சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டு பிளஸ்) புதன்/23/03/2011


ஆல்பம்
பெங்களூரில் நல்ல வெயில் அடிக்கின்றது.. நேற்று சென்னைக்கு வந்தேன்.. செம வெயில் தர்பூஸ் 10 மணிக்கே சக்கைபோடு போட ஆரம்பித்து விட்டது...பெங்களூர் பெருத்து போனதற்க்கான காரணம் எனக்கு எளிதில் புரிந்து விட்டது...வெயில்தான் கடுமையாக இருக்கின்றது வாகனத்தில் சென்றால் நம் மேல் குளிர்காற்று வீசுகின்றது. இலையுதிர்த்து சென்னை மரங்கள் காணப்படுகின்றன. அதனால் ஒரு மாதத்துக்கு பிறகு சென்னையை பார்த்து போது வித்யாசமாக காணப்பட்டது.



வைகோவின் தேர்தல் புறக்கணிப்பை எல்லோரும் வாழ்த்துகின்றார்கள்.. அவருக்கும் வேறு வழியில்லை.. கடைசி பேருந்துக்கு வெயிட்டிங்கில் இருக்கின்றார்.. அதுக்கு மேல் எந்த பேருந்தும் இல்லை, ஆனால் அந்த  கடைசி பேருந்து அவரை ஏற்றிக்கொள்ளவில்லை, அவருக்கு வேறு வழியும் இல்லை.. ஆனால் அடி மட்ட தொண்டன், வட்டம், மாவட்டம், எல்லோரும் தேர்தலுக்கா அதன் மூலம் புழங்கும் சரக்கும், பணத்துக்காகத்தான் இதுநாள்வரை காத்து இருந்து இருப்பான்.. தேர்தல் புறக்கணிப்பு சாமான்ய தொண்டனுக்கு பெரிய வருத்தம்தான்..
=====================
இந்தவாரசலனபடம்..

காரில் போகும் போது இந்த  பாடலை கேட்டு பாருங்கள் அற்புதமாக இருக்கும்... இந்த பாடல் அந்த படத்தில் பிரபலமான மற்றபாடல் போல் இந்த பாடல் பிரபலமாகவில்லை... இருந்தாலும் இந்த பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.. ஒருஷாட்டில் பிந்து கோஷ் வருவார்...அந்த காலத்து பார்ட்டி எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.. அந்த காலத்து பிகர் ஸ்ரீதேவி ஒரு பெரிய கண்ணாடி போட்டு கொண்டு ஒரு ஸ்டெப் போடுவாங்க பாருங்க அதை என்னைக்கு மறக்க முடியாது..





==================

மிக்சர்..
பெங்களூரில் பிள்ளைபெற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பவர்கள்... ரிச்மன்ட் சர்க்கிள் அருகில் இருக்கும் ரிபப்ளிக்  மருத்துவமணையில் இருக்கும் பெண் மருத்துவர்  இந்துமதி அவர்களை சந்தியுங்கள்... கடைசி வரை நார்மல் டெலிவரிக்குமுயற்ச்சி செய்கின்றார்...முடியவில்லை என்றால் மட்டுமே சிசேரியன் பிரசவம்... உங்களுக்கு இண்ஷுரனஸ் இருக்கின்றது என்றாலும்...அதே மருத்துவமணையில் இருக்கும் பல மருத்துவர்கள் சிசேரியனுக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கின்றார்கள்..


 பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் அரசு போக்குவரத்துகழக பேருந்துகளில் முக்கியமாக அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் பயணிக்கும் போது மூட்டை பூச்சி தொல்லை அதிகம் இருக்கின்றது. விட்டுக்கு போனதும் அணிந்த துணிகளை தீட்டு பட்ட துணி  போல பாவித்து அதனை உடனே துவைத்து போட்டு விடுங்கள்....கண்டக்டரை கேட்டேன்.. கேபிஎன் எல்லாம் வாரத்துக்கு ஒரு செட் சீட் மாத்தி மருந்து அடிச்சி வெயிலில் காய வைத்து வண்டியை எடுத்து வருகின்றார்கள்.. பட் நம்ம போக்குவரத்து கழகத்துல  சொன்னா யார் காதுல போட்டுக்க போறாங்க.... என்றார்..
===============


இந்தவார கடிதம்.
Hi Jackie,

Wishes on the arrival of your little angel..Nalvalthukkal..
Mine might be late wishes..oru 1 week matttum unga site pakkam varla athan..

take care of ur mom(little angel) and her mom..enjoy these sweet days...

Thanks,
Sathya
மிக்க நன்றி சத்யா...
==============

இந்தவார புகைபடம்
 தாய்லாந்தில்  ஒரு ரீசர்ட்டில் இருக்கும் நீச்சல் குளம் இது. பார்க்கும் போதே போகனும்னும் குளிக்கனும்னு தோனுது  இல்லை..
==========
பிலாசபி பாண்டி
உலகில் நடக்கும் எல்லாம் வேடிக்கைதான்.. உனக்கு அது நேரும் வரை...
 ==============
நான்வெஜ்..18+
எல்லா லட்சனத்தோட ஒரு புருசன் வேனும் என்பதை விட தனக்கு எப்படி புருசன் வேணும்னு? பேப்பர்ல விளம்பரம் கொடுத்தா...
என்னை அடிக்க கூடாது..
என்னை விட்டு எங்கேயும் போக கூடாது
ஆண்மை அதிகம் இருக்கனும்னு இந்த தகுதி இருந்தா கல்யாணம் பண்ணிக்க ரெடின்னு அவ பேப்பர்ல விளம்பரம் கொடுத்தா... மறுநாள் காலையில வீட்டு காலிங் பெல் அடிச்சிது... கதவை திறந்து பார்த்தா.. கால் கை இரண்டையும் கயிற்றால் கட்டிக்கொண்டு ஒருவர்  சக்கர நற்காலியில் உட்கார்ந்து  இருந்தார்...நீங்க கேட்டாபோல மாப்பிள்ளை நான்தான்...நான் உங்களை கை நீட்டி அடிக்கமாட்டேன்.நான் எங்கயும் போவாமா உன்க கூடவே இருப்பேன்.. என்று சொல்ல.. அப்ப ஆண்மை பற்றி கேள்வி கேட்க? நான்தனியாதான் வந்தேன்...நான்தான் காலிங்பெல் அடிச்சேன்.. ஆனால் கையால் இல்லை என்று அவர் சிரித்துக்கொண்டு  சொன்னார்.,.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....





(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS... 
 


=========================

10 comments:

  1. நான்வெஜ் கொஞ்சம் இடிக்கிறது.அதையே வேற மாதிரி மாற்றி சொல்லி இருக்கலாம்.

    ReplyDelete
  2. நிச்சயமாக இது போன்ற பேருந்தில் தான் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பயணிக்க வேண்டி இருக்கும்...

    http://mightymaverick.blogspot.com/2011/03/blog-post_23.html

    ReplyDelete
  3. வழக்கம் போல் கலக்கல்

    ReplyDelete
  4. "FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD"
    அது , But FOR some Person you are the World- அப்பிடின்னு இருக்கணும்னு நினைக்கிறேன்.
    (தவறென்றால் மன்னிக்கவும்)

    ReplyDelete
  5. வைகோ வின் விஷயத்தில் உங்களின் புரிதல் போதவில்லை என நினைக்கிறேன்.
    வைகோ வை கடைசி பேருந்தும் புறக்கணிக்கவில்லை மாறாக அதன் ஓட்டுனரின் போதை நிலையை கண்டு அதை புறக்கணித்தார் அடுத்து அதற்கு முன் சென்ற பேருந்து திரும்ப வந்து இதயத்தில் இடம் கொடுத்து அரசல் புரசலாக அழைத்த போதும் அதை செவிமடுக்க மறுததார்.
    வைகோ ஒரு தன்மானமிக்க தமிழர்க்கு ஒரு தலைவன்

    ReplyDelete
  6. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    ReplyDelete
  7. Yes, Traveling in setc/tnstc buses is nightmare for most of the commuters, i had that kinda experience when traveling from palani to chennai, on the way we passengers complained in madurai depot, they said cleaning services contract expired six months, they didn't renewed the contract, and also no fund to pay them and very next week government announced salary hike for transport employees, and i happens to read transport financial report which states a 3 lakh loss per day, and the reason in too much employees for per bus.

    ReplyDelete
  8. ஆண்மை பற்றி கேள்வி கேட்க? நான்தனியாதான் வந்தேன்...நான்தான் காலிங்பெல் அடிச்சேன்.. ஆனால் கையால் இல்லை என்று அவர் சிரித்துக்கொண்டு சொன்னார்.!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  9. ஜாக்கி, மிகவும் சரி, பொதுவாகவே பெங்களூரிலிருந்து செல்லும் அரசு பேருந்துகளில் (SETC) மூட்டைப்பூச்சி தொல்லை அதிகம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner