cycle light Dynamo | கால ஓட்டத்தில் காணாமல் போனவை... சைக்கிள் லைட்… டைனமோ, ( பாகம் 29)


சைக்கிள் லைட்… டைனமோ,
இன்றைக்கு சென்னை தெருக்களில் சைக்கிள்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது.  பத்து வருடங்களுக்கு சென்னையில் சைக்கிளில் சுற்றி இருக்கிறேன்..
 


 வடபழனியில் இருந்து அண்ணா நகரில் வள்ளியம்மாள் கல்லூரியில்  படித்த  காதலியை தினமும் சைக்கிளில் சென்று சந்தித்து விட்டு வருவேன்..

வளசரவாக்கம்  திருநகர் அனெக்சில் இருந்து   மோட்சம் தியேட்டர்  , தேவி,  காசினோ மெலடி என்று சுற்றி இருக்கிறேன்..     ஆனால் அந்த கணங்களை இன்று நினைத்து பார்த்தால்  வியப்பாக இருக்கிறது... கருவேப்பிலை கொத்தமல்லி  வாங்கவே பைக்கும் காரும்  அத்தியாவசியமாகிவிட்டன...


2003 இல் ஒரு பைக்  வாங்கிய போது   எனது  சைக்கிளை எனது உறவுக்காரரிடம் கொடுக்க அதனை  அவர்  தொலைத்து விட்டார்…
இன்றுவரை அந்த சைக்கிளை நான் மிஸ் செய்கிறேன்… அப்பா காசில்   வாங்காமல் என்  சொந்த உழைப்பில்  வாங்கிய சைக்கிள்.. அப்பா காசில் படித்து உடனே 20,   ஆயிரம் சம்பளம்  வாங்கும் அடுத்த தலைமுறையினருக்கு அந்த வேல்யூ தெரியாது என்பதே நிதர்சனம்..

 அழகிய தியே படம் எனக்கு ரொம்ப பிடிக்க காரணம் பிரசன்னா வைத்து இருக்கும் சைக்கிளை  வறுமை காரணமாக விற்று விட...  அவன் கண் எதிரிலேயே அந்த  சைக்கிளை வாங்கியவன்  சைக்கிள்    சீட்டின்மேல் ரெண்டு போடு போட்டு எடுத்து செல்வான்...

 தமிழர்கள்  வாழ்வில் அவர் அவர்களின் சொந்த சைக்கிள்கள் ஏற்ப்படுத்திய டேர்னிங் பாயிண்டுகள்  ஏராளம்...


1980களில் கொஞ்சம் கொஞ்சமாக மின்சார விளக்குகள் அத்தி பூத்தது போல கிராமத்தில் இருக்கும் வீடுகளில்  தோன்ற ஆரம்பித்தன… 

 மின்சார விளக்கு என்   வீட்டில் முதல் முதலாக எரிந்த போது.. ஷாருக்கான் நடித்த  சுவதேஷ் இந்தி படத்தில்   முதன் முதலாக  நீர் மூலம் மின்சாரம் தயாரித்து லைட் எரியும் போது பொக்கை வாய் கிழவி பிஞ்சிலி என்று சந்தோஷத்தோடு சொல்லுமே அது போல நானும் மகிழ்ந்து இருக்கிறேன்

ஏன் இந்த  அளவுக்கு விவரிக்கின்றேன் என்று சொன்னால்… மின்சாரம் அரிதான நாட்கள் அவை… 

இன்று எங்கள் ஊர் கூத்தப்பாக்கத்தில் எல்லோருடைய  வீட்டிலும் மின்சாரம் உள்ளது…..ஆனால் அன்றைய  காலத்தில்  மின்சாரம் சாத்தியமில்லாத காலம்…

சைக்கிளில்  லைட் இருக்க வேண்டும் என்பது விதி… இப்போது  ஹெல்மெட் பிடிப்பது போல அப்போது பிடித்துக்கொண்டு இருப்பார்கள்… சைக்கிளில் ஏன் லைட் இருக்க வேண்டும்..??… காரணம்…. கருமையான நிறத்துக்கு சொத்தக்காரனான என் போன்ற ஆட்கள் .. அம்மாவாசை இருட்டில் நடந்து செல்லும் போது    சைக்கள் ஓட்டுபவன் மோதிவிடக்கூடாது என்பதற்காக… 

அதே  போல சைக்கிள் ஓட்டுபவனுக்கு பள்ளம் மேடு தெரியவேண்டும் என்பதற்காக.. என்போல  ஆட்கள் தெரியவேண்டும் என்பதற்காக..
வேகமாக வரும் லாரிக்கு  இரவில் சைக்கிளில் லைட் எரிந்தால்தான்  ரோட்டில் இருந்து ஒதுங்கி செல்வான்.. சைக்கிளில் லைட் இல்லையென்றால் உடன் சிவலோக பதவிதான்.

அக்காலத்தில் சைக்கிளும் டைனமோவும் தமிழ்கர்கள் வாழ்வில் பின்னி பினைந்தவை...

ஆனால் சைக்கிளில்  லைட் எறிய வேண்டும்… சைக்கிளில்  லைட் இல்லையென்றால் போலிஸ் பிடித்து வைத்துக்கொள்வார்கள்.. பைன் கட்ட சொல்வர்கள்… 
கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்..


 நீதிபதி  கேட்பார்.. சைக்கிளில் லைட் இல்லாமல் சென்றாயா?
ஆமாங்க ஐயா..
50 ரூபாய் அபராதம்
அபராதத்தை கட்டி விட்டு வந்தவர்கள் நிறைய பேர்…

 பிரிட்டிஷ்காலத்திய சைக்கிளை  சில முதியர்வர்கள் எண்ணை போட்டு துடைத்து பள பள வென்று வைத்துஇருப்பார்கள்… அதை விட ஹேன்டில் பாரிலேயே   காற்று அடிக்கும் பம்பையும் வைத்து இருப்பார்கள்.


 அதன் முன் பக்கம் சிம்னி விளக்கு போல இருக்கும் அதன் உள் இருக்கும் லைட்டில்  விளக்கு எரியும்… நான்  சொல்லும் இந்த சைக்கிள்  லைட்டுகள்  பிரிட்டிஷ்  இந்தியாவில்  கோலோச்சிக்கொண்டு இருந்தன என்றால்  அது மிகையில்லை.. 
அதன் பின் டைனமோ  லைட்டுகள் வந்தன.

சைக்கிள் முன் பக்கம் லைட்டுக்கு மின்சாரம் வேண்டும் அல்லவா??? அது.. சைக்கிளின்  பின் பக்கம் இருக்கு மில்லர் டைனமொவில் இருந்து செல்லும்.

அது  மெல்லிய ஒயர் மூலம் முன் பக்கம் இருக்கும்  சைக்கிள்  லைட்டுக்கு செல்லும்… அந்த ஒயரை ஹேண்டில் பாரில் கொடி போல  சுற்று முன்பக்கம் எடுத்து செல்வார்கள்..

அவசரத்துக்கு முன் பக்கம் ஹேண்டில்  பாரில் உட்காந்து சென்றால்  சூத்தில்  ஒரு மாதிரி உறுத்தி தொலையும்…

 அதன் பின் முன்பக்க வீலில் டைனேமோ செட் செய்த  சைக்கிள்களும் உண்டும்…

 பின் பக்க  முன் பக்க டயரில் ஒரு வறும்பு உண்டு… டைனமோ சுத்தும் போது ஊஊஊஊஊர் என்று ஒரு சத்தம் வந்துக்கொண்டே இருக்கும்...

 டைனமோ லிவரை இழுத்தால் டைனமோ  சக்கரத்தில்  போய்  ஒட்டிக்கொள்ளும்…சைக்கிள் சக்கரம் சுத்த சுத்த டைனமோ சுற்றி அதில் உற்பத்தியாகும் மின்சாரம் மூலம்  சைக்கிளின் முன் பக்க லைட் எரியும்…  

 தனியாக சென்றால் பிரச்சனை இல்லை டபுள்ஸ் வைத்து ஓட்டும் போது டைனமோவும் சுற்றும் போது சாப்பிட்ட சோறு எல்லாம் கண் எதிரில் எரிந்து   போகும்...சீத்து போத்து என்று  இரைத்து தள்ளும்.. 

சேற்றில் இறங்கி ஏறினாலோ.. மழைகாலத்திலோ  டைனமோ சுற்றால் டபாய்க்கும்… சில நேரத்தில் டைனமோ தலைபகுதியில் ஒரு  சின்ன  கேப் போட்டு விட்டால் இன்னும்  டயரில் படிந்து மின்சாரத்தை அதிகபடியாக தயாரிக்கும்..


கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலிஸ் ஸ்டேஷன்  1984வரை என்றுநினைக்கிறேன்....  விஸ்டம் பேக்கரி அருகே இருந்தது… அங்கே போகும் போதே சைக்கிள்ல லைட் இல்லை என்றால்  போலிஸ் ஸ்டெஷன் வாசலில் இறங்கி தள்ளி செல்ல  வேண்டும்… 

கொடுமை என்னவென்றால் இது போன்ற காமெடிகள் சுதந்திர இந்தியாவில் பிரிட்டிஷ் சென்ற பிறகும் நடந்ததுதான்  பெருங்கொடுமை…


போலிஸ்காரர் வாசலில் நின்றுக்கொண்டு இருந்தால்… எவ்வளவு  வேகமாக சைக்கிளில் சென்றாலும்…. சைக்கிளில்  லைட் இல்லையென்றால்… போலிஸ் ஸ்டேஷன் வாசலில் இறங்கி  தள்ளிக்கொண்டு சென்று

 பிறகு  சைக்கிளில் ஏறி செல்ல வேண்டும். சப்போஸ்  போலிஸ்காரர் இல்லையென்றால்  இறங்குவது போல பாவ்லா காட்டி விட்டு பெடலில் கால் வைத்து தெத்தி தெத்தி அப்படியே சென்று விடுபவர்களும் உண்டு…

 முக்கியமாக கடலூரில் இரண்டாம் ஆட்டம்  படம் பார்த்து விட்டு வரும் போதுதான் இந்த காமெடி எல்லாம் நடக்கும்..

 அ துவும்  சைக்கிளில் இருந்து இறங்கி கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு  சைக்கிளைதள்ளக்கூடாது..  கைலியை அவிழ்த்து  விட்டு நடக் க வேண்டும் இல்லையென்றால்  போலிஸ்காரர்கள் நம்மை அழைத்து தேவையில்லாமல் கேள்வி கேட்டு கடுப்பு அடிப்பார்கள்.. ங்கோத்தா  இந்த பஞ்சாயத்து மயிறுக்கு கைலியை அவுத்து விட்டே சென்று விடலாம் என்று நினைக்கும் அளவுக்கு செய்து விடுவார்கள்..


குடும்பத்தோடு சென்றாலும் சைக்கிளில் லைட் இல்லையென்றால்  போலிஸ் ஸ்டேஷன்  வாசலில் இறங்கி தள்ளி செல்லவேண்டும்… என்பதையும் இந்த தலைமுறைக்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1984, 85 வரை  காவல்நிலையம்   அங்குதான் இருந்தது… 1986க்கு பிறகு திருப்பாபுலியூர் போலிஸ்டேஷன்…  இப்போது இருக்கும் ரிஜிஸ்டர்  ஆபிஸ் பெருமாள் கோவில் ஸ்டாப்பிங்கிற்கு இடம் பெயர்ந்தது…

இங்கே இரவு படம் பார்த்து விட்டு வரும் போது  சைக்கிளில் லைட் இல்லையென்றால்…  போலிசை ஏமாற்ற வாய்க்கா சந்து  வழியாக  உள்ளே பூந்து சரஸ்வதி நகர் வழியாக வெளியே வருவோம்… 

 என் அப்பாவோடு சைக்கிளில்    செல்லும் போது போலிஸ் ஸ்டேஷன் வாசலில்   நான் பின் பக்க கேரியரில் உட்கார்ந்து கொள்ள… அப்பா இறங்கி நடந்து இருக்கிறார்..
போலிஸ்தான் இல்லையே இறங்காமல் செல்வோரை மறைந்து இருந்து பிடித்து  பஞ்சாயத்து செய்து  காசு பிடிங்கிகொண்டு சட்டம் அன்றைக்கும் அதே போல கடைமையை செய்தது..

 சிலர் சைக்கிளில் லைட் இருந்தாலும் போலிஸ் ஸ்டேஷன் அருகே  ஒரு கிலோ மீட்டருக்கு முன் லைட் போட்டு அதன் பின் போலிஸ ஸ்டேஷனை  கடந்ததும் மீண்டும் டயரில் இதழ் பதித்து இருக்கும் டைனமோவை பிரித்து  எடுத்து விடுவார்கள்…

மில்லர் கம்பெனி லைட்டும் டைனமோக்களும்  அக்காலத்தில் வெகு   பிரபலம்.


25 தேதிக்கு பிறகு சைக்கிளில்  லைட்இல்லாமல் வருபவர்களை காவல்துறையினர் கண்ணும் கருத்துமாக பிடிப்பார்கள்…  ஒரு கட்டத்தில் லைட்டை போட்டுக்கொண்டு வருபவர்களையும்  பிடிக்க ஆரம்பித்தார்கள்… 

என்னவென்று பார்த்தால்???

  காவல்துறையில் இருக்கும் ஏதோ ஒரு  கருப்பு ஆடு… சாமி… ஒரு கிலோ மீட்டருக்கு  முன்ன ...சைக்கிள்  லைட்டு போட்டுக்கிட்டு போலிஸ் ஸ்டேஷனை  கிராஸ் பண்ணி அதுக்கு அப்புறம் லைட்டை அனைச்சிடுறாங்க  ஐயா என்று எந்த பேமானியோ போட்டுக்கொடுத்து இருக்க வேண்டும்..


திருப்பாதிரிபுலியூர் ஸ்டேஷனில்  அன்றில் இருந்து  சைக்கிளில் லைட்டை போட்டுக்கொண்டு வந்தாலும் பிடிக்க ஆரம்பித்தார்கள்… டைனமோவை தொட்டு பார்ப்பார்கள்  சூடாக இருந்தால் செல்ல அனுமதிப்பார்கள்… டைனமோ சூடாக இல்லையென்றால் அட்ரஸ் விசாரித்து விட்டு  ஏன்டா புதுப்பாளையத்துல இருந்து கூத்தப்பாக்கம் போறதுன்னா இன்னேரம் டைனமோ சூடாகி இருக்கனுமே..???? என்று சிபிஐ போல கேள்வியை வீசி நம்மை மடக்கும் அழகே அழகு....

  ஜானகிராம் பேப்பர் ஸ்டோர் கிட்டதானே லைட் போட்டே,…--?? என்று தீவிரவாதிகளை பிடித்தது போல பிடித்து விடுவார்கள்…

சைக்கிள் மோதலில் முதல் பலி லைட்டுகள்தான்.. அதே போல சில நேரத்தில் உள்ளே இருக்கும் கிளாஸ் லூஸ்  ஆகி கொட கொட என்று சத்தம் போட்டுக்கொண்டு  வரும்.. 

சைக்கிளை வெளியேவைத்தால் அபிட்டு விடுவார்கள் என்பதால் சைக்கிளை வீட்டின் உள்ளே ஏற்றி வைத்து விட்டுதான் தூங்குவோம்… திடிர் என்ற கரண்ட் போய்  விட்டால்  டைனமோவை போட்டு சைக்கிளை மிதித்து மின்சாரத்தை உருவாக்கி  தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும்  தேடி இருக்கின்றோம்..

பெட்ரோமாக்ஸ் லைட்டும் ஒரு மஞ்சள் நீராட்டு விழாவில் பல் இளித்து விட…  வேறு ஒரு பெட்ரோமாஸ்  லைட் வரும் வரை..  ஐந்து சைக்கிளை ஒன்றாக நிறுத்தி லைட் அடித்து நிகழ்ச்சி தடைபடாமல் நடத்த வழி வகை  செய்து இருக்கிறோம்…தமிழர்கள் வாழ்வின் ஒரு பகுதியாக விளங்கிய  சைக்கிள் லைட்டும் டைனமோவும் இன்று நம்மிடத்தில் கோலச்சாமல் வழக்கொழிந்து கால ஓட்டத்தில் காணாமல் போய் விட்டன என்றாலும்,

 அவை விட்டு சென்ற நினைவுகள்  என்றும்  நிலைத்து நிற்கும் உங்கள்  வாழ்க்கையில் சைக்கிள் லைட், டைனமோ போன்றவை  ஏற்ப்படுத்திய தாக்கங்களை பின்னுட்டத்தில் பதிவு செய்ய  வேண்டுகிறேன்.பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
26/08/2015


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

12 comments:

 1. கால ஓட்டத்துல ஜாக்கியோட ஸ்ப்பெல்லோ கூட மறைய ஆரம்பிச்சிருச்சு.

  ReplyDelete
 2. என் தந்தை வைத்திருந்த பி.எஸ்.ஏ சைக்கிளில் மில்லர் டைனமோ இருக்கும். அவர் நிறுத்தி வைத்திருக்கும் சமயம் டைனமோ லிவரை தட்டி லைட் எரிய வைத்த அனுபவம் இருக்கிறது. பல்ப் பீஸ் போயிரும்! நிறுத்துடா என்பார். அவரோடு இரவில் டைனமோ லைட் போட்டு பயணித்ததும் நினைவில் இருக்கிறது. என்னுடைய ஹெர்குலிஸ் சிறிய சைக்கிளில் புதிதாக டைனமோ வாங்கி செட் செய்து ஓட்டிய அனுபவங்கள் இன்னும் மறக்கவில்லை! குண்டும் குழியுமான சாலைகளில் டைனமோ போட்டு ஓட்டுவது ஓர் கலை!

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்ல நினைத்ததை நீங்கள் கூறீவிட்டீர்கள் . நட்புடன் நக்கீரன்

   Delete
 3. ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்.கால ஓட்டத்தில் காணாமல் போய் விட்டன . எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் இருந்து ஒரே த்ரிஷா போட்டோ மட்டும் தான்,

  ReplyDelete
 4. டைனமோ கவரை விட்டுட்டீங்களே ! ! விதவிதமான கவர்கள் உண்டு ! ! ! அதுக்கென்று ஒரு மஞ்சள் துணியை முக்கோணமாக மடித்து அதன் தலையில் கட்டி அழகு பார்ப்போம் ! ! !

  ReplyDelete
 5. Athai Thirtu koduthuvittu aluthathum neengatha ninaivuhal

  ReplyDelete
 6. :) நீங்க டைனமோ இல்லங்க ஜாக்கி dynamite

  ReplyDelete
 7. Quite nostalgic sir,You have taken me to my school days when i had similar experience!I had Sen Raleigh cycle which got damaged in accident and with heavy heart i had to dispose off at throw away price! thanks and keep up posting such anectdote(s)! vishwanathan

  ReplyDelete
 8. வணக்கம் ஐயா!! தங்கள் தளத்திற்கு புதியவன்! சைக்கிளை பற்றிய உங்கள் அனுபவ. பதிவு அழகு அருமை நன்றிகளும் வாழ்த்துகளும் நன்றி!!

  அன்புடன் கருர்பூபகீதன் நன்றி!!

  ReplyDelete
 9. இதைப் படித்ததும் எனக்கு சைக்கிள் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.

  ReplyDelete
 10. பழைய நினைவுகளை மீட்கொண்டு வருகிறது இந்த பதிவு.
  இதுபோன்ற கால ஓட்டத்தில காணாமல் போனவைகளை பற்றிய பதிவுகள் வரவேற்க்கப்படுகின்றன.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner