பெண்களுரில் திருட்டு பயம்....



பெங்களூர் சின்ன நகரம்... ஆனால் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்பு காரணமாகவும் அந்த சின்ன நகரம் இளைஞர்களால் பெருத்து காணப்படுகின்றது...பென்ஷனர் பேரடைஸ் என்று இப்போது யாராவது பெண்களுரை சொன்னால் வேறு வழியாக சிரிப்பார்கள்....

இளவயதினர் ஆதிக்கம் பெண்களூரில் அதிகமானதால் அங்கு சமுக விரோத செயல்களும் அதிகம் ஆகிவிட்டன.. எல்லாவற்றிற்கும் பணம் பிரதானமாகிவிட்டது...  போதை மற்றும் பெண்களுக்கு பணம் அதிகம் தேவையாய் இருக்கின்றன.. அதனால் திருட்டு இங்கு அதிகம்...


இரண்டாம் மாடியில் வாடகைக்கு  இருந்த எனது மாமியார் வீட்டில் வெளிய மிகப்பெரிய இடம் இருந்தாலும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், ஷுக்களை வெளியே விடாமல் உள்ளே எடுத்து  வந்து வைப்பான் எனது மச்சான்.... இவன் எப்ப இவ்வளவு பொறுப்பாக மாறினான் என்று நான் ஆச்சர்யபடுவதுண்டு.....காரணம் இதுவரை 1000 மதிப்பிளான மூன்று ஷுக்களை இதுவரை விட்டு இருக்கின்றேன் என்று புலம்பினான்....


சில நேரங்களில் மற்றவர்கள்  ஷுக்கள் அப்படியே இருக்கும் பட் என் ஷுன்னு அவனுங்களுக்கு எப்படி தெரியும்னு தெரியலை.. எடுத்துகிட்டு போயிடுவாங்கன்னு சொல்லுவான்... இரண்டாவது மாடி வீட்ல எப்படி? திருடன் வருவான் என்று நீங்கள் கேள்வி கேட்பது புரிகின்றது ..

கீழே இருக்கும் இந்த படத்தை பாருங்கள்... இப்படித்தான் நெருக்கமாய் வீடுகள் இருக்கின்றன. எல்லோரும் இரவில் அசதியில் உறங்கும் இரண்டு மணியில் இருந்து நான்கு மணி முதல் வீட்டில்  மாடியில் ஏறிவிட்டால் போதும் வரிசையாக ஒவ்வோறு   வீட்டு மாடியாக தாவி அப்படியே கலெக்ஷ்ன் பார்த்து கொண்டு போய்கொண்டு இருக்கலாம்.... எந்த இடத்திலும் இறங்க கொள்ளலாம் படத்தை பாருங்கள்...


நிறைய இடங்களில் திருடன் நம் கண் எதிரில் கடந்து போனாலும் நமக்கு அவனை தெரியாது.. காரணம் எல்லாம் பேச்சிலர் பசங்க தங்கி இருக்கும் இடம். அவனோட பிரண்ட், இவனோட பிரண்ட் என்று எல்லோரும் வந்து போகும் இடம் என்பதால் ,அவன் ரூமுக்கு இவன் வந்து இருப்பான், இவன் ரூமுக்கு அவன் வந்து இருப்பான் என்று  நாம் நினைத்து, எதிரில் கடந்து போகும் திருடனை கேட்காமல் விட்டு விடுவோம்......

 என் மாமியார் துணி காயவைக்க மொட்டை மாடிக்கு போய்விட்டு வீட்டுக்கு உள்ளே வந்தால் திருடன் ஒருவன் என் மச்சானின் லேப்டாப் பேக்கோடு   நின்று கொண்டு இருக்கின்றான்... நன்றாக கவனியுங்கள் என் மச்சானின்  லேப்டாப் பேக்.. திருடன் திருடன் என்று மாமியார் கத்த லேப்டாப்பை அப்படியோ போட்டு விட்டு  எஸ் ஆகி போய்விட்டான்.....

பிளாக்கர் தம்பி சூரியன் அவரது நண்பர் வீட்டுக்கு சரக்கு அடிக்க அழைக்கும் போது அந்த மொட்டை மாடி ரூமில் இருந்த நண்பர்கள் பல திருட்டு கதைகள் சொன்னார்கள்...

முக்கியமாக திருட்டு வெள்ளி இரவு மற்றும் சனி இரவுகளில் அதிகம் நடைபெறுகின்றது. காரணம் பேச்சிலர்கள் உற்சாகபானத்தில் மிதக்கும் நாள்.. அதனால் திருடர்கள்  அந்த நாளை தேர்ந்து எடுக்கின்றார்கள்..

முந்தாநாள் காலை எனது மாமியார் சமையல் அறையில் இருந்த போது, உறவுக்கார பையன் கதவை திறந்து வைத்து விட்டு பேப்பரும் பாலும்  வாங்கி வர சென்று விட, பர்ஸ் மற்றும் 15ஆயிரம் மதிப்புள்ள புது சேம்சங் மொபைல் எல்லாம் கோவிந்தா.... நல்லவேளை அதுக்கு பக்கத்தில் வீடூ மாறியதால் பழைய ஓனரிடம் இருந்து 20,000 அட்வான்ஸ் வாங்கி வந்து சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து இருந்தான்.. அதில்பணம் இருக்க வாய்ப்பு இல்லை  என்று திருடன் நினைத்தகாரணத்தால் அந்த பணம் தப்பியது.

போலிஸ் நிலையத்தில் தமிழர்கள் கொடுக்கும் கம்ளெயின்ட்கள் எடுக்க நிறைய மெத்தனம் காட்டுகின்றார்கள்.. கர்நாடக போலிசார்.... அது அனுபவித்தவர்களுக்கே தெரியும்... அப்படி அனுபவித்த கதை தனி பதிவாக... 

பொதுவாக அதிகம் திருடு போகும் பொருட்கள்.... வாட்ச், பர்ஸ்,லேப்டாப்,ஷு, காயவைக்கபடும் புது துணிகள், போன்றவை அதிகம் திருடு போகின்றன..

பொதுவா வெளிமாநிலத்து பசங்க அதிகம் என்பதால் புகார் கொடுக்க ,மெனக்கெட அதிகம் விரும்புவதில்லை..திருட்டை அதிகம் அரங்கேற்றுவது இளவயது பசங்கதான்....

மொட்டை மாடியில்  இருக்கும் ரூமில் வெளியில்  பாத்ரூம் இருக்கும் அதில் குளிக்கும் போது வெளிப்பக்கம் தாள் போட்டு விட்டு ரூமில் இருக்கும் அத்தனை பொருட்களையும் அடித்துக்கொண்டு போன கதைகள் ஏராளம்... முக்கியமாக ஜன்னல் ஓரம்  சட்டை மாட்டி இங்க வந்து யாரு எடுக்க போறா என்ற நம்பிக்கையோடு வைக்கும் பொருட்களை அந்த நம்பிக்கையை சிதறவைப்பது பெங்களுர் திருடர்களுக்கு கை வந்த கலை...

 
குணா படம் டயலாக் போல அது என்னமோ தெரியலை என்னமாயமோ தெரியலை என் மச்சான் பொருட்கள் மட்டும் திருடு போய்கொண்டு இருக்கின்றன...இரவில் திருடுபோய் பார்த்து இருக்கின்றான்...காலையில் பல் விளக்கி முடிந்ததும் இப்போது திருட வருகின்றார்களே என்று என் மச்சான் வெறுத்து போய் இருக்கின்றான்..

பெண்களூர் வாசிகளே இரவில் தான் திருடு போகும்  அல்லது சாப்பிட்டு விட்டு மதியம் குட்டி  தூக்கம் போடும் போதுதான் திருடு போகும் என்று  நீங்கள் நினைக்க வேண்டாம்..

காலையில் எட்டு மணிக்கு வீட்டில்  ஆள் இருக்கும் போதே  அபிட் விட்டு சென்று விடுகின்றார்கள்.. அதே போல ஜன்னல் பக்கத்தில் எந்த பொருளையும் வைக்க வேண்டாம்... எப்போதும் கதைவை சாத்தியே வைக்கவும்

 மொபைல், பர்ஸ் திருடு கொடுத்து விட்டு ஆபிசுக்கு சேகமாய் போன மச்சானுக்கு பதினோரு மணிக்கு போன்..

சார் உங்க பேர் ஆனந்

எஸ்.. ஸ்பீக்கிங்.

உங்க பர்ஸ் மடிவாளா அய்யப்பன் கோவில்கிட்ட கீழ  கெடந்துச்சி... பணம் ஏதும் இல்லை.. பட் .  கிரேடிட் கார்டு, டெபிட்  கார்டு எல்லாம் இருக்கு..

தகவல் சொன்னதுக்கு அந்த நண்பரிடம்  போய் பர்ஸ் வாங்கினாலும்,திருடு போன அரைமணியில் அனைத்து கார்டுகளையும் பிளாக் செய்து விட்டகாரணத்தால் அந்த கார்டுகள் செல்லாக்காசு ஆகிவிட்டன..

கதவை திறந்து வைத்து விட்டு பாலும் பேப்பரும் வாங்க போன உறவுக்கார பையனை ரொம்ப நேசத்துடனும் பாசத்துடனும் பார்த்து கொண்டு இருக்கின்றான்.. என் மச்சான்...

என் பொருட்களை தயவு செய்து விட்டு விடுங்கள் என்று திருடர்களிடம் கெஞ்சி உருக்கமான வேண்டுகோள் வைத்த போது எடுத்த படம்... சோகமாக முகத்தை வைக்க சொன்னேன்.. எப்படியும் திரும்ப என் திங்கசதான் அபிட் விட போறானுங்க... அதுக்கு இந்த போஸ் ஓகே என்றான்.. எலெக்ஷ்ன் ஜுரம் போலும்.....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..




(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...






=============

13 comments:

  1. yen yen intha kola veri, ponga boss.. mobile wifi use panna mudiyama laptopla ellam mail paka vendiyatha pochu... aana antha thiruda romba nallavan... chillara kasaiyum, bills'um appadiye vechtan..... romba nallavan....

    ReplyDelete
  2. thiruttu athikam.. kavanamaaka irukkanum..yaarum echcharikka villaiyaa...

    ReplyDelete
  3. இது ரொம்ப முன்னாடியே ஆரம்பிசிருச்சு. சொல்லப் போனா இருக்குரவண்ட இருந்து இல்லாதவன் அடிக்கிறது தான் அதிகம். அங்க இதுனால ஒரு காலத்துல ஜோகி மாதிரி கிரிமினல்கள ஹிரோ ஆக்குனா படமெல்லாம் செமையா ஓடுச்சு. அதுக்கு இது தான் காரணம். திருடுறவன் அதுக்கும் ஒரு ஞாயத்த தான் சொல்லுவான். அவன் தப்ப ஒத்துக்க மாட்டான். கற்றது தமிழ் படத்துல வருமே "உங்களோட ஷுவுக்காகவும், பிட்சாக்காகவும் நீங்கள் தாக்கப்படும் நாளும் ஒரு நாள் வரலாம், ஜாக்கிரதை" அதோட முதல் சிம்டம் தான் இது. இது கொஞ்ச நாள்ல சென்னைக்கும் பரவும்.

    ReplyDelete
  4. என் வீட்டிலும் நடந்தது இது. ஜன்னல் வழியாக, நெட்டைக் கிழித்து, தூங்கிகொண்டிருந்த எங்கள் தலைக்கு மேலாகவே குச்சியைவிட்டு, தொங்கிய பேன்டை உருவிவிட்டார்கள். போலீசிடம் போனால் - சார் நாம்தான் ஜாக்கிரதையா இருக்கனும்... எங்களால என்ன பண்ணமுடியும் என்றார்கள்.

    அடுத்த தடவையும் வந்தான். முழித்துக் கொண்டு நம்ம "ஓ..." வை கத்தி, குச்சியால் சத்தமெழிப்பி
    முதல் மாடியிலிருந்து குதித்தோட விரட்டினேன். நல்லா அடிப்பட்டிருக்கும்.

    பெண்களூர் பதிவுகள் அருமையாக வந்துக்கொண்டிருக்கின்றன. தொடருங்கள்!

    ReplyDelete
  5. ஃஃஃஃ15ஆயிரம் மதிப்புள்ள புது சேம்சங் மொபைல் எல்லாம் கோவிந்தா....ஃஃஃஃ

    அட வீட்டுக்கு வீடு வாசற்படியா ? ஹ..ஹ..ஹ.

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

    ReplyDelete
  6. நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி

    ReplyDelete
  7. நமது அஜாக்கிரதையே திருடனுகளுக்கு லாபம்... எப்போதும் "ஜாக்கி"ரதையாகவே இருக்கச் சொல்லுங்கள் மச்சானை ! !!

    ReplyDelete
  8. ஆஹா, பெங்களூர்ல இவ்வளவு திருட்டு நடக்குதா? எச்சரிக்கைக்கு மிக்க நன்றி அண்ணே.

    ReplyDelete
  9. இவ்வகையான திருட்டுகள் பேச்சிலர்கள் அதிகமாக தங்கியிருக்கும் பகுதிகளில் நடக்கின்றன. மேலும், ரோட்டில் இருந்து சற்று உள்ளே தள்ளியிருக்கும் ஐ.டி. மற்றும் பிற நிறுவனங்களில் பணி புரிபவர்களைக் குறி வைத்தும் திருட்டுகள் நடக்கின்றன.

    ReplyDelete
  10. ennoda vote onga machan kuttiku thannu sollidunga.
    Antha sontha kara payan yaru barath thana?

    ReplyDelete
  11. நான் உன்னை படிக்க வரும்போது என்னோட சுதந்திரம் பதிக்கபுடாது விளம்பரத்தை கவனி நண்பா

    ReplyDelete
  12. என்ன ஆனந்த , ஏதாவ்து கட்சியில் சேந்துடியா . நல்லா போஸ் குடுக்கிற.......

    ReplyDelete
  13. அட... பணம் காசு திருடுறது, வண்டி திருடுறது எல்லாம் போக இப்போ Gas cylinder-ஐ கூட விட்டு வைக்கிறது இல்லை... எங்க ஏரியாவுல ஒரு வாரத்துல நாலு cylinder தூக்கிட்டானுங்க... அதனால இப்போல்லாம் எல்லா கதவும் பூட்டு போட்டு தான் வைக்கிறது... ஒரே ஆறுதல், என் வீடு தான் கடைசி... அங்கே இருந்து தப்பிக்க கீழே குதித்தால் நேராக ஆஸ்பத்திரி படுக்கையில் தான் போய் விழ வேண்டும்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner