எனது பால்யகால நண்பர் சூப்பனான்சாவடி சுபாஷ் நேற்று என்னோடு தொலைபேசியில் பேசும் போது புண்ணியம் செஞ்சவனுக்குதான் பொம்பளை புள்ளை பொறக்கும் என்று ரைமிங்காக சொன்னான்... அது உண்மையா இல்லையா என்பது எனக்கு தெரியாது
என் அப்பா புண்ணியம் கம்மியாக செய்து விட்டார் ஐந்து பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்று ஒரு பழ மொழி உண்டு...இந்திய திருமணங்களில் நிலவும் வரதட்சனை சீருக்காக சொன்னது.....எனக்கு நான்கு தங்கைகள்..மூன்று தங்கைகளுக்கு திருமணம் ஆகிவிட்டடது.. இன்னும் ஒரு தங்கைக்கு இப்போது வரன் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்...
சொல்லிக்கொள்ள எந்த சொத்தும் இல்லை
அப்பா கொண்டு வந்த சொற்ப வருமானத்தில் என் அம்மா விவேகமாய் குடும்பம் நடத்தினாள்... என் அம்மா படித்தவள் என்பதால் எங்கள் அத்தனை பேரையும் படிக்க வைத்தார்... அவ்வளவே...
வீட்டுக்கு மூத்த பிள்ளையாக வறுமைக்கோட்டு கீழான சூழலில் நான்கு தங்கைக்கு அண்ணணாக பொறுப்புகளுடன் இருப்பது கொடுமையான விஷயம்...மூன்று தங்கைகளுக்காவது திருமணம் செய்து விட்டு, அதன் பிறகு நம் திருமணம் என்று சொல்லி பல வருடங்கள் காதலித்த பெண்ணை காத்து இருக்க செய்தேன். அவளும் காத்து இருந்தாள்...
எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகின்றது...என்னை பற்றி அதிகம் தெரியாத நண்பர்கள் என்னிடத்தில் கேட்பார்கள்..
ஜாக்கி உங்களுக்கு எத்தனை குழந்தை என்று???
சார் எனக்கு இன்னும் குழந்தை இல்லை என்று சொன்னால் என் உருவத்தை பார்த்து யாரும் நம்பமாட்டார்கள்..
போங்க சார் பொய் சொல்லறிங்க என்று சொல்லுவார்கள்.
நான் உடனே ஆமாம் சார் எப்படி கரெக்டா கண்டுபிடிச்சிங்க.?..
எனக்கு இரண்டு குழந்தைங்க.. பெரிய பொண்ணு இரண்டாம் வகுப்பு, பையன் யூகேஜி படிக்கின்றான் என்று சொல்லுவேன்..
சார் என் கெஸ் எப்பவும் தப்பாது என்று சொல்லும் நண்பனிடம் என் வலியை எப்படி? என்னால் பகிர்ந்து கொள்ளமுடியும்.?
நான் பல வருடம் காதலித்த பெண் மட்டும்...
ஜாக்கி எங்க ஆத்துல எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். யூஎஸ்ல சாப்ட்வேர் என்ஜினியர்... நீங்க என்னைக்கு உங்க தங்கச்சிங்களை கல்யாணம் பண்ணி கொடுத்து?? என்று இழுத்து பேசி இருந்தாள்...இன்று இந்த பதிவு இல்லை.....இந்த பிளாக் இல்லை....
என்னை மாதிரி ஒரு கோபக்காரனை கல்யாணம் பண்ணிக்க ஒரு தைரியம் வேண்டும் அல்லவா???
அதனால் காத்திருந்த காதலியான என் மனைவிக்கு முதல் நன்றி...
