யுவகிருஷ்ணா
தமிழ் டைப்பிங்  தெரியாம பிளாக் எழுத வந்தவன்  நான்….

 ஒரு போஸ்ட் எழுத தடவி தடவி அடிச்சி முடிக்க மூன்று மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரம் ஆகும்..

 அந்த நாட்களில் வலைபதிவுகளில்  லக்கி செம பேமஸ்… யாருடா இந்த ஆளு… என்று கவனித்த  நாட்கள் அவை…லக்கி அளவுக்கு வளர வேண்டும்… ஒரு பதிவர்  சந்திப்புக்கு  சென்றால் என் பெயர் தெரியவேண்டும் என்ற அளவுக்கு ஒரு ஆசையும்  வேகமும் இருந்தது.

கொஞ்சம் என் பெயர்  வெளியே தெரிய ஆரம்பித்தது….

ஆனால்  சென்னையில் வலைப்பதிவர்கள்  அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள் என்று தெரிந்த போது நான் கண்டிப்பாக லக்கியை  சந்திக்க வேண்டும் என்று  நினைத்துக்கொண்டேன்.

ஒரு பதிவர் சந்திப்பில் நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டோம்.. சிகரேட்டை உதட்டுக்கொடுத்துக்கொண்டு   ஏன் தலைவரே… உங்களுக்கு கடவுள் நம்பிக்கை  உண்டா?- என்று ஆச்சர்ய விலகாமல் கேட்டார்…

 அப்பன் காசுல சாப்பிடும் போது கடவுள் நம்பிக்கை இல்லை.. என் காசுல உழைச்சி  சாப்பிடும் போது கடவுள் நம்பிக்கை வந்துடுச்சின்னு சொன்னேன்…

எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்க  காரணம்…. திமுக சார்பாக பிளைன்டாக வாதாடாமல் லாஜிக்கா தன் கருத்தை எடுத்து வைப்பார்… அதே போல திமுக பக்கம் தப்பு இருந்தாலும்… ஆமாம் எங்கள் பக்கம் தவறு இருக்கின்றது என்று ஒத்துக்கொள்வார்....
இப்போதாவது பரவாயில்லை…அப்போது எல்லாம்  திமுகவை யார் எது சொன்னாலும்  பாரபட்சம் இல்லாமல் வெச்சி செய்வார் லக்கி.

நிறைய  இடங்களில் சைலன்டாக எனக்கு உள்குத்துகளையும்  வைத்து இருக்கிறார்…  உதாரணத்துக்கு என்ஆர்ஐக்கு  ஓட்டு வேண்டுமா ? வேண்டாமா? என்ற  கேள்வி மூலம் எனக்கு  கும்மாங்குத்து விழுந்தது.. அதனால் சில  நண்பர்கள் எதிரிகளாக அவர்களாகவே மாறிபோனார்கள்.

அதே  போல சில சந்திப்புகளில்  எப்படி சேமிக்க வேண்டும்  என்று   சொல்லி கொடுத்து இருக்கிறார்…

கடற்கரை பதிவர் சந்திப்புகளில்   தலைவரே என்றுதான் என்னை விளிப்பார்… அவரோடு பேசிக்கொண்டு இருப்பது மிகுந்த சுவாரஸ்யம்மிக்கதாக இருக்கும்.

 நிச்சயமாக  அது  ரம்யமான நாட்கள் என்பதில் சந்தேகமில்லை..… மீண்டும் அது போன்ற கடற்கரை சந்திப்புகள்  மீண்டும் மாதத்துக்கு  ஒரு முறை நடக்கவேண்டும்…என்பதே என் ஆசை.

வலைபதிவர்  சமுகத்தை பற்றி பேசுகையில்  லக்கி என்கின்ற யுவகிருஷ்ணாவை தவிர்த்து  பேசமுடியாது…

எனது நண்பரும்   வண்ணத்திரை பத்திரிக்கையின் ஆசிரியருமான   லக்கி என்கின்ற யுவகிருஷ்ணாவுக்கு  இன்று பிறந்தநாள்….

 இன்னும் மேலும் பல சிறப்புகள் அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்…

+யுவ கிருஷ்ணா

தகவலுக்காக ...
புகைப்படம்  சென்னை போட் கிளப்பில் நடந்த கருத்தரங்கில் எடுத்தது.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

 1. வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்!

  ReplyDelete
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இவருடைய எழுத்துக்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும்!

  ReplyDelete
 3. Its nice to know that you ppl (tamil bloggers) having get-togather. Definetely it ll be helpful for each one of you.

  ReplyDelete
 4. இந்த ஆண்டு வலைப்பதிவர்திருவிழா 11.10.2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது . வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறோம்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner