ஒரு பிரபல இயக்குனரின் அழைப்பு....





ஜாக்கியா..?

ஆமாங்கசார்...


நான் இயக்குனர் ..................... பேசறேன்...

 சார் நீங்களா? நீங்க என் பிளாக் எல்லாம் படிக்கறிங்களா? என்னால நம்பவே முடியலை சார்...

உலகத்துல எந்த இடத்துலயும் இணையத்துல படிக்கும் போது சென்னையில் இருக்கும் நான் படிக்க முடியாதா???

சார் உண்மைதான்சார்... நான் ஏதோ எனக்கு தெரிஞ்சதை கிறிக்கிட்டு இருக்கேன்.. நீங்க எவ்வளவு பெரிய ஆள்.. அதான்....

மே மாசம்  ஒரு பிலிம் ஸ்டார்ட் பண்ண போறேன்...புல்லா கிரைம் சப்ஜெக்ட்...சினேகா,திரிஷா ரெண்டு பேருகிட்டயும் பேசிக்கிட்டு இருக்கேன்.

ஒரு வில்லன் ரோல் இருக்கு.. செய்யறிங்களா? பசுபதிகிட்ட டேட் கேட்டேன் அவரு இப்ப வில்லன் ரோல் எல்லாம் செய்யறது இல்லை..குசேலனுக்கு அப்புறம் கேரக்டர் ரோல்தான் செய்யறேன்னு சொல்லிட்டார்... டக்குன்னு உங்க ஞாபகம் வந்துச்சி.. நீங்க அந்த கேரக்டருக்கு ஆப்டா இருப்பிங்க.... அந்த வில்லன் ரோலை நீங்க செய்யறிங்களா?


சார் தாரளாமா செய்யறேன் சார்....பட் பெரிசா நான் நடிச்சது  இல்லை... பட்   சொல்லிக்கொடுப்பதை என் லேவல் பெஸ்டுக்கு டிரை பண்ணுவேன்....

இல்லை நீங்க கேமராமேனா ஆகனும்னு டிரை பண்ணிகிட்டு இருக்கிங்க  இல்லை... அதான் கேட்டேன்..

சார் எதா இருந்தா என்னசார்.. இளவரசு சார் கூட கேமராமேன்தான் ஆனா அவர் நடிக்கலையா?

100 வது நாள் படத்துக்கு அப்புறம் தமிழ் பில்டுல ஒரு மொட்டை பாஸ் கேரக்டர் பரபரப்பா பேசப்பட்டலை அதனால நீங்க அந்த கேரக்டர் செய்யறிங்களா ?

சார் அஞ்சாதேவுல கூட ஒரு கேரக்டர் மொகமே காட்டாத மொட்டை கேரக்டர் நடிச்சி இருக்கும்  அது போல இருந்துட போகுது....

ஜாக்கி இப்பயே ஒன்னு உங்க கிட்ட கேட்டு கிளியர் பண்ணிக்கிறேன்.. நீங்க ரேப் சீன் பண்ணுவிங்களா? அப்புறம் அங்க வந்து  நான் அதை செய்யமாட்டேன், அது இதுன்னு சொல்லி டார்ச்சர் பண்ணக்கூடாது....

சார்.. என்னசார் இப்படி சொல்லிட்டிங்க.. சினிமா பத்தி தெரியாதவங்க்கிட்ட இந்த டவுட் பத்தி கேட்டு இருந்திங்கன்னா நான் ரொம்ப சதோஷபட்டு இருப்பேன்...எனக்கு தெரியாதா என்ன??

ஓகே நாளைக்கே ஒரு மொட்டையை போட்டு ஒரு டெஸ்ட் ஷுட் போட்டோ எடுத்து எனக்கு மெயில் பண்ணிடுங்க...

ஓகே சார்...  சார் பிளாக்ல படிச்சது மட்டும் இல்லாம என்னை போல ஆளுக்கு வாய்ப்பும் கொடுக்கிறிங்களே.. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்சார்....

ஜாக்கி இந்த கேரக்டர் நீங்க பண்ண நல்லா இருக்கும்னு எனக்கு தொனுச்சி அதுக்குதான்  கூப்பிட்டேன் இதுக்கு போய் தேங்கஸ் உதவி என்று சொல்லிகிட்டு.. ஆல் த பெஸ்ட் பார்யூவர் பியூட்சர்......

போட்டோ முக்கியம் அதை வச்சிதான் நான் புரோட்யூசர் கிட்ட பேசனும்... ஆஸ் சூன் ஆஸ் பாசிபிள்.. ஐ வாண்ட் யூவர் மொட்டை பிக்சர் இமிடியட்லி....  கோ அண்டு மேக்கிட் பாஸ்ட்...

தேங்கயூசார்...,தேங்கயூ சோ மச்.....




டிரிங் டிரிங்....

சார் ஜாக்கி பேசறேன்.. என் போட்டோ மெயில் பண்ணி இருந்தேன் பார்தீங்களா?? இரண்டு நாள் ஆயிடுச்சி போன் எதுவும் வரலை.. சரி நீங்க டிஸ்கஷன்ல இருப்பிங்க.. அதான் உங்களை தொந்தரவு பண்ணலை....

ஜாக்கி,  இந்த படத்துக்கு நான் டைரக்டரா?  இல்லை ஹீரோ டைரக்டரா ன்னு தெரியலை..

என்னசார் சொல்லறிங்க....

ஹீரோவுக்கு தெலுங்கு மகதீரா படத்து வில்லன் போல வேணுமாம்??? நான் எவ்வளவோ சொல்லிபார்த்துட்டேன்...ப்ச், வெரி சாரி  ஜாக்கி நெக்ஸ்ட் பிலிம்ல.. கண்டிப்பா வாய்ப்பு தரேன்....


டைரக்டர் சார் அப்ப எல்லாம் போச்சா????

ஜாக்கி உங்க மனசை தொட்டு சொல்லுங்க.. என்ன போச்சுன்னு இப்படி பொலம்பறிங்க....இருந்தா தானே...





சார்... சைக்கியாரிஸ்ட் டாக்டர் குணசேகரனா பேசறது....


எஸ் ஸ்பீக்கிங்.....


சார்  என் பேரு ஜாக்கி...



சொல்லுங்க.. வாட்ஸ் த பிராப்ளம்?


இப்பதான் இரண்டு நாளைக்கு முன்ன வடபழனி கோவிலில் மொட்டை போட்டேன்.....

ரகசிய கனவுகள் ஜில் ஜில்....பீமா படத்துல திரிஷா ஆடற பாட்டும்,  நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனான்னு பார்த்தாலே பரவசம் படத்துல சினோகா ஆடற பாட்டும் நான் எந்த வேலை செஞ்சாலும் ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கு....

அப்படியா??? மிஸ்டர் ஜாக்கி

முக்கியமா நேத்து நைட் கனவுல திரிஷா, சினேகாவும் என்னை பார்த்ததும் வாயில புறங்கை வச்சிகிட்டு வீல்னு கத்தனாங்க... 
அது மட்டும் இல்லை டாக்டர் திரிஷாவோட நீமோ  மீன் இருக்கும்........

ம் சொல்லுங்க இண்ட்ரஸ்ட்டிங், உன்னிப்பா கேட்டுகிட்டுதான் இருக்கேன்... அந்த நீமோ மீன்????



ம்  பிரை பண்ணி சாப்பிட்டுட்டேன்...


டொக்




============

குறிப்பு...

வேண்டுதல் காரணமாக வடபழனி கோவிலில் நேற்று மொட்டை போட்டுக்கொண்டேன்.. இந்த இரண்டு வரி மெட்டர்தான் உண்மை.. ஓகே வராட்டா...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...






===========

40 comments:

  1. என்னா ஒரு வில்லத்தனம்.

    ஹி! ஹி!

    நல்ல தான் இருக்கு

    ReplyDelete
  2. அப்போ இன்னும் கொஞ்ச நாளைக்கு ஜாக்கி சேகருக்கு பதிலா பாஸ் மொட்ட பாஸ்னு கூப்டுக்கலாம்.

    ReplyDelete
  3. நிறைய வரிகளை ரசித்தேன்...

    முக்கியமா...
    // ஜாக்கி உங்க மனசை தொட்டு சொல்லுங்க.. என்ன போச்சுன்னு இப்படி பொலம்பறிங்க....இருந்தா தானே... //

    அந்த இரண்டாவது போட்டோவில் இருக்கும் கெட்டப் சூப்பர்...

    ReplyDelete
  4. ஜாக்கி டாப் கிளாஸ்...(மொட்டை மண்டையும் கண்ணாடி மாதிரி இருக்கு)

    ReplyDelete
  5. இந்த போட்டோ எல்லாம் எடுத்த கேமரா என்ன மாடல் பாஸ்?

    ReplyDelete
  6. ஏப்ரல் ஒண்ணு முன்னாடியே வந்துச்சா உங்களுக்கு ?

    ரெண்டாவது பாராக்ரஃப் படிக்கும் போதே தெரிஞ்சு போச்சு, இது ஏதோ ஒரு போங்கு ஆட்டம்னு...

    மொட்ட பாஸ் கலக்கல்...

    ReplyDelete
  7. என்ன ஒரு வில்லத்தனம்

    பாஸ் மெய்யாலுமே
    நீங்க காமெடில முயற்சிக்கலாம்

    ReplyDelete
  8. கலக்கிட்டீங்க ஜாக்கி.நான் வேற அந்த இயக்குனர் மிஷ்க்கினோ.. கௌதம் மேனனோ என கனவு காண ஆரம்பித்துவிட்டேன். கடைசி இரண்டு வரியை படித்தபின் "அடப்பாவி" என சொல்ல தோணியது. படிச்சு முடிச்சுட்டு ரொம்ப நேரம் சிரிப்பை அடக்கமுடியல. Really you have good sense of humor & good screenplay talent. I really enjoyed. I can understand ur வேண்டுதல் "Why?"

    ReplyDelete
  9. ஆஹா மொட்டைக்கு பின்னாடி நிறைய விசயம் இருக்கும் போல...

    ReplyDelete
  10. ஜாக்கி - தி பாஸ்

    ReplyDelete
  11. நிஜம் என நம்பவைத்து ஏமாற்றிவிட்டீர்களே ஐயா !

    ReplyDelete
  12. வில்லன் கெட்-அப்-க்கு உங்க மொட்டை நல்லாதான் இருக்கு ! !

    ReplyDelete
  13. வடபழனி முருகனுக்கு வேண்டுதலா - பலே பலே - போட்டோ சூப்பரா இருக்கு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. இதுக்கு பேரு யாழினி மொட்டையா?
    ;-)))

    ReplyDelete
  15. ஹி ஹி.. இப்படி ஒரு வாய்ப்பு வந்ததுன்னு பதிவு போடுறப்பவே தெரியும் இது ஏதோ உட்டாலக்கடினு.!! சினிமாலதான் எதுவுமே வெளிய சொல்லமாட்டேங்குறீங்களே பாஸ்..

    ReplyDelete
  16. ஏப்ரல் 1கு முன்னோட்டமா? இன்னைக்கே இப்படி இருந்தா நாளைக்கு எப்படி இருக்கும் (எப்படி ஸ்க்ரு கொடுதுதுட்டோம்ல)

    ReplyDelete
  17. ///ஜாக்கி உங்க மனசை தொட்டு சொல்லுங்க.. என்ன போச்சுன்னு இப்படி பொலம்பறிங்க....இருந்தா தானே...///ஷாக்காயிட்டேன்! (இப்புடியும் இருப்பாய்ங்களா?ஒரு சாண்சு கை நழுவிப் போயிடுச்சே?)

    ReplyDelete
  18. போன்ல பேசறேன்!

    ReplyDelete
  19. Dear Jackie,

    You look too good in the photo with full shaved head and with french beard. It gives you a majestic look.

    I too thought that my words have come true. I wished you to become a big shot in cinema on your girl child's birth. But became sad to hear that you have played a joke on whole story.

    You have a good future.

    ReplyDelete
  20. Sir mottai adicha piragu konjam smarta than irukinga pola.. :)

    ReplyDelete
  21. நல்லபடியா குழந்தை பிறந்தால் மொட்டை போடுறேன்னு வேண்டி இருப்பீங்க ,,அதான்... என்னமா ....ஒரு பில்டப்பு ....ஆரம்பத்தில... உங்களின் எழுத்து நடை அருமை ..

    ReplyDelete
  22. super story... naan mattum director na... ungaluku thaan... villan getup tharuvan....

    nice creativity....

    ReplyDelete
  23. அன்பின் ஜாக்கீ யாழீனி நல்ல பொயர்
    மொட்டை பாதி படிக்கும் போதய் தொரிந்துவீட்டது இது எப்ரல் பூஃல் என்று. நட்புட்டன் நக்கீரன்

    ReplyDelete
  24. மொட்டை பாஸ்!சந்தர்ப்பம் அமையட்டும்.உங்க மொழியில சொல்லனுமுன்னா ரொம்ப ஆப்டா இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. பின்னுட்டம் இட்ட அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள். நீங்கள் வைத்து இருக்கும் அன்பும் ஆதரவும் புரிகின்றது.... பட் உங்களை ஏப்ரல் ஒன்னுக்கு ஏமாற்ற இதை நான் செய்யவில்லை.. பத்து வருடத்துக்கு பிறகு அடித்த மொட்டை என்பதால் போட்டோ எடுத்து அதை சாண்ட்வெஜ்ல் போடலாம் என்று இருந்தேன் பட்.. சட்டென உதிர்ந்த ஐடியா இந்த பதிவு.. பட் படிக்கும் போது நிச்சயம் நீங்கள் சிரிப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.. மிக்க நன்றி..

    ReplyDelete
  26. You look too good in the photo with full shaved head and with french beard. It gives you a majestic look. U can Keep You this Image for jackie. looks handsome

    ReplyDelete
  27. sir nan kooda romba interesting ah padichen sir ana eppadi kamal padam climax madhiri posuku nu sonna thum sema villathanam Analum april fool eppadilam panranga pa............valga tamil

    ReplyDelete
  28. Unga Photo Parthen Oru Nalla Vellan Character Director Miss Pannitaru, All The Best For Future Anna,

    ReplyDelete
  29. Unga Photo Parthen Oru Nalla Vellan Character Director Miss Pannitaru, All The Best For Future Anna,

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner