ஆல்பம்
பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார்... அவர் 5ம் கட்ட ஈழ போருக்கு தயராகி வருகின்றார் என்று திரும்பவும் பழ நெடுமாறன் பேசி இருக்கின்றார்...ஈழம் கிடைக்கின்றதோ இல்லையோ? அந்த மாவீரன் உயிரோடு இருக்க வேண்டும்.. 13 வருடகாலங்கள் தமிழ் மக்களை நெஞ்சு நிமிர்த்தி நடக்க வைத்த அந்த வீரம் உயிரோடு இருந்தால் போதும்... பேசியது உண்மையாக இருந்தால் அதுவே போதும்...
================================
தேர்தல் நாள் அறிவித்தாகவிட்டது...இந்த தேர்தலில் மாட்டை மேச்சோமா கோலை போட்டோமா என்று இருக்க முடியாது.. காரணம் மூன்று நாளில் யார் முதல்வர் என்று முடிவு தெரிந்து விடும்...ஆனால் இந்த முறை ஏப்ரல் 13ம்தேதி தேர்தல்.. மே 13ம்தேதிதான் ஓட்டு எண்ணிக்கை...ஒரு மாசம் வயித்துல நெருப்பைக்கட்டிக்கினு அரசியல்வாதிங்க இருக்கனும்...தினமும் டென்ஷன் ஆக இருக்கும் தண்ணி அடிச்சிகிட்டே இருந்தாகனும் பாவம்தான்...
இங்க பெங்களூர்ல பெங்களூர் மீடியாக்கள் ஒரு எம்எல்ஏவுக்கு சூப்பர்மேன் என்று பட்டம் கொடுத்து இருக்கின்றார்கள்.. அவர் பெயர் நேருஓலிக்கர் அவர் டிராவல் எக்ஸ்பென்சஸ் பில் கொடுத்து இருக்கின்றார்... செப்டம்பர் 9ம் தேதி கொடுத்த பில்லில் ஒரு நாளில் ரோம்,துபாய் பெங்களூரில் இருந்தது போல் பில் சப்மிட் செய்து இருக்கின்றார்... ஒரே நாளில் எப்படி 3
இடத்தில் இருக்க முடியும்...அப்படி அவர் இருந்தால் சூப்பர் மேனாக அல்லவா இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள்..
இங்கு மெட்ரோ ரயில் வெள்ளோட்டத்தை பார்த்தேன்.. எப்போது நம்ம ஊரில் ஓடும் என்ற ஏக்கம் இயல்பாய் எழுந்தது...
======================
மிக்சர்
நான் சொன்னது போல தினமும் ஒருவர் என் புகழை பரப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்...என் புகழ்பரப்பிகளுக்கு எனது நன்றிகள்.
=================================
இயக்குனர் கவுதம் வராணம் ஆயிரம் நல்ல அப்பாவை பற்றியபடம் எடுத்தார் ரசித்தார்கள்.. காதலை விண்ணைதாண்டிவருவாயில் மிக அழகாய் சொன்னார் ரசித்தார்கள்... அவர் நல்ல படைப்பாளி.. கெட்ட அப்பா பற்றிய படத்தை எடுத்தார்.. திட்டினார்கள்..கருத்தை சொல்ல உரிமை இருக்கு துப்ப உரிமை இல்லை என்றேன்..ஆனால் துப்பவும் உரிமை இருக்கின்றது என்றார்கள்..இப்போதும் எழுத்தில் வீரம் காட்டி வருகின்றார்கள்.. என் அம்மா மீது ஆணையாக இதுவரை அவரை நேரில் கூட பார்த்தது இல்லை பேசியதும் இல்லை... காலையில் கவுதம் எனது தளத்தை வாசித்து விட்டுதான் ஷுட்டிங் செல்வது போல சொல்கின்றார்கள்... கவுதமோடு ஆதாயத்துக்காக எழுதுவதாக சிலர் சொல்கின்றார்கள்...உங்க வாக்கு பலித்தால் மிகிழ்வேன்..
காலையில் ஒரு மெயில் சென்னை வலைபதிவர்கள் குழுமம் ஆரம்பிக்க போகின்றோம் உங்கள் கருத்து என்ன ?என்று ஒரு மெயில் வந்தது... எனது பதில்... தாராளமா ஆரம்பிங்க.. அங்கையாவது முகமடி இல்லாத மனிதர்கள் மெம்பர்கள் ஆவார்கள் இல்லையா???
==================================
உயிர்மை இணையத்தில் நடுநிசிநாய்கள் படத்தினை பற்றி எழுதிய விமர்சனத்தில் கிழ் வரும் வரிகள் வருகின்றன...
கட்டுடைக்கும் ஆர்வம் யாருக்கேனும் எங்காவது, எப்பொழுதாவதுதான் ஞானம் உண்டானது போல் ஏற்படும். அதையும் தட்டிக் கழித்து, சமுதாயம், பாரம்பரியம், ஒழுக்கம் என்று கூறி அமுக்கி விடக்கூடாது என்பதுதான் என் வேண்டுகோள்.
என்று சூர்யா என்ற கட்டுரையாளர் எழுதி இருக்கின்றார்...
இதைதான் படம் வந்ததும் எனது கருத்தை முன் வைத்தேன்.. இந்த கட்டுரையை எழுதிய சூர்யா, அதை அனுமதித்த உயிர்மை இணையம் போன்றவற்றை.... வேண்டாம்.....மேலும் வாசிக்க. இங்கேகிளிக்கவும்..
இந்த வார சலனபடம்..
நம்ம தமிழ் பாட்டு பேக்ரவுண்டுல தலைவி ஷக்கிராவை பார்க்க நல்லத்தான் இருக்கு.. நல்ல மிக்சிங்...
==========================
இந்தவாரகடிதம்..
சில கடிதங்கள் எனக்கு சிரிப்பை வரவைக்கின்றன... இனி எனஉங்கள் தளத்துபக்கம் வரமாட்டேன் என்று இதுவரை இரண்டு கடிதங்கள் வந்து விட்டன.. என் மீது மதிப்பு வைத்து அறிவிப்பு செய்து வெளியேறிய நண்பர்களுக்கு என் நன்றிகள்..ஆனால் காலக் கொடுமை என்னவெனில் இந்த பத்தியை படிப்பீர்கள் என்பதுதான்...
=======================
மதிப்பிற்குரிய ஜாக்கி சேகர் அவர்களே,
எனது பெயர் ஆறுமுகம். உங்களது எழுத்தை நீண்ட நாட்களாக வாசித்து வருகிறேன். உங்களது எழுத்தின் வலிமையையும் அது சமுதாயத்தில் உண்டாக்கும் தாக்கத்தையும் நன்கு அறிந்துள்ளேன். உங்களது சமுதாய பணிக்கு தலை வணங்கி பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
நானும் எனது தோழர்களும் இணைந்து எங்களால் முடிந்த சிற்சில சமுக பணிகளை செய்து வருகிறோம். தற்போது தமிழக மீனவர் படுகொலை பிரட்சினையை சர்வதேச அளவிற்கு எடுத்து செல்வதில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். ஐநா சபையின் மனித உரிமை அமைப்பிற்கும் மற்றும் உலகளாவிய மனித உரிமை அமைப்பிற்கும் இப்பிரச்சனையை எடுத்துச் செல்ல இருக்கிறோம். பல நாடுகளில் உள்ள மீனவ அமைப்புகளைத் தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவு குரல்களை நாட முயற்சி எடுத்து கொண்டிருக்கிறோம். இப்பணியின் ஒரு சிறிய அங்கமாக ஐநா சபையின் மனித உரிமையின் அமைப்பிற்கான வேண்டுகோளை (online petition) இனைய தளத்தில் மக்களின் கையொப்பத்திற்காக வைத்துள்ளோம்.
http://www.thepetitionsite. com/6/save-indian-fishermen/
நீங்கள் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பிர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் உங்களது இணையப் பக்கங்களில் இக்கோரிக்கையைப் பற்றி இரண்டு வரிகளை எழுதுனீர்களேயானால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் ஆதரவைப் பெற்றுத் தரும்.
உங்களது சில வார்த்தைகள் எங்களது பல வார உழைப்பை விட பலமானது. தயவு செய்து இந்த கோரிக்கையை (online petition) பற்றி சில வார்த்தைகளை உங்கள் இணைய பக்கங்களில் எழுதுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இக்கோரிக்கையைப் பற்றியோ அல்லது எங்களது செயல் பாடுகளைப் பற்றியோ மேலும் விவரங்கள் வேண்டுமென்றால் தெரிவியுங்கள்.
உங்களது பதிலையும் ஆதரவையும் எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்.
இப்படிக்கு,
ஆறுமுகம்
www.ilantamilar.org
அன்பின் ஆறுமுகம் இதுகுறித்து நான் ஏற்கனவே எழுதி இருக்கின்றேன். இருப்பினும் இந்த கடிதம் வாயிலாக இது பல பேருக்கு சென்று சேர்வது குறித்து மிக்க மகிழ்சி... அதுவரை இந்த பெட்டிஷனில் கையெப்பம் இடாத நண்பர்கள் ஆன்லைனில் உங்கள் வாக்குகளை பதிய வேண்டிக்கொள்கின்றேன்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
hellosir
i am your fan.i read every post in your blog.i admire your thoughts very much.when i read this post i feel both +ve as well as -ve.because i defend personal vulgar words against GVM and his movie is so vulgar. sorry for my English.sir, oru nalla movie parththuvittu orall nallavana marunalum athu antha padaththukku kitaththa credit. athe mathiri ippadi oru padaththai parthuvittu 2 members mind marunalum kettathuthane sir.Avaroda varanam ayiram movie parthu en appava miss pannivittan entru thoniyathu.i told my husband you also see that father and son relationship.See Movie is a movie.our peoples are that much matured (Ex.our politics) thats why i am telling. keep yr good work.thank you sir.
-KavithaSaran, Kochi
மிக நாகரிகமாக உங்க கருத்தை சொன்ன கவிதா அவர்களுக்கு என் நன்றிகள்..
நன்றிகள்
சிலருக்கு நன்றிகள் சொல்ல வேண்டி இருக்கின்றது... போன் செய்து நாங்கள் இருக்கின்றோம் என்று சொன்ன நண்பர்களுக்கும், பின்னுட்டத்தில் மிக நாகரிகமாக கருத்தை சொன்ன நண்பர்களுக்கும் எனது கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள்..
முக்கியமாக தம்பி அப்துல்லா மற்றும் நண்பர் குறை ஒன்றும் இல்லை
================================
பார்த்ததில் பிடித்தது....
இங்கே மாலில் ஒரு பெண் குழந்தை ராம்ப்பில் வேகமாக இறங்கியது சட்டென சறுக்கி விழுந்தது.. அப்பா தூக்கி வீட்டு பம்சை தடவி கொடுத்தார்.. திரும்பவும் எதிர் திசையில் ஏறியது விழ வில்லை... சரி நாம் விழவில்லை ரொம்ப டேலன்ட் என்று நினைத்து திரும்பவும் ரேம்பில் வேகமாக இறங்ககியது...இப்போது முன்னை விட வேகமாக சருக்கி வந்து விழுந்தது..நாங்கள் பார்க்காதது போல திரும்பிக்கொண்டோம்... திரும்பவும் அதே ரேம்பில் ஏற ரெடியாக நின்ற போது அவள் அப்பா அவளை தரதரவென அழைத்து சென்றார்...
==========================
இந்தவார நிழற்படம்..
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் லக்ஷ்மன் சுருதி எதிரில்...இரண்டு வாரத்துக்கு முன் ஒரு விடியலில்...
=============================
பிலாசபி பாண்டி
பதில் சொல்லவேண்டியவைகளுக்கு பதில் கண்டிப்பாக சொல்ல வேண்டும்... பதில் சொல்லாமல் இருந்தால் எல்லாத்தையும் அனுமதிப்பாதாக அர்த்தம்...
நான்வெஜ், 18+
ஜோக்..1
50 வயசு பொம்பளை செக்ஸ் டாக்டரை போய் பார்த்தா... டாக்டர் இப்ப என் கணவர் முன்ன போல செயல்பாடு இல்லை அதுக்கு என்ன செய்யலாம்னு கேட்டா? அதுக்கு டாக்டர் சொன்னார்..
ஒரு வயக்ரா மாத்திரை கொடுங்க போதும்னு சொன்னார்... டாக்டர் மாத்திரையை பார்த்தலே என் புருசன் வாத்தி எடுத்து விடுவார் என்று சொல்ல.. அப்படின்னா பால் இல்லன்னா காபியில் கலந்து கொடுத்துடுங்க என்று ஐடியா கொடுத்தார்...ஒரு வாரம் கழிச்சி டாக்டரை போய் பார்த்தாள்..
என்ன எப்படி இருந்தது அனுபவம் என்று கேட்க??? அதையேன் கேட்கறிங்க ரொம்ப நாள் அந்த அனுபவம் இல்லாத காரணத்தால் நான் ஒரு மாத்திரைக்கு 5 மாத்ரையை காபியில கலந்து கொடுத்துட்டேன்.. அதனால் அந்த எடத்துலேயே ஒரு அரைமணி நேரத்துக்கு உண்டு இல்லைன்னு சொல்லிட்டார் என்ன அடுத்தவாட்டி சரவணபவன் ஓட்டல் பக்கம் தலைகாட்டமுடியாது என்றாள்..
==============
குறிப்பு...
காலையில் தண்டோரா வீட்டில் தினப்பேப்பர் வரவில்லைபோலும் காலையிலேயே ஜாக்கியின் சாண்ட்வெஜ் எப்போது வரும் என்று ஆர்வமாக பஸ்விட்டு இருந்தார். அவரது ஆர்வத்தை லேட்டாக நிறைவேற்றுவதற்கு வருந்துகின்றேன்..
இப்படி ஒரு வாசகன் கிடைக்க நான் கொடுத்து வைத்து இருக்கவேண்டும்... என்ன தவம் செய்தனை...??
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
சொல்றதுக்கு ஒண்ணுமில்லை... வந்ததுக்கு அட்டெண்டன்ஸ்...
ReplyDeleteTHE SAME PROBLEM
ReplyDeleteI CAN'T read the blog
it's appear only english letters
what's up
hi jakie i saw ur blog just 2 months back. am new to this blogging.found ur site fortunately.read all ur movie reviews.all are good.making of movie is simply directors thoughts.if u don like na,dont c the movie.dont criticise him.comment on movie is always acceptable...but we hav no right to comment on movie maker.# பார்த்தே தீர வேண்டிய படங்கள் (109) i read all posts and download 30 movies and watched tat....2day morning too i watcher UNSTOPPABLE movie...like ur things...ur blog make me to search for good movies and it is a good helper for myself like good movvie lovers....
ReplyDeletei feel herd typing in tamil...
so am typing in egnlish...
best of uck for your great work...
www.nimidam.blogspot.com
ReplyDeletegud!!
ReplyDeleteas usual!!!!!!!
senthil, doha
வழக்கம் போல் அருமை ஏன் தல மேட்டர் கம்மியா இருக்கு ?
ReplyDelete"கவுதமோடு ஆதாயத்துக்காக எழுதுவதாக சிலர் சொல்கின்றார்கள்...உங்க வாக்கு பலித்தால் மிகிழ்வேன்.."
ReplyDelete"அங்கையாவது முகமடி இல்லாத மனிதர்கள் மெம்பர்கள் ஆவார்கள் இல்லையா???"
சரியான பதிலடி.
Dear Mr.Jackie,
ReplyDeleteஉங்கள் பதிலடி அருமை. அப்படியாவது சில நாதாரிங்களுக்கு அறிவு வருதான்னு பாப்போம். நீங்கள் இதுவரை யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை. அனால உங்கள் பேர் போட்டாலே hit அடிக்கலாம்னு சிலர் அலையிரானுங்க.
இப்ப உயிமை இதழை பற்றி கேவலமாக எழுதுரானுங்களான்னு பாப்போம்.
"என் அம்மா மீது ஆணையாக இதுவரை அவரை நேரில் கூட பார்த்தது இல்லை பேசியதும் இல்லை."
நீங்க இந்த அளவுக்கெல்லாம் இவனுங்களுக்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்ல ஜாக்கி. நீங்க தொடருங்க... :))
அன்பு ஜாக்கி,
ReplyDeleteஉங்களின் கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
பெங்களுரு தகவல்களும் கலந்து வருவது சிறப்பு. நண்பர் தண்டோரா பெங்களுரு பேப்பர் படிக்க வாய்ப்பிருக்காது என்பதால் காலையிலேயே ஆர்வமாக இருந்திருக்கலாம்.
கவுதமுடன் அடுத்த படம் தாங்கள் இணைந்து பணியாற்ற எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன். “அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்த” அக்கினிக் குஞ்சாக (இது டபுள் மீனிங் இல்லை ஜாக்கி), நீங்கள் வெடிக்க வெடிக்க இந்த அற்பப் பதர்கள் பொசுங்கட்டும்.
Keep rocking.
அன்பு நித்யன்
பாஸ் சூப்பர்.....
ReplyDeleteநடுநிசி நாய்கள்’ போன்ற புதுமையான மேக்கிங் கொண்ட திரைப்படங்கள்தான் திரைப்படங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்செல்வதற்கான துணிவையும், உற்சாகத்தையும் கொடுக்கும். பல இளம் இயக்குனர்கள் உத்வேகம் அடைந்திருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.
கட்டுடைக்கும் ஆர்வம் யாருக்கேனும் எங்காவது, எப்பொழுதாவதுதான் ஞானம் உண்டானது போல் ஏற்படும். அதையும் தட்டிக் கழித்து, சமுதாயம், பாரம்பரியம், ஒழுக்கம் என்று கூறி அமுக்கி விடக்கூடாது என்பதுதான் என் வேண்டுகோள்
கண்டிப்பா இது உண்மை......
உண்மைகள் சில சமயம் பல பேருக்கு சுடும்.உங்கள் பணியை நிறைவாகவே செய்கிறீர்கள்.
ReplyDeleteஇது தான் ஸ்ட்ரோக்
http://jskpondy.blogspot.com/2011/02/blog-post_25.html
அண்ணே !! எனக்கு இன்னமும் சில சந்தேகங்கள் !!! 1. யாரும் யாரையும் வற்புறுத்தி அழைக்காத போது ஏன் உங்கள் தளத்திற்கும், கவுதம் படத்திற்கும் செல்ல வேண்டும்? 2. அப்படியே உங்கள் தளத்திற்கு வந்திருந்தாலும் ஏன் நீங்கள் அளித்துள்ள பின்னூட்ட இடத்தை உபயோகிக்காமல் உங்கள் பெயரை வைத்து தனிப்பதிவெழுத வேண்டும்? 3. ஊங்களுக்கு வேண்டிய பின்னூட்டங்கள் மட்டுமே வருமென்றால் பிறகு எப்படி எதிர் பின்னூட்டங்கள்? ஆக நோக்கம் உங்களை தாக்குவதல்ல .. காது குடைய கூட உபயோகமில்லா ஹிட்ஸிற்காகவே ...
ReplyDelete30, not 13..
ReplyDeleteகுறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete"ஆக நோக்கம் உங்களை தாக்குவதல்ல .. காது குடைய கூட உபயோகமில்லா ஹிட்ஸிற்காகவே ."
Dubukku said...
"இப்ப உயிமை இதழை பற்றி கேவலமாக எழுதுரானுங்களான்னு பாப்போம்.
நீங்க இந்த அளவுக்கெல்லாம் இவனுங்களுக்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்ல ஜாக்கி. நீங்க தொடருங்க."
நச்ச்..... :)
எனக்கென்னவோ நடுநிசி நாய்கள் படம் பத்தி கவ்தம் மேனனை விட நீங்கள் தான் அதிக விமர்சனங்களை வாங்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
ஒருவேளை நான் கவுதம் மேனனாக இருந்திருந்தால் உடனே உங்களை கூப்பிட்டு asst டைரக்டராக ஆகியிருப்பேன்.
வழக்கம் போல் அருமை.
ReplyDeleteதண்டோரா தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்!
ReplyDelete