இந்திய சினிமாவின் பிரமாண்டம் என்ற அடை மொழி…. மூன்று வருடகால தவம்.. 250 கோடிக்கு மேல் ஏப்பம் விட்டு கிடக்கும் திரைப்படம்... அப்படி என்றால் அந்த படத்தை எப்பை சோப்பையாக எடுக்க முடியுமா??? அதே போல மொக்கையாகவா அந்த படத்துக்கு விளம்பரம் செய்வது??? அதனால் பாகுபலி படத்துக்கான விளம்பரம் அதிகம் என்றால் அது மிகையில்லை.. அதே போல பாகுபலி படக்குழுவினர் மிக அழகாக ரசிகர்களுக்கு டெம்ட் ஏற்றினார்கள் என்றே சொல்ல வேண்டும்… இந்த அளவுக்கு பிராண்டிங் செய்ததே இந்த படம் எந்த மாதிரி எதிர்வினை ஆற்றினாலும் படம் ஓடி விட வேண்டும் என்ற ஒரு கார்பரேட் கால்குலேஷன்தான்…
‘
ராஜமவுலிக்கு செக்கு எது சிவலிங்கம் எது என்று கணிக்க முடிகின்றது.. காரணம் சில வருடகாலம் எடிட்டிங் டேபிளில் வயிற்று பிழைப்புக்கு தவம் இருந்து இருக்கின்றார்…. அதனால் எந்த இடத்தில் ரசிகனை கட்டிபோட வேண்டும் என்று தெரிகின்றது..
அதனால்தான் ஹாட்ரிக் வெற்றி சாத்தியமாகி இருக்கின்றது.
பாகுபலி போன்ற பிரமாண்ட புராஜெக்ட்டை கையில் எடுக்கும் போது அவரிடம் இரண்டு கேள்விகள் முன் வந்து இருக்க வேண்டும்… வித்தியாசமான கதையா? அல்லது இந்திய மனங்களில் ஆழ பதிந்து இருக்கும் கதையா?? புதிய கதையை சட்டென கிரகித்து கொள்ள முடியாது…மன ஆழத்தில் பதிந்த கதை என்றால் பிரச்சனை ஏதும்இல்லை…இன்னும் சொல்லபோனால் படம் இன்னும் மக்களுக்கு நெருக்கமாக இருக்கும்..
சரி பிரமாண்ட எபிக் திரைக்கதை என்றால் ?? உதாரணத்துக்கு மகாபாரதம்.... என்னதான் பிரமாண்டமாக ராஜமவுலி எடுத்தாலும் டிடி தொலைகாட்சியில் கழுவி கழுவி ஊற்றிய கதை… அதனால் கொஞ்சம் மகாபாரதத்தை நகாசு செய்து பாகுபலி என்ற கற்பனை எபிக் கதையை கையில் எடுத்துக்கொண்டார்..… அதனால் சேப்ட்டியாக தப்பித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
தமிழில் ராவணன் திரைப்படம் என்னவாகியது என்பது எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் தளபதி ஓடியது… கொஞ்சம் மகாபாராத சாயல் என்றாலும்… பெரிய ஸ்டார் காஸ்ட்.. ஆனால் ராவணன் ஐஸ்வர்யா தவிர்த்து பெரிய ஸ்டார் காஸ்ட் இல்லை… தெரிந்த கதை… என்பதால் பெரிய சுவாரஸ்யம் இல்லை… ஆனால் தளபதியில் ரஜினியை எந்த அளவுக்கு வேலை வாங்கி இருக்கின்றார் பிரேமுக்கு பிரேம் பார்த்து ரசிக்க ரசிகர்கள் இருந்தார்கள் ரசித்தார்கள்…ஆனால் விக்ரமுக்கு அப்படியான ரசிக ஜனங்கள் இல்லை…
அது போன்ற பிரச்சனை தன்படத்துக்கு வந்து விடக்கூடாதுஎன்பதில் உறுதியாக இருந்தார்… அதனால் சின்னதாக மகாபாரதத்தை நகாசு செய்து பாகுபலி என்ற கற்பனை கதையாக்கி விட்டார்… வித்தியாசம் செய்கின்றேன் என்று ராஜமவுலி நினைத்து இருந்தால் மண்ணை கவ்வி இருப்பார்… வித்தியாசமான படம் வேண்டும் என்று கேட்கும் நம்மவர்கள் வித்தியாசமான கதைகளன் உள்ள படத்தை பெரிய அளவுக்கு வெற்றி பெற வைத்ததில்லை..
அதனால் ராஜமவுலி சேப்ட்டியாக டிராவல் செய்து இருக்கார் என்றே சொல்ல வேண்டும்…
மேலும் வாசிக்க. இங்கே கிளிக்கி படிக்கவும்“
==============
இந்த படத்தை திருப்பதியில் போய் பார்த்தேன்.,. காரணம் அவர்கள் சொந்த மண்ணில் இந்த படத்துக்கு எப்படி ஒரு வரவேற்பு இருக்கும்..?? எந்த அளவுக்கு அந்த படத்தை கொண்டாடுவார்கள் என்று பார்க்கும் ஆவலில் திருப்பதியில் ஜெய்ஷாம் தியேட்டரில் பார்த்தேன் திருப்பதியில் மட்டும் 12 தியேட்டர்களில் ஓடுகின்றது...
படம் பார்க்க போன பயண அனுபவ வீடியோ பதிவு கீழே..... வீடியோ பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்....
திருப்பதியில் முதல் நாள் ரசிக கொண்டாட்டங்களை காண இந்த வீடியோவை பாருங்கள்.
வழக்கம் போல படத்தின் வீடியோ விமர்சனம். ஆனால் ஒரு திரைப்படத்துக்காக மெனக்கெட்டது இதுவே முதல் முறை.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
Jackie
ReplyDeleteYou have invested a lot in reviewing this movie. It shows. Keep it up.
Next time, when there a big hit movie get released, please add audience reaction from others to your clip. It will improve the reach of your reviews.
Excellent reviews & videos ji
ReplyDeleteஅருமை
ReplyDeleteநல்ல விமர்சனம் அண்ணா.
ReplyDelete"அருமையான விமர்சனம்" வாழ்த்துக்கள்.
ReplyDelete