மனைவிக்கு மார்ச் 13ம்தேதி டியூ டேட்.. அதுவரை வலி இல்லை.. செம டென்ஷன்..ஒரு வாரமாகவே பயங்கர டென்ஷன்...எதன் மீதும் பிடிப்பு இல்லை... என் அம்மாவை நான் ரொம்பவும் மிஸ் செய்தேன்..அப்போது மனதில் தோன்றியதை எழுதி போஸ்ட் செய்து விட்டு மனைவியை 14ம்தேதி காலையில் பெங்களுர் ரீச்மன்ட் ரோட்டில் இருக்கும், ரிபப்ளிக் மருத்துவமணையில் சேர்த்தேன்.
14ம் தேதி ,15ம்தேதி நான் நானாக இல்லை.. என் அம்மா எங்கள் ஐந்து பேரை ஈன்ற போது எவ்வளவு சிரமபட்டு இருப்பாள் என்று கண்கூடாக உணர்ந்த போது அம்மாவை இன்னும் காதலிக்க துவங்கினேன்.
நேற்று 15ம் தேதி மாலை எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தாள். நார்மல் டெலிவரி...தாயும் ,சேயும் நலம்.
என் அம்மாவின் ஆசிர்வாதத்தால் இது நடந்தது. அவள் என்னோடு இருக்கின்றாள்.... அது போதும். தலைப்பிரசவம் எவ்வளவு பெரிய விஷயம்... உலகில் சகல இடத்திலும் பெண் என்றால் அவளுக்கு தனி மரியாதை கிடைக்க முதல் காரணம் பிரசவவலிதாங்கி பத்துமாதம் சுமந்து ஒரு உயிரை பெற்று எடுப்பதால்தானோ???
நான் பிறந்தது.. இந்திரா நர்சிங் ஹோம்...பண்ரூட்டி, என் மனைவி பிறந்தது கடலூர் அரசு பொது மருத்துவமணை, நாங்கள் எங்கள் வாழ்க்கைக்கு போராடிய இடம் சென்னை, என் மகள் பிறந்த இடம் பெங்களுர்... யோசித்து பார்த்தால் வியப்பாய் இருக்கின்றது.......இந்த வாழ்க்கை வளர்ச்சிக்கு யார் யாரோ பின்புலமாய் தெரிந்தோ தெரியாமலோ உதவி இருக்கின்றார்கள்..வாழ்த்தி இருக்கின்றார்கள். அப்படி உதவிய, வாழ்த்திய அத்தனை பேருக்கும் என் நன்றிகள்..
நேற்று எனக்கு பெண் குழந்தை பிறந்தது.. வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி என்று பதிவு போடாமல் இவ்வளவு விரிவாய் எழுத என்ன காரணம்..?? நாளை ஒருவனுக்கு இது தன்னம்பிக்கைக்கு விதையாய் இருக்கலாம்...
நானும் அப்பாவாகிவிட்டேன். இந்திய மக்கள் தொகை உயர்வுக்கு நாங்களும் ஒரு காரணம்..
பல வருடங்களாக சொல்லி வந்த ஒரே விஷயம் எனக்கு பெண் குழந்தைதான் பிறக்கவேண்டும் என்று நானும் என் மனைவியும் ஆசைப்பட்டோம்.. அது நிறைவேறியது..எனக்கு அம்மா இல்லை.. என் மனைவிக்கு அப்பா இல்லை.. அதனால் ஆணோ பெண்ணோ எகந்தகுழந்தை பிறந்தாலும் நலமாய் இருக்க வேண்டும் அதுதான் எங்கள் பிரார்த்தனை...
உங்கள் அம்மா உங்களுக்கு பெண்ணாக வந்து பிறப்பார்கள். என்று முதலில் வாழ்த்தியவர் எனது வாசகி சிகப்பி...மிக்க நன்றி சிகப்பி...
பதிவுலகில் மனதோடு மட்டும் கவுசல்யா எனது அம்மா பதிவை படித்து விட்டு உங்களுக்கு பெண்குழந்தை அதுவும் உங்க அம்மாவே வந்து பிறப்பார் என்று வாழ்த்தினார்....
அதே போல எனது நண்பர் லக்கி என்கின்ற யுவகிருஷ்னாவும் அதே போல வாழ்த்தினார்...
ஜீவ்ஸ் போன் செய்த போது அவருக்கு மட்டும் விஷயத்தை சொன்னேன்... அவர் பஸ்சில் செய்தியை போட முதலில் செய்தியை பார்த்து விட்டு போன் செய்தது... தம்பி அப்துல்லாதான்.... அதன் பிறகு அண்ணன் உண்மைதமிழன்... அடுத்து எங்க பெரிய அண்ணன் பட்டர்பிளை சூர்யா....(பைத்தியக்காரன்) சிவராமன், சகோதரி விஜி, பாஸ்டன் ஸ்ரீராம், இளா.பங்காளி சங்கவி போன்றவர்கள் போனில் வாழ்த்து தெரிவித்தார்ர்கள்.
குறுஞ்செய்தியில்,
கேவிஆர்,காவேரிகணேஷ்,லக்கி,எறும்பு ராஜகோபால்,கிருஷ்ணபிரபு,குங்குமம் வள்ளி, ரோமியோ,கார்த்தி எல்கே, போன்றவர்களும்
ஜிவ்ஸ் விட்ட பஸ்சில் போய் பார்த்தால்.....
Vani Sarangam
கேவிஆர் .
கென் Ken
Vidhya Chandrasekaran
Siddharth Venkatesan
Karthik L (LK)
உண்மைத்தமிழன் S.
४१ தோழி १४
அதிஷா ...
தியாக ராஜன்
எம்.எம். அப்துல்லா
Mr.R.Din
தண்டோரா .
Ganesh kumar
ஜீவ்ஸ் :: Jeeves
Rajesh Rajangam
aadhavan ssk
Karthik J
RamKumar Natarajan
JK | ஜேகே
butterfly Surya
சேட்டைக்காரன்
யுவ கிருஷ்ணா
Rajagopal SM
Manjoor Raja
ஸ்ரீதர் நாராயணன்
விஜி
வடகரை வேலன்
Indian Cinema Magazine
Dhinesh Kumar (முகிலன்)
subramanian rajaraman
Prabhagar R (பிரபாகர்)
aravind அரவிந்த்
Rajalakshmi Pakkirisamy
sankar narayan (கேபிள் சங்கர்)
வெண்பூ
Ahamed irshad
மங்களூர் சிவா
அகமது சுபைர் (Ahamed Zubair)
க இராமசாமி
Joseph Paulraj அ.பால்ராஜ்
Govi Kannan
சீனா
சக்தி
பாலகுமார் (Balakumar)
Tharani Priya
ரிஷி குமார்
Srinivasa Raghavan
Thirumal P
S.Raja Priyan
அபி அப்பா
பிரியன்
ராமலக்ஷ்மிராஜன்
வள்ளிதாசன்
அத்திவெட்டி ஜோதி பாரதி
ஓம் அருணையாடி ஓம்
கும்க்கி
நான் நேசிக்கும் அத்தனை நண்பர்களும் எனக்கு வாழ்த்து சொல்லி இருந்தார்கள்..
இங்கே மெயில் வந்த செக் செய்தால் அதில்
ஈரோடு கதிர், தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்....அதே போல யோகன் பாரிஸ்,துளசி டீச்சர் வாழ்த்தி இருந்தார்...
அன்புடன் சேகருக்கு!
தங்களுக்கு மகள் பிறந்துள்ளாராம் என அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி!
நீங்கள் அம்மா , அம்மா என உருகுவீர்கள். தங்கள் தாயார் தான்
மகளாகப் பிறந்துள்ளார்.
சந்தோசமாக இருங்கள்.
உங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
அன்புடன்
யோகன் பாரிஸ்.
==============
அன்புள்ள ஜாக்கி,
உங்களுக்கும் தங்க்ஸ்க்கும் மனமார்ந்த இனிய வாழ்த்து(க்)கள்.
குழந்தைக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.
என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.
உங்களுக்கும் தங்க்ஸ்க்கும் மனமார்ந்த இனிய வாழ்த்து(க்)கள்.
குழந்தைக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.
என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.
வாழ்த்து சொன்ன அத்தனை பேருக்கும் இந்த ஜாக்கி மற்றும் மிஸ்சஸ் ஜாக்கியின் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் போதும்..அதுவே நான் நிறைய சம்பாதித்து இருக்கின்றேன்..
அதில் கடைசியாக ஒரு ஜாலியாக ஒரு கேள்வியை முன்வைத்து இருக்கின்றார்....அதே கேள்வியைதான் நண்பர் நித்யாவும் என்னிடத்தில் வைத்தார்.....
//ஜாக்கி.. ஒரு பெண்ணுக்கு தகப்பனாயிட்டே.. இனிமேலாவது அடங்குவியா நீயீ????///
மேலுள்ள வரிகள்தான் பலரின் அடிமனது கேள்விகள்...
எனக்காக என் குழந்தையோ, என் குழந்தைக்காக நானோ ஒரு போதும் மாறப்போவதில்லை..
வாழ்க்கை பண்டமாற்று முறை அல்ல....
கலில் ஜிப்ரானின் வரி ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது....
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல
அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ வந்தவர்கள்..
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல...
மேலுள்ள வரிகளை ஓஹோவென்று கடைபிடிக்கின்றேனோ, இல்லையோ... ஓரளவாவது கடைபிடிப்பேன்....
என் மகள் புரிந்துகொள்வாள்
அவள் தகப்பனை பற்றி......
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
வாழ்த்துக்கள் ஜாக்கி....
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி. continue rocking!!!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா.. :))
ReplyDeleteவாழ்த்துக்கள் குட்டி அம்மா விற்கு
ReplyDeleteCongrats Boss
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி. குழந்தைக்கு என் ப்ரிய முத்தங்களை வழங்கி விடுங்கள்.
ReplyDeleteசென்னை வந்ததும் தகவல் தெரிவியுங்கள். நேரில் வருகின்றோம்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்னாருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteபாப்புவுக்கு ஆசிர்வாதங்கள்
வாழ்த்துகள் ஜாக்கி அண்ணே!!
ReplyDeletehearty conngratulations jackie sir,
ReplyDeleteconvey my wishes to madam also.
வாழ்த்துக்கள். Your daughter will feel very lucky to have a father like you. All the very best for Jackie and family.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteநெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஜாக்கி.. மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துகள்
ReplyDeleteCongratulations and welcome to the fathers club. //எனக்காக என் குழந்தையோ, என் குழந்தைக்காக நானோ ஒரு போதும் மாறப்போவதில்லை..//...absolutely..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteஎங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்
ReplyDeleteபதிவாளருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteபெண்மையை ஏன் மதிக்க வேண்டும் என்று இப்போதாவது கற்றுக்கொள்வோமா http://avargal-unmaigal.blogspot.com/2011/03/blog-post_16.html
Congrats Jackie.....
ReplyDeleteஅன்பின் ஜாக்கி
ReplyDeleteஅம்மாவே வந்து பிறந்திருக்கிறார் - அதிர்ஷ்ட லட்சுமியாக - கவலைகள் குறையும் - மகிழ்ச்சி நிறையும் - நலமே விளையும்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
valthukal brother
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeletecongratulation Jackie
ReplyDeleteஅம்மா, அப்பா, குழந்தை மூவருக்கும் எனது இனிய வாழ்த்துகள் ! ! !
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே! நெகிழ்ச்சியான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி :)
ReplyDeleteபுதிய தேவதையை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.
இனி இரவு தூக்கம் / சுத்தம் எல்லாம் கோயிந்தா கோயிந்தா :)
இப்படிக்கு
4 மாத பெண்குழந்தையின் தந்தை :)))
ஜாக்கி..
ReplyDeleteஇப்போ தான் சங்கவி பதிவில் செய்தி பார்த்து, வாழ்த்தி விட்டு வந்தேன்...
இனிய பெண் மகவு ஈன்றமை அறிந்து உவகை கொண்டேன்...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
தாயும், சேயும் நலமா?
இரண்டொரு நாட்களுக்கு முன்னர் தான் உங்களது அம்மா இடுகையை வாசித்தேன். இன்று Buzz மற்றும் சங்கவி இடுகை மூலமாக நல்ல செய்தி அறிந்தேன். உங்களுக்கும் அண்ணிக்கும் எனது நல்வாழ்த்துகள். :-)
ReplyDeleteஇப்பதான்யா பஸ்ல பார்த்தேன் ரொம்ப சந்தோஷம். வாழ்த்துகள்.:))
ReplyDeleteஇனியெல்லாம் சுகமே! :)))
வாழ்த்துக்கள் சகோதரர் சேகர் அவர்களே,
ReplyDeleteநான் உங்கள் வாசகன், ஏனோ கருத்து எழுத முடியவில்லை, தாயை பற்றி உங்கள் கடந்த பதிவும், குழந்தை பிறந்ததை மட்டும் சொல்லாமல் அதில் ஒளிந்திருக்கும் தன்னம்பிக்கையை பற்றி சொன்னதற்கு hats off.
அன்பான வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி..வாழ்க்கை மேலும் exciting ஆக போகப்போகிறது உங்களுக்கு..பெண் குழந்தைகள் தேவதைகள்.
ReplyDelete- பெண் குழந்தைகளை பெற்ற மற்றொரு புண்ணியவான்.
வாழ்த்துகள் ஜாக்கி ., உங்கள் மனைவிக்கும் குட்டிப்பொண்ணுக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteமிகுந்த மகிழ்ச்சி அண்ணா.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா...
வாழ்த்துகள்!
ReplyDeleteஉங்களுக்கல்ல.. அந்த குட்டி தேவதைக்கு!!!
அச்சா,அச்சா!பொண்ணுன்னா பொன்னு வருமின்னு நம்மூருல(ஈழம்)சொல்லுவாங்க!வாழ்த்துக்கள் ஜாக்கிக்கு!(இங்கே இப்போது தான் காலை!அதனால் லேட்டாயிடுச்சு!)வாழ்த்துக்கள் மீண்டும்!
ReplyDeleteCongrats dear buddy. Happy to hear this happy news. வாழ்த்துகள் dear Jackie
ReplyDeleteby
TS
ரொம்பவும் சந்தோஷம்..வாழ்த்துக்கள் சார்!
ReplyDeleteவாழ்த்துக்கள் இனிய தமிழ் பெயர் சூட்டவும் ..
ReplyDeleteவாழ்த்துக்கள் பாஸ்!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா..
ReplyDeleteமிகுந்த மகிழ்ச்சி..
- ஜெய்செல்வம் ராம்குமார்
வாழ்த்துக்கள் நண்பரே!!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteபத்ரிநாத்
வாழ்த்துகள்..!!!
ReplyDeleteமகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணாச்சி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி,
ReplyDeleteகுட்டி ரொம்ப குடுத்து வச்சவ. உலகத்த நல்ல புரின்ச அப்பா கிடைத்ததர்கு..
Pandian - Tirunelveli (Karaikudu Restaurant)
+9445179935
வாழ்த்துக்கள் ஜாக்கி !!
ReplyDeleteஉங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள் ஜாக்கி!!!
ReplyDeleteமிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துகள்
ReplyDeleteமூவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்.. ஜாக்கி
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி... வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்....
ReplyDeletevaazthukkal jockey
ReplyDeleteBest wishes sir
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ!! குட்டி தேவதைக்கு வாழ்த்துக்களும்,என் அன்பும்...உங்கள் மகள் 6[15]ஆம் நம்பர் மிகவும் சிறப்பாக இருப்பாங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி....
ReplyDeleteரொம்பவும் சந்தோஷம்..வாழ்த்துக்கள்!
ReplyDeleteமகிழ்ச்சி!
ReplyDeleteவாழ்த்துக்கள் !!
மனம் நிறைந்த வாழ்த்துகள் :)
ReplyDeleteReally you are the lucky couples jacki,Congrats
ReplyDeleteWishes from Dublin,Ireland. Meshak&Stephen Family.
வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா.. மகிழ்ச்சியும்..
ReplyDeleteDear Jackie
ReplyDeleteHearty Congratulations to you and your wife. A son is a son until his marriage while a daughter is a daughter for life. Only for a daughter, there is a 'Pirandha Veedu', not for a son! You and your Mrs. should therefore be doubly delighted. Best wishes - D. Chandramouli
குழந்தைக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.
ReplyDeleteVaazhthukkal Jackie
ReplyDeleteKarthik
வாழ்த்துகள்
ReplyDeleteCongrats Jackie.....
ReplyDeletecongrats to you and your wife on the arrival of your little Angel Princess.May God bless you.
ReplyDeleteஅண்ணே
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்.
பெண் குழந்தை முதலில் பிறந்தால் பேரதிர்ஷ்டம் தான் ,இனி எல்லாம் கைகூடிவரும்.
Congratulations!!! I'm sure she will bring you lots of happiness. Your daughter shares my birth date:)she will be pretty, intelligent and talkative:) just like me;)Let us know your little girl's name.God bless.
ReplyDeleteஉங்களோடு வாக்கிங் போக உங்கள் மகளாய் உங்கள் அன்னை.
ReplyDeleteஅதிர்ஷ்டம் உங்களை தேடி வந்திருக்கிறது.
வாழ்த்துக்கள்.
லகுடபாண்டி.
Congratzz...
ReplyDeletewishes jackie
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி! :-)
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteAll the best wishes to ur family and the new born child. God bless u....
ReplyDeleteஅன்பின் ஜாக்கி பொன்மகள் வந்தாள் பொருள்கோடி.புண்ணகை கோடி கோடி தாருவாள். வாழ்க வாளமுடன் பெண் குழந்தைக்கு வாழ்த்துக்ள். நட்புடன் நக்கீரன்.
ReplyDeletecongrats anna !!! may god fulfill all your wishes..
ReplyDeletevazthukkal Boss...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி!வாழ்க வளமுடன்.
ReplyDeleteஜக்கி சார், புது வீடு வாங்கி குடிபோனபோது பார்த்தோம்... இப்ப குழந்தை பிறந்த பிறகு உங்களை பார்க்கிறேன்... வாழ்த்துக்கள்...
ReplyDelete. ராம்
My Heartiest Wishes
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி அண்ணா.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி. தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி! :-)
ReplyDeleteCongrats Jackie!!!
ReplyDeleteDear Sekar,
ReplyDeleteCongrats.
Withlove
S.Sakulhameed
வாழ்த்துகள்.....வாழ்த்துகள்....வாழ்த்துகள்....தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteபொதுவாக குழந்தைகள் வளரும் முன் கோபம் உள்ள அப்பாக்கள் நிச்சயம் மாறிவிடுகிறார்கள். வெளியே போய் உதாரணம் தேடி அலைய வேண்டிய அவஸ்யமில்லை. அனுபவ உண்மை. என்னுடைய கணக்குப்படி உங்கள் பெண் குழந்தை பள்ளிக்குச் செல்லும் போது நீங்க புது மனிதராகஅதிக முன் கோபம் இல்லாத சேகராக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். அதுவே தான் உண்மையாகவும் இருக்கப் போகின்றது.
ReplyDeleteஎங்கள் தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள் சேகர்.
என் அம்மா எங்கள் ஐந்து பேரை ஈன்ற போது எவ்வளவு சிரமபட்டு இருப்பாள் என்று கண்கூடாக உணர்ந்த போது அம்மாவை இன்னும் காதலிக்க துவங்கினேன்.
ReplyDeleteபிரசவ சமயத்தில் மனைவி ஐ இன்னும் காதலிக்க தோணும்
வாழ்த்துக்கள் குழந்தைக்கு ,உங்கள் மனைவிக்கு ,மற்றும் உங்களுக்கும்
அன்பு வாழ்த்துக்கள், சேகர் அண்ணா!!
ReplyDeleteCongrats !!!
ReplyDeletecongrats
ReplyDeletesenthil, doha
வாழ்த்துக்கள், மகிழ்வான செய்தி
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் குட்டிப் பாப்பாவிற்கு.
ReplyDeleteஉங்கள் தங்கைக்கு விரைவில் திருமணம் நடைபெறும்,நம்பிக்கையுடன் முயற்சியுங்கள்.:-)
Hearty Congratulation Jackie Sir!!!
ReplyDeleteவாழ்த்துகள் அண்ணே!
ReplyDeleteWOOOOOOOOW SUPERB !!! CONGRATZ தலைவா.....
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!ஜாக்கி.
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி.
ReplyDeleteஅன்பன்
எம்.கே.குமார்.
வாழ்த்துகள் ஜாக்கி !!
ReplyDeleteவாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். தங்கள் குடும்பம் ந்லமும் வளமும் பெற்று நூறாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
ReplyDeleteMy hearty wishes to you & your family. My blessing to the new born. How she looks like?
ReplyDeleteவாழ்த்துகள் அண்ணே ! வாழ்த்துகள் !
ReplyDeletecongrats sir
ReplyDeleteCongrats Jackie..
ReplyDeleteDear Jackie
ReplyDeleteCongratulations to you and Your Wife
Mogan
வாழ்த்து சொன்ன அத்தனை பேருக்கும் இந்த ஜாக்கி மற்றும் மிஸ்சஸ் ஜாக்கியின் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் போதும்..
ReplyDeletecongrats sir. I usually dont post comments but today i felt i should. I'm so happy for the baby. she is lucky to have such a father and I'm happy for your status now.
ReplyDeleteவாழ்த்துக்கள் .... ஜாக்கி
ReplyDeleteCongrats Anna...
ReplyDeleteவாழ்த்துக்கள்.. உண்மையிலயே நீங்க நிறைய புண்ணியம் பண்ணி இருக்கீங்க ...
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே
ReplyDeleteJackie,
ReplyDeleteCongratulations to you and your family!
Very exciting times ahead.
Vankkam
ReplyDeleteVaalthukkal, Ellaa valamum nalamum iraivan arula vendugiren.
anbudan
moorthy
Congrats Jackie.. convey my wishes to ur wife too... will meet you in person @ chennai. Regards Venkat & Family
ReplyDeleteGod bless you & your family brother.
ReplyDeleteAnbudan
Samy
வாழ்த்துக்கள்.. ஜாக்கி
ReplyDeleteவாழ்த்துக்கள் சேகர்..
ReplyDeleteCongrats sir
ReplyDeletevazhthukal jackie sir.
ReplyDeleteவாழ்த்துக்கள் .... ஜாக்கி
ReplyDeleteஇந்த பதிவு படித்தேன் ஜாக்கி.
ReplyDeleteஒண்ணு சொல்லிகிறேன் உங்கள் அனுமதியோடு..
டேய் ஜாக்கி, ரொம்ப சந்தோசமா இருக்குடா..
அன்புடன்,
காவேரி கணேஷ்.
anna jackiekku en manamaardha vaalthukkal
ReplyDeletethamil padangalil poal sonnal "congratulations neenga appa aagittinga"
வாவ்.. வாழ்த்துக்கள் ஜாக்கி உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும். குட்டிப் பாப்பா போட்டோவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteYa that proverb becomes real in most people life.
ReplyDeleteVazhthukkal Jackie . . .
ReplyDelete