எனக்கு நடிக்க பிடிக்கும்….
ஆனால் பள்ளி காலத்திலோ அல்லது நண்பர்களின் நாடகங்களிலோ.. இதுவரை நான் நடித்தது இல்லை… அதனால் பிறவி நடிகன் அல்ல…
கல்லூரியில் பணி புரிந்த போது மாணவர்கள் குறும்படங்களில் நடித்து இருக்கிறேன்.
அதன் பின் குறும்படங்களில் நடிக்க வாய்பு வந்த போது…நான் ரொம்பவும் பிசியாக ஊடகங்களில் பணி புரிந்துக்கொண்டு இருந்தேன்..
ஒரு நாள்… எழுத்தாளரும், இயக்குனருமான நண்பர் ஜெகன்… தான் உதவிஇயக்குனராக பணியாற்றும் சிகரம் தொடு படத்தில் ஒரு பத்திரிக்கையாளர் வேடம் இருக்கின்றது அதை செய்யுங்கள் என்று அழைத்தார்….
காலையில் இருந்து கொடுத்த நான்கு வரி டயலாக் பேப்பரை கரைத்து குடித்து மனப்பாடம் செய்தும் எனக்கு பிழையில்லாமல் நடிப்போம் என்ற நம்பிக்கை வரிவில்லை.
பாத்ரூமில் போய் வெட்கம் விட்டு பேசி பார்த்தேன்… நான்கு ஐந்துமுறை பேசி பார்க்க சரியாக வருவது போல தோன்ற விட்டு விட்டேன்.. மாலை சைதாப்பேட்டையில் ராஜ் தியேட்டருக்கு பக்கத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் அந்த வங்கி காட்சியை எடுத்தார்கள்…
இயக்குனர் கவுரவ்வை நான் உலக படவிழாக்களில் பார்த்து இருக்கின்றேன்..
அதன் பின் அவரை சிகரம் தொடு படப்படிப்பில்தான் சந்தித்தேன்…தைரியமாக அந்த காட்சியில் நான் நடிக்க காரணம் இயக்குனர் கவுரவ் அவர்கள்தான்.
இதற்கு முன் எத்தனையோ படங்களில் தலை காட்டி இருக்கின்றேன்.. ஆனால் அது நான் தான் என்று நானே நினைக்கும் முன் திரையை விட்டு என் நிழல் பிம்பங்கள் கலைந்து போய் இருக்கின்றன…
ஆனால் முதல் முறையாக நான் டயலாக் பேசி நடித்தது சிகரம் தொடு படத்தில் தான்… அது மட்டுமல்ல… அந்த படத்தில் எனது சொந்த குரலையே டப்பிங் கொடுத்ததும் வாழ்வில் மறக்க முடியாதது…
முதல் முறையாக என் வாழ்க்கையில் நான் பேசி நடித்த சிறிய காட்சிக்கு சொந்த குரலில் டப்பிங் பேசியது என்னை பொருத்தவரை பெரிய விஷயம்.. அதற்கு காரணம் இயக்குனர் கவுரவ் அவர்கள்தான்…
அதன் பின் நான் , ஜெகன், இயக்குனர் கவுரவுடன் ,கதை விவாதங்களில் ஈடுபட்டு இருக்கின்றோம்.
தமிழ்சினிமாவில் என் நிழல் பிம்பத்துக்கு உயிர் கொடுத்த எனது நண்பரும் இயக்குனருமான கவுரவிற்கு இன்று பிறந்தநாள்…
இன்னும் அவர் நிறைய சாதனைகள் தமிழ் சினிமாவில் படைக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்.
ஜாக்கிசேகர்.
05/08/2015
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:
Post a Comment