மாரி…..
புதுப்பேட்டை படத்திற்கு பிறகு ரவுடி கேரக்டர் மாரி படத்தில் தனுஷ் செய்து இருக்கின்றார்… அவர் கேரியரில் மறக்க முடியாத படம் புதுப்பேட்டை என்றால் அது மிகையில்லை… தனுஷ் என்ற நடிகனை வெளிக்கொண்டு வந்த படம்… ஆனால் மாரி அந்த அளவுக்கு ராவான ரவுடி சப்ஜெக்ட் இல்லை.. காமெடி என்டர்டெய்னர் என்று முன்பே சொல்லிவிட்டார்கள்…
====
மாரி படத்தின் கதை என்ன?
சாதாரணமாக புறா பந்தயத்தில் கலந்துக்கொண்ட மாரி எப்படி பின்னாளில் ரவுடியாக பரிணமிளிக்கின்றான் என்பதும் அவன் வாழ்வில் காதேலோடு குறிக்கிடும் பெண்ணை அவன் காதலித்தானா? அல்லது அந்த காதலுக்காக இரண்டு மணி நேரத்தில் ரவுடி தொழிலை தூக்கி கடாசி விட்டு உத்தமனாக மாறினானா? இல்லையா என்பதே மாரி படத்தின் கதை.
=
பாலாஜி மோகனின் முந்தைய இரண்டு படங்கள் மென்மையான காதல் படங்கள்… அப்படியான இயக்குனர் ரவுடிசப்ஜெக்ட் எப்படி எடுப்பார் ???என்ற ஆர்வம் இண்டஸ்ட்ரி முழுக்க எல்லோருக்கும் இருந்தது… ஆனால் நன்றாகவே பக்கா கமர்ஷியல் படத்தை எடுத்து இருக்கின்றார். ஆனால் கதை சுவாரஸ்யமில்லாத வழக்கமான கதை. ஆனால் இதில் புதுமை என்வென்றால் புறா ரேசை பின்புலமாக வைத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார்..
பிரேமுக்கு பிரேம் ரஜினி சாயல் தெரிகின்றது… படத்தின் கதையே பாட்ஷா படத்தை நினைவு படுத்தி தொலைக்கின்றது. ஆனால் ரஜினி போல ஒரு கமர்ஷியல் ரூட்டுக்கு வர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றார்.
தனுஷ் ஒரே ஷாட்டில் நடனம் ஆடுகின்றார்..
மேலும் வாசிக்க.... இங்கே கிளிக்கவும்.,..
மாரி வீடியோ விமர்சனம்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
விமர்சனம் நன்று...
ReplyDeleteபடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்கிறார்கள்.
இங்கு பார்த்தவர்கள் எல்லாம் மரணமொக்கை என்கிறார்கள்...
இன்று பார்க்கணும் தனுஷுக்காக....