ஒன்றிலிருந்துததான் 100 என்று சொல்வார்கள்....முதல்படி, தொடக்கம் எல்லாம் ஒன்றில் இருந்துதான்...மற்றவர்களுக்கு இது பெரிய விஷயம் இல்லை.. ஆனால் என்னை பொருத்தவரை இது ரொம்ப பெரிய விஷயம்...
இந்த பதிவுலகில் நான் வந்து மிகச்சரியாக மூன்று வருடங்கள் ஆகின்றன...யாரும் எனக்கு வந்து இப்படி எழுது.. அப்படி எழுது என்று யாரும் எனக்கு சொல்லிக்கொடுக்கவில்லை...ஆனால் மற்றவரை விட சுவாரஸ்யமாக எழுத வேண்டும்.. சொல்லும் விஷயத்தை ரொம்ப சுவாரஸ்யமாக கொடுக்கவேண்டும் என்பது மட்டுமே எனக்கு மனதில் நான் சொல்லிக்கொண்ட விஷயங்கள்...
எனக்கு தமிழ் டைப் தெரியாது பட் அப்படி இருந்தும் எனக்கு சொல்லிக்கொடுத்த விஷயத்தை வைத்து எனது முயற்சியில் இந்த நிலையை அடைந்து இருக்கின்றேன்.
பதிவுலகில் நாம் பிரபலமாக முதலில் குரூப் பார்ம் செய்து கொள்ள வேண்டும் என்றார்கள்..
அதை நான் புறக்கணித்தேன்...
எல்லோருடைய பதிவிலும் போய் அருமை, வாய்ப்பே இல்லை ,ஸ்மைலி என்று எதையாவது போட்டு விட்டு வந்தால்தான் உங்கள் தளத்துக்கு அவர்கள் வந்து படிப்பார்கள் என்றார்கள்... அதையும் புறக்கணித்தேன்
உனக்கு நான் பாலோயர் எனக்கு நீ பாலோயர் அப்படி ஆனால் நிறைய பேர் வந்து படிப்பார்கள் என்றார்கள் அதையும் புறக்கணித்தேன்...
இப்படி பதிவுலகில் பலரால் பாலோ செய்யபட்ட எதையும் நான் பாலோ செய்தது இல்லை.....எனக்கு நேரம் கிடைக்கும் போதுபடித்த பதிவுகளுக்கு நன்றாக இருந்தால் பின்னுட்டம் போட்டு இருக்கின்றேன். எந்த குரூப்பிலும் நான் இல்லை,
இப்படி இருப்பதுதான் பலருக்கு கோபத்தை கொடுக்கின்றது..நான் அவர்களை முடிந்தவரையில் புறக்கணிக்கின்றேன்.
நான் எனக்கு தோன்றியதை எந்த மேக்கப்பும் இல்லாமல் எழுதினேன்.. அவ்வளவுதான்..
இப்படி இருந்தும் எனது வலையை பாலோ செய்ய ஆயிரம் பேர் இருக்கின்றார்கள் என்பது எத்தனை சந்தோஷம்...இந்த ஆயிரத்தில் எனது எதிரிகளும் அடக்கம் என்பது எனக்கு தெரியும் ...
அப்பா அம்மாவுக்கு பிறக்காமல் வரத்தால் பிறந்த சில பொறம்போக்குகள் என் பின்பக்கத்தை மோந்து பார்ப்பதையே பொழப்பாகவைத்துக்கொண்டு இருக்கின்றன...அதுங்களுக்கு அதுவே தொழில்.. அதை பத்தி எனக்கு எந்த கவலையும் கிடையாது...
இந்த ஆயிரமாவது பாலோயருக்கா வெயிட் செய்து999 வரை காத்து இருந்து 1000மாவது பாலோயராக இணைத்துக்கொண்டு அண்ணே எனக்கு நீங்க டிரிட் கொடுக்கனும் உங்க பிளாக்ல ஆயிரமாவது ஆள்நான்தான்.. இதுக்கா பலநாள் நான் வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன் என்று நேற்று என்னிடம் ஆன்லைனில் தகவல் சொல்லிய தங்கை, பதிவர் தோழிக்கு என் நன்றிம் அன்பும்....
இந்த ஆயிரமாவது பாலோயருக்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு அந்த775 என்ன என்றால்? இந்த மூன்று வருடத்தில் நான் எழுதிகிழித்த பதிவுகளின் எண்ணிக்கை...சினிமா விமர்சனம் மட்டுமே எழுதி இருந்தால் எனக்கு இந்தஅளவுக்கு நண்பர்கள் வட்டம் கிடைத்து இருக்காது...அதுக்கும் எனது நன்றிகள்.
இந்த 775 பதிவுகளுக்கு நான் செலவிட்ட நேரங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம்..எழுதி வைத்து சேவ் பண்ண தெரியாமல் போனவை மட்டும் 30 பதிவுகளுக்கு மேல்...
மூன்று வருடத்துக்கு முன் இதே போல ஒரு மார்ச் மாதத்தில் எனக்கு பிளாக்கை அறிமுகபடுத்திய நண்பர் நித்யாகுமாரனுக்கும் எனது முதல் பாலோயர் மற்றும் எனது பதிவுகளுக்கு முதல் ஆளாய் பின்னுட்டம் இட்டு என்னை வளர்த்து விட்ட வெண்பூ மற்றும் மங்களூர்சிவா இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
எனக்கு எழுத்தை தலையில் அடித்து சொல்லிக்கொடுத்த அம்மா ஜெயலட்சுமி மற்றும் என்னை பல நேரங்களில் கணணி முன் உட்காருவதை பொருத்துக்கொண்ட எனது மனைவிக்கு எனது நன்றிகள்..
எனக்கு நீங்கள் சிலாகித்து எழுதிய கடிதங்கள் சொல்கின்றன... நீங்கள் சிலாகித்து எழுதும் பின்னுட்டங்கள் சொல்கின்றன.. என் மீதான் உங்கள் பாசத்தை.. அது போதும்.. அதுக்காதான் வேலைபளுவிலும் நிறைய எழுதுகின்றேன்.
இப்போதும் எனதுதமிழ்கொலைகளை சகித்துக்கொண்டு என்னோடு பயணிப்பதற்கு மிக்க நன்றி...
உங்கள் தொடர் ஆதவும் உற்ச்சகமும்தான்
1000 பாலோயர்கள் மற்றும் 775 போஸ்ட் எழுத காரணமாக இருந்தது.... எங்கள் தொடர் வருகைக்கும், உங்களுக்கும் என் நன்றிகள்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...

===================
வாழ்த்துகள்! தொடருங்கள், தொடர்கிறோம்!
ReplyDeleteவிஜய் ஆம்ஸ்ராங் மற்றும் உங்களின் தளங்களில் நல்ல திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றியும் அறியமுடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள் . ஆவலோடு இருக்கின்றோம்...
ReplyDeleteநல்வாழ்த்துகள் ஜாக்கி - 1000 இரசிகர்கள் என்பதை விட 775 இடுகைகள் என்பது சிறந்த ஒன்று. தொடர்க் இரணடினையும். நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துகள்! தொடருங்கள், தொடர்கிறோம்!
ReplyDeleteAll the best...
ReplyDeleteyenakku pudichathaala thaan naan unga pathiva padikkiren...
And ithuthaan yennoda first comment-um kooda...
கலக்குங்க., கலக்குங்க...
ReplyDeleteயாரு தோழி??? கேபிள் ஜீ பிரண்டா??? சென்னைல இருப்பவங்க தானே ???
ReplyDeleteமென் மேலும் வளர வாழ்த்துகள்!!!
ReplyDeleteஆயிரம் இலட்சமாக வாழ்த்துகள்!
ReplyDelete- இப்படிக்கு உங்களின் வலை பூவை தொடரும் ஆயிரம் பேர்களில் ஒருவன்
blogpaandi
நிறைய நல்ல விஷயம் எழுதுறீங்க... ஆனால் ஒரு விஷயம் மட்டும் தான் கொஞ்சம் இடிக்குது... தளத்துல மாடியில விளம்பரம் வைக்க இடம் கொடுத்தீங்க... சுவத்துல (பக்கவாட்டுல) விளம்பரம் பண்ண இடம் கொடுத்தீங்க... அது ஏன் கடந்த 10 நாளா வீட்டுக்குள்ளேயும் விளம்பரப்படம் வைச்சிருக்கீங்க (சில நேரம் படிச்சிக்கிட்டு இருக்கும் பொது அந்த "Close" பட்டன் கண்ணுக்கு தெரியிறதில்ல; அந்த நேரத்துல கொஞ்சம் எரிச்சல் தான் வருது). கொஞ்சம் அதை தூக்கி எதாவது ஒரு சுவத்துல (பக்கவாட்டுல, பதிவுக்கு கீழே) ஒட்டி வையுங்க...
ReplyDeleteஅப்புறம்... சச்சின் நூறாவது நூறு ரன் அடிக்க காத்திருப்பது போல; நீங்க ஆயிரமாவது பதிவு எழுதவும் வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள் பாஸ்..!
ReplyDeleteவாழ்த்துகள்!வாழ்த்துகள்!வாழ்த்துகள்!
ReplyDelete1000 பல்லாயிரங்களாகி, லட்சமாகி நீங்கள் அனைவரின் மனம் கவர்ந்தவராக வாழ்த்துக்கள்....
ReplyDeleteJackie,
ReplyDeleteCongratulations for 1000 posts. May God Pour his blessings on your little princess Yazhini.
நல்வாழ்த்துகள் ஜாக்கி.
ReplyDeleteCONGRATS
ReplyDeleteமிக்க நன்றி நண்பர்களே.. வித்யாசமாண கடவுள்.. அந்த குளோஸ் பட்டன் பார்த்து கொஞ்சம் குளோஸ் பண்ணி படிச்சி பெரியமனசு பண்ணுங்க..
ReplyDeleteவாழ்த்திய அத்தனை பேருக்கும் என் நன்றிகள். உங்கள் வாழ்த்து எனக்கு உற்சாகமளிக்கின்றது.
வாழ்த்துகள் வாத்தியாரே!. தொடர்க உங்கள் வழமையான போஸ்ட்ஸை. வணக்கம்! வாழிய நலம்
ReplyDeleteஎன்றும் அன்புடன்
நானே!
congrats ...
ReplyDelete