சென்னை தேவி தியேட்டர் பின்புறம் இயங்கும் 40 வருட பாம்மே லஸ்சி கடை
சென்னை தேவி தியேட்டரில் டிக்கெட் எடுத்து அரைமணி நேரத்துக்கு மேல்  படம் பார்க்க காத்து இருந்த  அத்தனை  சென்னை ரசிக பெருமக்களுக்கு   பரிட்ச்சயமான கடை எதுவென்றால் அது  பாம்பேலெஸ்சி கடைதான்…

பதினைந்து 20வருடத்துக்கு முன்….ஒரு மணி ஷோவுக்கு 12 45க்கு சைக்கிள் டோக்கன் போட்டு விட்டு ஒரு லெஸ்சிஅடித்து விட்டு படத்துக்கு போனால் வயிறு கும் என்று இருக்க …பசியே எடுக்காது… படத்தையும் பசி  நினைப்பே இல்லாமல்  ரசிக்கலாம்..  சென்னையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கொட்டும்   அத்தனை சினிமாரசிகர்ளுக்கும் இந்த பாம்பே லெஸ்சி கடை அத்துப்படி.

பாம்மே லெஸ்சி கடை  40 வருடமாக தேவி தியேட்டர் பின்புறம் இயங்குகிறது… பாம்பே  லெஸ்சி என்பது கடை ப்பெயர்  என்றாலும் இங்கே விற்கப்படும் சூடான சமோசாவும் கார ச்சட்னியும் அசத்தல்ரகம்  அது மட்டுமல்ல.. கேரட் அல்வா, பாசந்தி ,குலோப்ஜாமூன். ஜிலேபி போன்றவைற்றின் சுவைக்கு ஈடுஇணையே இல்லை என்று சொல்லாம்.
 


தேவி தியேட்டருக்கு படத்துக்கு செல்லும் முன்   இங்கு வந்து எதையாவது கொரித்து விட்டு செல்லாத ரசிகர்களே இல்லை எனலாம்…
  இந்த கடையின் ஓனர் பாலகிருஷ்ணன் யாதவ்… 1972 ஆம் ஆண்டு  தன் தாய் தந்தையரால் … தொடங்கப்பட்டது என்கின்றார்.


முன்பு எல்லாம்  மவுன்ட் ரோட்டில் இருந்து தேவி தியேட்டர் வழியாக எல்லிஸ் ரோட்டுக்கு செல்லலாம்…. அதனால் அந்த பக்கம் செல்பவர்கள் அத்தனை பேரும் பாம்பே லஸ்ஸியில்  வாகனத்தை நிறுத்தி லெஸ்சி சமோசாவை ருசித்து  ஒரு பிடி பிடிப்பார்கள் … ஆனால்  அந்த வழியில் தற்போது  பொதுமக்கள் யாரையும் தேவி தியேட்டர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை   

அதனால் முன்னை விட பாம்மே லெஸ்சி கடையில் கூட்டம் குறைவாக இருந்தாலும்… மெயின்  ரோட்டில் இல்லாமல் ஒதுக்குபுறமாக இருக்கும் இந்த கடையில்  மாலைவேளையில் இக்கடையில் கிடைக்கும் சுவையான தின்பண்டங்களுக்காகவே குடும்பம் குடும்பமாக வந்து ருசித்து விட்டு செல்வதில்தான் பாம்மே லெஸ்சி கடையில்  வெற்றியின் சூட்சமம்   அதன் 40  ஆண்டுகால ருசியும் அடங்கியுள்ளது.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
EVER YOURS...
 

2 comments:

  1. வணக்கம் நண்பரே!! பாம்பே லெஸசி! அருமையான தகவல்கள்!! ஆனால் நான் சென்னை வந்தது கிடையாது!! நன்றி

    அன்புடன் கரூர்பூபகீதன்

    ReplyDelete
  2. jackie , thiruvallikeni makkal anaivarukkum therindha famous kadai ithu ippavum antha pakkam vanthal neram kaalam pakkamal oru round adichuttu thaan porathu

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner