மகளிர்தினம்.. எழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றிகள்.நானும்  பெண்களை மதிக்காதவன்தான்.. என் நான்கு தங்கைகளையும் அடித்து இருக்கின்றேன், அம்மாவையும் தங்கைகளையும் அசிங்கமாக திட்டி இருக்கின்றேன்... பெண்களுக்கு  எதுக்கு தனி கியூ என்று கேள்வி எழுப்பி இருக்கின்றேன்....அவர்களுக்கு எதுக்கு தனி பஸ், அவர்கள் மட்டும் நெய்யில் பொறித்தவர்களா? என்று வினா எழுப்பி இருக்கின்றேன்..

அவர்கள் தலை எழுத்து,பொறந்த நேரம், அவுங்க செஞ்ச பாவம்  என்று எடுத்து எரிந்து பேசி இருக்கின்றேன். ஏன் என்றால் நான் ஆண்ஆதிக்க சமுகத்தின் பிரதிபலிப்பாய் வளர்ந்தவன். என் தாத்தா அப்படித்தான் என் அப்பா அப்படித்தான், என் மாமா அப்படித்தான், என் பெரியப்பா அப்படித்தான்,இப்படித்தான் என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் இருந்தார்கள்..


மனைவியை மதித்து சக மனுஷியாய் அவள் கருத்தை கேட்டுவிட்டால்  அவன் பொண்டாட்டிதாசன்.. அவன் பொட்டை ,ஆண் தன்மை இல்லாதவன் ,என்பதாகவே எனது சுற்ற்ம் இருந்தது.. இதுபோலான விஷயங்களில் எதிர்ப்பு மிக அதிகமாய் பெண்கள் பக்கம் இருந்துதான் வரும்....


அந்த பொட்டை தேவிடியா  ஏதோ சொல்லி இருக்கா... இந்த சங்கமாங்கி சாண்டாகுடிச்சவனும் அதை கேட்டுகிட்ட வந்து என் கிட்ட கருமாதி செஞ்சதுக்கு கணக்கு கேட்கறான் என்று தனது மருமகள் மகனை திட்டிய அம்மாக்களை, சித்திக்களை, அத்தைகளின் பேச்சை கேட்டு இருக்கின்றேன்.


சின்ன வயதில் பெண்கள் ஆண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்பதாகவே எனக்கு காட்சிகள் மனதில் பதிந்தன..

காமம் என்றால் என்ன என்று கற்றுக்கொடுக்கபடாத தேசம் இது பார்த்த அழகான பெண்களை எல்லாம்  நான் உடைகளைந்து முயங்கி இருக்கின்றேன்...

ஆனால் பெண்ணுக்கு உடல்பிரச்சனைகளும் மனப்பிரச்சனைகளும்  உண்டு என்று முதன் முதலில் எனக்கு புரிய வைத்தவர் எழுத்தாளர் பாலகுமாரன்... எனக்கு தெரிந்து தமிழகத்தில் பெண்களை மதிக் கற்றுக்கொடுத்தவர்களில்  எழுந்ததாளர் பாலகுமாரன் முக்கிய பங்கு வகிக்கின்றார்...

பொண்ணுன்னா தடால் சாய்ச்சு படுத்து பொறளும் விஷயம் அல்ல. என்று தலையில் தட்டி சொல்லிக்கொடுத்தவர் அவரே...அவருன்னா அவர் எங்க வீட்ல வந்து அடிச்சி சொல்லிக்கொடுக்கலை... அவர்கதைகளில்  சொன்னார்.. நான் கேட்டுகிட்டேன்..

 எங்க ஊரில் பெண்ணை சைட் அடிக்க  வயதுபையன்கள் சைக்கிளில் இரண்டு கையும் ஹென்டில்பாரில் இருந்து எடுத்து விட்டு ஸ்டைலாக ஷோ காட்டிய போது....
அப்படி காட்டினா???
அதனால என்னபயன்-?
அப்படி காட்டியதால் அவள் மனதில் நின்றுவிடுவோமா?
அது மட்டும் குடும்பம் நடத்த போதுமா?
அந்த ஸ்டைல் மட்டும்தான் அவளுக்கு பிடிக்குமா? என்று கேள்வி எழுப்பவைத்தவர் பாலகுமாரன்தான்..


பெண்கள் பக்க  பிரச்சைனைகளை ஒரு ஆண் எழுத்தாளன் எழுதி அதை ஒரு ஆணாதிக்க சமுகத்தில் இருந்து வந்தவன் அதிகபட்சமாக இல்லாமல் குறைந்த பட்சமாகவாவது பாலோ செய்ய வைத்தது பெரிய விஷயம் அல்லவா???


 பெண்களோடு  பேசிக்கொண்டு இருக்கும் போது பப்பரபப்பே என்று எடுத்ததும் பெண்களின் மார்பை பார்த்து கண்கள் அலைபாயும் போது... எதுக்கு இந்த பதட்டம் என்று தலையில் தட்டிபெண்களின் கண்கள் பார்த்து பேச சொல்லிக்கொடுத்தது பாலகுமாரன் எழுத்துக்கள்தான்..


என்றிலிருந்து பெண்களை மதிக்க தோன்றியது என்றால் அது பாலகுமாரன் வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து என்று நான் தைரியமாக சொல்லுவேன்...இப்போதும் என்னை ஐஎஸ்ஓ 9001 தர நிர்ணய அளவுக்கு  நான் பெண்களை  மதிக்க வைத்த பெருமை பாலகுமாரனுக்கு உண்டு என்று ஜல்லி அடிக்கமாட்டேன்..இப்போதும் எனக்கு கோபங்கள் உண்டு,ஆனால் நிதானமாக கோபப்படவைத்தது பாலகுமாரன்தான்

என் அப்பா, மாமா, சித்தப்பா, பெரியப்பா,  போன்றவர்களை போல இல்லாமல் பெண்களை மதிக்கவும், சில விஷயங்களில் அவர்கள் பக்க நியாத்தை யோசிக்கவும்  வைத்தவர் பாலகுமாரன்தான்..

பிளாக்ல போட்டோவெல்லாம் பார்க்கும் போது ராயபுரம் பக்க ஆளு போல இருக்கிங்க.. பட் பேசும் போதும் பழகும் போதும் அது போல நீங்கள் இல்லை என்று பல பெண் நண்பிகள், வாசக நண்பிகள் சொல்வதுண்டு....

எனது கல்லூரி பேருந்தில்  என்னை சுற்றி பெண்பிள்ளைகள்  அமர்ந்து கொண்டு நான் பேசுவதை ரசித்துக்கொண்டு வருவார்கள்...கல்லூரிக்கு சேர்ந்த முதல் வாரத்தில் என்னிடம் பேசமாட்டார்கள்.. அலட்டுவார்கள்.. அனால் ஒரு வாரத்தில் அவர்கள் என்னை சுற்றி பேசிக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டும் இருக்கும் கூட்டத்தில் சேர்நது ஜோதியில் ஐக்கியமாவார்கள்..


கல்லூரி விட்டு வந்து இரண்டு வருடத்துக்குமேல் ஆகின்றது இன்னமும் என் மேல் மரியாதை வைத்த பெண் பிள்ளைகள் அவர்கள் வாழ்வின் இன்ப துன்பங்களை இன்னமும் என்னிடத்தில் பகிர்ந்த படிதான் இருக்கின்றார்கள்..

நான் ஒன்மேன் ஆர்மிதான்.. நானாகத்தான் முடிவுகள் எடுத்தேன்...ஆனால் நான்கு தங்கைகளையும் கலந்து பேசி அதன் பின் என் முடிவுகள் எடுக்கப்பழக்கியது பாலகுமாரன்தான்.

 என்னை விட அதிகம் படித்த என் மனைவி நான் கடலூரில் ஆட்டோ ஓட்டும் போது  என்னிடம் அவள் காதலை சொன்னாள்... அன்றிலிருந்து இன்று வரை என் புருஷன், என் காதலன் , என் கணவன், என்று இன்றுவரை கொண்டாட முக்கியகாரணம் பாலகுமாரன்தான்..


கடைசியாக சாருவின் புத்தகவெளியீட்டு விழாவில் பாலகுமாரனை பார்த்தேன்...அவரை கை கூப்ப ஆவலாக இருந்தேன். ஒரு கூச்சம் கிட்ட போகவேயில்லை..அவர் பற்றி நானும் தம்பி கீதப்பிரியனும் நெடுநாளைக்கு பின் நிறைய பேசினோம்... அதுக்கு பிறகு இவரை பற்றி பெங்களூர் நண்பர் யுவாவோடு நிறைய பேசினோம்....பாலகுமாரனுக்கு எத்தனை முறை நன்றி தெரிவிப்பாய்??? தோன்றும் போது எல்லாம் தெரிவிப்பேன்...ஆனால் ஒரு நாளும் அவருக்கு கடிதம் எழுதியது இல்லை.. ஆனால் இங்கே கடிதம் எழுத எனக்கு என்று இடம் இருக்கின்றது... அதனால் எழுதுகின்றேன்....நேரில் பார்த்து கைபிடித்து நன்றி என்று ஒரே ஒருமுறை சொல்லி இருக்கின்றேன்...பாலகுமாரனுக்கு நன்றி சொன்ன என் முதல் பதிவு வாசிக்க

.ஆனால் அவரோடு ஒரு புகைபடம் எடுத்துக்கொள்ள ஆசை இருக்கின்றது... இந்த மகளிர் தின நாளில் எனக்கு மகளீர் மீது மரியாதை ஏற்பட காரணமாக இருந்த  பாலகுமாரனுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்...பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 
18 comments:

 1. உண்மைங்க ஜாக்கி. பாலகுமாரனுடைய எழுத்துக்கள் நம் காலத்தின் இளைஞர் தலைமுறையின் சிந்தனையை பக்குவப்படுத்தி, வளப்படுத்தியுள்ளது. அவருடைய முன்கதைச்சுருக்கம் போல நல்லதும் கெட்டதுமான தன்னை அப்படியே வெளிப்படுத்தும் எழுத்தாளர்கள் கிடையாது. வெவ்வேறு தளங்களில் இயங்கினாலும் எனக்கு பாலகுமாரன், சுஜாதா, ஜெயகாந்தன் இவங்க மூனு பேரும் ஆதர்சம். பாலாவை ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி. என் கண்மணித் தாமரையை இன்னைக்கு திரும்பவும் படிக்கனும்.

  ReplyDelete
 2. அருமை...! ஒழுங்கற்று இருந்த என்னை ஒரு வடிவமாக்கியவர் பாலகுமாரன்..!

  அவரை ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும்...!

  ReplyDelete
 3. அண்ணே,
  நீங்க ஏன் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
  நேரே போய் பார்த்து பேசிவிடுங்கள்.உங்கள் பதிவுகளை நிச்சயம் யாரேனும் அவரிடம் காட்டியிருப்பார்கள்.
  http://www.writerbala.blogspot.com/

  ReplyDelete
 4. //இரண்டு பொண்டாட்டிகளோடு ஒரே நேரத்தில் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ்ம் இரண்டு பொண்டாட்டிகளோடு ஒரே நேரத்தில் ஒரே வீட்டில் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் பாலகுமாரனும் தான் இங்கே பெண் விடுதலையை பற்றி கதற கதற பேசும் ஆண்களாக இருக்கிறார்கள்...//

  குழலியின் பஸ்ஸிலிருந்து....

  ReplyDelete
 5. சிறப்பான பதிவு
  http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_5363.html

  ReplyDelete
 6. எழுத்துப் பிழைகள் இல்லாததும் இந்தக் கடிதத்தில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது....

  ஜாக்கி வளர்கிறார்... :-)

  ReplyDelete
 7. அனைத்தும் உண்மை. அவரின் எழுத்துக்கள் இலக்கியமா என சில நாட்கள் முன்னர் இணையத்தில் சிலர் விசாரணையில் ஈடுபட்டபோது, வெறுமனே சிரிக்கத்தோன்றியது. ஒரு தலைமுறையின் சிந்தனைப்போக்கை மாற்றியதில் அவரின் பங்கு சொல்லிமாளாதது. நன்றி ஜாக்கி!

  ReplyDelete
 8. அவரை சந்திக்க சந்தர்ப்பம் நேர்ந்தால் தகவல் சொல்லவும். ஆட்டத்தில் சேர ஆசை.

  ReplyDelete
 9. உங்களிடம் பேசியதிலிருந்து அந்தப் பதிவுக்கான லின்கை கேட்க நினைத்திருந்தேன். இதோ இங்கே... அருமையானதொரு பகிரல் அது. உள்ளத்தில் இருப்பதை அப்படியே எழுத்தில் கா(கொ)ட்டிவிட்டீர்கள்!

  ReplyDelete
 10. ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜாக்கி, என் வாழ்கை திசை மாறியதும் பாலாவாலத்தான்,
  என்னிக்காவது அவர் கைய புடிச்சி நன்றி அப்படின்னு சொல்லனும்னு ஆசை,

  உங்க பதிவ படிக்கும்போது, நீங்களும் அதே ஆசையோட இருக்கறதா பாத்து ரொம்ப சந்தோசம்

  உங்களால சந்திக்க முடிஞ்சா எனக்கும் நிச்சயம் சொல்லுங்க, நானும் ஆட்டத்துல சேந்துகுறேன், வாழ்கையில மறக்க முடியாத தருணமா இருக்கும்

  ReplyDelete
 11. மனதில் உள்ளதை அப்படியே வார்த்தைகளாய் வடிக்கும் உங்க யதார்த்தம் ரொம்ப பிடிக்கும்...

  ReplyDelete
 12. ஒரு கட்டத்தில் பாலகுமாரன் எழுத்தை நேசிப்பவரும் வாசிப்பவரும் வெளியே சொல்ல பயப்பட்டார்கள் .
  ஒரு எழுத்தாளனுக்கு மட்டுமே இப்படி தமிழகத்தில் ஏற்படுகிறது .
  உங்களின் வெளிப்படையான பதிவு மிகவும் நேர்த்தி .
  --
  என்றென்றும் அன்புடன் ,
  சுகி ...

  ReplyDelete
 13. பாலா எனும் என் இனிய அப்பா,பெற்றவர்களால் பிறந்தேன்.பாலகுமாரனால் நல்லவனாக வளர்ந்தேன்.சொல்லிக்கொடுத்தவன் தகப்பன் எனில் நீ என் தகப்பனே.

  ReplyDelete
 14. i like much more WRITTER BALAKUMARAN . ..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner