மினிசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டுபிளஸ்/ஞாயிறு/27/03/2011

ஆல்பம்..

தமிழக தேர்தல்களம் சூடு பிடித்து விட்டது...வடிவேலு விஜயகாந்தை பிடி பிடி என்று பிடித்தார்.. இதே  போல செந்தில் ஒரு தேர்தலில் அதிமுகவில் சேர்ந்து கருணாநிதியை திட்டி விட்டு அதன் பிறகு பயம் வந்து நான் எதாவது தப்பா பேசி இருந்தால் மன்னித்துக்கொள்ளவும் என்று பேசிய மேடையிலேயே மன்னிப்பு கேட்டார்... அது போல வடிவேல் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என்பது ஆறுதல்..இந்த பேச்சு நிச்சயம் குறித்து வைத்துக்கொள்ளபடும்.. வடிவேலு விஜயகாந் பிரச்சனைக்கு வடிவேலுவுக்கு ஒரு அரசியல் கூடாரம் தேவையாக இருக்கின்றது... அந்த கூடாரம் இப்போது திமுக.. அவ்வளவுதான்

===================

போலி சான்றிதழ் கொடுத்து  வேலைக்கு சேர்ந்த 4 விமானிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இதில் இந்தியன் ஏர்லைன்சில் 20 வருடகாலத்துக்குமேல் பணியில் இருந்த விமானியும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.... இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு இந்தியா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது... எல்லா துறையிலும் இந்த  சான்றிதழ் சரிபார்ப்பு தீவிரமாக நடத்தினால் நிறைய பேர் மாட்டுவார்கள் போல....
====================
மற்ற இந்திய முதல்வர்களை விட  அதிகம் எதிர்ப்புக்களை சம்பாதித்து ஆட்சி பீடத்தில் இருக்கும் ஒரே முதல்வர் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாதான்... மற்ற முதல்வருக்கு எல்லாம் எதிர்கட்சிகளால் பிரச்சனை என்றால் இவருக்கு சொந்த கட்சிக்காரர்களினாலும் எதிர்கட்சிகாரர்களாலும் தொடர்ந்து பிரச்சனைதான்...

=================================
இந்தவார சலனபடம்.classic

இந்த விளம்பரத்தை பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் வருவதை தவிர்க்க முடியாது....



 ================


மிக்சர்.
ரொம்ப நாளைக்கு பிறகு கிரிக்கெட் மேச்.. ஆஸ்திரேலியா இந்தியா போட்டி பார்த்தேன்... மிகவும் ரசித்தேன்...இப்போதே புதன் கிழமை நடக்கும் இந்தியா, பாக் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது...99 சதம் எடுத்த சச்சினை நாங்கள் இந்த உலககோப்பையில் எடுக்க விடமாட்டோம் என்று இப்போதே சவால் விட்டு இருக்கின்றார்... அது மட்டும் அல்ல யாரையும் சதம் அடிக்க விடமாட்டோம் என்று சொல்லி இருக்கின்றார்  பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன்...இந்த பேட்டியின் வார்த்தைகள் எரியும் நெருப்பில் எண்ணைதான்...அதைதானே விளம்பர நிறுவனங்கள் விரும்புகின்றன....
=========================
மகளுக்கு பேர் வைத்ததும் வாழ்த்திய அன்பு  உள்ளங்களுக்கு  எனது நன்றிகள்.. அதே போல பெயரை யாளினி என்று ஆங்கிலத்தில் விளிக்க பழக நண்பர்கள் பல பேர் சொன்னார்கள்... ஆனால் யாழினி என்று தமிழ் படித்தவர்கள்  சொல்லவேண்டும் என்பதுதான் எனது ஆசை.வெளிநாட்டுக்காரர்கள் எப்படி சொன்னாலலும் நமக்கு கவலை இல்லை...திரும்பவும் வாழ்த்து தெரிவித்த அத்தனை பேருக்கும் எங்கள் நன்றி.
==============
அதிமுகவுடன் கூட்டு வைக்க  மிக முக்கியாகாரணம் அண்ணா கனவில் வந்து சொன்னதால்தான் கூட்டு வைத்து இருக்கின்றேன் என்று விஜயகாந்த் திருவாய் மலர்ந்து இருக்கின்றார்...மக்கள் யாரும் எம்ஜியார் அண்ணா காலத்தில் இல்லை என்பது விஜயகாந்த் அவர்களுக்கு தெரிய நியாயம் இல்லை..
============
CINIMA NEWS

 இப்பதான் ஷிலாகி ஜிவானி பாடலில் கைத்ரீனாகைப்  பிவரில் இருந்து இப்போதுதான்  வெளியே வந்தேன்.. அடுத்து டம் மேரே தம் படத்தின் பாடல் திரும்ப எனக்கு ஜுரத்தை கொண்டு வரும் வேளையில் ஈடுபட்டு இருக்கின்றன..ரனா கதாநாயகி தீபிகா படுகோன் செமை ஆட்டம் போட்டு இருக்கின்றார்...
 ===========
இந்த பாடலை மலை சாலைகளில் காரில் காதலியோடு போகும் போது இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்...காதலியை இன்னும் காதலாய் பார்ப்பீர்கள்.பிரியத்தை மிக அழகாய் சொன்ன வரிகள்...வீடியோ தேடினேன் பட் ஆடியோதான் கிடைத்தது கேட்டு பரவசபடுங்கள்.....




======================

இந்தவார கடிதம்.

hi na.. hope u r doin good. 
அப்பா ஆனதுக்கு வாழ்த்துக்கள். குழந்தைங்க விஷயத்துல எல்லாருக்கும் அவங்க நெனச்ச மாதிரி அமஞ்சுடுரதில்ல. ஆனா உங்களுக்கு, நீங்க நெனச்ச மாதிரி அமஞ்சதுல ரொம்ப சந்தோஷம்.  குட்டி தேவதைக்கும், அக்காவுக்கும் என்ற வாழ்த்துக்கள்.
 உங்க போஸ்ட்-ல gibran's வரிகள் படித்தேன்.  எனக்கும் பிடித்த your children are not your children  என்று ஆரம்பிக்கும் குழந்தைகள் பற்றிய அவரது கவிதை.

Your children are not your children.
They are the sons and daughters of Life's longing for itself.
They come through you but not from you,
And though they are with you yet they belong not to you.
You may give them your love but not your thoughts,
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow,
which you cannot visit, not even in your dreams.
You may strive to be like them,
but seek not to make them like you.
For life goes not backward nor tarries with yesterday.
You are the bows from which your children
as living arrows are sent forth.
The archer sees the mark upon the path of the infinite,
and He bends you with His might
that His arrows may go swift and far.
Let your bending in the archer's hand be for gladness;
For even as He loves the arrow that flies,
so He loves also the bow that is stable.
:)

Regards,
SenthilMohan K Appaji.
Life is what happens to you while you're busy making other plans.

மிக்க நன்றி  செந்தில் ஜிப்ரானின் வரிகளை நாங்கள் ரசித்தோம். மிக்க நன்றி... உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும்..
============
இந்தவார நிழற்படம்..

மிகப்பெரிய அழிவை எதிர்கொண்டபூமி.. ஒரு பக்கம்  அணு கதிர்வீச்சை தடுக்க போராடிக்கொண்டு இரவு பகலாக போராடிக்கொண்டு வருகின்றது ஜப்பான் அரசு.. அனால் அதே வேளையில் பூகம்பத்தைல் மிக மோசமாக பாதிக்கபட்ட சாலையை இரண்டாம் பேருக்கு தெரியாமல் ஆறு  நாளில் ரெடி செய்து போக்குவரத்துக்கு ஜப்பானியர்கள் திறந்து விட்டார்கள்... அந்த ரோட்டை பாருங்கள்.. ஒரு மேடு ,பள்ளம் எதுவும் இல்லை... சில மாதங்களுக்கு முன்   சென்னை மவுன்ட் ரோட்டில் ஒரு தண்ணீர் குழாய்  சரி செய்ய  வெலிங்டன் பிளாசா எதிரில்ஆறு மாதத்துக்கு மேல் தோண்டி வைத்துக்கொண்டு சகுனம் பார்த்துக்கொண்டு இருந்தது தமிழக நெடுஞ்சாலைதுறை..

 ============
பிலாசபி பாண்டி..
என்னதான் நீங்க ரொம்ப டேலன்ட் இருந்தாலும் பல் விள்க்கும் அந்த அஞ்சநிமிசம் இளச்சவாயனாதான் இருக்கனும்--


==========
நான்வெஜ் 18+

மச்சி எங்கரூம்ல குரூப் செக்ஸ் பார்ட்டி நடக்குது நீ வரியா? எத்தனேபேர் வராங்க???நான்,  நீ உன் காதலியோட வந்தா மொத்தம் மூன்று பேர்



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...




===========

10 comments:

  1. ஹரிகரன் பாடல் நெஞ்சை தொடுகிறது பாஸ்

    ReplyDelete
  2. அந்த பாடல் கேட்க கேட்க இன்னுங்ம பிடிக்கும் மதுரன்....

    ReplyDelete
  3. // என்னதான் நீங்க ரொம்ப டேலன்ட் இருந்தாலும் பல் விள்க்கும் அந்த அஞ்சநிமிசம் இளச்சவாயனாதான் இருக்கனும் //

    எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் தினமும் ஒரு முறையாவது ஒற்றைக்காலில் தவம் பண்ண வேண்டும் - ஜட்டி போடத்தான்...

    ReplyDelete
  4. மினி ரொம்ப மினிமினி ஆகிட்டே போகுது. வழக்கம் போல அருமை.

    ReplyDelete
  5. //வடிவேலு விஜயகாந் பிரச்சனைக்கு வடிவேலுவுக்கு ஒரு அரசியல் கூடாரம் தேவையாக இருக்கின்றது...//

    மொத்தத்தில் அரசியல் காமெடி!

    ReplyDelete
  6. //அதிமுகவுடன் கூட்டு வைக்க மிக முக்கியாகாரணம் அண்ணா கனவில் வந்து சொன்னதால்தான் கூட்டு வைத்து இருக்கின்றேன் என்று விஜயகாந்த் திருவாய் மலர்ந்து இருக்கின்றார்.//

    நல்ல வேளை, காங்கிரசோட போயிருந்தா காந்தி தலையை உருட்டியிருப்பாரு!

    ReplyDelete
  7. மிக்க நன்றி நண்பர்களே

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner