பாபநாசம் திரைப்பட கிளைமேக்ஸ் சர்ச்சை..

#papanasamclimax


மொள்ளமாறி ,பொறம்போக்கு, ஊரை அடிச்சி உலையில போடுறவன் , கஞ்சா கடத்தறவன், கட்டபஞ்சாயத்து பண்ணறவன்கவுரவகொலை செய்யறவன்.. நல்லது செய்யறேன்னு ஆட்சிக்கு வந்து நாட்டை சொரண்டுற அரசியல் வாதிங்க...


  மேல சொன்ன எல்லாருமே செஞ்ச தப்பை மறைச்சிட்டு  எந்த கவலையும் இல்லாம இயல்பு வாழ்க்கையிலயும் சமுகத்துலயும் மரியாதையா சுத்திக்கிட்டு தான்டா இருக்கானுங்க...


கொய்யால  எத்தனை நாளைக்குதான்டா... நேர்மையா இருக்கறவன்  தெரிஞ்சோ தெரியாமலோ...ஒரு தப்பு செஞ்சிட்டா.... குற்ற உணர்வுல குமைஞ்சி, தூக்கம் வராம, அவன் மட்டும் சட்டத்தை காப்பாத்த அவனே போய் உண்மைய சொல்லி  ஜெயிலுக்கு போவதா எத்தனை படத்துலடா காட்டுவிங்க. வெண்ணைங்களா...????

அப்படி அறம் செத்து போகாமல்  இருக்கும் சூழலில்  நாம் நாடும் நாட்டு மக்களும் வாழ்ந்துக்கொண்டு இருந்தால்...  சட்டத்தை ஏமாற்றிய சுயம்புலிங்கம் செஞ்சது தப்புன்னு வாதாடலாம்.. அறம்  சாவக்கூடாதுன்னு சீறலாம்...

ஆனா நம்ம ஜனநாயக  நாட்டுல என்ன நடந்துக்கிட்டு இருக்கின்னு எல்லாருக்கும் தெரியும்...

நேர்மையான சுயம்புலிங்கம்  தன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லுவான்.. இதுவே நம்ம பொண்ணு செத்து ஐஜி பையன் உயிரோடு இருந்தா அதிகார வர்கம் தன் பையனை காப்பாற்ற  எல்லா வேலையும் செய்வாங்க என்று சொல்லுவான்...

நாட்டுல அறம் செத்து நாளாவுது பாஸ்....  அதனால் பாபநாசம் கிளைமாக்சுக்கு நீலி கண்ணீர் வடிக்காதிங்க...சினிமாவுலயாவது நல்லவன் அக்மார்க் நேர்மையோடு இருக்காம குறைந்த பட்ச நேர்மையோடு இருக்கட்டுட்...

அதனால  நல்லவனா இருக்கறவனுக்கு மட்டும் மனசாட்சி மயிறு இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லை...

அது சரி என்பதால்தான்  நான்கு  மொழிகளிலும் திரிஷ்யம் படத்தை மக்கள் கொண்டாடுகின்றார்கள்..

ஐ லவ் #பாபநாசம் கிளைமாகஸ்...

ஐ லவ் #சுயம்புலிங்கம்என்கின்றதகப்பன்கமல்

இவன்
ஜாக்கிசினிமாஸ்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner