சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (லேட்டோ லேட்) ஞாயிறு 20/03/2011


ஆல்பம்..

திமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்த போது திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் தெரிகின்றது...இந்த தேர்தல் அறிக்கையை பலர் விமர்சிக்கலாம்.. முக்கியமாக 35கிலோ இலவச அரிசியை...போன தேர்தல் அறிக்கையில் ஜெ 20 கிலோ அரிசி இலவசம் என்றார்.. இந்த முறை கலைஞர் 35 ஆக மாற்றிவிட்டார்... வெயிலில் நின்று ஓட்டு போடுபவர்களுக்கான அறிக்கை இது... நான்  சொல்வது புரிகின்றதா???
====================

இமயம் டிவியில் வைகோவின் பேட்டி பார்த்த போது, அவரை பார்க்க ரொம்பவும் வருத்தமாக இருந்தது..ஈழதமிழர்களை பற்றி பேசும் போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார்..கொடநாட்டில் ஜெ ஓய்வெடுக்கும் போது ஆளுங்கட்சியை விடாமல் எதிர்த்து குரல் கொடுத்தவர்... அந்த நன்றியை எல்லாம் மறந்து அவரை நடு ரோட்டில் ஜெ நிறுத்தியது கொடுமை.. பியூர் நம்பிக்கை துரோகத்தில் பாதிக்கபட்ட சமீபத்திய உதாரணம் வைகோ...
===================================
எனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரை முற்றிலும் புறக்கணிப்பேன்.. திரும்பவும் வம்புக்கு அழைத்தால் பதிலடி கொடுப்பேன்... சிலபேரை கோடி ரூபாய் கொடுத்தாலும் மன்னிக்கவே மாட்டேன்... அவன் என்னைக்கு என்  கையில மாட்டினாலும்..................சரி விடுங்க ஆனா அரசியலில் எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் சமகாலத்தில் பாமக கட்சி காடுவெட்டி குரு போல யாரும் கலைஞரை விமர்சித்தது இல்லை... ஆனால் பாமக தொகுதி பங்கிட்டின் போது குரு கலைஞர் எதிரில் உட்கார்ந்து இருந்த போட்டோவை பார்த்த போது  அரசியல் எதையும் தாங்கும் சக்தியை கொடுக்கும்னு புரிஞ்சுது...

===========================
இந்தவார சலனபடம்...


இப்போது நான் ஜுஜுவின் ரசிகனாகிவிட்டேன்... வோடோபோன் விளம்பரங்கள் இந்தியாவில் தனி ரசனையை மக்கள் மத்தியில்  ஏற்படுத்தியது வோடபோன் 3ஜிக்கான இப்போதைய விளம்பரம் அசத்தல்....
==============
  எல்லா ஜுஜுவும் ஒரே இடத்தில்...


 ========
மிக்சர்...
 நிறைய வேலைகள் சாண்ட்வெஜ் எழுதி முடிப்பதற்குள் நாக்கு தள்ளிவிட்டது... சோ எழுதுவது குறைந்து விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கின்றது... ஆனால் இந்த பயம் நிறைய முறை  வந்து போய்விட்டது..பொட்டி தட்டிக்கொண்டு  இருக்கும் போது அழுகை சத்தம் கேட்டால்  எழுத தோணவே மாட்டேங்குது...
 ==============
21/03/2011 திங்கள்கிழமை இரவு சென்னைக்கு கிளம்பி செவ்வாய், புதன் வியாழன்  சென்னையில் இருந்து விட்டு வியாழன் இரவு திரும்ப பெண்களூர் வர வேண்டும்.... வேலை நிறைய இருக்கின்றது..

=====================
தினமும் சரியாக இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து
நன்றிகள்....
==
சில நாட்களாக தோள்பட்டையில் பயங்கரமாக கைவலி மடிவாளாவில் டாக்டரை பார்த்தேன் ஊசி போட்டேன் ஒரு பப்பும் வேகவில்லை.. பட் கொரட்டூரில்   ஸ்ரீபாலஜி மெடிக்கல் (பக்தவச்சலம் கல்லூரி எதிரில் )மருந்து கடை வைத்து இருக்கும்  வாசக  நணபர்  பாபு எனது கைவலியை  பதிவில் படித்து விட்டு சில மருந்துகளை பரிந்தரைத்தார், அதை சாப்பிட்டேன் போயிந்தே.... மிக்க நன்றி பாபு..
==============
துபாயில் இருந்து பேசிய அகமது  சமீபமாக எனது வலையை படித்து வருவதாகவும் எனது மகளுக்கு வாழ்த்தை சொல்லவிட்டு எது வேண்டுமானாலும்  தேவையென்றால் சொல்லுங்கள் வாங்கி அனுப்புகின்றேன் என்று  சொன்னார்.. படித்து விட்டு கடந்து போகாமல் போன் செய்து பாராட்டுகின்றீர்களே அந்த அன்பு  ஒன்று போதும் என்றேன்...
============
குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் பிரான்ஸ் லிங்கம் அவர்கள் மிக விரிவாய் குழந்தை பிறப்பு, மற்றும் வளர்ப்பு குறித்து தனது அனுபவங்களை தனது கைபட எழுதிய கடிதத்தில் பகிர்ந்து கொண்டார்... மிக்க நன்றி...
=====================
வாழ்த்துகள்...
தம்பி பதிவர் அன்புடன் மணிகண்டன் மனவாழ்க்கையில் அடி எடுத்து வைத்து இருக்கின்றார்.... தம்பதிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
=============

jackie sekar
தண்டோரா .
Joseph Paulraj அ.பால்ராஜ்
sankar narayan (கேபிள் சங்கர்)
யுவ கிருஷ்ணா
ஷங்கர் Shankar
Dhinesh Kumar (முகிலன்)
aravind அரவிந்த்
மதார் .
Raguraman R
Mr.R.Din :-)
தியாக ராஜன்
Priya Siva
Vasu Balaji
Delta Nathan(அது சரி)
ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன்
Karthik L (LK)
Prabhagar R (பிரபாகர்)
சேட்டைக்காரன் :-))))
४१ தோழி १४
Raja sankar
மேலே ஒரு பெயர்  லிஸ்ட் கொடுத்து இருக்கேன் இது என்ன என்று உங்களால்  சொல்ல முடியுமா???  
===================
இந்தவார கடிதம்.

காதல் கடுதாசி என்ற பெயரில் ஒரு கடிதம்  வந்தது.. நானும் ரொம்ப ஆர்வமாக திறந்தேன்... கடைசில் அதில் இப்படி எழுதி இருந்தது...

கடிதம் அனுப்பியவர்    பெயர்...... zha nizharpadakkoodam அவர் மிக அழகாக என் தளத்து பேனரை உருவாக்கி அனுப்பி இருந்தார் அவருக்கு என் நன்றிகள்...
 ==========
சும்மா உங்க கிட்ட ஒரு நல்ல பேர் வாங்கலாம்னு தான். எதுக்குடா? அப்படின்னு கேக்காதீங்க
ஐந்தாம் வகுப்பு வரை பாமா டீச்சருக்கு பிடிச்ச மாணவனா இருக்கணும்னு ஆசை
எட்டாம் வகுப்பு வரை ஐசக் சாருக்கு பிடிச்சவனா இருக்கணும்னு ஆசை
இதே மாதிரி இன்னும் நிறைய்ய்ய்ய
அதே மாதிரி இப்போ உங்களுக்கு பிடித்த தம்பியா இருக்க ஆசை
ச்சே என்ன கருமண்டா இது உங்க எழுத்து மேலெல்லாம் காதல் வருது. அதுக்குதான் இம்பூட்டு பீலிங்
டாட்டா.
=====================
இந்த வார புகைபடம்... ஒரு போட்டோகிராபராக இருந்து கொண்டு 18 வருஷத்துக்கு ஒரு முறைவரப்போகும் நிலவை படம் பிடிக்க  காத்து இருந்தேன்..மகள் அழுததால் உலகம் மறந்து போனேன்...எழு மணிக்கு ஜீவ்ஸ் பஸ் பார்த்து அவசரமாக மாடிக்கு போய் படம் எடுத்தேன்...லென்ஸ் 300 சூம் லென்ஸ்..
============
பிலாசபி பாண்டி.
 உண்மையான அன்புக்கு தூரம் ஒரு பெரிய விஷயம் அல்ல.....
 =====
நான்வெஜ்18+
ஜோக்..1
பிளைட்டில் அழகான ஏர்ஹோஸ்டலை பார்த்து விட்டு ஒரு பணக்காரர் கேட்டார்..உனது பெயர் என்ன?? பென்ஸ்.. உனக்கும் மெர்சிடிஸ் பென்சுக்கும் எதாவது  சம்பந்தம் இருக்கா??? இருக்கே.. இரண்டுமே ஒரே விலைதான்.....
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...


=========

21 comments:

 1. அந்த பதிவர்கள் லிஸ்ட் என்னன்னு சொல்லவே இல்லையே...

  ReplyDelete
 2. ஃஃஃஃஃபியூர் நம்பிக்கை துரோகத்தில் பாதிக்கபட்ட சமீபத்திய உதாரணம் வைகோ..ஃஃஃஃ

  அடிக்கடி பேச்சு மாறும் அரசியலை அறிமுகப்படுத்தும் போதே இதை எதிர் பார்த்திருக்கணும் சகோதரம்...

  தங்கள் மனையின் புதுவரவுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

  ReplyDelete
 3. ஃஃஃஃஃபியூர் நம்பிக்கை துரோகத்தில் பாதிக்கபட்ட சமீபத்திய உதாரணம் வைகோ..ஃஃஃஃ

  அடிக்கடி பேச்சு மாறும் அரசியலை அறிமுகப்படுத்தும் போதே இதை எதிர் பார்த்திருக்கணும் சகோதரம்...

  தங்கள் மனையின் புதுவரவுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

  ReplyDelete
 4. //மேலே ஒரு பெயர் லிஸ்ட் கொடுத்து இருக்கேன் இது என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா???//

  எனக்குத் தெரியுமே; ஆனா நான் சொல்ல மாட்டேன்! :-)

  ReplyDelete
 5. ///... "சோ" எழுதுவது குறைந்து விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கின்றது...///என்னடா இது அ.தி.மு.க.கூட்டணிக் குழப்பத்தால் "பிராமணர்" எழுத்தைக் குறைத்து விடுவாரோ என்று ஜாக்கி சேகர் கவலைப்படுகிறாரோ என்று ஒரு கணம் ஆடிப் போய் விட்டேன்!அப்புறம் றிலாக்ஸ் ஆகி விட்டேன்!

  ReplyDelete
 6. "அந்த பதிவர்கள் லிஸ்ட் என்னன்னு சொல்லவே இல்லையே."

  எனக்கு தெரியும்...ஆனா சொல்ல மாட்டேன்.

  ReplyDelete
 7. //பொட்டி தட்டிக்கொண்டு இருக்கும் போது அழுகை சத்தம் கேட்டால் எழுத தோணவே மாட்டேங்குது...//
  மகளுக்காக விட்டுக் கொடுக்கும் மனது வர தொடங்கிவிட்டது.
  நல்ல அப்பாவுக்கு அழகே இது தான்.

  ReplyDelete
 8. //பியூர் நம்பிக்கை துரோகத்தில் பாதிக்கபட்ட சமீபத்திய உதாரணம் வைகோ...

  அருமை ...

  ReplyDelete
 9. "தினமும் சரியாக இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து"...Joy of parenthood. :-)

  The days are long; but the years are short.

  ReplyDelete
 10. அந்த லிஸ்ட் எதுவும் வேட்பாளர் பட்டியலா?? :-))))

  ReplyDelete
 11. //மேலே ஒரு பெயர் லிஸ்ட் கொடுத்து இருக்கேன் இது என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா???//  என்ன எல்லோருக்கும் தலைச்சன் பிள்ளை பெண் பிள்ளையாக்கும்???

  ReplyDelete
 12. "பொட்டி தட்டிக்கொண்டு இருக்கும் போது அழுகை சத்தம் கேட்டால் எழுத தோணவே மாட்டேங்குது..."

  முழுமையான குடும்பஸ்தன் ஆகிவிட்டீர்கள்......

  ReplyDelete
 13. அவிங்கலாம் நொம்ப நல்லவைங்களாக்கும்... ;-)
  ---*---
  முத்து உன்னை யாரடிச்சா?
  முல்லை உன்னை யாரடிச்சா?
  தொட்டு உன்னை யாரடிச்சா?
  ----*---
  சித்தெரும்பு கடிச்சதா மகளே? என் தங்கத்துக்கு வலிக்குதா மகளே?...
  ---*---
  ஜேசுதாசின் குரலில் பாடவும். அழுமா அந்த தேவதை இனி?
  ---*---
  எதுக்குடா வம்பு என்று பேசாமல் இருக்கலாம் இல்லை... அடிக்கடி அழலாம் இன்னும் கேட்க...
  ---*---
  எது நடந்தது பிறகு கேட்டுக்கொள்கிறேன்.

  ;-)

  ReplyDelete
 14. \\சோ எழுதுவது குறைந்து விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கின்றது..\\ பயமே வேண்டாம். அவரு நிறைய எழுதுவாரு ஜாக்கி. தேர்தல் நேரத்துல இப்படி எல்லாம் சொல்லாதீங்க:-))

  ReplyDelete
 15. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...அந்த பட்டியலில் இருப்பவர்கள் எல்லோருமே கெட்டவர்கள்... அப்படின்னு.. வேணாம் எனக்கு உவ்வே...

  ReplyDelete
 16. இந்த முறை பாட்டி உண்மையிலேயே வடை சுட்டுக்கொண்டிருந்தாங்க.

  இளைய தலைமுறைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. Everyone in the list is having "Girl Baby" as their first child

  Prabhu S

  ReplyDelete
 18. முத்து எடுக்க மூழ்க வேண்டும்
  முழுகாம இருந்து முத்து எடுத்ததற்கு
  என் சார்பாக உங்கள் துணைவிக்கு
  வாழ்த்துக்கள் சொல்லுங்க

  ReplyDelete
 19. கடிதம் அனுப்பியவர் பெயர்...... zha nizharpadakkoodam அவர் மிக அழகாக என் தளத்து பேனரை உருவாக்கி அனுப்பி இருந்தார் அவருக்கு என் நன்றிகள்...

  என்ன அண்ணா இப்படி பெருமைப்பட வச்சுட்டீங்க.
  அது என்னோட பெயர் இல்லை அண்ணா. 'ழ' நிழற்படக்கூடம் என்னோட ஸ்டுடியோ பெயர்
  என்னோட பேரு கார்த்திக்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner