கற்றது தமிழ் ராம் எனக்கு நல்ல நண்பர்... ஒரு நாள் ஜாக்கி நம்ம நண்பர் குழந்தைக்கு பிறந்தநாள் போட்டோ எடுத்துக்கொடுக்க முடியுமா? என்றார்.. நான் அப்போது பிரியாக இருந்த காரணத்தால் ஓகே என்றேன். அவருடைய நண்பர் திருமுருகன் திநகரில் விளம்பர ஏஜென்சி வைத்து இருக்கின்றார்.. அவருடைய குழந்தை ஆதிரை பிறந்தநாள் விழாவில் படம் எடுத்துக்கொண்டு இருக்கும் போது நீயா நானா நிகழ்ச்சி பற்றிய பேச்சு வந்தது.....
அந்த நிகழ்ச்சி வெகு பிரபலம் அடைந்த நேரம்.. கோபியின் காம்பயர் மற்றும் மொழி ஆளுமையை நான் புகழ்ந்து கொண்டு இருக்கும் போது... அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் இவர்தான் என்று நீயா நானா? இயக்குனர் ஆண்டனியை நண்பர் திருமுருகன் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்... நான் அவரிடம் வாழ்த்து கூறி கொஞ்ச நேரம் பேசிவிட்டு வந்தேன்.. இது நடந்து இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும்....
விஜய்டிவி நீயா நானாவில் சில நல்ல டாப்பிக்குகள் பேசும் போது நாம் அங்கு இருந்து இருந்தால் இன்னும் சில விவரங்கள் பேசி இருக்கலாமே என்று நினைத்துக்கொள்வேன்...ஆனாலும் நான் எவர் மூலமாகவும் அந்த குழுவை நான் தொடர்பு கொண்டதில்லை...
சித்திரை 14ம் தேதிக்கு 5 நாட்களுக்கு முன், சார் நான் உங்க பிளாக் ரெகுலரா வாசிப்பேன்.. என் பெயர் மஞ்சு...... குடும்பங்களில் தொலைக்காட்சி ஆளுமை என்ற தலைப்பில் ஆதாரித்து எதிர்த்து நீங்க பேசறிங்களா? என்றார்.... நான் எதிர்த்து பேசிகின்றேன்... அது எனது மீடியம்தான் இருந்தாலும் ஒரு காமன் மேன் தாட்டில் பேசுகின்றேன் என்று சொன்னேன்.
வீட்டுக்கு பக்கத்தில் நடந்த ஒரு துயர செய்தியால் அதன் பிறகு அதனை மறந்து விட்டேன்.. திரும்ப போன் செய்து எனக்கு நிகழ்ச்சி நடக்கும் நாள் மற்றும் நேரத்தை அந்த பெண் எனக்கு கன்பார்ம் செய்தார்... உங்கள் உறவுப்பெண்களில் யாராவது பேசுவார்களா? என்றார்-... உங்கள் மாமியார் சீரியல் அதிகம் பார்ப்பவர் என்பதால் ஆதரித்து எதிர் அணியில் உட்கார்ந்து பேசுவாரா ? என்றார்.. என் மாமியாரிடம் கேட்ட போது அவர் மறுத்து விட்டார்.. எனது அத்தை மற்றும் எனது உறவுக்கார பையன் பரத் பெயரை பரிந்துரைத்தேன்.
நீயா நானா? அரங்குக்கு போனதும்தான் எனக்கு தெரிந்தது... பெண்பதிவர்களும் வந்து இருந்தார்கள்...சக்தி,தமிழரசி,தேனம்மை என மூவரும் வந்து இருந்தார்கள்..
எல்லோருக்கும் நம்பர் கொடுத்து பெயர் அழைத்தார்கள்... உட்காரும் இருக்கையை அவர்களே முடிவு செய்தார்கள்.. எனக்கு பக்கத்தில் பரத் என்ற பையன் வந்து உட்கார்ந்தான்.. என் வலப்பக்கம் இருக்கை காலியாக இருந்தது...கொஞ்ச நேரத்தில் ஒரு பெண்மணி வந்து உட்கார்ந்தார்.... அறிமுகம் செய்து கொண்டபோது அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சைக்கியாரிஸ்ட்டாக இருக்கின்றார் என்று சொன்னார்....
திடிர் என்று எதிரில் டிவி செலிபிரிட்டி வந்து உட்காருவார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.. அதே போல் கருத்தை சொல்வதை விட தன் பக்கத்தை நிரூபிப்பதிலேயே குறியாக அவர்கள் இருந்தார்கள்...முக்கியமாக நான் பேசும் போது எல்லாம் என்னை கவுன்டர் செய்ய தேவ் மற்றும்,கமலேஷ்,ரிஷி,டிங்கு,படவா கோபி போன்றவர்கள் முயன்றார்கள்.....
நிறைய விஷயங்கள் சொல்ல என்னால் முடியவில்லைநான் பேச நினைக்கும் போது எல்லாம் மைக் ரவுண்டில் இருந்தது...நான் பேசி வெளுத்து வாங்குவார்கள் என்று நான் நினைத்த பலர்.... பேசவேயில்லை.. அடுத்து சம்பந்தம் இல்லாமல் நிறைய பேசினார்கள்... இன்னும் சிலர்........... சரி விடுங்க....சிலருக்கு மைக் கையில் வந்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் படபடப்பில் பேசினார்கள்....
கோபி நிறைய இடத்தில் திறம்பட நடத்தினார்... அவரிடம் எனக்கு பிடித்த விஷயம்... கலந்து கொண்ட ஒருவர் அவருக்கு ஒரு கரெக்ஷன் சொன்னார்.. மற்றவர்களாக இருந்து இருந்தால் டென்ஷ்ன்
அடைந்து இருப்பார்கள்... பட் கோபி அவருக்கு புரிய வைத்தார்....
அடுத்து வருவது என்ற விளம்பரத்தில் கூட நான் பேசிய விஷயங்கள்தான் வந்தன....அதுக்கே நிறைய போன் கால்கள்..நிகழ்ச்சி ஒளிபரப்பும் போதே நிறைய பேர் மெசேஜ்ல் தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்கள்...
நண்ப்ர் ஒருவர் அந்த நிகழ்ச்சி பார்த்து விட்டு விட்டு ஜாக்கி சத்தியமா? நீ இனிமே பெங்களூருக்கு போக முடியாது... உங்க மாமியார் செம மாத்து கொடுக்க போறாங்க என்று சொன்னார்.. இப்போது பெங்களூரில்தான் இருக்கின்றேன் நண்பர் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை....
எங்கள் பக்கம் நிறைய கவுண்டர் கொடுத்தாலும் பல விஷயங்கள் நேரம் கருதி எடிட் செய்யபட்டன.....தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஒரு தொலைகாட்சியே சுயபரிசோதனை செய்வது பெரிய விஷயம்தான்...
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பேர் எப்படி உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.. எழுதி போட்டீர்களா? அல்லது போன் செய்தீர்களா? என்றார்கள்... நான் எதுவும் செய்யவில்லை.. எனது பிளாக் படித்து எனக்கு அழைப்பு வந்தது என்று சொன்னேன்,....நல்ல வாய்ப்பை வழங்கிய மஞ்சுவுக்கு இந்த நேரத்தில் எனது அன்பும் நன்றியும் கனிவும்....
அவ்ர் கொடுத்த வாய்ப்பினால்தான் எனக்கு இது போன்ற கமென்ட்கள் வந்தன....
=======
#
Karthik Ero தல சட்டையும் பிரஞ்சுப்பேடும் சூப்பர் போங்க
April 14 at 7:13pm · LikeUnlike
#
Karthik Ero அதுலையும் கேமரா முன்னாடி நீங்க கைய மடிச்சு விட்ட அழகு
சூப்பரோ சூப்பர் :-))///
===============
வந்தியத்தேவன் said...
அண்ணாச்சி நீயா நானாவில் சீறிப்பாய்ந்திருக்கின்றிர்கள் , தொல்காப்பியன்(திருச்செல்வம்) என்னதான் சடைந்தாலும் நீங்கள் சொன்ன கருத்துக்கு எதிர்க்கருத்துக்கு பதில் சொல்லாமல் விதண்டாவாதம் தான் செய்கின்றார்கள். நல்ல வாதம் வாழ்த்துக்கள்.
Friday, April 15, 2011 5:28:00 AM///
================
சும்மா தலைகாட்டிய எனக்கே இப்படி என்றால் படம்முழுக்க வரும் ஹீரோவை மக்கள் கூர்ந்து பார்க்கும் விஷயத்தை நினைத்து வியந்தேன்...
தனது பதிவில் குறிப்பிட்ட நண்பர் மோகன்குமார், நிகழ்ச்சி பார்த்து உடனே போன் செய்து பகிர்ந்த தம்பி சிவக்குமார் மற்றும் எஸ் எம் எஸ் மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு என் நன்றிகள்..
பக்க்ததில் உட்கார்ந்து இருந்த சைக்கியாரிஸ்ட் பெண்மணியிடம் எனது கூச்ச சுபாவம் காரணமாக அவருடைய பெயரை கேட்கவில்லை.. ஆனால் அவரும் நானும் நிறைய விஷயங்கள் பேசினோம்.. முதல் கவுண்டடர் பேசி முடிந்ததும் பிச்சி உதறிட்டிங்க..... நல்லா பேசனிங்க என்று வாழ்த்தினார்... அவருடைய பெயரும் தெரியவில்லை....அவருக்கு அவருடைய போட்டோ வேண்டும் என்று கேட்டார்.. அவர் மெயில் ஐடி மற்றும் போன் நம்பர் , பெயர் எதுவும் தெரியவில்லை....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
================
நான் பார்க்காம மிஸ் பண்ணிட்டேன் சார் பரவாயில்ல இந்த வீடியோவ பார்த்து கொள்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்,தேனக்கா கிட்ட பேசிய லிங்க் கேட்டேன் இங்கு கிடைத்து விட்டது. நன்றி
ReplyDeleteஇனி நேரம் கிடைக்கும் போது லிங்க பார்த்துட்டு பிறகு கமெண்ட் போடுகீறேன்
வாழ்த்துக்கள். இப்புரோக்கிராம் நான் பார்த்தேன்..
ReplyDeletecongrats..Jackie...
ReplyDeleteஅண்ணாச்சி படவா கோபியின் பேச்சு அவரின் மேல் வெறுப்பைத் தான் தந்தது, தொல்காப்பியனாவது ஒரு இடத்தில் சிலவற்றை ஒத்துக்கொண்டார் ஆனால் படவா கோபியோ தான் பிடிச்ச முயலுக்கு காலே இல்லை என மல்லுக்கட்டினார். அத்துடன் நிஷாவின் சில கருத்துக்களுக்கான எதிர்க்கருத்துக்கள் எடிட்டிங்கில் போய்விட்டதோ தெரியவில்லை. சிலவிடயங்களில் கோபி நடுநிலை தவறினாலும் மிகவும் அழகாக நிகழ்ச்சித் தொகுப்புக்கு இப்போ அவரை விட யாருமில்லை.
ReplyDeleteவலைப்பதிவர்களை மாத்திரம் அழைத்து தற்போதைய இணையம் இலக்கியம் சம்பந்தமாக ஒரு நீயா நானா நடாத்தலாமே, உங்கள் நண்பருக்குச் சொல்லி ஒழுங்கு செய்யவும்.
வாழ்த்துக்கள் பங்காளி
ReplyDeleteசிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முனைவர் ஜோ.அருண் அவர்களும்கூட மிகசிறப்பாக கருத்துகளை வெளியிட்டார். மீடியா துறையில் இருந்தாலும்கூட கோபிநாத் அவர்களும் நடுநிலையோடு நிகழ்ச்சியை நடத்தினார்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நன்றி.
இன்றுதான் பார்த்தேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் .நீங்கள் அருமையாக பேசினீர்கள் .
ReplyDeleteஜாக்கி, நேற்று தான் இந்த காட்சிஒளியை பார்த்தேன்,
ReplyDeleteமிக நன்றாக பேசினீர்கள், அற்புதம் ., உங்கள் உரை நடை தமிழ் அழகு, நீங்கள் ஒவ்வொரு பாயிண்ட் ஆக பேசியது மிகவும் நன்றாக இருந்தது,
ஷோவில் படவா கோபி, திருச்செல்வம், அப்புறம் அந்த வட நாட்டு தமிழ் சீரியல் நடிகன் எல்லோரும் வானத்தில் இருந்து குதித்த மாதிரி பேசினார்கள்,
அதிலும் திருச்செல்வம் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல் உங்கள் மனநலம் பற்றி கூறியது அவர் வாதத்தில் தோற்று விட்டதை காட்டியது, உங்கள் கோபத்தை காட்டி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
அவர்கள் நாகரீகம் இல்லாமல் பேசினால் கூட, நீங்கள் சபை நாகரீகம் காத்து நல்லது என்று கூட தோன்றுகிறது,
நிஜமாகவே கலக்கி இருந்தீர்கள், வாழ்த்துக்கள்