அன்புள்ள அம்மாவுக்கு
இப்போதுதான் விஜய்டிவி பார்த்தேன். நிறைய பிள்ளைகள் தன் அம்மா எப்படி அழகாக இருக்கவேண்டும் என்று போட்டி போட்டு பொதுவெளியில் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் நிறைய அம்மாக்கள் பிள்ளைகளை விட மிக அழகாக இருந்தார்கள்...
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா பிள்ளைகளும் தன் அம்மாக்கள் அழகாக இருக்கவேண்டும் என்று ஆசைபட்டார்கள்.. எப்படி இருந்தாலும் எனக்கு எப்போதுமே நீ அழகு தேவதைதான்..
எல்லா அம்மாக்களும் திருமணத்துக்கு பிறகு ஒன்று கணவனுக்காக மாறி இருக்கின்றார்கள்.. அல்லது குழந்தைகளுக்காக மாறி இருக்கின்றார்கள்....
நிறைய அம்மாக்களின் ஆசைகள் அற்ப ஆசைகளாகதான் இருக்கின்றன... இரட்டை பின்னல் ஜடை, பெரிய பொட்டு, சின்ன பொட்டு,மருதானி இவ்வளவுதான்.... அதையே நிறைய அம்மாக்கள் சரியாக செய்து கொள்வது இல்லை....காரணம் பிள்ளைகளுக்காக மாறிவிடுகின்றார்கள். மற்ற நாடுகளில் எப்படியோ?? நமது நாட்டில் எல்லா அம்மாக்களும் தியாக வாழ்க்கைதான் வாழ்ந்து வருகின்றார்கள்...
நிறைய பிள்ளைகள்... தன் அம்மாக்கள் மிக அழகாக மாற வேண்டும் மற்றவர்கள் எதிரில் அம்மாவை அறிமுகபடுத்தும் போது மினக அழகாக இருக்க வேண்டும் என்று பல பிள்ளைகள் ஆசை கொண்டார்கள்.. ஆனால் எனக்கு நீ எப்போதுமே அழகுதான்...
அம்மாக்கள் எப்போதுமே அழகுதான்... தோல் சுருங்கி முதிர்வு நிலையில் இருந்தாலும் அம்மாக்கள் அழகுதான்.... ஆனால் நீ வயதானால் எப்படி இருப்பாய்? என்று எனக்கு தெரியவே தெரியாது... அந்த பாக்கியம் எனக்கு இல்லை...
நம் புது வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ராமலிங்கம் என்பவருடைய அம்மாவுக்கு கூட மிகுந்த வயசாகிவிட்டது.. காது கேட்காது, கண் தெரியாது, படுத்த படுக்கையாக அந்த பாட்டி இருக்கின்றார்.. படுத்த படுக்கையில்தான் எல்லாமே.... ராமலிங்கம் பெரிய கோடிஸ்வரர்..அவருக்கே வயது 55 இருக்கும் அப்படி என்றால் அவர் அம்மாவுக்கு எத்தனை வயது என்று கணக்கு போட்டுக்கொள்...
அவர் நினைத்தால் எல்லா கோடிஸ்வர பிள்ளைகள் போல ஒரு நொடியில் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட முடியும்....ஆனால் இன்னமும் ராமலிங்கத்தின் மனைவி தினமும் மூத்திர துணியும்,பீத்துணியும் கசக்கி போட்டுக்கொண்டு இருக்கின்றார்...
சிலநேரத்தில் பீத்துணி மூத்திர துணி கசக்கும் போது எரிச்சலில் அவர் மனைவி ஏதாவது சொன்னால் கூட,ராமலிங்கம் உறுதியாக அவள் என் அம்மா...
இந்த சொத்து ஆஸ்தி அந்தஸ்த்து எல்லாம் அவளால் கிடைக்கபெற்றது...அவள்தான் முதலில் அப்புறம்தான் எனக்கு எல்லோரும் என்று இன்னமும் தன் அம்மாவை தலையில் வைத்து கூத்தாடுகின்றான் அந்த மகன்....
எனக்கு யாரெல்லாம் எதிரிகளோ அவர்கள் எல்லாம் எப்படி எல்லாம் மண்ணை கவ்வினார்கள் என்று கண் எதிரில் பார்த்தவன் நான்... கல்லூரியில் சம்பந்தமே இல்லாமல் என்னை கார்னர் செய்த மலையாள அட்மின் பெண்மணி நினைத்து கூட பார்க்க முடியாத அவமானத்தை சந்தித்து இருக்கின்றார்..நடுவில் கூட கல்லூரிக்கு போன போது குழைந்து குழைந்து பேசினார்... நான் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை.. பிரச்சனையை உன்னிடத்தில் விட்டு விட்டுவிட்டேன். நான் என் வேலையை செய்ய ஆரம்பித்தேன்.. ஒரு வாரத்துக்கு முனபுதான் சந்திரன் என்னிடம் போனில் விஷயத்தை சொன்னார்... எவ்வளவு ஆட்டம்..?? எத்தனை பேர் வயிற்று எரிச்சல்??ஒன்றரை வருடம் கழித்து அந்த செய்தி என்னிடம் வந்த போது உன்னைதான் நினைத்துக்கெனாண்டேன் மிக மோசமாக கேவலபடுத்தபட்டு இருக்கின்றார்...
நீ என்னைகாக்கும் காவல் தெய்வம் நீ..அதை உணர்ந்தவன் நான். என் எதிரியை நீ பார்த்துக்கொள்... அவ்வளவே..
போனமுறை கடிதம் எழுதும் போதே உன்னிடத்தில் இன்னும் நிறைய சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் அனால் என்னால் முடியவில்லை....
பார் என்னவோ எழுத நினைத்து என்ன என்னவே எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.. என் எண்ண ஓட்டம் புரிந்தவள் நீ... நான் என்ன கிரிக்கினாலும் உனக்கு புரியத்தான் போகின்றது...
என் முதல் எழுத்தை எழுதவைத்தவள் நீதான்... அதை பார்த்து சந்தோஷம் கொண்டு என்னை தலையில் வைத்துக்கொண்டாடியவலும் நீ தான்... உனக்கு புரியும்....
உன்னை இன்னமும் மதிப்பாய், உயர்வாய், நினைத்து நினைத்து பார்க்க போகின்றேன். பூரிக்க போகின்றேன்...அதுக்கு உன் ஆசி எனக்கு எப்போதும் தேவை.....
என்னவோ ஒரு வாரமாக உன் நினைவுகள் அதிகம் இருக்கின்றது... உன் பேச்சை அதிகம் பேச சந்தர்ப்பம் வாய்கின்றது...அதனால உன்னை அதிகம் நினைத்து பார்க்கின்றேன். நினைத்து பார்க்கும் அந்த நினைவுகள் மிக தித்திப்பாய் இருக்கின்றன...நிறையவே உணர்கின்றேன் நீ எங்களோடு இருக்கின்றாய்...
இரண்டு மூன்று நாட்களாய் சின்ன டென்ஷ்ன்..ஒரு வித படபடப்பு நீ என்னோடு இருப்பாய் என்பது எனக்கு தெரியும்... இருந்தாலும் இந்த டென்ஷனான நேரத்தில் என்னோடு நீ இருந்து இருக்கலாம்...உன் கை கோர்த்து கொஞசம் தூரம் வாங்கிங் போய் இருக்கலாம்....
சகலமும் எங்களுக்கு நல்லதே நடக்க உன்னிடம் வேண்டிக்கொள்கின்றேன்.. அம்மா நீ எங்களை ஆசிர்வதியும்...பரம்பொருளே எங்களுக்கு துணையாய் இருக்கவேண்டுகின்றேன்...இன்று இந்த விஜய்டிவி வேறு உன் ஞாபகத்தை அதிகம் கிளறிவிட்டு விட்டது...
இன்னமும் நான் உனக்கு நிறைய கடிதம் எழுதுவேன்..இந்த கடிதம் எழுதி முடித்த போது மனது கொஞ்சம் அமைதியாக இருக்கின்றது... எழுத்துதான் எவ்வளவு பெரிய வரம்..மனதை லேசாக்க......
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
==================
அன்பின் ஜாக்கி சேகர்
ReplyDeleteதாயைப் போற்றுபவனின் வாழ்வு சிறக்கும். தாயின் அன்பு என்றும் நம்முடன் இருக்கும். எல்லாக் கவலைகளையும் தாயிடம் ஒப்படைத்துவிட்டு - துணிந்து செயலாற்றுக. எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார். இது உண்மை.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
amma.... amma...
ReplyDeletekankalanga vaiththu viteergal...
/* சகலமும் எங்களுக்கு நல்லதே நடக்க உன்னிடம் வேண்டிக்கொள்கின்றேன்.. அம்மா நீ எங்களை ஆசிர்வதியும்... * /
ReplyDeleteவிஜய்டிவி பார்த்தேன்
அருமைன்னு ஒரே வார்த்தையில் சொன்னால் சரியாக இருக்காது என்று தோன்றினாலும், அதையாவது கண்டிப்பாய் சொல்லணும் என்று தோன்றியது.
ReplyDeleteanbulla ammaviru en parthadum, edho jj ammauku ivar thondar ena ninaithu edhenum political lettero ena ninaithen, ungal ammavirku endradhum satre aarudhal.ammavirku nigar yyar undu sollu thalaivaa.....
ReplyDeleteeltechjayavel
9840398398
Hello My Dear Jackie...What a Motherly Touch,Nice Sharing.
ReplyDeleteநிச்சயமாய் எழுத்து ஒரு பெரிய வரம் தான்.எவ்வளவோ விசயங்களை வெளிப்படுத்தலாம்.
ReplyDeleteஅன்புடன் ஜாக்கி அம்மா அம்மா
ReplyDeleteஉருகி உருகி எழுதிய கடிதம் உங்களை ஆசிர்வாதம்
செய்வார்கள் நட்புடன் நக்கிரன்
touching one
ReplyDeleteSUPER Jakie Sekar anna !!!
ReplyDeleteஅம்மா இந்த ஒரு வார்த்தை போதும்.உலகமே இந்த வார்தையில் அடங்கி விடும்.வேரென்ன நான் சொல்ல?
ReplyDeletehat off
ReplyDeletesuper sir
கண்ணீர் வந்துருச்சு படிச்சதும்
அம்மான்னாலே அன்புதான்.
ReplyDeleteஅருமை ஜாக்கி.
romba nalla irukku sir, samy
ReplyDeleteme too same feeling.....
ReplyDelete//என் முதல் எழுத்தை எழுதவைத்தவள் நீதான்... அதை பார்த்து சந்தோஷம் கொண்டு என்னை தலையில் வைத்துக்கொண்டாடியவலும் நீ தான்... உனக்கு புரியும்\\ boss touch pannittinga boss
ReplyDeletefeel good
ReplyDeleteஅருமையான கடிதம்..என் அம்மா என் பக்கத்திலே இருந்தாலும் அவளுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது...
ReplyDeleteNice writing!!!!
idhey anubhavam ennakum undu jackie
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி!
ReplyDelete//இரண்டு மூன்று நாட்களாய் சின்ன டென்ஷ்ன்..ஒரு வித படபடப்பு நீ என்னோடு இருப்பாய் என்பது எனக்கு தெரியும்... இருந்தாலும் இந்த டென்ஷனான நேரத்தில் என்னோடு நீ இருந்து இருக்கலாம்...உன் கை கோர்த்து கொஞசம் தூரம் வாங்கிங் போய் இருக்கலாம்.... //
உங்கள் கைபிடித்து உங்களோடு வாக்கிங் போக உங்கள் அம்மா உங்களுக்கு மகளாக வந்துவிட்டார்களா?
nice post . .
ReplyDelete