Nusrat Fateh Ali Khan birthday | இன்று நுசுரத் பதே அலிகான் அவர்கள் பிறந்த தினம்…




இன்று பாகிஸ்தான் பாடகர் நுசுரத் பதே அலிகான் அவர்கள் பிறந்த தினம்…
இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையாக இருந்து பிரிந்து மூன்று மாதம் கழித்து பாகிஸ்தான் பஞ்சாபில் பிறந்தவர்…

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மட்டும் நுசுரத் பதே  அலிகானை அவரது வந்தே மாதரம் இசை ஆல்பத்தில் பாட வைக்காமல் இருந்து இருந்தால்.. என்னை போன்ற இசையறிவு அதிகம் இல்லாத கடலூர் கார பயலுக்கு இவரை பற்றி தெரியாமலே போய் இருக்கும்..

கவாலி இசையின் ராஜா என்று  இவரை இசை உலகம் போற்றுகின்றது…ஹைபிட்சில் கவாலி இசையில் பாடுவதில் வல்லவரான இவரை.. 50 வது பொன்விழா ஆண்டில்  ரகுமான் வெளியிட்ட இசை ஆல்பத்தில் நுசுரத்தின் பங்கும் இடம்  பெற்றது..

வழக்கம் போல  தானும் படுக்க மாட்டான்  தள்ளியும் படுக்கமாட்டன் என்பது போல நுசுரத் பதே அலிகானை  பாட வைத்தற்கு எதிர்பு கிளம்பியது…
 வந்தே மாதர்ம் இசை ஆல்பத்தில் "Gurus of Peace" பாடலை ரகுமானும் நுசுரத்தும் சேர்ந்து பாடி கலக்கினார்கள்….

வந்தே மாதரம் இசை ஆல்பமான மா துஜே சலாம் தயாரிப்பின் போது முதல் போடும் சோனி நிறுவனம் சொன்னது.. யாராவது பிரபலமானவரை உங்களோடு இணைந்து பாடச்செய்தால்.. இன்னும் இந்த ஆல்பம் சிறப்பாக இருக்கும்  அது மட்டுமல்ல.. இந்திய இசை உலகம் எங்கும் கூடுதல் கவனம் பெறும் என்றதோடு… டைட்டானிக் படத்தில்   உச்சஸ்தாயில் பாடும் செலின் டியோன் பெயரை   சோனி பரிந்துரைத்தது.. ஆனால் ரகுமான் அந்த பெயரை நிராகரித்ததோடு… எங்கள் தோழமை தேசமான பாகிஸ்தானில்  உள்ள பாடகர் நுசுரத்  பதே அலிகான் பாடினால் சிறப்பாக இருக்கும் என்றதோடு…தண்ணியும் எண்ணெயும் எப்போதும் ஒன்று சேராமல் எதிரும் புதிருமான   தேசத்தில் இருந்து முதல் முறையாக இரண்டு குரல்கள்  ஒன்றாக இணைந்தன.. அந்த பாடல்தான்… வந்தே மாதரம் ஆல்பத்தில் இடம் பெற்ற "Gurus of Peace"
 கருத்தாம்மாவில் வரும் போறாளே பொண்ணுதாயி பாடலை கொஞ்சம் நாகசு செய்து மாற்றி இருந்தார்…


பாடலின் துவக்கத்திலேயே  நுசுரத்  பதே அலிகான் கலக்கி இருந்தாலும்..2 ,27 இல் பின்னி இருப்பார்… 




 முதல் முறையாக  இந்த பாடலை கேட்ட போது இவர் யார் என்று அறிந்துக்கொள்ளும் ஆர்வம் வந்ததோடு புதிய குரல்….
பிறகு இணையத்தில் தேடி இவரை பற்றி அறிந்துக்கொண்டேன்…  வந்தே மாதரம் இசை ஆல்பம் வெளியான  தினம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி… சரியாக  ஐந்து நாட்கள் கழித்து கிட்னி செயல் இழப்பு காரணமாக இறந்து போனார்..


இந்தி பாடல்களில் அவர் பிரபலம்… ஆனால் கடைகோடி தமிழனுக்கு Nusrat Fateh Ali Khan அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு ரகுமானுக்கு உண்டு
உலகின் நம்பர் ஒன் தேடுதல் இயந்திரம் கூகுள்..  இவரது புகைப்படத்தை தேடுதல் இயந்திரத்தின் முகப்பில் வைத்து இவருடைய பிறந்த தினத்துக்கு மரியாதை செய்துள்ளது

இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள் ‘
Nusrat Fateh Ali Khan ji



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

CHENNAI BEST BURMA FOOD ATHO | சென்னை பாரிஸ்கார்னர் பர்மிய உணவு அத்தோ





கைமணம்  பகுதியில்...

இன்று நாம் சுவைக்க இருக்கும் உணவு அத்தோ.
அத்தோ  பர்மாவின் தேசிய உணவு….


puli ( 2015) movie review | புலி திரைவிமர்சனம்.




புலி திரை விமர்சனம்.

பாகுபலி போலா..??? என்று கேட்டால் ஆம்.. ஆது போன்று ஒரு பேன்டசி கதைதான்.. ஆனால் பாகுபலி நீண்ட கால தயாரிப்பு... புலி குறைந்தகால தயாரிப்பு... ஆனாலும் தமிழல் அரைத்த மாவையே அரைக்காமல் பேன்டசி ஜேனரில் ஒரு பெரிய ஹீரோவை வைத்து  கதையை யோசித்த வகையில் அதில் விஜய்  நடித்த வகையில்   இருவருக்கும் ஒரு ஸ்பெஷல் பொக்கே..
 
====
புலி படத்தின் கதை என்ன?
 
வேதாள தேசம்... மனிதர்களை விட சக்தி வாய்ந்தவர்கள்... அவர்கள் கட்டுபாட்டில் 59 க்கும் மேற்ப்பட்ட   கிராமங்கள் உள்ளன.. அதில் உள்ள ஒரு ஊரில் மருதீஸ்வரன் (விஜய்) தனது அப்பா பிரபுவோடு வசிக்கின்றார்...அதே ஊரில் வசிக்கும் நரேனின் மகள் ஸ்ருதியோடு லவ்வு.. ஒரு சப யோக சுபதினத்தில் ஸ்ருதியை வேதாள தேசத்து  ஆட்கள் கடத்தி செல்கின்றார்கள்... விஜய் தன் காதலியான ஸ்ருதியை எப்படி மீட்டார் என்பதே  புலி திரைப்படத்தின் கதை...
 
=====
 
படத்தின் சுவாரஸ்யங்கள்..
 
 விஜய் கொடுத்த பாத்திரத்தை நிறைவு செய்து இருக்கின்றார்.. ஆனால் நிறைய இடங்களில் அவர்காட்டும் ரியாக்ஷன் பண்டைய கால  பாண்டசி திரைப்படத்தை பார்க்கும் உணர்வை குறைப்பதை மறுக்க முடியாது அதே வேளையில் ஸ்ருதியை அழைத்து வருவதும் தனது கடமை என்று விஜய் சொல்லும் அந்த காட்சியில் ரசிக்க வைக்கின்றார்...
 
 
========
 
 
 
வீடியோ விமர்சனம்..
 



நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ....

.EVER YOURS..

.

சாண்ட் வெஜ் அண்டு நான்வெஜ் 23/09/2015

ஆல்பம்

 கச்சா பொருட்களின் விலைகள் குறைந்தாலும்  பெட்ரோலிய  பொருட்களை குறைக்காமல் இரண்டு ரூபாய் முன்று ரூபாய் என்று குறைத்து பொது மக்கள் வயிற்றில் அடித்து ,  இந்த தில்லாலங்கடியின் காரணமாக மத்திய அரசு முப்பதாயிரம் கோடிவரை சம்பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...  மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்  நான் உங்கள் வீட்டு பிள்ளை என்று  கணீர் என்று பேசிய காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.

Audi A6



 Audi A6


A more powerful, intuitive and sophisticated version of the world's most successful executive sedan the AUDI A6 MATRIX drove into Chennai at a glittering launch function recently. By actress pooja kumar.


Adding yet another winner to its comprehensive and diverse portfolio, Audi, the German luxury car manufacturer introduced the new Audi A6 Matrix – a comprehensively updated version of one of the world’s most successful executive sedans.
This is the sixth launch for Audi this year after the launch of the Audi R8 LMX, Audi RS 7 Sportback, Audi TT Coupé, Audi RS 6 Avant and the Audi Q3.


சென்னை தேவி தியேட்டர் பின்புறம் இயங்கும் 40 வருட பாம்மே லஸ்சி கடை








சென்னை தேவி தியேட்டரில் டிக்கெட் எடுத்து அரைமணி நேரத்துக்கு மேல்  படம் பார்க்க காத்து இருந்த  அத்தனை  சென்னை ரசிக பெருமக்களுக்கு   பரிட்ச்சயமான கடை எதுவென்றால் அது  பாம்பேலெஸ்சி கடைதான்…

பதினைந்து 20வருடத்துக்கு முன்….ஒரு மணி ஷோவுக்கு 12 45க்கு சைக்கிள் டோக்கன் போட்டு விட்டு ஒரு லெஸ்சிஅடித்து விட்டு படத்துக்கு போனால் வயிறு கும் என்று இருக்க …பசியே எடுக்காது… படத்தையும் பசி  நினைப்பே இல்லாமல்  ரசிக்கலாம்..  சென்னையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கொட்டும்   அத்தனை சினிமாரசிகர்ளுக்கும் இந்த பாம்பே லெஸ்சி கடை அத்துப்படி.

cycle light Dynamo | கால ஓட்டத்தில் காணாமல் போனவை... சைக்கிள் லைட்… டைனமோ, ( பாகம் 29)






சைக்கிள் லைட்… டைனமோ,
இன்றைக்கு சென்னை தெருக்களில் சைக்கிள்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது.  பத்து வருடங்களுக்கு சென்னையில் சைக்கிளில் சுற்றி இருக்கிறேன்..
 


 வடபழனியில் இருந்து அண்ணா நகரில் வள்ளியம்மாள் கல்லூரியில்  படித்த  காதலியை தினமும் சைக்கிளில் சென்று சந்தித்து விட்டு வருவேன்..

வளசரவாக்கம்  திருநகர் அனெக்சில் இருந்து   மோட்சம் தியேட்டர்  , தேவி,  காசினோ மெலடி என்று சுற்றி இருக்கிறேன்..     ஆனால் அந்த கணங்களை இன்று நினைத்து பார்த்தால்  வியப்பாக இருக்கிறது... கருவேப்பிலை கொத்தமல்லி  வாங்கவே பைக்கும் காரும்  அத்தியாவசியமாகிவிட்டன...


BANGALORE CHAI POINT HIGHTECH TEA SHOP






A normal tea shop which is running in every street corners of India,  has taken its new form and been well recognised in Bangalore Which Is Chai Point. 


Chai point a high end modern tea shop in Bangalore. Corporate offices has got a very good impression with Chai point. Amuleek Singh Bijral founded Chai Point Whose business premise was very clear “India Runs on chai”



யுவகிருஷ்ணா




தமிழ் டைப்பிங்  தெரியாம பிளாக் எழுத வந்தவன்  நான்….

 ஒரு போஸ்ட் எழுத தடவி தடவி அடிச்சி முடிக்க மூன்று மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரம் ஆகும்..

 அந்த நாட்களில் வலைபதிவுகளில்  லக்கி செம பேமஸ்… யாருடா இந்த ஆளு… என்று கவனித்த  நாட்கள் அவை…லக்கி அளவுக்கு வளர வேண்டும்… ஒரு பதிவர்  சந்திப்புக்கு  சென்றால் என் பெயர் தெரியவேண்டும் என்ற அளவுக்கு ஒரு ஆசையும்  வேகமும் இருந்தது.

கொஞ்சம் என் பெயர்  வெளியே தெரிய ஆரம்பித்தது….

Bangalore Chai Point | பெங்களூர் டீக்கடை சாய் பாயிண்ட்






 சாய் பாயிண்ட்…

 சாய் பாயிண்ட்  பெங்களூருவில்  உள்ள  ஒரு ஹைகிளாஸ் டீக்கடை.

 டீக்கடை என்று  சதாரணமாக  நாம் நினைக்கும் விஷயம் பெங்களூருவில்  கார்பரேட் லெவலில்  …  சக்கை போடு  போட்டுக்கொண்டு இருக்கிறது..


 சாய்  பாயிண்ட்… என்பது ஒரு டீக்கடை… டெல்லி மட்டும் பெங்களூருவில் மட்டுமே இயங்குகின்றது. 300 ஊழியர்ள்  பணி புரிகின்றார்கள். அதில் 70 இல்இருந்து 80 பேர்  டீ  மாஸ்டர்கள்


Srimanthudu-2015 Movie Review | ஸ்ரீமந்துடு என்கிற செல்வந்தன் திரைவிமர்சனம்.



 ஸ்ரீமந்துடு.

மகேஷ்பாபுவுக்கு  கடந்த கால படங்கள்   மாஸ் ஹிட் வெற்றிப்படங்கள் என்று  சொல்ல முடியாவிட்டாலும்,   சிறிய அளவில் வெற்றி பெற்ற படங்கள் அவை..  கொரட்டல சிவாவோடு ஸ்ரீமந்துடுவில் வெற்றி பெற வேண்டும்  அதுவும் மாஸ் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று  மகேஷ் பாபு கோதாவில் இறங்கி இருக்கின்றார்.

Mission: Impossible - Rogue Nation-2015 | மிஷின் இம்பாசிபிள் பாகம் 5 திரை விமர்சனம்



 மிஷின் இம்பாசிபிள் 5


மிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன்  ஐந்தாம்பாகம் ரிலிஸ் ஆகி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கின்றது…
மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் அடிநாதம் …  பரபரப்பான வேகம்… விறு விறுப்பான திரைக்கதை…

 பார்வையாளன் நினைத்துக்கொண்டு இருப்பதை  நாலு சீனுக்கு  ஒரு சீனில் நீ   நினைத்துக்கொண்டு இருந்தது தவறு என்று அடி  வயிற்றில்  ஓங்கி ஒரு குத்து விடும்  டேர்னிங் பாயிண்ட் திரைக்கதை… அதனால்தான் நான்கு பாகமும் கலெக்ஷனில் பின்னி பெடலெடுத்தது… இந்த ஐந்தாம் பாகமும்அதற்கு விதிவிலக்கில்லை..

கோவை சென்ட்ரல் திரையரங்கில் மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தை பார்ததேன்.. சுவற்றில் கரும்பலகையில் பொடி எடுத்துக்களாய்… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் கதையை எழுதி வைத்து இருப்பார்கள்..

ஆங்கிலம் தெரியாதவர்கள் முன் கதை சுருக்கத்தை வாசித்து விட்டு படம் பார்க்கும் போது புரியும்  அல்லவா??? அதனால்  அந்த ஏற்பாடு.. ஆனால் இன்று தமிழ் டப்பிங்கிள் ஆங்கில படங்கள் உலகமெங்கும் வெளியாகும்  அதே தினத்தில்  வெளிவர ஆரம்பித்து விட்டன. எல்லாம் டிஜிட்டல் தொழில் நுட்பம் செய்த மாயம்… அதே போல  இரண்டாம் பாகம்  வந்த போதுதான் டிடிஎஸ்   சவுன்ட் சிஸ்ட்டம் தமிழ் நாட்டில் கால் பதித்த நேரம்… பழைய நினைவுகள் …. லெட் மி கம் டூ த பாயிண்ட்.

======
மிஷின்இம்பாசிபிள் திரைப் படத்தின்  கதை என்ன???

சின்டிகேட்  என்ற  அமைப்பு நாசகார வேலைகள் உலகம் எங்கும் செய்து வருகின்றன..சிஐஏ அப்படி  ஒரு அமைப்பே இல்லை என்று  நினைக்கிறது… ஆனால் ஈத்தன்… (டாம்குருஸ்)  கண்டிப்பாக  சின்டிகேட் அமைப்பு இருக்கின்றது…  என்பதை  கொஞ்சம் ஆதரங்களோடு வைத்துக்கொண்டு நம்புகின்றார்..  அந்த அமைப்பை அவர் எப்படி கண்டு பிடித்து முறியடித்தார் என்பதுதான் மிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன் திரைப்படத்தின் கதை.


மேலும் வாசிக்க இங்கே கிளிக்கவும்.



=======
மிஷின் இம்பாசிபிள் வீடியோ விம்ர்சனம்.




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

HAPPY BIRTHDAY GAURAV- இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இயக்குனர் கவுரவ்




எனக்கு நடிக்க பிடிக்கும்….

ஆனால் பள்ளி காலத்திலோ  அல்லது நண்பர்களின் நாடகங்களிலோ..   இதுவரை நான் நடித்தது இல்லை… அதனால் பிறவி நடிகன் அல்ல…

கல்லூரியில்  பணி புரிந்த போது மாணவர்கள் குறும்படங்களில் நடித்து இருக்கிறேன்.

Sakalakala Vallavan Appatakkar-2015 Movie Review | சகலகலா வல்லவன் அப்பாடக்கர் திரைவிமர்சனம்






ரோமியோ ஜூலியட் இப்போதுதான் வந்தது போல இருக்கு…. அதற்குள் ஜெயம் ரவியின் அடுத்த படம் அப்பாடக்கர். கமர்ஷியல் இயக்குனர்  சுராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். அஞ்சலி, திரிஷா,சூரி  மற்றும் பலர் நடித்துள்ளனர்.


ithu enna maayam-2015 movie Review | இது என்ன மாயம் திரைவிமர்சனம்




இது என்ன மாயம்…. இயக்குனர் விஜய் இயக்கத்தில்  விக்ரம் பிரபு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்…   ஜாலியான காதல் சப்ஜெக்ட்..
======


Orange Mittai-2015 Movie Review - ஆரஞ்சு மிட்டாய் திரைவிமர்சனம்.






விஜய் சேதுபதியின் உழைப்பு பிரம்மிக்க வைக்கின்றது… சினிமாவில் என்னவாகப்போகின்றோம் என்று எந்த திட்டமிடலும் இல்லாமல் சினிமாவில் என்ட்ரியாகி… சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலேயே முன்னனி நடிகராக வலம் வருவது சாதாரண விஷயம் இல்லை.. அதை விட… கமலை போல சினிமாவில் சம்பாதித்து சினிமாவிலே முதலீடு செய்வது போல விஜய் சேதுபதி தனது சொந்த பேனரில் தயாரித்து இருக்கும் திரைப்படம்தான் ஆரஞ்சு மிட்டாய்..
டீசரும் டிரைலரும் ஏகத்துக்கு எதிர்பார்க்கை எகிற விட்டு இருந்தன என்றால் அது மிகையில்லை.. முக்கியமாக விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரத்தில் நடித்ததோடு ஒரு சின்ன சிக்வென்சுக்கு போடும் ஆட்டத்திற்காக .. அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமானது நிஜம்…

Valanjamkanam water falls near Kuttikkanam - மயக்கும் வலன்ஜ கானம் அருவி /கேரளா.



மவுனராகம் படம் எல்லோரும் பார்த்து இருப்பிங்க…
 அதுல  மோகன் ஒரு நாள் ரேவதியை அழைச்சிக்கிட்டு வெளியே போவார்… அதுவும் தாஜ்மாகாலுக்கு மத்தவங்கள  மாதிரி தொல்பொருள்துறை பாதுகாக்கும் கட்டிடம்., நுழைவு சீட்டு   வாங்கும் இடம் என்று வழக்கமாக போகும் வழியில்லாமல்…



SABARI MALAI DOLLY STORY - சபரிமலை… டோலிகள்




சபரிமலை… டோலிகள்

தென்னிந்தியாவில் உள்ள   கேரளாவில் , மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் ஆன்மிக ஸ்தலம் சபரிமலை . 18 மலைகள்  சூழ்ந்து இருக்கும் மலையில் ஒரு மலையில் இறைவன் ஐயப்பன் வீற்று இருக்கின்றான்…  ஐய்யப்பனை காண , பம்பையில் இருந்து நீலிமலை வழியாக நான்கு கிலோ  மீட்டர் ஏற்றமான  மலைபாதையை  கடக்க வேண்டும்…

Maari(2015) Movie Review - மாரி திரைவிமர்சனம்.



மாரி…..
புதுப்பேட்டை படத்திற்கு பிறகு ரவுடி கேரக்டர் மாரி  படத்தில்  தனுஷ் செய்து இருக்கின்றார்… அவர்  கேரியரில் மறக்க முடியாத படம் புதுப்பேட்டை என்றால் அது மிகையில்லை… தனுஷ் என்ற நடிகனை  வெளிக்கொண்டு வந்த படம்… ஆனால்  மாரி அந்த அளவுக்கு ராவான  ரவுடி சப்ஜெக்ட் இல்லை.. காமெடி என்டர்டெய்னர் என்று  முன்பே சொல்லிவிட்டார்கள்…
====
மாரி படத்தின் கதை என்ன?

சாதாரணமாக புறா பந்தயத்தில் கலந்துக்கொண்ட மாரி எப்படி  பின்னாளில் ரவுடியாக பரிணமிளிக்கின்றான் என்பதும் அவன் வாழ்வில்  காதேலோடு குறிக்கிடும் பெண்ணை அவன் காதலித்தானா? அல்லது  அந்த காதலுக்காக இரண்டு மணி நேரத்தில் ரவுடி தொழிலை தூக்கி கடாசி விட்டு  உத்தமனாக மாறினானா? இல்லையா என்பதே மாரி படத்தின் கதை.
=
பாலாஜி மோகனின்  முந்தைய இரண்டு படங்கள்  மென்மையான காதல் படங்கள்…  அப்படியான இயக்குனர்  ரவுடிசப்ஜெக்ட்   எப்படி  எடுப்பார் ???என்ற ஆர்வம்  இண்டஸ்ட்ரி முழுக்க எல்லோருக்கும் இருந்தது…  ஆனால் நன்றாகவே  பக்கா  கமர்ஷியல்  படத்தை எடுத்து  இருக்கின்றார். ஆனால் கதை  சுவாரஸ்யமில்லாத வழக்கமான கதை. ஆனால் இதில் புதுமை என்வென்றால்  புறா ரேசை பின்புலமாக வைத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார்..


 பிரேமுக்கு பிரேம் ரஜினி சாயல் தெரிகின்றது… படத்தின் கதையே பாட்ஷா படத்தை நினைவு படுத்தி தொலைக்கின்றது. ஆனால் ரஜினி போல ஒரு கமர்ஷியல் ரூட்டுக்கு வர  வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றார்.


 தனுஷ் ஒரே ஷாட்டில் நடனம் ஆடுகின்றார்..

மேலும் வாசிக்க.... இங்கே கிளிக்கவும்.,..

 மாரி வீடியோ விமர்சனம்.





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Baagupali Movie (2015) review - பாகுபலி இந்திய சினிமாவின் பிரமாண்டம்.



இந்திய சினிமாவின் பிரமாண்டம் என்ற அடை மொழி…. மூன்று வருடகால  தவம்.. 250 கோடிக்கு மேல் ஏப்பம் விட்டு கிடக்கும்  திரைப்படம்...  அப்படி என்றால்   அந்த படத்தை  எப்பை சோப்பையாக எடுக்க முடியுமா???  அதே போல மொக்கையாகவா  அந்த படத்துக்கு விளம்பரம் செய்வது??? அதனால்  பாகுபலி படத்துக்கான  விளம்பரம் அதிகம் என்றால் அது மிகையில்லை.. அதே போல  பாகுபலி  படக்குழுவினர் மிக அழகாக ரசிகர்களுக்கு டெம்ட் ஏற்றினார்கள் என்றே  சொல்ல  வேண்டும்… இந்த  அளவுக்கு  பிராண்டிங் செய்ததே இந்த படம் எந்த மாதிரி எதிர்வினை ஆற்றினாலும் படம்  ஓடி  விட வேண்டும் என்ற ஒரு  கார்பரேட் கால்குலேஷன்தான்…


பாபநாசம் திரைப்பட கிளைமேக்ஸ் சர்ச்சை..

#papanasamclimax


மொள்ளமாறி ,பொறம்போக்கு, ஊரை அடிச்சி உலையில போடுறவன் , கஞ்சா கடத்தறவன், கட்டபஞ்சாயத்து பண்ணறவன்கவுரவகொலை செய்யறவன்.. நல்லது செய்யறேன்னு ஆட்சிக்கு வந்து நாட்டை சொரண்டுற அரசியல் வாதிங்க...

Papanasam (2015) movie review - அசத்தும் தகப்பன் கமலஹாசன்.





தினம் தினம் பாத்ருமில் குளிக்கும் ஸ்கான்டல் வீடியோக்கள் வெளிவந்துக்ககொண்டு இருக்கின்றன… காதலன் கெஞ்சி  கேட்டான் என்பதற்காகா   தான் குளிப்பதை தானே செல்போனில் வீடியோவாக எடுத்து  வீடியோ முடியும் போது பிளையிங் கிஸ் கொடுத்து  கேமரா அனைக்கு பெண்கள் ஒருவகை….

புலிதிரைப்படத்தின் டீசர் பிரச்சனை... நம்பகத்தன்மை இனி குறையும்...




ஆறு ஏழரை முகூர்த்த கல்யாண மண்டபத்தில்... சரியாக எழுமணிக்கே  சாப்பாட்டு பந்தியை ரெடி செய்து  பூட்டி வைத்து விடுவார்கள்..  ஆனால்  எழு மணிக்கே ஒரு ஐம்பது பேர்  பின் பக்க  வாசல் வழியாக வந்து விருந்தை சுவைத்துக்கொண்டு இருந்தால்.. மற்றவர்கள் நாங்க ஆபிசுக்கு போவனும்  என்று மல்லுக்கட்டும் பொது  வேறு வழியில்லாமல் மணமகன் தாலிகட்டும் முன்பே பந்தியை திறந்து விடுவார்கள் அல்லவா?? அது போலத்தான் புலி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசருக்கு ஆகி இருகின்றது...


Bangalore frazer town - பெங்களூர் பிரேசர் டவுன் ரம்ஜான் அசைவ உணவு திருவிழா




பெங்களூருவில்  வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கிய சிறிய  நகரம்… பின்னாளில்  பிரேசர் டவுன் என்று அழைக்கப்பட்டது…தற்போது புலகேஷிநகர் என்று அதனை அழைத்தாலும்… இன்னமும் பிரேசர் டவுன் என்றே அழைக்ப்பட்டு வருகின்றது… உதாரணத்துக்கு  இன்னமும்  எப்படி அண்ணாசாலை என்று அழைக்காமல் மவுண்ட் ரோடு என்பது மனதில் பதிந்து விட்டதோ??? அதே போல பெண்களூரில் பிரேசர் டவுனும் அப்படியே..


Romeo Juliet movie Review -2015 |ரோமியோ ஜூலியட் திரைவிமர்சனம்.

romeo-juliet-poster_139744498800



இயக்குனர் எஸ்ஜே சூர்யாவின் மாணவர் லக்ஷ்மன் இயக்கும் ரோமியோ ஜூலியட் என்று  படம்  பற்றிய  செய்தி வந்ததுமே…நிமிர்ந்து உட்கார்ந்தது தமிழ் திரையுலகம்.. காரணம் எஸ்ஜே சூர்யா திரைப்படங்கள்… அப்படி பட்டவை… அவருடைய சிஷ்ய கோடி என்றால் ???எதிர்பார்ப்பை  எகிற வைப்பது போல .. படத்தின் போஸ்ட்டரும் அமைந்தது…படுக்கையில் ரவியும் ஹன்சிகாவும் இருப்பது போல….
டிரரைலர் இன்னும் சிறப்பாக இருந்தகாரணத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி போனது..
எங்கேயும் காதல் திரைப்படத்துக்கு பிறகு ரவியும் ஹன்சிகாவும் இணைகின்றார்கள்…

Inimey Ippadithan movie (2015) review |இனிமே இப்படித்தான் திரைவிமர்சனம்.



????????????????????????????????????????????????????????????


சந்தானம் இனிமேல் நாயகனாகத்தான்  நடிப்பேன்…. முக்கியமாக  நெருங்கிய நண்பர்களுக்காக வேண்டுமானால் காமெடி வேடம் தரிப்பேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில்  தெரிவித்து இருந்தார்… வல்லவனுக்குபுல்லும் ஆயுதம் திரைப்படத்துக்கு பிறகு ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் படம்…. லொள்ளுசபா டீமில் இருக்கும் அத்தனை நண்பர்களையும் கண்டிப்பாக இயக்குனராக களம் இறக்குவேன் என்று சொன்னதோடு அவருக்கு பஞ்ச் டயலாக் எழுதி கொடுக்கும் முருகன், ஆனந் என்ற இரண்டு நண்பர்களை முருகானந்த் என்று இயக்குனராக புரமோஷன் கொடுத்து இருக்கும் படம்.

Jurassic World Movie review|ஜூராசிக் வேர்ல்டு திரை விமர்சனம்


1993 ஆம்  ஆண்டு இயக்குனர் ஸடீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த போது…. தமிழ் நாட்டில் டிடிஎஸ் ஒலியும் தமிழ் திரையரங்குகளில் அடி எடுத்து வைத்தது… டிவி வந்தவுடன்  தியேட்டருக்கு போய் படம் பார்க்க வேண்டுமா? என்று யோசித்துக்கொண்டு இருந்த தமிழக மக்களை தியேட்டருக்கு கை  பிடித்து அழைத்து  வந்த பெருமை டிடிஎஸ் சவுண்டுக்கு உண்டு…



Kaakka Muttai (2015) movie review | காக்கா முட்டை திரைவிமர்சனம் |தமிழில் ஒரு உலக சினிமா



ஏற்ற தாழ்வுகள் கொண்ட  நகரம் சென்னை.. அதிலும் கடந்த  2005 ஆம் ஆண்டில் இருந்து… கடந்த  பத்து வருடத்தில்  வெவ்வேறு முகமூடிகளை  சென்னை  மாட்டிக்கொண்டுவிட்டது.…

பீட்சா ஆர்டர் செய்தால் வீடு  தேடி வரும் என்று என்  நான்கு வயது மகளுக்கு தெரிகின்றது. ஆனால்அதே பீட்சாவை சுவைத்த பார்க்காத குழந்தைகளுக்கும் இதே சென்னையில்  வாழ்கின்றார்கள்..

Mass (2015) Movie Review |மாஸ் என்கின்ற மாசிலாமணி திரை விமர்சனம்



சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் வெங்கட் பிரபுவின் ஆறாவது படம்….ஏற்கனவே அஞ்சான் படத்தின் வெளியீட்டுக்கு முன்  ஆடிய உற்சாகத்துக்கு சமுக வலைதளங்களில் குத்தி குதறியாதாலோ என்னவோ… மாஸ் திரைப்படத்துக்கு  வெளியீட்டுக்கு முன் அலப்பறை அதிகம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்…


பாத்ரூம் செப்பல்ஸ்…. (கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்)



1988களில் அந்த செருப்பின்  விலை… பத்து ரூபாய்…  அந்த  செருப்புதான் நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் பாதங்களை ஒரு காலத்தில்  காத்தன என்றால் அது  மிகையில்லை.


Ilayaraja music copyright Issues | இளையராஜா காப்பிரைட் சர்ச்சை’




இளையராஜாவுக்கும் தனியார் எப்எம் வானொலி நிலையங்களுக்கு இடையே ஆன பனிப்போர்...

Demonte Colony Movie review |டிமான்ட்டி காலனி |திரைவிமர்சனம்


காமெடி பேய் படங்கள் கல்லா கட்டிக்கொண்டுஇருக்கும் வேளையில்   முழுக்க முழக்க திரில்லர் ஜானரில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்தான் டிமான்டி காலனி...

டிமான்டி காலனி என்பது சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்றளவும் இருக்கும் காலனி....வெள்ளைகாரன் காலத்தில் இருந்தே இந்த காலனியில்  பேய்கள் ஊலாவுதாக யாரோ கொளுத்தி போட... இயக்குனர் அஜய்ஞானம் படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது..


PurampokkuEngiraPodhuvudamai-2015| movie review|புறம்போக்கு திரைவிமர்சனம்


எங்கள் ஊர் கடலூரில் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டென்ட் கொட்டாயில் பார் மகளே பார், பாசமலர், துலாபாரம் , போன்ற படங்களை பார்த்து விட்டு பெண்கள் இழவு வீட்டுக்கு சென்று ஒப்பாரி வைத்து விட்டு வாயையும் மூக்கையும் சேர்த்து மூடிக்கொண்டு வருவார்களே அது போல படத்தை பார்த்து விட்டு டென்ட் கொட்டகை விட்டு வெளியே வரும் போது துக்கம் தாங்கால் புடவை தலைப்பால் வாயை பொத்தி வருவார்கள்..


50 பைசா சுற்றுலா…



சில நேரங்களில்  அப்படித்தான் நடக்கும்.. அப்படி ஏன் நடந்தது என்றோ…??  ஏன் அப்படி நடக்ககவில்லை என்றோ கேள்விகேட்கவே முடியாது…  வாழ்க்கை அப்படித்தான்…. ஆறு விரலோடு ஏன் பிறந்தான் என்ற கேள்விக்கு எப்படி  விடையில்லையோ??? அது போலத்தான்  சில விஷயங்கள் அப்படி நடந்து விடும்...வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காமத்தான்  நாம ஏத்துக்கனும்…


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.18/05/2015




ஆல்பம்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமித் கட்டாரியா. தண்ட்டேவாடா மாவட்ட ஆட்சித்தலைவர் தேவசேனாபதி  இரண்டு கலெக்டர்களுக்கும்  மத்திய அரசு ஓலை அனுப்பி  இருக்கின்றது… புரோட்டகால் படி நடந்துக்கொள்ள வேண்டும் … நீங்கள் இருவரும் நடந்துக்கொள்ளவில்லை  என்பதே  மத்தியஅரசு அனுப்பிய ஓலையில் சாரம்சம். அதிலும் கலெக்டர் அமித் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு கைகுலுக்கி  விட்டார்…  என்று ஓலைக்கான மறைமுக காரணத்தை சொல்லி இருக்கின்றார்கள்… 

Airtel launched 4G in chennai |சென்னைக்கு அறிமுமானது எர்டெல்லின் 4G அலைவரிசை.



ஏர்டெல்காரர்களின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும்... எந்த இடத்தில் அவர்கள் நெட் ஒர்க்கை அடித்துக்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சன  உண்மை... அதனால்தான் இதுவரை என்னுடைய நம்பரை மாற்றாமல் வைத்து இருக்கின்றேன்…

எப்போதுமே…  முதலில் களத்தில் இறங்குபவனுக்கே வாழ்த்தும் மரியாதையும்…. காரணம்.. அவன்தான் மக்கள்  மனதில் நிரந்தரமாக பதிபவன்….

உதாரணத்துக்கு  கேபிள் டிவி என்றாலே சன்டிவி என்று எப்படி அழைக்கபடுக்கின்றதோ..? அதே போல செல் போன் நெட்ஒர்கிற்கு இன்றுவரை ஏர்டெல்தான்…


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.13/05/2015


ஆல்பம்..
 பட்ட கால்லியே படும் கெட்ட குடியே கெடும்… என்பதற்கு  உதாரணமாக நேபாளத்தை சொல்லலாம்…  முதலில்  வந்த  நிலநடுக்கத்தில் இருந்து  இன்னும் மீண்டு வராத நிலையில் திரும்பவும்  அடுத்த  நிலநடுக்கம் அவர்களை மீண்டு தாக்கி இருக்கின்றது…40க்கு மேற்ப்பட்டவர்கள் இறந்து இருக்கின்றார்கள்.. சென்னையிலும் அது  லேசாக உணரப்பட்டுள்ளது.

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner