(p2) யாருக்கும், எதுவும் நேரலாம்....




சென்னையில் இப்போது எல்லாம் கொலை கொள்ளை என்பது சாதாரணமாகி விட்டது... நன்றாக நண்பராக பழகி அதன் பின் கொலை செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது.... பொதுவா என் வீட்ல வெளி மனுஷா யாரையும் அனுமதிக்கறதில்லை என்று பேசும் வீட்டில் கூட, கொரியர் கொடுப்பது போலவும்.. தாகத்துக்கு தண்ணீர் கேட்பது போலவும் வீட்டின் உள்ளே வந்து கொலை நடக்கின்றது...

யார்கூடவும் எனக்கு சண்டையும் இல்லை சச்சரவும் இல்லை என்று சொன்னால் கூட... உங்களுக்கு என்றே.. உங்களிடம் பிரச்சனை செய்ய யாரவது ஒருவன் எப்படியாவது , இப்போது எல்லாம்வந்து விடுகின்றான்...
இதுவே பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம் .. அவர்களது அழகே அவர்களுக்கு பிரச்சனை அப்படி ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனைதான் இந்த படத்தின் கதை...


p2படத்தின் கதை இதுதான்..

அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு கிருஸ்மஸ் தினத்தன்று மாலை Angela (Rachel Nichols) அவள் அலுவலகத்தில் இருந்து அவள் கார் நிறுத்தி இருக்கும் பி2 கேரேஜிக்கு போகின்றாள்... காரில் எறி ஸ்டார்ட் ஆகாமல் அடம் பிடிக்க அவள் நேராக செக்யூரிட்டியிடம் போய் விஷயத்தை சொல்கின்றாள்... செக்யூரிட்டிTom (Wes Bentley) அதன் பிறகு டாக்சிக்கு போன் செய்கின்றாள்...வர 15 நிமிடம் ஆகும் என்று தெரிவிக்க...செக்யூரிட்டி தான் தனியாக இருப்பதாகவும் தனக்கு கிருஸ்மஸ் கம்பெனி கொடுக்க, அவளை அலுவலகம் அழைக்க...

டாக்சி வரும் வரையில் அவனுக்கு கம்பெனி கொடுக்கின்றாள்... டாக்சி வந்து விட்டது என்று அழைப்பு வர... அவள் மெயின் கேட்டுக்கு வரும் போது அது பூட்டி இருக்கின்றது...உள்ளிருந்து டாக்சியை நிக்க சொல்ல கிருஸ்மஸ் பிசியில் டாக்சி போய் விடுகின்றது.. திரும்பவும் அவள் கேரேஜிக்கு வரும் போது லைட் எல்லாம் அனைந்து விடுகின்றது.. செல்போன் வெளிச்சத்தில் தடவி தடவி அவள் வரும் போது,
இருட்டில் அந்த செக்யூரிட்டி கையில் இருக்கும் கட்டையால் அவளை ஓங்கி ஒரு போடு போட அவள் மயக்கம் ஆகின்றாள்.விழித்து பார்த்தாள் அவன் அவளை கட்டி போட்டு வைத்து இருக்கின்றான்...அதன் பின் அவள் என்னவானாள்? எப்படி தப்பினாள்? எப்படி கஷ்டபட்டாள் என்பதை வெண்திரையில் காணுங்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

முதல் காட்சியில் கதாநாயகியின் அலுவலகமும் அவளது உடையும் சான்சே இல்லை.. நல்ல பாடி லாங்வேஜ்....

அதே போல் அந்த சைக்கோவிடம் மாட்டியதும் அந்த பெண்ணிடம் நல்ல எக்ஸ்பிரஷன்ஸ்....

படம் முழுவதும் இருவர் மட்டுமே பயணிப்பது போன்ற திரைக்கதை செலவுகளை மிகவும் குறைத்து இருக்கின்றது...
படத்திற்கு பலமே இசையும் ஒளிப்பதிவும்தான்....

கதை முழுவதும் இரவில் நடப்பதால் லைட்டிங்கில் எந்த மாற்றமும் இல்லை...

முதலில் கார்பரேட் ஸ்டைலில் உடை உடுத்திய அந்த பெண் அந்த சைக்கோவிடம் மாட்டியதும் பெட்டிக்கோட்டுடன் அலைய வைப்பதும், படத்தின் கடைசிவரை அதே காஸ்ட்யூமும் கூட... அதனால்தான் படத்தை இன்னும் உன்னிப்பாக பார்க்க முடிகின்றது என்பது வேறு விஷயம்....

படத்தின் கதாநாயகி ரீச்சல் நிக்கோலஸ் நல்ல சவுக்கு கட்டை...சாரி குட் லோக்கல் வுட் என்பது கீ ழே உள்ள படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரிந்து போகும்....


படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்...

Directed by Franck Khalfoun
Produced by Alexandre Aja
Erik Feig
Grégory Levasseur
Patrick Wachsberger
Written by Alexandre Aja
Franck Khalfoun
Grégory Levasseur
Starring Rachel Nichols
Wes Bentley
Simon Reynolds
Grace Lynn Kung
Paul Sun-Hyung Lee
Music by tomandandy
Cinematography Maxime Alexandre
Distributed by Independent Films (Netherlands) (theatrical)
P2 Productions (Europe)
Summit Entertainment (worldwide) (all media)
Tartan Films (UK) (theatrical)
Vivendi Visual Entertainment (co-production)
Universal Studios (DVD)
Destination Films (North America, co-production)
Release date(s) November 9, 2007
Country United States
Language English
Gross revenue $7,584,398

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

9 comments:

  1. படம் பார்த்துட வேண்டியதுதான்..ஜாக்கி..நீங்க டி.வி.டி.யிலா பார்க்கறீங்க?

    ReplyDelete
  2. சூப்பர்ருங்கன்ன்னோவ் .. படத்த பார்த்துட வேண்டியது தான்.. சவுக்கு கட்டை மாதிரி இல்லயே சும்மா சந்தன கட்டை மாதிரி இல்ல தெரியுது..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. //படத்தின் கதாநாயகி ரீச்சல் நிக்கோலஸ் நல்ல சவுக்கு கட்டை...சாரி குட் லோக்கல் வுட் //
    - சவுக்கு கட்டை பதிவில் குருப்பிடத்தக்க வசனம் - அண்ணே நல்ல வெலக்கம்ன...கண்ணுக்கு குளிர்ச்சியா இன்னம் ரெண்டு படத்த போடுறது...
    - நானும் சமீபத்துலதான் இந்த படத்த பார்த்தேன்....வில்லன் காரக்டர் ஒரே டெர்ரர்....

    ReplyDelete
  6. P2 - இது பாத்திருக்கேன். சுமாரான‌ ப‌ட‌ம்தான் ஜாக்கி ஸார்..

    Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  7. படம் பார்த்திருக்கேன்... அந்தப்பொண்ணோட நடிப்பு நல்லாருக்கும்...குறிப்பா சைக்கோ செக்யுரிட்டி ரூம்ல வச்சு அம்மாகூட போன்ல பேசறது...நல்ல விறுவிறுப்பு...ஆனா அது மாதிரி நிறைய படம் வந்துருக்கு...

    ReplyDelete
  8. இத்தினி போட்டோவா.... ஸ்ஸ்ஸ்ஸ்... கண்ணைக்கட்டுதே...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner