சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டு பிளஸ்) புதன்/30/03/2011


ஆல்பம்...

இன்று இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேச்.. இரண்டு நாட்டு பிரதமரும்  குன்றேறி யானைப்போர் பார்த்துவிட்டார்கள்.ரசிகர்கள் 3 மணி நேரத்துக்கு முன்னே வந்து விட வேண்டும் என்று கட்டளை போட்டு இருந்தார்கள்.. விமான எதிர்ப்பு பிரங்கி எல்லாம் மைதானத்துக்கு பக்கத்தில் நிறுத்தி  இருக்கின்றார்கள். இவ்வளவவு பாதுகாப்போடு நடக்கும் போட்டி எனக்கு தெரிந்து இதுதான் என்று நினைக்கின்றேன்.
==============
நச் என்று நடுமண்டையில் பொது இடத்தில் கொட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்து இருக்கும் தருமபுரி தேமுதிக வேட்பாளர் பாஸ்கர் நிலமை... இப்படி ஓவர் நைட்டில் பேமஸ் ஆவோம் என்று  நேற்று காலை காபி குடிக்கும் போது கூட யோசித்து பார்த்து இருக்கமாட்டார்.. இரண்டு தட்டுதான் ஆனால் எரிச்சலில் பலமான தட்டு என்பது எனது கேமரா கண்ணுக்கு பிடிபட்ட விஷயம்..
அப்படி இப்படி என ஜப்பான் கதிர் விச்சு கொரியா பக்கம் தலைக்காட்டி விட்டது.. இதுக்கு ஜப்பான் தவறு இல்லை என்றாலும் உலக நாடுகளிடம் ஜப்பானுக்கு இது பெரிய பின்னடைவுதான்..
============
கடலூரில் புறநகரில்  சாஷன்  கெமிக்கல்ஸ் என்ற ஆலை வந்த பிறகு எங்கள் நகரத்து மக்கள் படும அவஸ்த்தை கொஞ்சம் நஞ்சமல்ல..பழைய நகரத்துக்கு பக்கம் இருக்கும் பல மீனவ கிராமங்கள் இந்த கெமிக்கல் ஆலையால் பாதிக்கபட்டன.. ஒரு வாரதுதக்கு முன் விஷவாயு  கசிந்து 75 பேருக்கு மேல் பாதிக்கபட்டார்கள்.இப்போது ஆலையை முடி இருக்கின்றார்கள்... அதனை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பம்.... காரணம் விபரீதம் ஏற்பட்டால்  இந்திய வரைபடத்தில் போபாலுக்கு அப்புறம் எங்கள் ஊர் கடலூரும் இடம் பெரும்....
===================


இந்தவாரசலனபடம்.

இந்த விளம்பரத்தை பார்த்தா எனக்கு அப்படியே பிளாஷ்பேக்போனா, சரியா ஹீமேன் கார்ட்டுன் போடுவதற்கு முன் இந்த விளம்பரம் வரும்.
மிக்சர்..

நீண்ட நெடிய இரவு முழுவதும் விழித்து இருந்தேன். எவ்வளவுதான் தெளிவாக காய் நகர்த்தினாலும் சில நேரங்களில் தவறு ஏற்பட்டு விடுகின்றது... சினிமா ஒரு மாயவலை என்று தெரிந்தும் அதனுள் வந்தது தவறு என்று ஒரு மனதும் தவறில்லை என்று ஒருமனதும் இரவு முழுவதும் பேசிக்கொண்டன... பின்புலம் இல்லாமல் சினிமாவில் சாதிப்பது என்பது மிகப்பெரிய விஷயம் போல...ஒளிப்பதிவாளன் என்று சினிமாவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்... பட் சினிமாவில் எதுவாக இருந்தாலும் பராவாயில்லை என்று முடிவுக்கு வந்து விட்டேன்.. இல்லை கொஞ்சநாள் சினிமாவுக்கு கேப் விட்டு விடலாமா? சினிமாவில் சிறிதளவு நேர்மை என்பது கூட இல்லை என்பது வெட்கபடவேண்டிய விஷயம்தான்..படித்தவன் என்று மதிப்பு வைத்தவனும் தன் புத்தியை காட்டி விடுகின்றான் என்ன செய்ய?? உலகைகாக்கவந்த பரம்பொருளாய் தன்னை பாவித்துக்கொள்பவர்களிடம் என்னவென்று விவரிப்பது எனது மனதின் வலியை... ஆமாம் எதுவாகிலும் புலம்ப எனக்கு என்று ஒரு இடம் இருக்கின்றது... அதனால் பிரச்சனை இல்லை.. மனதில் போட்டுகொண்டு குழம்பிக்கொள்பவன் நிலையை நினைத்தால் கொடுமையோ கொடுமை.
======================

நேற்று இரவு முழவதும் ஒரு பொட்டுகூட கண் உறங்கவில்லை... காரணம் ஒரு நம்பிக்கை துரோகம்... சினிமாவில் நம்ப வைத்து கழுத்து அறுப்பதை கேள்விபட்டு இருக்கின்றேன்... ஆனால் முதன் முதலாக அதனை அனுபவக்கும் போது வலி மிக அதிகமாக இருக்கின்றது..நாக்கு சுத்தம் என்பது இல்லவே இல்லை...அதனால் இரவு முழுவதும் விடிய விடிய விஜய்டிவி பார்த்தேன் பாட்டையே போட்டு போராடிக்காமல் அவர்கள் ஒளிபரப்பிய நல்ல நிகழ்ச்சிகளில் இருந்து பல நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பு செய்தார்கள்... நன்றாகவே இருந்தது.. அதனை மற்ற தொலைகாட்சிகளும் பலோ செய்யலாம்...
================

மக்கள் தொலைகாட்சியில்  இணையத்தில் கூட விஜயகாந்த் தனது வேட்பாளரை தட்டியதை கண்டித்து பதிவுகள் எழுதபட்டு இருக்கன்றன.. என்று காட்டும் போது எனது வலைதளத்தில் இருக்கும் கட்டுரை தலைப்பு மட்டும் காட்டினார்கள்..அதனை தொலைகாட்சியில் பார்த்து விட்டு போன் செய்து தகவல் சொன்ன சீர்காழி ஜானகி மற்றும் இன்னோரு நண்பர் பேர் தெரியவில்லை.. அவருக்கும் என் நன்றிகள்.
===========
 விமான எதிர்ப்பு ஏவுகனை எல்லாம் மொகாலி ஸ்டேடியத்தில்  ஏன் நிற்க்கின்றது என்பதை தொலைகாட்சியை பார்க்கும்  போது தெரிந்து விட்டது... இந்தியாவின் எல்லா பெரிய தலைகளும் மூகாம் இட்டு இருக்கின்றன...29 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்று பைனலுக்கு போனதுக்கு சச்சின் கை தூக்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்... அதே போல காங்கிரஸ் தலைவி சோனியாவும் அதே போல இரு கை தூக்கி  ,ராகுல்காந்தியோடு பொதுவெளியில் இந்தியாவின் வெற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது மிக அழகு..
===========================
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு   சென்னையில் கலைஞர் இலவச தொலைகாட்சி கொடுத்தும் எல்லா டிவி கடைகளிலும் பெரிய  கூட்டம் செமிபைனல் பார்க்க நின்று கொண்டு இருந்தது... பெரிய ஆச்சர்யம்.

============
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அழகாக சிரித்தது அந்த நிலவு... அதுதான் இதுவோ.... கிளாசிக் வகைபாடல்களில் தவறாமல் இடம் பெறவேண்டிய பாடல் இது..
 =================
இந்தவார கடிதம்...
Hi Sekar,

     I am a regular reader of your column , I like your colloquial style of writing . Congratulations to you and your wife on the arrival of your new daughter . How is your wife and daughter doing ? I am happy to hear that you have named your daughter as Yazhini which reminds a lot of things music , tamil and our tamil city Yazhpaanam  known as Jaffna .I have a daughter named shruthi who is four years now , we are having a nice time with her . I was in US when my wife delivered the baby so i missed the experience and your thread on your wifes pregnancy brought back those memories to me . In my opinion during the early stages girls  are more fond of daddy and slowly move , their closeness towards mommy they are very expressive . I wish you once again to enjoy the fun filled day with your wife and daughter . 

Regards,
Kailash
===================
மிக்க நன்றி கைலாஷ்..  உங்கள் அனுபவத்தை என்னோடு பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்... உங்கள் மகள் உங்களை விட்டு விட்டு  அவள் அம்மாவிடம் மெல்ல போய் ஓட்டிக்கொண்டாளா? பார்ப்போம்.. உங்கள் வாழ்த்துக்கு மிக்க  நன்றி...உங்கள் மகளுக்கு என் அன்பை சொல்லுங்கள்..
========
பிலாசபி பாண்டி
கொய்யால உனக்கு நேரம் நல்லா இருந்தா உன் தப்பு கூட ஜோக்கா மாறிடும்...இதுவே உனக்கு கிரகம் புடிச்சி ஆடுச்சின்னா உன் ஜோக்கு கூட பெரிய தப்பா மாறிடும்....இன்னா பிரியுதா??
============
 சினிமா நியூஸ்

தெலுங்குல இப்ப நான் பார்க்கவேண்டும் என்று நினைத்து இருக்கும் படம்... சக்தி....
===========

இப்போது வந்து ஓடிக்கொண்டு இருக்கும் படத்தில் குள்ளநரிக்கூட்டம் படம் நன்றாக இருப்பதாக சொல்கின்றார்கள்..
=============
நான்வெஜ் 18+
கணேஷ் ஒரு பெரிய பன்னி மேல உட்கார்ந்து கிட்டு சோகமா வந்துகிட்டு இருந்தான்.. அவன் பிரண்ட் சுரேஷ், ஏன்டா மச்சி இம்மாம் பெரிய  பன்னியை எங்கடா புடிச்சேன்னு ஆச்சர்யமா கேட்டான்.. அதுக்கு கணேஷ் ஒரு விளக்கை கொடுத்து, இதை தேச்சா பூதம் வரும் அதுகிட்ட நீ ஆசைபட்டதை  கேளு கொடுக்கும்னு சொன்னான்.. உடனே சுரேஷ் ஆர்வமாகி விளக்கை தேச்சி பூதத்தை வரவச்சி எனக்கு சூப்பரான ஒரு குட்டி வேனும்னு  கேட்டான்... உடனே அவன் உடம்புல பெரிய கட்டி வந்துடுச்சி...ஓத்தா குட்டி கேட்டா என் உடம்புல கட்டி கொடுக்கற நாற பூதமேன்னு பூதத்தைதிட்டினான் சுரேஷ்.. அதுக்கு பூதம் சொல்லுச்சி எனக்கு காது கொஞ்சம் செவிடு அதனால இப்படி ஆயிடுச்சின்னு உடனே சுரேஷ் கணேஷை பார்த்தான்  பெரிய பன்னியை பார்த்தான்... கணேஷ் நீ பூதத்துக்கிட்ட என்னகேட்டு இருப்பன்னு எனக்கு தெரிஞ்சி போச்சின்னு சொன்னான்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

=========

9 comments:

 1. தலைவரே........... அந்த ரஸ்னா பாப்பா தான் லண்டன் படத்துல பிரசாந்துக்கு ஜோடியா வர்ற அங்கீதா...

  ReplyDelete
 2. தலைவரே........... அந்த ரஸ்னா பாப்பா தான் லண்டன் படத்துல பிரசாந்துக்கு ஜோடியா வர்ற அங்கீதா...

  ReplyDelete
 3. //காரணம் ஒரு நம்பிக்கை துரோகம்//

  வருந்துகிறேன் ஜாக்கி. ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு கடந்து செல்லுங்கள். உங்களுக்கான கதவு விரைவில் திறக்க வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 4. //அப்படித்தான் இருந்து இருக்கும் தருமபுரி தேமுதிக வேட்பாளர் பாஸ்கர் நிலமை... இப்படி ஓவர் நைட்டில் பேமஸ் ஆவோம் என்று நேற்று காலை காபி குடிக்கும் போது கூட யோசித்து பார்த்து இருக்கமாட்டார்.//

  நல்ல வேலை அவர் ஸ்டைல்ல காலால உதைக்காம போனாரே...

  ReplyDelete
 5. குழந்தை நலம்!
  \http://doctorrajmohan.blogspot.com/

  ReplyDelete
 6. நம்பிக்கை துரோகத்தை மறக்கும்படியான நல்லதொரு நிகழ்வு சீக்கிரம் நடக்க வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 7. தொலைகாட்சியில் பார்த்து விட்டு போன் செய்து தகவல் சொன்ன சீர்காழி ஜானகி மற்றும் இன்னோரு நண்பர் பேர் தெரியவில்லை.. அவருக்கும் என் நன்றிகள்/// thanks

  ReplyDelete
 8. http://jmdtamil.blogspot.com/2011/03/blog-post_31.html
  இறுதி போட்டிக்கு வருகிறான்! இனவெறி பிடித்தவன்!

  உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி! மும்பையில் ஏப்ரல் 2 -ம் தேதி நடக்க இருக்கிறது!
  இறுதி போட்டியில் இந்தியாவும், இலங்கையும் களம் காணுகின்றன.... பாதுகாப்பு பலபபடுத்தப்பட்டுள்ளது, போட்டியை காண பெரிய வி. வி.ஐ.பி. கள் வருகின்றனர்,

  அது மட்டும் இல்லை, இன வெறி பிடித்த இலங்கை அதிபர் ராசபக்சே- வும் வருகிறார்.
  இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் பந்துலா ஜெயசேகரா இதை தெரிவித்துள்ளார்.

  டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியை காண வந்த ராஜபக்சேவுக்கு எதிராக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தமிழின உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைப்போல மும்பையில் நடைபெறும் இந்த போட்டியை காண வரும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழின உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
  இதைவைத்து தமிழக அரசியலும் அரங்கேருமாம்!..
  இனத்தை அழித்தவனக்கு!
  இன்முக வரவேற்ப்பா!

  ReplyDelete
 9. கருத்தை சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.


  யெஷிகா அந்த பொண்ணுன்னு எனக்கு தெரியும்....

  நன்றி அமரபாரதி,பொன்சந்தர்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner