கைமணம் பகுதியில்...
இன்று நாம் சுவைக்க இருக்கும் உணவு அத்தோ.
அத்தோ பர்மாவின் தேசிய உணவு….
சென்னையில் அத்தோ என்று அழைக்கப்படும் பர்மிய உணவு கால் பதித்து ஏறக்குறைய
55 வருடங்கள் ஆகிவிட்டன…
1960 ஆம் ஆண்டில் பர்மாவில் இருந்து தாய் நாட்டுக்கு திரும்பிய தமிழர்களுக்கு தமிழக அரசால் வியாசர்பாடி, புளியந்தோப்பு, பாரதி
நகர் போன்ற இடங்களில் அவர்கள் வாழ நிலம் ஒதுக்கப்பட்டது…. அன்று
வடசென்னையில் கால் பதித்த அத்தோவை இன்றுவரை யாராலும் பர்மாவுக்கு
விரட்ட முடியவில்லை..
காரணம் அத்தோ கொடுக்கும் அபாரருசி….
முதல் முறையாக அந்தோவை சவைக்கும் யாரும் அத்தோவை அவ்வளவு எளிதில் விரும்பமாட்டார்கள்.. அதன் ருசி
புதுமையாய் இருக்கும்… இரண்டு முறை சாப்பிட்டு பழக்கப்பட்டு விட்டால்.. மாலை ஆறு மணிக்கு
உங்கள் கால்கள் தன்னால் அத்தோ கடைகளை நோக்கி செல்லும்..
அத்தோ வடசென்னையில் இருந்து தென் சென்னை
பக்கம் தற்போது குறைந்த அளவில் கால் பதித்து
இருந்தாலும்.. அத்தோ சாப்பிட ஏற்ற இடம் சென்னை
பாரிஸ் கார்னர் பர்மாபஜார் எதிரில் இருக்கும் இரண்டாம் கடற்கரை சாலையில் உள்ள அத்தோ கடைகள்தான்..
அந்த தெருவில் நிறைய அத்தோ கடைகள் இருந்தாலும்
சென்னை பீச் ரயில் நிலையம் எதிரில் இருக்கும் இந்தியன் வங்கிக்கு பின்புறம் உள்ள அத்தோ
கடையில் கிடைக்கும் அத்தோ சுவையை அடித்துக்கொள்ள முடியாது..
பொதுவாக பர்மிய உணவுகள் பச்சையாக உண்ணும் வடிவில் தான் தயாரிப்பார்கள்… …ஆனால் அத்தோ
கலவையை சூடான தோசைக்கல்லில் மூட்டை மற்றும்
நூடுல்சும் சேர்த்து சுட சுட தருகிறார்கள். இது சென்னைகாரர்கள்
கண்டுபிடித்ததாம்…
பாரிஸ் கார்னர் சென்றால் பீச் ஸ்டேஷன் எதிரில் இருக்கும் இந்தியன் வங்கி பின்புறம்
உள்ள தெருவோர அத்தோ கடையில் சாப்பிட்டு பாருங்கள்… முதலில் உங்களுக்கு அந்த சுவை சுத்தமாக
பிடிக்காது…
பின்னாளில் அத்தோ சுவை மற்றும்
அதன் ருசி குறித்து ஒன்றரை பக்கத்துக்கு கட்டுரை
எழுதுவீர்கள்.
அத்தோ சாப்பிட்ட அனுபவத்தை மெயிலில் குறிப்பிட மறவாதீர்கள்..இந்ததளம் பிடித்த
இருந்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நண்பர்களிடம்
ஷேர் செய்ய மறவாதீர்கள்…
வீடியோ பதிவாக அத்தோ..
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
I coud see u in pudukottai.but failed to introduce my self. For the last 3 years I am yr favorite. I am from pondy.. Whenever u come u pl call me 9843835950. I like or frankness
ReplyDelete