மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ஞாயிறு/13/03/2011


ஆல்பம்..

சுனாமியின் கோரத்தை பார்க்கும் போது கடலூர் தேவனாம்பட்டினத்திலும், பாண்டிச்சேரி கடற்கரையில் போட்டு இருக்கும் தடுப்பு சுவர்களை பார்க்கும்  போது ரொம்ப காமெடியாக இருக்கின்றது.. இயற்கை நினைத்தால் எல்ஐசி உயரத்தில் உட்கார்ந்து இருந்தாலும் அழித்து விடும் என்பதை ஜப்பான் சுனாமி நிருபீத்து இருக்கின்றது.... நடந்த அழிவை வைத்து பார்க்கும்  போது 25ஆயிரம் பேருக்கு மேல் இறந்து இருக்கலாம் ஆனால் இதுவரை 2000 பேர் இறந்து போனதாகவும் 10,000 பேருக்கு மேல் காணவில்லை என்று ஜப்பான் அரசு அறிவித்து இருக்கின்றது...நான் கவலைபடுவலது எல்லாம்  எத்தனை சிறுவர் சிறுமியர் தனது பெற்றோரை இழந்து போய் இருக்கின்றார்கேளோ என்பது தெரியவில்லை....???

உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை...பெற்றோரை இழந்து  இருக்கும் சிறுவர் சிறுமியருக்கு எல்லா மனவலிமையும் கிடைக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்வோம்...


==============================


கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவிக்கு பிறகு கன்னடத்து பைங்கிளி என்றால் அது ஜஸ்வர்யாதான்.. கன்னடமாநாட்டில் அவரும் முதல்வர் எடியூரப்பாவும் மாத்தாடிக்கொண்டு இருந்தது.. பலருக்கு புகையை கிளப்பி இருக்கும்.... அடுத்த ஜென்மத்திலும் நான் கன்னடராக பிறக்க விரும்புகின்றேன் என்று நாராயணமூர்த்தி உணர்ச்சிபிழம்பாய்  பேசினார்....கன்னட மாநாடு காரணமாக பெல்காம் கோலாகலமாக இருக்கின்றது....

====================

தினமும் கத்த்தை கத்தையாக ரூபாய்  நோட்டுக்கட்டுகள்  வாகன சோதனையில் பிடிபடுகின்றன.. கணக்கில் காட்டாத  பணம் கைபற்றபடுகின்றன...இவ்வளவு நாளாக வாகன சோதனை செய்யாமல் மணியாட்டிக்கொண்டு  இருந்தர்களா??

==================
இந்தவார சலனபடம்..1
அழகு,வளைவு,நெளிவு, திறமை  இவைகளோடு ஒரு பெண் நடனம் ஆடுவது சிறப்பு... இந்த பெண்ணின் நடனம் வாய்ப்பே இல்லை...வில்லாய் நாலாய் எட்டாய் வளையும் அந்த உடம்பு.. சில இடங்களில் வாய் மீது விரல் வைத்து ஆச்சரியத்தில் ரசிக்க முடிகின்றது..முக்கியமாக கடைசி ஸ்டெப் அல்ட்டிமேட்தவறாமல் பார்க்கவேண்டிய வீடியோ...================================

மிக்சர்..

அதிமுக அணியில் இன்னமும் பாவம் வைகோவை அவமானப்படுத்திக்கொண்டே  இருக்கின்றார்கள்..ஒரு வேளை விடுதலை புலிகளுக்கு அதரவாக பேசியதற்கு வைகோ ஜெ ஆட்சி காலத்தில் வைகோ, தடாவில் கைது செய்யப்பட்டார்.... ஆப்போது பாசிச வெறிபிடித்த ஜெயலலிதா என்று கத்தியபடி போலிஸ்வேனில்  வைகோ ஏறினார்.. ஒருவேளை அதை இன்னமும் ஜெ ஞாபகத்தில் வைத்து இருப்பாரோ??? இருக்காது இல்லையா??? அண்ணன் ஏதோ கோபத்தில் சொன்னால் தங்கை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்று நம்புகின்றேன்...

 =================================
போனபதிவில் திமுக ஆட்சி பிடிக்கும் என்பதையும்... அது எத்தனை சீட்டுகள் வாங்கும் என்றும் சொல்லி இருந்தேன்.. அது பொய்யாக கூட போகலாம்... அதுக்குள்ளேயே.. கனிமொழியிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் ? நான் உங்களிடம் இருந்து இப்படி ஒரு கணிப்பை எதிர்ப்பார்ககவில்லை என்ற ரீதியில்  பீட் பேக் வந்தது.. இங்கு இணையத்தில் இருக்கும் திமுக எதிர்ப்பை எல்லாம் வைத்து நான் கனிக்கவில்லை.. ஓட்டு போடபோகின்ற நடுத்தர மக்களின் எண்ணவோட்டத்தை வைத்து சொன்னேன். இது போல் எழுதினால் கனிமொழி எங்கு பணம் கொடுக்கின்றார் என்று தயவு செய்து  சொல்லவும்...
============================================
CINEMA  NEWS THIS WEEK....

உருமின்னு ஒரு மலையாள பிரியட் பிலிம்.. நிறைய பொருட் செலவில் எடுக்கின்றார்கள்.. இதில் ஜெனிலியா, வித்யாபாலன் போன்றவர்கள் நடிக்கின்றார்கள்..(இதுதான் ரொம்ப முக்கியம்)கூடவே பிரபுதேவா,பிருத்விராஜ் போன்றவர்கள் நடிக்கின்றார்கள்.. இயக்கம்  ஒளிப்பதிவாளர்... சந்தோஷ்சிவன்.


  =============
ஒரு உதவி..(திருப்பூர்  நண்பர்கள் கவனிக்க)


பெயர் இராமசாமி எக்ஸ் மிலிட்ரி மேன் வயது77 திருப்பூருக்கு
பக்கத்தில் இருக்கும் ஆண்டிப்பாளயத்தில் வசித்த வருகின்றார் இரண்டு தினங்களுக்கு முன் எனது வலைதளத்தை வாசித்து விட்டு எனக்கு போன் செய்து பேசினார்...நிறைய பர்சனலாக பேசினார்.. என்னை வாழ்த்தினார்.. தனக்கு கம்ப்யூட்டரில் தமிழ் டைப் அடிப்பது எப்படி என்பது தெரியவில்லை... யாராவது உங்கள் நண்பர்கள் சொல்லக்கொடுக்க முடியுமா ? என்று என்னிடத்தில் கேட்டார்.. திருப்பூர் பக்கம் பிரியாக இருப்பவர்கள் ஒரு எட்டு போய் அவருக்கு தமிழ் டைப் அடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்தால் மகிழ்வேன்.. அவருக்கு கட்மமயூட்டர் இந்த வயதில் பெரிய விஷயம் ஆர்வத்தோடு இருக்கும் அந்த பெரியவருக்கு உதவினால் மிகவும் மகிழ்வேன்.

தொடர்பு எண்.... இராமசாமி....09003989923


=========================
இந்தவாரா சலனபடம்..2
 ஒரே தேசம், ஒரே கொடி 2000கிலோமீட்டரில் இது போல ஒரு பாட்டு எடுத்து இருக்கின்றார்கள் என்பது சென்னையில் பலருக்கு தெரிய வாய்ப்பே இல்லை...இங்கே பெங்களூரில் இந்தி சேனல்கள் தெரிகின்றன. அதில் நான் பார்த்து வியந்த பாடல் இது...பிகினியில் தீபிகா தீபிகாதான்...வீடியோவில் 4.16 வது நிமிடத்தில் கடலில் இருந்து ஒரு  பெண் கருப்பு உடையில் எழுந்து நடக்கின்றார் தீபிகாவைவிட அவர்தான் என் நெஞசில்  குடி இருக்கின்றார்.. அது ஏன் என எனக்கு காரணம் தெரியவில்லை...உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்..=====================================

இந்தவார கடிதம்...

 ஜாக்கி அண்ணாவுக்கு,

வணக்கம். தங்கள் நலத்தையும் , தங்கள் குடும்பத்தினர் நலமும் அறிய ஆவல்.

நான் ராம்குமார். ஒரு பிரைவேட் கம்பெனியில் PROJECT ENGINEER -ஆக Hyderabad -ல் பணிபுரிகிறேன்.

நான் நெடுநாட்களாக தங்கள் வலைப்பூவை வாசித்து வருகிறேன். அவ்வப்போது ஒன்றிரண்டு பின்னூட்டங்கள்  தவிர எப்போதும் என்னை வெளிப்படுத்தி கொண்டது இல்லை. ஏனென்றால் எனக்கு கிடைக்கும் நேரம் மிகவும் குறைவு.இப்போது தங்களுக்கு கடிதம் எழுத அமர்ந்தது ஏனென்றால், நடுநிசி நாய்களுக்கு நீங்கள் எழுதிய விமர்சனமும் அதற்கு பதிவுலகில் எழுந்த சில எதிர்வினைகளும் தான் காரணம்.

 
உலகெங்கும் சினிமா ரசிகனுக்கு என்று, ஒரு பொதுவான குணம் இருக்கிறது. அது என்னவென்றால், கதையின்  நாயகனாக தன்னை சித்தரித்து கொண்டு , சிலாகிப்பு அடைவது தான். கதையின் நாயகன் புரியும் வீர சாகசங்களில், இவன் சண்டையிடுவதாக நினைத்து கொண்டு பெருமிதம் கொள்வதும், அவனுடைய சோகத்திற்கு இவன் கண்ணீர்வடிப்பதுமாய்   ரசிகன் அடையும் சிலாகிப்புக்கு அளவே இல்லை. திரை அரங்கிலிருந்து வெளியே வரும் ஒவ்வொருரசிகனும், கதாநாயகனின் பாதிப்பை சுமந்தபடி தான் வெளியே வருகிறான் என்பது என் கருத்து.

நடுநிசி நாய்கள் நெறைய பேருக்கு பிடிக்காமல் போனதற்கு கூட, இது தான் காரணம் . கதாநாயகனின் தந்தை தன் கோர முகத்தை காட்ட ஆரம்பித்தவுடனே, ஒவ்வொருவருக்கும் தன்  தந்தையின் முகம் நினைவுக்கு வர , அவனுக்கு படம் பிடிக்காமல் போய்விடுகிறது. தொடர்ந்து வரும் காட்சிகளில் அவனுடைய வெறுப்பு இன்னும் அதிகமாகி விடுகிறது. இது  நாள் வரை மரியதையுடனோ, பயத்துடனோ நினைவுக்கு வந்த தந்தையின் முகம், முதன் முதலாய் ஒரு காமுகனாய்  தோன்றுவதையாருமே இங்கு ரசிக்கவில்லை. ஒரு தந்தை நல்லவனோ, கெட்டவனோ அவனை இது போல் கேவலமாக சித்தரிப்பது, சராசரி ரசிகர்களுக்கு  பிடிக்காத ஒரு விஷயம். இது மாதிரியான திரைக்கதை, தமிழில் இதுவரை வெளிவராத காரணத்தால், இது தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு விசயமாக இங்கு பேசப்படுகிறது.

சராசரி ரசிகர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்வது மிகவும் அவசியம். நமக்கு நல்ல தந்தை அமைந்து இருப்பதால், நாம் வாழ்வில் ஜெயித்து, இன்று ஒரு மிக பெரிய நிலைமையை அடைந்திருப்போம்  . ஆனால் நாட்டில் எத்தனை பேருக்கு நல்ல தகப்பன்கள் அமைகிறார்கள் ? இங்கே எத்தனை  பெற்றோர் தங்கள் குழந்தைகளை, தாங்கள் பெற்ற செல்வங்களாக, அவர்களை உண்மையான பொறுப்போடு, சீரும் சிறப்புமாக வளர்க்கிறார்கள்.  அப்படி பார்த்தால், வெகு சிலரை தவிர ( அவர்கள் கூட போன தலைமுறையில் நல்ல பொறுப்பான அரசுப் பணியில் உள்ளவராக இருப்பார்கள் - 'like teachers, bank employees ) மற்ற அனைவரும் தங்கள் பிள்ளைகளை கடமைக்கு வளர்ப்பவர்களே. இங்கே குடிகாரன், ரௌடி, மோசமான அரசியல்வாதி, பொறுப்பில்லாமல் பொழுதை கழிக்கும் சோம்பேறிகள் போன்றோருக்கு மகனாக பிறந்தவர்கள் வாழ்வில் ஒரு நல்ல நிலைமையை அடைய வேண்டி இருப்பின், அதற்க்கான போராட்டங்கள் மிகவும் அதிகம்.  ஒரு வேளை நாடு நிசி நாய்கள் படத்தில் வருவது  போல, காமுகன் ஒருவனுக்கு  தந்தையாக  அமைந்தால், அந்த  மகனின் நிலைமைஅந்தோ பரிதாபம்..  தடம் மாறிய ஒருவனின் தவறுக்கு பின்னால், அவனுடைய தந்தையே முழு முதற்காரணம் என்பதை, கௌதம் மேனன் காட்டியிருப்பதாகத் தான்  நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

பொதுவாக இந்த மாதிரியான திரைப்படங்களை பார்ப்பதற்கு, நல்ல மன முதிர்ச்சி தேவை. அது இல்லாத பட்சத்தில் இந்த படம், பார்ப்பவர்  தம் கண்களுக்கு குப்பையாகத் தான் இருக்கும். நிஜத்தில் இது போல் பாதிக்கப்பட்ட ஒருவன் நம் நண்பனாக  இருக்கும் பட்சத்தில், அவனுடைய சோகங்கள் நமக்கு தெரியவந்தால், அவனுக்கு நாம் தோள் கொடுப்போம் இல்லையா? அது  போல ஒரு உணர்வு நமக்கு தோன்றுமாயின்இந்த திரைப்படம் நமக்கு ஆபாசமாக தோன்றாது. 


நம் நாட்டில் செக்ஸ் கல்வி அறிவு மிகவும் அவசியம் என்பதை, போன வாரத்தில் நான் படித்த மற்றும் கேட்ட இரண்டு சம்பவங்கள் உணர்த்துகின்றன. good touch மற்றும் bad touch போன்றவற்றை இன்றைய சிறுவயது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பதை  நம்  நாட்டில் கட்டாயமாக்க வேண்டும். ஏனென்றால் 7 -ல் ஒரு ஆண் குழந்தையும் 4 -ல் ஒரு பெண்  குழந்தையும் உலகம் முழுதும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பது இன்றைய நிகழ்கால பத்திரிக்கைச் செய்தி. இது போல் பாதிக்கப்படும் குழந்தைகளில் பெரும்பாலனோர், அவர்களின் உறவினர்களாலேயே  துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது இங்கே முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

முதலாவது சம்பவம், தந்தை மணந்து கொண்ட ஒரு பெண்ணை , அவர் மறைவுக்கு பின் மகனே தாரமாக்கிக் கொண்ட ஒரு கதை. இது இரண்டு வாரங்களுக்கு முன்பு தினமலர் வாரமலரில் ( பிப்-20 )அன்புடன் அந்தரங்கம் பகுதியில் கேள்வியாகவே கேட்கப்பட்டுள்ளது. இந்த கலாச்சார  சீர்கேடு நிகழ்ந்தது 50 வருடங்களுக்கு முன்பு.

இரண்டாவது சம்பவம், கடந்த சனி கிழமை (மார்ச்- 05 ) இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான டாக்டர்-X  நிகழ்ச்சியில், கேட்கப்பட்ட ஒரு கேள்வி. ஒரு நேயர் மிகவும் அழுது கொண்டே, தன் கேள்வியை முன்வைத்தார். வெகு நேரம் அழுது கொண்டிருந்த அவரை மருத்துவர் சமாதானபடுத்தி,பின் பிரச்னை என்னவென்று கேட்டார்.அப்பொழுது அவர் சொன்ன விஷயம், அந்நேரம் டிவி பார்த்துகொண்டிருந்த அனைவரையும் அதிர்ச்சி அடையச்செய்திருக்கும். விஷயம் இது தான், தன் தந்தை  ஒரு சிறுமியுடன் உடலுறவு கொண்டதை காண நேரீட்ட அவருக்கு, அதன் பிறகு செக்ஸ்-ல் இருக்கும் ஆர்வமே போய்விட்டது என்று மிகவும் கவலையோடு சொன்னார். வேறு ஒரு குழந்தைக்கு நிகழ்ந்த அந்த செயலே, அவரை மிகவும் மனமுடையச் செய்துவிட்டது என்றால், ஒரு  தந்தையே  தன் குழந்தை மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் அந்த குழந்தையின் நிலைமை??? ( ஒரு தந்தையே, மகளை வெகு நாட்களாக மிரட்டி  கற்பழித்து வந்ததால், தாயே அந்த மிருகத்தைக்  கொலை செய்த ஒரு செய்தியைக்  கூட நாம் பத்திரிக்கையில்  படித்து இருக்கிறோம் ) நினைத்து பார்க்கவே மிகவும் கொடுமையாக இருக்கிறது.


இந்த சம்பவங்களை ஏன் இங்கே சொல்லுகிறேன் என்றால், இது போல தவறுகள் நடக்கும் ஒரு சராசரி சமுகத்தில் தான், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது போல் வெளியே வராத செய்திகள் இன்னும்  ஆயிரம் இருக்கக்கூடும். நிலைமை இப்படி இருக்க, இது வரை தவறே நடக்காத  ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது போலவும், கௌதம் மேனன் தான் இது போன்ற திரைப்படங்களை எடுத்து, நம் கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறார் என்று இவர்கள் சொல்வது மிகவும் நகைப்புக்குரியது.

அமெரிக்காவில் தான் சந்தித்த ஒரு மன நல மருத்துவர் சொன்ன ஒரு நோயாளியின் உண்மை கதையே நடுநிசி நாய்கள்  சினிமா என்று  கௌதம் மேனன் சொல்லி இருக்கிறார். இங்கே நம் நாட்டில், இது மாதிரி நிகழ்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும், ஒருவேளை நமக்கு தெரியாத ஒரு இடத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்பது நாம் மறுக்க முடியாத, அதே சமயம் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை. இது போன்ற படத்தை இவர்கள் எதிர்ப்பவர்களாக இருந்தால், எதற்காக  இவ்வளவு தூரம்  சண்டையிட்டு, இதை இன்னும் பிரபலமாக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவுக்கும் கலாச்சாரக் காவலர்கள் உண்மையிலேயே  செய்ய வேண்டியது என்னவென்றால், அடுத்த தலைமுறையினருக்கு முறையான செக்ஸ் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தி அதற்கு ஆவணம் செய்ய வேண்டியது தானே. அதை அவர்கள் செய்தால், அடுத்த தலைமுறை அவர்கள் எதிர்பார்ப்பது போல், செக்ஸ் குற்றங்கள் குறைந்த ஒரு சமூகமாக உருவாக வழிவகை செய்யும். அதை விடுத்து, நீங்கள் பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லி விட்ட பின்பும், தங்களுக்கு எதிராக பெரிய பிரச்சனையை கிளப்ப வேண்டிய அவசியம் தான் என்ன?

 உங்களுடைய " கலாச்சார காவலர்களேஒரு நிமிடம் " பதிவில் குறிப்பிட்டுள்ள இந்த வரிகளை புரிந்து கொண்டவர்களுக்கு இதற்கு மேல், வேறு  விளக்கம் தேவை இல்லை..


" ஆனால் 2000ம் நல்ல அப்பாக்களில், ஒரு அப்பா தவறு செய்கின்றான்... அப்படி அந்த செக்ஸ் தவற்றை  தனது சின்ன பிள்ளை மீது திணித்தால், அந்த  பிள்ளை  பின்னாளில் என்னவாகும் என்பதை இயக்குனர் காட்டி இருக்கின்றார்..

உன் அப்பா என் அப்பா அப்படி இல்லை அதனால்  நாம் இப்படி இருக்கின்றோம்.... ஆனால் அந்த பையனின் அப்பா ஒரு மிருகம் அதனால் அவன் அப்படி மாறினான்...இதுதான் கதை... "
கௌதம் மேனன் அவருக்கு தோன்றிய அல்லது தான்  கேட்ட ஒரு  கதையை கொண்டு, திரைக்கதை அமைத்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அதை பார்த்து நம் மக்கள் கெட்டு போவார்கள் என்று  சிந்திப்பது எல்லாம் இவர்களின் அறியாமையே. ஒரு திரைப்படத்தை பார்த்து, மக்கள் அதன் வழி செல்வார்கள் என்றால், நம் நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழல் எல்லாம் எப்போதோ அழிந்து போயிருக்கும். ஏனென்றால் இங்கே, லஞ்சம் மட்டும் ஊழலை எதிர்த்து வசனம் பேசிய ஹீரோக்களின் எண்ணிக்கையும் அதிகம், வெளிவந்த திரைப்படங்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.


கடைசியாக ஒன்று, சினிமா என்பது மக்களை மகிழ்விக்க உருவாக்கப்பட்ட நாடகக் கலையின் வளர்ச்சியடைந்த ஒரு வடிவமே தவிர, அதனால் பெரிய கலாச்சார சீர்கேடோ அல்லது அழிவோ வரப்போவதில்லை என்பது என் தாழ்மையான கருத்து.


இது போன்ற சர்ச்சைக்குரிய எதிர் விவாதங்களை சொல்லுகிறவர்களுக்கு நீங்கள் ஒரு போதும் விவரமாக பதிலளிக்க தேவை இல்லை. நீங்கள் வழக்கம் போல், உங்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டுகிறேன். நீங்கள் சினிமாவில் நினைத்திட்ட உயரத்தை அடையவும், வாழ்வில் மென்மேலும் பல சிறப்புகளோடு வளரவும்  வாழ்த்தும் ஒரு அன்புத்  தம்பி.


பின்குறிப்பு:
 • இது என்னுடைய முதல் கணிணிக் கடிதம், பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.
 • நேரம் இருப்பின் பதில் கடிதம் எழுத விழைகிறேன்.


- நட்புடன் 

ஜெய்செல்வம்  ராம்குமார்.
ஹைதராபாத்.
=====================================

மிக நேர்த்தியாக புரிந்து கொள்ளப்பட்டு  எழுதப்பட்ட இந்த கடிதம்...நிறைய கடிதங்கள் என்னை திட்டியவர்கள் பெயரை குறிப்பிட்டு திட்டி  என்க்கு ஆதராவாய் கடிதங்கள் வந்தன..... அப்படிதிட்டனும்னா நான் ஒருத்தனே போதும்... அவங்களுடைய கடிதங்களை நான் பிரசுரிக்க வில்லை ..காரணம் காமெடி பீஸ்கள் பெயரை உச்சரிக்க கூட நான் விரும்புவதில்லை...

ரொம்ப பெரிய கடிதம்... என்னை புரிந்து என்க்காய் நேரம்ஒதுக்கி எழுதி இந்த அன்பு போதும்.. இன்னும் நான் நிறைய எழுதுவேன்..எதுபற்றியும் கவலை  கொள்ளாமல்..

நன்றி தம்பி செல்வா

சென்னை வரும் போது அவசியம் சந்திப்போம்...
==========================
இந்தவாரநிழற்படம்..
ஒரு மழை இரவின் போது...... பெண்களூர்...நாங்கள் வசிக்கும் இரண்டாம் மாடியில் இருந்து......
==================================
பிலாசபிபாண்டி...
அழுகை சிரிப்பு இரண்டுமே வாழ்வில் மிக முக்கியமான தருணங்கள்தான் ஆனால் இரண்டுமே ஒன்றாக  வரும் போது அந்த தருணம் எல்லாவற்றையும் விட சிறப்பானது

==============================
இந்தவார சலனபடம்..3
இந்த பாடலை பார்த்தால் உங்கள் கால்கள் கைகள் லைட்டாக நடங்கும்...மிக முக்கியமாக கையில் போய் முகத்தை வைத்தக்கொள்ளும் அழகே அழகு...கையில் டிராவல் அகும் நாயகி முகம்... படம் அந்த அளவுக்கு பிரச்சி பெறவில்லை என்றாலும் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.. நடனத்துக்கா மட்டும். இந்த பாடல் பிடிக்கும்...


===================================
நான்வெஜ்18+

ஜோக்..1

அவன் கருப்பாதான் இருந்தான்... பார்க்க ரொம்பவும் சுமார்தான்... ஆனா எவ்வளவு அழகான பொண்ணா இருந்தாலும் அவன் பின்னாடியே சுத்திகிட்டே இருந்தாங்க.. பெரிய பணக்கார வூட்டு பசங்க எல்லாம் செம பேஜார் ஆனானுங்க.... பணக்கார பசங்க ஆளுக்கு பத்தாயிரம் போட்டு 50,000 ரெடி பண்ணி ஒரு டிடேக்டிவ் ஏஜென்சிக்கு போய் பிரச்சனையே  சொல்லி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை எங்களுக்கு ஒரு உண்மை  தெரிஞ்சாகனும் சாமின்னு சொன்னாங்க....அவன் பின்னாடி மட்டும் எப்படி இத்தனை பொண்ணுங்கன்னு???

ஒரு வாரம் கழிச்சி எப்படியும் உண்மையை கண்டு பிடிச்சிடுவோம்.. ஒருவாரம் கழிச்சி வரச் சொல்லி ஏஜென்சியில சொல்லி அனுப்பனாங்க...

ஒரு வாரம் கழிச்சி உண்மை தெரிய ஆர்வமா போனாங்க... 

ஏஜென்சியில சொன்னாங்க...
பாய்ஸ் நீங்க லூ போய் முடிச்சதும் என்னசெய்வீங்க...
அந்த பசங்க கோரசாக சொன்னாங்க...பேண்ட்ல படாம இருக்க லுல்லுவ லைட்டா ஷேக் பண்ணுவோம்..
குட் ஆனா அவன் அதை காலால் உதைப்பான்...


===================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்9 comments:

 1. // உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை... //

  அருமையான தத்துவம் ஜாக்கி...

  ReplyDelete
 2. // தனக்கு கம்யூட்டரில் "தமிதழ்" டைப் அடிப்பது எப்படி என்பது தெரியவில்லை... //

  ம்ஹூம்... இங்கே மட்டும் என்ன வாழுதாம்...

  ReplyDelete
 3. // கட்மமயூட்டர் //

  இது வேறயா...

  ReplyDelete
 4. //பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.//


  ஜாக்கியண்ணனுக்கு பெரிய மனசு, அதெல்லாம் மன்னிச்சிருவாரு!

  ReplyDelete
 5. தப்புதான் வேலை காரணமாக படிக்காமல் போஸ்ட் செய்து போய்விட்டேன்...இப்போது வந்து பிழை திருத்தி விட்டேன்...

  நன்றி பிரபா..

  நன்றி வால்...நல்ல டைமிங் வால்...

  ReplyDelete
 6. அபாய எச்சரிக்கை மிசின் மூலம் பல லட்ச உயிர்களை காப்பாற்றி உள்ளது ஜப்பான் அரசு. ஹிரோஷிமா, நாகசாகி இழப்பை கண்ட ஜப்பான், இந்த சுனாமி இழப்பில் இருந்து விரைவில் மீண்டு விடும். அதுதான் ஜப்பான்!

  ReplyDelete
 7. உங்களுக்கு கடிதம் எழுதிய ஜெய்செல்வம் ராம்குமார் அவர்களின் கருத்துக்களை நான் ஆமோதிக்கின்றேன். உண்மையில் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு இங்கே போதுமான பாதுகாப்பு இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அதை புரிந்து கொண்டு இந்த 'சமுக காவலர்கள்' அதற்கு தக்க நடவடிக்கை எடுத்தால் சந்தோசம். ஆனால் அதை விட்டுவிட்டு உங்களிடம் சண்டை பிடிப்பது எந்த வகையில் நியாயம்? அப்படி திட்டவேண்டுமென்றால் கௌதம் மேனனை நேரடியாக சந்தித்து திட்ட வேண்டியது தானே?

  ReplyDelete
 8. மைனஸ் ஓட்டு போட்டு தனது சேவையை திறம்பட செய்யும் நண்பர்களுக்கு, இண்ட்லியில் 25+தமிழ்மணத்தில்2 ஆக மொத்தம்...27 பிளஸ் ஓட்டு... எப்பூடி....????

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner