ஒரு பிரபல இயக்குனரின் அழைப்பு....





ஜாக்கியா..?

ஆமாங்கசார்...


நான் இயக்குனர் ..................... பேசறேன்...

 சார் நீங்களா? நீங்க என் பிளாக் எல்லாம் படிக்கறிங்களா? என்னால நம்பவே முடியலை சார்...

உலகத்துல எந்த இடத்துலயும் இணையத்துல படிக்கும் போது சென்னையில் இருக்கும் நான் படிக்க முடியாதா???

சார் உண்மைதான்சார்... நான் ஏதோ எனக்கு தெரிஞ்சதை கிறிக்கிட்டு இருக்கேன்.. நீங்க எவ்வளவு பெரிய ஆள்.. அதான்....

மே மாசம்  ஒரு பிலிம் ஸ்டார்ட் பண்ண போறேன்...புல்லா கிரைம் சப்ஜெக்ட்...சினேகா,திரிஷா ரெண்டு பேருகிட்டயும் பேசிக்கிட்டு இருக்கேன்.

ஒரு வில்லன் ரோல் இருக்கு.. செய்யறிங்களா? பசுபதிகிட்ட டேட் கேட்டேன் அவரு இப்ப வில்லன் ரோல் எல்லாம் செய்யறது இல்லை..குசேலனுக்கு அப்புறம் கேரக்டர் ரோல்தான் செய்யறேன்னு சொல்லிட்டார்... டக்குன்னு உங்க ஞாபகம் வந்துச்சி.. நீங்க அந்த கேரக்டருக்கு ஆப்டா இருப்பிங்க.... அந்த வில்லன் ரோலை நீங்க செய்யறிங்களா?


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டு பிளஸ்) புதன்/30/03/2011


ஆல்பம்...

இன்று இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேச்.. இரண்டு நாட்டு பிரதமரும்  குன்றேறி யானைப்போர் பார்த்துவிட்டார்கள்.ரசிகர்கள் 3 மணி நேரத்துக்கு முன்னே வந்து விட வேண்டும் என்று கட்டளை போட்டு இருந்தார்கள்.. விமான எதிர்ப்பு பிரங்கி எல்லாம் மைதானத்துக்கு பக்கத்தில் நிறுத்தி  இருக்கின்றார்கள். இவ்வளவவு பாதுகாப்போடு நடக்கும் போட்டி எனக்கு தெரிந்து இதுதான் என்று நினைக்கின்றேன்.
==============
நச் என்று நடுமண்டையில் பொது இடத்தில் கொட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்து இருக்கும் தருமபுரி தேமுதிக வேட்பாளர் பாஸ்கர் நிலமை... இப்படி ஓவர் நைட்டில் பேமஸ் ஆவோம் என்று  நேற்று காலை காபி குடிக்கும் போது கூட யோசித்து பார்த்து இருக்கமாட்டார்.. இரண்டு தட்டுதான் ஆனால் எரிச்சலில் பலமான தட்டு என்பது எனது கேமரா கண்ணுக்கு பிடிபட்ட விஷயம்..



விஜயகாந்த் தனது வேட்பாளருக்கு கொடுத்த பூசை...தேர்தல் /2011


தினமும்  தேமுதிக தலைவர் விஜயகாந்தை பற்றிய செய்திகள் வித்யாசமாக வந்தவண்ணம் உள்ளன.. நேற்று கூட மகாபாரதகதையை ஆரம்பித்து விட்டு அந்த பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு , ஏம்பா அந்த புக்கை எடு.. என்று சொல்லி அந்த புத்தகத்தை பிரட்டிவிட்டு மகாபாரதகதையை தொடராமல்,  வேறு ஒரு செய்தியை பேசியதாகவும் மக்கள் குழப்பம் அடைந்ததாகவும் செய்திகள் வந்தன.


ஆயிரம்(1000)+எழுநூற்று எழுபத்தி ஐந்து(775)...



 
ஒன்றிலிருந்துததான் 100 என்று சொல்வார்கள்....முதல்படி, தொடக்கம் எல்லாம் ஒன்றில் இருந்துதான்...மற்றவர்களுக்கு இது பெரிய விஷயம் இல்லை.. ஆனால் என்னை பொருத்தவரை இது ரொம்ப பெரிய விஷயம்...

இந்த பதிவுலகில் நான் வந்து மிகச்சரியாக மூன்று வருடங்கள் ஆகின்றன...யாரும் எனக்கு வந்து இப்படி எழுது.. அப்படி எழுது என்று யாரும் எனக்கு சொல்லிக்கொடுக்கவில்லை...ஆனால் மற்றவரை விட சுவாரஸ்யமாக எழுத வேண்டும்.. சொல்லும் விஷயத்தை ரொம்ப சுவாரஸ்யமாக கொடுக்கவேண்டும் என்பது மட்டுமே எனக்கு மனதில் நான் சொல்லிக்கொண்ட விஷயங்கள்...


மினிசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டுபிளஸ்/ஞாயிறு/27/03/2011

ஆல்பம்..

தமிழக தேர்தல்களம் சூடு பிடித்து விட்டது...வடிவேலு விஜயகாந்தை பிடி பிடி என்று பிடித்தார்.. இதே  போல செந்தில் ஒரு தேர்தலில் அதிமுகவில் சேர்ந்து கருணாநிதியை திட்டி விட்டு அதன் பிறகு பயம் வந்து நான் எதாவது தப்பா பேசி இருந்தால் மன்னித்துக்கொள்ளவும் என்று பேசிய மேடையிலேயே மன்னிப்பு கேட்டார்... அது போல வடிவேல் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என்பது ஆறுதல்..இந்த பேச்சு நிச்சயம் குறித்து வைத்துக்கொள்ளபடும்.. வடிவேலு விஜயகாந் பிரச்சனைக்கு வடிவேலுவுக்கு ஒரு அரசியல் கூடாரம் தேவையாக இருக்கின்றது... அந்த கூடாரம் இப்போது திமுக.. அவ்வளவுதான்

===================

போலி சான்றிதழ் கொடுத்து  வேலைக்கு சேர்ந்த 4 விமானிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இதில் இந்தியன் ஏர்லைன்சில் 20 வருடகாலத்துக்குமேல் பணியில் இருந்த விமானியும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.... இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு இந்தியா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது... எல்லா துறையிலும் இந்த  சான்றிதழ் சரிபார்ப்பு தீவிரமாக நடத்தினால் நிறைய பேர் மாட்டுவார்கள் போல....
====================

எங்கள் தேவதைக்கு பெயர் சூட்டல்…


பெயர்கள் சாதாரணமானவை அல்ல.. வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்பத்தில் அந்த பெயரை கேள்விபடும் போதோ அல்லது அந்த பெயரை எவராவது உச்சரிக்கும் போதோ பழைய ஞாபகங்கள்  நம்மை வட்டமிடும்.. அதுவும் மிக  நெருக்கமான காதலியின் பெயர் என்றால், உயிர் நண்பன் என்றால், நம்பிக்கை துரோகி என்றால்,உதவிக்கு தவிக்கும் போது உதவியவள் அவ்லது உதவியவர் பெயர் என்றால், அவர்களை பற்றிய ஏதாவது ஒரு விஷயம் நினைவூகூறப்படும்...


எங்கள் கிராம கிரிக்கெட்+ஆயில்பேட் + மின்னல் அணி..



 உலக கோப்பை நடக்கும் இந்த நேரத்தில் இந்த பதிவு எழுதுவது சிறப்பாக இருக்கும்.. கடலூர் கூத்தப்பாக்கம் கிராமத்தில் ஒரு காலத்தில் கோலி குண்டு,  கோட்டிபுல், மாணவர்களிடம் ரொம்ப பேமஸ்... முக்கியமாக கோட்டிபுல் ரொம்ப பேமஸ்... துளுக்கன் சமாதி அருகே காலையில் இருந்து மாலை வரை கோட்டி விளையாடியது நினைவுக்கு வருகின்றது...நாங்கள் 5 ஆம் வகுப்பு படிக்க ஆரம்பிக்கும் போது  கிரிக்கெட் விளையாட்டு எங்கள் ஊரில் மெல்ல தலைதூக்கியது...


சென்னையில்  இருந்து லீவுக்கு வரும் பசங்கள்,மிட்ஆன், லெக்ஸ்பின், ஸ்கொயர் டிரைவ் என்று ஏதேதோ  ஆங்கில வார்த்தைகள் சொல்லி எங்களை தாழ்வுமணப்பான்மையில் உழல செய்தார்கள்...இதனால் அந்த விளையாட்டை இன்னும் நன்றாக கற்றுக்கொள்ளும் வெறி எங்கள் அனைவருக்கும் கனன்று கொண்டு இருந்தது.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டு பிளஸ்) புதன்/23/03/2011


ஆல்பம்
பெங்களூரில் நல்ல வெயில் அடிக்கின்றது.. நேற்று சென்னைக்கு வந்தேன்.. செம வெயில் தர்பூஸ் 10 மணிக்கே சக்கைபோடு போட ஆரம்பித்து விட்டது...பெங்களூர் பெருத்து போனதற்க்கான காரணம் எனக்கு எளிதில் புரிந்து விட்டது...வெயில்தான் கடுமையாக இருக்கின்றது வாகனத்தில் சென்றால் நம் மேல் குளிர்காற்று வீசுகின்றது. இலையுதிர்த்து சென்னை மரங்கள் காணப்படுகின்றன. அதனால் ஒரு மாதத்துக்கு பிறகு சென்னையை பார்த்து போது வித்யாசமாக காணப்பட்டது.


கீ செயின்(சிறுகதை+ பதினெட்டு பிளஸ் கதை)

 


தமிழ்நாட்டில் அதிகம் புழங்கும் சுரேஷ் என்ற பெயர் உடைய அவனை நீங்கள் நேரில்  பார்த்தீர்கள் என்றால் அவனுக்கு 18வயது ஆகின்றது  என்று சொன்னால் நீங்கள்  சத்தியமாக நம்பவாய்ப்பு இல்லை.. ஆனால் அவனுக்கு ஹார்மோன்கள் ஏட்டிக்கு போட்டி செய்ய  ஆரம்பித்து வெகுநாட்கள் ஆகின்றது...

பதினோராம் வகுப்பு படிக்கும் சுரேஷ்ன் அப்பா இறந்து போய் 5வருடங்களுக்கு மேல் ஆகின்றது... அவனுக்கு எல்லாமே அவன் அம்மாதான்... சுரேஷ்இன் அம்மா விழுப்புரத்துக்கு அருகே இருக்கும் ஆனத்தூர் கிராமத்தில்  தொடக்க பள்ளியில் ஆசிரியர்...  அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு, தங்கள் சொந்த ஊரான சிதம்பரத்தில் இருந்து விழுப்புரத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஆனத்தூருக்கு குடிபெயர்ந்து வந்து விட்டார்கள்.



சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (லேட்டோ லேட்) ஞாயிறு 20/03/2011


ஆல்பம்..

திமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்த போது திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் தெரிகின்றது...இந்த தேர்தல் அறிக்கையை பலர் விமர்சிக்கலாம்.. முக்கியமாக 35கிலோ இலவச அரிசியை...போன தேர்தல் அறிக்கையில் ஜெ 20 கிலோ அரிசி இலவசம் என்றார்.. இந்த முறை கலைஞர் 35 ஆக மாற்றிவிட்டார்... வெயிலில் நின்று ஓட்டு போடுபவர்களுக்கான அறிக்கை இது... நான்  சொல்வது புரிகின்றதா???
====================

இமயம் டிவியில் வைகோவின் பேட்டி பார்த்த போது, அவரை பார்க்க ரொம்பவும் வருத்தமாக இருந்தது..ஈழதமிழர்களை பற்றி பேசும் போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார்..கொடநாட்டில் ஜெ ஓய்வெடுக்கும் போது ஆளுங்கட்சியை விடாமல் எதிர்த்து குரல் கொடுத்தவர்... அந்த நன்றியை எல்லாம் மறந்து அவரை நடு ரோட்டில் ஜெ நிறுத்தியது கொடுமை.. பியூர் நம்பிக்கை துரோகத்தில் பாதிக்கபட்ட சமீபத்திய உதாரணம் வைகோ...
============

லேபர் வார்டு....பெண்களின் வேதனை..

பொம்பளைங்க என்ன processனே தெரியலை... இந்த பொண்ணுங்கதான் எவ்வளவு பெரிய விஷயம்.. சான்சே இல்லை....பெண்கள் மீது மரியாதை வர பல காரணங்கள் இருந்தாலும்,ஒரு பொண்ணு மேல ரொம்பவும் மரியாதை வைக்க மிக முக்கிய காரணம் இந்த லேபர்வார்டு மேட்டர்தான்...

எங்க அம்மா என்னை  பெக்க லேபர் வார்டுல பெரிய போராட்டமே  நடத்தி இருக்கா..... எங்க அம்மா போட்ட கத்தலில் எங்க அம்மாவை பெத்த தாத்தா, தன் பொண்ணு படற அவஸ்த்தையை தாங்க முடியாம? 100மீட்டருக்கு அப்பால போய் வாயில துணியை பொத்திகிட்ட அழுதாரம்.. என்னை கொஞ்சும் போது தாத்தாவும் அம்மாவும் சொல்லி இருக்காங்க....


சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ் 17ஹார்ஸ் லேட்(பதினெட்டு பிளஸ்)புதன்

ஆல்பம்..

எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் என்று சொல்லிவிட்டு இயற்கை ஜப்பானை நைய புடைக்கின்றது...ஒரே அடியாய் சுனாமி போல அடித்து ஓய்ந்தாலும் பராவாயில்லை தினத்துக்கும் ஒரு அணு உலையை  வெடிக்க வைத்து ஜப்பான் மக்களை படாய் படித்துக்கொண்டு இருக்கின்றது...தினம் தினம் வெடிக்க வைத்து தலைப்பு செய்திகளாக வந்து கொண்டு இருக்கின்றது... வாழ்ந்து காட்டுதலை விட பெரிய பழி தீர்த்தல்  ஏதும் இல்லை என்று சொல்வார்கள்.. அதை ஜப்பான் மக்கள் வெறிகொண்டு  செய்வார்கள்..அந்த தன்னம்பிக்கையிலும் அதிஷ்ட்டமும் நேரமும் விளையாடி பார்க்கின்றது....அணு உலைகளை குளிர்விக்க கடல்தண்ணிரை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வந்து கொட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். கொடுமையே..

===
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் நண்பர் சாதிக் பாட்சா இன்று காலை தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்...நண்பருக்கே இந்த நிலை என்றால் நமக்கு? என்ற கேள்வியே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கலாம்....ஒரு காலத்தில் ராஜாவின் நண்பன் என்று சொல்வதே அவருக்கு பெருமையாக இருந்து இருக்கலாம். அதுவே இப்போது???
======

எங்கள் மகள்... அம்மாவின் ஆசிர்வாதம்.





எனது பால்யகால நண்பர் சூப்பனான்சாவடி சுபாஷ் நேற்று என்னோடு தொலைபேசியில்   பேசும் போது புண்ணியம் செஞ்சவனுக்குதான் பொம்பளை புள்ளை பொறக்கும் என்று  ரைமிங்காக சொன்னான்... அது உண்மையா இல்லையா என்பது எனக்கு தெரியாது

என் அப்பா  புண்ணியம் கம்மியாக செய்து விட்டார் ஐந்து பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்று ஒரு பழ மொழி உண்டு...இந்திய திருமணங்களில் நிலவும் வரதட்சனை சீருக்காக சொன்னது.....எனக்கு நான்கு தங்கைகள்..மூன்று தங்கைகளுக்கு திருமணம் ஆகிவிட்டடது.. இன்னும் ஒரு தங்கைக்கு இப்போது வரன் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்...


அன்புள்ள அம்மாவுக்கு, (14/03/2011)

 
அன்புள்ள அம்மாவுக்கு

இப்போதுதான் விஜய்டிவி பார்த்தேன். நிறைய பிள்ளைகள் தன் அம்மா எப்படி அழகாக இருக்கவேண்டும் என்று போட்டி போட்டு  பொதுவெளியில் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் நிறைய அம்மாக்கள் பிள்ளைகளை விட மிக அழகாக இருந்தார்கள்...




நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா பிள்ளைகளும் தன் அம்மாக்கள் அழகாக இருக்கவேண்டும் என்று ஆசைபட்டார்கள்..  எப்படி இருந்தாலும்  எனக்கு எப்போதுமே நீ அழகு தேவதைதான்..

எல்லா அம்மாக்களும் திருமணத்துக்கு பிறகு ஒன்று கணவனுக்காக மாறி இருக்கின்றார்கள்.. அல்லது குழந்தைகளுக்காக மாறி இருக்கின்றார்கள்....

நிறைய அம்மாக்களின் ஆசைகள் அற்ப ஆசைகளாகதான் இருக்கின்றன... இரட்டை பின்னல்  ஜடை, பெரிய பொட்டு, சின்ன பொட்டு,மருதானி இவ்வளவுதான்.... அதையே நிறைய அம்மாக்கள் சரியாக செய்து கொள்வது இல்லை....காரணம் பிள்ளைகளுக்காக மாறிவிடுகின்றார்கள். மற்ற நாடுகளில் எப்படியோ?? நமது நாட்டில் எல்லா அம்மாக்களும் தியாக வாழ்க்கைதான்  வாழ்ந்து வருகின்றார்கள்...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ஞாயிறு/13/03/2011


ஆல்பம்..

சுனாமியின் கோரத்தை பார்க்கும் போது கடலூர் தேவனாம்பட்டினத்திலும், பாண்டிச்சேரி கடற்கரையில் போட்டு இருக்கும் தடுப்பு சுவர்களை பார்க்கும்  போது ரொம்ப காமெடியாக இருக்கின்றது.. இயற்கை நினைத்தால் எல்ஐசி உயரத்தில் உட்கார்ந்து இருந்தாலும் அழித்து விடும் என்பதை ஜப்பான் சுனாமி நிருபீத்து இருக்கின்றது.... நடந்த அழிவை வைத்து பார்க்கும்  போது 25ஆயிரம் பேருக்கு மேல் இறந்து இருக்கலாம் ஆனால் இதுவரை 2000 பேர் இறந்து போனதாகவும் 10,000 பேருக்கு மேல் காணவில்லை என்று ஜப்பான் அரசு அறிவித்து இருக்கின்றது...நான் கவலைபடுவலது எல்லாம்  எத்தனை சிறுவர் சிறுமியர் தனது பெற்றோரை இழந்து போய் இருக்கின்றார்கேளோ என்பது தெரியவில்லை....???

உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை...பெற்றோரை இழந்து  இருக்கும் சிறுவர் சிறுமியருக்கு எல்லா மனவலிமையும் கிடைக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்வோம்...


ஆழிப்பேரலை...(சுனாமி) ஜப்பான்...2011



இரண்டாம் உலக போருக்கு பிறகு, உலகம் உச்சரிக்கும் பெயராக மார்ச்..11ம் தேதி ஜப்பான் மாறிப்போகும் என்று காலையில் எழுந்து பல் துலக்கும் போது  எந்த ஜப்பானியர்களும் நினைத்து  கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

நல்ல மழை பெய்து கொண்டு இருக்கும்  போது வெள்ளம் வந்தால் அது ஒரு பிரச்சனையே இல்லை.... மழை கொட்டிக்கொண்டு இருக்கின்றது அதனால் படிப்படியாய் வெள்ளம் என்று மனது சமாதனபட்டு விடும்...


பெங்களூர் சைக்கோ...(பெண்களுக்கான எச்சரிக்கை)

ஒரு மனிதனுக்கு அதிக பட்சம்  எத்தனை  மொபைல் இருக்கும் இரண்டு.. காரணம் ஒரு போன் பிசினஸ்கால்களுக்கு அடுத்து போன் பர்சனலுக்காக..அதிகம் தினவெடுத்தவர்கள்.. சின்ன வீட்டுக்காககூட மூன்றாவதாக ஒரு மொபைல் போன் வைத்துக்கொள்வார்கள்..


சரி உங்களிடம் உங்கள் மனைவி மற்றும் பெண் நண்பிகளின் போன் நம்பர்கள் எத்தனை இருக்கும்??? அதிக பட்சம் 50 ?...சார் என்ன இப்படி சொல்லிட்டிங்க...நான் உங்களை மாதிரியா? எனக்கு எவ்வளவு காண்டாக்ட் மன்மதராசா தெரியமா? அப்படியா? ஒரு 100 ??...
ஆமாம் சார் ஒரு 100 இருக்கும்...சந்தோஷம்....


பாண்டி காபரே டான்ஸ்....

(புகைபடம் உதவி.. கூகுள்)


அவன் பெயர் துரை/
ஒரே ஊர்/
ஒரே பள்ளி/
இரண்டு பேரும் ஒன்றாக படித்தோம். நான் என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் . துரைக்கு என்னை விட இரண்டு வயது அதிகம்.அவனுடைய ஒரே குறிக்கோள் நான் எப்படியாவது  மிக பெரிய ஆளாக மாற வேண்டும் என்பதுதான்..



ஏழ்மையான எனது வீடு.. வீட்டுக்கு பெரியபையன்.அதன் பொருட்டு நான் முன்னறே வேண்டும் என்று துரை அதிகம் ஆசை கொண்டான்... அதே போல் எங்கு  போனாலும் கூசினி ஆள் போல என்னையும் அழைத்துச்செல்வான்...




சாண்ட்வெஜ் அன்டு நான்வெஜ்(12hrs late) 09-03-2011 புதன்...

ஆல்பம்...

தி.மு.க..121
காங்கிரஸ்...63
பா.ம.க...30
வி.சி.க...10
கொ.மு.க...7
முஸ்லிம் லீக்..2
=========
உட்டாலக்கடி கோயா உழுந்து எழுந்து வாயா என்பது போல கடைசியாக திமுகவின் தொகுதி பங்கீடு லிஸ்ட் இதுதான்..


தம்பி அப்துல்லாவின் தேர்தல் கணிப்பு கீழே....

திமுக 80 + or - 5

காங்கிரஸ் 30 + or - 2

பா.ம.க 20 + or - 2

வி.சி ,கொ.மு.ச, இன்னும் பிற 10 டு 15

ஆகமொத்தம் திமுக கூட்டணி 138 + or - 5 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும்.




ஆனால் இதில் 95க்கு மேல் அதாவது 100 சீட்டுக்கு மேல் தி.மு.க வரும் என்பது என் கணக்கு... பார்ப்போம்...


JOB NEWS(வேலைவாய்ப்பு செய்திகள்-பாகம்/8)

இது தம்பி ஜமால் அனுப்பிய தகவல் இது நாளைக்கு நாளைமறுநாளும் நடக்கும் நேர்முகம் தகுதியுள்ளவர்கள் விண்ணபிக்கவும்.....


====================
Opening for fresher’s

in iLink Multitech Solutions

we are conducting Walk-in for fresher’s on 10 Mar,2011 and 11 Mar, 2011. Candidates who meets the below mentioned criteria are only eligible for the Written test.



1. Must be an BE/BTech/MCA/Msc graduate with 65% and above(2009,2010 pass outs and current year(2011) batch)


2. Must have done Certification in Dotnet or Must have good knowledge in Dotnet



The written test will be conducted in two sessions




1. 10am to 11:30am


2. 2 pm to 3:30 pm

சென்னை(ஓ.எம்.ஆர்) தகவல் தொழில்நுட்பசாலை ஒரு பார்வை..



நண்பருக்கு ஒரு வேலை ஆக வேண்டும்.. அவர் வெளிநாட்டில் இருக்கின்றார்... அதனால் அவர் சந்திக்க சொன்ன ஒரு நண்பரை சந்திக்க பழைய ஓ.எம்.ஆர். என்று அழைக்கபட்டு இன்றைக்கு ராஜிவ்காந்தி சாலை என்று அழைக்கப்படும் சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலை வழியாக துரைப்பாக்க்ம் சென்றேன்.

 சரியா துரைப்பாக்கம் ஜெயின் காலேஜ்  பஸ் ஸ்டாப் அருகில் அவரை சந்திக்க வேண்டும்..அவரை பத்து மணிக்கு வரச்சொல்லி இருந்தேன்.... நான் ஒன்பது மணிக்கே அந்த இடத்துக்கு போய் விட்டேன்..ஆனால் நண்பரின் நண்பர் அந்த இடத்துக்கு வர இரண்டு மணி நேரத்துக்கு மெல் ஆகிவிட்டது...

அந்த இரண்டு மணி நேரம் அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த போது நான் பார்த்த விஷயத்தை உங்களிடம் எனது பார்வையில் பகிர்ந்து கொள்கின்றேன். சிலருக்கு இது குப்பையாக இருக்கலாம் அவர்கள் இத்தோடு அப்பிட்டாகிவிடுவது நல்லது....

மகளிர்தினம்.. எழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றிகள்.



நானும்  பெண்களை மதிக்காதவன்தான்.. என் நான்கு தங்கைகளையும் அடித்து இருக்கின்றேன், அம்மாவையும் தங்கைகளையும் அசிங்கமாக திட்டி இருக்கின்றேன்... பெண்களுக்கு  எதுக்கு தனி கியூ என்று கேள்வி எழுப்பி இருக்கின்றேன்....அவர்களுக்கு எதுக்கு தனி பஸ், அவர்கள் மட்டும் நெய்யில் பொறித்தவர்களா? என்று வினா எழுப்பி இருக்கின்றேன்..

அவர்கள் தலை எழுத்து,பொறந்த நேரம், அவுங்க செஞ்ச பாவம்  என்று எடுத்து எரிந்து பேசி இருக்கின்றேன். ஏன் என்றால் நான் ஆண்ஆதிக்க சமுகத்தின் பிரதிபலிப்பாய் வளர்ந்தவன். என் தாத்தா அப்படித்தான் என் அப்பா அப்படித்தான், என் மாமா அப்படித்தான், என் பெரியப்பா அப்படித்தான்,இப்படித்தான் என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் இருந்தார்கள்..


25 பைசா (கால ஓட்டத்தில் காணாமல் போனவை..)



வரும் 2011 ஜுன் 30ம் தேதியோடு புழக்கத்தில் இருக்கும் 25 பைசா நாணயங்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து இருக்கின்றது.. ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளைகளிலும் இந்த நாணயத்தை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்து இருக்கின்றது..

கண் எதிரே என் கையில்  கோலோச்சிய மதிப்பான ஒரு உலோகம் கண் எதிரில்  செல்லக்காசாக போக போகின்றது.. வருத்தம்தான்.. இந்த உலகில் மாறுதல் மட்டுமே மாறதது...

சிறுவயதில் கடலூர் லாரன்ஸ் ரோட்டில் இலைவியாபாரம் செய்த நாகமம்மாள்தான் என் பாட்டி. டுயூஷனுக்கு  சுப்ராயுலுநகர் போய்விட்டு அங்கு இருந்து  கூத்தப்பாக்கத்தில் இருக்கும் எங்கள் விட்டுக்கு நடந்து வரவேண்டும்... என் ஆயா கொடுக்கும் 25 பைசாநாணயத்துக்கு கட்டம் கட்டமாக விற்க்கும் சோன்பப்டி கேக் வாங்கி வாயில் போட்டு அது எச்சிலில்  ஊற ஊற நடந்தே வீடு வருவது எனக்கு பிடித்த விஷயம்....


மினி சாண்ட்வெஜ் அண்டுநான்வெஜ்/பிளஸ்பதினெட்டு/ஞாயிறு/06/03/2011

      
ஆல்பம்


மூன்று சீட் ஆட்டம் போல மூன்று சீட்டால் காங்கிரஸ்சோடு..உறவு முறிந்தது என்று  சொல்கின்றது தி.மு.க...ஆனால் இலங்கையில் போர் நடந்த போதும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட போதும் இந்த விலகல் நடந்து இருந்தால் மிக மரியாதையாக இருந்து இருக்கும் என்று பலர் கேள்வி எழுப்புகின்றார்கள்...


திருடனையே நகைகடைக்கு காவல்காரனா போட்டா எப்படி இருக்கும்? அதேதான்.. ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்த பி.ஜே.தாமஸ் நியமனம் தவறு என்று  உச்சநீதிமன்றம் சாட்டையடி தீர்ப்பு கொடுத்து இருக்கின்றது... அதற்கு  பிரதமர் ஆம் அந்த நியமனத்தில் நான் தவறுதான் செய்துவிட்டேன் என்று ஒப்புதலும் வருத்தமும் தெரிவித்து இருக்கின்றார்...ஆம் ஸ்பெக்ட்ரம் விவகாரம் எனக்கு தெரியாமல் நடைபெற்றது என்றார்...  நமது பிரதமர் தற்போது நிறைய ஆம் போடுகின்றார் அதுவே பெரிய விஷயம் அல்லவா? ஆம்  60 கீலோமீட்டர் வேகத்தில் வர வேண்டிய இடத்தில் 70 கிலோமீட்டர் வேகத்தில் வந்துவிட்டேன்.. மன்னித்து விடுங்கள் என்று டிராபிக் போலிசிடம் ஓப்புக்கொண்டால்...

கொய்யால..எடு 500ரூபாயை.......


COLD TRAIL-2006/உலகசினிமா/ஐஸ்லாந்து/தற்கொலையா?கொலையா?



நீங்கள் ஒரு ஜேர்னலிஸ்ட்

எங்கடா போற? என்று உங்கள் அம்மா கேட்கின்றாள்.. ஆபிசுக்கு முக்கியமா ஒரு அசைன்மென்ட இருக்கு ... ஒரு பெரிய பிரச்சனை அதை பத்தி விசாரிச்சு உண்மையா வெளிக்கொணர போறேன் என்று சொல்கின்றீர்கள்..


ஏற்கனவே உங்கள் பத்திரிக்கையில் ஒரு பெரிய பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கின்றது... தப்பாக செய்தியை கொடுத்து விட்டதாக உங்கள் அலுவலகத்தில் வந்து ஒருவன் கத்திவிட்டு சண்டை போட்டு  போய் இருக்கின்றான்...

சரிடா என்னை ஸ்பென்சர் ஷாப்பிங் அழைச்சிகிட்டு போ என்று அம்மா சொல்கின்றாள்..

அப்பா இல்லை சின்ன வயதில் இருந்து கடுமையாக உழைத்து உங்களை வளர்த்தவள் அதனால் அவள் எது கேட்டாலும் தட்டாமல் செய்பவர் நீங்கள்..

உங்கள் வீடு மாம்பலம். ஸ்பென்சருக்கு காரில்தான் அவளை அழைத்து போகின்றீர்கள்...நீங்கள் பத்திரிக்கைகாரர் என்பதால் எல்லா பேப்பரையும் வாங்கி விடுவீர்கள் அப்பதானே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க முடியம்....


OFF SIDE-2006/உலகசினிமா/ஈரான்/பெண்கள் மீதான தடை...



உங்களுக்கு பெண் குழந்தை இருக்கின்றதா? அதுவும் பத்தாம் வகுப்பு  அல்லது பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் இருக்கின்றாளா-?

இதை எதுக்கியா கேக்கற??

சொல்லுங்க..

இருக்கா இல்லையா?

இருக்கா..

குட் அப்ப நான்  சொல்லறதை நீங்க கேளுங்க...
உங்களுக்குத்தான் அந்த பிரச்சனை புரியும்....

உங்க பொண்ணுக்கு கால்பந்துன்னா உசிரு...
சென்னையயில ஒரு பெரிய கால்பந்தாட்ட திருவிழா நடக்குது.. நம்ம நேரு ஸ்டேடியத்துல நடக்குதுன்னு வச்சிக்கங்க... வேற எங்க நடத்த முடியும்... அங்க உங்க பொண்ணை அழைச்சிகிட்டு போறிங்க... ரெனெல்டோ அப்புறம்.... அதுக்கு மேல எனக்கு கால்பந்து பற்றி எதுவும்  தெரியாது... காரணம் அந்த அளவுக்கு எனக்கு இலக்கியம், உலக ஞானம் எதுவும் தெரியாது.... ஏதோ நியூஸ் பேப்பர் பார்த்து எழுதறவன்..

சோ அதனால இப்ப கிரிக்கெட் திருவிழா நடக்குது அதனால அதை வச்சிக்குவோம்.. உங்க பொண்ணுக்கு கிரிக்கெட்டுன்னா ரொம்ப பிடிக்கும்னு வச்சிக்கிங்கோ...நம்ம சேப்பாக்கம் கிரவுண்டுக்கு உங்க பொண்ணை கூட்டிகிட்டு வாங்க...

என்ன ஜாக்கி சார் நான் இவ்வளவு தூரம் வந்துட்டேன் உங்க பேச்சை நம்பி இவ்வளவுதூரம் வந்துட்டேன்.. இப்ப திடிர்னு என்னையும் என் பொண்ணையும்  சேப்பாக்கம் வர சொன்ன என்ன அர்த்தம்...??

எதோ மொக்கையா எழுதினாலும் நான் ஏதோ சொல்லப்போறேன்னுதானே நீங்க என்னை தொடர்ந்து வந்துகிட்டு இருக்கிங்க.. அப்ப இங்க இருந்து பக்கம் தான் நாலே நாலு கிலோமீட்டர்தான் எனக்காக  சேப்பாக்கம் வந்துடுங்க. எனக்குகிரிக்கெட் வீரர்கள் பேர் ஓரளவுக்கு தெரியும்...அதனாலதான்..

சேப்பாக்கம் வரச்சொன்னேன்... அங்க வந்தா செம  ரஷ்... எல்லாம் முகத்துல நம்ம தேசிய கொடியை வரைஞ்சி வச்சிகிட்டு சச்சின் வாழ்கன்னு கோஷம் போட்டு கிட்டு இருக்காங்க...


JOB NEWS வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/7

Hi Jackie,


Thanks & Regards,
Kurumbazhagan H.
Emp Id : 678.

From: iSOFT India Announcements
Sent: Wednesday, March 02, 2011 12:06 PM
To: All India
Subject: Walk-in interview drive @ iSOFT Chennai - 5th & 6th March 2011
Importance: High


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /பதினெட்டு பிளஸ்/புதன்/02/03/2011

ஆல்பம்

பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார்... அவர் 5ம் கட்ட ஈழ போருக்கு தயராகி வருகின்றார் என்று திரும்பவும் பழ நெடுமாறன் பேசி இருக்கின்றார்...ஈழம் கிடைக்கின்றதோ இல்லையோ? அந்த மாவீரன் உயிரோடு இருக்க வேண்டும்.. 13 வருடகாலங்கள் தமிழ் மக்களை நெஞ்சு நிமிர்த்தி நடக்க வைத்த அந்த வீரம்  உயிரோடு இருந்தால் போதும்... பேசியது உண்மையாக இருந்தால் அதுவே போதும்...



பெங்களூர்(பெண்களூர்) நண்பர்களின் சந்திப்புகள்..(பாகம் /2)

போனமுறை இப்படி ஒரு தலைப்பிட்டு போட்ட உடனேயே அதுக்கு   மைனஸ் ஓட்டு போட்டு தன் வயிற்று எரிச்சலை காட்டினார்கள்.. சரி இன்னும் எரியட்டும் இனி இது போல வாசக சந்திப்பு அப்டேட் நிறைய வரும் சாவுங்கடா கொய்யால....


 மூன்று நாட்களுக்கு முன்ஜாக்கி நான்  அருள் ...பிடிஎம்மில் இருக்கேன்.. வீட்ல இருக்கிங்களா,-? வரலாமா என்றார்... அவசியம் வாங்க என்றேன்..இதுக்கு முன் மகராஜா ஓட்டலில் சந்தித்து போட்டோ எடுக்காமல் மறந்து போன நண்பர்...அருள்  தற்போது இன்போசிஸ்இல்  பணிபுரிந்து வருகின்றார்.. அவருடைய மனைவி குழந்தையுடன் என்னை சந்திக்க  என் வீட்டுக்கு வந்து இருந்தார்...ஒரு இரண்டு மணி நேரம் அனைத்து கவலைகளையும் மறந்து பேசிக்கொண்டு இருந்தேன்.. என் மனைவியோடு  அவர் மனைவி நிறைய பேசினார்கள்.. அவரின் குழந்தையோடு எனது குடும்பம் விளையாடியது... குடும்பத்தோடு வந்த அந்த சந்திப்புக்கு இன்னும் நிறைய எழுதுவேன்..நான்தான் மாமியார் வீடு எ ன்பதால் சரியாக கவனிக்க முடியவில்லை....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner