லாண்ட் மக்கள் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தார்கள்... அதாவது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம் பேர் இத்திரைபடத்தை ரிலிசான் போது ரசித்தனர்.... அப்படி என்றால் படத்தின் பெருமையயை பார்த்துக்கொள்ளுங்கள்...

சின்ன பட்ஜெட் பெரிய வருமானம்....

எரிக் மற்றும் ஓலீயாக நடித்த இருவரின் அந்தரங்கமும் பார்வையானுக்கு அத்து படி என்பது போலான படப்பதிவு...



எரிக் கதாபாத்திரம் அந்த கால ஹிப்பி வாழ்க்கை முறையை ஒத்து இருக்கின்றது... முதல் காட்சியில் எரிக்கின் ரூம் கலைந்து கிடக்கும் அழகே அழகு.... அதை சுத்தபடுத்துவது அதனிலும் அழகு....

இந்த படம் ஒரு திரைக்கதைக்காக பெரிதாக அலட்டிக்கொள்வது போல் தெரியவில்லை...

பிரிந்து போன காதலியை வித விதமாக கொலை செய்வது போல் நினைத்து பார்க்கும் காதலன் எரிக் ... காதலியின் அரைநிர்வாணபடத்தை பார்த்தும் கைமைதுனம் செய்வதும்... அதன் பிறகு பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கைக்கு அழைப்பதும்.... என கவர்ச்சி ரகம்...

அதே போல் ஒரு தாயோடு புணரும் போது குழந்தை அழ அந்த குழந்தையை எப்படி சமாதனபடுத்துகின்றார்கள் என்பதை படம் பாத்து ரசிப்பது சால சிறந்தது...

இந்த கதாநாயகனின் பாத்திர படைப்பு தமிழில் வந்த பல பல படங்களில் இந்த சாயல் இருப்பதை உணரலாம்....

காரில் லிப் கொடுக்கும் பெண்ணோடு உறவு அப்போது ஜிப் போடும் போது லல்லு மாட்டிக்கொள்வதை முக உணர்ச்சியில் பலர் காட்சி படுத்தி இருப்பார்கள்.. ஆனால் இதில் அதுக்கும் ஒரு ஷாட் வைத்து இருப்பார்கள்...

பொதுவாக பல திரை படங்களில் பெண் அந்தரங்க உறுப்பு போல் ஆணின் அந்தரங்கம் கடை பரப்பபட்டதில்லை ஆனால் அந்த ரூல்சையும் இந்த படம் உடைத்து இருக்கும்....

எரிக் மாமனாரிடம் பேசும் போது.. அவர் மூக்கை நோண்டி அந்த சமாச்சாரத்தை எங்கு வைப்பது என்று தெரியாமல் நற்காலிக்கு கீழே ஒட்டுவது வரை டீடெய்ல்....ஆக காட்சிபடுத்தி இருப்பார்கள்....

படுக்கையில் கை சப்பி தூங்கும் நிர்வாண கதாநாயகி.. முதல் முறை ஆனாலும் எரிக் அந்த அழகை ரசிப்பது போலவும் வேறு ஏதும் செய்யவில்லை என்பதை இரண்டு ஷாட்டு களில் சொல்லி இருப்பார்கள்...

டாய்லட்டில் இருந்து மனைவி ஒடி வந்து... மலம் இருக்கையில் ரத்தம் வருவதை சொல்லி தனக்கு கேன்சர் இருப்பதாக பயப்படும் போது, உடனே பதட்டத்தோடு உள்ளே செல்லும் எரிக் டாய்லட்டில் இருக்கும் மலக்கட்டியை எடுத்து அதை சோதித்து விட்டு பிளஷ் செய்வதை அப்படியே காண்பிக்கும் போது இந்த படம் வேறு வகை என்பது புரியும்....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.....

எரிக்கிடம் ஒரு பழக்கம் எந்த பெண்ணுடன் உறவு வைத்தாலும் எதாவது ஒன்றை ஞாபகமாக வைத்துக்கொள்வான் அது எது வேண்டுமானாலும் இருக்கலாம்... என்ன டேஸ்ட்???

ஒரு மார்பு சரிந்த பெண் உடை கலையும் போது அதனை பாத்ததும் எரிக் முகத்தை சலிப்புடன் மாற்றிவிட்டு,மெல் உடைகளைப்பை தடுத்து விட்டு, அதன் பிறகு பெண் உறுப்பில் இ ருக்கும் அதீத முடியை கத்திரிக்கோலால் கட் செய்து அதனை மீசை இல்லாத அவன் முகத்தில வைத்துக்கொண்டு சின்ன பையன் போல் விளையாடிவிட்டு, அந்த முடியை ஒரு ஆல்பத்தில் பேஸ்ட் போட்டு ஒட்டி அதன் பக்கத்தில் அந்த பெண்ணின் பெயர் எழுதும் போதும் அதன் பக்கத்தில் 50 வது என்று எண் எழுத பட்டு இருப்பதை பார்க்கும் போது... அந்த கேரக்கடரை விஷுவலாக புரிந்து கொள்ள முடிகின்றது...

சிலை திறக்கும் இடத்தில் எரிக்கும் ஓலாயும் செய்யும் கூத்து கொடுமை ரகம்..

இந்த படத்தின் நாயகிMonique van de Ven வை இந்த படத்தின் ஒளிபதிவு டைரக்டர் ஜான் டி போன்ட் திருமணம் செய்து கொண்டு 1973ல் இருந்து 1988 வரை வாழ்ந்து அதன்பிறகு இருவரும்விவாகரத்து பெற்றார்கள்....



இந்த படத்தின் பின்னனி இசை அந்த கால இளைஞர்களின் பேவரிட்...

1973 ல் நெதர்லாந்து நாட்டையும்,அம்ஸ்டர்டாம் போன்ற நகரங்களின் தன்னிறைவையும் பார்க்கும் போது.....அந்த நேரதிதில் நமது நாட்டை நினைக்கும் போது வயிறு எரிகின்றது.... பேசாமல் வெள்ளைக்காரனே ஆண்டு தொலைத்து இருக்கலாம்.....

படத்தின் ஒரு காட்சியின் வசனம்....

நாம் இருவரும் உடலுறவு கொள்வோமா? என்று எரிக் கேட்க?
அது என் மதத்துக்கு எதிரானது... எனஅந்த பெண் சொல்ல....
அதற்கு எரிக் உங்கள் ஜீசசைவிட........ என்ற படி வசனங்கள் கவலை கொள்ளாது எழுதி தள்ளி இருப்பார்கள்...

ஆயிரம்தான் இந்த படத்தை பற்றி எதிர் மறையான விமர்சனங்கள் முன் வைத்தாலும் அந்த கடைசி காட்சியில் ஓல்வாக நடித்து இருப்பவர் நெஞ்சை நெகிழவைத்து இருப்பார்.....
அன்றைய கனவு கன்னி மற்றும் இந்த படத்தின் கதாநாயகி... இப்போது டைரக்டரக இருண்டு படம் செய்து இருக்கின்றார்..


இந்த படம் 1973ல் பெஸ்ட் பாரின் படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைக்க பெற்றது என்பது குறிப்பிட தக்கது...

படத்தின் சென்சார் போட்டோக்கள்.... 18+

கிளிக்...1
கிளிக்...2
கிளிக்...3
கிளிக்...4

படத்தின் வயதுவந்தோருக்கான ஒரு காட்சி.....



இந்த டிரைலர் காட்சியின் லைட்டிங் பல திரைபடங்களில் பின்பற்ற பட்டு இருக்கும் இதில் முட்டி போட்டு இருக்கும் எரிக் நிற்கும் ஓல்கா...அப்போது லோ ஆங்கிள் ஷாட்டும்,டாப் ஆங்கில் கம்போசிசனும் அற்புதம்... அவர்களை பொறுத்தவரை போர்னோ எடுத்தாலும் அதுவும் கலை வடிவம்தான்.....அதே உழைப்புதான்...சிலதை இன்னும் உடைத்து நாகரீகம் கருதி எழுத முடியவில்லை


படக்குழுவினர் விபரம்..

Directed by Paul Verhoeven
Produced by Rob Houwer
Written by Jan Wolkers (novel)
Gerard Soeteman
Starring Monique van de Ven
Rutger Hauer
Music by Rogier van Otterloo
Cinematography Jan de Bont
Editing by Jan Bosdriesz
Release date(s) 1973
Running time 112 min.
Country Netherlands
Language Dutch
Budget € 365,000


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

8 comments:

  1. அண்ணாத்த...

    இப்படி பல காவியப் படைப்புக்களை நம் கவனத்திற்கு கொண்டு வரும் உங்களின் பொறுமையும், தீவிர முயற்சியும் மெச்சத்தக்கது.

    DVD எடுத்து வைக்கவும்.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  2. Super Anna. interesting to watch this movie. But how ? thinking.....?!!!

    ReplyDelete
  3. அண்ணே... இது விமர்சனம் இல்லை...கவிதை கவிதை....
    எங்களுக்குகாக எவ்ளோ கஷ்டப்படறீங்க...புல்லலிரிக்குது வாத்யாரே....

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்.. படத்தை அவசியம் பார்க்கத் தூண்டுகிறது...

    ReplyDelete
  5. அண்ணே,
    என்னா படம் இது?,சூப்பரு,இவரின் பிளாக் புக் பாருங்க அண்ணே,செம படம்,1945ன் செட்,நெதர்லாந்தின் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம்.


    அதை விவரித்த விதம் அழகோ அழகு,வோட்டுக்கள் டன்.காமத்தை இவர் படத்தில் காட்டும் விதமே அழகு..

    ReplyDelete
  6. ஏற்கனவே பார்த்த படம்தான்.அதை உங்கள் பார்வையில் சொல்வதை ரசிக்கும்படி சொன்னதுதான் உங்கள் தனித்தன்மை

    ReplyDelete
  7. Sir pls intha badam yepdi pakkurathu? YouTube la parthalun ila. Help me

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner