சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ் 17ஹார்ஸ் லேட்(பதினெட்டு பிளஸ்)புதன்

ஆல்பம்..

எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் என்று சொல்லிவிட்டு இயற்கை ஜப்பானை நைய புடைக்கின்றது...ஒரே அடியாய் சுனாமி போல அடித்து ஓய்ந்தாலும் பராவாயில்லை தினத்துக்கும் ஒரு அணு உலையை  வெடிக்க வைத்து ஜப்பான் மக்களை படாய் படித்துக்கொண்டு இருக்கின்றது...தினம் தினம் வெடிக்க வைத்து தலைப்பு செய்திகளாக வந்து கொண்டு இருக்கின்றது... வாழ்ந்து காட்டுதலை விட பெரிய பழி தீர்த்தல்  ஏதும் இல்லை என்று சொல்வார்கள்.. அதை ஜப்பான் மக்கள் வெறிகொண்டு  செய்வார்கள்..அந்த தன்னம்பிக்கையிலும் அதிஷ்ட்டமும் நேரமும் விளையாடி பார்க்கின்றது....அணு உலைகளை குளிர்விக்க கடல்தண்ணிரை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வந்து கொட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். கொடுமையே..

===
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் நண்பர் சாதிக் பாட்சா இன்று காலை தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்...நண்பருக்கே இந்த நிலை என்றால் நமக்கு? என்ற கேள்வியே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கலாம்....ஒரு காலத்தில் ராஜாவின் நண்பன் என்று சொல்வதே அவருக்கு பெருமையாக இருந்து இருக்கலாம். அதுவே இப்போது???
======
ஜெ வைகோவை இப்படி அநியாயத்துக்கு அவமானபடுத்தக்கூடாது... நல்ல பேச்சாளர், நல்ல அரசியல்வாதி ஆனால் அரசியலில் சிலர்  உசுப்பி விட்ட காரணத்தால் அவசரமாக முடிவு எடுத்த விட்டு இப்போது புலம்பிக்கொண்டு இருக்கின்றார்...
5 வருடம் அதிமுகவின் ஊது குழலாக சூளுரைத்தார்..அம்மையார் கொடநாட்டில் ஓய்வில் இருந்த போது, கட்சியை பார்த்துக்கொண்டவர்.. பல போராட்டங்களுக்கு தோள் கொடுத்தவர்.. ஆனால் இப்போது  அவர் கழட்டி விடபட்ட இருக்கின்றார்... நான் வைகோவாக இருந்து இருந்தால் திமுகாவில் கூட்டனி வைத்து விட்டு எத்தனை வருடம் ஆனாலும் பழம் கனிய காத்துக்கொண்டு இருந்து இருப்பேன். இல்லையெனில் அதிமுக தலைமையையாவது.. வேண்டாம் அரசியல் சாணிக்கியத்தை எதுக்கு இப்படி சபையில் போட்டு உடைத்துக்கொண்டு...???
==========
 
மிக்சர்..
மகள் பிறந்த செய்தி அறிந்து உடனே வாழ்த்திய அத்தனை  நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..வழக்கம் போல வாழ்த்து சொல்கின்றேன். என்ற போர்வையில் அப்பாவி பிஞ்சையும்   சில சனியன்கள் பிரான்டின..  அம்மாவிடம் விட்டு விட்டேன்..அவள் பார்த்துக்கொள்வாள். வெகு சீக்கிரத்தில் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் அது  நிச்சயம்.


=============
இந்தவார சலனபடம்...

இந்த பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்... ஆனால் இந்த பாடல் மிக பிரபலமாக ஆகவில்லை...இரவு பதினோரு மணிக்கு மேல் வாம் வெளிச்சத்தில் இந்த பாடலை கேட்டு பாருங்கள்..  ரொம்ப ரம்யமாக இருக்கும்...



 ====================
 என் மனைவிக்கும்  என் நண்பரின் மனைவிக்கும்  ஒரே நாளில்தான் குழந்தை பிறக்க டியூடேட் கொடுத்து இருந்தார்கள்.. ஆனால் இரண்டு நாள் தள்ளி எங்களுக்கு  மகள் பிறந்தாள்..நண்பனுக்கும் பெண்குழந்தைதான்..அவன் வேறு தேசத்தில் இருக்கின்றான்... அங்கே குழந்தை ஆணா பெண்ணா என்று சொல்லி விடுகின்றார்கள். நண்பரின் மனைவிக்கு இன்னும் ஒரு வாரம் டெலிவரிஆகும் என்று மருத்தவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.. இந்த சந்தோஷத்தை இரண்டு குடும்பமும் கொண்டாடி இருக்கவேண்டும்... மழை பெய்வதும் குழந்தை பிறப்பதும் அந்த மகாதேவனுக்கே தெரியாது என்ற வரிகள் உண்மைதான்.. என் குட்டி மருமகளை காண ஆவலாய் இருக்கின்றேன்... என் மாமியார் இரண்டு குடும்பத்து குழந்தையும் நல்லபடியாக பிறக்கவேண்டி மகமாயிக்கு வேண்டி பால் அபிஷேகம் செய்ய  வேண்டிக்கொண்டு இருக்கின்னறார்... நல்லபடியாகத்தான் பிறக்கும்....இரண்டு பேருக்குமே தலைபிரசவம்தான்..நண்பரின் மனைவிக்கும் சுகப்பிரசவம் அடைய எல்லாம் வல்ல பரம் பொருளை பிரார்த்திக்கின்றேன்.
=============================================================

வாழ்த்துகள்...
தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிக்கும் என் தம்பி கார்த்திகை பாண்டியனுக்கு என் வாழ்த்துக்கள்..

==========================
நன்றிகள்..

பர்சனலாகவும் மெயிலாகவும் இன்னமும் குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள். 115பின்னுட்டங்கள் அதில்  எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் ஒரு சிலரே... ஆனால் வாழ்த்திய பல நண்பர்கள் எனக்கு புதியவர்கள்.. நிறைய நண்பர்களை சம்பாதித்து வைத்து இருக்கின்றேன்.. அது போதும்....எல்லோரும் என் நன்றிகள்.
================
திருப்பூரில் இருக்கும் பெரியவர் ராமசாமி அவர்களுக்கு இரண்டு  பேர் தமிழ் டைப்பிங் மற்றும் கம்யூட்டர் பெற்றி சொல்லிதருகின்றேன் என்று சொல்லி இருக்கின்றார்கள்.. அவர் போன் செய்து நன்றி சொல்லி  என்னை நெகிழவைத்துவிட்டார்....உதவி செய்ய மனம்முவந்த நண்பர்களின் பெயர்களை  மறந்து விட்டேன்..

====================
தம்பி சுகுமாரின் இந்த வாழ்த்தும்  அந்த வரிகளையும் மிகவும் ரசித்தேன்.




சில தினங்களாகத்தான் கவுசல்யா அவர்கள்  பழக்கம்.. என் மகள் பிறந்த சேதி  கேட்டு ஒரு வாழ்த்து கவிதை  அவர் தளத்தில் எழுதி இருந்தார்கள்... எனக்கு ரொம்புவும் பிடித்து இருக்கின்றது... அதை வாசிக்க இங்கே கிளிக்கவும்.


=======================
பிலாசபி பாண்டி...

 உன் பாசத்தை  மதிக்காதவர்களிடம் காட்டி எந்த பிரயோஜனமும் இல்லை.. ஆனால் உன்மீது பாசமும் மதிப்பு வைத்து இருப்பவனை எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்காதே....
=========
நான்வெஜ்+18
 NON VEG JOKE....1
சின்ன வீட்டிடம் கணவன்   சொன்னான்.. மாசா மாசம் நிரோத் வாங்கி கட்டுபடியாகலை என்ன செய்யறது அன்பே..????
பேசாம உங்க லுல்லுவை லேமினேஷன் பண்ணிடுங்க...
=================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..



குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...


15 comments:

  1. விகடன் சர்வேயில் வைகோ-விற்கு 41 மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். மு.க & ஜெ.ஜெ-ஐ விட அதிகம். மூன்றாவது அணி தோன்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அப்படி உருவானால் என் ஓட்டு அவர்களுக்குத்தான்..

    ReplyDelete
  2. பி ரிலாக்ஸ்ட்!!!

    ReplyDelete
  3. //வாழ்த்து சொல்கின்றேன். என்ற போர்வையில் அப்பாவி பிஞ்சையும் சில சனியன்கள் பிரான்டின.. //
    பிறந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவிப்பதில் கூட வக்கிரம் கொண்டிருப்பார்களா!!!!? என்ன கொடுமையான மனிதப்பிறவிகள்!

    ஒரு பொறுப்பான தந்தையாக ஜாக்கி இதைக்கடந்து போனதில் மகிழ்ச்சி!

    வளம் கூடட்டும் ஜாக்கி!

    ReplyDelete
  4. தாயும் சேயும் நலமா?

    மீண்டும் வாழ்த்துகள்!

    (மற்றவற்றை இறைவன் கவனித்துக்கொள்வான்.)

    ReplyDelete
  5. பெண் குழந்தையா வாழ்த்துக்கள் ஜாக்கி. இன்றுதான் தளத்திற்கு வர முடிந்ததது. வந்ததும் இனிப்பான செய்தி. என் மனைவியும் உங்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்.அதான் பெங்களூர் வாசமா?

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஜாக்கி. சந்தோஷக்குவியலுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவியுங்கள்!

    ReplyDelete
  7. Congrats !
    பெண் குழந்தை பிறந்த நேரம் உங்கள் வாழ்வில் பல பல நற்செய்திகளை கொண்டு வரும்.
    நீங்கள் விரைவில் திரைப்பட துறையில் நன்கு பிரகாசிக்க குறிய காலம் வந்து விட்டது.

    ReplyDelete
  8. தங்கள் குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. பெண் பிறந்து இருப்பதால், படிக்க ஆரம்பிக்குமுன் நான் வெஜ் பகுதிய நிறுத்தி விடுவீர்களா

    ReplyDelete
  10. தந்தையானதிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அன்பு ஜாக்கிக்கு, நான் ரொம்ப நாலா உங்க பக்கத்தை பாத்துகிட்டு இருக்கேன்.. ஒரு விஷயம்..பெண் குழந்தை வீட்டுக்கு ஒரு முழுமை குடுக்கும்...சொந்த அனுபவம் ..KVR blogla எழுதி இருக்கற மாதிரி அது ஒரு தனி சந்தோசம்..எனக்கு ரெண்டாவது பெண்..அப்ப வந்தது ஒரு மாற்றம் ஏன் என்றால் பிரசவத்தை பார்த்து பெண் மீது ஒரு மரியாதையை வரும்..அதுக்காக பையன் கொஞ்சம் கம்மின்னு நெனச்சுக்க வேண்டாம் ..அவன் அம்மாகிட்ட தான் பாசமா இருப்பான்..இப்ப நீங்களும் நானும் ..ஆனா பெண் நீங்க சொன்ன மாதிரி நம்ம அம்மாவே நம்மகிட்ட இருக்கற மாதிரி ..ரொம்ப மகிழ்ச்சி கொடுக்கும் ..சார்..ஒரு பெண் அப்பறம் ஒரு பையன்..பாருங்க எல்லாரும் எப்படி நம்மளை வித்தியாச படுத்தறாங்க புரியும்..இதை உங்க போஸ்ட்ல போடுவீங்கனு தெரியாது.. மனசுல இருக்கறது சொல்லனும்னு தோணிச்சு..வாழ்த்துக்கள்..இதுதான் என்னோட முதல் பகிர்தல்..பாப்போம்..

    ReplyDelete
  12. வழக்கம் போல வாழ்த்து சொல்கின்றேன். என்ற போர்வையில் அப்பாவி பிஞ்சையும் சில சனியன்கள் பிரான்டின..
    வினை விதைத்தவன் வினை அறுப்பான் கவலை விடுங்கள் சகோ

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் sir.... :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner