சாண்ட் வெஜ் அண்டு நான்வெஜ் 23/09/2015

ஆல்பம்

 கச்சா பொருட்களின் விலைகள் குறைந்தாலும்  பெட்ரோலிய  பொருட்களை குறைக்காமல் இரண்டு ரூபாய் முன்று ரூபாய் என்று குறைத்து பொது மக்கள் வயிற்றில் அடித்து ,  இந்த தில்லாலங்கடியின் காரணமாக மத்திய அரசு முப்பதாயிரம் கோடிவரை சம்பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...  மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்  நான் உங்கள் வீட்டு பிள்ளை என்று  கணீர் என்று பேசிய காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.

====
இப்போதைய டாக் அப் த டவுன்... ஸ்டாலின்   கன்னியாக்குமரியில்  பொதுமக்களை  சந்திப்பதும்... ஆட்டோ மற்றும்  ஸ்கூட்டியில் பயணிப்பதை  பேஸ் புக்கில் சிலர் வரவேற்றாலும்... சிலர் அதை பயங்கரமாக நக்கல் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. காரணம்... ஓட்டு  அரசியல் என்று  காரணம் சொல்கின்றார்கள்..

ஓட்டு அரசியலே என்றாலும் இது போல இன்றைய முதல்வர் ஜெவை  பொதுமக்களை சந்திக்க சொல்லுங்களே.... பார்ப்போம்...

ஸ்கூட்டியில் வந்தால் கூட யாரும் டெம்போ டிராவலர்  டயரை தொட்டுக்கும்பிட்டு  தரையிலேயே விழுந்து கிடப்பது போல யாரும் கிடக்கவில்லை. என்பதையும் நாம் யோசித்து பார்க்க வேண்டும்.
=======

அதே போல விஷ்ணு பிரியாவின் தற்கொலையைல் பரபரத்து கிடக்கின்றது.. தமிழகம்.. போலிஸ் உயர் அதிகாரிகள் நெருக்கதல் காரணமாகத்தான் அவர் தற்கொலை  செய்துக்கொண்டார் என்று சொல்லப்பட்டாலும் சிபிஐ விசாரனை தேவையில்லை என்று   முதல்வரே சட்டசபையில் அறிவித்துள்ளார்.. உண்மைகாரணம் வெளிவருமா?   உண்மை குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்களா? பொருத்து இருந்தான் பார்க்க வேண்டும்.
=======


23/09/1996....


இதே தேதியில் 19 வருடங்களுக்கு முன் அந்த காலையை என்னால் மறக்கவே முடியாது....


அழுதே பார்க்காத என் அப்பா உடைந்து அழுததை பார்த்தேன்...

பாண்டி ஜிப்மர் எதிரில் இருக்கும் நெஞ்சக நோய் மருத்துவமனையில் நேற்றுவரை மூன்றாம் நம்பர் பெட்டில் படுத்து வலி பொருத்து என்னோடு வேதனையோடு பேசிய என் தாய் படுத்து இருந்த படுக்கை காலியாய் கிடந்தது...

அம்மா 42 வயதில் எங்களை தவிக்க விட்டு விட்டு போய் விட்டாள்....

அவளுக்கு அப்படி என்ன அவசரம் என்று தெரியவில்லை....

நாலனா கிடைக்கும் என்று ஒரு சேர் பூ முதுகுவலிக்க கட்டிக்கொடுத்து எங்களை வளர்த்தது ....என்ன சாதாரண உழைப்பா...?

எட்டனா கிடைக்கும் என்று வெள்ளரி விதைகளை உடைத்து கொடுத்தது சின்ன உழைப்பா என்ன??

வாஷிங் மெஷின் இல்லாத காலத்தில் எங்கள் ஐவர் அப்பாவுடையதையும் உன்னுடையதையும் சேர்த்து மொத்தம் எழு பேர் உடைகளை கையால் துவைப்பது என்ன சாதாரண வேலையா?

வாஷிங் மெஷின் வந்த உடன் என் ஜட்டியை கசக்கி கட்டியே நாளாகி விட்டது...

ரேஷன் அரிசி வாங்கவும், மண்ணெண்ணை கியுக்களில் கால் கடுக்க நின்ற தினங்களை நினைத்துப்பார்கின்றேன்.
அது என்ன வறுமையை மட்டுமே பார்த்து விட்டு இறந்து விட்டாயே..??? சண்டாளி.


என் உழைப்பில் எழுபத்தி ஐந்து ரூபாய்க்கு நான் முதல் முதலாக வாங்கி கொடுத்த புடவையை கையில் வாங்கிய அந்த மகிழ்ச்சியை இனி நான் எங்கனம் காண்பேன்..

வவுத்து புருசன் தலையெடுத்து உழைத்து மானத்தை மறைக்க வாங்கி கொடுத்த புடவை ஆயிற்றே....??? 


இன்று தினமும் என்னால் உனக்கு 500 ருபாய்க்கு புடவை எடுத்து கொடுக்க முடியுமே ஆத்தா....

அதிக பட்சம் இரண்டரை ரூபாய் டிக்கெட்டில் இருந்து 20 ரூபாய் பால்கனி டிக்கெட் வாங்கி குருதிப்புனலில் இருந்து திருடா திருடா வரை எல்லா  படத்தையும்  பார்த்து தொலைத்தோமே...

ஏசி அறை தூக்கம் என்றால் என்ன வென்றே தெரியாமல் இறந்துவிட்டாயே பாவி...

கடைசி வரை என் சொந்த காசில் வாங்கிய மோட்டார் சைக்கிளில் ஏறி ஒரு ரவுண்ட் அடிக்காமலே சென்று விட்டாயேடி பாவி.

பிள்ளைகள் ஐந்து பேரில் எவர் திருமணத்தையும் பார்க்காமலே சென்று விட்டாயே??

உனக்கு தலைவலி பொருக்காது,... டீக்கடையில்  நின்று  டீ குடித்தால் அசிங்கம் என்று டீ க்கூட வாங்கி கொடுக்காமல்  அப்பா அழைத்து வருவதை  சொல்லி  சொல்லி மாய்ந்து போவாயே..?? இன்று சென்னையின் தேருவோர சுவையான கடைகள் பலது எனக்கு தெரியும்.. ஆனால் நீ  சுவைத்து  சாப்பிடுவதை பார்க்கத்தான் கொடுத்து வைக்கவில்லை..

தொலைகாட்சி விவாத மேடைகளில் நான் பங்கு பெற்றதை  பார்த்து  இருந்தால் உன் முகம் எப்படி மகிழ்ச்சியில் பொங்கி இருந்து இருக்கும் என்பதை கற்பனையில் மட்டுமே நினைத்து பார்க்கிறேன்....இன்னும் கொஞ்சம் நாள்.......... நீ உயிரோடு  இருந்து இருக்கலாம் அம்மா...


அம்மா மறைந்த இதே நாளில்தான் நடிகை சிலுக்கும் மண்ணை விட்டு மறைந்தார்


ஜாக்கிசேகர்
23/09/2015
======


 முகநுலில் பெண்களை வாடி போடி என்று அழைப்பது ஒரு மாதிரியாக இருக்கின்றது... என்றும் ....தனது கருத்து இது என்றும்.. மாற்றுக்கருத்துகள் வரவேற்பதாக எழுதி இருந்தார்..
 அதில் நிறைய பேர் கருத்திட்டு இருந்தார்கள்... மாதவன் என்ற  நண்பர்... அழைப்பது அதை  ஏற்றுக்கொள்வது  அவரவர்  நெருக்கம் சார்ந்த விஷயம் என்று மிக அழகாக சொல்லி இருந்தார்...

=======
 பெண்கள் லெக்கின்ஸ்... எல்லை மீறும் ஆபாசம் என்று குமுதம் ரிப்போர்டர்  அட்டைபடமாக சில துணி விலகும் புகைப்படங்களை பொட்டு இருக்கின்றது..  இதே  போல  வேட்டிகட்டி நடக்கும் போது காற்றில்  வேட்டி விலகினால் எல்லை மீறும்  ஆபாசம் என்று  தலைப்பிட முடியுமா? மூன்று வயது குழந்தைகள் எல்லாம்   ரேப் செய்யப்படுகின்றார்கள்.... எந்த லெக்கின்ஸ் அணிந்துஇருந்தார்கள்??
அதை விட முழுவதும் உடலை மறைந்து உடை அணிந்த  கன்னியஸ்திரிகள் ரேப் செய்யப்பட்டு  இருக்கின்றார்கள்... கிராமத்தில் இருக்கும் போது உடை பற்றிய  ஒரு எண்ணவோட்டத்தோடு வளர்க்கப்ட்டாலும், நகர பின்னனியில் உடை பற்றிய எண்ணவோட்டம் மாறிவிடுகின்றது என்பதே உண்மை.

=======

குற்றம் கடிதல் திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கும் பாரதி இயற்றிய  சின்ன சிறு கிளியே கண்ணம்மா  பாடல் இப்போதைக்கு  அமைதியான தருனங்களில் கேட்கும் பாடலாக அமைந்துள்ளது.
 
 
 
 
======
 
சென்னையின் ஸ்பிட் லிமிட் என்ன?,,
நகரத்தினுள்... 40 கிலோ மீட்டர் வேகம் என்று வைத்துக்கொள்ளுவோம்... ஆனால் ஓஎம் ஆரில் உள்ள  டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்துக்கும் எஜிஎஸ் தியேட்டர் வரை ரோடு பிரியா இருக்கும் போது.. அதற்கு எக்ஸ்பிரஸ்வே என்று பெயர் வைத்து விட்டு 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்று சொல்லி பைன் போடுவது  எந்த விதத்தில் நியாம்...  கருத்துகள் வரவேற்கபடுகின்றன... அதே  போல..பள்ளிக்கரைனை டூ துரைபாக்கம்  ரோட்டில் ஸ்பிட் லிமிட்... 60 வைக்கலாம்.. ஆனால் எல்லா இடத்திலும் 40 ஸ்பிட் லிமிட் என்று  சொல்லி போக்குவரத்து போலிசார்.. பைசா கறப்பது வருத்தமாக உள்ளது.

 
 

=======
 நான்வெஜ் 18+

My girlfriend told me to go out and get something that makes her look sexy... so I got drunk.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

8 comments:

 1. சுவையான பல செய்திகள்! தங்களுக்கு அம்மாவின் இழப்பு பெரும் துயர் தான் என்பதை அறிய முடிகிறது. என்னைப் பொறுத்தவரை ஆபாசம் என்பது அவரவர் மனதை பொறுத்து இருக்கிறது. முழுக்க உடையணிந்தவர்களைக் கூட மனதாலேயே கற்பழிக்கும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்!

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரே! தங்கள் தளத்திற்கு புதியவன்! உங்கள் எழுத்துநடை சுவராஸ்சியமாக உள்ளது! அரசியலில் ஆரம்பித்து பாடலில் முடித்தது அழகு! தங்கள் அன்னையை பற்றி நினைவு கூர்ந்த விதம் மிக மிக சிறப்பு! நன்றி

  ReplyDelete
 3. "அம்மா மறைந்த இதே நாளில்தான் நடிகை சிலுக்கும் மண்ணை விட்டு மறைந்தார்"

  This is comment or "KUSUMBA"

  ReplyDelete
 4. அம்மா , உங்கள் அனைவரையும் அன்பும், பண்பும் கொண்ட‌
  மனிதர்களாகவும் மாற்றிச் சென்றிருக்கிறார்.

  உண்மையான அம்மா.

  ReplyDelete
 5. தாய் மறைந்த தினத்தைப் பற்றி உணர்வுபூரமாக எழுதிவிட்டு சிலுக்கு மறைந்த தினத்தை நினைவு படுத்தியது நெருடலாகவே உள்ளது...

  ReplyDelete
 6. Not only in Chennai....Bangalore is also has 40KM speed. Who drives in 40 ? My bike reach 60KM speed in 6 sec. This is one of the money making rules for traffic police.... Thief can beat / threaten you and take the money from you.... But they will show the rules....

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner