விஜயகாந்த் தனது வேட்பாளருக்கு கொடுத்த பூசை...தேர்தல் /2011


தினமும்  தேமுதிக தலைவர் விஜயகாந்தை பற்றிய செய்திகள் வித்யாசமாக வந்தவண்ணம் உள்ளன.. நேற்று கூட மகாபாரதகதையை ஆரம்பித்து விட்டு அந்த பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு , ஏம்பா அந்த புக்கை எடு.. என்று சொல்லி அந்த புத்தகத்தை பிரட்டிவிட்டு மகாபாரதகதையை தொடராமல்,  வேறு ஒரு செய்தியை பேசியதாகவும் மக்கள் குழப்பம் அடைந்ததாகவும் செய்திகள் வந்தன.



ஆனால்  மக்கள் தொலைகாட்சியை பார்க்கும் போது பக் என்று இருந்தது.. தனது தருமபுரி வேட்பாளர் பாஸ்கர் என்ற பெயரை பாண்டியன் என்று பெயரை மாற்றி அறிவித்து இருக்கின்றார்... அதனை திருத்தவும் அப்படியே தன் முகத்தை மக்களிடம்  காட்டவும் வேட்பாளர் பாஸ்கர் தலையை வேனுக்கு வெளியே  நீட்டியவருக்கு, விஜயகாந்த்  ரெண்டு தட்டி தட்டி  வேனின் உள்ளே போக வைத்து இருக்கின்றார்...

தனது வேட்பாளரின் பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ளாமல் தவறுதலாய் பேசியதன் விளைவு .. ஜெயலலிதா கூட இதே போல மாற்றி பேசி நானும் மனுஷிதானே என்றார்... பெயரை உச்சரித்தது தவறு இல்லை தமரைக்கின போல ரெண்டு தட்டு தட்டியதுதான் காரணமாக போயிற்று...


மிக உயரமான இடத்தில் இருந்து வீடியோ எடுத்த காரணத்தால்தான். இந்த காட்சி பதிவு ஆகி இருக்கின்றது... இப்படி ஒரு காட்சி எடுத்துகொண்டு இருப்பது கூட அவருக்கு தெரிய வாய்பில்லை.. அவரை பொருத்தவரை இது யாருக்கும் தெரியாது என்று நினைத்து இருக்கலாம்...


அந்த வேட்பாளரே எங்க அண்ணன் ரெண்டு தட்டு  செல்லமாக தட்டினார் என்று கூட சொல்லலாம்.. ஆனால் மக்கள் மத்தியில் இந்த காட்சி இன்னும் இரண்டு தினங்களுக்கு பரபரபப்பாய் பேசப்படும்....

அந்த வீடியோ.. உங்கள் பார்வைக்கு....




 நான் பேசிக்கொண்டு இருக்கும் போது இப்ப எதுக்கு மேலே வந்த?? நான் சொல்லும் போதுதானே நீ வர வேண்டும் என்ற கோபமாக கூட  அவருடைய வேட்பளாரை தட்டியதற்கு காரணமாக இருந்து இருக்கலாம்... ஆனால் அந்த வேட்பாளர் பாஸ்கர் இம்மாம் தூரம் எனக்காக பிரச்சாரம் செய்ய வந்து விட்டு என் பேயரையே மாற்றி சொன்னா எப்படி ? என்று அதனை திருத்தி சொல்ல சொல்ல மேலே வந்து இருக்கலாம்.....


நல்லவெயிலில் தொடர்ந்து இடைவிடாது பிரச்சாரம் என்றால் இது போலான பல விஷயங்களை  சந்திக்கத்தான் வேண்டும்...அப்படி வந்த  கோபம்தான் அது... கோபத்தை விட எரிச்சல் என்று கூட சொல்லலாம்...




ஒரு தலைவன் சகல நேரத்திலும், சகல இடத்திலும் விழிப்பாய் இருக்கவேண்டும்...
மக்கள் பணி ,களப்பணி என்றால் சும்மா இல்லை அல்லவா??? அதே போல முதல்வர் நாற்காலியும் சாதாரண விஷயம் அல்ல...





 பிரியங்களுடன் 
ஜாக்கிசேகர்.


 =======
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...


15 comments:

  1. விஜயகாந்த் ஒரு நல்ல தலைவனாக இருப்பார் என்று நம்பும் அப்பாவி மக்களுக்கு இந்த வீடியோ ஒரு பாடம்.
    இதை பார்த்தாவது அவர்கள் திருந்தட்டும்.

    ReplyDelete
  2. வேறென்ன இவருகிட்ட எதிர்பாக்கலாமுன்னு நெனக்கிறீங்க?

    ReplyDelete
  3. //ஒரு தலைவன் சகல நேரத்திலும், சகல இடத்திலும் விழிப்பாய் இருக்கவேண்டும்...//
    அதாவது, அடிக்கறதுன்னா யாருக்கும் தெரியாமல் அடிக்கணம் அப்படிங்கறீங்களா?
    இந்த மீட்டிங் எல்லாம் ஒரு ஸ்டேஜ் ஷோ! நிகழ்ச்சி நடக்கும்போது சொதப்பரவங்கள யாருக்கும் தெரியாம கிள்ற மாதிரி ஒரு சாதாரண நிகழ்வு தான் இது! வழக்கம் போல நம்ம டி வி காரங்க பேனை பெருமாளாக்கறாங்க!

    ReplyDelete
  4. அவர் தான் கருப்பு எம்.ஜி.ஆர் ஆச்சே , அவர மாதிரியே தனியா கவனிக்க வேண்டியது தான. முக - ஜெ ஜெ வை விட கேவலமா ராமதாசும் , விஜயகாந்தும் சண்டை போடறாங்க . காமராசரைத் தோற்கடித்த நம் மக்களுக்கு இந்த மாதிரி தலைவர் தான் கிடைப்பார்கள் , அந்த பாஸ்கரை நினைச்சா பாவமா இருக்கு , பணத்தையும் கொடுத்து அடியையும் வாங்கி .....

    ReplyDelete
  5. எம்.ஜி.ஆர்ங்கிற வார்த்தையை உபயோகிக்க கூட தகுதியற்றவர்.. இன்னும் 20 சீட்டு ஜெயிச்சிட்டு வந்து என்னென்ன ஆட்டம் போடப் போறாரோ..

    ReplyDelete
  6. அடிச்சத்தம் ரொம்ப க்ளியரா கேக்குதே, ரீ-ரிகார்டிங் கூட பண்ணியிருக்காங்க போலிருக்கு! :-)

    ReplyDelete
  7. அடுத்த ஷாட்ல கரெட்க்டா சொல்லாம்னு நினைச்சிட்டாரோ என்னவோ?

    ReplyDelete
  8. தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் கேட்ட போது அவர் கூறிய தாவது:-

    தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது. அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார். மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்த போது பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார்.

    ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம். நான் கட்சி துண்டை கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. எனது வெற்றியை தடுக்க இது போன்ற ஒரு பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
  9. இரண்டு அடி விழுந்திருக்கிறது.. கலைஞரின் அய்யோ கொல்றாங்களே வீடியோ மாதிரி இல்லை.:)

    ReplyDelete
  10. பதவி ஆசைபிடித்த தாத்தாவின் சதியில் இதுவும் ஓன்று ஊடகங்கள் பக்கச்சார்பாக நடக்கின்றன.எங்கே கேப்டன் முன்னேறிவிடுவாரோ என்றபயம்தான் காரணம்.

    ReplyDelete
  11. நேசன் மாதிரி ஆளுங்களாலதான் இந்த மாதிரி 24 மணி குடிகார தலைவர் தமிழ்நட்டுக்கு கிடைக்கிறார் ! வாழ்க தமிழ்நாடு!

    ReplyDelete
  12. கருத்து சொன்ன அத்தனை பேருக்கும் என் நன்றிகள்......

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner