பதிவுலகில் கற்றதும் பெற்றதும்...(பாகம்/2)

பதிவுலகில் கற்றது....பாகம்/2

முக்கியகுறிப்பு...

இந்த பதிவு முழுக்க முழுக்க சுயசொறிதல்...இந்த பதிவில் பெரிய சுவாரஸ்யம் எல்லாம் இல்லை... முக்கிய வேலை இருப்பின் அதை பார்க்கவும்...ஒரு சில புதிய பதிவு எழுதும் நண்பர்களுக்கு வேண்டுமானால் இது உதவியாய் இருக்கலாம்....மற்றபடி எந்த சுவாரஸ்யமும் இதில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை...


நான் ஒரு பக்கா லோக்கலான ஆள்...ஊரில் கைலியை மடித்து கட்டி எட்டி நடுமாரில் உதைத்து போட்ட சண்டைகள் ஏராளம்....

எழுத்தாளர் பாலகுமாரன்கதைகள் படிக்க ஆரம்பித்த உடன் ஒரு நிதானம் வந்தது... மனதோடு பேச ஆரம்பித்தேன்.... இந்த கோபம் இப்போது தேவையா? என்று எனக்கு நானே கேட்டு விட்டு அந்த கோபத்தை புறம் தள்ள ஆரம்பித்தேன்......நான் ஒரளவுக்கு கோபம் இல்லாமல் இருக்க...பாலகுமாரன் என்ற எழுத்தாளர்தான் காரணம்... அதே போல் அவரின் எல்லா கருத்துக்களும் எனக்கு ஏற்புடையது அல்ல....அவருக்கு நன்றிகள்...அவரைபற்றி நான் எழுதிய பதிவுக்கு இங்கு கிளிக்கவும்...

காலேஜில் வேலைக்கு போனதுக்கு பிறகுதான் என் கோபங்கள் மிகவும் மட்டுபடுத்தபட்டன...மனைவியோடு பைக்கில்போகும் போது ஏற்பட்ட சின்ன இடிப்பு தகராறில் ஓட ஓட விரட்டி உதைத்தது....
மியட் மருத்துவமனை எதிரில் மனைவியோடு பைக்கில் போக ஒரு கார்காரன் இடிப்பது போல் வந்து கட் அடித்த விட்டு போக நான் விழுந்து விடுவது போல் இருக்க... அதன்பின் விரட்டி ரோட்டில் பைக் நிறுத்தி காரை விட்டு டிரைவரை இறங்க வைத்து இழுத்து போட்டு உதைத்து இரண்டு பேரின் சட்டையெல்லாம் கிழிந்து, ரோட்டில் அடித்துக்கொண்டு நந்தம்பாக்கம் போலிஸ் நிலையம் சென்றது எல்லாம் தனிகதை...அந்த டிரைவரிடம் லைசென்ஸ் இல்லாமல் அவன் மாட்டி.. அதி வேகமாக கார் ஓட்டியது என அவன் மீது காவல் துறை வழக்கு பதிந்தது எல்லாம் தனிக்கதை...

நிறைய முன் கோபம் வரும்..... என் மனைவி வந்த பிறகு..... கோபத்தில் மலையேறிய சாமி எல்லாம் மலை இறங்கி கொண்டு இருக்கின்றது...ஒரு நிதானத்தை கொடுத்து இருக்கின்றது...இன்னும் பதிவுலகில் வந்த பிறகு இன்னும் றிறைய நிதானத்தை கொடுத்து இருக்கின்றது.....


என்னதான் நேரில் பேசுவது போல் எப்போதும் இருக்காது நாம் எழுதுகின்ற எழுத்து.. நாம் ஒன்றை சொல்லி இருப்போம்... அது வேறு ஒன்றாக புரிந்து கொள்ளபடும்...ஹவுஸ்கீப்பிங் கிரிஜா என்று ஒரு கதை எழுதி இருந்தேன்... அதில் கிரிஜா கருப்பாக இருந்தாலும் பார்பதற்கு பாந்தமாக இருப்பாள் என்று எழுதி இருந்தேன்...

ஒரு பின்னுட்டத்தில் ஒரு நண்பர்... கருப்புன்னா உங்களுக்கு கேவலமா? என்று எழுதி இருந்தார்... நிறைய மூளை சுடு உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்....அவர்களை புறக்கனிப்பதே நல்லது...பதில் சொல்லி பெரியாளக ஆக்க வேண்டாம்...

நிறைய கடிதங்கள் பாராட்டி வருகின்றன... சில கடிதங்கள் திட்டி வருகின்றன... மென்மையாய் புன்னகையை உதட்டில் வைத்து அதை படித்து விட்டு கடந்து போக முடிகின்றது...ஆனால் நிறைய பேர் என்னோடு வாழ்கின்றார்கள்...என்பது தெரிந்து நான் சந்தோஷத்தில் இருக்கின்றேன்...நம் ரசனையோடு பலர் பொருந்தி போகின்றார்கள் என்பதே சந்தோஷம்தானே...எப்போதுமே என்னை ஒரு யோக்கிய சிகாமணியாக என்னை நிலைநிறுத்திக்கொண்டதே இல்லை...

எல்லா இடத்தலும் நான் கடந்த வந்த பாதையை அவ்வப்போது சொல்லிவவருவத்ற்கு மிக முக்கியகாரணம்.. எந்த இடத்திலும் எனக்கு கொம்பு முளைக்ககூடாது என்பதே...அப்படி எனக்கு முளைத்தாலும் அதை வெட்டி விடுவதில் தீவிரமாக இருக்கின்றேன்


பொதுமக்கள் மற்றும் அரசுக்கு எதிரான கோபத்தை முன்னிறுத்தி எனது பதிவுகள் கோபமாக பதிய பட்டு இருக்கும்... ஆனால் எந்த தனிநபரையும் கூடுமானவரை திட்டியதில்லை... எந்த பதிவரையும் நீ அப்படி எழுதவில்லை இப்படி எழுதவில்லை என்று சொன்னதில்லை...


அதிகமான மொக்கையில் கலந்து கொண்டதில்லை... ஒரு சில விளக்கபதிவுகளை தவிர்த்து பெரிசாய் எதிர்வினை செய்தது இல்லை...அந்த நேரத்துக்கு ஒரு படத்தை பற்றி எழுதி விட்டு போகலாம்...நன்றாக எழுதி இருந்தால் படித்து பார்த்து ஒரு பின்னுட்டம் ஓட்டு அவ்வளவுதான்...

அதே போல் ஒருவரை பிடிக்கவில்லை.. அவரோடு எனக்கு உடன்பாடு இல்லை என்றால் அந்த பக்கமே திரும்பவே மாட்டேன்...புறக்கனிப்பு மட்டுமே அதற்கு சரியான தீர்வு....கம்யூட்டர் திறந்தால் ஒரு உலகம்... திறக்கவில்லை என்றால் வேறு ஒரு உலகம்... பிளாக் எழுதினாலும் எழுதாவிட்டாலும் என் வீட்டில் உலை கொதிக்கும்... இது ஒரு பகுதி நேர பகிர்தல்...


ஒரு ஆங்கில படத்தை பற்றி எழுதும் போது அதில் அந்த நடிகையின் நனைந்த உடையில் அரைநிர்வானம் அப்பட்டமாக தெரிய... அந்த படத்தை போட்டு விட்டேன்...ஒரு பெண்மணியிடம் இருந்து ஒரு போன்...தயவு செய்து அது போலான படத்தை ஹைடு பண்ணி போடுங்க.. ஆபிஸ்ல நாலு அம்பளைங்க இருக்கும் போது கொஞ்சம் சங்கடமாக இருப்பதாக சொல்ல.. அப்போதுதான் அதன் நியாயம் உணர்ந்து அது போலான படங்கள் ஹைடில் போடுகின்றேன்...
அப்போது எல்லாம் பிளாக் என்பது சேவல்பண்ணைதான் என்று தப்பாக நினைத்தகாலம் அது....

அப்புறம் ஏஜேரஜினி என்ற கணனி துறை நண்பரும் அதே கருத்தை சொன்ன போது...அவர் சொன்னார் உங்கள் தளத்தை அறிமுகபடுத்தியதே எங்கள் அலுவலக பெண்மணி ஒருவர் என்றும் உங்கள் சாண்ட்விச் ஜோக்ழுகளின் விசிறி அவர் என்றும் சொன்னார்...அப்போதுதான் நிறைய பெண்கள் என் வலையை படிக்கின்றார்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது....


பதிவுலகம்இது ஒரு நேரவிழுங்கி... உங்கள் நேரத்தை நைசாக பிடிங்கி கொள்ளும்...இந்த உலகத்தின் மிகப்பெரிய போதை என்னவென்றால்... என்ன எழுதி இருந்தாலும்.. போஸ்ட் போட்ட அடுத்த நொடியே உலகத்தின் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பின்னுட்டம் வந்து விடும்....

முதலில் அப்படி வருவதை எதிர்பார்த்து ரசித்தவன்நான்... அதனால் பெரும்பாண்மையான நேரத்தை வலையுலகத்தில் கழித்து இருக்கின்றேன்.... காலையில் ஆன் செய்த கம்ப்யூட்டரை மதியம் 3 மணிக்கு அனைத்து விட்டு 3 மணிக்கு மேல்தான் சாப்பிட்டு இருக்கின்றேன்....

இப்போதெல்லாம் பதிவு போட்டு விட்டு சிஸ்டத்தை அப் செய்து விட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுகின்றேன்... கல்லூரியில் வேலை செய்த போது கிடைத்த நேரங்கள் போல் இப்போது சினிமாவுக்கு போன பிறகு நேரம் கிடைப்பதில்லை...இருந்தும் தொடர்ந்து இந்த உலகில் பயணிக்கின்றேன்...அதனால்தான் பின்னுட்டத்துக்கு உடனுக்கு உடன் பதில் போடுவதில்லை....நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்....

புதிய பதிவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்வேன்....நீங்கள் உங்களுக்கு தோனியதை உண்மையாய் எழுதுங்கள்...இலக்கியதரம் என்பது முக்கியம் அல்ல...ஓட்டு வரவில்லை பின்னுட்டம் வரவில்லை என்று வருத்தம் கொள்ள வேண்டாம்... நீங்கள் உண்மையாக எழுதினால் அதுதானாகவே வரும்....உலகில் நிறைய விஷயம் நடக்கும் எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.. உங்களுக்கு எது பாதித்ததோ அதை எழுதுங்கள்....

ஓட்டு போடுங்கள் என்று கடைசியில் சொல்ல ஒரு காரணம் இருக்கின்றது ஏதோ ஒரு ஞாபகத்தில் அந்த இடத்தை கடக்கலாம்..பிடித்து இருந்தால் போடுங்கள் என்று சொல்ல உரிமை இருக்கின்றது....எல்லாருமே ஒரு சின்ன அங்கீகாரத்துக்காகதான் ஏங்கி கிடக்காங்க இல்லையா?... ஓட்டு என்பது அங்கீகாரம்.... அவ்வளவுதான்...

சிலர் என்னிடம் சிலவிஷயங்களில் கோபபட்டு இனி உங்கள் தளம்பக்கமே வரமாட்டேன் என்று சொன்னார்கள்.. மிக்க மகிழ்ச்சி... எல்லோரையும் எப்போதும் யாராலும் திருப்திபடுத்த முடியாது...நீ அதை எழுத வில்லை.. இதை எழுதவில்லை... அப்படியா? நீங்கள் எழுதுங்கள்...

ஒரு சில விஷயத்துக்கு உங்கள் பார்வை என்ன என்பது போன்றும்... உங்கள் கருத்து என்ன என்பது போன்ற மெயில்கள் தினசரி வருகின்றன... நண்பர்களே அப்படி எல்லாத்துலயும் கருத்து சொல்லும் கந்தசாமி இல்லை நான்...

நீங்கள் ஒரு பதிவுக்கு நிறைய நேரம் செலவிட்டு பதிவு எழுதி இருப்பிங்க.. ஆனா அதற்கு எந்த ரெஸ்பான்சும் இருக்காது...ஆனாகொஞ்சம் அலட்சியமா எழுதி இருப்பிங்க.. ஆனா அதை தூக்கி வச்சி கொண்டாடிடுவாங்க... உங்களுக்கே ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்....

நேற்று தண்டோரா அலுவலகத்தில் ஸ்ரீதர் என்ற மதுரைகார நண்பரை சந்தித்தேன்.. அப்போது அவர் உங்கள் எழுத்துக்கள் உலக படங்கள் பிடிக்கும் என்றும் உங்கள் தளத்தை பதிவர் கார்த்திகை பாண்டியன்... ஜாக்கி நன்றாக எழுதுவார் வாசித்து பாருங்கள் என்று அறிமுகபடுத்தியதாக சொல்ல...எனக்கு ஆச்சர்யம் யார் யாரோ இந்த வலையை யாரிடமோ பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்...

முகம் தெரியாதவர்கள் பின்னுட்டம் போடுவார்கள்..அனானியாய் வந்து கமென்ட் போடுவார்கள்... அனுமதிக்காதீர்கள்...விலாசத்தோடு வரட்டும் கருத்தை சொல்லட்டும்... சிலர் திட்டுவதற்கு என்றே பிளாக் அல்லது மெயில் ஆரம்பித்து திட்டுவார்கள்...இரண்டு பதிவு போட்டு விட்டு வந்து நியாயம் சொல்லுவார்கள்...

இந்த சென்னைக்கு நடந்து வந்தேன்.. அப்புறம் சைக்கிள் வாங்கினேன் அப்புறம் பைக்... அதனால் நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை...


நான் இப்போதெல்லாம் வலையுலகில் அதிக நேரம் எடுத்துக்கொள்வது இல்லை... வந்து படிக்கும் போது பார்க்கும் போது பின்னுட்டம்இட்டு ஓட்டு இடுவதோடு சரி...

ஒரு நல்ல படம் எழுத நிறைய குப்பைபடம் பார்க்கின்றேன்...நிறைய படம் பார்க்கின்றேன்.. அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்... எந்த படத்தையும் ரொம்ப மொசம் என்று சொன்னது இல்லை... (நன்றி முரளி... என் மீதான உங்கள் நேசத்துக்கும்.. பாசத்துக்கும்...பின்னுட்டம் இப்படிகூட போடமுடியயுமா? கிளிக்கி பார்க்கவும்...)

அதை பற்றி எழுதுவதும் இல்லை..பிட்டு படத்தை தவிர எந்த படத்தையும் டவுன் லேர்ட் செய்து பார்த்தது இல்லை...எல்லாம் டிவிடியில்தான்...உலகபடவிழாக்களில் பல படங்கள் பார்க்கின்றேன்...

ஒரு விமர்சனம் படத்தை பார்க்கவேண்டும் என்ற உணர்வை தூண்ட வேண்டும்....முடிவுகளை சொல்வது படத்தினை பார்க்கும் போது அந்த படம் மனதில் ஒட்டாமல் போய்விடும்.....

குறிப்பு...

மேலுள்ள முதல்படம் காலை தூக்கி பைட் பண்ணுவது போலான புகைபடம்.. வடபழனியில் உள்ள ஸ்டுடியோவில் ஒரு பிறந்தநாளின் போது நண்பர் ஒருவர் எடுத்தார்... எதாவது போஸ் கொடு என்று சொன்ன போது காட்டுபயலுக்கு இப்படித்தான் போஸ் கொடுக்க தெரிந்தது... அவர் தலையில் அடித்துக்கொண்டு எடுத்தார்.. அதே படத்தை நண்பர் போட்டோ ஷாப் செய்து கொடுத்தார்...



அடுத்தபதிவு பதிவுலகில் பெற்றவை......

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

28 comments:

  1. யோவ் ....ஜாக்கி ...உம்மிடம் பிடித்ததே இந்த மனம் திறக்கும் புத்தி தானைய்யா ?
    எல்லோரிடமும் இப்படி திறந்து பேச முடியாது. உன்னில் என்னை பார்கிறேன் .
    ஆரம்பத்தில் சற்று 'காட்டான் ' மாதிரி இருந்தது இப்போ சற்று .......இல்லை நிறைய
    ஜாடயிலும் கூட மாறிவிட்டாய். உன் பைக் பக்கம் நிற்கும் அந்த படத்தில் உன் முகம்
    காட்டுகிறது அந்த மாற்றங்களை. வீட்டுக்கார அம்மணியிடம் கேளேன் உண்மையை!!
    ஜாக்கி (முன்னாள்) காட்டான் . (இந்நாள்) ஜென்டில்மென் ! :):)

    ReplyDelete
  2. 500 பதிவா ........??!!!
    வாழ்த்துக்கள் ஜாக்கி !

    ReplyDelete
  3. @ குறிப்பு :
    நான் கூட நீங்க Jackie மாதிரி ஏதோ ஒன்னு Try பண்ணியதோன்னு நெனச்சேன்.

    ReplyDelete
  4. வலையுலகில் பயணிக்கும் பலருக்கும் நீங்கள் எழுதியிருப்பவை நிச்சயம் நடந்திருக்கும். இது ஒரு நேரம் விழுங்கி என்பதில் இரண்டாக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும் சிலவேளைகளில் பதிவுகள் எழுதுவதால் ஏதோ ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கின்றது.

    திரையுலகிற்குப் போனாலும் அடிக்கடி எழுதவும்.

    ReplyDelete
  5. 1X1=1
    1X2=2
    1X3=3
    1X3=4
    1X5=5
    1X6=6
    1X7=7
    1X8=8
    1X9=9
    1X10=10

    DURING PRIMARY SCHOOL DAYS...I LIKE THIS TABLE VERY MUCH...BECAUSE VERY SIMPLE AND UNDERSTANDABLE...

    YOUR WRITING STYLE ALSO LIKE THIS...VERY SIMPLE... STRAIGHT TO THE POINT....AND EFFECTIVE COMMUNICATION.

    BY THE WAY.....I AM ALSO SEEING LOT OF TRANSFORMATION IN YOU...I STARTED TO READ YOUR BLOG WHEN THE NUMBER OF FOLLOWERS WERE 99...I AM YOUR 100TH FOLLOWER. I TRIED TO BE YOUR 500TH FOLLOWER WITH ADDITIONAL MAIL ID...FEW DAYS I AM OUT OF WEB WOLD..SOME ONE TOOK THAT SLOT.

    FROM 100 TO 500 YOU TRANSFORMED LOT IN POSITIVE WAY. SOME TIME I TOO FEEL BAD WHEN YOU USE THE WORD STARTING WITH "O", BECAUSE I AM SHARING YOUR BLOG WITH MY FRIENDS AND RELATIVES...BUT IF I SEE THE SITUATION...THAT IS THE VERY DECENT WORD....IF I WAS THERE IN THAT SITUATION I WILL USE WORST THAT THAT WORD....

    STILL...THIS IS ADVANCED MEDIA...AND THE CONTENT IS GOING TO BE THERE FOR SEVERAL YEARS(THOLINOOKU PAARVAI).....IT WILL BE READ BY YOUNG GENERATION (S)...SO I REQUEST TO AVOID THAT TYPE OF WORDS.

    OTHERWISE....YOU ARE ONE OF THE BEST BLOGGER WITH GREAT CONSISTENCE AND DEDICATION.

    THANKS MANY FOR ENTERTAINING US.

    ReplyDelete
  6. இதுதான் எதார்த்தம்.. வலையுலகம் அப்படிதான் இதுவும் ஒருநாள் போரடிக்கலாம்.. சட்டென வேறிடத்திற்கு தாவிபோக அதுவே மனநிறைவாய் ஆகி அங்கேயே தங்கும்போதும் உங்களிடம் ஏன் பதிவே போடுறதில்லை என கண்டிக்க ஆள் இருக்கும்.. வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  7. //நான் ஒரு பக்கா லோக்கலான ஆள்...ஊரில் கைலியை மடித்து கட்டி எட்டி நடுமாரில் உதைத்து போட்ட சண்டைகள் ஏராளம்//

    அப்போ உள்ளே ஏதாவது போட்டிருந்தியா இல்லயா?? :):)

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  8. ஜாக்கி
    உன் கிட்ட எனக்கு பிடிச்ச விஷயங்களில் முதன்மையானது இவ்வளவு வெளிப்படையா பேசுறதுதான். ஆனா அதுவே சமயத்தில ஆபத்தா முடியலாம் - பாத்துக்கோ

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  9. pathivu elutha ninaithu irunthen but sila thadanalhal. ungal intha pathivuhalai paarthavudan enakkum pathivu elthua thonruhirathu...

    ReplyDelete
  10. I too that its karate kid... morphing. Nice poster:) Your style and expression that attract the most.Best wishes for more success..

    ReplyDelete
  11. //நீங்கள் ஒரு பதிவுக்கு நிறைய நேரம் செலவிட்டு பதிவு எழுதி இருப்பிங்க.. ஆனா அதற்கு எந்த ரெஸ்பான்சும் இருக்காது...ஆனாகொஞ்சம் அலட்சியமா எழுதி இருப்பிங்க.. ஆனா அதை தூக்கி வச்சி கொண்டாடிடுவாங்க... உங்களுக்கே ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்....//

    இட்ஸ் கரெக்ட் ஜாக்கி சார்...

    ReplyDelete
  12. // அதே போல் ஒருவரை பிடிக்கவில்லை.. அவரோடு எனக்கு உடன்பாடு இல்லை என்றால் அந்த பக்கமே திரும்பவே மாட்டேன்...புறக்கனிப்பு மட்டுமே அதற்கு சரியான தீர்வு...//
    இது ரொம்ப நல்ல விஷயம்...

    ஆமா.. ஜாக்கி சான் ரசிகரா இருந்துகிட்டு, காலை அசால்ட்டா உச்சந்தலைக்கு மேல தூக்கவேணாமா... :)

    ReplyDelete
  13. ஒரு முக்கியமான படம் அனேகமாக DVD கிடைக்காது, திரை அரங்கங்களில் இங்கே வெளி வராது, ஆனால் பார்க்க வேண்டிய (பார்த்தே தீர வேண்டிய) படம், என் மெயிலை அழிக்காமல் இருந்தால் அந்த படத்தின் லின்க் இருக்கும் தயவு ச்ய்து பார்த்துவிட்டு படமாக்கியவர்களின் வலியை உனரவும். உங்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் உனர்ந்த்தால் தான் அனுப்பினேன். நன்றி.

    ReplyDelete
  14. அன்புள்ள நண்பர்களுக்கு கிருபள் என்ற நண்பர் இந்த படத்தின் லிக்கை அனுப்பி வைத்து இருக்கின்றார்...

    யாராவது டவுன்லோடி எனக்கு கொடுத்தால் புண்ணியமாக போகும்...அலேக்சான்டரா புராஜக்ட்டை டவின்லோடி கொடுத்த எடிட்டர் தொல்காப்பியன் மற்றும் யாராவது இதை செய்து கொடுத்தால் நன்றி உடையவனாவேன்...



    Dear Sekar,


    Please Down load and see the movie and Write Review about the movie. Mind blowing .




    http://www.megaupload.com/?d=UOXABLU5
    http://www.megaupload.com/?d=3RVLR90T
    http://www.megaupload.com/?d=20K7FADC
    http://www.megaupload.com/?d=QKLCN8VS
    http://www.megaupload.com/?d=CX72TMRQ
    http://www.megaupload.com/?d=U15CWM83
    http://www.megaupload.com/?d=5U5DW10A


    YOurs,

    Krubhakaran.

    ReplyDelete
  15. யோவ் ....ஜாக்கி ...உம்மிடம் பிடித்ததே இந்த மனம் திறக்கும் புத்தி தானைய்யா ?//

    அன்பின் கக்கு மாணிக்கம்... எப்போதும் என்னிடம் மிகுந்த பாசம் வைத்திருக்கும் உனக்கு என் நன்றிக்ள்...

    உன் மெயிலை படிக்கும் போது ஏதோ என்னோடு நெடுநாள் பழகிய நண்பனை படிப்பது போல் இருக்கும்...

    நன்றி நண்பா...

    ReplyDelete
  16. @ குறிப்பு :
    நான் கூட நீங்க Jackie மாதிரி ஏதோ ஒன்னு Try பண்ணியதோன்னு நெனச்சேன்//

    நண்பா அப்படிபண்ணி அசிங்கமானதை தனியாக பதிவிடுகின்றேன்..

    ReplyDelete
  17. திரையுலகிற்குப் போனாலும் அடிக்கடி எழுதவும்.//

    நிச்சயம் வந்தியதேவன்.. இது கண்டிப்பாக எப்போதும் தொடர ஆண்டவன் அருள் நிச்சயம் இருக்கும்..

    நன்றி

    ReplyDelete
  18. YOUR WRITING STYLE ALSO LIKE THIS...VERY SIMPLE... STRAIGHT TO THE POINT....AND EFFECTIVE COMMUNICATION.


    அன்புள்ள ஜீரோ இன்பினிட்டிக்கு...

    வணக்கம்..... உங்கள் பினுட்டம் உற்சாத்தை ஏற்படுத்துகின்றது...

    தொடர்ந்து இது போலானமடடல்கள் எனக்கு நிறைவை தருகின்றன..

    பொறாமையோடு வரும் பல மெயில்கள் இதயத்தை குத்தி கிழித்தாலும்...

    இது போலான மெயில்கள் ஒத்தடம் கொடுப்பதாய் இருக்கின்றன....

    உங்களை 100 வது பாலோயரில் இருந்து நானும் பின்தொடர்ந்து வருகின்றேன்...

    வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம்..

    ReplyDelete
  19. இதுதான் எதார்த்தம்.. வலையுலகம் அப்படிதான் இதுவும் ஒருநாள் போரடிக்கலாம்.. சட்டென வேறிடத்திற்கு தாவிபோக அதுவே மனநிறைவாய் ஆகி அங்கேயே தங்கும்போதும் உங்களிடம் ஏன் பதிவே போடுறதில்லை என கண்டிக்க ஆள் இருக்கும்.. வாழ்த்துக்கள் அண்ணா.//

    செந்தில் நீ சொல்வது 100க்கு 100 உண்மை...நிதர்சனத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.,.

    ReplyDelete
  20. அன்பிற்குரிய ஜாக்கி
    [புதிய பதிவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்வேன்....நீங்கள் உங்களுக்கு தோனியதை உண்மையாய் எழுதுங்கள்...இலக்கியதரம் என்பது முக்கியம் அல்ல...ஓட்டு வரவில்லை பின்னுட்டம் வரவில்லை என்று வருத்தம் கொள்ள வேண்டாம்... நீங்கள் உண்மையாக எழுதினால் அதுதானாகவே வரும்....உலகில் நிறைய விஷயம் நடக்கும் எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.. உங்களுக்கு எது பாதித்ததோ அதை எழுதுங்கள்....]
    என்னிடம் பேசிய வரிகள் இது .நான் இப்படித்தான் எனது நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டேன் அதன் பின் என் மனதின் பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் அவ்வளவுதான் .
    http://anbuaran.blogspot.com/2010/04/blog-post.html

    ReplyDelete
  21. மனமார்ந்த வாழ்த்துகள் ஜாக்கி சார்.

    உங்களை நேரில் சந்தித்தபோது இருந்த அந்த ஜாக்கியின் அசலான முகத்தை உங்கள் பதிவுகளிலும் பார்க்கிறேன். உண்மையை அப்பட்டமாகப் பேசுவது மிகப் பிடித்திருக்கிறது அண்ணா.

    500 பதிவுகள் சாதாரண விஷயமில்லை. கிடைக்கின்ற சில மணி நேர ஓய்வுகளில் எத்தனை விஷயங்களைப் பதிவிடுகிறீர்கள்.

    ஹாட்ஸ் ஆஃப் யூ அண்ணா.

    ReplyDelete
  22. சார் பதிவை மொபைலில் தான் படிக்கிறேன் .பின்னூட்டமிடும் வாய்ப்பு எப்போதுதான் வாய்க்கிறது. உங்களிடம் எதோ ஒன்று வசீகரிக்கிறது. சந்தோசம்!

    ReplyDelete
  23. அருமை!
    ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  24. அண்ணே சுவாரஸ்யம் குறையாம எழுதி இருக்கீங்க.. படிக்க படிக்க நச்சுன்னு இருக்கு .

    ReplyDelete
  25. gud jackie. ur wordings are very simple.Amazing at, your way of presenting the article. very nice work.
    People who make others happy are really god's gift. You are one among them.
    keep going........

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner