உங்களுக்கு பெண் குழந்தை இருக்கின்றதா? அதுவும் பத்தாம் வகுப்பு அல்லது பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் இருக்கின்றாளா-?
இதை எதுக்கியா கேக்கற??
சொல்லுங்க..
இருக்கா இல்லையா?
இருக்கா..
குட் அப்ப நான் சொல்லறதை நீங்க கேளுங்க...
உங்களுக்குத்தான் அந்த பிரச்சனை புரியும்....
உங்க பொண்ணுக்கு கால்பந்துன்னா உசிரு...
சென்னையயில ஒரு பெரிய கால்பந்தாட்ட திருவிழா நடக்குது.. நம்ம நேரு ஸ்டேடியத்துல நடக்குதுன்னு வச்சிக்கங்க... வேற எங்க நடத்த முடியும்... அங்க உங்க பொண்ணை அழைச்சிகிட்டு போறிங்க... ரெனெல்டோ அப்புறம்.... அதுக்கு மேல எனக்கு கால்பந்து பற்றி எதுவும் தெரியாது... காரணம் அந்த அளவுக்கு எனக்கு இலக்கியம், உலக ஞானம் எதுவும் தெரியாது.... ஏதோ நியூஸ் பேப்பர் பார்த்து எழுதறவன்..
சோ அதனால இப்ப கிரிக்கெட் திருவிழா நடக்குது அதனால அதை வச்சிக்குவோம்.. உங்க பொண்ணுக்கு கிரிக்கெட்டுன்னா ரொம்ப பிடிக்கும்னு வச்சிக்கிங்கோ...நம்ம சேப்பாக்கம் கிரவுண்டுக்கு உங்க பொண்ணை கூட்டிகிட்டு வாங்க...
என்ன ஜாக்கி சார் நான் இவ்வளவு தூரம் வந்துட்டேன் உங்க பேச்சை நம்பி இவ்வளவுதூரம் வந்துட்டேன்.. இப்ப திடிர்னு என்னையும் என் பொண்ணையும் சேப்பாக்கம் வர சொன்ன என்ன அர்த்தம்...??
எதோ மொக்கையா எழுதினாலும் நான் ஏதோ சொல்லப்போறேன்னுதானே நீங்க என்னை தொடர்ந்து வந்துகிட்டு இருக்கிங்க.. அப்ப இங்க இருந்து பக்கம் தான் நாலே நாலு கிலோமீட்டர்தான் எனக்காக சேப்பாக்கம் வந்துடுங்க. எனக்குகிரிக்கெட் வீரர்கள் பேர் ஓரளவுக்கு தெரியும்...அதனாலதான்..
சேப்பாக்கம் வரச்சொன்னேன்... அங்க வந்தா செம ரஷ்... எல்லாம் முகத்துல நம்ம தேசிய கொடியை வரைஞ்சி வச்சிகிட்டு சச்சின் வாழ்கன்னு கோஷம் போட்டு கிட்டு இருக்காங்க...
நிறைய ஆம்பளை பசங்க இருக்கற கூட்டத்துல எப்படிங்க ? நம்ம பொண்ணை அழைச்சிகிட்டு போயிட்டு வர முடியும்னு போகும் போதே உங்க ஒய்ப் வாய வச்சது வேற உங்களுக்கு இந்த நேரத்துல ஞாபகம் வந்து தொலைக்குது...
நம்ம பொண்ணு மனித ஜாதிதான் ஒரு ஆம்பளை புள்ளைக்கு இருக்கும் எல்லா உணர்வும் ஆசையும் அவளுக்கும் இருக்கும் என்று மனைவி வாயை அடைத்து விட்டு மேட்ச் பார்க்க அழைத்து வந்தது மிக பெரிய தவறோ என்று அங்கு இருக்கும் பசங்க கூட்டத்தை பார்த்து மலைச்சிபோயிடுறிங்க....
மேட்ச் வேற ஆரம்பிச்சிடுச்சி மைதானத்துல ரசிகர்கள் போடற கூச்சல் வெளிய காதை பிளக்குது... கடவுள் மேல பாரத்தை போட்டு விட்டு அந்த கூட்டத்துல உங்க மகளை அழைச்சிகிட்டு போறிங்க... உள்ள போய் உங்க எடுத்துக்கு போனதும் அப்பா எனக்கு லூ வந்துடுச்சின்னு சொல்லுது உங்க பொண்ணு....
அடக்கிக்கோ இவ்வளவு கூட்டத்துல நாம் எங்க போறதுன்னு சொல்லறிங்க... அவளுக்கு உடனே ஒன்னுக்கு வந்துடும் போல குதிக்கிறா..சரின்னு அவளை அழைச்சிகிட்டு லேடிஸ் பாத்ரூம் எங்க இருக்கின்னு தேடிக்கிட்டு போறிங்க...அங்க இருக்கும் வாலன்டியர் மற்றும் செக்யூரிட்டிகிட்ட கேட்டா அவுங்க யாருக்கும் தெரியலை...ஒரு பத்து நிமிஷம் உங்க பொண்ணு துடிச்சி போறா... அதை பார்த்து நீங்களும் துடிச்சி போறிங்க.. அப்பதான் தெரியுது.. அந்த ஸ்டேடியத்துல எங்கயும் பொண்ணுங்களுக்கு பாத்ரூம் இல்லை...வெறும் ஆம்பளை மட்டும் இந்த நாட்டுல வாழ்ந்தா பராவயில்லை.. பொம்பளைங்களும்தானே வாழறாங்க அவுங்களுக்கு பாத்ரும் இல்லைன்னா என்ன அர்த்தம்??? பொம்பளை இல்லாம இவனுங்க எப்படி பொறந்து இருக்க முடியும்??? இப்படி எல்லாம் நினைக்கறிங்க... இந்த உலகத்துல இது எங்கயாவது அடுக்குமா என்று கேட்டால்???
அடுக்கும்...
எங்க தெரியுமா??
ஈரானில்..
அங்கு பெண்கள் விளையாட்டு பார்க்க அனுமதி இல்லை.. அதனால் அந்த ஊரில் இருக்கும் எந்த ஸ்டேடியத்துலேயும் பெண்களுக்கு என்று எந்த பாத்ரூமும் இல்லை.....கொடுமை அல்லவா.. இதைதான் இந்த ஆப்சைடு என்ற இந்த திரைப்படம் பெண்கள் உரிமைகளின் மறுப்பை உரத்து சொல்கின்றது....
===========
(OFF SIDE-2006) படத்தின் கதை என்ன???
2006ல் ஈரானுக்கு பக்ரைனுக்கு நடக்கும் உலககோப்பை கால்பந்தாட்ட போட்டியை பார்க்க, கால்பந்தாட்டத்தின் மீது உள்ள வெறி காரணமாக பெண்கள் விளையாட்டு பார்க்க போகின்றார்கள். ஈரானில் இஸ்லாமிய பெண்கள் விளையாட்டு பார்க்க தடை இருக்கின்றது.. விளையாட்டு மட்டும் அல்ல பெண்கள் கேளிக்கைக்கு செல்ல தடை இருக்கின்றது...
அதையும் மீறி சில பெண்கள் கால்பந்தாட்டம் பார்க்க ஆண் உடை அணிந்து ஸ்டேடியத்துக்கு போகின்றார்கள்.. உள்ளே போக தடை இருக்கின்றது இருந்தாலும் தகிடுதித்தம் செய்து உள்ளே யோய் விடுகின்றார்கள்..ஆனால் மேட்ச் பார்க்க முடியவில்லை காரணம் ஏதோ ஒரு வகையில் மாட்டிக்கொண்டு விடுகின்றார்கள்.. அவர்கள் கைதுசெய்யபடுகின்றார்கள் அவர்களின் நிலை என்ன?என்பதை வெசண்திரையில் பாருங்கள்..
================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
என்டா விளையாட்டு பார்க்க போனது குத்தமாய்யா? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது... இதே பூமி பந்தில் இருக்கும் ஒரு நாடு பெண்கள் விளையாட்டு பார்க்க விளையாட்டு மைதானத்துக்கு வரக் கூடாது என்று தடைவிதித்து இருக்கின்றது...
படம் பார்த்து முடிக்கும் போது இப்படி கூட படம் எடுக்க முடியமான்னு மூக்கின் மீது விரல் வைப்பீர்கள்...
படத்தில் நடித்த ஒரே ஒரு கேரக்கடரைத் தவிர வேற யாருக்கும் பேர் இல்லை.. ஆனால் நிறைய கேரக்டர்கள்... படத்தில் எப்படி சாத்தியம்...
போட்டி ஆண் வேஷத்தில் வந்து மாட்டிக்கொண்ட பெண் லூ வருகின்றது என்று சொன்னதும் ஒரு சோல்ஜர் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு ஆண்கள் பார்த்ரூமுக்கு போய் கழிவரைக்கு வரும் எல்லேரையும் வெளியே அனுப்பி விட்டு அந்த பெண்ணை உள்ளே அனுப்பி விட்டு போராடிக்கொண்டு இருப்பதும் அங்கு நடக்கும் நிகழ்வும் கவித்துவமான காட்சி...
போட்டி பார்க்க வந்து கைதான பெண்களை அவர்கள் தங்கை அம்மா என்ற அளவில்தான் பேசுவார்களே ஒழிய..காதலி மனைவி என்று பேசாமல் இருக்க முயற்சிப்பதை காட்சி படுத்தி இருப்பார்கள்..
தப்பித்து ஓடி போட்டி பார்க்க சென்ற பெண் திரும்ப தப்பிய இடத்துக்கே வந்து விட சோல்ஜர் எதுக்கு வந்தாய் ?என்று கேட்கும் போது என்னால் உன் வாழ்க்கை வீணாவதை விரும்பவில்லை என்று சொல்லும் காட்சி செமை..
இந்த படத்தில் புட்பால் கிரவுண்டை ஒரு ஷாட்டில் கூட முழுதாய் காண்பிக்கவில்லை என்று நினைக்கின்றேன். சில ஷாட்டுகள் நான் மிஸ் செய்துவிட்டேன் அதான் டவுட்..
அவ்வளவு கட்டுபாடு கொண்ட பெண்கள் வாழும் நாட்டில் சிகரேட் பிடிக்கும் பெண் இருக்கின்றாள் என்று காட்டும் காட்சியும் அதிக கட்டுபாடுகள் எதாவது ஒரு வகையில் மீற வைக்கும் என்பதுதான் இந்த படத்தின் அடிநாதம்..
ஒரு பெண் ராணுவ உடையில் போய் மாட்டிக்கொள்ளவது சுவாரஸ்யம்
பிளாக்கில் போட்டி டிக்கெட் விற்பவன் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று முதலில தர முடியாது என்று சொல்லிவிட்டு படிப்படியாக விலை ஏற்றி டிக்கெட் விற்பது எல்லா ஊரிலும் நடக்கும் விஷயம்தான்....
ஒரு சோல்ஜருக்கு செல்போனில் தன் குடுமபத்துடன் ,காதலியுடன் கூட பேச முடியவில்லை என்பதை போகிற போக்கில் காட்சியாக வைத்து இருப்பார் இயக்குனர்..
லூ வந்த பெண்ணை பாத்ரூமில் எங்கும் பார்க்க கூடாது என்று சோல்ஜர் சொல்ல அதுக்கு அந்த பெண் ஏன் என்று கேட்க?? கண்டபடி அசிங்கமாக எழுதி இருப்பார்கள் என்பதை சொல்வதும்,
அந்த பெண்ணை ஒரு வீரனின் புகைபடத்தில் இருக்கும் கண்ணை நோன்டி அந்த பெண்ணுக்கு முகமூடி போல மாட்டி விட..அந்த வீரனின் முகம் அப்பாவியாக பாவமாக இருப்பதை போல தேர்வு செய்து இருப்பது இயக்குனரின் நக்கல்...
Jafar Panahiஇந்த படத்தின் புரொட்யூசர், எடிட்டர்,டைரக்டர் எல்லாம் இவர்தான்...
வலியில்லாது எந்த காவியமும் உருவாகாது... இயக்குனரின் மகள் கால்பந்தாட்ட போட்டி பார்க்க ஆசைப்பட அப்படி ஒரு ஆப்ஷன் தன் தேசத்தில் இல்லையே என்று பொங்கிய விளைவு இந்தக்காவியம்..
ஈரானில் எடுத்தாலும் இந்த படம் அந்த நாட்டில் திரையிட தடை செய்யப்பட்டபடம்...
இந்த படம் உலகதிரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றது..
===================
படத்தின் டிரைலர்..
========================
படக்குழுவினர் விபரம்..
Directed by Jafar Panahi
Written by Jafar Panahi
Shadmehr Rastin
Starring Shima Mobarak-Shahi
Safar Samandar
Shayesteh Irani
Ayda Sadeqi
Golnaz Farmani
Music by Yuval Barazani
Korosh Bozorgpour
Cinematography Rami Agami
Mahmoud Kalari
Editing by Jafar Panahi
Distributed by Sony Pictures Classics
Release date(s) February 17, 2006
Running time 93 minutes
Country Iran
Language Persian
Budget $2,500 (estimated)
========
Written by Jafar Panahi
Shadmehr Rastin
Starring Shima Mobarak-Shahi
Safar Samandar
Shayesteh Irani
Ayda Sadeqi
Golnaz Farmani
Music by Yuval Barazani
Korosh Bozorgpour
Cinematography Rami Agami
Mahmoud Kalari
Editing by Jafar Panahi
Distributed by Sony Pictures Classics
Release date(s) February 17, 2006
Running time 93 minutes
Country Iran
Language Persian
Budget $2,500 (estimated)
========
பைனல்கிக்...
இந்த படத்தை அவசியம் பார்த்தேதீரவேண்டும்.. செலவே இல்லாமல் உணர்வுபூர்வமாய் தன் நாட்டு பிரச்சனையை அவ்வளவு தடை இருந்தும் எடுத்த வெளி உலகுக்கு சொன்ன இயக்குனருக்கு என் நன்றியும் அன்பும்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
நான் ரெண்டு மூணு ஈரான் படங்கள் பாத்திருக்கேன் பாஸ் இந்தப்படத்தையும் பார்க்கிறதுக்கு ட்ரை பண்றேன் .....
ReplyDeleteGood review..
ReplyDeleteநல்ல படவிமர்சன் டவுண்லோட் போட்டாச்சு
ReplyDeleteஅப்ப நான் கண்டிப்பா பார்க்கனும்.
ReplyDeleteGud Review!!!!!
ReplyDeleteIranian movies are the best!!!!!
senthil, doha
இந்த படத்தின் இயக்குனர் தற்போது சிறையில் உள்ளார்.அவர் மீது 20 வருடம் படம் இயக்க தடை போடப்பட்டுள்ளது
ReplyDeleteவேர்ல்ட் மூவீஸ்ல் அடிக்கடி காண்பிக்கப்படும் படம் இது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம் இது.
ReplyDeleteAwesome movie
ReplyDelete