சென்னை(ஓ.எம்.ஆர்) தகவல் தொழில்நுட்பசாலை ஒரு பார்வை..



நண்பருக்கு ஒரு வேலை ஆக வேண்டும்.. அவர் வெளிநாட்டில் இருக்கின்றார்... அதனால் அவர் சந்திக்க சொன்ன ஒரு நண்பரை சந்திக்க பழைய ஓ.எம்.ஆர். என்று அழைக்கபட்டு இன்றைக்கு ராஜிவ்காந்தி சாலை என்று அழைக்கப்படும் சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலை வழியாக துரைப்பாக்க்ம் சென்றேன்.

 சரியா துரைப்பாக்கம் ஜெயின் காலேஜ்  பஸ் ஸ்டாப் அருகில் அவரை சந்திக்க வேண்டும்..அவரை பத்து மணிக்கு வரச்சொல்லி இருந்தேன்.... நான் ஒன்பது மணிக்கே அந்த இடத்துக்கு போய் விட்டேன்..ஆனால் நண்பரின் நண்பர் அந்த இடத்துக்கு வர இரண்டு மணி நேரத்துக்கு மெல் ஆகிவிட்டது...

அந்த இரண்டு மணி நேரம் அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த போது நான் பார்த்த விஷயத்தை உங்களிடம் எனது பார்வையில் பகிர்ந்து கொள்கின்றேன். சிலருக்கு இது குப்பையாக இருக்கலாம் அவர்கள் இத்தோடு அப்பிட்டாகிவிடுவது நல்லது....

பகட்டு இல்லாத இதே பழைய மகாபலிபுரம் சாலையில் நான் பைக்கில் கடலூருக்கு பயணித்து இருக்கின்றேன்... அப்போது எலலாம் பெரிதாய் பரப்ரப்பு இல்லாமல் இருக்கும்...இந்த சாலையில் சில என்ஜினியரிங் காலேஜ்கள் மற்றும்  சிறுதொழிற்சாலைகள் தொடங்கியதும் இந்த சாலையில் போக்குவரத்து காணப்பட்டது...அதுவும் காலை மற்றும் மாலை மட்டுமே...  அந்த சின்ன பரபரப்புக்கு இந்த சாலை தன்னை ஆட்படுத்திக்கொள்ளும்....


பெங்களூர் இதுக்குமேல் பிதுங்கி வெடித்து விடும்  என்ற நிலையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்  சென்னைக்கு படையெடுக்க ஆரம்பித்தன.. அரசு பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க அனைத்து  உதவிகளையும் செய்தது...அரசு அவர்களுக்கு பழைய மகாபலிபுரம் சாலையை சுட்டிக்காட்டியது... காரணம் அது விமான நிலையத்துக்கு மிக அருகில் இருந்ததும் அதுக்கு முக்கியகாரணம்.....

2005ல் ஆரம்பித்தது இந்த எக்ஸ்பிரஸ்வே பிராஜெக்ட். நான் அப்போதுதான் அதே சாலையில் கேளம்பாக்கத்துக்கு முன் இருக்கும் படூரீல் புகழ் பெற்ற இந்துஸ்தான்கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தேன்... நாங்கள்  கல்லூரி பேருந்தில் போகும் போது இந்த எக்ஸ்பிரஸ்வே எப்படி எல்லாம் மாறியது என்று எனக்கு  தெரியும்...மாந்தோப்பும் சதுப்பு  நிலமும் எப்படி காண்கிரிட்காடுக்ள் ஆயின என்பதையும் அந்த வளர்ச்சியை நான் மிக அருகில் இரந்து கவனித்து இருக்கின்றேன்.

கந்தன்சாவடி மற்றும் பெருங்குடி அருகே இருக்கும் வீடுகள் கடைகள் என்னவாகும் என்று பார்த்தால் இரண்டு மாதத்தில் அவைகள் இடித்து நொறுக்கபட்டது... சாலைகள் அகலபடுத்தபட்டன.. எத்தனை மழைகள் எவ்வளவு இடையூறுகள் என கடந்து 2009ல் இந்த சாலை முழுதும் பயண்பாட்டுக்கு வந்தது...

பழைய சாலையில் சோழிங்கநல்லூர் தாண்டினால் இரண்டு பக்கமும் மாந்தோப்பு இருக்கும் செம்மண் பூமி என்பதால் அந்த பசுமை அவைகளின் முகங்களில் தெரியும்... இந்த சாலையில் நிறைய விபத்துக்களை பார்த்தவன் நான்..முக்கியமாக இன்போசிஸ் கம்பெனி அருகே நிறைய விபத்துக்களை நான் பார்த்து இருக்கின்றேன்..

இப்படி பார்த்து பார்த்து பழகிய சாலையில் இரண்டு மணி நேரம் நிற்க வாய்ப்பு வந்த போது பழைய ஞாபகங்கள் வந்து குதியாட்டம் போட்டன.. இதே சாலை  விரிவாக்க்ம செய்த போது டிராபிக் ஆகி கல்லூரி பேருந்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் எல்லாம் காத்து இருந்து இருக்கின்றேன்....

முதலில் இந்த சாலையில்  ஏற்பட்டு இருக்கும் பெரிய மாற்றம்..எல்லா டீக்கடைகளிலும் கிளாசில் டீ கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்... அது இப்போது சுத்தமாக இல்லை... ரொம்ப ஹைஜினிக்கா கடைகாரர்களே மாறிவிட்டார்கள்.. அதனால் பேப்பர் கப்பில்தான் டீ கொடுக்கின்றார்கள்.. மறந்தும் கண்ணாடி கிளாசில் டீ கொடுப்பதில்லை எனக்கு டீ  கிளாசில் டீ குடிப்பதுதான் பிடிக்கும்..


சாலையில் வாகனங்கள் எறும்பு போல் சாரை சாரையாக இடைவெளியில்லாம்ல் போய் கொண்டே இருக்கின்றன.. நான் கல்லூரிக்கு வேலைக்கு போகும் போதாவது கொஞ்சமாவது கேப் இருக்கும் இப்போது எல்லாம் அப்படி இல்லை.. இடைவிடாது வாகனங்கள் பயணித்துக்கொண்டு இருக்கின்றன.

டூவிலர்கள் அதிகபட்சவேகம் 60தாண்டி பறக்கின்றன... அதுமட்டும்அல்ல எப்போதுமே அந்த ரோட்டில் பேய் வேகத்தில் செல்லும் பேருந்துகள்.. ஜேப்பியாரின் கல்லூரி பேருந்துகள்தான்.... அதுக்கு இணையாக நிறைய கார்கள் பயணிக்கின்றன... நிறைய வெளிநாட்டு கார்களை சர்வசாதாரணமாக பார்க்கமுடிகின்றது.
அதே போல் கார்களில் ஒருவர்தான் பயணம் செய்கின்றார்... மாநகர பேருந்துகள் வழக்கம் போல் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை இறங்கி ஏற்றுவதால் டிராபிக் ஜாம் திடிர்  திடிர் என்று ஏற்படுகின்றது....

எத்தனை வேகத்தில் கார் போனாலும் நாம் பரம்பரை  பரம்பரையாக ரோட்டை கடக்கும் யுத்தியைதான் இங்கும் நிறைய பேர் பயண்படுத்துகின்றார்கள்.. அது என்ன யுத்தி... எத்தனை பெரியவாகனம் வந்தாலும் எந்த வேகத்தில் வந்தாலும் தமிழக மக்கள் ஜஸ்ட்லைக்த்ட்டாக சாலையை கடக்கும் அதே யுத்திதான்..

// ஓத்தா வண்டியை ஸ்லோ பண்ணு என்பது போல்,  நிறுத்துவது போல கைகாட்டிக்கொண்டு அந்த இடத்தை சாவகாசமாக நடந்து கடப்பது....//

சென்னையில் ஓடும் முக்கால்வாசி  ஓல்வோ பேருந்துகள் கேளம்பார்க்கத்தை  தொட்டு விட துடித்துக்கொண்டு இருப்பது கண்கொள்ளாக்காட்சி... எல்லா பேருந்தும் நிரம்பி வழிந்து கொண்டு  செல்கின்றன.. ஆட்டோ கட்டண கொள்ளைக்கு சரியான  மாற்று என்பதால் எல்லோரும் ஓல்வோ பேருந்துகிளில் பயணிக்கின்றனர்...

பெண்கள் வாகனங்களில் விரைகின்றனர் கைகளில் கிளவுஸ், சுடிதார் ஷாலை முகமுடியாக்கி ஹெல்மெட் போட்டு புலான் தேவிக்கு  அக்கா பெண் போல பற்க்கின்றனர்... இப்படி மறைத்துக்கொண்டு செல்ல எதுக்கு லிப்ஸ்ட்டிக், லிப்லைனர், புருவத்தை மழித்தல் வரைதல் எல்லாம்?? சரி ஆபிசில் பளபளப்பாக இருக்கவேண்டும் அல்லவா?

நிறைய பெண்கள் பாய்பிரண்ட் புட்டம் மேல்பக்கம் தூக்கிய இருசக்கர வாகனங்களில் பறக்கின்றனர் பொதுவாய் டிசர்ட் மற்றும் ஜீன்சில் உடலை  சொருகி இருக்கின்றார்கள்..வாயில்லா ஜீவன்கள் கசங்கி சிரமபடுவதை பற்றி கிஞ்சித்து கவலைகொள்ளவில்லை.. குரங்குகள் மாடி  விட்டு மாடி தாவி செல்லும் போது குட்டிக்குரங்கு அம்மா குரங்கை இருக்க பற்றிக்கொள்வது போல பாய்பிரண்ட் முதுகை இறுக்கி கட்டிக்கொண்டு அதிலே படுத்து படி செல்கின்றார்கள்.. பாய் பிரண்டுகள் முன்பு போல் பிரேக் அடித்து தங்கள் சிற்றின்ப சந்தோஷத்தை அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.. முழுக்க சரணாகதி அடைந்து விட்டதால் எந்த பாய்பிரண்ட் வைத்து இருக்கும்  இரு சக்கர வாகனத்திலும் பிரேக் ஷு அதிகம் தேய்வதில்லை.....

ஆண்கள் டை கட்டி அது பறந்தபடி ஹெல்மெட் போட்டு விரைகின்றனர்... நிறைய பார்மல்ஸ்...உடையில் பயணிக்கின்றனர்... ஆபிசில் போய் பெண்களிடம் வெல் மிஸ் மஞ்சரி என்று ஆரம்பிக்க அந்த உடைதான் ஏற்ற உடை போல......

நான்கு ஸ்டேட் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு பிறந்த நகரத்தை விட்டு வெகு தொலைவு வந்து இருக்கின்றார்கள்.. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம்... முக்கியமாக நார்த் இண்டியன் பெண்கள் அதிகம்..  நிறைய  நார்த் இண்டியன் பெண்கள் குடை இல்லாமல் நடப்பதில்லை குடைபிடித்து நடக்கும் பெண்கள் ஸ்லிவ்லெஸ் அணிந்து, நேற்று ஆக்குளில் பெம் போட்ட இடத்தை தாராளமாக காட்டுகின்றார்கள்... அவர்கள் அத்தனை பேரும் ஓல்வோ பேருந்துக்குக்கு மட்டும் வெயிட் செய்து கொண்டு இருக்கின்றார்கள்..


நிறைய பேருந்துகள்... எப்படியும் 600 டிரிப்புக்கு மேல் அரசு பேருந்துகள் அடிக்கும் என்று நினைக்கின்றேன்... அதில் பாதிக்கு பாதி இந்த சாலையில் இருக்கும் கல்லூரி பேருந்துகளும் அதிகம்...

முக்கிய சந்திப்புகளில் நடை மேம்பாலம் இருந்தும் ஒரு சிலரை தவிர  மக்கள் அதை யாரும் உபயோகிப்பது இல்லை...


அந்த சாலையில் இருக்கும் எல்லா டீகடைகளிலும் இடுப்பில் ஐடிகார்டு தொங்கி கொண்டு கையில் சிகரேட் வைத்து டீ குடிக்கும் நிறைய பையன்கள் காணலாம்.. அதே போல பெண்களும் இப்போது  சாலை ஓர டீக்கடைகளில் டீ குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்..


ஷேர் ஆட்டோக்கள் நிறைய ஓடுகின்றது ஷேர் ஆட்டோக்களில் இரண்டு வரிசையில்  பெண்கள் ஆண்களோடு அவசரத்துக்கு தோள் மற்றும் மார்பு உரச நெருக்கி  உட்கார்ந்து பயணிக்கின்றார்கள்.. மேல்வரிசையில் உட்கார்ந்து பயணிக்கும் போது லெக்கின்ஸ் போட்டு இருந்தாலும் அல்லது எது போட்டு இருந்தாலும் சகலமும் அடிவரை தெரிகின்றது... ஒரு ஆட்டோவில் போன பெண்ணுக்கு சுடிதாரின் அடி பாட்டம் கிழிந்து இருந்தது... நடக்கும் போது நிற்கும் போது இது  தெரியபோவதில்லை  இன்று அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் என்று  அந்தா பெண் பிள்ளைவீட்டை விட்டு வெளியே வந்து இருக்கவேண்டும் ஆனால் அவர்களுக்கு தெரியாமலே இது நடந்து விடுகின்றது... அதனால் ஷேர்ஆட்டோவில் உட்காரும் பெண்கள் தங்கள் உடைகள் மீது கொஞ்சம் கவனம் தேவை .....

இந்த சாலையில் பெரிய கடுப்பு இன்னும் இந்த சாலை முழுமை பெறவில்லை ஆனால் டோல்வசூலிக்கின்றார்கள்... மக்கள் பயண்பாட்டுக்கு இந்த சாலை திறந்து விடப்பட்டு இரண்டு வருடம் ஆகிவிட்டடது.. ஆனால் இன்னும்  சைடில் இருக்கும் சாக்கடை பள்ளங்கள் வாயை பா என்று வாயை திறந்து கொண்டுதான் இருக்கின்றன...

இப்போதைக்கு அது போது இன்னோரு  நாளில் இன்னும் பார்வையை  விரிவாக்குவோம்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..



குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்


 

18 comments:

  1. நல்ல பதிவு, நன்றி ஜாக்கி,

    கடேசில அந்த நண்பரை பாத்தீங்களா??

    ReplyDelete
  2. இதுக்குமா மைனஸ் ஓட்டு ???

    ReplyDelete
  3. டேய் ஸ்பீட் நமக்கு மைனஸ் ஓட்டு வந்தா நாம பெரிய ஆளுன்னு அர்த்தம்..

    ReplyDelete
  4. ஆனந் கடைசியா 3 மணி நேரம் கழிச்சி அவன் வந்தான்... ஆனா வேஸ்ட் அந்த சந்திப்பு..

    ReplyDelete
  5. நல்ல அனுபவ பகிர்வு

    ReplyDelete
  6. ஓ அப்படியா சங்கதி

    ReplyDelete
  7. காதலில்தான் காத்திருப்பு சுகமானது என்பார்கள். உங்கள் சந்திப்பு வெட்டியானாலும் போஸ்ட் கெட்டியாக இருக்குது.

    ReplyDelete
  8. இப்போது யாரும் டை கட்டிக்கொண்டு அதிகம் திரிவது இல்லை. மற்றபடி நீங்கள் சொல்லும் எல்லாம் உண்மையே

    ReplyDelete
  9. அண்ணே.. நல்லாவே நம்ம ஏரியா பற்றி சொல்லியிருக்கீங்க..

    இந்த சாலையைத் தான் நாங்க தினமும் பயன்படுத்த வேண்டியிருக்கு.. காலை மாலை வேளைகளில் செம கடுப்பா வரும்.. சுமார் 3 வருஷமா சோழிங்கநல்லூர் இன்ஃபோஸிஸ் பின்புறம் தினமும் சென்று வருவதால் பல பல குறுக்கு வழிகள் தெரிந்தலால் நான் தப்பிச்சிட்டு வரேன்..

    இந்த சாலைக்கு டோல் வாங்குவது எனக்கு உடன்பாடே கிடையாது.. என்னோட இந்த பதிவை பாருங்களேன்..

    http://www.sensiblesen.com/2011/02/omr-8.html

    ReplyDelete
  10. ஒரே குப்பையாக இருக்குதே! பாஸ் அந்த படத்துலே லெப்ட்ல இருக்கறத சொன்னேன்..
    //நாம் பரம்பரை பரம்பரையாக ரோட்டை கடக்கும் யுத்தியைதான் இங்கும் நிறைய பேர் பயண்படுத்துகின்றார்கள்//.. இது சூப்பர்

    கார் எதுத்தாப்ல வந்த ரோட கிராஸ் பண்றவன் மட்டும் தான் மேல போவன், பைக் ல வந்த இவனையும் சேர்த்து கிராஸ் பண்றவன் மேல இட்டுகினு போய்டுவான்.

    ReplyDelete
  11. //"வாயில்லா ஜீவன்கள் கசங்கி சிரமபடுவதை பற்றி கிஞ்சித்து கவலைகொள்ளவில்லை"//


    hah..hah..semma line...rasithen !

    ReplyDelete
  12. சமீபத்தில் இச்சாலையை பயண்படுத்திய போது ஒரு மாட்டு வண்டி சர்வசாதரணமாக கிராஸ் பண்ணியது தான் அழகு!

    ReplyDelete
  13. // ஆபிசில் போய் பெண்களிடம் வெல் மிஸ் மஞ்சரி என்று ஆரம்பிக்க அந்த உடைதான் ஏற்ற உடை போல......// Anne !!! I don't agree this sentence .. Not every one wear the formal to talk with girls !!! Its mostly due to company policy !!!

    ReplyDelete
  14. மிக்க நன்றி கருத்து சொன்ன அனைவருக்கும்..

    கம்பெனி பாலிசியா? தகவலுக்கு நன்றி குறை ஒன்றும் இல்லை...

    நன்றி காரமடை

    நன்றி வடுவூர் குமார் பகிர்தலுக்கு

    நன்றி பாபு,,

    நன்றி கீதப்பிரியன்..


    நன்றி டியர் பாலாஜி... அது குப்பையா ?? கோமேதகம்.....


    நன்றி சென்...5வருடம் பார்த்த சாலை அதுதான்...

    நன்றி சதிஸ்

    ReplyDelete
  15. வெல் மிஸ் மஞ்சரி என்று ஆரம்பிக்க அந்த உடைதான் ஏற்ற உடை போல......
    super anna

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner