COLD TRAIL-2006/உலகசினிமா/ஐஸ்லாந்து/தற்கொலையா?கொலையா?



நீங்கள் ஒரு ஜேர்னலிஸ்ட்

எங்கடா போற? என்று உங்கள் அம்மா கேட்கின்றாள்.. ஆபிசுக்கு முக்கியமா ஒரு அசைன்மென்ட இருக்கு ... ஒரு பெரிய பிரச்சனை அதை பத்தி விசாரிச்சு உண்மையா வெளிக்கொணர போறேன் என்று சொல்கின்றீர்கள்..


ஏற்கனவே உங்கள் பத்திரிக்கையில் ஒரு பெரிய பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கின்றது... தப்பாக செய்தியை கொடுத்து விட்டதாக உங்கள் அலுவலகத்தில் வந்து ஒருவன் கத்திவிட்டு சண்டை போட்டு  போய் இருக்கின்றான்...

சரிடா என்னை ஸ்பென்சர் ஷாப்பிங் அழைச்சிகிட்டு போ என்று அம்மா சொல்கின்றாள்..

அப்பா இல்லை சின்ன வயதில் இருந்து கடுமையாக உழைத்து உங்களை வளர்த்தவள் அதனால் அவள் எது கேட்டாலும் தட்டாமல் செய்பவர் நீங்கள்..

உங்கள் வீடு மாம்பலம். ஸ்பென்சருக்கு காரில்தான் அவளை அழைத்து போகின்றீர்கள்...நீங்கள் பத்திரிக்கைகாரர் என்பதால் எல்லா பேப்பரையும் வாங்கி விடுவீர்கள் அப்பதானே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க முடியம்....


ஷாப்பிங் முடித்து  அம்மாவை வீட்டில் டிராப் செய்து விட்டு ஆபிசுக்கு போக வேண்டும் என்று காரை வேகமாக ஓட்டிக்கொண்டு இருக்கினறீர்கள்...

கார் அண்ணா மேம்மபாலம் வருகின்றது.....
 
காரில் டேஷ்போர்டில் ஒரு பத்திரிக்கை இருக்கின்றது.. உங்கள் அம்மா அந்த பத்திரிக்கையை ஏதெச்சையாக எடுத்து புரட்டுகின்றார்.. தலைப்பு செய்தி பார்த்து லேசாக திடுக்கிடுகின்றார்.. வாக்கியத்தை கவனியுங்கள்... லேசாக திடுக்கிடுகின்றார்... 

ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருக்கும் டேமில் இருந்த செக்யூரிட்டி விபத்தில் இறந்து போய் இருப்பதாகவும் இறந்து போன செக்யூரிட்டி படத்துடன் அந்த பத்திரிக்கை முதல் பத்தியில்  செய்தி வெளியிட்டு இருக்கின்றது..

கார் ஓட்டிக்கொண்டு இருக்கும் உங்களிடம் இறந்து போன செக்யூரிட்டி படத்தை காண்பித்து, ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருந்தியே எங்க அப்பா யாருன்னு ???இதுதான் உங்க அப்பா என்று விபத்தில் இறந்து போன செக்யூரிட்டி படத்தை  உங்களிடம் காட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்????



COLD TRAIL-2006/உலகசினிமா/ஐஸ்லாந்து படத்தின் கதை என்ன?


Baldur ஒரு பத்திரிக்கையாளன்.. அவன் அம்மா அன்றைய பேப்பரில் ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருக்கும் டேமில் செக்யூரிட்டிகார்டாக பணியாற்றும் போது விபத்தில் இறந்து போனவர்தான் உன் அப்பா என்று சொல்லிவிட,அது விபத்தா? கொலையா ? தற்கொலையா? என்பதை புலானாய்வு செய்வதே இந்த படத்தின் கதை....
==============

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


அட அவரு ஆயிரமே செய்து இருக்கவேண்டாம்.. என்ன இருந்தாலும் அவர் அப்பா இல்லையா? அவன் இந்த உலகத்தில் உருவாக ஏதோ ஒரு கணத்தில் காரணமாக இருந்தவர் அல்லவா? எல்லோருக்கும் பொங்கும் பத்திரிக்கையாளன் இறந்து போனவர் தனது அப்பா என்றால் என்ன செய்வார்??? அதைதான் Baldur கதாபாத்திரமும் செய்கின்றது..

இதுவரை அவர்யார்? அவர் தனக்கு என்ன செய்தார்? என்றகேள்வி எல்லாம் இல்லை நேராக பினவறைக்கு போய் அந்த முகத்தை பார்க்கும் ஆவளும் அந்த முகத்தை பார்த்து விட்டு அப்படியே சுவற்றில் சாய்ந்து விட்டு கேவுவது  அழகு.. உலகம் முழுவதும் பாசம் ஒரே வகைதான்.. அதுக்கு அளவு கோல் வானமே எல்லை..

 ஊருக்கு ஒதுக்குபுறம் என்றால் செங்கல்பட்டு பக்கம் என்று நினைதுதக்கொள்ளாதீர்கள். ஊரே பனியில் மூழ்கி இருக்கும் எங்கு பார்த்தாலும் ஐஸ்மயம்தான்...அதில் இருக்கும் ஒதுக்குபுறமான டேம் என்றால் எப்படி இருக்கும்?அதில் ஒரு 5 பேர் வேலை செய்கின்றார்கள்..


பனிப்புயலில் வாகனம் ஒட்டி அவர்கள் ஐவரின் தேவையை ஒரு பெண் நிறைவேற்றுகின்றாள்... அதுதான் அவளுக்கு வேலை..

எல்லா நாட்டிலும் மான் வேட்டைக்கு தடை போலும் முதலில் அஇதை ஒரு பெரிய விஷயமாக காட்டி விட்டு பின்பு வெவ்வேறு விஷயத்தில் கதை நூல்பிடித்து செல்வது நல்ல திரைக்கதை..

கிளைமேக்ஸ் யூகிக்க முடியாது.. அது போலான திரைக்கதை...

எங்கு திரும்பினதாலும் பனி  பனி பனி பனிதான்... எல்லா இடத்திலும் வெள்ளை வியாபித்து இருக்க அதில் படபிடிப்பு நடத்தி இருப்பதும் அதிலே கூட லோக்கேஷன் செலக்ட் செய்து இருப்பதும் அருமை...

அது போலான தேசம் என்றால் அவ்வளவுதான் பத்துநாள் கூட நம்மால் அங்கு இருக்க முடியாது.. வெறுத்துப்போய்விடுவோம்...

இந்த படம் இரண்டு உலகபடவிழாவில் கலந்து கொணட்து..
Nordic Film days Lubeck 2007,
Rouen Nordic Film Festival 2007

 =============
படத்தின் டிரைலர்...



==========
படக்குழுவினர் விபரம்.


Director: Björn Br. Björnsson
Scriptwriter: Kristinn Thórdarson
Main cast: Thröstur Leó Gunnarsson, Elva Ósk Ólafssdóttir, Hjalti Rögnvaldsson, Helgi Björnsson, Anita Briem, Tómas Lemarquis, Hilmir Snaer Gudnason
Editor: Sverrir Kristjánsson
Cinematographer: Vídir Sigurdsson
Sound design: Gunnar Árnason
Music: Veigar Margeirsson
Producer(s): Kristinn Thórdarson, Magnús Vidar Sigurdsson
Production company: Sagafilm ehf.
Co-production company: Reykjavík Films
International sales & distribution: NonStop Sales AB
Website: http://reykjavikfilms.is
http://www.nonstopsales.com

Country: Iceland
Sound: Dolby 5.1
Length: 99 min.
Screening format: 35mm
Production format: 16mm
Film gauge/aspect ratio: 1.85:1
Premiere date and year:  28.12.2006
=====

பைனல்கிக்..
இந்த படம் பார்க்கவேண்டிய திரில்லர் படம்...கொலைக்காண முடிச்சி மிக பிரமாதமாக அவிழும் இடங்கள் நம்மை ரசிக்க வைக்கும்

=======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..



குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 
 



7 comments:

  1. ஜாக்கி,

    தண்ணிக்குள் நடக்கும் ஜல்சா காட்சிக்கான படம் போட்டுவிட்டு விளக்கம் தராததை வெகுவாக
    கண்டிக்கிறேன்.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  2. இது தான் தலைவா உங்க ஸ்டைலு...இது போன்ற உங்கள் பதிவை படித்து ரொம்ப நாள் ஆச்சு...

    ReplyDelete
  3. //அந்த முகத்தை பார்க்கும் ஆவளும் அந்த முகத்தை பார்த்து விட்டு அப்படியே சுவற்றில் சாய்ந்து விட்டு கேவுவது அழகு.. உலகம் முழுவதும் பாசம் ஒரே வகைதான்.. //

    அதுவும் தந்தை தனையன் பாசம் எளிதில் பிடிபடாதது. விமர்சனம் கலக்கல்!

    ReplyDelete
  4. //இந்த கமென்ட் பாக்ஸ் என் பதிவுக்கு உங்கள் பதில் என்ன என்பதை நான் அறிந்து கொள்ளவே... அதில் எதை வெளியிடுவது, எதைவெளியிடக்கூடாது என்பது என் விருப்பமே...
    எல்லாத்துக்கு என்னால் பதில் சொல்லமுடியாது...எனக்கு நேரம் இருப்பின் பதில் அளிப்பேன்
    உங்களை வெளிபடுத்திக்கொள்ள தைரியம் இருப்பவர்கள் மட்டும் இங்கே கருத்துக்களை இடவும் புரோப்பைலை மறைத்து விட்டு பொங்குபவர்களோடு நான் வாதம் செய்வதில்லை...//

    Excellent....நல்ல முக்கு அறுப்பு....

    ReplyDelete
  5. yean 18+ poduvathu illai ?

    ReplyDelete
  6. Excellent review!!!!!!!

    senthil, doha

    ReplyDelete
  7. வணக்கம் தோழரே! உங்கள் விமர்சனம் அருமை, எனக்கும் வித்தியாசமான படங்கள் பிடிக்கும், ஒரு சில படங்கள் புரிவதில்லை, அதில் ஒன்று The Tree of life அதன் விமர்சனம் தர முடியுமா?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner