ஆழிப்பேரலை...(சுனாமி) ஜப்பான்...2011இரண்டாம் உலக போருக்கு பிறகு, உலகம் உச்சரிக்கும் பெயராக மார்ச்..11ம் தேதி ஜப்பான் மாறிப்போகும் என்று காலையில் எழுந்து பல் துலக்கும் போது  எந்த ஜப்பானியர்களும் நினைத்து  கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

நல்ல மழை பெய்து கொண்டு இருக்கும்  போது வெள்ளம் வந்தால் அது ஒரு பிரச்சனையே இல்லை.... மழை கொட்டிக்கொண்டு இருக்கின்றது அதனால் படிப்படியாய் வெள்ளம் என்று மனது சமாதனபட்டு விடும்...


 காலையில் நல்ல வெயில்... சென்னை மயிலாபூரில் காபாலியை சேவித்து விட்டு  வெளியே வந்தால்  15 அடிக்கு மேல தண்ணீர்  வேகமா வந்த கொண்டு இருந்தால்  சிவ சிவ இந்த லோகத்துக்கு போறாதகாலம் வந்துடுச்சி என்று உயிர்பிழைக்க ஓடுவோம் இல்லையா ??? அது போலதான் ஜப்பானிலும் வந்து இருக்கின்றது... நொடியில்  நகரம் வெள்ளக்காடாக மாறி விட்டடது...


யாரோ ஒரு நண்பர் அவர் பெயர் கூட எனக்கு தெரியாது.. எனக்கு எந்த நிகழ்வு நடந்தாலும் பிளாஷ்செய்தி என்று தலைப்பிட்டு வரும்....  அப்படித்தான் அந்த செய்தி எனக்கு வந்தது... முதலில் பூகம்பம் அதனால் சுனாமி என்ற அளவில் அதன் மேல் கவனம் வைத்தேன்..ஆனால் உடனே சன் செய்திகளில் சுனாமி பற்றி வீடியோ ஒளிபரப்புவதாக செய்தி வெளியாக...அதனை பார்த்த போது எனது  நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது...


கார்கள் பொம்மைகார்களாக மாறிவிட்டன... கப்பல்கள் காகிதகப்பலாக மாறி தண்ணீரில் தத்தளித்து  கொண்டு இருந்தன..

ஜப்பானியர்களுக்கு பூகம்பமோ சுனாமியோ அவர்களுக்கு  பெரிதான பயத்தை உண்டு பண்ணாது.. காரணம் அது போல பல இயற்க்கை எரிச்சல்களை அவர்கள் பார்த்து அதனோடு போட்டி போட்டு மனதிடத்தோடு வாழ்ப்வர்கள்...

பூகம்பம் வந்தால் நாம் வீட்டை விட்ட  வெட்ட வெளிக்கு வருவோம் ஆனால் ஒரு டிப்பார்ட்மேண்ட் ஸ்டோர் வீடியோவில் சில பணிப்பெண்கள் ரேக்கில் அடிக்கி வைத்த சரக்குகள் கீழே விழாமல் இருக்க பூகம்பத்தில் ஆடும்  ரேக்கை பிடித்துகொண்டு இருந்தார்கள்..

முதலில் இறப்பு எண்ணிக்கை 300  என்றார்கள்... ஆனால் வீடியோவை பார்த்த போது அது இன்னும் அதிகமாக இருக்கும் என்று  தோன்றியது.. முதலில் அது குப்பை என்று நினைத்தேன்.. கேமரா ஜும் ஆன போது  அதில் நிறைய  கார்கள் மிதந்துக்கொண்டு இருந்தன...

ஏர்போர்ட் ரன்வேயில் பிளேன் இறங்குவதை பார்த்து இருக்கலாம் ஆனால் இப்படி ஒரு ஜலவேகத்தை பார்த்து இருக்கமாட்டார்கள்....

ஒரு மழை பெய்கின்றது அதன் காரணமாக வெள்ளம்... நன்றாக தெரியும்... ஆனால் வானம் நன்றாக இருக்கின்றது.. ஆனால் பல ஏக்கர்  விமான நிலையம் சடுதியில் தண்ணீரில் முழ்குவது வாய்ப்பே இல்லாத செயல் அல்லவா?


1900ம் ஆண்டு வந்தது போல அடுத்து வந்த பெரிய ஆழிப்பேரலை இதுவே...1300 பேருக்கு மேல் இறந்து போய் இருக்கின்றார்கள்... 2லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர்...

ஜப்பான் பிரதமர் மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்....
பேராலையில் கார்களோடு குட்டி விமானங்களும் மிதந்து கொண்டு இருந்தது  அந்த காட்சியை பார்க்கும் போது இந்த உலகில் எதுவும் நடக்கலாம் என்று  சொல்லியது...

 மூன்று ரயில்கள் பேரலையில் காணமல் போனதாக தகவல் இரயில்சேவை நிறத்தப்பட்டு விட்டன...இரயிலில் பயணித்த  பொதுமக்கள் எல்லோரும் ரயில் பாலத்தில் நடந்தே தங்கள் இருப்பிடத்தை நடந்து அடைந்தனர்...100 பேர் பயணம் செய்த கப்பல் நிலை பற்றி தகவல் இல்லை....

நல்லவேளையாக சுனாமி எச்சரிக்கை காரணமாக நான்கு அணு உலையையும் மூடி இருக்கின்றார்கள். உலக நாடுகள்  உதவிக்கரம்  நீட்டி இருக்கின்றன....

இபபோது உள்ள நிலவரப்படி சுத்தமான குடிநீர் யாருக்கும் இனும் கிடைக்கவில்லை என்று சொல்கின்றார்கள்..


சுனாமி காட்சிகள்...நம்ம ஊரில் சுனாமி வந்த போது  நமக்கு இவ்வளவு வீடியோ புட்டேஞ் கிடைக்கவில்லை.. காரணம் நமக்கு அது பற்றிய புரிதல் அப்படி இல்லை...ஆனால்  ஜப்பானில் நிறைய புட்டேஜ்கள்... அவர்கள் எல்லா இடத்திலும் குளோஸ் சர்குயிட் கேமரா வைத்து இருக்கின்றார்கள.. அது மட்டும் அல்ல...  ஹெலிகாப்டரில் இருந்து ஷாட் எடுத்தது போல பல காட்சிகள் கிடைத்து இருக்கின்றன...

ஆனால் இதுவரை கேமரா பார்த்து, எந்த ஜப்பானியனும் என் உடமைகள் அழிந்து போய்விட்டன.. அரசாங்கம் எங்களுக்கு எதாவது செய்யனும்... என்று கோரிக்கை வைக்கவில்லை.. ஒரு வேளை லோக்கல் சேனல்களில் தங்கள் கோரிக்கையை  சொல்லி இருப்பார்களோ???


 சரி எது  எப்படி இருந்தாலும் இறந்து போன ஆன்மாக்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம்...உலகில் அவர்கள் தன்னம்பிக்கைக்கு ஈடு இணையில்லை.. அது தெரிந்த விஷயம்... அதனால் இயற்கை அவர்களையே வஞ்சித்து கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்...????

 
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்


10 comments:

 1. டி.வி பார்க்கும் போது  நடுங்குகிறது 

  ReplyDelete
 2. //உலகில் அவர்கள் தன்னம்பிக்கைக்கு ஈடு இணையில்லை//
  தொலைக்காட்சியைப் பார்த்தபோது புரியமுடிந்தது.
  இந்த அளவு பெரிதாக அவர்களும் எதிர்பார்க்கவில்லை.
  இன்று அவர்களுக்கு இராணுவம் உணவு வழங்குவது காட்டினார்கள்.
  பிள்ளைகள் கூட ஒழுங்கைக் கடைப்பிடித்தது. ஆச்சரியமளித்தது.
  மீண்டு எழுந்து விடுவார்கள். அமைதி கிட்டவேண்டும்

  ReplyDelete
 3. அண்ணே ஜப்பான் மீண்டும் பினிக்ஸ் பறவை போல அழிவிலிருந்து மீளும்.நம்மாலான உதவிகளை செய்வோம்

  ReplyDelete
 4. Earthquate, Tsunami, Nuclear Meltdown...this was just horrible. I just read today that a second nuclear reactor is also in danger of melting.

  ReplyDelete
 5. Hi Jackie,
  Just recently I started to read your blog and got impressed, your style is something different from others. Add me in your fan list.

  Senthil kumar, Nigeria.

  ReplyDelete
 6. naan japanil piranthiruka koodatha enna thannambikai-maga

  ReplyDelete
 7. ஜாக்கி , ஒவ்வொரு பதிவுகளின் கீழும் "மேலும் சுவைக்க" என்று வருகின்றது. இன்று தங்களின் சுனாமி அழிவினைப் பற்றிய பற்றிய இந்தப் பதிவினை படிக்கும்பொழுதும் "மேலும் சுவைக்க" என்று வருகின்றது. அழிவில் என்ன சுவை காண முடியும்..? ஆகவே "மேலும் தொடர" - "மேலும் வாசிக்க" என்று இருந்தால் எல்லா நிகழ்வுகளுக்கும் பொருத்தமாக இருக்கும்... நன்றி

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner