எங்கள் தேவதைக்கு பெயர் சூட்டல்…


பெயர்கள் சாதாரணமானவை அல்ல.. வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்பத்தில் அந்த பெயரை கேள்விபடும் போதோ அல்லது அந்த பெயரை எவராவது உச்சரிக்கும் போதோ பழைய ஞாபகங்கள்  நம்மை வட்டமிடும்.. அதுவும் மிக  நெருக்கமான காதலியின் பெயர் என்றால், உயிர் நண்பன் என்றால், நம்பிக்கை துரோகி என்றால்,உதவிக்கு தவிக்கும் போது உதவியவள் அவ்லது உதவியவர் பெயர் என்றால், அவர்களை பற்றிய ஏதாவது ஒரு விஷயம் நினைவூகூறப்படும்...


இன்னமும் நான் கடந்து வந்த வாழ்க்கை பாதையில் பல வித்யாசமான பெயர்கள் என்னை கடந்து போய் இருக்கின்றன. நான்  ஒன்றாவதில் இருந்து எட்டாவதுவரை படித்த திருப்பாதிரிபுலியூர் ராமகிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நான் படித்த போது என்னை அதிகம் கவர்ந்த அந்த பெயர்கள் இரண்டு ஒன்று ஜிங்கா, மற்றது ஜிங்கி இரண்டு பேரும் அண்ணன் தங்கைகள்.. நான் படித்த அந்த பள்ளி ஒரு ஐயர் நடத்திய பள்ளி... சின்ன வாத்தியார் என்று செல்லமாக அழைக்கபட்ட திரு நாகராஜ் அவர்கள் நடத்திய பள்ளி
 அவருடைய பிள்ளைகள் பெயர்தான் ஜிங்கா ஜிங்கி...

அதன் பிறகு ஒன்பதாம், பத்தாம்  வகுப்பு கடலூர் திருப்பாதிரிபூலியூர் புனிதவளனார் பள்ளியில் படித்த போது ஒரு பெயர் என்னை ரொம்பவும் வசீகரித்தது... அந்த பெயர்...சார்லஸ் பிரிட்டோ பாபிலோன்.. என்னடா இது பிரிட்டோ பாபிலோன் என்று பள்ளி காலங்களில் அவனை ஒட்டி இருக்கின்றோம்.... நான்  ஒன்பதாம் வகுப்பு  பெயில்... நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அதே ஜிங்கா என்னுடன் படித்தான்...அவன் உண்மையான பெயர் எனக்கு அப்போதுதான் தெரியும்.. அவன் பெயர் தத்தாதிரேயபாலமுருகன்...


பாலகுமாரனின் பயணிக்ள் கவனிக்கவும் கதையில் ஒரு பெயர் ரொம்ப வித்யாசமாக முதல் அத்தியாயத்திலேயே வரும்.. ஸ்டீபன்மனோகரன் இஸ்ரேல்...பருத்தி வீரனில் கஞ்சா கருப்பு பெயர்  வாழ வந்தான்..இப்படி நிநறைய பெயர்களை சொல்லிக்கொண்டே போகலாம்..

பத்தாம் வகுப்பு படிக்கும் போதுதான்... கடலூர் கமலம் தியேட்டர் வழியாக  ஹாங்காங் நடிகர் ஜாக்கிசான், யங் மாஸ்டர் படம் மூலம் கடலூரல் எனக்கு அறிமுகமானர்.. அந்த ஜாக்கிசான் என்ற பெயர் எனக்கு நிரம்ப வசீகரித்தது... அதே போல ஆங்கில படங்களில் ஜேன் கிளாட்வேன் டம், மற்றும் அர்னால்டு ஸ்வேசநெகர் வித்யாசமான தனது பெயர்களிள் மூலம் என்னை வசீகரித்து இருக்கின்றார்கள்.. இன்னும் நிறைய எழுதலாம் ஆனால் கொஞ்சம் மேலோட்டமாகத்தான் எழுதுகின்றேன்.

எனது பெயர் இயற்பெயர் தனசேகரன் என்றாலும் என் அம்மா என்னை அழைப்பது தனுசு என்றுதான் அழைப்பார்கள்.. எனது ஊரிலும் தனுசு  என்றுதான் அழைப்பார்கள்.. ஆனால்  என்னை சேகர் என்று பெயர் சொல்லி அழைப்பவர்கள் மிக குறைவு...அம்மா என் மீது அதிக காதலோடு அழைப்பது தனுசுராஜா... அப்படி சில நேரங்களில் அழைக்கும் போது எதாவது பொருள் வாங்க கடைக்கு அனுப்ப போகின்றாள் என்று அர்த்தம்...
என்னை தனசேகர் என்று அழைப்பது பிடிக்காது தனசேகரன் என்று அழைக்கவேண்டும்.. அந்த ரன்னில் ஒரு வசீகரம் இருக்கும்....ஆனால் மதுரை வாசக நண்பர் திருமுருகன் அவர்கள்  என்னை எப்போதும் தனசேகர் என்று அழைப்பார்......

ஆனால் கடந்த 2008ம் ஆம் வருடத்தில் இருந்து பிளாக் உலகில் ஜாக்கிசேகர் என்ற எனது பெயர் வெகு பிரபலமாக அடைந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி... நடிகர் ஜாக்கியின் உழைப்பின் மீது கொண்ட நேசம் காரணமாக எனது புனைப்பெயராக ஜாக்கிசேகர் என்று வைத்துக்கொண்டேன்...நிறைய பேர் ஆர்வமாக படிக்க முதல்வாசிப்பில் அந்த ஜாக்கிசேகர் என்ற அந்த பெயர் வசீகரமும் ஒரு காரணம் என்று பலர் சொல்லி இருக்கின்றார்கள்...  சென்னை உலகதிரைப்படவிழாவில் நான் பெருங்கூட்டத்தில் நான் நடந்து போகும் போது என்னை ஜாக்கி, ஜாக்கி என்று அக்னிபார்வை அழைத்த போது எனது புனைப்பெயரின் மீது காதலே வந்தது...ஈரோடு பதிவர் சந்திப்பில் ஒலிபெருக்கியில் ஜாக்கிசேகர்  என்று எனது பெயர் அறிவிக்கபட்ட போது அதிகம் அறிமுகம் இல்லாதவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்த போது எனது புனைப்பெயர் ஜாக்கிசேகரை இன்னும் காதலிக்க ஆரம்பித்தேன்.

பதிவுலகம் வந்த பிறகு நிறைய வித்யாசமான பெயர்கள் என்னை நிரம்ப வசீகரித்தன.... அப்படி வசீகரித்த பெயர் பைத்தியக்காரன்...அப்புறம் வெண்பூ, லக்கிலுக், விந்தைமனிதன், கேபிள், உண்மைதமிழன், பட்டர்பிளை சூர்யா, பலாபட்டறை, தண்டோரா, வெயிலான்,பரிசல்காரன், ராம்ஜியாஹு, ஜீவ்ஸ் கிருஷ்னன், தோழி,ஜ்யரோம் சுந்தர்,வடகரைவேலன்,சென்ஷி,எறும்பு, குட்டிடின், அகநாழிகை, என்று சொல்லிக்கொண்டு போகலாம்.                            


இப்படி பெயர்கள்  உச்சரிக்கும் போது, அல்லது கேட்கும் போது அவர்கள் பற்றிய பிம்பங்கள் அவர்களோடு ஏற்பட்ட சந்தோஷநிகழ்வுகள் வருத்தங்கள் நினைவுக்கு வரும்....

எங்கள் மகளுக்கு  பெயர் வைக்க நாங்கள் காதலிக்கும் போதே சில பெயர்கள் வைக்க முடிவு செய்தாம் ஆனால் அதனை  செல்லமாக மட்டுமே கூப்பிட முடியும்.... அதனால் ஆறாம் மாதத்திலேயே நானும் என் மனைவியையும் பெண்குழந்தை என்றால் இதுதான் பெயர் என்று முடிவு செய்து விட்டோம்....

பெயர் தமிழில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் உறுதியாக இருந்தோம்...தளபதி படத்தில் கூட மம்முட்டி தமிழ்அழகி என்று   சொல்லூவார் அந்த பெயரை கூட பரிசீலித்தோம்...

இங்கு பெங்களூர் மடிவாலா டோட்டல் காபி ஷாப்பில்  நண்பர் அரவிந்தை சந்தித்த போது பிள்ளைக்கு தமிழ் பெயர்தான் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்....எனது மாமாபையன் முகுந்தன் என் தமிழ் ஆர்வத்துக்கு முன்னோடி என்பேன்...

என் மனைவி சமுகத்தில் மூன்று பெயர்கள் வைப்பார்கள்.. அதில் முதல் பெயர் எனது அம்மா பெயர், ஜெயலட்சுமி, இரண்டாவது ஹர்ஷினி, மூன்றாவது பெயர் யாழினி...

யாழினி என்ற இந்த பெயர்தான் கெசட்டில் இருக்கும்....தமிழுக்கு ழ அழகு... அதனால் ழ பெயரில்   வருவது போல பல பெயர்கள் தேடினோம்.

யாழினி என்ற பெயரை நண்பர்களிடத்தில் உறவுகளிடத்தில் சொன்ன போது எல்லோரும்  சந்தோஷம் கொண்டார்கள்... இணையத்தில் யாழினி பெயர்  பற்றி தேடிய போது.....


ரங்கலஷ்மி லோகேஷ் என்பவர் யாழினி என்ற பெயருக்கு  விரிவாக ஒரு விளக்கத்தில் ஏதோ ஒரு திரியில் சொல்லி இருந்தார் அது இதோ கீழே..

யாழ் என்பது ஒரு இசைக்கருவி தான். உங்களின் பேரைப் போலவே நீங்களும் இனிமையானவர் தான்.

தந்திக்கருவிகளில் முதலில் தோன்றியது யாழ். விஷ்ணுவிற்கும், சிவபெருமானுக்கும் உடம்பில் ஓடுகின்ற ஒரு நாடியின் பெயரும் யாழ். ராமாயணத்தில் ராவணன் தனது உடம்பில் ஒரு நரம்பை அறுத்து அதை வாசித்து இறைவனை வணங்கினான் என ராமாயணம் கூறுகிறது. யாழின் முதல் உருவம் அதுவே.

அண்ட சராசரத்தின் ஒலியே யாழிலிருந்து எடுக்கப்பட்டது என புராணம் கூறுகிறது.
யாழிலிருந்து பிறந்தது பண். யாழ்ப்பண்ணைப் போன்ற இனிமையானவள்.

இரண்டாவது, யாழ் ஒலி அதிர்வுகள் அதிகம் இல்லாதது, மென்மையானது, பணிவின் இலக்கணமாக கூறப்படுகிறது.

யாழைப் போன்று மென்மையாகவும், பொறுமையாகவும், பணிவாகவும், அதிர்வுகல் (ஆடம்பரம், அடாவடி) இல்லாமல் இருப்பவள் எனவும் அர்த்தம்.

என்று ரசிக்கும் விதத்தில் விரிவாய் சொல்ல இருந்தார்..


இன்னும் சில நண்பர்கள்...  யாழினி  என்று பெயர் வைக்க போகின்றேன் என்றதும் இது சிலோன் பெயராயிற்றே என்று சொன்னார்கள் அழகான தமிழ்பெயர்  என்று சொல்லக் கூட அவர்களுடைய உலக அனுபவம் உதவி செய்யவில்லை...


மூன்று நாட்கள் சென்னையில் இருந்தேன்.. இன்று காலைதான் பெங்களூர் வந்தேன். இன்று (25/03/2011) மாலை 6 மணியளிவில்  சிம்பிளாக மடிவாளா வீட்டில் தாய்மாமன் அனந்தபத்மநாபன் மடியில் உட்கார வைத்து யாழினி என்று பெயர் சூட்ட இருக்கின்றோம்...


யாழினிக்கு உங்களின் உண்மையான ஆசிகள் என்றும் உண்டு என்று எங்கள் இருவருக்கும் தெரியும்...இனிமையானவளாக, பிறர் போற்றிபுகழும்  வண்ணம் அவள்  எதிர்கால வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல பரம் பொருளிடம் வேண்டிக்கொள்கின்றேன்...


 எங்கள் தேவதை யாழினிக்கு உங்கள் ஆசியும் அன்பும்  எப்போதும் கிடைக்க வேண்டுகின்றேன்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...


===========

68 comments:

 1. boss gnaja karupu vazha vanthan peru is in RAM , paruthila douglas anne ;)

  ReplyDelete
 2. yalini
  or
  yazhini

  whatever its

  but sweet blessing for ur sweet daughter

  ReplyDelete
 3. யாழினி அழகிய பெயர். யாழினிக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 4. யாழினிக்கு வாழ்த்துகள் ஜாக்கி...

  ReplyDelete
 5. best wishes to யாழினி

  அண்ணே அது பருத்திவீரன் இல்லை ராம்

  ReplyDelete
 6. யாழினிக்கு vazhthukkal...

  ReplyDelete
 7. யாழினி என்ற அழகுப் பெயரைச் சூட்டியதற்கே உங்களுக்கு வாழ்த்துக்கள் தோழா...

  யாழினிக்கும்

  ReplyDelete
 8. யாழினி என்ற பெயரைக்கேட்ட மாத்திரத்திலேயே அந்த தேவதையிடம் அன்புமீதூறுகின்றதண்ணே! மிக அற்புதமான, அழகான பெயர்! எனக்கு ஒருநாள் பெண்குழந்தை பிறந்தால் இந்தப்பெயரைத்தான் வைக்கவேண்டும் என்று ஐந்தாண்டுகளுக்கு முன்பேயே முடிவு செய்திருக்கிறேன்.

  ReplyDelete
 9. ///இன்னும் சில நண்பர்கள்... யாழினி என்று பெயர் வைக்க போகின்றேன் என்றதும் இது சிலோன் பெயராயிற்றே என்று சொன்னார்கள் அழகான தமிழ்பெயர் என்று சொல்லக் கூட அவர்களுடைய உலக அனுபவம் உதவி செய்யவில்லை...///அது சிலோன் பெயர் அல்ல!ஈழத்தின் வடக்கிலிருக்கும் பட்டணத்தின் பெயர்"யாழ்ப்பாணம்" என்பது!யாழ்- பாடி என்பார் வாழ்ந்த இடமென்பதால் அப்பெயர் வாய்த்தது!சுத்தமான தமிழ்ப் பெயர் யாழினி என்பது!வாழ்க பல்லாண்டு!!!!!!!!

  ReplyDelete
 10. யாழினிக்கு வாழ்த்துகள்ணே..:-))

  ReplyDelete
 11. யாழினி என்றால் வீணையைக் கையில் ஏந்தி வாசிக்கும் கலைமகள் சரஸ்வதி.

  அழகான பெயர்.

  யாழினிக்கு எங்கள் ஆசிகள்.

  ReplyDelete
 12. யாழினி நிச்சயமாய் சுத்தமான தமிழ் பெயர்,பெயரிலேயே பணிவும் கனிவும் தெரிகிறது.வாழ்த்துக்கள்.
  -அருண்-

  ReplyDelete
 13. யாழினி அழகான பெயர். உங்களின் ழ மீதான காதல் பாராட்டுக்குரியது,

  ReplyDelete
 14. யாழினி ....தூய தமிழ் பெயர் ...உங்களின் தமிழ் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 15. யாழினி இனிய பெயர்.
  பல்கலையும் கற்று இனிது வாழ வாழ்த்துகின்றேன்.

  ReplyDelete
 16. யாழினிக்கு எங்கள் ஆசிகள்.

  ReplyDelete
 17. யாழினி..அழகான தமிழ் பெயர்..
  யாழினிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 18. யாழினிக்கு எங்கள் ஆசியும் அன்பும் எப்போதும்

  ReplyDelete
 19. Arumaiyana Peyar sir...

  Vazhthukkal...

  ReplyDelete
 20. வேண்டுகோளை ஏற்று தமிழில் பெயர் சூட்டியமைக்கு மிக்க நன்றி.

  பிரபல பதிவர் செந்தழல் இரவி அவர்கள் மகள் பெயரும் யாழினி.

  அன்புடன்
  அரவிந்தன்

  ReplyDelete
 21. எங்கள் அண்ணனுக்கு
  கூவும் குயிலினி
  ஆடும் மயிலினி
  மின்னும் பொன்னினி
  பாடும் பண்ணினி
  தேடும் கண்ணினி
  பேசும் தமிழினி
  இசைக்கும் யாழினி எல்லாமே
  நீ தான் யாழினி.

  ReplyDelete
 22. யாழினி க்கு என் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. இசை போல யாழினி மகிழ்வித்து மகிழ்ந்து வாழ்க என வாழ்துகிறேன்.

  ReplyDelete
 24. தமிழ்பெயர் சூட்டியதற்கு உங்களுக்கு பாராட்டுகள் யாழினிக்கு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. //
  யாழினி
  //

  வாவ்.. Short & Sweet. அருமையான‌ பெய‌ர்.. ஒரே ஒரு வேண்டுகோள், ஆங்கில‌த்தில் எழுதும்போது "zh" எல்லாம் போட‌வேண்டாம். Yalini என்றே எழுத முயற்சி செய்யுங்க‌. த‌மிழ் தெரியாத‌வ‌ர்க‌ள் ஆங்கில‌த்தில் பெய‌ரைப் ப‌டிக்க‌ க‌ஷ்ட‌ப்ப‌ட‌ வேண்டி இருக்கும்.

  ReplyDelete
 26. அன்பின் தனசேகர் @ ஜாக்கி சேகர்

  அன்புச் செல்லம் யாழினிக்கு எங்களது அன்பும் ஆசிகளும் உரித்தாகுக. நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ நல்வாழ்த்துகள். ஆண்டவனின் கருணை மழை எப்பொழுதும் பொழிந்து கொண்டிருக்க பிரார்த்தனைகள்.

  நட்புடன் சீனா

  ReplyDelete
 27. குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. "யாழினி"க்கு எமது ஆசிகள்.

  ReplyDelete
 29. யாழினி மிக மிக அருமையான பெயர் ஜாக்கி.
  வென்பூவை வழிமொழிகிறேன். உங்கள் மகள் உலகம் முழுதும் வென்று சுற்றும்பொழுது (கண்டிப்பாக செய்வாள்), ஆங்கிலத்தில் மட்டுமல்ல, இந்த பிரெஞ்சு, ஸ்பேனிஷ், சைனீஸ்காரர்கள் இந்த "zh " யை ஒரு வழி செய்து விடுவார்கள். Better to spell it as Yalini itself..

  //வாவ்.. Short & Sweet. அருமையான‌ பெய‌ர்.. ஒரே ஒரு வேண்டுகோள், ஆங்கில‌த்தில் எழுதும்போது "zh" எல்லாம் போட‌வேண்டாம். Yalini என்றே எழுத முயற்சி செய்யுங்க‌. த‌மிழ் தெரியாத‌வ‌ர்க‌ள் ஆங்கில‌த்தில் பெய‌ரைப் ப‌டிக்க‌ க‌ஷ்ட‌ப்ப‌ட‌ வேண்டி இருக்கும்.
  //

  ReplyDelete
 30. யாழினி is a beautiful name. The name is melodious. Great choice!
  Best wishes to யாழினி.

  ReplyDelete
 31. யாழினி அருமையான தமிழ்ப் பெயர் ... சிறந்த முன்னுதராணமாக தமிழ் பெயர்களை பதிவர்கள் பிரபலப்படுத்த வேண்டும்.

  ReplyDelete
 32. சேகர்!
  கடந்த 10 வருடங்களுக்குள் புலம் பேர் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் மத்தியில் இப்பெயர் பிரபலம்.

  நம் சகபதிவர் செந்தழல் ரவியின் மகளுக்கும், யாழினியே! அவரும் மிகப் பிரியத்துடன் தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டுமென விரும்பி வைத்த பெயர்.

  பாணன் பாடிப் பரிசாகப் பெற்ற ஊர்- யாழ்ப்பாணம்.
  யாழ் பண்டைய இசைக்கருவி, இது பற்றி ஈழத்து விபுலானந்த அடிகள்..யாழ் நூலில் விரிவாக ஆய்ந்துள்ளார்.பழந் தமிழரின் இசை நுட்பங்களை விபரிக்கும் முதல் நூல் இது.
  யாழினிக்கு அன்பு முத்தங்கள்.

  ReplyDelete
 33. நிறைய பேர் தங்கள் பிள்ளைகளுக்கு ஷ், ஜ் என்ற ரீதியில் பெயர் சூட்டிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழில் பெயர்சூட்ட வேண்டுமென்ற உங்கள் எண்ணத்திற்கு ஒரு சல்யூட் ஜாக்கி...

  அப்புறம் யாழினி பாப்பாவிற்கு எனது வாழ்த்துக்கள்...

  இருந்தாலும் பெயர் சஸ்பென்சை உடைக்காமல் விழா முடிந்தபிறகு இந்த இடுகையை போட்டிருக்கலாம்...

  ReplyDelete
 34. "Yalishai thannil varum ealisai undhan mozhi!

  vinnile vattammidum vennila undhan muham!"

  Vazhththukkal.

  Anbudan
  Samy

  ReplyDelete
 35. யாழினிக்கு Vazhthukal. May god give her all happiness in this world.

  ReplyDelete
 36. புது வரவுக்கு வாழ்த்துகள், "யாழினி" அருமையான பெயர் :-).

  ReplyDelete
 37. யாழினிக்கு வாழ்த்துகள். யாழிசை பொழியட்டும்! :-)

  ReplyDelete
 38. அண்ணே யாழினிக்கு வாழ்த்துகள். நன்றாக இருக்கிறது பெயர்.

  ReplyDelete
 39. யாழினி நல்ல தமிழ் பெயர். வாழ்த்துக்கள். எனது மகளுக்கு பொன்னி என்றும் மகனுக்கு அமுதன் என்றும் பெயர் சூட்டியிருக்கிறோம்.
  பூபதி துபை

  ReplyDelete
 40. யாழினிக்கு அன்பும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 41. ''இன்னும் சில நண்பர்கள்... யாழினி என்று பெயர் வைக்க போகின்றேன் என்றதும் இது சிலோன் பெயராயிற்றே என்று சொன்னார்கள்''

  எங்களது மகளுக்கு பொன்னி என்றும் மகனுக்கு அமுதன் என்றும் பெயர். கரூர் அருகே காவிரிக்கரையில் உள்ள எங்கள் ஊர் பெருசுகள் முதல் நண்டு சிண்டுகள் வரை கிண்டல் அடிக்குதுங்க. துபையில் பேரைக்கேட்டதும் ''என்ன இப்படி தமிழ் பேரா வைச்சிருக்கீங்கன்னு'' ஒரு கேள்வி நமது தமிழ் மக்கள் கேட்காமல் இருப்பது இல்லை. தமிழனுக்கு தமிழ் பேர் வைப்பதை கிண்டலாலப் பார்க்குதங்க இநத ''மார்வாடிகளின்'' வாரிசுகள்.
  பூபதி துபை

  ReplyDelete
 42. "YAZHINI" "யாழினி" சுட்டிக்கு பொதிகை மலை அருகிலிருந்து வாழ்த்துகள் ! !

  ReplyDelete
 43. யாழினிக்கு ஆசீர்வாதமும் , உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்களும்.

  நிறைய விஷயத்தில் ஆச்சர்யப்படுத்துகிறீர்கள் சேகர்.

  ReplyDelete
 44. யாழினிக்கு வாழ்த்துகள் ..அழகான பெயர்

  ReplyDelete
 45. comment post panrathu thaan vote podaratha mr.jacky? i dont know how to vote? can u pls explain?

  ReplyDelete
 46. //பருத்தி வீரனில் கஞ்சா கருப்பு பெயர் வாழ வந்தான் //
  Jackie sir, athu paruthee veeran padathil illai, athu RAAM padam

  ReplyDelete
 47. யாழினிக்கு வாழ்த்துகள்....

  ReplyDelete
 48. இன்னொரு பதிவரின் குழந்தையின் பேரும் கூட யாழினிதான். :)

  ReplyDelete
 49. ஜாக்கி சேகர் தம்பதிகளின் யாழினிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 50. வாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நண்பர்களே.......

  ReplyDelete
 51. "yaalini"
  sollum poadhu vaayil nuligiradhu
  kaetkum poadhu kadhil nulaigiradhu
  yaalini kuttikku manamardha vaalthukkal
  --sham--

  ReplyDelete
 52. HAI JACKIE ANNA,

  HOW ARE YOU...

  YAZHINI... VERY NICE NAME...

  CONGRATS..

  MANO

  ReplyDelete
 53. யாழினி அழகிய பெயர். யாழினிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 54. sorry sir belated wishes for you and your child yalini

  ReplyDelete
 55. யாழினிக்கு அன்பு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 56. mikka mazhilchi.
  யாழினிக்கு வாழ்த்துகள்
  nalla thoru thamizh peyar.

  i'll contact u later sir,

  ReplyDelete
 57. யாழினிக்கு வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 58. என் பெண்ணின் பெயரும் யாழினி தான். வாழ்த்துக்கள் .......

  ReplyDelete
 59. A nice name for your little one. The name conjures up many beautiful things in the world. Wish her and your family the very best.

  ReplyDelete
 60. யாழினிக்கு அன்பு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 61. யாழினிக்கு அன்பு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 62. I have searching for yazhlini names as meaning and your i seeing your website lot of message's get it.thanks and my cute baby name is yazhlini today name birth selectioned.Thanks Mr.sekar.,

  ReplyDelete
 63. Yalenekku anbu valthukkal, yallam valla murugan arul purevar.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner