அவன் பெயர் துரை/
ஒரே ஊர்/
ஒரே பள்ளி/
இரண்டு பேரும் ஒன்றாக படித்தோம். நான் என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் . துரைக்கு என்னை விட இரண்டு வயது அதிகம்.அவனுடைய ஒரே குறிக்கோள் நான் எப்படியாவது மிக பெரிய ஆளாக மாற வேண்டும் என்பதுதான்..
ஏழ்மையான எனது வீடு.. வீட்டுக்கு பெரியபையன்.அதன் பொருட்டு நான் முன்னறே வேண்டும் என்று துரை அதிகம் ஆசை கொண்டான்... அதே போல் எங்கு போனாலும் கூசினி ஆள் போல என்னையும் அழைத்துச்செல்வான்...
பல பாலான படங்களுக்கு நாங்கள் இரண்டு பேரும்தான் அதிகம் போவோம்.. ஒருவேளை நான் அந்த படத்தை முன்பே பார்த்து இருந்தால் அந்த படத்தில் பிட் இருக்கின்றதா? இல்லையா என்பதை என்னை கேட்டு விட்டே அவன் அந்த படத்துக்கு போவான்..
துரைக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை... அதனால் எளிதில் பெரிய ஆளாக ஆக அவன் பத்தர் வேலையை கற்றுக்கொண்டான்.. தங்கத்தோடு தொடர்பில் இருந்தால் நிச்சயம் பெரிய ஆளாக ஆகிவிடலாம் என்பது அவன் நம்பிக்கை... அதே போல் அயராது உழைத்தான்.. அழகிய வேலைபாடுகளுடன் செயின் மற்றும் ஜிமிக்கியில் தேர்ந்து விளங்கினான்...
அவன் சம்பள பணத்தை கொடுத்துதான் அவன் குடும்பம் கஞ்சி குடிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை..எனென்றால் அவனுக்கு இரண்டு அண்ணன்கள்... இவன்தான் கடைகுட்டி... அதனால் பணத்தை விசிறி செலவுசெய்வான்.
கடலூர் நகைகடை பஜாரில் எனக்கு வேலைவாங்கிகொடுத்தவன்..வைரஊசி ஊர் ஊராக டெலிவரி செய்யும் வேலை..மெஷின்கட்டிங்கு பவுனை கட்டிங் செய்ய பயண்படும் ஊசி.. அதனால் அவன் பேரில் எனக்கு நிறைய மரியாதை உண்டு.. மாமா மச்சான் என்றுதான் அழைத்துக்கொள்வோம்..
ஒரு நாள் காலையில் வேலைக்கு ரெண்டு பேரும் போனோம் ஆனால் அன்று மின் பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் இல்லை... வேலை இல்லை என்றதும் சரி என்ன செய்வது ?என்று யோசிக்க.. அந்த நாளை பயன் உள்ளதாக கழிக்க, பாண்டியில் போய் சரக்கு அடிப்போம் என்று முடிவுசெய்தோம்..
காலையில் பாண்டி பஸ் பிடித்தோம்...முதலில் ஒரு ஆப் வாங்கி காலி செய்தோம்... நல்ல போதையில் நல்ல நான்வெஜ்சாப்பாடு. சாப்பிட்டோம்... ஷேர் ஆட்டோ பிடித்து பாராதி பூங்கா போய் செனப் பன்னிங்க போல பாரதி பூங்கா புல்வெளியில் உருண்டு புறன்டோம்...
மாலையில் துரைக்கு ஒரு ஐடியா உதித்தது...
ஏன் மச்சான்.. இது போல சிற்றின்பத்தையே எத்தனை நாளைக்கு அனுபவிக்கின்றது... பேரின்பத்தை எப்போது அனுபவிப்பது என்றான்? புரியலை என்றேன்.... மச்சி இன்னைக்கு கேபரே டான்ஸ் பார்க்கலாமா?என்றான்..
எனக்கு ஆர்வம் சரி போகலாம் என்றேன்.
நேராக மாஸ் ஓட்டலுக்கு ஆட்டோ பிடித்தோம்....அங்கு பக்கத்தில் இருக்கும் ஒரு பாருக்கு போனோம் ஒரு ஆப்பை வயிற்றில் இருவரும் கவுத்துக்கொண்டு, தலைக்கு 200ரூபாய்... இரண்டு பேருக்கு 400 கொடுத்து விட்டு உள்ளே போனோம்....
கும் கும் என்று இசை வழிந்து கொண்டு இருந்தது... கதவை திறந்தால் சிகரேட்,மற்றும் பல்வேறு சரக்குகள் கலந்த ஸ்மெல் அந்த அறை எங்கும் வியாபித்து இருந்தது.
இரண்டு பவுன்சர்கள் எதாவது வரம்பு மீறினால் துவைத்து காய்வைத்து உங்கள் பருப்பு எடுக்கப்படும் என்று பார்வையால் எச்சரித்தார்கள்..நாங்கள் போய் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம்...
தலையில் துணி கட்டிய ஒருவன் டிரம்ஸ் இசைத்தான்..டிபி நோய் தாக்கியவ்ன் போல இருந்தவன் கிடார் வாசித்தான்..ஒருவன் பாடினான்.. ரொம்ப நேரம் அவன் என்னபாடல் பாடுகின்றான் என்று எனக்கு புரியவில்லை.. ஆனால் அது தமிழ்பாட்டுதான்.. கடைசியாக கண்டுபிடித்தேன். அந்த பாடல் கூடலூரு குண்டு மல்லி...............
எட்டு பெண்கள் முதலில் எல்லோரும் மேடையில் ஆடினார்கள்.. இரண்டு பேருக்கு வயது 30க்கு மேல் இருக்கும்.. எல்லோரும் ஆடினார்கள்.. சரக்கு அடித்து கண் விழிப்பதால் இருவருக்கும் கண்ணுக்கு கீழே பெரிய கருப்பு வளையம் இருந்தது...
மூன்று பெண்கள் சான்சே இல்லாத ரகம்.. அதில் ஒரு பெண் மீரா ஜாஸ்மீன் போல தோற்றம் முதலில் புடவையில் வந்து ஆடினார்...நெற்றியில் திருநீர் மற்றும் மங்களகரமாக இருந்தார்.. மணக்குள வினாயகரை வழிபட்டு விட்டு நேராக வந்து ஆடிக்கொண்டு இருந்தது போல இருந்தார்...
ஒரு பா வடிவ பாதை இருந்தது.. ஒரு ஒரு பாடல், பாட, பாட எட்டு பெண்களும் தனிதனியாக வந்து எதிரில் ஆடிக்கொண்டு இருந்தார்கள்.. பார்வையாளர்கள் பணத்தை எடுத்து வீசினார்கள்.. பவுன்சர்கள் அந்த பெண்கள் கூடவே நடந்தார்கள்.
எனக்கு யார் ஆடியதும் என் கண்ணுக்கு தெரியவில்லை.. அந்த மீராஜாஸ்மீன் மட்டும் கண்ணில் முழுவதுமாக நிறைந்து இருந்தாள்... அந்த பெண்ணுக்கு ஏன் இந்த நிலைமை.. அவளுக்கு திருமணம் ஆகுமா-? அவளை யார் ஏற்றுக்கொள்வார்கள்.. இப்படித்தான் எனக்கு நினைவு போனதே தவிர வேறு எந்த கவர்சியும் என்னை கவுத்து போடவில்லை....
நேத்து ராத்திரி யம்மா ஆரம்பித்து.. என் எதிரில் வந்து, 30வயது தனது தளர்ந்த நம்பிக்கையை என் எதிரில் குலுக்கியது, துரை 20ரூபாய் தாளை அதன் இடுப்பில் படற விட்டான்...பின்னாட்களில் ஷகிலா எப்படி சராசரி தமிழ் இளைஞர்களுக்கு பிடித்து போனார் என்பது உளவியலாக பின்னாட்களில் புரிந்து கொண்டேன்..
பைனல் டச்சாக பிரா ஜட்டியோடு எல்லா பெண்களும் ஆடினார்கள்..மீராவும் திருநீரோடு ஆடியது...எனக்கு மனசு ரொம்பவும் வலித்தது.. நான் அந்த பெண்ணை சட்டென காதலிக்க அரம்பித்து விட்டேன் போல.. மீரா வந்த போது அரங்கம் அதீத காமத்தோடு சப்தமிட்டது...
எழு மணி ஷோ முடிந்தது.. அடுத்த ஷோ... அடுத்த ஷோவுக்கு கூட்டம் களைகிட்டியது.... வெளியே வந்தோம் ஒரு புரோக்கர் வந்தான்
“சார் பக்கத்துல புளுடைமன்ட் ஹோட்டலில் அடுத்த ஷோ இருக்கு... அங்க மேல அவுத்து காமிப்பாங்க வரிங்களா ? என்று கேட்டான்....“
நான் மறுத்தேன்...“நான் மீரா நினைவாக இருந்தேன்..
நேராக பீச்சுக்கு ஆட்டோ பிடித்தோம்... வேலைநாளில் லீவ் போட்டு விட்டு சுற்றினால் ஒரு குறுகுறுப்பு மனதில் இருக்குமே.... அதனை சரியாக இரவு ஒன்பது மணிக்கு இரண்டு பேரும் உணர்ந்தோம்....
திரும்ப ஒரு ஆப் வர வைத்தோம்...எறா பிரை சொன்னோம்... வெளியே மழைபெய்ய ஆரம்பித்தது.. துரை ஒரு சிகரேட் பற்ற வைத்துக்கொண்டான்...மழைவெளுக்க ஆரம்பித்து விட்டது...பேரர் இரண்டு பேருக்கு சம அளவு ஊற்றி ஐஸ் கியூப் போட்டான்.... மிக பெரிய நகைகடை ஆர்டர் செயின் மறுநாள் முடித்து கொடுக்க துரை வாக்கு கொடுத்து இருந்தான்...
“ ஏன் மச்சான் ஊர்ல கரண்ட வந்து இருக்கும்???“
எனக்கு எப்படி தெரியும் என்றேன்??
காலையில் இருந்து சரக்கு சாப்பிடும் போது , பாரதி பார்க்கில் உருண்ட போது,மாஸ் ஹோட்டலில் கேபரே பார்க்கும் போது வராத கவலை இரவில் துரைக்கு வந்தது....
சியர்ஸ் சொல்லும் போது துரை ரொம்ப ஷோக்கா ஒரு வாக்கியத்தை சொன்னான்.. அது இன்னமும் என் நினைவில் இருக்கின்றது....
“ ஓத்தா நாம ரெண்டு பேரும் உருப்படற மாதிரி எனக்கு தெரியலை என்றான்....“
சியர்ஸ் சொல்லி உதட்டில் வைத்து ஒரு மிடறு விழுங்கும் போது அந்த வாக்கியம் துரை வாயில் இருந்து டெலிவரி ஆக எனக்கு புரை ஏறும் அளவுக்கு சிரிப்பு வந்தது.....
அதன் பிறகு ஒருவாரத்துக்கு மீரா ஞாபகம் என் அனைத்து செயல்களிலும் வந்து கொண்டு இருந்தது..
அதன் பிறகு புளுடைமன்ட் ஹோட்டலுக்கு போலாம் என்றான்...ஆப் நியூடு பார்க்கலாம் என்று எனக்கு ஆசைக்காட்டினான்.. நான் மறுத்து விட்டேன்...அதன் பிறகு நிறைய வாய்ப்பு காபரே பார்க்க வாய்ப்பு வந்த போது நான் திடமாக மறுத்தேன்...
எனக்கு மீரா நினைவுக்கு வந்து கொண்டே இருந்தாள்..
1995களில் இந்த சம்பவங்கள் நடந்தன...5வருடம் கழித்து ...
துரைக்கு திருமணம் ஆகியது...ஒரு குழந்தை பிறந்தது....ஊருக்கு போன போது அவனை சந்திந்தேன்.. நான் போட்டோகிராபி லைனுக்கு போனதில் துரை சந்தோஷ பட்டான்.. முன்பு போல் கைவேலைக்கு இப்போது மதிப்பு இல்லை, கோவையில் இருந்து பல்க்காக மெஷின் கட்டிங் நகைகள் மொத்தமாக கடைகாரர்கள் பார்ச்சேஸ் செய்து விடுவாதால் தனக்கு வேலை இல்லை என்று வருத்தபட்டான்....
விசிறி செலவு செய்தவனால் செலவு செய்யாமல் இருக்க முடியவில்லை.....
2005ல் ஒரு மாலை நேரம்.. கல்லூரி பேருந்தில் மாணவ மாணவிகளுடன் ஜாலியாக அரட்டை அடித்தபடி வந்த போது ஒரு போன் வந்தது..
துரை தற்கொலை செய்து கொண்டதாக....
கடன்தொல்லை, போதை, மனைவியோடு சண்டை, போதையில் கோபத்தில் திராவகத்தை எடுத்து குடித்து விட குடல் அரித்து துடி துடித்து துரை இறந்து போனான்...
பல வருடம் கழித்து போனவாரம் இங்கே பெண்களூரில் ஒரு நண்பரோடு டான்ஸ்பார் போனேன்...வெகுநாள் கழித்து அன்று இரவு கனவில் மீரா ஆடிக்கொண்டே துரை அருகே வர, 20 ரூபாய் நோட்டைஎடுத்து பஸ் கண்டக்டர் போல துரை மடித்து மீரா முகத்துக்கு நேராக விசிறி ஆட்டிக்காட்டி விட்டு திரும்பவும் பணத்தை, துரை தன் மேல் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்
Guessm, this could be one of the best of Jackie!
ReplyDelete/தனக்கு வேலை இல்லை என்று வருத்தபட்டான்....////
ReplyDeleteஉங்களுக்கு உதவிய உங்கள் நண்பருக்கு நீங்கள் உதவி இருந்தால் அவர் தற்கொலை செய்யும் முடிவிற்கு போயிருக்கமாட்டார்தானே?
நான் கூட பெங்களூர் கதையத்தான் எழுதியிருக்கீங்களோன்னு நெனைச்சேன். துரை பாவம்.
ReplyDeleteவேலைநாளில் லீவ் போட்டு விட்டு சுற்றினால் ஒரு குறுகுறுப்பு மனதில் இருக்குமே.... அதனை சரியாக இரவு ஒன்பது மணிக்கு இரண்டு பேரும் உணர்ந்தோம்....
ReplyDeleteநச்ச்... :)) எப்படி சார் ஒரு Psychiatrist மாதிரி இப்படி மன ஓட்டத்தை ரசனையாக எழுதமுடியுது.?
முன்பு போல் கைவேலைக்கு இப்போது மதிப்பு இல்லை, கோவையில் இருந்து பல்க்காக மெஷின் கட்டிங் நகைகள் மொத்தமாக கடைகாரர்கள் பார்ச்சேஸ் செய்து விடுவாதால் தனக்கு வேலை இல்லை என்று வருத்தபட்டான்.
உண்மை. நானும் அப்படித்தான் 10 வருடங்கள் அந்த நகைதொழில் செய்துவிட்டு இப்போ Graphic designer ஆகியிருக்கேன்.
சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் இப்படி சோகமாக முடிதுவிட்டுர்களே. துறை குடும்பம் இப்போது எப்படி இருகிறார்கள் ?
ReplyDeleteஅது புளுடைமன்ட் ஹோட்டல் இல்ல புளு ஸ்டார் ஹோட்டல். இந்த மாதரி ஹோட்டல் பேரு எல்லாம் செரியாக ஞாபகம் வைதுகொள்ளவேன்டமா, என்னமோ போங்க!!!
என்னத்த சொல்ல :-(((
ReplyDeleteசகோதரம் எங்கே என் கொமண்டை காணல...
ReplyDeleteநான் எதிர் பார்த்தது போலவே சோகமாக முடித்து விட்டீர்கள்
ReplyDeleteசும்மா சொல்லகூடாது நச்சுன்னு இருந்துது.. supperb sir... எனக்கு என்னவோ உங்கள் நண்பரின் புகைப்படத்தை போட்டு இருக்கலாம்னு தோணுது...
ReplyDeleteTouching!!!!!!!!!!
ReplyDeletesenthil, doha
meta fiction வகையிலான மிக நேர்த்தியான கதை ஜாக்கி!!! (கேபிள், மணிஜி, பாரா வெல்லாம் என்ன சொல்கிறார்கள் என தெரிந்துகொள்ள ஆசை:-))
ReplyDeleteபாலகுமாரனுக்கு நன்றியும் படித்தேன் - எழுத்தில் மெருகு கூடி வருவதில் மகிழ்ச்சி!!
நான் கூட அங்கே போயிருக்கேன் .... ஒரு 10 இல்ல 12 வருஷம் இருக்கும்.... உங்களை போலதான் என்னாலும் எதையும் ரசிக்க முடியவில்லை...என் கூட வந்த ஒருவர் - நண்பருக்கு நண்பர் - பத்து ரூபாய் தாள் நிறைய வைத்துக் கொண்டு நிறைய விசிறி அடித்தார்.
ReplyDeleteபிரமாதம் ஜாக்கி.
ReplyDeleteஒரு தேர்ந்த எழுத்தாளக்கான அடிப்படை அடையாளங்கள் ஆங்காங்கே விரவியிருக்கிறது. உண்மையே அப்படியே எழுதியிருக்கிறீர்கள். இதில் சில நகாசு வேலைகள் செய்தால் பிரமாதமான சிறுகதையாக உருப்பெரும்.
டாஸ்மாக்கைப் போல சரக்குக்கு உம்மிடம் பஞ்சமில்லாததால் சிறப்பான கட்டுரைகள் தொடர்ந்து எழுத இயலும்.
சமீபத்தில் படித்தவற்றில் சிறப்பான கட்டுரை / கதை.
அன்பு நித்யன்.
Avlo sarakku one day laya?? Ipavuma?
ReplyDeleteமெல்லிய மனதை தொடும் வகையான கதை, அருமையாக உள்ளது...
ReplyDelete