லேபர் வார்டு....பெண்களின் வேதனை..

பொம்பளைங்க என்ன processனே தெரியலை... இந்த பொண்ணுங்கதான் எவ்வளவு பெரிய விஷயம்.. சான்சே இல்லை....பெண்கள் மீது மரியாதை வர பல காரணங்கள் இருந்தாலும்,ஒரு பொண்ணு மேல ரொம்பவும் மரியாதை வைக்க மிக முக்கிய காரணம் இந்த லேபர்வார்டு மேட்டர்தான்...

எங்க அம்மா என்னை  பெக்க லேபர் வார்டுல பெரிய போராட்டமே  நடத்தி இருக்கா..... எங்க அம்மா போட்ட கத்தலில் எங்க அம்மாவை பெத்த தாத்தா, தன் பொண்ணு படற அவஸ்த்தையை தாங்க முடியாம? 100மீட்டருக்கு அப்பால போய் வாயில துணியை பொத்திகிட்ட அழுதாரம்.. என்னை கொஞ்சும் போது தாத்தாவும் அம்மாவும் சொல்லி இருக்காங்க....



அப்ப அம்மா சொன்ன போது அந்த விஷயத்தை நான் பெரிசா நினைச்சது இல்லை... பட் இன்னைக்கு அம்மா எப்படி துடிச்சி இருப்பான்னு தெரியுது... அது என்னால இப்ப உணர்ந்து பார்க்க முடியுது...தலைப்பிரசவம் எவ்வளவு பெரிய விஷயம்..??


எத்தனையோ பேர் தன் மனைவி, மகளை  நேசிச்சி இருப்பான் காலம் காலமா பொம்பளைங்க படற கஷ்டத்தை பார்த்து இருப்பான்,, அதனாலதான் சாமியில இருந்து ஆறு வரைக்கு பொம்பளைங்க பேரா வச்சான்...அதுக்குதான் சக்தியில்லையே சிவன் இல்லைன்னு சொன்னான்...

எதுக்குடா இந்த உலகம் முழுக்க லேடிஸ் பஸ்ட்ன்னு  சொல்லறான்னு பார்த்தா... அவன் அம்மா ,தங்கச்சி, அக்கா., பொண்ணுன்னு அதுங்க படும் அவஸ்த்தையை நேரில் பார்த்து இருக்கான்.. முக்கியமா பிரசவ வலியை நேரில் பார்த்தவனா இருந்தா அதை ஜென்மத்துக்கு மறக்கமாட்டான்...அதுக்குதான் லேடிஸ் பஸ்ட்...

தான் நேசிச்ச பொம்பளை, ரெண்டு பேரு சந்தோஷமா  இருந்த காரணத்துக்கு லேபர் வார்டுல அவ மட்டும் வீல் வீல்னு கத்தறதும்.. ஜயோ அம்மா அம்மா முடியலையேன்னு கதறும் போது, அந்த சத்தத்தை கேட்கும் போதும்.... அவளை மட்டும் இப்படி போட்டு படுத்திறியேன்னு ஒரு  கோபம் கடவுள் மேல வரும் பாரு அதுக்குதான் லேடிஸ் பஸ்ட்.....

தான் ரொம்ப நேசிக்கும் மனைவி போல பொண்ணையும்  நேசிக்கும் தகப்பன் அவளும் பிரசவ வார்டில் கத்தும் போது கதறும் போது அதை பார்த்து கலங்கி போய் பல அப்பன்கள் இருந்து இருப்பான் அதுக்குதான் லேடிஸ் பஸ்ட்.

அம்மா மேனோபாஸ்ல அவபடற அவஸ்த்தையை நேர்ல பார்த்த பையன் அவன் அம்மா வயசு ஒத்த பொம்பளை பார்த்து கஷ்டபடக்கூடாதுன்னு சொல்லறதுக்குதான்.. லேடிஸ் பஸ்ட்....

இப்படி யோசிச்சா லேடிஸ் பஸ்ட்டுக்கு காரணத்தை சொல்லிகிட்டே போகலாம்.

ஆனா இதே கழிவிரக்கத்தை சில பொம்பளைங்க தன் மேல சிம்பத்தி வர நான் பொம்பளை என்னை கையபுடிச்சி இழுத்துட்டான்னு  பொய் பழி சுமத்தறதும், என்னை தப்பா  பேசிட்டான், என்னை பெண் என்றும் பாராமல் என்னை அவமானபடுத்திவிட்டார்கள் என்று கூப்பாடு போடும் பெண் ஜென்மங்களும் உண்டு... அதுங்க பொம்பளையே இல்லை....


ஒரு பெண்ணோட prideக்கு கடவுள் செக் வைக்கறது எப்ப தெரியுமா? அது பெண்ணோடு கர்பகாலம்தான்.. நான் ரொம்ப அழகு.. என்னை போல ஒரு அழகி இந்த உலகத்துலேயே இல்லைன்னு நினைக்கற பொம்பளையை போட்டு படுத்தி எடுத்து நான் ஒன்னுமே இல்லை... இயற்கை ரொம்ப  பெரிய விஷயம்னு உணர்த்துவதும் இதே கர்பகாலம்தான்... அது உலக அழகி ஜஸ்வர்யாராயா இருந்தாலும் இதே நிலைமைதான்..

சின்ன சின்ன ஸ்கிரினுக்கு  உள்ள வலி நன்றாக வரும் வரை கத்தி கதறும் பெண்களை பார்க்கும் போது  பிள்ளை பெத்த பெண்களை மிக உயர்வாக பார்க்க தோன்றுகின்றது....

பொண்ணு மேல அணுக்கு காமம் வர வேண்டும்..  ஆண் அவளை சுற்றி சுற்றி வர  வேண்டும் ...இடைவிடாது இனபெருக்கம் நடக்கவேண்டும்.... இதுதான் இயற்கையின் கட்டளை...அப்புறம்தான் சமுகம் கட்டமைப்பு எல்லாம்.. ஆனால் அடிப்படை மேல உள்ளதுதான்..

லேபர் வார்டில் மனைவி கதறும் போது எதிரில்  சகல லட்சணத்தோடு இரண்டு ஜீன்சும் டி ஷர்ட்டும் என் கடந்து போன போது எது பற்றியும் எனக்கு கவலை இல்லை மனைவியின் கதறலும், அவள் முகமும் நினைவுக்கு வந்தன... இறைவனே பரம் பொருளே இந்த வேதனையில் இருந்து மனைவிக்கு சீக்கரம் விடுதலை கொடு என்றே  வேண்டிக்கொண்டு இருந்தேன்...

மறுநாள் முதல்நாளில் பட்ட லேபர் வார்டு  வேதனை சிரிப்பாக மாறிவிட்டது..அதே ஜீன்ஸ் இந்த முறை என்னை கிராஸ் செய்தது...முகத்தையே முதல் நாள் சரியாக பார்க்காத என் கண்கள் என் அனுமதி இல்லாமல் அனிச்சையாக முகத்தில் இருந்து கழுத்து பக்கம் டிராவல் செய்ய ஆரம்பித்தது....இதுதான் இயற்கையின் நியதியோ??????

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..



குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்





(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...



 




============

30 comments:

  1. ஒரு நல்ல பதிவை, கடேசியா வந்த ரெண்டு பாராகளுக்குமே மாத்திப்போட்டிருச்சு.

    ReplyDelete
  2. அன்பின் ஜாக்கி,

    வாழ்த்துக்கள்!!!.தாயும் சேயும் நலமா.? ஞாயிறு அன்று நேரில் சந்திக்கிறேன்.குழந்தையை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.


    //அனுமதி இல்லாமல் அனிச்சையாக முகத்தில் இருந்து கழுத்து பக்கம் டிராவல் செய்ய ஆரம்பித்தது....இதுதான் இயற்கையின் நியதியோ???//

    அடங்க மாட்டியா நீ..?! என் மருமக உன்னை கேள்வி கேக்கும்போது தான் நீ அடங்குவே....

    ReplyDelete
  3. ஒரு நல்ல பதிவை, கடேசியா வந்த ரெண்டு பாராகளுக்குமே மாத்திப்போட்டிருச்சு. --//

    நன்றி இளா.. நான் எப்பயுமே மத்தவங்க ரசிக்கவும், மத்தவங்க பாராட்டுவும் எழுதுவது இல்லை...இதுதாதாயிசம் போலத்தான் நான் என்ன நினைக்கறனோ... அதை முகமூடி போட்டுக்காம எழுதனும் அவ்வளவுதான்...அப்படி பாராட்டனும்னு எழுதினா? பாராட்டுமேலதான் கவனம் இருக்கும்....

    நன்றி இளா...

    ReplyDelete
  4. கடைசியா எழுதிருக்கர அந்த மேட்ட்ர் ரொம்ப முக்கியமோ ...

    ReplyDelete
  5. அடங்க மாட்டியா நீ..?! என் மருமக உன்னை கேள்வி கேக்கும்போது தான் நீ அடங்குவே.... //

    எந்த கொம்பனும் ஒரு நாள் அடங்கியே தீரனும் அதுவரை ஆடுவோம்.. இயல்பாய் அடங்குவோம்...

    இரண்டு பொண்ணை பெத்த ரஜினி, இரண்டு பொண்ணை பெத்த கமல் 60 வயசுலலஇன்னமும் அடங்காமல் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.


    அவசியம் ஞாயிறு வாருங்கள்.. நன்றி அரவிந்.

    ReplyDelete
  6. ராமசாமி..முக்கியமா முக்கியம் இல்லையான்னுறது அவுங்க அவுங்க மனநிலையை பொறுத்த விஷயம்...

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. பெண்களின் வலியில் அவர்களீன் மன வலிமை அதிகம். நீங்கள் சொல்லும் ஜென்மங்களும் உள்ளன..பழி சுமத்தும் ஜடங்கள்..அவர்களை நாம் பெரியதாய் நினைக்க கூடாது ,தாய் உள்ளத்துடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. //.. நான் எப்பயுமே மத்தவங்க ரசிக்கவும், மத்தவங்க பாராட்டுவும் எழுதுவது இல்லை...இதுதாதாயிசம் போலத்தான் நான் என்ன நினைக்கறனோ... அதை முகமூடி போட்டுக்காம எழுதனும் அவ்வளவுதான்...அப்படி பாராட்டனும்னு எழுதினா? பாராட்டுமேலதான் கவனம் இருக்கும்....// prakash likes this!!

    ReplyDelete
  10. சரியா சொன்னீங்க... அது தான் இயற்க்கை... அந்த அச்சில் தான் இன்று வரை அனைத்து உயிர்களும் தழைத்து வருகின்றது.

    ReplyDelete
  11. அன்பின் ஜாக்கி

    அருமையான இடுகை - பெண்களைப் பற்றிப் புரிந்து எழுதிய இடுகை. சக்தி இல்லையேல் சிவமில்லை என்பது ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உணர்ந்த, உணர்கிற, உணர வேண்டிய ஒன்று. நிச்சயம் உணர்வதற்கு ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இது நிதர்சன உண்மை.

    ஜாக்கி அடங்கும் போது அடங்கட்டும். இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாமே ! இவ்விடுகையிலும், மனம் நெகிழ்ந்து எழுதப்பட்ட இடுகையிலும் தேவையா ? அது இடுகையின் நெகிழ்ச்சியினைக் கேலிக் கூத்தாக்கி விட வில்லையா ? இரு இறுதிப் பத்திகள் மேலே எழுதிய அத்தனை பத்திகளின் நம்பகத்தன்மையினை சந்தேகிக்க வில்லையா ? சிந்திக்க்லாம் ஜாக்கி - பெண் குழந்தை பிறந்து பொறுப்பான தகப்பன ஆகி விட்டீர்கள். கமல் ரஜனி எல்லாம் விட்டுத்தள்ளுங்கள் - நான் இவ்விடுகையில் எழுதியதைப் பற்றித்தான் குறிப்பிட்டுக் கேட்கிறேன். ஜாக்கியின் பொதுவாக எழுதும் எண்ணத்தைப் பற்றிக் கேட்கவில்லை. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. அருமையான பதிவு.... கடைசி இரண்டு பத்திகளும் யதார்த்தத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன....எழுத்துக்கு நன்றி.....பதிவர் ஜாக்கி சேகருக்கு நன்றி...தொடரட்டும் உங்கள் எழுத்து... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. அன்பின் சீனா சார் உங்க அனுபவம் மற்றும் உங்கள் கருத்துக்கு நன்றி...

    பெண்களை பற்றி புரிந்து எழுதபட்ட இடுக்கை என்று நீங்களே சொல்லி இருக்கின்றீர்கள்... அதே போல ஒரு சராசரி ஆணின் எண்ணவோட்டத்தை பதிவு செய்து இருக்கின்றேன்..

    ரஜினி கமல் ஒரு உதாரணத்துக்கு சொன்னது......அவர்கள் வாழ்க்கை வேறு என் வாழ்க்கை வேறு....

    நேற்று பெண் பிள்ளை பிறந்து இன்று எனக்கு பொறுப்பு வந்து விட்டது என்று என்னை காட்டிக்கொண்டால் அது கேலியாக போய் விடும்....அப்படி சராசரியாய் என்னால் எழுத முடியாது... எனது இயல்பே மேலுள்ள இடுக்கை

    நன்றி அய்யா உங்கள் கருத்துக்கு...

    ReplyDelete
  14. நன்றி சுந்தர்...

    உங்கள் ஒருவருக்காவது அந்த கடைசி பத்தி இயல்பாய் இருப்பதாய் தோன்றியதே... அதுவே போதும்...நான் சரியாகத்தான் இருக்கின்றேன்.. நான் யாரையும் மனம் நோக பண்ணவில்லை.. நான் முதல் நாளுக்கும் இரண்டாம்நாளுக்கும் என் மனவோட்டத்தை சொன்னேன்.

    மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு சுந்தர்.,..

    ReplyDelete
  15. அக்னிநட்சத்திரம் ஜனகராஜ் போல பிரசவத்துக்கு மனைவியை அனுப்பும் போது தங்கமணி என்று அழுது ஆர்பாட்டம் செய்து விட்டு பேருந்தில் மனைவி ஏறிப்போனதும் நோ தங்கமணி என்சாய் என்று சொல்லி என்னால் நடிக்கமுடியம்... அதைதான் பலர் விரும்புகின்றார்கள்..ஆனால் என்னால் முடியாது...

    பிரியங்களுடன்

    ஜாக்கிசேகர்.

    ReplyDelete
  16. //நன்றி இளா.. நான் எப்பயுமே மத்தவங்க ரசிக்கவும், மத்தவங்க பாராட்டுவும் எழுதுவது இல்லை...இதுதாதாயிசம் போலத்தான் நான் என்ன நினைக்கறனோ... அதை முகமூடி போட்டுக்காம எழுதனும் அவ்வளவுதான்...அப்படி பாராட்டனும்னு எழுதினா? பாராட்டுமேலதான் கவனம் இருக்கும்....//

    சகோதரர் ஜாக்கி அவர்களே, உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    பதிவு அருமை

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் Jackie Sir
    அருமையான பதிவு.

    ReplyDelete
  18. கடைசி இரண்டு 'பாரா', என்னுடன் ஒத்து போகிறது. அப்போ நீங்களும் நானும் ஒருமித்த எண்ண ஓட்டங்கள் உடையவர்கள் என்கின்ற பட்சத்தில் ஒத்து போகாதவர்கள் அவ்வாறான காட்சியை கடக்கும் போது காணாமல் திருப்பி கொள்வார்களா ? அல்லது கண்டும் காணாமல் இருப்பார்களா ? அல்லது கண்டும் சொல்லாமல் (எழுதாமல் ) இருப்பார்களா ? - நான் உண்மையிலேயே குழம்பி போய் தான் கேட்கின்றேன். தெளிவு கிடைக்குமா ?

    ReplyDelete
  19. கிருஷ்ணா,ஒத்து போறது இங்க ஒரு விஷயமே இல்லை... எழுதியது புரிஞ்சிதா என்பதே இங்க மேட்டர்.. நீங்க கேட்ட கேள்வி எனக்கு புரியுது.. என்பதிவு உங்களுக்கு புரியலை..இப்பயும் தெளிவு இல்லைன்னா ஒன்னும் செய்யமுடியாது...

    ReplyDelete
  20. என்ன சொல்றதுன்னே தெரியல ஜாக்கி ... ஏன்னா நானும் இந்த அவஸ்தையை பட்டு இருக்கேன்... அந்த சமயத்தில் எதுவும் தோணாது.... குழந்தையின் முதல் அழு குரல் கேட்ட பிறகுதான் நான் நார்மலுக்கு வந்தேன்..

    அப்பறம் நார்மல் ஆய்டுவோம்...

    அதத்தான் உங்க கடைசி பாராவுல சொல்லி இருக்கீங்க...................

    ReplyDelete
  21. வலி இல்லா நார்மல் பிரசவம் மேலை நாடுகளில் வழமை உள்ளது ஏனோ அவை இங்கு அதிகமாக கனபடுவது இல்லை .இதற்கு பதில் மருத்துவர்கள் தான் தரவேண்டி உள்ளது

    ReplyDelete
  22. //வலி இல்லா நார்மல் பிரசவம் மேலை நாடுகளில் வழமை உள்ளது ஏனோ அவை இங்கு அதிகமாக கனபடுவது இல்லை .இதற்கு பதில் மருத்துவர்கள் தான் தரவேண்டி உள்ளது// mail your doubts regarding வலி இல்லா நார்மல் பிரசவம் to prakashstanley@gmail.com. i am an anaesthetist by profession.

    ReplyDelete
  23. //வலி இல்லா நார்மல் பிரசவம் மேலை நாடுகளில் வழமை உள்ளது ஏனோ அவை இங்கு அதிகமாக கனபடுவது இல்லை .இதற்கு பதில் மருத்துவர்கள் தான் தரவேண்டி உள்ளது// mail your queries regarding வலி இல்லா நார்மல் பிரசவம்- painless labour to prakashstanley@gmail.com. i am an anesthetist by profession.

    ReplyDelete
  24. அருமை! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. hi iam new to blogs can u comment my blog http://postmanpostmartem.blogspot.com/

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் தல... மகாலட்சுமி பெற்றதற்க்கு...

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் ஜாக்கிக்கு!!! ஆசிர்வாதங்கள் குழந்தைக்கு!!!
    உண்மைய அப்படியே சொல்லுறதால் தான் நான் உங்கள் ரசிகன்.தொடரட்டும் உங்கள் பணி...

    ReplyDelete
  28. அவர்கள் வேதனையை இன்னும் அதிகப்படுத்தும் படி சில மருத்துவமனைகளில் நடந்து கொள்வது தான் மனதை புண்படுத்துகிறது. அதில் அவர்களும் பெண்கள் என்பது மிகுந்த வேதனை. என் தோழி "அம்மா வலிக்குதே"நு சொன்னப்போ ஒரு நர்ஸ் முண்டம் "புருஷன் கூட படுத்தப்போ இனிச்சுதோ?" நு நா கூசாம கேட்டுருக்கா. ஏன் இவளோ இல்லை, இவ மகளோ, மருமகளோ அவளுங்க புருஷன் கூட படுத்தபோ கசந்துச்சோ? எனிவே வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  29. நல்ல பதிவு.எண்ண ஓட்டத்தை எடிட் செய்யாமல் எழுதிய உங்கள் நேர்மை வியக்கதக்க விஷயம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner