Nusrat Fateh Ali Khan birthday | இன்று நுசுரத் பதே அலிகான் அவர்கள் பிறந்த தினம்…




இன்று பாகிஸ்தான் பாடகர் நுசுரத் பதே அலிகான் அவர்கள் பிறந்த தினம்…
இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையாக இருந்து பிரிந்து மூன்று மாதம் கழித்து பாகிஸ்தான் பஞ்சாபில் பிறந்தவர்…

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மட்டும் நுசுரத் பதே  அலிகானை அவரது வந்தே மாதரம் இசை ஆல்பத்தில் பாட வைக்காமல் இருந்து இருந்தால்.. என்னை போன்ற இசையறிவு அதிகம் இல்லாத கடலூர் கார பயலுக்கு இவரை பற்றி தெரியாமலே போய் இருக்கும்..

கவாலி இசையின் ராஜா என்று  இவரை இசை உலகம் போற்றுகின்றது…ஹைபிட்சில் கவாலி இசையில் பாடுவதில் வல்லவரான இவரை.. 50 வது பொன்விழா ஆண்டில்  ரகுமான் வெளியிட்ட இசை ஆல்பத்தில் நுசுரத்தின் பங்கும் இடம்  பெற்றது..

வழக்கம் போல  தானும் படுக்க மாட்டான்  தள்ளியும் படுக்கமாட்டன் என்பது போல நுசுரத் பதே அலிகானை  பாட வைத்தற்கு எதிர்பு கிளம்பியது…
 வந்தே மாதர்ம் இசை ஆல்பத்தில் "Gurus of Peace" பாடலை ரகுமானும் நுசுரத்தும் சேர்ந்து பாடி கலக்கினார்கள்….

வந்தே மாதரம் இசை ஆல்பமான மா துஜே சலாம் தயாரிப்பின் போது முதல் போடும் சோனி நிறுவனம் சொன்னது.. யாராவது பிரபலமானவரை உங்களோடு இணைந்து பாடச்செய்தால்.. இன்னும் இந்த ஆல்பம் சிறப்பாக இருக்கும்  அது மட்டுமல்ல.. இந்திய இசை உலகம் எங்கும் கூடுதல் கவனம் பெறும் என்றதோடு… டைட்டானிக் படத்தில்   உச்சஸ்தாயில் பாடும் செலின் டியோன் பெயரை   சோனி பரிந்துரைத்தது.. ஆனால் ரகுமான் அந்த பெயரை நிராகரித்ததோடு… எங்கள் தோழமை தேசமான பாகிஸ்தானில்  உள்ள பாடகர் நுசுரத்  பதே அலிகான் பாடினால் சிறப்பாக இருக்கும் என்றதோடு…தண்ணியும் எண்ணெயும் எப்போதும் ஒன்று சேராமல் எதிரும் புதிருமான   தேசத்தில் இருந்து முதல் முறையாக இரண்டு குரல்கள்  ஒன்றாக இணைந்தன.. அந்த பாடல்தான்… வந்தே மாதரம் ஆல்பத்தில் இடம் பெற்ற "Gurus of Peace"
 கருத்தாம்மாவில் வரும் போறாளே பொண்ணுதாயி பாடலை கொஞ்சம் நாகசு செய்து மாற்றி இருந்தார்…


பாடலின் துவக்கத்திலேயே  நுசுரத்  பதே அலிகான் கலக்கி இருந்தாலும்..2 ,27 இல் பின்னி இருப்பார்… 




 முதல் முறையாக  இந்த பாடலை கேட்ட போது இவர் யார் என்று அறிந்துக்கொள்ளும் ஆர்வம் வந்ததோடு புதிய குரல்….
பிறகு இணையத்தில் தேடி இவரை பற்றி அறிந்துக்கொண்டேன்…  வந்தே மாதரம் இசை ஆல்பம் வெளியான  தினம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி… சரியாக  ஐந்து நாட்கள் கழித்து கிட்னி செயல் இழப்பு காரணமாக இறந்து போனார்..


இந்தி பாடல்களில் அவர் பிரபலம்… ஆனால் கடைகோடி தமிழனுக்கு Nusrat Fateh Ali Khan அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு ரகுமானுக்கு உண்டு
உலகின் நம்பர் ஒன் தேடுதல் இயந்திரம் கூகுள்..  இவரது புகைப்படத்தை தேடுதல் இயந்திரத்தின் முகப்பில் வைத்து இவருடைய பிறந்த தினத்துக்கு மரியாதை செய்துள்ளது

இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள் ‘
Nusrat Fateh Ali Khan ji



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner