மினி சாண்ட்வெஜ் அண்டுநான்வெஜ்/பிளஸ்பதினெட்டு/ஞாயிறு/06/03/2011

      
ஆல்பம்


மூன்று சீட் ஆட்டம் போல மூன்று சீட்டால் காங்கிரஸ்சோடு..உறவு முறிந்தது என்று  சொல்கின்றது தி.மு.க...ஆனால் இலங்கையில் போர் நடந்த போதும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட போதும் இந்த விலகல் நடந்து இருந்தால் மிக மரியாதையாக இருந்து இருக்கும் என்று பலர் கேள்வி எழுப்புகின்றார்கள்...


திருடனையே நகைகடைக்கு காவல்காரனா போட்டா எப்படி இருக்கும்? அதேதான்.. ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்த பி.ஜே.தாமஸ் நியமனம் தவறு என்று  உச்சநீதிமன்றம் சாட்டையடி தீர்ப்பு கொடுத்து இருக்கின்றது... அதற்கு  பிரதமர் ஆம் அந்த நியமனத்தில் நான் தவறுதான் செய்துவிட்டேன் என்று ஒப்புதலும் வருத்தமும் தெரிவித்து இருக்கின்றார்...ஆம் ஸ்பெக்ட்ரம் விவகாரம் எனக்கு தெரியாமல் நடைபெற்றது என்றார்...  நமது பிரதமர் தற்போது நிறைய ஆம் போடுகின்றார் அதுவே பெரிய விஷயம் அல்லவா? ஆம்  60 கீலோமீட்டர் வேகத்தில் வர வேண்டிய இடத்தில் 70 கிலோமீட்டர் வேகத்தில் வந்துவிட்டேன்.. மன்னித்து விடுங்கள் என்று டிராபிக் போலிசிடம் ஓப்புக்கொண்டால்...

கொய்யால..எடு 500ரூபாயை.......


தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று முக்கிய  கட்சிகள் வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது... ஒரு  மாசத்துக்குள்ள பணத்தை எப்படி இந்தியாவின் சந்து பொந்துகளுக்கு எடுத்து செல்வது என்ற பயம் காரணமாக இருக்குமோ?..

இந்தவார சலனபடம்...

இரண்டுமே ரகுமானுக்கு  பெருமை சேர்க்கும் விஷயம்... அவரின் இரண்டு தமிழ் பாடல்கள் உலக அரங்கில் ஒலித்தவை குறித்த வீடியோக்கள்..மற்றது ரஜினி அவர்களின் புகழும் இதன் மூலம் வெளிநாடுகளில் அறியபட்டது எனலாம்....

முத்து வந்த போது ஜப்பானில் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்.. நம்ம ஊரில் ஒருவர் ரஜினி வேஷம் போட்டு ஆடுவது பெரிய விஷயம் அல்ல...ஆனால் ஜப்பானில் ஆடுவது பெரிய விஷயம் அல்லவா...  அதுவும் ஜப்பான் டிவி நிகழ்ச்சியில்..அந்த ரஜினியை எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கின்றது...
சிவாஜி படத்தில் வரும் பல்லேலக்கா பாடலை அன்னிய மண்ணில் பாடிய போது எடுத்த வீடியோ... இந்த பாடலில் அந்த பெருத்த பெண் கண்டக்டராக வெகுவேகமாக செயல்படும் அந்த அசைவுக்காகவே  எத்தனை  முறை வேண்டுமானாலும் இந்த வீடியோவை பார்க்கலாம்...


இந்த டைமெக்ஸ் வாட்ச் விளம்பரத்தை பார்த்து நீங்க சிரிக்கலைன்னா ஒரு நல்ல டாக்டரை பார்க்க வேண்டும்....
 =============

மிக்சர்..
 தமிழ் செம்மொழி மாநாடு போல கன்னட மொழி மாநாடு வரும் 11ம்தேதி தொடங்க இருக்கின்றது...30 கோடி செலவு செய்ய போகின்றார்கள்.. விழாவை தொடங்கி வைக்க இன்போசிஸ் நாராயணமூர்த்தி பெயர் முன் மொழிந்தாலும் அதற்கு சில கன்னட எழுத்தாளர்கள் எதிர்பு  தெரிவித்தார்கள்..... கர்நாடக மாநிலத்தை உலக அரங்கில் தனது நிறுவனத்தின் பெயர்  மூலம் பெருமைகொள்ளச்செய்தவர்  அவர் என்பதால் அவர்தான் துவக்குவார் என்று முதல்வர் எடி.. திட்டவட்டமாக அறிவித்து விட்டார்...சற்றே யோசித்து பாருங்கள் அது எவ்வளவு பெரிய பெருமை என்று...........

=============
 என்னை திட்டி பதிவு எழுதும் போது யாரும் என்னை அண்ணன் என்று விளித்து திட்டவேண்டாம். காரணம் உங்க அம்மா ஒரு போதும் இப்படி ஒரு பிள்ளையை பெற்று இருக்கமாட்டாள்  அல்லவா? உங்க மம்மி பாவம்... அதுக்குதான்... வேறு எப்படி  வேண்டுமானலும் திட்டுங்கள்.. அண்ணன் என்று சொல்லி  என்னை திட்டாமல் இருந்தால் தான் நான்  உங்களை அசிங்கமாக திட்டமுடியும் என்பதை  தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றேன்.
=======================
சில காமெடி பீஸ்களுக்கு நான் ஒரு போதும் பதில் அளிப்பதில்லை..  அவர்கள் பெயரை கூட என்பதிவில் தேவையில்லாமல் எழுதியது இல்லை.. ஆனால் என் பெயரை தலைப்பாக வைத்து பதிவு எழுதுகின்றார்கள் சிலர்.. அப்போழுதுதான் போனியாகும்...இன்னும் நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள்..பதிவுலகில் பைத்தியக்காரன் என்கின்ற சிவராமன் என்ற நண்ப்ர் இனி பதிவுலகில் எழுதப்போவதில்லை என்று தனது தளத்தை மூடிவிட்டார்... அவருடைய பல கருத்துக்கள் எனக்கும் முரன்தான் ஆனாலும் எனக்கு அவர்  ரொம்ப நல்ல நண்பர்.... அவர் அவரது தளத்தை மூடியது வருத்தத்துக்கு  உரிய நிகழ்வுதான்... வெகு நாட்களுக்கு பிறகு அவருக்கு போன்  செய்து பேசினேன்...  வாரம்தோறும் அவர் தினகரன்  வெள்ளிமலர் இலவச புத்தகத்தில் இனி வரப்போகும் ஹாலிவுட் படங்களை பற்றி மிக சுவாரஸ்யமாக விமர்சனம் எழுதுவார்.. அந்த கடைசி பக்கத்துக்கு நான் ரசிகன்... அந்த கடைசி பக்க விமர்சனத்தை பாராட்ட  அவருக்கு போன் செய்தேன்..எந்த ஒரு இலக்கிய டச் இல்லாமல்  எழுதும் அந்த  கடைசி பக்கம் மிக இயல்பாக இருக்கும்...திரும்பவும் அவர் எழுத வரவேண்டும் என்பதே என் எண்ணம். அதே போல நடுப்பக்கத்தில் உலகசினிமா பற்றி மிக சுவையான செய்திகளுடன் வள்ளி என்பவர் எழுதி வருகின்றார்... உலகசினிமா மற்றும் ஹாலிவுட் படங்களை ரசிப்பவர்கள் தினகரன் வெள்ளிமலர் இலவச இணைப்பை மிஸ் செய்யாதீர்கள்.....
==================
சினிமா...
 கமலின் அடுத்த படம் செல்வராகவன் இயக்குவதாக  பேச்சு அடிபடுகின்றது....ஆச்சர்யம்தான்...3 மொழிகளில் வெளிவரும் படம்.. அப்படின்னா பிரமாண்டம்தான்...
===============
 ஆடுபுலிஆட்டம்,சிங்கம்புலி,ஆடுபுலி,புலிவருது, என்று புலி பெயர்களில் படம் வருகின்றது விடுதலைபுலி என்ற பெயரில் எந்த படமும் வரவில்லை....விடுதலைபுலி அதுவும்  தமிழ் டைட்டில்தானே??? சும்மா தோனுச்சிப்பா....
==============
இந்தவார கடிதம்

Vanakam Mr. Jackie,,


I m really wonder u know, One of my best school friend Mr. Mohan who is working in Chennai, I had a talk with him  this evening, he asked me about the accident. I explained with him, atlast he asked you know how i know about the accident!!! I said you know about this from Mr. Pugazh (school friend), he said no, I know this from Jackiesekar, he seen my comments there, really I didnt expect this from him, i remember before one year back I gave your blog address to him, he is also a fan to you, All are liking, loving your writings, My Best Wishes Mr. Jackie, Keep it up.

Regards,
Vijay
Muscat.
பேப்பர்ல வரும் விஷயம்தான் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்ஜில் வருகின்றது என்பது பொதுவான நண்பர்களின்  குற்றசாட்டு.... பேப்பர் வாசித்த நான் எதுக்கு இதை வாசிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கின்றார்கள்..உண்மைதான் இந்த பகுதி தினப்பேப்பர் வாசிக்காதவர்களுக்கு எனது பார்வையில் செய்தியை தருகின்றேன் உங்களுக்கான பகுதி அல்ல...மேலே இருக்கும் மஸ்கட் விஜய் என்பவர் எழுதிய கடிதத்தை வாசியுங்கள் அது உங்களுக்கே புரியும்...

 நான் ராய்டர் செய்தி நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...திமுக, காங்கிரஸ் முறிவை உங்களுக்கு யாராவது டெல்லியில் இருந்து போன் செய்து சொல்லி இருக்கலாம்..அறிவாலயத்தில் இருந்து சொல்லி இருக்கலாம்.. எனக்கு டிவி மற்றும் பேப்பரில் இருந்துதான் செய்திகள் எனக்கு கிடைக்கின்றன என்பதையும் நான் உங்க அளவுக்கு ஒர்த் இல்லை என்பதையும்  பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றேன்.
=====================================


இந்த வார நிழற்படம்

 திருவண்ணாமலை கோவில் கோபுரம்...
===========================
பிலாசபி பாண்டி

மரத்தை சுத்தும் காதலர்கள், உடலில் மோப்பம் பிடிக்கும் காதலர்கள் என்றுதான் உங்கள் நாட்டில் படம் எடுக்கின்றார்கள்... இருந்தும் எப்படி உங்கள் நாடு மக்கள் தொகையில் முதலிடம், நாங்கள் அப்படியே காட்டுகின்றோம் இருந்தும் எங்ககள் நாட்டில் மக்கள் தொகை ஏன் குறைவாக இருக்கின்றது  என்று ஒரு பாரின்காரன் கேட்ட கேள்விக்கு பாண்டி பதில் சொன்னான்... நாங்க நடிக்கின்றோம் நீங்க நடிக்கலைஅதான்..
====================== 

படித்ததில்  பிடித்தது.

இந்த உலகத்தில் எந்த கொம்பனும் எல்லாம் நான்தான் என்று மார்த்தட்டிக்கொள்ளமுடியாது..சகலமும் தெரியும் என்று அலட்டிக்கொள்ளகூடாது..

அப்படி அலட்டிய நிறைய பேரை நாயக்கருக்கு தெரியும்..அவர்கள் மண்ணோடு மண்ணாய் போயிருப்பதும் தெரியும். நல்லதோ கெட்டதோ நம்  கையில் இல்லை உயர்வோ தாழ்வோ நாம் தீர்மானிப்பதில்லை..அல்பம் என்று ஒரு பொருளும இல்லை.. நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம்..இன்றைய அற்புதம் நாளைய அல்பம்.ஆனால் உலகில் எல்லாவற்றிற்க்கும் விலை உண்டு..
====
முதல் அத்தியாயம் 
இரும்புகுதிரைகள்
பாலகுமாரன்...
=================
 
நான்வெஜ் 18+

ஜோக்....1

வீட்டு வேலை மும்முரமாக செய்து கொண்டு  இருந்த அம்மாவிடம்  பையன் ஓடி வந்தான்..மம்மி எனக்கு தம்பி பாப்பா வேனும்.. டேய் அப்பா பாரின் டூர் போய் இருக்கின்றார் வந்ததும் யோசிப்போம்... நாம வேனா அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுப்போமா?
அம்மா??
===================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 
 


10 comments:

 1. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

  ReplyDelete
 2. ஃஃஃஃஃஆடுபுலிஆட்டம்,சிங்கம்புலி,ஆடுபுலி,புலிவருது, என்று புலி பெயர்களில் படம் வருகின்றது விடுதலைபுலி என்ற பெயரில் எந்த படமும் வரவில்லை....விடுதலைபுலி அதுவும் தமிழ் டைட்டில்தானே??? சும்மா தோனுச்சிப்பா..ஃஃஃஃஃ

  அதுக்குள்ள இப்படி கேட்டா எப்படி சகோதரம்... பலரடைய பழப்ப அந்த ரெண்ட எழுத்தில தானே நகருது...

  ReplyDelete
 3. வடை போச்சே !
  வழக்கம் போல் அருமை

  ReplyDelete
 4. ஃஃஃஃஃஆடுபுலிஆட்டம்,சிங்கம்புலி,ஆடுபுலி,புலிவருது, என்று புலி பெயர்களில் படம் வருகின்றது விடுதலைபுலி என்ற பெயரில் எந்த படமும் வரவில்லை....விடுதலைபுலி அதுவும் தமிழ் டைட்டில்தானே??? சும்மா தோனுச்சிப்பா..ஃஃஃஃஃ

  அதுக்குள்ள இப்படி கேட்டா எப்படி சகோதரம்... பலரடைய பழப்ப அந்த ரெண்ட எழுத்தில தானே நகருது...

  ReplyDelete
 5. ஆடுபுலிஆட்டம்,சிங்கம்புலி,ஆடுபுலி,புலிவருது, என்று புலி பெயர்களில் படம் வருகின்றது விடுதலைபுலி என்ற பெயரில் எந்த படமும் வரவில்லை....விடுதலைபுலி அதுவும் தமிழ் டைட்டில்தானே??? சும்மா தோனுச்சிப்பா....அப்படி நெனைக்காதீங்க ஜாக்கி!இனிமே வரும்!!!!!

  ReplyDelete
 6. ஜோக் - ஹாஹா. கலக்கல் நான்...

  ReplyDelete
 7. "I first" -பின்னூட்டம் இடுவதால் என்னெ பெரிதாக கிடைத்துவிடப் போகிறது. வட போச்சே.....வட எனக்குத்தான்.....இந்த மாதிரி பின்னோட்டங்களை தவிர்க்குமாறு ஜாக்கியை கேட்டுக் கொள்கிறேன்

  ReplyDelete
 8. // அல்பம் என்று ஒரு பொருளும இல்லை.. நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம்..இன்றைய அற்புதம் நாளைய அல்பம்.ஆனால் உலகில் எல்லாவற்றிற்க்கும் விலை உண்டு..

  //

  மாவீரன் அலெக்சாண்டர் எல்லா இடத்திலும் எளிதில் வென்றார். ஆனால் அன்றைய இந்தியாவின் மன்னனான புருஷோத்தமனை எளிதில் வீழ்த்த முடியவில்லை. மிகுந்த சிரம்மத்திற்கு பின்னர்,பெரும் இழப்பிற்கு பின்னரே வீழ்த்த முடிந்தது. வெற்றி அடைந்த அலெக்சாண்டர் தன்னையொற்ற மாவீரனைக் கண்ட மகிழ்வில் நாட்டை அவரிடமே மீண்டும் ஒப்படைத்தார். அலெக்சாண்டர் திரும்புவதற்கு முன்னர் மாமன்னன் புருஷோத்தமன் அலெக்சாண்டருக்கு ஒரு விருந்தளித்தான். அப்போது அலெக்சாண்டருக்கு பரிமாறப்பட்ட தட்டு எதில் செய்யப்பட்டது தெரியுமா?? அலுமினியத்தில். அப்போ அலுமினியத்தட்டு தங்கத்தைவிட படு காஸ்ட்லி. நினைவுப் பரிசா அதை நானே எடுத்துகுறேன்னு அலெக்சாண்டர்வேற அதைக் கேட்டு வாங்கி எடுத்துகிட்டு போனாராம்!!!

  இந்த நொடிதான் யதார்த்தம்.

  ReplyDelete
 9. வீட்டு வேலை மும்முரமாக செய்து கொண்டு இருந்த அம்மாவிடம் பையன் ஓடி வந்தான்..மம்மி எனக்கு தம்பி பாப்பா வேனும்.. டேய் அப்பா பாரின் டூர் போய் இருக்கின்றார் வந்ததும் யோசிப்போம்... நாம வேனா அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுப்போமா?

  அம்மா: நீயே உங்கப்பாவுக்கு சர்ப்ரைஸ் தாண்டா!

  இப்படி இருந்தா தான் அது ஏ ஜோக்கு, இல்லைனா படிக்கிறவன் பேக்கு!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner